எண்ணம்-3

by ஸ்ரீ
2 comments 350 views
A+A-
Reset

மாலை நான்கு மணியளவில் தனக்கு வந்த அலைப்பேசி அழைப்பை ஏற்று பேசியவாறே அறையை விட்டு வெளியே வந்த ஷியாமாவின் கண்களில் நான்கு கார்கள் வரிசையாய் உள்ளே நுழைவது பட்டது.

அழைப்பை விரைவாய் முடித்துவிட்டு அங்கு கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள்.

ஒவ்வொருவராய் இறங்கி உள்ளே செல்ல,அவளுக்கு யாரிடமும்  சுயவிவரம் கொடுத்து பழக்கமிருந்ததில்லை ஆதலால் இத்தனை பேரை சமாளிக்க வேண்டுமா என்று சலிப்பாய் இருந்தது ஷியாமாவிற்கு.

அதற்கேற்றாற் போல் அவளின் வேலையும் அவள் யாருக்காகவும் யோசித்து செயல்பட வேண்டிய நிலையில் இல்லாததால் தன் உலகத்தில் அவளே ராணியாக இருந்தாள்.

இப்போது கீழே சென்றால் ஒவ்வொருவரின் கேள்விக்கும் பதில் கூறியே தீர வேண்டும்.

அதிலும் அனைவரின் ஆடம்பரமும் அவரவர் நடை உடை பாவனையிலேயே தெரிந்தது.

இந்த வகை மனிதர்களை கண்டாலே வேறு அவளுக்கு மிகுந்த அலர்ஜி..

இதுவும் தன் வேலை தான் என்று மனதில் பதிய வைத்து அவர்களை சந்திக்கும் நேரத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் அவளின் அறைகதவு தட்டப்பட்ட திறந்தவளின் எதிரில் கல்யாணி நின்றிருந்தார்.

“உங்களை பார்க்குறதுக்கு எல்லாரும் காத்துட்டு இருக்காங்க..”

“ஓ இதோ வரேன்..”என்றவள் அறையை பூட்டிவிட்டு அவரோடு கீழே இறங்கினாள்.

மாடியிலிருந்து இறங்கும் போதே பெண்கள் நல்வரும் அவளையே பார்த்திருக்க ஆண்கள் எதோ ஒரு விஷயத்தைப் பற்றி தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தனர்.

நான்கு பேர் வட இந்திய சாயலிலும் நான்கு பேர் தமிழ்நாட்டு சாயலிலும் இருந்தனர்.

அருகில் வர வர அவர்களின் பார்வையின் கூர்மை அதிகரித்திருந்தது.

தன்னை இயல்பாக்கிக் கொண்டவளாய் அவர்களின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தவளை சற்றே அதிருப்தியாய் பார்த்தனர் அனைவரும்.

கேட்காமல் அமர்ந்ததற்கான எதிரொலி என்பது அறிந்தாலும் பெரிதாய் எதையும் காட்டிக் கொள்ளாதவளாய் மிதமான புன்னகையோடு அனைவரையும் பார்த்து,

“ஹாய் அங்கிள் ஹாய் ஆன்ட்டி..”,என்று பொதுவாய் கூறி முடித்தாள்.

“நீங்க தான் இந்த வீட்டோட புது விருந்தாளியா?பேரு?!”

“ஷியாமா”

“ஆங்..ஆமா மகிழனை எப்படி தெரியும் எப்போ இருந்து ப்ரெண்ட்ஸ் உங்களை எதுக்காக இங்க தங்க வச்சுருக்கான்?”

“ரமா கொஞ்சம் அவங்களையும் தான் பேச விடேன். ஏன் இத்தனை கேள்வி கேட்குற..”, என்ற பெண்மணியின் அதட்டலில் அவர் சற்றே அமைதியானார்.

“நானும் அவனும் யூஜி ப்ரெண்ட்ஸ் அப்பறம் கான்டக்ட்ல இல்ல.

இப்போ இன்னொரு ப்ரெண்ட் மூலமா அவன் நம்பர் கிடைச்சது.

நான் ஆர்கியாலஜி ரிசெர்ச் பண்றேன்.சோ ஜெய்ப்பூர் அரண்மனை பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கலாம்னு வந்துருக்கேன்.

இங்க யாரையும் எனக்கு தெரியாது அப்போ தான் மகிழன் கிட்ட பேசினேன்..

தனியா வெளியில எல்லாம் தங்க வேண்டாம் இங்கேயே தங்கிக்கோனு சொன்னான் அவ்ளோ தான்.. இன்னும் எதாவது கேட்கனுமா?”

“நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காத டா அவ எப்பவும் அப்படி தான்.

அப்பறம் என் பேர் சாந்தி தேவி மகிழனோட பெரிய அத்தை.இவரு சர்வேஷ் என் ஹஸ்பெண்ட்..

இது ரமா தேவி என் தங்கச்சி இது அவ ஹஸ்பெண்ட் ராகேஷ்.

இவரு என்னோட இரண்டாவது அண்ணா அதுல் வர்மா..இவங்க அவர் மனைவி பாயல்.

இவர் என்னோட மூணாவது அண்ணா ஆரவ் வர்மா.இவங்க ஜஸ்ப்பீர்த் அவங்க வொய்ப்.

எங்க மகிழனோட சிநேகிதினா எங்களுக்கும் நீ பொண்ணு மாதிரி தான்.

எல்லாரையும் பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது உனக்கும் அவசியம் இல்லையா..

மத்தபடி எங்க பசங்களையெல்லாம் நைட் டின்னர் டேபிள்ல மீட் பண்ணலாம்.

இதை உன் வீடா நினைச்சுக்கோ.. இங்க இருக்குற வர நீ எங்க பொறுப்பு. சரியா?”,என்றவரின் சிரிப்பில் ஏனோ உண்மையிருப்பதாய் தோன்றவில்லை.

பேசி முடித்த அடுத்த நொடி முகத்தில் எந்தவித உணர்வுமின்றி தன் தங்கையைப் பார்க்க அவரும் ஷியாமாவை முறைத்தவாறே அங்கிருந்து அவரோடு சென்று விட்டார்.

ஆண்கள் நால்வரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட ஜஸ்ப்ரீத் லேசான சிநேகப் புன்னகையோடு நகர்ந்து கொண்டார். அவளருகில் வந்த பாயல்,

“நீ எதுவும் நினைச்சுக்காத டா..எல்லாருக்கும் ட்ராவல் பண்ணிண அசதி அதனால தான் பட படனு பேசிட்டு போறாங்க. உனக்கு எது வேணும்னாலும் என்கிட்ட கேளு சரியா.”

அவளின் போலீஸ் பார்வைக்கு நிச்சயம் அவரிடம் எந்த குறையும் தெரியவில்லை. சம்மதமாய் புன்னகைத்தவள்,”ரொம்ப அழகா தமிழ் பேசுறீங்க..”

“ம்ம் வந்து இருபத்தி அஞ்சு வருஷம் ஆச்சு..கத்துக்காம எப்படி.. என் மாமியாருக்காகவே கத்துகிட்டேன்.”,என்றவர் அவள் கன்னம் தட்டிச் சென்றார்.

அனைவரும் நகர்ந்த பின் அங்கிருந்து திரும்பியவளின் கண்களில் முதியவர் ஒருவர் பட்டார்.அவளருகில் வந்தவர் புன்னகைத்தவாறே,

“என்னம்மா அறையெல்லாம் வசதியா இருக்கா?ஒண்ணும் குறையில்லையே?”

“முத்து அண்ணா??”

“தம்பி என்னைப் பத்தி கூட சொல்லிருச்சா..”

“ம்ம் பின்ன நான் இங்க வந்தப்பறம் உண்மையான பரிவோட கேட்குற நலம் விசாரிப்பாச்சே..”

“அஞ்சு விரலும் ஒரே மாதிரி இருக்குறதில்ல இல்லையா அப்படிதான் இந்த குடும்பத்தோட மனுஷங்களும்..”

“விளையாட்டுக்கு கூட விட்டு கொடுக்க மாட்டீங்க போலேயே?”

“என் உசுரு உடம்புல ஒட்டியிருக்க காரணமே இந்த குடும்பத்துக்காக தான்.அப்பறம் எப்படி?”

“சரி சரி நான் சும்மா தான் சொன்னேன் தப்பா எடுத்துக்காதீங்க..”

“..”

“சரி கண்ணு உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளு நான் செஞ்சு தரேன்.

வெளில போறதா இருந்தா என்கிட்ட சொல்லிட்டு போம்மா..

நீயும் தம்பி மாதிரி தான் எனக்கு.உன்னை பத்திரமா பார்த்துக்கணும்னு தம்பி சொல்லிருக்கு.”

“கண்டிப்பா எதுவானாலும் உங்ககிட்டயே சொல்லுறேன் ண்ணா..”

“நல்லதும்மா..சாப்பாடு தயாரானவுடனே சொல்லி அனுப்புறேன் வந்துரு..நான் வரேன்..”,என்று கூறிச் சென்றார்.

அதன்பின் அவள் இரவு உணவிற்காக வந்த நேரம் பெரியவர்கள் ஏற்கனவே உணவை முடித்துக் கிளம்பியிருக்க வர்மா குடும்பத்தின் வாரிசுகள் அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்திருந்தனர்.

“ஹாய் கைஸ்..”,என்றவாறு ஷியாமா தனக்கான இருக்கையில் அமர்ந்தாள்.

அவளைக் கண்டு யாரும் பெரிதாய் அலட்டிக் கொண்டதாய் தெரியவில்லை.

அவளும் அதை பெரிது பண்ணியதாய் தெரியவில்லை.

சட்டென அவளின் பின்னிருந்து வந்த குரலில் அனைவருமாய் அங்கு நோக்கினர்.

“ஒருத்தங்க வீட்டுக்கு கெஸ்டா வந்துருக்காங்கனா அவங்களை உபசரிக்குறது நம்ம கடமைனு சொல்லி கொடுத்துதான் வளர்த்துருக்காங்கனு நம்புறேன்.”,என்றவாறு விரைப்பாய் வந்தமர்ந்தான் மகிழன்.

“ஹாய்..”,என்று பள்ளிப் பிள்ளைகள் போல் அனைவருமாய் ஒரே நேரத்தில் கூறுவதைப் பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

“இட்ஸ் ஓகே மகிழன்..நோ இஷுஸ்..பை த வே ஐ அம் ஷியாமா.” என்று தன்னை அறிமுகப் படுத்தியவாறு அனைவரின் முகத்தையும் ஆராய்ந்தபடி இறுதியாய் மகிழனின் முகம் நோக்கி நின்றாள்.

“இவன் ஆஷிக் என் முதல் தம்பி.இவ மோனிஷா என் தங்கை.இவங்க தியா அண்ட் கவின் பெரிய அத்தை பசங்க.

பைனலி ஷீ இஸ் தீப்தி சின்ன அத்தை பொண்ணு.”,என்று அவன் முடிக்க ஆஷிக்கும் மோனிஷாவும் சிநேகமாய் புன்னகைத்திருக்க மத்த மூவருமே வேண்டுமோ வேண்டாமோவென அவளைப் பார்த்து தலையசைத்து வைத்தனர்.

அதன் பின் அந்த இடத்தில் மௌனத்தைத் தவிர வேறு பேச்சிருக்கவில்லை.

மகிழன் உணவை முடித்துவிட்டு எழுந்து சென்றுவிட அதற்காகவே காத்திருந்தது போல் தியா கவின் தீப்தி மூவரும் சென்று விட்டனர்.

“ஹாய் மிஸ் ஷியாமா..”,என்று கைநீட்டி ஆஷிக் சிரிக்க நமட்டுச் சிரிப்போடு மோனிஷா அவனிடம்,

“ஆரம்பிக்காத டா உன் வேலையை அண்ணாவோட ப்ரெண்ட் நியாபகம் வச்சுக்கோ..”

“சோ வாட் அதுக்காக என் ப்ரெண்டா இருக்கக் கூடாதா?”

“ம்ம் ம்ம் நீ நடத்து..”,என்றவள் எழுந்து சென்றுவிட அவனோடு கைக்குலுக்கியவாறே சிரித்தாள் ஷியாமா.

“பரவாயில்லையே இந்த வீட்ல இருக்குறவங்களுக்கு சிரிச்சு பேசக் கூட தெரியுதே!”

“ஹா..வந்த ஒரே நாள்ல கண்டுபிடிச்சுட்டீங்களே..உண்மைதான் உங்களுக்கு பொழுது போகலைனா என்னையோ மோனியவோ கான்டாக்ட் பண்ணுங்க மத்தபடி எல்லாரும் பேசவே காசு கேப்பாங்க..”

“தட்ஸ் நைஸ்..சோ வாட் ஆர் யூ டூயிங் மிஸ்டர் ஆஷிக்?”

“சொல்ற அளவு பெருசா எல்லாம் ஒண்ணும் பண்ணல இன்னும்.

இப்போதைக்கு தீவிரமா டைரக்ஷனுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.சீக்கிரமே சக்ஸஸ்புல் டைரக்டர் ஆய்வேன்..”

“வாவ் நாட் பேட்..உங்க சிஸ்டர் பேசினத வச்சு நீங்க பெரிய ரோமியோனு நினைச்சுட்டேன். பரவால்ல நல்ல வேலைகளும் பண்றீங்க..குட் லக்..”

“எங்க அண்ணாவோட ப்ரெண்ட்னு சரியா இருக்கு இப்படி கல்க்குலேட் பண்றீங்க எல்லாரையும்..

செம..பட் சும்மா ப்ரெண்டா பழகுவேன் எல்லார்கிட்டேயும் யாரையும் தப்பா எல்லாம் நினைச்சுக் கூட பார்க்க மாட்டேன்..நம்பலாம்.”

“ம்ம் அந்த நம்பிக்கை வரலனா இந்நேரம் நான் ரூம்க்கு போய்ருப்பேனே..

சரி எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க எப்படி எல்லாரும் இவ்ளோ அழகா தமிழ் பேசுறீங்க?”

“ம்ம் பாட்டியோட எழுதாப்படாத சட்டம் அது தமிழ் கத்துகிட்டே ஆகணும்.

இந்த வீட்டோட மாப்பிள்ளைங்களையும் மோனி அம்மாவையும் தவிர எல்லாருக்குமே தமிழ் அத்துப்படி..

அதுவும் மோனி தமிழ்ல எதோ ரிசேர்ச்சே பண்ணிட்டு இருக்காங்கனா பார்த்துகோங்க..”

“சும்மா அடிச்சு விடாதடா..ஹாய் கா..அவன் சொல்ற அளவெல்லாம் ஒண்ணும் இல்ல தமிழ் ரொம்ப பிடிக்கும் அதனால நிறைய அதைப் பத்தி தெரிஞ்சுக்குறேன் அவ்வளவுதான்.”

“உன்னை பார்த்தவுடனே எனக்கு தோணிணது ரொம்ப அழகாயிருக்கா இந்த பொண்ணுனு தான்.பேசுறதும் கூட ரொம்ப அழகாயிருக்கு..”

“போச்சு இனி இவ தூங்கின மாதிரி தான்..கடவுளே என்னை காப்பாத்து..”

“பொறாமைல பொங்காதடா போ போ சில்லுனு ஜுஸ் சாப்பாடு.வயித்தெறிச்சல் அடங்கும் கொஞ்சம்.”

“ஹா ஹா உங்க காம்போ ரொம்ப லைவ்லியா இருக்கு..நைஸ்..”

“ம்ம் எனக்கும் இவனுக்கும் பேசிக்கிட்டே இருந்தா போதும்.சாப்பாடு தூக்கம் கூட வேண்டாம் ஆனா இந்த வீட்ல மத்தவங்களுக்கு தேவையில்லாம ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது அதனால எங்க ஆட்டம் எல்லாம் ரூம்குள்ள தான்.

சொல்லப் போனா இந்த இடத்துல பேச்சு சத்தமே இப்போ நீங்க வந்ததுனால தான் கேட்குது.

இல்லையா இந்நேரம் சாப்ட்டு ரூம்க்குள்ள போய் அடஞ்சுருப்போம்..”

“ம்ம் பணக்காரங்களா இருக்குறது ரொம்ப கஷ்டமான வேலை போலேயே..சொந்த வீட்டுக்குள்ளேயே கைதி மாதிரி..”

“ம்ம் உண்மைதான்.என்ன பண்றது எங்களுக்கு பழகிடுச்சு..

அதை விடுங்க இங்க இருக்குற வரை நீங்களும் எங்க கூட ஜாயின் பண்ணிக்கோங்க நைட் தினமும் சாப்பாடு முடிச்சுட்டு இதே மாதிரி டீலா..”

“அவ்ளோ தானே கூட்டத்தை கூட்டிருவோம்.அப்போ நீங்களும் எனக்கு என் வேலைக்கு ஹெல்ப் பண்ணணும்?”

“வாவ்..கண்டிப்பா அம்மா சொல்லிட்டு இருந்தாங்க நீங்க ஏதோ ரிசெர்ச் பண்றீங்கனு உங்க பேரை சொல்லி கிடைக்குற கேப்ல ஊர் சுத்தலாம்.”

“ஓகே  நாளைக்கு நீங்க ப்ரீனா வெளில போலாம்”

“ஹே!!நான் ரெடி..டேய் நீ எப்படியும் வெட்டியாதான் இருப்ப எங்களுக்கு பாடிகார்டா வா டா..”

“திமிரு ரொம்ப கூடிருச்சு டீ குட்டிச் சாத்தான்.”

“ரொம்ப பண்ணாத டா உனக்கும் எதாவது ஸ்டோரி க்ளிக் ஆக வாய்ப்பிருக்கு..நல்லது சொல்றேன் கேட்டா கேளு கேட்காட்டி போ..”

“உன் நல்லெண்ணம் பத்தி எனக்குத் தெரியும்…அவங்களுக்காக வரேன்..போ போ..”

“உங்க சண்டையை தீர்க்க முடியாது போலயே..ஒகே கைஸ் மார்னிங் பார்க்கலாம்..குட் நைட்..”

“குட் நைட் ஷியாம்ஸ்..

குட் நைட் கா”,என்றவர்களைப் பார்த்து சிரித்து நகர்ந்தாள் ஷியாமா.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

srichitra October 31, 2026 - 1:29 pm

Very nice

suganyavel November 1, 2026 - 9:14 pm

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode