வரம்-20

by ஸ்ரீ
0 comments 86 views
A+A-
Reset

சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால
நாழி அரிசிக்கே நாம்

விளக்கம்
பிறருக்குச் சலாம் போட்டும், அடுத்தவரிடம் சென்று இரங்கி உதவி கேட்டும், உறவுகளை விட்டு அகலமான கடல் கடந்தும், தன் இயல்பான பழக்க வழக்கங்களை மாற்றி தனக்கு உதவி புரியும் மனிதரோடு இணைந்தும்,

அவர்களை நல்லவர், வல்லவர் என்று பொய்யாகப் புகழ்ந்து பாடியும் வாழ்வது இந்த பாழாய்ப்போன வயிறால் தான், இந்த ஒரு சான் வயிறை நிரப்ப உள்ள நாழி அரிசி சோறு பெறுவதற்காக இத்தனை பாடு பட வேண்டி உள்ளது.

புதுமணத் தம்பதிகளை அறைக்குள் அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தவளைப் பார்த்து மார்க்கமாய் சிரித்து வைத்தான் அன்புச்செல்வன்.

“டேய் என்ன முழியே சரியில்ல..”

“ஹா ஹா டிஎஸ்பி மேடம் உங்க புலன் விசாரணையெல்லாம் விட்டுட்டு கொஞ்சம் பக்கத்துல வந்து உட்காருங்களேன்..”

“ஆனாலும் நீ ஒரு காதல் மன்னன் டா அன்பு..”,என்றவள் தன்னவனின் மார்பில் முதுகு சாய வாகாய் அவன் கைகளுக்குள் அமர்ந்து கொண்டாள்.

“கண்மணி..”

“ம்ம்..”

“லவ் யூ..”,சட்டென அவன் புறம் திரும்பி அவனை ஏறிட அதற்காகவே காத்திருந்தவனாய் அழுத்தமான முத்தத்தை பதித்தான்.

“கல்யாணத்துக்கு வந்த என் மாமனாரும் மாமியாரும் ஒரே கம்ப்ளைண்ட் டி..”

“ஹா ஹா என்னவாம்?”

“பொண்ணு ஒரு நாள் கூட வந்து தங்க மாட்றாளாம்..விருந்தாளி மாதிரி வந்துட்டு கிளம்பிடுறாளாம்..”,அத்தனை காதல் கொட்டிக் கிடந்தது அவன் குரலில்.

“அதுக்காக என்னை விரட்டி விடலாம்னு பார்க்காத..நான் தங்க எல்லாம் மாட்டேன்..”

“அதனால இந்த வீக்கெண்ட் நாம அங்க ஸ்டே பண்ணிட்டு வரலாம்..”

“!!!!”

“என்ன ஓகே தான?”

“ஏன் டா இந்த மாப்பிள்ளை முறுக்கு மிக்சர்னு எல்லாம் எதோ சொல்லுறாங்களே அதெல்லாம் கிடையாதா உனக்கு?”,என்றவள் இன்னுமாய் அவனோடு நெருங்கிக் கொண்டாள்.

“அதை வைச்சு நாக்கு தான் வழிக்கணும்..”,என்றவன் சத்தமாய் சிரித்தான்.

“நீ ரொம்ப வித்தியாசமானவன் அன்பு..பொண்டாட்டி அளவுக்கு அதிகமா காதலிச்சாலும் சில விஷயங்கள் எல்லாம் ஆம்பளைங்களுக்கு அடிப்படையிலேயே இருக்கும்.

நீ சொல்ற மாதிரி தேவையே இல்லாதது தான் ஆனாலும் அதைப் பிடிச்சுட்டு தான் தொங்குவாங்க..”

“அது அவங்க சாபம்..எனக்கு வரமே வாழ்க்கையா இருக்கும் போது எதுக்கு தேவையில்லாததைப் போய் பிடிச்சுக்கணும் டி..”

“என் காதலை ஏத்துகிட்ட முதல் நாள் எப்படியிருந்தியோ அப்படியே தான் இப்பவும் இருக்க அன்பு நீ..”

“…”

“பொதுவா காதல்,கல்யாணத்துல முடியுற வரை ஒரு மாதிரி இருக்கும்.அதுக்கு அப்பறம் ஆண்களுக்கு இயல்பாவே ஒரு எண்ணம் வரும்..அதான் கல்யாணம் ஆகிடுச்சே..நம்மளை விட்டு எங்க போயிட போறானு ஒரு மனோ பாவம்.

அவங்களை அடையுறதுக்கு எடுத்த எஃபர்ட்ஸ் எல்லாம் அந்த காதலை தக்க வைச்சுக்குறதுல இருக்குறதே இல்ல..

நமக்கான பொருள்னு ஆனவுடனே வர்ற மெத்தனம்..ரொம்ப சிலர் தான் டா உன்னை மாதிரி இருப்பாங்க..உன்னை லைஃப்ல மிஸ் பண்ணிருந்தேன்னா லைஃபையே மிஸ் பண்ணிருப்பேன்.லவ் யூ மேட்லி அன்பு.”

“என்னால இந்த காதலுக்கு 100% கமிட்மெணேடோட இருக்க முடியும்னு நம்பினதுனால மட்டும் தான் உன்கிட்ட ஓகே சொன்னேன் காயூ மா..

காலேஜ் டேஸ்ல அந்த நம்பிக்கை கிடையாது அதனால தான் நோ சொன்னது.இந்த போலீஸ்காரியை அவ்வளாவு பிடிக்குது..நான் என்ன பண்ணட்டும்.”,என்றவனின் காதலில் விரும்பியே கரைந்து போனாள்.

ஆனந்தனும் அபிநயாவும் ஊட்டி வால்பாறை என் மூன்று நாட்கள் தேன்நிலவு சென்று வந்திருக்க அன்று அனைவருமாய் அமர்ந்து டிவியும் பேச்சுமாய் மாலை பொழுது கழிந்தது.

“ஆனந்த் அண்ணே காயூ அண்ணி சரவெடினா அபி அண்ணி ப்ஜ்ஜிலி அளவாவது இருக்க வேண்டாமா?என்ன அண்ணே..”

“அதே ஏன் என்கிட்ட கேக்குற அவகிட்டேயே கேளு தேனு..”,என்றவனைப் பிறர் அறியாமல் கிள்ளினாள் அபிநயா.

“நான் வேலைக்கு போன அப்பறம் தான் இவ்வளவாவது பேசுறேன் தேனு..”,என்றவளை பாசமாய் பார்த்திருந்தனர் பெரியவர்கள்.

“அபி ரொம்ப பயந்த சுபாவம் இல்ல ஆனந்தா..”

“ஆமா பா..அவங்க அப்பா சித்தப்பா எல்லாம் கொஞ்சம் விரைப்பாவே இருப்பாங்க போல..அதனாலயே இவ இவங்க அம்மா சித்தி எல்லாமே இப்படி தான் இருக்காங்க..”

“ம்ம் ஒரு ஒருத்தர் வழக்கம்..இங்க அப்படி எந்த கட்டுப்பாடும் கிடையாது அபி..நல்லா பேசி வைச்சு இருக்கணும் என்ன..”,என்ற மாமியாரை ஆச்சரியமாய் பார்த்திருந்தாள் அபிநயா.

சரியாய் வேலை முடிந்து வந்த காயத்ரியும் கூட்டத்தில் ஐக்கியமாக அபி சிநேகமாய் சிரித்தாள்.

“அப்பறம் என்னை விட்டுட்டு எல்லாரும் ஜாலியா கதை பேசிட்டு இருக்கீங்க போலேயே..”

“என்ன டா மருமகளே இப்படி சொல்லிட்ட..உன்னை தான் தேடினோம்..”

“ப்பா நம்பிட்டேன்..ஆனாலும் சின்ன மருமகளுக்கு கவனிப்பு பலமா தான் இருக்கு”,என்றவள் அபியை தோளால் இடித்தாள்.

“அண்ணி நல்லா கேளுங்க..என்னையுமே கவனிக்குறது இல்ல..”,என்ற ஆனந்தனைப் பார்தேதவள்,

“அதான் இத்தனை வருஷம் பார்த்தாச்சுல இனி அபி பொறுப்பு..இன்னுமும் அம்மா அப்பானு சுத்தலாம்னு பார்த்தா எப்படி தம்பி..”,

“போலீஸ்னு நிருபிச்சுட்டே இருங்க..”

“காயூ போய் யூனிபார்ம் மாத்திட்டு வா நான் காபி தரேன்.”

“இதோ இரண்டே நிமிஷம் மா..ஆமா சின்னவரை எங்க ஆளைக் காணும்?”

“அவன் யாரையோ ஃப்ரெண்டை பார்க்க போறேன்னு போயிருக்கான் அண்ணி”,என்ற தேன்மொழி கண் சிமிட்டிச் சிரித்தாள்.

அந்த நேரம் காயத்ரியின் கைப்பேசி அழைக்க எடுத்து வாசலுக்குச் சென்று பேச ஆரம்பித்தவள் விஷயத்தை கேள்விபட்டு கண்மண் தெரியாமல் கத்த ஆரம்பித்திருந்தாள்.

“ஏன் யா அறிவிருக்கா உனக்கு..படிச்சு படிச்சு சொல்லிட்டு வந்தேன்ல நான் இல்லாம அவனுங்களை ரிலீஸ் பண்ண கூடாதுனு..”

“…..”

“உன் அறிவை என்ன மியூசியத்துலேயா வைச்சுருக்க..அவர் வந்தாராம் இவரு விட்டுடாராம்.”

“…”

“எத்தனை மாசமா ஸ்க்டெச் போட்டு அவனை பிடிச்சேன்னு தெரியுமா உனக்கு..உன்னை ஒரு ஆளுனு நம்பி விட்டுட்டு வந்தேன் பாரு என்னை சொல்லணும்.வைச்சு தொலை நான் கமிஷ்னர்ட்ட பேசிட்டு லைன்ல வரேன்.”

“சார் இதுக்கு தான் நான் தலையிட மாட்டேன்னு சொன்னேன்.நீங்க எல்லாத்தையும் என் பொறுப்புனு சொன்னதால மட்டும் தான் கேஸை எடுத்தேன்.”

“….”

“அவன் யாரா வேணும்னாலும் இருக்கட்டும்.கேஸ் சார்ஜ் ஷீட் போட்டவ நான்..அப்போ எனக்கு இன்ஃபோ வந்துருக்கணுமா இல்லையா?”

“….”

“சரி ஆனால் இதுக்கு மேல நான் இந்த கேஸை பார்க்க மாட்டேன்.நீங்க வேற ஆபீசரைப் பார்த்துக்கோங்க..”

“….”

“இல்ல சார் வேண்டாம்..தேக் யூ “,என்றவள் ஆழ்மூச்செடுத்து விட்டு மீண்டுமாய் அந்த இன்ஸ்பெக்டரை அழைத்தபடி சேரில் அமர்ந்தாள்.

“யோவ் நான் இனி அந்த கேஸ் இன்சார்ஜ் இல்ல..”

“…”

“எல்லா வெங்காயமும் எனக்கும் தெரியும்.கமிஷ்னர்ட்ட பேசிட்டேன்.அவரு யாரை சொல்றாரோ அவங்ககிட்ட கோஆர்டினேட் பண்ணிக்கோ”

“…”

“சாரி மண்ணாங்கட்டி எல்லாம் எங்கேயாவது கொண்டு போய் கொட்டு கடுப்பேத்தாம போனை வை..”,என்றவள் தனதறைக்குச் செல்ல எத்தனிக்க ராகினி காபி டம்ளரை அவள் கையில் திணித்தார்.

“தேங்க்ஸ் மா..”,என்றவள் மாடிக்குச் செல்ல அவளையே விழிவிரித்து பார்த்திருந்தாள் அபிநயா.

“என்னாச்சு அபி..”,என்ற ஆனந்தன் சிரித்தான்.

“என்னங்க அக்கா இவ்வளவு டென்ஷன் ஆகுறாங்க?அதை விட அத்தையும் மாமாவும் ஒண்ணுமே சொல்ல மாட்றாங்க!எங்க வீட்ல பொம்பளைங்க சத்தமா பேசக் கூடாதுங்கிறது தான் முதல் ரூலே..”

“ஹா ஹா நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே..இது தான் இனி உன் வீடு நீ எப்படி இருக்கணும்னு நினைக்குறியோ அப்படி இரு..சொல்லப் போனா இங்க அண்ணிக்கு பர்ஸ்ட் ஃபேனே அப்பா தான்.

அவருக்கு அண்ணி முகம் கொஞ்சம் வாடினாலும் பொறுக்க மாட்டாரு.போக போக நீயும் பழகிடுவ..அப்பறம் அண்ணி…டென்ஷன் ஆனா பக்கத்துல எவனும் நிக்க முடியாது..கண்மண் தெரியாம கத்துவாங்க”,என்றவன் சிரிக்க அபிநயாவோ,

“எனக்கு எல்லாமே புதுசா இருக்கு..அதுவும் இவங்களை வெளியே கூட்டிட்டு போறதுக்கெல்லாம் ஹெல்ப் கேட்டேனே..”

“ஹே அவங்க வேலையில் தான் அப்படி வீட்ல நீயே பாக்குற தான..இதை விட அண்ணன் வந்தப்பறம் பாரு..அவங்களா இவங்கனு இருப்பாங்க”,என்றவனைப் பார்த்து சிரிக்கும் முறை அபிநயாவினுடையதானது.

சுடிதாரில் இறங்கி வந்தவள் மாமியாரோடு சமையலறையில் நுழைந்து கொள்ள மெதுவாய் அபிநயாவும் அங்குச் சென்றாள்.

“புதுப் பொண்ணுக்கு இங்க என்ன வேலை?”,என்ற காயத்ரியை இன்னுமாய் பிடித்துப் போனது அபிக்கு.

“நானும் எதாவது பண்றேன் கா.அத்தை என்ன பண்ணணும்னு சொல்லுங்க..”

“அதெல்லாம் வேணாம் டா அபி..நாங்க பார்த்துக்குறோம்..”

“ஆமா அபி மேடம் தம்பியை போய் கவனிங்க”,என்றவளை செல்லமாய் முதுகில் தட்டினார் ராகினி.

“ஏன் அவகிட்ட வம்பு பண்ணிட்டே இருக்க காயூ?”

“ம்மா..இந்த காலேஜ்ல எல்லாம் ஒரு ஏமாளி கிடைச்சா வைச்சு செய்யுவாங்களே அந்த மாதிரி இவ ரொம்ப அமைதியா க்யூட்டா இருக்கா இல்ல..அதான்..”

“நீங்க இரண்டு பேரும் ஓரகத்திங்க நியாபகம் இருக்கா?”

“நீங்க கூட தான் மாமியார் அது உங்களுக்கு நியாபகம் இருக்கா?”,என்றதும் அபிநயா சிரித்தாள்.

“ம்ம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்படி கத்திட்டு இப்போ எப்படி இருக்கா பார்த்தியா அபி..”

“ஆமா அத்தை நான் பயந்தே போயிட்டேன்.”

“அவங்ககிட்ட எல்லாம் இப்படி கொஞ்சிட்டு இருந்தேன்னா இதே மாதிரி மாவு பிசைய விட்டுருவாங்க ம்மா..”

“ஆனாலும் கோவத்தை கொஞ்சமாவது குறைக்கலாம் காயூ நீ..”

“நானும் ரொம்ப வருஷமா நியூ இயர் சபதமெல்லாம் எடுக்குறேன்..எங்க ஒண்ணும் வேலைக்கு ஆக மாட்டேங்குது.”

“அது சரி..ஆமா அம்மா வீட்டுக்கு தங்கவே மாட்றனு வருத்தப்பட்டாங்க..போயிட்டு வரலாம் தான?”

“இந்த வாரம் அன்பு கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்கான் மா..நீங்க அப்பா எல்லாம் தான் இப்படி கெடுத்து வைச்சுருக்கீங்க..

எங்க அபியை அவங்க வீட்டுக்கு போறாளானு கேளுங்க?”,என்றதும் அவசரமாய் இல்லை என்பதாய் தலையசைத்தவளைப் பார்த்து சத்தமாய் சிரித்தார்க்கள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode