எண்ணம்-10

by ஸ்ரீ
1 comment 161 views
A+A-
Reset

அந்த பெரிய கட்டிடத்தின் முன் இறங்கியவள் உள்ளே சென்று வரவேற்பாளினியிடம் அப்பாய்ண்மெண்ட் விஷயத்தைக் கூறிவிட்டு காத்திருந்தாள்.

அவளை உள்ளே அழைக்கும் வரை மொபைலை ஆராய்ந்து கொண்டிருந்தவள் அதன் பின் எழுந்து அவர்கள் கூறிய வழியில் சென்று சூரஜ் என்ற பெயர்பலகைத் தாங்கி நின்ற கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைய அவளைப் பார்த்தவனின் விழிகள் நொடிப் பொழுதாயினும் பதட்டத்தைக் காட்டி நிதானித்திருந்தது.

“ஹாய் மிஸ்டர் சூரஜ்..”

“ஹாய்..டேக் யுவர் சீட்..பை த வே நேத்து என்கூட போன்ல பேசினது?”

“யா நான் தான்..ஷியாமா ராகவன்..”

“ஓ.கே சொல்லுங்க என்ன விஷயமா என்னை பார்க்க வந்துருக்கீங்க?

அதுவும் பர்சனலா மீட் பண்ணணும்னு சொல்லிருந்தீங்களே?!”

“வெல்..சுத்தி வளைச்சு பேச வேண்டாம்னு நினைக்குறேன்..

மிஸ்டர் மகிழன் வீட்ல நீங்க என்னைப் பார்த்துருக்கீங்க கரெக்டா?”

“ஆர் யூ ஜோக்கிங்..நான் ஏன் எம்வீ வீட்டுக்குப் போகணும்? அதுவும் நீங்க அங்க இருக்கீங்கனே இப்போ நீங்க சொல்லி தான் தெரியுது எனக்கு..”

“ஓவர் ஸ்மார்டா இருக்க ட்ரை பண்ண வேணாமே..நான் எந்த ப்ராப்ளமும் பண்ண வரலை…

ஐ அம் ஷுவர் அன்னைக்கு நான் பார்த்தது உங்களை தான்..

எதோ ஒரு பழைய படத்துல வருமே அது மாதிரி உங்க பேஸ்ல மாஸ்க் போட்டு வேணா காட்டுங்க இந்த கண்ணை வச்சு அடிச்சு சொல்லுவேன் அது நீங்க தான்னு..”

“இங்க பாருங்க மிஸ்..என் இடத்துக்கே வந்து தேவையில்லாத எதையெதையோ பேசி என் நேரத்தை வீணடிக்குறீங்க..

நானா அனுப்புறதுக்கு முன்னாடி ப்ளீஸ்..”,என்றவன் வாசல் கதவை நோக்கி கை நீட்ட எந்த உணர்ச்சியும் வெளிக் காட்டாதவளாய்,

“ஓகே தென்.. உங்களுக்கு நல்லது பண்ணலாம்னு நினைச்சேன்..வேண்டாம்னு சொன்னா நான் என்ன பண்றது..

தியாவோட மேரேஜ்ல பார்க்கலாம் சீக்கிரமே..பை..”, என்று அவள்போக்கில் கூறிவிட்டு நகர எத்தனித்திருந்தாள்.

“வாட் என்ன சொன்னீங்க??யார் மேரேஜ்??”

“”ம்ம் அதான் மகிழனுக்கும் அவரோட அத்தை பொண்ணு தியாக்கும்..”

“!!!??”

“என்ன இப்படி ஷாக் ஆகுறீங்க?தியாவைத் தெரியுமா??”

“அஅது..வந்து..அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..”

“அவ்வளவு கஷ்டமான கேள்வி ஒண்ணும் கேட்கலேயே எதுக்கு இவ்ளோ பதட்டம்?”

“…”

“இப்போவாவது ஓபனா பேசலாம்னு நினைக்குறேன்..”

“பர்ஸ்ட் நீங்க யாரு??இதெல்லாம் நான் ஏன் உங்ககிட்ட பேசனும்?”

“நான் மகிழனோட ப்ரெண்ட்..இப்போதைக்கு அந்த வீட்டோட கெஸ்ட்..

அன்னைக்கு உங்களை நேர்ல பார்த்த ஒரே ஐ விட்னஸ்..”

“ஹலோ..”

“ஏன் டென்ஷன் ஆகுறீங்க..உங்க போட்டோவை மகிழன் ஆபீஸ்ல பார்த்தப்போ மைல்ட் கன்ப்யூஷன் இருந்தது..

நீங்களா இருக்குமா இருக்காதானு..பட் தியா உங்க காலேஜ் ஜுனியர்னு தெரிஞ்ச அப்பறம் கன்பார்மே பண்ணிட்டேன்..”

“…”

“நீங்க எதாவது சொன்னா தான் என்னால எதாவது செய்ய முடியும்..”

ஆழ் மூச்செடுத்தவனாய்,”நான் தான் அன்னைக்கு அங்க வந்தேன்.தியாவை பாக்குறதுக்காக..

எஸ் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்..ஆனா இரண்டு குடும்பத்தையும் பொருத்தவரை ரொம்ப பெரிய விஷயம் இது.

அதுவும் தியாவுக்கும் எம்வீக்கும் கல்யாண பேச்சு வேற போய்ட்டு இருக்கு..

அது மட்டுமில்லாம தியாவோட அப்பா சித்தப்பாக்கும் எனக்கும் தொழில் முறைல கொஞ்சம் மனக்கசப்பு இருக்கு..

சோ இத்தனை பிரச்சனை வச்சுட்டு எங்களால வீட்ல சொல்ல முடியல..”

“எல்லாம் கரெக்ட் தான் ஆனா அதுக்காக நடுராத்திரில திருடன் மாதிரி சுவர் ஏறி குதிச்சு வர்றதெல்லாம் நல்லாவா இருக்கு? ஒரு வேளை திருடன்னு நினைச்சு அவங்க பிடிச்சுருந்தா?”

“அவ்ளோ கேர்லெஸான ஆள் கிடையாது நான்.

அதுமட்டுமில்லாம என்னால தியாக்கு எந்த ப்ராப்ளமும் வரக் கூடாதுனு ரொம்பவே உறுதியா இருந்தேன்.. பட் உங்ககிட்ட மாட்டிப்பேன்னு எக்ஸ்பெக்ட் பண்ணல..”

“அதாவது நிறைய தடவை வந்துருக்கீங்க ஆனா இப்போ மாட்டிக்கிட்டீங்க அப்படி தான?”

“ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..

த்ரீ இயர்ஸ்ல ஒரு நாலு தடவை வந்துருப்பேன்..அதுவும் அவ பர்த் டே காக.அவங்க தாத்தா இறந்த டைம்ல நான் பாரின் ட்ரிப்ல இருந்தேன்.

ஒன்மந்த் ஆச்சு இங்க வர்றதுக்கே..அதுக்கப்பறம் அவளை நான் பார்க்கவே முடியல..

வெளில பார்த்தாலும் யாராவது செக்யூரிட்டி கூட வருவாங்க.. தெரிஞ்சவங்களா காட்டிக்கவும் முடியாது ஐ மிஸ்ட் ஹெர்..

அவளும் தான்.. அன்னைக்கு ரொம்பவே பீல் பண்ணி அழுதுட்டா.. அதனால தான் ..மத்தபடி நத்திங்..”,

என்றவன் அவளுக்கான பதிலையும் சேர்த்துக் கூறியிருந்தான்.

“ஓகே மிஸ்டர் சூரஜ் சீக்கிரமே நல்ல விஷயம் சொல்லுங்க…அண்ட் நான் இதுல இன்வால்வ் ஆனது தியா பேரண்ட்ஸ்க்கு தெரிய வேணாம்.

உங்களை மாதிரியே என்னையும் உங்க ஆளோட அப்பாவுக்கு பிடிக்காது.”,என்றவள் சிநேகமாய் கைக் குலுக்கிச் சென்றாள்.

அங்கிருந்து மகிழனைப் பார்ப்பதற்காக அவனது அலுவலகத்திற்குச் சென்றாள்.

“ஹாய் சர் ஜி..”

“முதல்ல இந்த ஜி சொல்றத நிறுத்து இரிடேட்டா இருக்கு.. கால் மீ மகிழன்..”

“அட என்னை விட பெரிய கோபக்காரரா இருப்பீங்க போலேயே.. சரி இப்படி இருந்தா நான் சொல்ல வந்ததைக் கண்டிப்பா சொல்ல மட்டேன்..”

“சரி என்னனு சொல்லு..”

“ஆமா நான் ஒரு டிபார்ட்மெண்ட் ஆள்னு நியாபகம் இருக்கா இல்லையா உங்களுக்கு?

ஒரு பேச்சுக்கு ப்ரெண்ட்னு சொன்னா நிஜமாவே நீங்க பேசுறதெல்லாம் அப்படி தான் இருக்கு..”

இருந்த கடுப்பெல்லாம் மறந்து புன்னகைத்தவன்,”நான் கூட இதை நினைச்சேன்.

முதல் தடவை இருந்த திமிர் எல்லாம் இப்போ தைரியமா தெரியுது.அலட்சியம் எல்லாம் ஈசி கோயிங் நேச்சர்னு தோணுது..

எல்லாத்துக்கும் மேல என் வேவ்லென்த்க்கு செட் ஆகுற ஒரு பெர்சன் அதனாலேயே மே பி கொஞ்சம் நார்மலா இருக்கேன் உன்கிட்டனு தோணுது..தப்பா இருந்தா சாரி.. வாண்டட்டா எதுவும் பண்ணல..”

“ஹே மகிழன் சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன்..சொல்ல போனா நானுமே கம்பர்டபுள் டூ வொர்க் வித் யூ..

சரி அதெல்லாம் விடுங்க..ஐ ஹவ் ஒன் இன்ட்ரெஸ்டிங் லவ் ஸ்டோரி பார் யூ..

காலேஜ் டைம்க்கு அப்பறம் இதெல்லாம் கேட்குறேன் நல்லா தான் இருக்கு.. தெரிஞ்சுக்குறீங்களா?”

“ஆர் யூ க்ரேஸி!!நான் வீட்ல நடக்குற பிரச்சனையை எப்படி ஹான்டில் பண்ணணு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்..

நீ என்ன னா லவ் ஸ்டோரி பத்தி சொல்லிட்டு இருக்க!!?”

“ஹா அந்த லவ் ஸ்டோரில தான் ப்ராப்ளமே சால்வ் ஆகப் போகுது. சோ முதல் விஷயம் என்னனா அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தது சூரஜ் தான்..”

“!!!”

“அண்ட் ஆதுக்கான காரணம் தியா..”

“தியா வா.. யூ மீன் அவங்க ரெண்டு பேரும்??”

“எக்சாக்ட்லி அதே தான்..சூரஜ் தியாவோட காலேஜ் சீனியர் அப்போ இருந்தே இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுருக்கு..

ஆனா உங்களுக்கும் தியாவுக்கும் கல்யாண பேச்சு அதுகுள்ள மிஸ்டர் வர்மாவோட இறப்புனு நடந்த குழப்பங்காள்ல யாருக்கும் எதுவும் தெரியாமயே இருந்துருக்கு..”

“தேங்க் காட்…!!!”,என்றவன் தலையை அழுந்தக் கோதி தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

“ஆனாலும் இப்படி ஒரு ரியாக்ஷனை நான் எதிர்பார்க்கல உங்ககிட்ட..”

“உனக்குத் தெரியாது நான் இப்போ எவ்வளவு நிம்மதியா இருக்கேன்னு..இந்த பிரச்சனையை எப்படி முடிக்குறதுனு ரொம்பவே குழம்பிருக்கேன்.

சிம்பிள் லாஜிக் சின்ன வயசுல இருந்தே ஒரே வீட்ல வளர்ந்துருக்கோம் மோனியை பாக்குறப்போ வர்ற அதே பீல் தான் எனக்கு தியாவைப் பார்த்தாலும் வரும்.

அப்படியிருக்க அவளை எப்படி கல்யாணாம் பண்ண முடியும்.அது மட்டுமில்லாம என் அத்தை.. காட் நினைச்சாலே தலை சுத்தும்..”

“தி க்ரேட் எம்வீ யையே தெறிக்க விடுறதுக்கு ஆள் இருக்கு உங்க வீட்ல..சரி விஷயத்தை சொல்லிட்டேன்..

இனி ஆக வேண்டியதை நீங்க பாருங்க அதே நேரம் என் பேர் எக்காரணம் கொண்டும் வெளியே வரக் கூடாது..

மிஸ்டர் சூரஜ் கிட்டேயும் இதையே தான் சொல்லிருக்கேன்.”

“ஷுவர் ஷுவர் எனிவே தேங்க் யூ சோ மச் பர் திஸ்..”

“நோ ப்ராப்ளம் எதையோ நினைச்சு விசாரிக்கத் தொடங்க எதோ ஒரு விவரம் கிடைச்சுருக்கு அவ்ளோ தான்..

ஓகே நான் கிளம்புறேன்.. பை..”,என்றவள் தன் கண்ணாடியை மாட்டியவாறே வெளியே செல்ல அவளையே பார்த்திருந்தான் மகிழன்.

அவள் அங்கிருந்து சென்ற பின்பும் சில நிமிடங்கள் வாசலையே வெறிந்திருந்தவன் உணர்வு பெற்றவனாய் அடுத்து தான் செய்ய வேண்டியதைப் பற்றி கணக்கிட ஆரம்பித்தான்.

முதல் வேலையாய் சூரஜிடம் பேசுவதே நல்லது என்று தோன்ற அவனின் எண்ணிற்கு அழைத்தான்.

“ஹலோ எம்வீ?”

“ஹாய் சூரஜ் எப்படியிருக்கீங்க?”

“நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க? எதுவும் முக்கியமான விஷயமா நீங்களே கால் பண்ணிருக்கீங்க..!”,என்றவனின் குரலில் எதிர்பார்ப்பு அப்பட்டமாய் தெரிந்தது.

“ஐ அம் வெரி பைன்.. அண்ட்.. அது.. இப்போ தான் ஷியாமா வந்துட்டு போனா..”

“…”

“உங்களுக்கும் தியாவுக்குமான காதலைப் பத்தி சொன்னா.. பர்ஸ்ட் ஆப் ஆல் கங்க்ராட்ஸ்..”

“எம் வீ!!!”

“என்னாச்சு ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க?எனக்கும் தியாக்கும் எப்பவுமே பெருசா எந்த ஈடுபாடும் ஒருத்தர் மேல ஒருத்தரருக்கு இருந்தது இல்ல. சோ நிச்சயமா இது எனக்கு சாதாரண விஷயம் தான்.”

“தேங்க் யூ எம் வீ..தேங்க்ஸ் பார் தி அண்டர்ஸ்டாண்டிங்..”

“சோ உங்க சைட் விவரம் தெரிஞ்சா என் வீட்ல நான் பேச வசதியா இருக்கும்.உங்க ப்ரெண்ட்ஸ்க்கு ஓகே வா?”

“அதெல்லாம் நான் கன்வின்ஸ் பண்ணிடுவேன்…ஒன்னும் பிரச்சனையில்ல..பட் தியா வோட அப்பா அம்மா தான்!!?”

“ம்ம் கொஞ்சம் கஷ்டம் தான் ஆனா முடியாதது இல்ல.

அவங்களை நான் பார்த்துக்குறேன்.. நீங்க வீட்ல பேசிட்டு சொல்லுங்க.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ கல்யாணத்தை முடிச்சுரலாம்..”

“இதைவிட முக்கியமான வேலை என்ன இருக்கப் போகுது எனக்கு..இப்போவே டேடி கிட்ட பேசிட்றேன்..

ரியலி அன் எக்ஸ்பெக்டட்.. தேங்க்ஸ் அகெயின்”, என்றவனின் ஆர்பரிப்பும் துள்ளலும் மகிழனுக்கு விசித்திரமாய் தோன்றியது.

சூரஜ்ஜை தொழில் சம்மந்தமான மீட்டிங்கில் தான் சந்தித்திருக்கிறான்.

மகிழன் எந்தளவு கம்பீரத்தைக் கடைப்பிடிப்பானோ அதே மாதிரியான ஒரு முதிர்ச்சி இருக்கும்.

ஆனால் இப்போது பேசியவனின் குரல் துள்ளிக் குதித்தோடும் கல்லூரி மாணவனைப் போன்று இருந்தது மகிழனிற்கு.

அந்த எண்ணம் தோன்றிய அதே நேரம் மனம் அதுவாய் சோர்வுற்றது.

ஏனெனில் கல்லூரி காலத்தில் கூட மகிழன் அப்படி இருந்ததில்லை..

அதனாலேயே கூட யாரோடும் ஒட்டுதலோ நட்பு பாராட்டும் தன்மையோ அவனிடத்தில் வந்திருக்கவில்லை.

இப்போது நினைத்தால் ஷியாமாவோடுடனான இலகுத்தன்மைக்குக் காரணம் கூட அவள் குணம் தான்.

அவனை ஒத்த அத்தனையும் அவளிடத்திலும் இருந்தது என்று நன்றாகவே உணர்ந்திருந்தான்.

அவளைக் கடந்து எந்த ஒரு செய்தியும் சாதாணமாய் கூட அவள் அனுமதியின்றி வெளியே செல்லாது என்பதே மிக முக்கிய காரணமாகவும் இருக்கலாம்.

சில நொடிகளில் சிந்தனை கலைந்தவனாய் தலையை உலுக்கிக் கொண்டு அடுத்து செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பிதிருந்தான்.

அங்கு ஷியாமா மகிழனின் வீட்டை அடைந்திருக்க அவளுக்காகவே  தோட்டத்தில் காத்திருந்த தியா இவளைக் கண்டதும் அருகே வந்தாள்.

“ஷியாமா..”

“ம்ம்..உங்களுக்கு பேச கூட வருமா..பரவால்லையே சொல்லுங்க..”

“சாரி அண்ட் தேங்க்ஸ்..”

“எதுக்கு?”

“சாரி நான் உங்ககிட்ட ஒழுங்கா நடந்துகாததுக்காக..அண்ட்…தேங்க்ஸ்…வந்து…

இப்போ தான் சூரஜ் கால் பண்ணி விஷயத்தை சொன்னார்..எம்வீ  எங்க கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாராம்..”

“ஹா தேட்ஸ் க்ரேட்..ஆனால் இதுல எனக்கு எதுக்கு தேங்க்ஸ்?நியாயமா நீங்க சொல்லிருக்கணும் அதுகுள்ள என் மூலமா தெரிய வேண்டியதா போச்சு..”

“..”

“வேற எதுவும் இல்லைனா நான் உள்ளே போலாமா..பீலிங் டையர்ட்..”

“யா யா நீங்க போங்க..”,என்றவள் நகர்ந்து கொள்ள அதற்கு மேல் பேச்சை வளர்த்தால் இவள்புறம் என்னென்ன கேள்விகள் வருமோ என்ற நினைப்பிலேயே அங்கிருந்து உள்ளே சென்றுவிட்டாள் ஷியாமா.

தனதறைக்கு வந்தவள் தன் டைரியில் குறிப்புகள் வைத்திருந்த பக்கத்தை திறந்து வைத்து பேனாவை எடுத்தவள் மூன்றாவதாய் எழுதியிருந்த அன்நோன்/சூரஜ் என்ற பெயரை அடித்திருந்தாள்.

அதற்கு முன்னதாய் இரண்டாவதாய் இருந்த கல்யாணியின் தம்பி என்ற எழுத்துக்களும் அடிக்கப்பட்டிருந்தன.

முதலாவதாய் இருந்த குறிப்பைப் பார்த்தவள் ஆழ்மூச்செடுத்து தலையை இடவலமாய் அசைத்தவாறே அதை மூடி வைத்துவிட்டு கட்டிலில் விழுந்திருந்தாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

1 comment

srichitra November 7, 2026 - 10:34 am

Very nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode