99
“பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
விளக்கம்
“பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்
விளக்கம்
அடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், தன்னை சரணம் அடைந்து சலாம் போட்டு சேவகம் செய்பவர் என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார்,
ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், இறை சிந்தனை, கோவிலுக்குச் செல்தல், அன்ன தானம், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்,
ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி, கோவிலுக்குச் செல்தல் என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே கிளம்பிய மருமகளை ராகினி ஆராய்ச்சியாய் பார்க்க அசடு வழிந்தவளாய் வாய்க்கு வந்ததை கூறிவிட்டு பறந்திருந்தாள்.
“என் லவ்வுக்கு கூட இதெல்லாம் பண்ணதில்ல இவங்களை வைச்சுகிட்டு..”,என்றவள் பக்கத்து தெருவில் பைக்கை நிறுத்திவிட்டு ஆனந்தன் வருவதற்காக காத்திருந்தாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் வந்தவனுக்கே காயத்ரியைப் பார்த்து சிரிப்பு வந்துவிட்டிருந்தது.
“நல்ல பண்றீங்க இரண்டு பேரும்..உங்க மாமனார் குடும்பத்தை நினைச்சா எனக்கு இப்போவே தலை சுத்துது தம்பி..”
“உங்களால முடியும் அண்ணி..”,என்றவன் மீண்டுமாய் சிரிக்க கொலைவெறியோடு அவனைப் பார்த்தவள் அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
அபிநயாவின் வீட்டு அழைப்புமணியை அழுத்திவிட்டு காத்திருந்தவளை பார்த்து விழிவிரித்து வரவேற்றார் அபிநயாவின் தாய்.
காக்கி பேண்டும் கருப்பு சட்டையுமாய் வந்து நின்றவளைப் பார்த்து அனைவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ள அபிநயா அமைதியாய் அவளைப் பார்தௌது புன்னகைத்தாள்.
“ஹாய் சித்தி..”
“வாம்மா..எப்படியிருக்க என்ன இவ்வளவு தூரம்?”
“நல்லாயிருக்கேன்.அபியை பார்த்துட்டு ஒரு ஹெல்ப் கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.”
“என்ன மா?”
“இன்னைக்கு எங்க டிபார்ட்மெண்ட்ல ஹெல்த் செக்கப் அரேஞ்ச் ண்ணிருக்காங்க..வர வேண்டிய லேடி டாக்டர் லாஸ்ட் மினிட் வர முடியல..ஒரு டெலிவரி..அதான் அபி நியாபகம் வந்தது கூட்டிட்டு போலாம்னு வந்தேன்.”
“!!”
“என்னாச்சு சித்தி..நானே சாயந்திரம் கொண்டு வந்து விட்டுறேன்..கமிஷனர்கிட்ட கன்பார்ம் பண்ணணும்..கொஞ்சம் சீக்கிரம் அனுப்புறீங்களா?”,என அவர்களை யோசிக்க விடாயல் பேசி முடித்தாள்.
“எனக்கு லீவ் தான் கா நான் வரேன்..ஒரு நிமிஷம் கிட் எடுத்துட்டு வந்துரேன்.”,என்றவள் தாயிடம் எதோ கூறிவிட்டு காயத்ரியோடு கிளம்பினாள்.
பைக்கில் அமர்ந்து இரண்டு தெரு தள்ளி நின்றிருந்த ஆனந்தனின் காரின் அருகில் வந்து நிறுத்தினாள்.
“யப்பா டேய் என்னால முடியல..இவ மட்டும் இன்னைக்கு வாயைத் திறக்காம இருந்துருந்தா..”,என்றவள் அபியின் கழுத்தை நெறிப்து போல் ஆட்டினாள்.
“ஆ..அக்கா தேங்க் யூ..”
“இதெல்லாம் பெருமையா கடமை மா..”,என்றவள் மாலை வந்து அவளை அழைத்துச் செல்வதாய் கூறிவிட்டு கிளம்பினாள்.
“வாங்க மேடம்..”
“”உங்களால தான்…அக்கா பாவம்..”
“ம்ம் ஏன் சொல்ல மாட்ட..என்நிலைமை அதை விட மோசம் தெரியுமா..”
“இன்னும் ஒரு மாசம் தானே..”
“அசால்ட்டா சொல்ற..ஒருருரு மாசம்..”,என்றபடி காரைக் கிளப்பியவன் அவளோடு கதையளந்தபடியே தியேட்டரை நோக்கிச் சென்றான்.
நாட்கள் தெளிந்த நீரோடையாய் நகர சிறியவர்கள் இருவருக்கும் கல்லூரி முடிந்திருந்தது.வேலைக்கான அழைப்பு கடிதத்திற்காக காத்திருந்தனர்.
இரண்டு நாளாகவே சற்று அதிக உற்சாகத்தோடு சுற்றிக் கொண்டிருந்தாள் காயத்ரி.அன்புவிற்கு காரணம் தெரிந்தாலும் கண்டும் காணாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
மறுநாள் முகூர்த்தப் புடவை எடுக்கச் செல்வதாய் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க சிறியவர்களும் வீட்டில் இருப்பதால் அனைவருமாய் செல்லலாம் என்று முடிவெடுத்து காயத்ரி விடுமுறை சொல்லியிருந்தாள்.
இரவு அறைக்குள் நுழைந்தவள் மலர்ந்த முகமாய் படுத்துக் கொள்ள அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவனாய்,
“சரியான எல் கேஜி டி நீ..”
“என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ உன்னையும் கவனிச்சுட்டுதான இருக்கேன்..நீயும் தான் ஹாப்பியா இருக்க..”
“ம்ம் என் அழகு ராணியோட சந்தோஷத்தைப் பார்க்குறதை நினைச்சு நானே சந்தோஷமா இருக்கேன் டி..”
“டென்ஷனா இருக்கு அன்பு..”
“ஹோப் ஃபார் தி பெஸ்ட்..என்னோட பேண்ட் பாக்கெட்ல ஒரு கவர் இருக்கும் எடுத்துட்டு வா..”,என்றதும் குழந்தையாய் எழுந்து செல்பவளைப் பார்க்கத் தெவிட்டவில்லை அன்புவிற்கு.
“ஹே எப்படி டா?!!”
“உன்னோட சேர்ந்து என்னையும் இப்படி மாத்தி வைச்சுருக்கியேநீ தான்.மார்னிங் செக் பண்ணிட்டு சொல்லு அப்பறமா டாக்டர்கிட்ட போலாம்.”
“ஒன்றும் கூறாமல் அருகில் அமர்ந்து அவனது சட்டையை இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.
“ரிலாக்ஸ் கண்மணி..”
“ம்ம்..”
“இப்பவும் சொல்றேன்..ரிசல்ட் என்னவா இருந்தாலும் டென்ஷன் ஆகக் கூடாது புரியுதா..”
“…”
“எல்லாத்துக்கும் தயாரா இருப்போம்னு சொல்றேன் டி..சரியா?”
“சரி அன்பு..”,என்றவளுக்கு எப்போதடா விடியும் என்று இருந்தது.சரியாய் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்தவளை ஒரு கட்டத்தில் பிடித்து கைக்குள் அமர்த்தி உறங்கிப் போனான் அன்புச் செல்வன்.
ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தவளைப் பார்த்தவாறே கடைக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான் அன்பு.அவள் பயமும் பதட்டமுமாய் அவனையேப் பார்த்திருக்க சமாதானமாய் தலையசைத்து குளியலறைக்குள் அனுப்பி வைத்தான்.
சில நிமிடங்களில் வெளியே வந்தவளின் கண்களில் கண்ணீர் தேங்கியிருக்க அவளது வாடிய முகமே அன்புச் செல்வனிற்கு விஷயத்தை உணர்த்தியது.
“கண்மணி இங்க வா.”,என்றவன் கட்டிலில் அமர்ந்த வண்ணம் கைநீட்டி அவளை அழைக்க அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவளாய் தோள் சாய்ந்து விசும்ப ஆரம்பித்திருந்தாள்.
“காயூ மா..மே பி ரொம்ப சீக்கிரமே செக் பண்றோமோ என்னவோ..இன்னும் ஒரு வாரம் போட்டு அகெயின் செக் பண்ணலாம் டி..”
“ம்ம்..”
“என் செல்லம் இல்ல..சீயர் அப் டி..நானும் இப்போ போயிட்டு ஒன்பது மணிக்கு எல்லாம் வந்துருவேன்..இன்னைக்கு முழுசும் நமக்காக..சரியா..”
“சரி அன்பு..நீ கிளம்பு..வா நான் காபி ரெடி பண்றேன்.”,என்றவள் கண்களை அழுத்தித் துடைத்துவிட்டு கீழே சென்றிருந்தாள்.
அன்புவிற்கோ அவள் நிலைமை நன்றாகப் புரிந்தாலும் இந்த விஷயத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்துதான் போனான்.
காலை ஒன்பது மணிக்கு வந்தபோது சிறியவர்களோடு சேர்ந்து சற்று தெளிவாகியிருந்தாள் காயத்ரி.அதே உற்சாகத்தோடு அனைவருமாய் புடவை எடுக்க கிளம்பியிருந்தனர்.
கலகலப்பிற்கு குறைவின்றி இரு குடும்பமும் ஆடைகளைத் தேர்வு செய்து கொண்டிருக்க அபிநயா காயத்ரியையும் தேன்மொழியையும் விட்டு நகரவில்லை.
தன் குடும்ப உறுப்பினர்கள் கண்டு கொள்ளாதவாறு ஆனந்தனிடம் புடவையை காட்டி கண்களால் தேர்வு செய்து கொண்டிருந்தாள்.
“ஏன் தேனு உன் மூத்த அண்ணிக்கு அப்படியே நேரெதிரா இருக்காளே இரண்டாவது அண்ணி..இதனால என் பேர் டேமேஜ் ஆக வாய்ப்பிருக்கா?”,என்று காயத்ரி கேட்டதற்கு தேன்மொழி சிரிக்க வழக்கம் போல் அபிநயா பாவமாய் அவளைப் பார்த்தாள்.
“பின்ன என்ன அபி..இவ்வளவு நல்லவளா இருந்தா உங்க மாமியார் அப்பறம் என்னை டீல்ல விட்டுற மாட்டாங்களா?”
“ஏன் கா இப்படி பண்றீங்க..”
“மகளே நீ நம்ம வீட்டுக்கு வா அப்பறம் இருக்கு உனக்கு..”,தன் இரு அண்ணிகளின் கலந்துரையாடலில் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
அன்புவிற்கு காயத்ரி இப்படி சிரித்த முகமாய் இருப்பதே திருப்தியாய் இருக்க அனைத்தும் சில மணி நேரம் தான்.தற்செயலாய் மனைவியைப் பார்த்தவன் அவள் முகம் வாடியிருப்பதைக் கண்டு கொண்டான்.
“காயூ என்னாச்சு?நீ ஓகே தான?”
“ம்ம் அன்பு..நாம வீட்டுக்கு போலாமா?”,அவள் தவிப்பைப் பார்த்தவன் அன்னையிடம் கூறிவிட்டு இயல்பாய் கிளம்பியிருந்தான்.
வீட்டிற்கு வந்தவள் நேராய் குளியலறைக்குள் புகுந்து கொள்ள அலமாரி திறந்திருந்தலில் அன்புவிற்கு விஷயம் புரிந்து ஆழமாய் மூச்செடுத்துக் கொண்டான்.
வெளியே வந்தவளோ ஒன்றும் பேசாமல் ஜன்னலின் வழியே எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.
“சாதாரணமா தள்ளி போயிருக்கு போல..நான் தேவையில்லாம உன்னையும் ஆசைப்பட வைச்சுட்டேன் டா..”,அவளருகில் சென்று பின்னிருந்து இதமாய் அணைத்துக் கொண்டவனின் கன்னத்தில் கைப் பதித்தாள் காயத்ரி.
“உண்மையை சொல்லு உனக்கு வருத்தமா இருக்கு தான?”
“காயூ…”
“சொல்லு அன்பு..”
“நீ எதிர்பார்த்து ஏமாந்து போன மாதிரி இருக்கேனு நினைச்சு தான் வருத்தமா இருக்கு..”
“…”
“ஒரு ஒரு தடவை நீ மூட் ஆஃப் ஆகும்போதும் கடுப்பா இருக்கு டி..என்னால எதூவுமே பண்ண முடியலையேனு இருக்கு.”
“….”
“உன்னை எல்லா விதத்திலேயும் சந்தோஷமா வைச்சுக்கணும்னு நான் ஒரு ஒரு நிமிஷமும் நினைக்குறேன்.ஆனால் இந்த ஒரு விஷயம்..ப்ச்ச்…”
“படத்துக்கு எங்கேயாவது போலாமா அன்பு..”
“!!!”
“என்ன போலாமா?”,என்றவள் லேசாய் சிரித்திருக்க அன்பு பின்னிருந்தே கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தான்.
அன்றைய தினம் முழுவதும் இருவருக்குமாய் அழகான பொழுதுகளோடு கழிந்தது.
அதன்பின், மனதிற்கு பிடித்த வேலை காதலான கணவன் அழகான குடும்பம் என்பதைக் கடந்து எந்தவித எண்ணங்களும் மனதை ஆக்கிரமிக்காதவாறு மனதை திசை திருப்பியிருந்தாள் காயத்ரி.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆனந்தன் அபிநயாவின் திருமண நாளும் வந்தது.காயத்ரி குடும்பத்தை விட வசதியான குடும்பம் அபிநயாவினுடையது.
ஆடம்பரமான திருமணம் கண்ணைப் பறிக்கும் சீர்வரிசைகள் என பார்த்து பார்த்து செய்திருந்தனர் அபிநயாவின் குடும்பத்தார்.
அமர்களமாய் முடிந்திருந்த திருமணத்தில் இந்த முறை சிறியவர்களோடு சேர்ந்து காயத்ரியும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.
மணமக்களை வீட்டிற்கு அழைத்து வந்த பின்னர் அபிநயாவோடு அமர்ந்திருந்த காயத்ரியிடம் வந்த ராகினி,
“காயூ,அபிக்கு வீட்டை சுத்தி காட்டு..அவளோட இருந்து பார்த்துக்கோ என்ன..”
“இது நல்ல கதையா இருக்கே..உங்க சின்ன மருமக வந்தவுடனே என்னையே வேலை வாங்குறீங்களா..இப்போவே அப்பாகிட்ட நியாயம் கேட்குறேன்..”
“நீ என்ன வேணுமோ கேட்டுக்கோ இப்போ என்னை ஆளை விடு”,ன்றவர் அபிநயாவைப் பார்த்து புன்னகைத்துச் சென்றார்.
“என்ன டாக்டரம்மா..வீடெல்லாம் பிடிச்சுருக்கா?”
“நீங்க இந்த வீட்டு மருமக மாதிரி இல்லை..பொண்ணு மாதிரி இருக்கீங்க கா..அத்தையும் என்ன இவ்வளவு ஜாலியா பேசுறாங்க?”
“பின்ன எல்லாரும் உன் எம்டன் குடும்பமாவே இருப்பாங்களா..”
“ஆனாலும் எப்போ பார்த்தாலும் எங்க வீட்டை கலாய்ச்சுட்டே இருக்கீங்க..”
“ஹலோ இனி இது தான் உன் வீடு சோ நீயும் சேர்ந்து அவங்களை கலாய்க்கணும்..என்ன சொல்ற?”
“அது சரி..உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சுட்டே இருப்பேன்..உங்க லவ் ஸ்டோரி ஆனாலும் சூப்பர் தெரியுமா..அன்பு அத்தான் ரொம்ப லக்கி..”
“ஹா ஹா நீ வேற இந்த உலகத்துலேயே நான் மட்டும் தான் ரொம்ப லக்கி..”,என்றவள் கன்னம் தட்டிச் சிரித்தாள்.
“உங்களுக்கு தேங்க்ஸும் சொல்லணும் ரொம்ப நாள் பெண்டிங்”
“அது எதுக்கு??”
“முதல்ல இருந்தே என்னோட நல்லா பழகினதுக்கு..சொல்ல போனா உங்களோட பேசினப்பறம் தான் கல்யாணத்து மேல இருந்தே பயமே போச்சு.
எங்க வீட்டில் இத்தனை வருஷம் எவ்வளவோ கட்டுப்பாடுகளோடேயே வளர்ந்துட்டேன்.அதனாலேயே கல்யாணம் னா என் அப்பா சித்தப்பா மாதிரி ஆட்கள் தான் இருப்பாங்கனு ஒரு பயம்.
எங்க வீட்டில் எனக்கு பண்ணின மிகப் பெரிய நல்லது இந்த குடும்பத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்தது தான்.அதிலேயும் நீங்களும் மாமாவும் பேசிக்குறதை அன்னைக்கு துணி எடுக்க போனப்போ பார்த்தனே அப்பா பொண்ணு மாதிரி இருந்தது.”
“இவ்வளவு சொல்ற எங்க தம்பியைப் பத்தி ஒண்ணும் சொல்ல மாட்டிறியே அபி மா?”,என்றதில் முகம் சிவக்க குனிந்து கொண்டாள் அபிநயா.
“அவருக்கு ரோல் மாடலே நீங்களும் அன்பு அத்தானும் தான்..அதனால கண்டிப்பா ரொம்ப நல்ல ஹஸ்பெண்டா தான் இருப்பாரு..”
“ஓ…ஓ..ம்ம்”,என்றவளின் சிரிப்பில் தானும் இணைந்து கொண்டாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!