வரம்-16

by ஸ்ரீ
0 comments 94 views
A+A-
Reset

சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்

விளக்கம்
சிவாய நம என்று கூறும் ஐந்தெழுத்து மந்திரமே விதியை வெல்லும் உபாயமாகும். அவர்களுக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. இதைத் தவிர நாம் மதி / அறிவு என்று நினைக்கும் அனைத்து விஷயங்களும் விதியின் வழியில் தான் செல்லும்

தாயின் மடியில் மனைவியைப் பார்த்த அன்புச்செல்வன் சத்தம் எழுப்பாமால் மாடிக்குச் சென்றுவிட சிறிது நேரத்தில் உள்ளே வந்த காயத்ரி ஒன்றும் பேசாமல் கணவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

“அழுமூஞ்சி என்னடி?”

“நான் டிஎஸ்பி டா..”

“இருந்துட்டு போ..ஆனால் எனக்கு அழுமூஞ்சி தான்..”,என்றவன் இன்னுமாய் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

“அன்பு..”

“சொல்லு அழுமூஞ்சி..”

“ஏய்..”

“சரி சொல்லு..”

“எப்பவோ ஒண்ணு படிச்சுருக்கேன்..அப்போ அது பெருசா தெரியல..ஆனா இப்போ எவ்வளவு உண்மைனு தோணுது..”

“என்னது?”

“People never forget how you make them feel..”

“….”

“நீங்க எல்லாரும்…முக்கியமா நீ எனக்கு கொடுக்குற உணர்வு வாழ்க்கையில் இதுவரை கிடைச்சதே இல்ல டா..”

“….”

“அம்மாவோட பேசிட்டு இருந்தேன்..”

“ம்ம்..”

“நான் அழுததை நினைச்சு அப்பா வருத்தபட்டாராம்..சின்னதுங்களும் ரொம்ப ஃபீல் பண்ணாங்களாம்.அதனால இனி இப்படி இருக்காதனு அம்மா சொன்னாங்க..”

“அதை தான டி நானும் சொல்றேன்..”

“எனக்காக என் புருசன் சொல்லலாம்..ஆனால் மொத்த குடும்பமும் என்னை பத்தி மட்டும் தான் டா யோசிக்குறாங்க…இவ்வளவு அன்பு மூச்சு முட்ட வைக்குது அன்பு..”,என்றவளின் குரல் கரகரத்தது.

“நீ ஒருத்தி எங்க எல்லார் மேலயும் வைச்சுருக்குற அன்பை விட இதெல்லாம் பெருசில்ல கண்மணி..”

“!!!”

“நீ இயல்பா செய்யுற விஷயங்கள் கூட எங்களுக்கு எவ்வளவு அன்பைக் கொடுக்குது தெரியுமா..ஒரு கல்யாணம்ங்கிறது அந்த குடும்பத்தை அடியோட மாத்திடும் காயூம்மா..

எல்லாருக்கும் எல்லாம் செட் ஆகாது.நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கும்.கோபம் பொறாமை மனக்கசப்பு இப்படி எல்லாம் கலந்தது தான் குடும்பம்.

ஆனால் நீ வந்தப்பறமும் இந்தக் குடும்பம் எப்படி இருந்துதோ அப்படியே தான் இருக்கு..நீயும் எதையும் தப்பா எடுத்துக்காம சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி இருந்துக்குற..

இதெல்லாம் சாதாரண விஷயமே கிடையாது தெரியுமா..இதெல்லாம் தான் அவங்ககிட்ட இருந்தும் உனக்கு பதிலுக்கு கிடைக்குது.

அப்பா அத்தனை சீக்கிரம் எல்லாம் அவரோட மனசை வெளிப்படுத்த மாட்டார்.ஆனால் நீ வந்தப்பறம் மருமகளை பத்திரமா பார்த்துக்கோடானு எத்தனை தடவை சொல்லிருக்காரு தெரியுமா..

இன்னைக்கு காலையில் கூட மத்தவங்க பேச்செல்லாம் பெருசா எடுத்துக்க சொல்லாத டானு சொல்லிட்டு போனார்.எங்க எல்லாருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிர்காலத்துல வரப்போற குழந்தையை விட நீ தான் டி முக்கியம்.இன்னொரு தடவை வருத்தப்படாத ப்ளீஸ்.”,என்றவனின் கண்ணீர் அவளது கன்னம் தொட்டது.

“அன்பு சாரி அன்பு..ப்ளீஸ்..நீ வருத்தப்பட்டா எனக்கு கஷ்டமா இருக்கும்.இனி நான் அப்படி பண்ணமாட்டேன் டா..”,என்றவள் பரிதவிக்க தன்னோடு இன்னுமாய் சேர்த்து இறுக்கிக் கொண்டான் அன்புச் செல்வன்.

மறுநாள் காலையில்  காயத்ரியின் முகம் வழக்கத்தை விட உற்சாகமாகவே இருந்தது.ராகினி வாஞ்சையாய் அவள் கன்னம் தடவ ராகவனுக்கான காபியோடு வெளியே சென்றாள் காயத்ரி.

“குட் மார்னிங் பா..”

“குட் மார்னிங் டா மருமகளே”,என்றவரின் அருகில் அமர்ந்தவள்,

“இனி என்னை நினைச்சு கவலைப்படாதீங்க பா..நான் எங்க வீட்டில் இருந்ததை விட இங்க ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன்.நீங்க வருத்தப்படாதீங்க ப்ளீஸ்..”

“இப்படி இருந்தா தான் டா காயத்ரிக்கு அழகு.யாருக்கு எப்படியோ எனக்கு என் மருமகளை கம்பீரமா மட்டும் தான் பார்க்க பிடிக்கும்.உன் மனசுக்கு நீ நல்லாயிருப்ப மா..போ போய் வேலைக்கு கிளம்பு.”,என்றவரை விட்டு எழுந்தவளின் எதிரே அன்பு வர அவனைப் பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தவளாய் அவனுக்கான காபியைக் கொடுத்தாள்.

“டிஎஸ்பி மேடம்..முகம் ஜொலிக்குதே…”

“ஆமா பின்னே என் புருஷன் கவிதையா காதலிக்குறான்.அதனால இப்படி தான் எப்பவும் இருக்க போறேன்.”,என்றவள் கண்சிமிட்டிச் சிரிக்க அக்கம்பக்கம் பார்த்துவிட்டு சட்டென இடுப்பைக் கிள்ளிவிட்டு ஓடியிருந்தான் அன்பு.

இந்த வாழ்க்கையை வரமென்று சொல்லாமல் வேறென்ன கூறிவிட முடியும் என்று எப்போதும் எழும் கேள்வி தான் காயத்ரியின் மனதில் இப்போதும் ஓடிக் கொண்டிருந்தது

அதன் பின்னான நாட்கள் காயத்ரிக்கு மிகவும் பிஸியாகவே சென்றன.கணவனும் மனைவியும் பேசிக் கொள்ளும் நேரங்கள் கூட குறைந்து போக ஆனால் அத்தனையையும் அன்புச் செல்வன் சமாளித்த விதம் காயத்ரியை வாய்பிளக்க வைத்தது என்று தான் கூற வேணேடும்.

அன்றைய தினமும் வழக்கம்போல் தாமதமாய் வந்தவளை உணவருந்த வைத்து அறைக்குள் அனுப்பி விட்ட மாமியாரைப் பார்த்து புன்னகைத்தவாறே வந்து கட்டிலில் கணவனின் மடியில் படுத்தவளுக்கு அதற்கு மேல் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“ஏன் அன்பு இந்த வேலையால நமக்குள்ள முன்ன மாதிரி டைம் கிடைக்குறதே இல்லை..உனக்கு என்ன தோணுது..”

“வேலைனு இருந்தா அப்படி தான் டி..அதுவும் போலீஸுக்கு நேரம் காலம் எல்லாம் ஏது..அட்லீஸ்ட் உனக்கு ரெஸ்டாவது கிடைக்குதே..”

“நான் நம்மளை ரொம்ப மிஸ் பண்றேன் டா..”,என்றவள் முகத்தை நிமிர்த்தி தன்னவனைப் பார்க்க அழகாய் சிரித்து நெற்றியில் இதழ் பதித்தான் அன்புச் செல்வன்.

“உனக்கு கோவமே வரதா அன்பு..”

“கல்யாணம் ஆகி அனிவர்சரி வரப்போகுது இன்னும் சண்டையே போட்டுக்கலையேனு கடுப்பா இருக்கா உனக்கு..”,என்றவன் சிரித்தான்.

“ஹே அப்படியில்ல..யாருக்கா இருந்தாலும் ஒரு கட்டத்தில் கடுப்பு ஆகும் தான..பொதுவா வேலைக்கு போற பொண்ணுங்க எல்லாமே கல்யாணத்துக்கு அப்பறம் நிறைய பொறுப்புகளை வேணும்னே தட்டிக் கழிப்பாங்க ஆபீஸில்.

புருஷனைப் பார்த்துக்கணும் குழந்தை குடும்பம்னு அவங்க முக்கியத்துவம் இயல்பாகவே மாறிடும்.அதனாலேயே தான் பல நேரத்துல அவங்க திறமைக்கு தகுந்த வேலை பார்க்காம தங்களுக்கு வர்ற ப்ரோமோஷன் கூட தட்டிக் கழிக்க வேண்டிய நிலைமை வரும்.கரெக்ட் தான?”

“ம்ம்..”

“என்ன டா?”

“அடியேய் என்ன உன் பிரச்சனை?”

“என் மாமியார் எப்படி இப்படி ஒரு பையனை பெத்து வைச்சுருக்காங்க..”

“ஹா ஹா…”

“…”

“சரி முறைக்காத..நீ வேற எதுவும் வேலை பார்த்துருந்தால் எப்படியோ தெரியலை கண்மணி..இந்த வேலையில் இந்த இடத்துக்கு வர்றது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்லை.சோ உன்னோட இத்தனை வருஷ கஷ்டத்தை எல்லாம் தூக்கி மூட்டை கட்டி வைக்கனும்னு எனக்கு சொல்ல தோணல அவ்வளவு தான்.”

“…”

“உனக்கு எல்லாரையும் எல்லாத்தையும் விடவும் இந்த யூனிபார்ம் எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியும் டி அழகி..”

“நீ ஒண்ணு கவனிச்சியா அன்பு..”

“என்னது??”

“கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் நான் லவ் யூ சொல்லிட்டே இருப்பேன்..உன்னையும் சொல்ல சொல்லி கேட்டுட்டே இருப்பேன்..இப்போ அதெல்லாம் நாம சொல்லிக்குறதே இல்லை தான..”

“??”

“கல்யாணத்துக்கு முன்னாடி நீ சொன்ன மாதிரி வாயால சொல்றதை விட வாழ்க்கையா ஒரு ஒரு நாளும் வாழ்ந்து காட்டுற டா உன் காதலை..”,என்றவனை இடுப்போடு கட்டிக் கொண்டாள்.

அன்று காலை வேலைக்குத் தயாராகி வந்தவள் வாசலில் அமர்ந்து ஷுவை மாட்டிக் கொண்டிருக்க அவளை கவனித்து அவசரமாய் பேசிக் கொண்டிருந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு வந்தான் இன்பா.

“என்னடா குட்டி பையா கிருத்தி என்ன சொல்றா?”,என்றவளின் கேள்வியில் அதிர்ந்து விழித்தவன்,

“தெய்வமே…”

“நடிக்காத டா நல்லவனே..”,என்றவள் சிரிக்க அப்போதும் இன்பா அதிர்ச்சியில் தான் இருந்தான்.

“ஏன் அண்ணி நீங்க இப்படி இருக்கீங்க..எப்போ கண்டுபிடிச்சீங்க!!”

“ம்ம் நான் போலீஸ்னு அப்பப்போ மறந்துறியா நீ?டவுட் வந்தது.. தேனு தான் கன்பார்ம் பண்ணா..”

“அந்தக் கொசுவை அடிச்சே கொன்னுடுறேன் இன்னைக்கு..அண்ணி ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணாகிட்ட சொல்லாதீங்க..”

“ஹா ஹா சரி சரி சொல்லல..”

“அவ பேரு கிருத்திகா சொந்த ஊர் சென்னை அண்ணி..அவங்க அப்பா அங்க கேஎப் இன்டஸ்ட்ரீஸ் ஓனர்..”

“என்ன??!!”

“என்னாச்சு அண்ணி..”

“இல்ல..அந்த கம்பெனி ஓனருக்கு ஒரு பையன் தான?”

“அது அவளோடபெரியப்பா பையன் அண்ணி..இவங்க எல்லாம் ஒரே குடும்பம் தான்..”

“ஓ…”

“!?”

“சரி இன்பா நேரமாச்சு வரேன்..”,என்று வெளியே சென்றவளுக்கு பலவித சிந்தனைகள் தலைக்குள் சுழன்றன.

அப்படி இப்படியாய் ஆனந்தன் அபிநயாவின் நிச்சயதார்த்த நாளும் வந்திருந்தது.அபிநயாவின் வீட்டில் வைத்தே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பெரிய அளவில் வேலைகள் இன்றி அன்புச்செல்வனின் குடும்பம் மொத்தமுமாய் சொந்த பந்தங்களோடு வேனில் கிளம்பிச் சென்றனர்.

அழகிய கரும்பச்சை புடவையில் சுற்றி வந்தவளை ரசித்தவாறே வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த அன்பு வேனில் ஏறியதும் கடைசி வரிசொயில் அமர்ந்த வண்ணம் அவளையும் பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டவன் அவள் நெற்றி வியர்வையை கைக் குட்டை கொண்டு ஒத்தி எடுத்தான்.

“அழகாயிருக்க டி பொண்டாட்டி..”

“என் புருஷன் அதுக்கும் மேல இருக்கான் இன்னைக்கு..”

“புடவையில் கூட கெத்தா இருக்குறது உனக்கு மட்டும் தானே பொருந்தும் டி..”

“அடடா போதும்..ஓவர் டோஸா போயிட்டு இருக்கு அன்பு..”,என்றவள் சிரிக்க அதற்குள் முன்னிருந்த யாரோ எதோ கேட்டதில் இவர்களின் பேச்சு தடைப்பட்டு போனது.

அபிநயாவின் வீட்டை அடைந்தவர்களை பெண் வீட்டுக்காரர்கள் வந்து வரவேற்க அனைவருமாய் உள்ளே சென்று அமர்ந்தனர்.வந்தவர்களில் அனைவரும் காயத்ரியைப் பற்றி பேசிக் கொண்டிருக்க அபிநயாவின் மருத்துவா நண்பர்கள் அவளோடு நின்று பேச ஆரம்பித்திருந்தனர்.

பேச்சும் சிரிப்புமாய் நிச்சயம் சிறப்பாய் முடிந்திருக்க அன்பு காயத்ரி இன்பா தேன்மொழி என அனைவருமாய் மணமக்களை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தனர்.

“ஆனந்தா என்னடா இப்போவே இப்படி பொறுப்பாப குடும்பஸ்தனா அமைதியாகிட்ட?”

“அண்ணி..அண்ணன் அமைதி எல்லாம் கிடையாது நம்பாதீங்க..”

“ஆனந்த் அண்ணே உன் மாமனார் முறைச்சு முறைச்சு பாக்குறார்னு தான பம்முற..”

“ஹேய் என்ன எல்லாருமா என் தம்பியை ரொம்பதான் ஓட்டுறீங்க?”,என்ற காயத்ரியைப் பார்த்து புன்னகைத்தாள் அபிநயா.

“நீ என்ன அபி இவ்வளவு அமைதியா இருக்க?!”

“அக்கா எல்லாரும் என்னையே பாக்குற மாதிரி இருக்கு..அதுவுமில்லாம அப்பா சித்தப்பா எல்லாம்.”

“அடடா சரியான எம்டன் குடும்பமா இருக்கும் போலேயே”,என்றதைக் கேட்ட அபிநயாவிற்கு சிரிப்பு வர அவசரமாய் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் ஒவ்வொருவராய் சாப்பிடச் செல்ல அபிநயாவின் குடும்பத்தைப் பற்றி அறிந்தவளாய் அவள் தாய் மற்றும் சித்தியோடு அவளிருந்த நேரமாய் பார்த்து அங்கு சென்றாள்.

“அபி உங்க ஃபோன் நம்பர் கொடுங்க நோட் பண்ணிக்குறேன்.தம்பிக்கும் கொடுக்கணுமே..”

“தம்பி?”

“ஆஓ சாரி ஆன்ட்டி உங்க மருமகனை தான் சொன்னேனன்..”

“கல்யாணத்துக்கு முன்னாடி பேசிக்குற வழக்கமெல்லாம் இல்லையே கண்ணு எங்க பக்கம்..”

“!!”

“ஓ..சரி பரவால்ல..”,என்றவள் அபிநயாவிடம் புன்னகைத்து நகர அபிநயா தன் போனில் வந்திருந்த காயத்ரியின் மெசெஜைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டாள்.

“நான் நல்லவளா இருக்க தான் முயற்சி பண்றேன்..விடமாட்றாங்க..வாட் டு டூ..தம்பிகிட்ட உன் நம்பர் ஏற்கனவே இருக்கு இதான் அவர் நம்பர்..நீயாச்சு உன் எம்டன் குடும்பமாச்சு..”

இரவு வீட்டிற்கு வந்த பின் வேலைகளை முடித்து அனைவரும் உறங்கச் செல்ல ஆனந்தனும் அன்புவும் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தனர்.

இருவருக்குமாய் பால் கொண்டு வந்து கொடுத்தவள் மாலை நடந்ததைக் கூற அன்புவும் ஆனந்தனும் சிரித்தானர்.

“ஷப்பா என்னால அரைமணி நேரமே தாக்கு பிடிக்கமுடியல அபி ஒரு டாக்டரா இருந்துட்டு எப்படி இப்படி பொறுமையா இருக்கானு தெரியல..தம்பி உங்களுக்கு ஏத்த ஜோடி தான்.”

“ஐயோ ஏன் மாமனார் ஏதோ மிலிட்டிரி ஆபீஸர் மாதிரி இருக்கார் அண்ணி..பேசவே காசு கேட்பாரு போல இருந்தது.சின்ன மாமனார் இன்னும் சுத்தம்..”

“அன்பு தம்பிக்கு தில்லை பார்த்தியா மாமனாரைப் பத்தி குறை சொல்றாரு..”

“ஏன் காயூ அவனை வைச்சு செய்ற..”

“பின்னே கஷ்டப்பட்டு நம்பரெல்லாம் கொடுத்துட்டு வந்துருக்கேன் உன்னோட உட்காந்து இப்படி மொக்கை போட்டுட்டு இருந்தா என்ன பண்றது?”,என்றவள் சிரிக்காமல் கூறி முடிக்க ஆனந்தன் தலையைச் சொறிந்தவாறே தனதறைக்குச் சென்றான்.

காயத்ரியை கைப்பிடித்து தன்னருகில் அமர வைத்தவனாய்,”ஏன் டி நீ இப்படியிருக்க?”

“பின்ன என்ன இதெல்லாம் கோல்டன் டைம்..மிஸ் பண்ண கூடாது அன்பு..அபி நல்ல பொண்ணு இல்ல..ஆனால் இங்க வந்தப்பறம் என்னை மாதிரி மாத்திரலாம்..ஹே நாம நாலு பேரும் சேர்ந்து ஐஸ்கீரீம் சாப்பிட போலாம் டா என்ன சொல்ற..”

“நல்ல குடும்பம் டி..”,என்றவன் சத்தமாய் சிரித்தான்.அறைக்குள் வந்த ஆனந்தன் சில நொடிகள் யோசித்துவிட்டு அபிநயாவிற்கு மெசெஜ் அனுப்பினான்.பதில் வந்தால் பேசலாம் என்ற எண்ணத்தோடு.

“ஹாய்..”

இரு நொடிகளில் அவளிடமிருந்து பதில் வந்ததில் புரிந்தது காயத்ரி எதற்காக தன்னை கேலி செய்தாள் என்பது.பேச முடியுமா என்று கேட்ட பின் அபிநயாவை அழைத்திருந்தான்.

“சாரி ரொம்ப நேரமாயிடுச்சா..”

“இல்லை அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..அக்கா தான் என் நம்பர் உங்ககிட்ட இருக்குனு சொன்னாங்க..”

“ம்ம்..அண்ணி பொண்ணு பார்த்துட்டு வந்தவுடனேயே நம்பர் கொடுத்துட்டாங்க..நான் தான் உங்க வீட்ல எதுவும் சொல்லுவாங்களோனு பேச முயற்சி பண்ணலை.”

“ம்ம்..”

“வீட்டில் ரொம்ப ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் உண்டோ?”

“ம்ம் ஆமா..பேருக்கு தான் டாக்டர்..வீட்ல இன்னும் ஸ்கூல் பொண்ணு மாதிரி தான்.”

“இங்க வந்தப்பறம் உன் விருப்பம் போல இருக்கலாம்.சொல்லபோனா அப்பா அம்மாக்கு காயத்ரி அண்ணி தான் இப்போ ரொம்ப இஷ்டம்.”

“ம்ம்..நான் அவங்க அளவு எல்லாம் பேச மாட்டேன்..பட் சீக்கிரம் மிங்கிள் ஆக முயற்சி பண்றேன்..”

அப்படியாய் அவர்களின் ஸ்வீட் நத்திங்க்ஸ் நடுஇரவை கடந்தும் சென்று கொண்டிருந்தது.மறுநாள் சரியான தூக்கம் இல்லாமல் சோர்ந்த முகமாய் வந்தவனைப் பார்த்து அன்புவோடு சேர்ந்து காயத்ரி சிரிக்க,

“நான் கிளம்பிட்டேன்..சிக்க மாட்டனே உங்ககிட்ட..”,என்றவன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே ஓடியிருந்தான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode