100
“உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
விளக்கம்
“உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன – கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்
விளக்கம்
நாம் உண்ண தேவை நாழி அரிசி சோறு தான், உடுக்க நான்கு முழம், ஆனால் நாம் ஆசைப்படுவது என்பது கோடி விஷயங்கள், மெய்ஞானம் என்ற அகக்கண் இல்லாமல் கிடைப்பதை வைத்து போதும் என்ற மனநிலையில் வாழாமல் வாழும் மனிதரின் வாழ்க்கை மண் கலம் போல் எப்போதும் துன்பமே நிலைக்கும். ஆதலால் இருப்பதை வைத்து கொண்டு வாழும் மன அமைதி வேண்டும்.
இரு வீட்டு பெரியவர்களும் பேசி இரண்டு மாதத்தில் நிச்சயமும் ஆறு மாதத்தில் திருமணமும் என முடிவு செய்யப்பட்டது.அன்றைய விடுமுறை தினம் ஆது பாப்பாவோடு கழிந்தது அனைவருக்கும்.
ஹாலில் அமர்ந்து அனைவருமாய் குழந்தையோடு விளையாடியபடி டீவி பார்த்துக் கொண்டிருக்க காயத்ரியும் அபியும் கிட்சனில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
தேன்மொழி குழந்தையிடம்,”அத்தை சொல்லு செல்லம்..”,என்று கூற அவளைப் பார்த்து சிரித்த வண்ணம் இருந்த குழந்தை
“தத்த..”,என்றதும் அனைவரும் உற்சாக குரல் எழுப்ப குட்டிக்கு இன்னும் உற்சாகமாய் போய்விட்டது.
“தாத்தா..”
“தித்தா..”
“பாய்இ..”
“ப்பா..ம்மா..”
எல்லாம் கூறிய குழந்தையை பிடித்துக் கொஞ்சிக் கொண்டிருக்க சமைத்ததை வாயில் போட்டு கொறித்தவாறே வந்த காயத்ரி,
“இதெல்லாம் அநியாயம்..எல்லாரும் ஈஸியா சொல்ற மாதிரி பேரு வைச்சுட்டு எங்களுக்கு மட்டும் பெரியப்பபா பெரியம்மானு இவ்வளவு நீட்டி முழக்கணுமா..”
“ஹா ஹா அதானே”,என்ற அன்பு குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டவனாய்,
“பட்டு நான் யாரு சொல்லு பார்க்கலாம்.”,என்று கன்னத்தில் இதழ் பதிக்க குலுங்கிச் சிரித்தவளாய்,
“அ..பு…அபு..”,என்று கூற அனைவருக்கும் ஆச்சரியம் தாளவில்லை.மற்றவர்கள் அழைப்பதை கவனித்து குழந்தை அன்பு என்று சொல்ல முயன்றதில் இன்னுமாய் குழந்தையை தன்னோடு இறுக்கிக் கொண்டான.
“மகளே இங்க வாடி..பொறந்ததுல இருந்து என்னோட தான அதிகம் சுத்துற..இப்போ என்னை நீ பெரியம்மா கூப்பிடல உனக்கு இருக்கு”,என்றவள் கண்ணை உருட்டி மிரட்ட அதற்கும் வாய் கொள்ளா சிரிப்பு தான் சிறியவளிடத்தில்.
“சிரிச்சு மயக்காத டி சுண்டைக்கா..நான் யாரு சொல்லு..”,என்றவள் தன் முன்னே முகத்திற்கு நேராய் குழந்தையைத் தூக்கிப் பிடித்து உலுக்க நொடியும் யோசிக்காது,
“காய்ம்மா..காய்ம்மா..”,என்று கூறி அவளைத் துள்ளி கட்டிக் கொண்டாள்.
பெரியம்மா என்று எதிர்பார்த்தவளுக்கு தன்னை அம்மா என்று அழைத்ததை ஏற்றுக் கொள்ளவே சில நொடிகள் எடுத்தது.அன்புவிற்கே லேசாய் கண்கலங்கிவிட காயத்ரியோ குழந்தையை தன்னோடு இன்னுமாய் இறுக்கி முத்தமிட்டு அபிநயாவிடம் கொடுத்துவிட்டு வேகமாய் அறைக்குச் சென்றுவிட்டாள்.
அபிநயாவிற்கோ தன் மகள் அவளை அப்படி அழைத்ததில் அவ்வளவு மகிழ்ச்சி.தன்னைப் போலவே மகள் மேல் உயிரே வைத்திருக்கும் காயத்ரிக்கு இதைவிட பெரிதாய் என்ன கிடைத்துவிடும் என்றே தோன்றியது.
ராகினியும் கண்கலங்கிவிட யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை.அன்பு அவசரமாய் தனதறைக்குள் நுழைய முகத்தை கைகளுக்குள் புதைத்து குலுங்கி அழுது கொண்டிருந்தாள் காயத்ரி.
“கண்மணி..”,அவ்வளவே தான் இத்தனை மாத மனக்குமுறல்களையும் கட்டுப்படுத்திய வருத்தத்தையும் அவனைக் கட்டிக் கொண்டு அழுது கரைந்தாள்.
அன்புவிற்கும் அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.மனது பாரம் குறைய அவள் அழுவதே நல்லது என்று நினைத்தவனாய் மௌனமாய் கண்ணீர் வடித்தான்.
“எனக்கு குழந்தை பிறக்குமோ பிறக்காதோ அன்பு..ஆது தான் என்னோட முதல் பொண்ணு..”,என்றவளின் விசும்பலில் தன் கண்ணீரைத் துடைத்தவனாய் அவளைப் பிரித்து நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான்.
“ஆதுக்கு நீ தான் டி ரொம்ப செல்லம்..”,என்றவன் பேச்சை மாற்ற ஆமோதிப்பாய் புன்னகைத்தவள்,
“ஆமா என்னை ஏமாத்தி நல்லா காரியம் சாதிச்சுக்குவா..அபிக்கு நேரெதிர்..”,என்று சிரித்தாள்.
அங்கு ஆனந்தன் தூங்கும் மகளையே வாஞ்சையாய் பார்த்திருந்தான்.
“என்னங்க இன்னும் நார்மல் ஆகலையா நீங்க?”
“நினைச்சாலும் வெளியில வர முடில அபி..குழந்தையும் தெய்வமும் ஒண்ணுனு மனசார நம்புறேன்.எப்படி அவளுக்கு அப்படி தோணிருக்கும் இல்ல..”
“வயித்துக்குள்ள இருந்த போது அவங்களைப் பத்தி தான நிறைய கேட்டுருப்பா..இங்க வந்தப்பறமும் அவளுக்கு அவங்க தான் வேணும்.ஆனால் காயூம்மானு சொல்லுவானு நானுமே எதிர் பார்க்கலை அக்காவுக்கு அவ்வளவு சந்தோஷம்.”
“பாவம் டி அவங்க..கடவுள் சீக்கிரமே நல்ல வழி காட்டினா நல்லாயிருக்கும்.”
“ம்ம் இரண்டு பேருக்குமே எந்த பிரச்சனையும் இல்லங்க..கண்டிப்பா சீக்கிரமே அவங்க வயித்துல குழந்தை உருவாக தான் போகுது.”
“உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் டி..”,என்றவன் ஆதரவாய் மனைவியைத் தோள் சாய்த்துக் கொண்டான்.
ராகவனின் முகம் மிகவும் சோர்ந்து போய்விட்டிருந்தது.ராகினி அவரின் மனவோட்டம் புரிந்தவராய் அமைதியாய் அருகில் அமர்ந்தார்.
“காயூ அழுதாலே மனசெல்லாம் ஒரு மாதிரி ஆகுது ராகி..”
“ம்ம் இந்த விஷயத்துல என்ன ஆறுதல் சொல்றதுனு யாருக்குமே புரியலையேங்க..கடவுள் கருணை காட்டினா நல்லாயிருக்கும்.”
“அந்த பொண்ணு வந்தப்பறம் இந்த வீட்ல சந்தோஷமும் நிம்மதியும் அதிகம் தான் ஆகிருக்கு.ஊரே மிரண்டு பார்க்குற ஒருத்தி நம்மகிட்ட எத்தனை அணுசரனையா இருக்கானு நான் நினைக்காத நாளே இல்ல..”
“….”
“வாக்கிங் போறப்பவும் கடைத்தெருக்கு போறப்பவும் என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் இதையே சொல்லுவாங்க..நல்லவ கெட்டவனு சொல்றதை விட நல்லா படிச்சு நல்ல வேலையில் கம்பீரமா பல பேரை வேலை வாங்குற பொண்ணு நம்மகிட்ட இப்படியெல்லாம் இருக்கணும்னு எந்த அவசியமும் இல்யையே ராகி..
இருந்தும் நம்மகிட்டயோ நம்ம சொந்த பந்தத்துகிட்டேயோ ஒரு தடவை கூட தூக்கி எறிஞ்சு பேசினதே இல்ல..புருஷன் கூடப் பிறந்தவங்களை தன்னோட உடன் பிறப்பா பார்க்கணும்னு எத்தனை பேர் நினைப்பாங்க.
அதெல்லாம் விடவும் அன்பு கடை திறக்க முன்னாடி தேன்மொழி கல்யாணத்துக்கு எல்லாம் தயாரா வைச்சுருக்கியானு கேட்டுட்டு தான் இரண்டாவது கடையைப் பத்தியே வாயை திறந்தாளாம்.
இவ்வளவு நல்ல பொண்ணு அவளுக்குனு நினைக்குறது குழந்தையை தான்.அதை ஏன் இந்த ஆண்டவன் மனசு இறங்க மாட்றான்னு தான் எனக்கு கவலையா இருக்கு.
என் பிள்ளைகளை எல்லாம் வீட்டு மூத்த மருமகளா அவ பார்த்துப்பா என்னோட ஒரே வேண்டுதல் அவளுக்கு ஒரு குழந்தை வரம் கிடைக்கட்டும்ங்கிறது தான்.”,என்ற கணவரின் கூற்றுக்கு எதுவும் பேசத் தோன்றாமல் தானும் ஆண்டவனிடம் தன் பிரார்த்தனையை வைத்துக் கொண்டிருந்தார் ராகினி.
தேன்மொழியின் நிச்சயதார்த்தம் ஆதர்ஷினியின் முதல் பிறந்தநாள் என கொண்டாட்டங்களுக்கு குறைவின்றி நாட்கள் இரக்கை கட்டி பறந்தன.
தேன்மொழியும் ஹரிஷும் தினமும் அலுவலகத்தில் பார்த்துக் கொண்டாலும் அவ்வப்போது கேன்டினில் பேசிக் கொள்வதோடு சரி.மற்றவர்கள் கண்களை உறுத்தக் கூடாது என்பதில் இருவருமே தெளிவாய் இருக்க கைப்பேசியில் பேசி காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர்.
“ஓய் ஹனி..நிச்சயத்துலேயே உங்க அண்ணா எல்லாருமா சேர்ந்து ஒரு வீக்கெண்ட் வெளியிலே போலாம்னு சொன்னார்.எப்போ போலாம்?”
“உங்களுக்கு ஓகே வா?அப்போ இன்னைக்கே பேசுறேன்.”,என்றவள் உற்சாகமாய் அன்புவிடம் கேட்க கிருத்திகாவையும் அழைக்கலாமா என்று கேட்டாள்.
“வேண்டாம் தேனு மா..இதுக்காக சென்னையில் இருந்து தனியா வரணும்..அதுவுமில்லாம அவங்க வீட்ல என்ன சொல்லுவாங்களோ”
“இன்பாவை கேட்டு பார்க்க சொல்றேன் ணா..பாவம் அவனுக்கும் ஆசை இருக்கும் தான..”,என்ற தங்கையைப் பார்த்து புன்னகைத்தவன் சரி என்றிருந்தான்.
அனைவருமாய் பேசி அடுத்த வார இறுதியில் வால்பாறை போய் வரலாம் என முடிவு செய்து வேன் ஒன்றை புக் செய்தான் அன்புச்செல்வன்.
ஒரு நாள் பயணம் தான் என்பதால் குழந்தையை பெரியவர்கள் பார்த்துக் கொள்வதாய் கூறிவிட கிருத்திகாவைப் பற்றி கூறாமல் மற்ற அனைவருமாய் செல்வதாய் கூறியிருந்தான் அன்பு.
ஆவலாய் எதிர்பார்த்த அந்த நாளும் வர அனைவருமாய் வீட்டில் இருந்து கிளம்பி போகும் வழியில் கிருத்திகாவையும் ஹரிஷையும் அழைத்துக் கொண்டனர்.
“ஹாய் ஹரிஷ் & கிருத்திகா..வெல்கம் டு அவர் ஹோம்..”,என்று அனைவருமாய் சேர்ந்து கத்த இருவருக்கும் கல்லூரி சுற்றுலா போல் இருந்தது இந்த பயணம்.
“வா கிருத்தி அக்கா பக்கத்தில் உட்காந்துக்கோ..”,என்ற காயத்ரியை இன்பா பாவமாய் பார்த்து நிற்க அனைவருமாய் சிரித்து விட்டிருந்தனர்.
“இன்பா டேய் என்னடா மாமியார் வீடு இவ்வளவு ஜாலியா இருக்குமா?”
“ஹா ஹா எங்க வீடு இருக்கும் டி செல்லக்குட்டி..”
“ஹனி ஆபீஸில் அப்பறம் நிச்சயதார்த்தத்துல எல்லாம் பார்த்ததை வைச்சு ஏமாந்துட்டேன் டி..என்ன இப்படி அலப்பறை பண்றீங்க எல்லாரும்..”,என்ற ஹரிஷ் சிரிக்க அவனை முறைக்க நினைத்தவள் பதிலுக்கு புன்னகைத்திருந்தாள்.
“இப்போ தெரியுதா நான் ஏன் கல்யாணத்துக்கு யோசிச்சேன்னு..”
“??”
“இவங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன் ஹரிஷ்.”
“அதுக்கென்ன அப்பப்போ இதே மாதிரி கெட் டு கெதர் போட்டுருவோம்..”
“ஹா ஹா அப்போ ஓகே உங்களை பாவமேனு கல்யாணம் பண்ணிக்குறேன்.”
“அடிப்பாவி நாளைக்கு ஆபீஸுக்கு வா..கவனிச்சுக்குறேன்..”
கொண்டாட்டமாய் அன்றைய தினம் அனைவருக்கும் நிறைவாய் அமைய பின் மதியத்திற்கு மேல் காயத்ரிக்கு ஏதோ ஒரு ஒவ்வாமையோடே கழிந்தது.
“என்ன காயூ?எதுவும் பண்ணுதா?”
“ம்ம் அந்த ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கலனு நினைக்குறேன் அன்பு.எதோ தொண்டையிலேயே நிக்குது.”
“ஹாஸ்பிட்டல் போலாமா டி?”
“ச்ச இதுக்கெல்லாம் எதுக்கு..லெமன் ஜுஸ் இல்லை சோடா எதாவது வாங்கி கொடு அன்பு போதும்.”
அப்படி இப்படியாய் மாலை வீட்டிற்கு வந்தவளுக்கு தலை எல்லாம் வலியெடுக்க சமாளிக்க முடியாதவளாய் கட்டிலில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.
இரவு அவளுக்கான உணவை அன்புச்செல்வன் அறைக்கே எடுத்துவர கடினப்பட்டு எழுந்தவளுக்கு ஊட்டுவதற்காய் ஒரு வாய் உணவை வாயருகில் அவன் கொண்டு செல்ல வயிற்றைப் பிடித்துக் கொண்டு குளியலறைக்குள் ஓடியிருந்தாள் காயத்ரி.
பதட்டமாய் அவள் பின் சென்றவன் தலையைப் பிடித்துக் கொள்ள சோர்ந்து போனவளாய் கட்டிலில் அமர்ந்து அவன் மீது சாய்ந்து கொண்டாள்.
“என்ன கருமத்தை டா சாப்பிட கொடுத்தான் அந்த ஹோட்டல்காரன்.கடவுளே..”அத்தனை பதட்டத்திலும் அன்புச் செல்வன் சிரித்திருந்தான்.
“ஹா ஹா நாங்களும் தான டி சாப்பிட்டோம்.”
“அப்போ எனக்கு தான் டா எதையோ கலந்து கொடுத்துட்டான்.குடலே வெளியில் வந்துரும் போல இருக்கு..”,என்றவளின் தலையை வருடிக் கொண்டிருந்தவனின் கை ஒரு நொடி எதையோ யோசித்து அப்படியே நின்றிருந்தது.
“என்ன அன்பு??”
“காயூ ஒரு மாசத்துக்கு மேலேயே இருக்குமே இல்ல?!”
“என்னது??”
“கண்மணி மன்த்லி ப்ராப்ளம் வரவேயில்லையே..”,என்றதும் தான் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“எப்படி இதை மறந்தேன்!!!”
“40 நாள் ஆகுது அன்பு..”,என்றவளுக்கு குரல் நடுங்கியது.
“நாளைக்கு டாக்டர்கிட்ட போலாம் டி..”
“வேண்டாம் அன்பு..ஏமாந்து போறது கடுப்பா இருக்கும்.”
“எனக்கென்னவோ இந்த தடவை அப்படி தோணல கண்மணி..”,என்றவனின் பேச்சில் அவளுக்குமே சற்று ஆசை அதிகரித்திருந்தது.
கணவனின் கைகளை இறுகப் பற்றியவளாய்,”நிஜமாவா?”
“தோணுது டி…பார்ப்போம்..”
“இப்போவே ஹாஸ்பிட்டல் போலாமா?”
“மார்னிங் சீக்கிரமே போலாம்..கொஞ்சமாவது சாப்பிட்டு தூங்கு டி.”,என்றவனை விட்டு அவள் நகரவே இல்லை.
அன்றைய இரவு முழுவதும் பயத்திலும் பதட்டத்திலுமாய் கழிந்தது இருவருக்கும்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!