வரம்-17

by ஸ்ரீ
0 comments 99 views
A+A-
Reset

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி

விளக்கம்
கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் தண்ணீரின் குணம்/பெருமை அது இருக்கும் நிலத்தின் தன்மையினாலும், நல்ல மனிதர்களின் குணம்/பெருமை அவர் செய்யும் தர்ம காரியங்களினாலும், கண்ணின் பெருமை கருணை பொங்கும் விழிகள் மூலமும், சிறந்த பெண்ணின் குணம் /பெருமை அவளின் கற்பு நெறி மாறாப் பண்பினாலும் நீ அறியலாம்.

அன்றைய நாளின் விடியல் காயத்ரிக்கு தன் கணவனின் இறுகிய அணைப்பிலேயே விடிந்தது.

“ஹேப்பி அனிவர்சரி டி பொண்டாட்டி..”

“ஹேப்பி அனிவர்சரி அன்பு..”,என்றவள் இன்னுமாய் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.

“ஒரு வருஷம் ஆகிருச்சா?!எனக்கென்னவோ நேத்து தான் கல்யாணம் பண்ண மாதிரி இருக்கு..”

“ம்ம் இருக்கும் சார்…புது மாப்பிள்ளைனு நினைப்பு..எங்க டா என் கிப்ட்?”

“கிப்டா அதெல்லாம் வாங்கலையே டி..நீ எனக்கு வாங்கிருக்கியா என்ன??”

“ஹி..ஹி இல்லையே..நமக்கு அதெல்லாம் செட் ஆகலை இல்ல..”

“ம்ம் இதுவரை ஒரு கிப்ட் கூட கொடுக்காம லவ் பண்ணிருக்கேனா..ச்ச…வேஸ்ட் டி..இன்னைக்கு என்ன வேணும்னு சொல்லு கண்டிப்பா வாங்கி தரேன்..”

“அதுக்கு பேர் கிப்ட்டா??”,என்றவள் சிரிக்க அவனும் அவளோடு இணைந்து சிரித்திருந்தான்.

அவர்கள் கீழே வரும்போதே கேக்கோடு மொத்த குடும்பமும் காத்திருந்தது.காயத்ரியும் அன்புச் செல்வனும் விழிவிரித்து கீழேயிறங்க பெரியவர்களிடம் முதலில் ஆசீர்வாதம் வாங்கிய பின் கேக் வெட்டி சிறியவர்களுக்கு ஊட்டி முடித்து அமர்களமாய் திருமண நாளின் கொண்டாட்டங்களை முடித்தனர்.

மதிய நேரத்தில் காயத்ரியை அழைத்திருந்தான் அன்புச்செல்வன்.

“பிஸியா கண்மணி..”

“இல்ல அன்பு இன்னைக்கு கொஞ்சம் பரவால்ல..நீ சாப்டியா?”

“இல்லடி இனி தான்..ஹாஃப் டே லீவ் போட முடியுமா?”

“என்னாச்சு டா..உடம்பு சரியில்லையா என்ன?!”

“அடியேய் என்னை விட மோசம் டி நீ..அனிவெர்சரிக்கு வெளியில் போகலாம்னு கூப்பிட்டா..”

“ஐயோ அப்படி ஒண்ணு இருக்கோ..ஓகே டன் நான் கிளம்பி ஹோட்டலுக்கு வந்துடுறேன்.”

“மகாராணியை அழைத்துச் செல்ல வாசலிலேயே காத்திருக்கிறேன் டி என் அழகு பொண்டாட்டி..”

“அடடா என் புருஷன் பண்றதெல்லாம் சும்மாவே கிக்கா இருக்கும்..இன்னைக்கு என்ன பெர்ஃபாமென்ஸ் இன்னும் பின்றானே..”,என்றபடி வெளியே வந்தவளுக்கு கார் கதவைத் திறந்து விட்டவனைப் பார்த்து மலர்ந்த முகத்தோடு அவனோடு கிளம்பியிருந்தாள்.

“செம பசி காயூ..எங்க போலாம்?”

“என் புருஷன் எங்க சொல்றானோ அங்க…”,என்றவள் வாகாய் அவன் கைப்பிடித்து சாய்ந்து கொண்டாள்.

பக்கத்தில் இருந்த உயர்தர ஹோட்டலில் தங்களுக்கு தேவையானவற்றை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருக்க காயத்ரி அமைதியாய் தன்முன் இருந்த குவளையை வருடிக் கொண்டிருந்தாள்.

“தேவையில்லாம எதையாவது யோசிச்சனா பிச்சுருவேன் டி..”

“அடுத்த வருஷத்துக்குள்ள குட் நியூஸ் கிடைச்சா நல்லா இருக்கும் இல்ல அன்பு..”

“கண்மணி..”

“ஜஸ்ட் தோணிச்சு டா..வேற ஒண்ணும் இல்ல..”

“…”

“லேட் மேரேஜ்னால ரொம்ப நெகடிவ்வா யோசிக்குறேன்னு நினைக்குறேன் இந்த விஷயத்துல..”

“இப்படியே நீ புலம்பிட்டு இரு உன் இம்சை தாங்காம கடவுள் வருஷத்துக்கு ஒரு புள்ளையை கொடுக்க போறாரு..”,என்றவன் முறைக்க சத்தமாய் சிரித்திருந்தாள் காயத்ரி.

“சரி சொல்லு ஒன் இயர் ஆப் மேரேஜ் லைஃப் எப்படியிருக்கு?ஹாப்பியா இருக்கியா?”

“அன்பு..”

“ப்ச்…சொல்லு டி..சீரியஸாவே கேட்குறேன்..”

“ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு..பெஸ்ட் ஹஸ்பெண்ட் பெஸ்ட் பேமிலி..பெஸ்ட் டேஸ் ஆப் மை லைப் அன்பு..தேங்க் யூ பார் எவ்ரிதிங்..”

“என் அன்பு பொண்டாட்டிக்கும் மிகப் பெரிய நன்றி..வாழ்க்கையை இவ்வளவு அழகா ரசிச்சு வாழ கத்துக் கொடுத்ததுக்கு..காதலிக்க கத்துக் கொடுத்ததுக்கு..என்னை காதலிச்சதுக்கு..இப்படி நிறைய நிறைய சந்தோஷங்களுக்காக லவ் யூ சோ மச் காயூ..

வாழ்க்கையோட மிகப் பெரிய சொத்து நீ தான் எனக்கு..நான் ஜெயிக்குறதுக்கும் சந்தோஷமா இருக்குறதுக்கும் அவ்வளவு ஏன் நான் வாழறதுக்கே நீ வேணும் பொண்டாட்டி..”,என்றவன் தன்னவளின் கைகளைத் தன் கரங்களுக்குள் புதைத்துக் கொண்டான்.

“அன்பு..”

“நிஜமா கண்மணி…ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..அதுக்கு நீ மட்டும் தான் காரணம்..”,எஎன்றவனை எப்போதும் போல் மனம் கொள்ளா காதலோடு பார்த்திருந்தாள்..

பதினைந்து நாட்களில் கல்லூரி முடிவடையப் போகிறது இன்பாவிற்கும் தேன்மொழிக்கும்.இருவருமே கேம்பஸில் தேர்வாகியிருக்க கிருத்திகாவைப் பார்க்கும் நேரமெல்லாம் அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள்.

“கிருத்தி..ரொம்ப படுத்துற டி..”

“பேசுவா டா பேசுவ..உனக்கு என் மேல லவ்வே இல்ல..அதான் இப்படி சொல்ற..இன்னும் இரண்டு வாரம் தான் அப்பறம் உன்னைப் பார்க்காம எப்படி இருக்க போறேன்னு நான் தான் தினமும் கவலைப்பட்டுட்டு இருக்கேன்.”

“ப்ச்ச்..குழந்தை மாதிரி பேசிட்டு இருக்க..என்னைக்கு இருந்தாலும் இப்படி ஒரு நாளை ஃபேஸ் பண்ணி தான் டி ஆகணும்.இதே ஊர்ல தான் இருக்க போறோம் அப்புறம் என்ன?”

“தெரியல இன்பா..உன் அளவுக்கு என்னால ஈசியா எடுத்துக்க முடியல..”இதுதான் தினசரி வாடிக்கையாய் போனது.

அன்று தேன்மொழி மரத்தடியில் அமர்ந்திருந்த நேரம் சந்துரு அவளைத் தேடி வந்திருந்தான்.மனதினுள் பயம் இருந்தாலும் வெளிக்காட்டாமல் என்னவென்பதாய் பார்த்து நிற்க,

“உன்கிட்ட அப்படி நடந்துருக்க கூடாது.ஐ அம் சாரி தேன்மொழி.”

“பரவால்ல..”,என்றவள் அதற்குமேல் பேச விரும்பாமல் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க,

“தேன்,நான் அப்ரோச் பண்ண விதம் வேணும்னா தப்பா இருக்கலாம்.ஆனால் உண்மையாவே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.”

“எனக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை சந்துரு.தயவுசெஞ்சு இனி அதைப்பத்தி பேசாத.ஹோப் யூ அன்டர்ஸ்டண்ட்..”,என்றவள் வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அங்கு நடந்ததைக் கவனித்தவளாய் அவளது தோழி அவளருகில் வந்து அமர,

“என்ன டி சந்துரு மறுபடியும் பிரச்சனைப் பண்ணிணானா?”

“அதெல்லாம் இல்ல டி எப்போதும் போல அதே புராணம் தான்.”

“எனக்கும் அவன் லவ் என்னவோ உண்மைனு தான் தோணுது.ஆனால் தேவையில்லாத வேலையைப் பண்ணி அவனே நிலைமையை கெடுத்துக்கிட்டான்.”

“ம்ம்..அந்த நாளை என்னால மறக்கவே முடியல டி..இப்போ நினைச்சால் கூட படபடப்பா இருக்கு..இதில் எங்கேயிருந்து இவன் மேல லவ் வர்றது..”,என்றவள் அந்தப் பேச்சை அப்படியே விட்டுவிட்டு வேறேதோ பேசத் தொடங்கியிருந்தாள்.

இப்போதெல்லாம் போனும் கையுமாகவே திரியும் ஆனந்தனைப் பார்த்து சிறியவர்கள் கேலி பேசுவதே வாடிக்கையாக இருந்தது வீட்டில்.

“நான் கூட டாக்டரம்மா கொஞ்சம் சமத்துனு தான் நினைச்சேன்..ம்ஹும் கேடி தான்..”

“அண்ணி அவளை பேச வைக்குறதுக்குள்ள என் எனர்ஜி எல்லாம் காலி ஆகுது இப்போ தான் நாலு வரி சேர்ந்தா மாதிரியே பேசுறா..”

“ஆனந்தா கல்யாணத்துக்கு அப்பறம் இப்படியே இருந்துருக்கலாமேனு ஃபீல் பண்ண போற..”

“என்ன அன்பு சார்..உங்க மனசில் இருக்குறதை சொல்ற மாதிரி தெரியுது..”

“ஹே ச்ச ச்ச..என்ன காயூ உன்னைப் போய் அப்படியெல்லாம் சொல்லுவேனா..”

“தம்பி உங்க அண்ணன் முழுசா அக்மார்க் புருஷனா மாறிட்டான்..ப்ராடு..”

“உங்க இரண்டு பேர் ரகளையும் பார்த்து தான் நான் கல்யாண வாழ்க்கைகே தயாராயிருக்கேன்..இப்படியே ஜாலியா தான இருக்கும்?”,என்றவனை அன்பு தோளோடு சேர்த்துக் கொண்டான்.

“ஹா ஹா இப்படியே தான் இருக்கும்..உங்க அண்ணி வேற ப்ளான் எல்லாம் வைச்சுருக்கா தெரியுமா..”,என்றவன் தங்களின் ஐஸ்கீரீம் கதையைக் கூற வாயைப் பிளந்தான் ஆனந்தன்.

“இதெல்லாமா நடக்குது..”

“இரண்டு பேர் சுவர் ஏறி குதிக்குறதுக்கு பிரச்சனை இல்லாம இருந்தது.இனி நாலு பேரு அதனால கதவைத் திறந்து தான் போயாகணும்.”,என்று காயத்ரி கூற ஆண்கள் இருவருமாய் சிரித்தனர்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode