530
தாத்தாவின் அறைக்குள் நுழைந்தவன் தலையில் கை வைத்தவாறு அப்படியே அமர்ந்து விட்டிருந்தான்.
அவனது மனநிலை உணர்ந்தவளுக்கோ என்ன கூறுவது என்று புரியவில்லை. சில நிமிடங்கள் அங்கு பெரும் மௌனமே நிலவியிருந்தது.
“மகிழன்..”
“என்ன சொல்றதுனு தெரில ஷியாமா..சொந்த வீட்டுல என்ன நடக்குதுனு கூட தெரியாம வாழ்ந்துட்டு இருக்கேன்..
ஒரு மெஷின் மாதிரி தான் நானும் இந்த வீட்டுல இருந்துருக்கேன்..”
“ஏன் இப்படி பேசுறீங்க..என்னோட கணிப்புப் படி உங்க தாத்தா மிஸ்டர் வர்மா ஒரு கொடுங்கோல் ஆட்சி நடத்திருக்கார்னு தான் சொல்லுவேன் இந்த வீட்ல..
உங்களுக்குனு இல்ல இதைப் பத்தி அந்த கொலைகாரனைத் தவிர யாருக்கும் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்ல..
யாருக்கு எது தெரியணும் எது தெரியக் கூடாது யார் எப்படி இருக்கணும்னு எல்லாமே மிஸ்டர் வர்மா தான் டிஸைன் பண்ணிருக்கார்.
நடந்த எல்லாத்தையும் விட எனக்கு அதிர்ச்சியான விஷயமே அது தான். அத்தனை பேரும் படிச்சவங்க..
சொசைட்டில ஒரு பெரும் புள்ளி அப்படி இருந்தும் அத்தனை பேரோட மைண்டும் அவர் பண்ற சிஸ்டம்ல தான் இருந்துருக்கு..
ஈவன் யூ…எந்த அளவு அவர் மேல நீங்க வச்சுருக்க பாசத்தை அவருக்கு சாதகமா யூஸ் பண்ண முடியுமோ அந்தளவு யூஸ் பண்ணிருக்கார்.
ரத்த சொந்தகளுக்குள்ளேயே இப்படி பட்ட விஷயங்கள் நடந்துதுனா நாட்டில இல்ல உலகதேதுல யாரை நாம நம்ப முடியும்..
சாரி..எதோ தோணிணதை சொல்லிட்டேன்..நிச்சயம் இது எனக்குத் தேவையில்லாதது தான்..
ஓகே லெட் மீ கம் டு த பாயிண்ட்.. கேஸ் ஓவர் மகிழன்.. நாளைக்கு காலையில் இந்த வீட்ல இருக்குற எல்லார் முன்னாடியும் குற்றவாளியை அறிமுகப்படுத்துறேன். உங்க அம்மா உட்பட எல்லார் முன்னாடியும்..”
“அவங்க எதுக்காக…. பெரியம்மா பண்ணிண தப்புக்கு….”
“உங்களோட எல்லா கேள்விக்குமான பதில் நாளைக்கு காலையிலே கிடைச்சுரும்.. பாதியை நான் சொல்றேன்..
மொத்தத்தையும் சொல்ல வேண்டியவங்க சொல்லுவாங்க…ட்ரஸ்ட் மீ..”
ஆழ் மூச்செடுத்துத் தன்னை நிதானப்படுத்தியவனாய் எழுந்ததவன்,
”ஓகே மார்னிங் ஒன்பது மணிக்கு எல்லாரையும் கீழே வர சொல்லிட்றேன்..”
“தேங்க் யூ..அண்ட் நாளைக்கு நான் கொடுக்கப் போற அத்தனை விளக்கங்களும் ஒரு அதிகாரியோடதாகவே இருக்கும்.. இனியும் இந்த வேஷம் தேவைப்படாது இல்லையா?”
“ம்ம்..பட் வேஷமா ஆரம்பிச்து இப்போ உண்மை ஆயிருக்குனு நம்புறேன்..” இயல்பாய் சிரித்தவள்,
”அதுல எந்தவித சந்தேகமும் வேண்டாம்..முதல் காதல் மட்டுமில்ல முதல் நட்பும் ரொம்பவே ஸ்பெஷல் தான்..”என்றவள் கை குலுக்கி நகர்ந்தாள்.
மறுநாளின் விடியல் பலத்த குழப்பங்களோடு விடிந்திருந்தது அனைவருக்கும்.
காலை காபி எடுத்துச் செல்லும் போதே கல்யாணி அனைவரையும் கீழே வருமாறு கூறிவிட்டிருந்தார்.
சரியாய் ஒன்பது மணிக்கு அத்தனை பேரும் வரவேற்பிடத்தில் கூடியிருக்க சாந்திதேவியும் கூட வந்திருந்தார்.
எத்தனை கூறியும் தானும் வருவதாய் கூறிய ராகேஷை சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து வந்தார் ரமாதேவி.
ஷியாமாவும் சில நிமிடங்களில் வந்துவிட அனைவருமாய் ஒவ்வொரு மனநிலையில் இருந்த நேரம் படிகளில் கேட்ட அரவத்தில் திரும்பியவர்கள் அத்தனை பேரின் முகமும் ஆச்சரியம் அதிர்ச்சி என அத்தனையையும் தாங்கி நின்றது.
மகிழனோடு தியாதேவி மற்றும் அந்த வீட்டினரைப் பொறுத்த வரை அவரின் பாதுக்காப்பாளரும் செவிலியுமான அமுதாவும் வந்து கொண்டிருந்தனர்.
மகிழனின் கையைப் பற்றி நடந்து வந்த சந்தியா தேவி அங்கும் இங்கும் பார்த்தவாறு மற்றவர்களை கண்டும் காணாததுமாய் வர அவர்களைப் பார்த்த ஷியாமாவின் உதடுகள் புன்னகையைக் கொடுத்தன.
மூவரும் வந்து அமரும் வரை அனைவருமே அமைதியாய் இருக்க மகிழன் மெதுவாய் பேச்சை ஆரம்பித்திருந்தான்.
“சோ நாம இங்க வந்துருக்குறதுக்கான காரணம் இந்த வர்மா குடும்பத்தில் நடக்குற எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு கட்டுறதுக்காக தான்.
அதாவது இங்க நடக்குற அத்தனைக்கும் காரணமானவங்களோட முகமூடியை எல்லாருக்கும் கிழிச்சு காட்டுறதுக்காக..
ஷியாமா ப்ளீஸ் கோ அ கெட்..” என்றவன் அமர்ந்து கொள்ள அடுத்த அதிரிச்சியாய் இருந்தது அனைவருக்கும்.
வழக்கமான தன் கம்பீரத்தோடு எழுந்தவள் தன்னிடம் இருந்த குறிப்பேடை அங்கிருந்த டீப்பாவின் மேல் வைத்துவிட்டு நிமிர்ந்து அனைவரையும் பார்த்து புன்னகைத்தவாறே,
“குட்மார்னிங் எவ்ரி ஒன்.எல்லார் முகத்திலேயும் இருக்குற அத்தனை குழப்பத்துக்கும் விடை சொல்றேன்.
முதல்ல நான் ஷியாமா ராகவன் ப்ரம் சீபிஐ.. மிஸ்டர் வர்மா வோட இறப்பை பத்தி விசாரிப்பதற்காக வந்துருக்கேன்.”
ஆஷிக்கும் மோனிஷாவும் ஒருவரை ஒருவர் அப்பட்ட அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க மற்றவர்களைப் பற்றி கேட்கவும் வேண்டுமோ..
“கேஸ் ஹிஸ்ட்ரி படிச்ச அப்பறம் ஒரு வேளை இது இற்கையான மரணமா இல்லாத பட்சத்துல கொலையாளி தப்பிக்காம இருக்கவும் வெளியில் உங்களுக்கு இருக்குற பெயருக்கு எந்த பங்கமும் ஏற்டாம இருக்கணும்ங்கிறதுக்காகவும் நான் இங்க வந்ததோட நோக்கத்தை யாருக்கும் வெளிப்படுத்தாம இருக்குறது நல்லதுனு தோணிண காரணத்தினால் மகிழன் தவிர யாருக்கும் எந்த விவரமும் தெரிவிக்கப்படல..
ஓ லெட் மீ ஸ்டார்ட்.. முதல்ல மிஸ்டர் வர்மாவோட இறப்பு ஒரு திட்டமிடப்பட்ட கொலை..
அதற்கு காரணமானவங்க இந்த வீட்ல இருக்குற இரண்டு பேர். கொலையாளி ஒருத்தரும் கொலைக்கு உதவி செஞ்சவங்க ஒருத்தரும்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். நான் இந்த வீட்டுக்கு வந்தப்பறம் நடந்த சில விஷயங்கள் வச்சு சிலர் மேல சந்தேகம் இருந்தது.
அதையும் தாண்டி நடந்த இரண்டு விஷயங்கள் ஒன்னு மிஸ்டர் அதுல் வர்மா மாடியில் இருந்து விழுந்தது.
அதைப் பத்தி அவர்கிட்ட நான் கேட்டபோது அவரோட பதில்ல எந்த குழப்பமும் இல்ல.
யாரோ அங்க இருந்தமாதிரி தான் இருந்ததுனு உறுதியா சொன்னார்.
ஆனா அவரைக் காப்பாத்தினதா சொன்ன முத்து அண்ணாவோ அதைவிட உறுதியா அங்க யாருமே இல்லனு சொன்னார்.
ஆனாலும் அதுல் சார் சொன்ன உறுதி முத்து அண்ணாவோட பதில்ல இல்ல..
எதோ ஒரு விதத்துல அவர்கிட்ட ஒரு தடுமாற்றம் இருந்தது. அதை உறுதிப்படுத்துற மாதிரியே அடுத்து நடந்த விபத்து..
வீட்டுக்குள்ள மட்டுமே இருந்த அசாதாரண சூழ்நிலை வீட்டுக்கு வெளில நடக்குதுனா அதுக்கும் ஒரு காரணம் இருக்கும் இல்லையா..
அதாவது வீட்டை விட்டு வெளியே போகாத இரண்டு பேரால் நடத்தப்பட்ட விஷயங்கள் மூன்றாவதா ஒருத்தரோட உதவி கிடைச்சவுடனே வெளில நடத்தப்பட்டிருக்கு.
அந்த மூணாவது ஆள்னு நான் சந்தேகப்படுறது இந்த முத்து அண்ணாவை தான்.. அவர் உதவி…”
“என்னம்மா பேசுற நீ..என் வயசு என்ன??இப்போ போய் நான் கொலை அது இதுனு செய்வேனா..
அதுவும் இந்த வீட்டு மனுஷங்களையே! இந்த வீட்டு உப்பைத் தின்னு வாழ்றவன் மா நான்..”
“பொறுங்க..இன்னும் முழுசா நான் முடிக்கலையே..நீங்க சொன்ன பாயிண்டுக்கே வரேன்..
இந்த வீட்டு மனுஷங்களையே கொலை பண்ண உதவி செய்றீங்கனா இவங்க எல்லாரையும் விட நீங்க மதிக்குற ஒருத்தர் யாரா இருக்கும்.
எத்தனை விசுவாசம் இருந்திருந்தா இதுக்கு நீங்க சம்மதம் சொல்லிருப்பீங்க??
உங்களுக்கு ரொம்பவே நெருக்கமானவங்க இந்த வீட்ல மிஸ்டர் அமித் வர்மாவும் தியா தேவி மேடமும் தான் இல்லையா!”
“!!!!!!”
“சோ அமித் சார் இப்போ உயிரோட இல்ல.. அப்போ நீங்க உதவி பண்ணிணது…”
“ஷியாமா என்ன சொல் வர்ற?!!”
“சாரி மகிழன்.. நீங்க இதை ஏத்துகிட்டு தான் ஆகணும்.. ஏற்கனவே நான் சொன்ன மாதிரி அத்தனைக்கும் காரணம் யாருனு தெரிய வரும்போது உங்க மனநிலைமை கண்டிப்பா நல்லாயிருக்காது..ரிலாக்ஸ்..”
“சொல்லுங்க முத்து அண்ணா நான் சொல்றதெல்லாம் சரி தான..
நீங்க உதவினது உங்களோட நண்பனின் மனைவி சந்தியா தேவிக்கும் அவங்களோட அக்கா சரண்யா தேவிக்கும் தான்.. அப்படி தான!”
“என்ன தியாவுக்கு அக்காவா?”,சாந்தி தேவி வாய்விட்டே கேட்டிருந்தார். அதற்குள் முத்து பேச ஆரம்பித்திருந்தார்.
“இதோ பாரு ம்மா..உனக்கு என் மேல என்ன கோபமோ தெரில இப்படி அப்பட்டமான பழி சுமத்துற..
அதைக் கூட பொறுத்துக்குறேன்..ஆனா மனநிலை சரியில்லாத ஒருத்தங்க மேல இப்படி அபாண்டமா பழி போடாதம்மா நல்லதுக்கே இல்ல…
ஒண்ணா ரெண்டா பத்து வருஷத்துக்கு மேல அறைக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குறவங்களைப் போய் இப்படி சொல்ல எப்படிமா மனசு வருது உனக்கு?”
“ நீங்களே இத்தனை யோசிக்கும் போது நான் ஒருத்தர் மேல கொலைப் பழி போடும் முன்ன எவ்வளவு யோசிக்கணும்??”
“சரி ஓகே அதையும் தெளிவு பண்ணுவோம்.. அதற்கான சாட்சி இதோ இவர் தான்..”, என்றவள் கல்யாணியின் தம்பியை நோக்கி கைகாட்ட வெளியே நின்றிருந்தவன் உள்ளே நுழைந்தான்.
நடக்கும் எதற்கும் எந்த எதிர்வினையுமின்றி குனிந்தவாறே அமர்ந்திருந்தார் தியா தேவி. சரண்யாவோ ஷியாமாவையே முறைத்துப் பார்த்திருந்தார்.
“யாருக்காகவும் எதுக்காகவும் தயங்க வேணாம்.. உங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லுங்க..”
“நான் தான் இவங்ககிட்ட உண்மையை சொன்னேன்.. முதல் முதலா சந்தேகம் வந்தது பெரியய்யா இறந்த அன்னைக்கு சாய்ந்திரம் என்கிட்ட ரொம்பவே ஒருமாதிரி பேசிட்டு இருந்தார்.
என்னவோ மனசே சரியில்ல டா ஏதோ நடக்கப் போகுதுங்கிற மாதிரியே இருக்கு..
நான் போய்டா இந்த குடும்பத்தை யாரு பார்த்துப்பானு பயமா இருக்குனு.. என்னென்னவோ சொன்னார்.
சமாதானப்டுத்தினாலும் எனக்கு மனசு கேக்கல..அன்னைக்கு ராத்திரி எல்லாரும் தூங்கினப்பறம் நான் இங்க வாசல்லயேதான் சுத்திட்டு இருந்தேன்..
அப்பப்போ உள்ளே எட்டிப் பார்த்துட்டு என்னையறியாம கண்ணசந்துட்டேன்..
எதோ சத்தம் கேட்டு உள்ளே பார்த்தப்போ சின்னையாவோட அம்மா ஐயாவோட அறைக் கதவைத் தட்டிட்டே இருந்தாங்க..
கண்ணாடி வழியா அவங்க பேசினது என் காதுல விழலனாலும்..
அவங்க நினைவு இல்லாம ஆக்ரோஷமா கத்தல..நம்ம ஒருத்தரை சாதாரணமா எழுப்புறதுக்கு எப்படி தட்டுவோமோ அப்படி தான் கூப்டாங்க..
அடுத்து என்னனு பாக்குறதுக்குள்ள எனக்கு என்னவோ நடந்து நான் அங்கேயே விழுந்துட்டேன்.
அது தூக்கமா மயக்கமானு தெரியவே இல்லை.ரொம்ப நேரத்துக்கு அப்பறம் கண்விழிச்ச அப்போ எந்த வித சத்தமும் இல்லாம அமைதியா தான் இருந்தது.
ஒண்ணும் புரியாம நானும் கெஸ்ட் கவுஸுக்கு போய்ட்டேன். விடிஞ்சப்பறம் ஐயா இறந்த செய்தி கேட்டு என்னால தாங்கவே முடில எதைப் பத்தியும் யோசிக்கவும் முடில.
அதிலிருந்து வெளியே வரவே கொஞ்ச நாள் தேவைப்பட்டது எனக்கு..
அப்பறம் பொறுமையா யோசிக்கும் போது அன்னைக்கு நடந்ததெல்லாம் நியாபகத்துக்கு வந்தது.
இருந்தும் சின்னையாக்கு ஏற்கனவே என்னைப் பிடிக்காத காரணத்துனால யார்கிட்டேயும் எதுவும் சொல்லல..
ஆனாலும் இதைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஒரு நாள் யாருக்கும் தெரியாம இவங்க இருக்குற ரூம்க்கு போனேன்..
அப்போ இவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்குற சத்தம் கேட்டுது..
ரொம்ப சாதாரணமா பேசிட்டு இருந்தாங்க.. திடீர்னு பேச்சு சத்தம் நின்னு போச்சு.. நான் பயத்துல கீழே இறங்கி வந்துட்டேன்..
அப்போவே இதை யார்கிட்டேயாவது சொல்லிரணும்னு ரொம்ப நினைச்சுட்டு இருந்தப்போ தான் அடுத்த ரெண்டு நாள்ல என்னை கல்லால அடிச்சு காயப்படுத்தினாங்க..
அதை ஷியாமா மேடம் கிட்ட சொல்றதுக்காக அவங்களை கூப்பிட்டு பேச ஆரம்பிக்கும் போது முத்து அண்ணா வந்துட்டாரு..
அவரு எங்களைப் பேச விடாம அவங்களை கூடவே கூட்டிட்டு போய்ட்டார்.
ஆனா அதுக்கப்பறம் யாருக்கும் தெரியாம மேடம் என்கிட்ட பேச வந்தாங்க அப்போ இது எல்லாத்தையுமே நான் சொல்லிட்டேன்..”, என்றவன் கூறிய ஒவ்வொன்றையும் விதிர்த்துப் போய் கேட்டுக் கொண்டிருந்தனர் அத்தனை பேரும்.
“என்ன முத்து அண்ணா இது போதுமா இல்ல.. சிட்டிலயே நம்பர் ஒன் டாக்டரைக் கூப்பிட்டு சர்டிபிகேட் வாங்கி காட்டினாதான் நம்புவீங்களா!”
“அது..அது..”
“ஏன் பதட்டப்படுறீங்க..அப்பறம் எதையாவது சொல்ல மறந்துறப் போறீங்க.. நீங்க பண்ணிண தப்பை நீங்களாவே சொல்லிட்டா நல்லது..”
“என்ன மா தப்பு பண்ணிட்டாங்க என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்..
ஆமா நான் தான் ஆளை வச்சு இவங்க இரண்டு பேரையும் கொல்லப் பார்த்தேன்.. இப்போ என்ன அதுக்கு??
என் ஐயா..என் நண்பன் அமித்தை கொலைப் பண்ண இவங்களை என் கையாலேயே கொன்னாலும் தப்பு கிடையாது”, என்றவர் ஆக்ரோஷமாய் ராகேஷின் மீது பாயப் போக அத்தனை பேரும் சேர்ந்து அவரைத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
“முத்துண்ணா!!!”,மகிழனின் குரல் மொத்தமாய் ஓய்ந்து போயிருந்தது.
உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லையே என்ற ஆற்றாமைக் கொட்டிக் கிடந்தது.
“நீங்க ஏன் தம்பி விசனப்படுறீங்க..விஷயம் தெரிஞ்சவுடனே எத்தனை கோபம் ஆத்திரம் வந்தது தெரியுமா எனக்கு..
இது எனக்கு முன்னாடியே தெரியாது..அதுல் ஐயா கீழே விழுந்தது தானா நடந்தது இல்ல..
ஆனாலும் இதுக்கு காரணமானவங்களை மாட்டிவிடக் கூடாதுனு நான் யாரையுமே பார்க்கலனு சொன்னேன்.
அப்பறம் சம்மந்தபட்டவங்ககிட்ட போய் பேசி புரிய வைக்க முயற்சி பண்ணேன்.
இதோ நிக்குறானே கல்யாணியோட தம்பி இனைத் தாக்கின அப்பவும் அவங்களைக் காப்பாத்தனும்னு ஷியாமாகிட்ட பொய் சொன்னேன்.
ஆனாஅப்போ எனக்குத் தெரிய வந்த விஷயங்கள் எல்லாம் என்னை மிருகமாவே மாத்திருச்சு..
என்ன ஆனாலும் சரினு இவங்களை கொல்றதுக்கு முடிவெடுத்தேன்.
யாருனே தெரியாத ஒருத்தர் போன் மூலமா இவங்க அமித்தை கொலப் பண்ணதுக்கு நான் தான் சாட்சினு சொன்னேன்..
வெளிலே சொல்லாம இருக்கணும்னா உடனே பணத்தை எடுத்துகிட்டு என்னைப் பார்க்க வரணும்னு சொன்னேன்.
நினைச்சா மாதிரியே ஓடி வந்தாங்க இரண்டு பேரும்.காசு கொடுத்து ஆள் வச்சு அடிச்சுத் தூக்கினேன்.
ஆள் நடமாட்டம் கம்மியா இருந்ததால அந்த வண்டி பத்தின எந்த விவரமும் யாருக்கும் தெரியாம இருக்கும்னு நினைச்ச மாதிரியே நடந்தது.
ஆனா இந்த பாவிங்க இரண்டு பேரும் பொழச்சுட்டானுங்கனு தெரிஞ்சப்போ…இரத்தம் கொதிச்சுது..
ஆனா இப்போ இந்த நிலைமையில் இவங்களைப் பாக்குறப்போ எல்லாம் மனசு குளிர்ந்து போகுது..
போதுமா நான் தான் பண்ணேன் ஒத்துகிட்டேன் தான..என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ மா..”, என்றவர் மூச்சு வாங்க பேசி முடித்திருக்க லேசாய் புன்னகைத்த ஷியாமாவோ,
“நடந்த நாடகத்தில் உங்க ரோல் பத்தி எல்லாம் சொல்லிட்டீங்க..
ஆனா இதெல்லாம் பண்ண திட்டம் போட்டது சந்தியா தேவியா சரண்யா தேவியானு இன்னும் நீங்க சொல்லலையே ணா?”
“”உன்னை கெஞ்சி கேட்குறேன்மா..நான் தான் சொல்லிட்டேனே நான் தான் பண்ணேன்னு அப்பறம் என்ன…
தண்டனை எதுவானாலும் எனக்கு கொடு.. உன் கால்ல கூட விழறேன்”,என்வாறு அவள் காலைப் பிடிக்க போக அதற்குள் வீடே அதிரும் வண்ணம் கர்ஜித்திருந்தார் சந்தியா தேவி.
“நான்தான் நான் மட்டும் தான் எல்லாத்துக்கும்…எல்லாத்துக்கும் காரணம்.. என்ன பண்ணிடுவ?!”, என்று கால் மேல் கால் போட்டு தன் தலை முடியை கோதி கொண்டையிட்ட வாறு அனைவரையும் மிரட்டும் பார்வை பார்த்திருந்தார்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
Very nice.
ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சி, இவ வாழ்க்கையை நாசம் பண்ணிட்டாரோ? முழு கோபம் இப்போ தான் வெளிவருதோ? 🤔🤔
Interesting🤔