99
வெண்பா : 17
விளக்கம்
வெண்பா : 17
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
“அறும்-பாவம்!” என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்?
விளக்கம்
வெறும் பானையை அடுப்பில் வைத்து தீ மூட்டி பொங்கு என்றால் பொங்குமா ? அது போல் செய்ய வேண்டிய காலத்தில் நல்லது செய்யாமல், அடுத்தவருக்கு கொடுத்து உதவாமல் இருந்து விட்டு, அதன் பலனாக இன்று வறுமை வந்த போது, கடவுளே இது சரியா ,
இது முறையா, நீ இருக்கிறாயா , இல்லையா . சங்க நிதி, பதும நிதி என்று கூறும் இரண்டு நிதி அளவுப் பணம் வருமா ? என்று கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன் , நமக்கு நல்லது நடக்க வேண்டுமானால் பிறருக்கு நல்லது செய்யுங்கள், கடவுளை நொந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை.
முந்தைய தினம் கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு காரணமாக சற்றே பதட்டமான சூழல் நிலவ அன்று வீட்டிற்கு வரும்போதே நள்ளிரவையும் தாண்டியிருந்தது காயத்ரிக்கு.
நல்ல தூக்கத்தில் இருந்தவளை கலைத்து எழுப்பியது அவளின் கைப்பேசி.
இரவு இரயிலில் வந்த தம்பதியினரின் குழந்தையை காணவில்லை எனப் புகார் வந்திருக்க காயத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
காலை ஹோட்டலுக்கு கிளம்பிய அன்பு காயத்ரியை விடுப்பு எடுத்துக் கொண்டு ஓய்வெடுக்குமாறு கூறிச் செல்ல சரி என்றிருந்தாள்.
இப்போது இருக்கும் நிலைமைக்கு கண்டிப்பாக போய் தான் ஆக வேண்டும் என்று உணர்ந்தவளாய் கடகடவென குளித்து முடித்து அவசரமாய் யூனிபார்மை அணிந்து கொண்டு கீழே வந்தாள்.
“காயூ லீவ்னு அன்பு சொன்னானே?”
“ம்மா..ஒரு கேஸ் மா…போயே ஆகணும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வந்துடுறேன்..”
“சாப்பிட்டு போ காயத்ரி மா..”
“ப்பா ஆல்ரெடி லேட் பா..நான் வெளில பார்த்துக்குறேன்.அன்பு வந்தா சொல்லிடுங்க..நான் மெசெஜ் போடுறேன் அவனுக்கு.”,எனும்போதே இன்ஸ்பெக்டரிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க மணி..”
“….”
“அந்த ஏரியா கேங்..அவன் யாரு…ஹான் உடுமலை சேகர்..அவனை கார்னர் பண்ணுங்க..கண்டிப்பா அவன் ஆளா தான் இருக்கும்..”
“…”
“எல்லாத்தையுமே நான் தான் சொல்லணும்னா நீங்க என்ன தான் பண்ணூவீங்க?”
“அந்த சேகர் அவனுங்க கூட்டாளிங்க அத்தனை பேரையும் பிடிச்சு வைங்க..நான் வந்துட்டே இருக்கேன்.”,என்று வாசல் வரைச் சென்றவளின் கைப்பிடித்து நிறுத்தி கஞ்சியை ராகினி திணித்தார்.
“ம்மா.”
“ஒண்ணும் பேசாத..நேரமாகுது சாப்பிட்டு கிளம்பு..”,என்றவர் அவசரப்படுத்த அவரைப் பார்த்து சிரித்தவாறே ஒரே மூச்சில் குடித்து முடித்தவள் வண்டியைக் கிளப்புவதற்குள் அடுத்த அழைப்பு வந்திருந்தது.
ராகவனும் ராகினியும் வாசலில் நின்று மருமகளையேப் பார்த்திருந்தனர்.
“வேலைனு வந்துட்டா காயூ ஆளே மாறிடுறா இல்லங்க..”
“ம்ம் ஆமா ராகி ஆனால் வீட்டில் அப்படியே நேரெதிர்..”,என்றவர் புன்னகைத்தார்.
“நல்ல பொண்ணுங்க..கடவுள் அவ விருப்பத்தை சீக்கீரமே நிறைவேத்தினால் நல்லாயிருக்கும்..”
“ராகி…”
“எனக்கும் பேரன் பேத்தி பார்க்க ஆசை இருக்காதா..”
“எல்லாம் சரி தான்..உன்னை அறியாம அவகிட்ட எதுவும் சொல்லி வைச்சுடாத..ஏற்கனவே வருத்ததில் இருக்கா இந்த விஷயத்துல..நாமளும் கஷ்டப்படுத்த கூடாது.”
“ம்ம்..புரியுதுங்க..”
இரவு காயத்ரி வீட்டை அடைந்தபோது ஹோட்டலிலிருந்து வந்த அன்பு அவளுக்காக வராண்டாவிலேயே காத்திருந்தான்.
“அப்போவே வந்துட்டியா அன்பு?”
“ம்ம் அரை மணிநேரம் ஆச்சு கண்மணி போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா சூடா தோசை ஊத்துறேன்.”
“அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.நீ வா ரூம்க்கு போலாம்..”
“ஒண்ணும் வேண்டாம் போ காயூ..”,என்றவன் சமையலறைக்குள் நுழைந்து வேலையைக் கவனித்தான்.
ஐந்தே நிமிடத்தில் கீழே வந்தவள் கணவனை பின்னிருந்து கட்டிக் கொண்டாள்.
“கேஸ் என்னாச்சு டி?குழந்தை கிடைச்சுதா?”
“ம்ம் ஆளைப் பிடிச்சுட்டோம் அன்பு.ரொம்ப சின்ன பாப்பா..அவங்க அம்மா அப்பா அழுததை தான் தாங்கவே முடியல..”,என்றவளை முன்னிழுத்து மேடையில் அமர்த்தியவன் தோசையை ஊட்ட ஆரம்பித்திருந்தான்.
கணவனையேப் பார்த்த வண்ணம் உணவை விழுங்கியவளைப் பார்த்து கண்ணடித்து அன்பு சிரிக்க அவனை இன்னுமாய் தன்புறம் இழுத்து அவனுக்குமாய் தோசையை ஊட்டினாள்.
“உனக்கு இருக்குற டயர்ட்ல இப்போ இந்த ரொமேன்டிக் லுக் எல்லாம் தேவையா?”,என்றவன் இடக்கையால் அவள் கன்னம் வருடினான்.
“என்ன பண்றது இப்போ எல்லாம் நம்மளை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்..”
“போலீஸம்மா இப்படி எல்லாம் சிணுங்கினா அப்பறம் நான் நல்லவனா இருக்க மாட்டேனே..பரவாயில்லையா..”
“பரவால்ல..பேட் பாய் அன்பு இன்னும் அழகு தெரியுமா..”,என்றவள் கை விரித்துச் சிரிக்க தன்னவளை அப்படியே கைகளில் ஏந்தியிருந்தான்.
“ஐயோ அன்பு நான் சும்மா ஏதோ…இறக்கி விடு டா..மானம் போயிடும் யாரும் வந்தாங்கனா..”
“நான் முதல்லயே வார்ன் பண்ணேன் நீ தான் கண்டுக்கல டி பொண்டாட்டி..”,என்றவன் அப்படியே மாடியேற பதட்டம் குறைந்து கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
அந்த நாளின் அத்தனை களைப்புகளையும் மீறி தூங்கா இரவாகிப் போனது இருவருக்கும்.
“அன்பு..”
“ம்ம்..”
“லவ் யூ..”
“பாரு டா ஒரு வருஷத்துக்கு அப்பறம்…”,அவன் மீது சாய்த்திருந்தவள் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்து முறைத்தாள்.
“நோ டென்ஷன் கண்மணி..லவ் யூ சோ மச்..”,என்றவன் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.
“காதலிக்க எல்லாருக்குமே தெரியும் டா..ஆனால் உன்னை மாதிரி தொடர்ந்து காதலிக்க பல பேருக்குத் தெரியுறதே இல்ல..”
“அட அட அப்பறம்..”
“ஏன் கலாய்ச்சுட்டே இருக்க நான் சீரியஸா பேசுறேன்..”
“என்னவோ ஒன்னு போட்டு உன்னை தவிக்க வைக்குது..அதனால வர்ற உளறல் தான இதெல்லாம்..”
“!!!”
“என்னனு சொல்லு டி..”
“இன்னைக்கு எனக்குத் தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் ஒருத்தங்க..”
“ம்ம்..”
“அவங்களுக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷமா குழந்தையே இல்லை.லவ் மேரேஜ் தான்..ஆனால் இப்போ இந்த பிரச்சனைக்காக அவங்க ஹஸ்பெண்ட் சைட்ல டிவோர்ஸ் வரைக்கும் பிரச்சனை பண்றாங்களாம்..”
“!!!”
“சாதாரணமா பேசிட்டு இருக்கும் போதே என்கிட்ட அழுதுடாங்க..என்னனு கேட்ட அப்பறம் இதையெல்லாம் சொன்னாங்க..ரொம்ப டிப்ரெஸ்டா இருந்தாங்க..பார்க்கவே பாவமா இருந்துச்சு டா..”,அவள் பேசுவதை கேட்ட வண்ணம் அவனது கை அவளின் தலைகோதிக் கொண்டிருந்தது.
பேச்சை அவள் நிறுத்திய பின்னும் அவனிடம் எந்தவித பதிலும் வராமல் போக சற்றே தயங்கியவளாய்,
“ஏன் அன்பு..நாம இந்த பெட்டர்லிட்டி சென்டர் எதாவது போய் பார்த்தா என்ன?”
“…”
“ஒரு வேளை பிரச்சனை இருந்தா கூட IVF மாதிரி…”,சட்டென அவளை கீழே தள்ளி அவள்புறமாய் படுத்தவனின் கண்களில் அத்தனை தீவிரம் இருந்தது.
“என்னக்கு கோபம் எல்லாம் வராது காயூ..ஆனால் இந்த பேச்சை இதோட விட்டுரு..ட்ரீட்மெண்ட் எடுத்து உன் உடம்பை கெடுத்து…அப்படி ஒரு குழந்தை எல்லாம் எனக்கு வேண்டாம்..அப்படி குழந்தை பிறக்காததுக்காக உன்னை டிவோர்ஸ் பண்ற ஐடியாலேயுமே நான் இல்ல..கொஞ்சமாவது தூங்கு..”,என்றவன் நேராய் படுத்துக் கொண்டான்.
“சாரி…”
“இதுவே வேலையா போச்சு உனக்கு..தூங்கு டி..”,என்றவனை இன்னுமாய் இறுக்கிக் கொண்டவளை என்ன செய்யலாம் என்ற ரீதியில் பார்த்து வைத்தான்.
“IVF எல்லாம் பத்தி யோசிக்குற அளவு போவியா டி மென்டல்..எவ்வளவு கஷ்டம் அனுபவிக்கணும்.உடம்பு என்னத்துக்கு ஆகும் முதல்ல..”
“இப்போ அதெல்லாம் எவ்வளவோ நார்மல் ஆகிடுச்சுல அன்பு..அதான் கேட்டேன்..”
“விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் அதோட விளைவுகளை தாங்க போறது நீ தான் காயூ.சைட் எஃபெக்ட்ஸ் இருக்கும்..மென்டலி நிறைய ப்ரஷர் வரும்..
இதுக்கெல்லாம் இப்போ என்ன அவசியம் வந்ததுனு தான் கேட்குறேன்.நானோ இல்ல அப்பா அம்மாவோ பேச வேண்டியதை எல்லாம் நீ பேசிட்டு இருக்க..
நீ சொல்ல வேண்டியதெல்லாம் நான் சொல்லிட்டு இருக்கேன்.எனக்கு இப்போ இல்ல,தலை நிறைச்சு பல்லு கொட்டி சாகுற வயசிலேயும் நீ மட்டும் தான் முக்கியம்..புரியுதா..”
“ம்ம்..”
“இன்னும் இரண்டு மாசத்துல வீட்ல கல்யாணம் வருது ஜாலியா அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசி..அதை விட்டுட்டு..”
“லவ் யூ பாசக்காரா..”
“நீ மென்டலே தான் போலீஸம்மா”,என்றவன் தன்னவளின் கவலைக்காகவாவது சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டான்.
அன்று காலையிலேயே அபிநயா காயத்ரியை அழைத்திருந்தாள்.
“ஹாய் புதுப்பொண்ணு எப்படியிருக்க?”
“ஹாய் கா நல்லாயிருக்கேன்.நீங்க எப்படியிருக்கீங்க?”
“நலம் டா..அப்பறம் என்ன சொல்றார் தம்பி..”,மறுபுறம் அமைதியாகிவிட சற்று பற்கள் தெரியவே சிரித்திருந்தாள் காயத்ரி.
“எதுக்கும் நீ எந்த காலேஜ்ல படிச்சேன்னு சொல்லு நிஜமாவே டாக்டரானு விசாரிக்கணும்…”
“அக்கா..”
“ஹா ஹா சரி சரி தம்பி நீ பேசவே மாட்டேங்குறனு ஒரே ஃபீலீங்க்ஸ் அபி..”
“அவர்ட்ட தான் கா நான் இவ்வளவாவது பேசுறேன்..”
“கிழிஞ்சுது போ..சரி சொல்லு என்ன விஷயம்?”
“அது..”
“என்னாச்சு அபி?!”
“இல்ல கா அவர் வெளியில் கூப்பிடுறார்..வீட்ல ரொம்ப கஷ்டம் கா..என்ன பண்றதுனு தெரியல..அதான் உங்களுக்கு கால் பண்ணேன்”
“டியூட்டி இருக்குனு சொல்லிட்டு கிளம்பு அபி..இவ்வளவு நல்லவளா நீ?!”
“பொய் எல்லாம் சொன்னதே இல்ல..கண்டிப்பா மாட்டிப்பேன்..”
“ஆனந்தா ரொம்ப கஷ்டமப்பா..”,என்றவள் சிரிக்க அபியே புன்னகைத்திருந்தாள்.
“என்னோடயாவது அனுப்புவாங்களா?”
“தெரிலையே..”
“கிழிஞ்சுது..சரி விடு நான் ப்ளான் ரெடி பண்ணிட்டு சண்டே வீட்டுக்கு வரேன்.என்ன சொல்றேனோ ஆமானு சொல்லிட்டு வந்துறணும்..சரியா?”
“ஐயயோ கண்டுபிடிச்சுட்டாங்கனா..”
“நான் ஒரு போலீஸ் என்னையே இப்படி எல்லாம் பண்றியேமா நீ..மாட்டினா பாத்துக்கலாம் விடு..”,என்றவள் மேலும் சில நொடிகள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
இரவு அன்புச் செல்வனிடம் விஷயத்தைக் கூற அவனோ விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்.
“டிஎஸ்பிக்கு இப்படி ஒரு சோதனையா?!மாட்டிறாத பங்கு..”,என்றவனைப் பார்த்து அவளுக்குமே சிரிப்பு வந்திருந்தது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!