கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று
ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள்
பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,
நல் ஆள் பிறக்கும் குடி?

 

கள்ளிச்செடியில் அகில் பிறக்கும். மான் வயிற்றில் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும். மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலுள் பிறக்கும். அவ்வாறே நல்லியல்பு கொண்டோர் பிறக்கும் குடியையும் எவராலும் அறிய முடியாது.

எத்தனைப் பெரியவனாய் தன்னை உலகிற்குக் காட்டிக் கொண்டாலும் ஏனோ ராஜீவ் இல்லாத ஒரு நாள் என்பது மிகவும் கடினமான ஒன்றாய் இருக்கும் ப்ரஜீஷிற்கு.

அதன் முக்கியக் காரணம் மது.அவனால் தினமும் குடிக்காமல் இருக்க முடியாது.அதே நேரம் ராஜீவ் இருந்தால் வீட்டிற்குக் கிளம்பும் நேரத்தில் அவனைக் கட்டுப்படுத்தி அனுப்பி வைப்பான்.

அதுமட்டுமல்லாது ஒரு முறை கொஞ்சம் அளவு அதிகமானதால் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை வந்ததிலிருந்து ராஜீவ் இன்னமும் அதீத கவனத்தோடு இருப்பான்.

இன்றோ காலையிலிருந்து அதீத வேலை இருந்தக் காரணத்தினால் எத்தனை முயன்றும் ப்ரஜீஷால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருந்தது.என்ன செய்வதெனப் புரியாதவனாய் ராஜீவை அழைக்க எத்தனிக்க பின் அவனைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல் விட்டிருந்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் தனது ஓய்வறையில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததை ஒரே மூச்சில் குடித்து முடித்திருந்தான்.

அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவனுக்கு சிறிது நேரத்தில் நெஞ்சில் எரிச்சல் தன்மை ஏற்பட உண்மையில் ஒரு நொடியில் அவனே பயந்து தான் போயிருந்தான்.என்ன செய்வதெனப் புரியாமல் தானாய் மூடும் கண்களைக் கஷ்டப்பட்டுத் திறந்து மூடியவனாய் நொடியும் தாமதிக்காது ராஜீவீற்கு அழைத்திருந்தான்.

அவனது உளறல் குரலிலேயே விஷயத்தைப் புரிந்துக் கொண்டவனோ ஒன்றும் கூறாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு யாரை அழைக்கலாம் என்று யோசிக்கச் சரியாய் அந்த நேரம் அபூர்வா அவனுக்கு வேலை நிமித்தமாய் ஏதோ கேட்பதற்கு அழைத்திருந்தாள்.

“ஹலோ அண்ணா…வந்து..”

“அபூர்வா…எனக்கு உடனடியா ஒரு உதவி செய்யணும்..வேற எந்த வேலையா இருந்தாலும் நாளைக்குப் பாத்துக்கலாம்…ப்ளீஸ் டா…”

“என்னனு சொல்லுங்க ணா…”

“என் ரூம் கபோர்ட்ல ஒரு மெடிசின் பாக்ஸ் இருக்கும்..அதுல இருக்குற இரண்டு மாத்திரையையும் எடுத்துகிட்டு ஃபோர்த் ப்ளோர் கார்னர் ரூம்க்கு போயேன் அங்க என் ப்ரெண்ட் இருப்பான்..அவன்கிட்ட கொடுக்கணும் ப்ளீஸ்…வேற யாருக்கும் தெரிய வேணாம்..”

“அண்ணா….”

“யோசிக்க நேரமில்ல டா..ப்ளீஸ்…”,அதற்கு மேல் எதைப் பற்றியும் யோசிக்கத் தோன்றாமல் அங்கிருந்து அவனது அறைநோக்கிக் கிளம்பியிருந்தாள் அபூர்வா.

மருந்துகளை எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட ஓடியவள் அவன் கூறிய அறையைச் சென்று திறந்த போது முகம் முழுவதும் வேர்த்துக் கொட்டிய வண்ணம் தவித்துக் கொண்டிருந்தான் ப்ரஜீஷ்.

யாரோ வந்திருப்பதை மட்டுமே உணர்ந்தவனாய்,”டேப்லெட் எங்க??”,என்றுப் பல்லைக் கடித்தான்.

அதன்பின் தான் நினைவு வந்தவளாய் கையிலிருந்த மாத்திரையைப் பிரித்து அவனிடம் நீட்ட ஒழுங்காய் விழிகளைக் கூடத் திறக்காமல் அப்படியே முழுங்கி விட்டிருந்தான்.

சில நிமிடங்களில் அபூர்வாவிற்கு ராஜீவிடமிருந்து அழைப்பு வர அவள் அவனுக்குத் தேவையான விவரங்களைக் கூறி முடித்திருந்தாள்.

அப்போதும் ப்ரஜீஷ் தன் நினைவில் இல்லை என்பதை உணர்ந்தவளுக்கு என்ன செய்வதென்று புரியாத நிலை.

“அண்ணா யாரையாவது அனுப்புறீங்களா?தனியா போற நிலைமையில் அவர் இல்ல..”

“இல்ல டா அவன் அங்கேயே இருந்துப்பான் ஒண்ணும் பிரச்சனையில்ல நீ கிளம்பு நான் பேசிக்குறேன்…”

“சரி ணா…”,என்றவள் அங்கிருந்து நகரந்த நேரம் அவனின் கரகரக்கும் குரல் அவளை நிறுத்தியது.

“ஹே யூ தேங்க்ஸ்…”,கொஞ்சமும் குற்றவுணர்வோ கவலையோ இருந்திருக்கவில்லை அந்தக் குரலில்.

“உங்களுக்காக எதுவும் பண்ணல…உங்க ப்ரெண்ட் கேட்டாரேனு தான் பண்ணேன்..”,என கத்தரித்தாற் போல் பதிலளித்தவளைக் கஷ்டப்பட்டு கண் விழித்துப் பார்த்தான்.

“ஓ ராஜீவோட புது தங்கச்சி தானே நீ…நான்…”

“நீங்க யாரா வேணா இருங்க…மொதல்ல வேலைப் பாக்குற இடத்துல ஒழுங்கா இருக்க கத்துக்கோங்க..வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யுற இடத்தைக் கோவில் மாதிரி நினைக்கணும்..இப்படியா..

யாராவது…யாராவது என்ன…உங்களுக்கு சம்பளம் கொடுக்குற அந்த முதலாளியே பார்த்தா என்ன நினைப்பாங்க…இதுல உங்களாலத் தேவையில்லாம உங்க ப்ரெண்ட்டுக்கும் கெட்ட பேரு..எதை நினைச்சும் கவலையில்ல…அப்படி என்ன இருக்கோ அந்தக் குடியில..”

“யூ வாண்ட் டு ட்ரை??!”

“ஹவ் டேர் யூ?!அது சரி உங்கத் தைரியம் தான் தெரியுமே..நட்டநடு ரோட்ல காருக்குள்ள…ச்ச ச்ச..சொல்லவே கேவலமா இருக்கு…”

“ஓ அதான் அன்னைக்கு ராஜீவோட என்னைப் பார்த்தப்போ முகத்தைத் திருப்பிட்டு போனியா?”

“மிஸ்டர் மைண்ட் யுவர் லேங்குவேஜ்..நீ வா போனு சொல்ற வேலையெல்லாம் வேணாம்..”

“ஹாங்…யூ ஆர் சோ ஹாட்…சில் பேபி..”

“திஸ் இஸ் டூ மச்…”

“ரிலாக்ஸ் யார்…அன்னைக்கு நீ பார்த்ததுல அந்தப் பொண்ணு மேலேயும் தான் தப்பு இருக்கு…எதோ வலுகட்டாயமா நான் தப்பா நடந்துக்க முயற்சிப் பண்ணிண மாதிரி சொல்ற…”,உளறல் அதிகமாகவே இருந்தது அவனிடத்தில்.

“அதானே பண்றதெல்லாம் பண்ணிட்டு பிரச்சனைனு வந்தா பொண்ணை குறை சொல்ல வேண்டியது..ஜஸ்ட் கோ டு ஹெல்…”,என ஆத்திரமாய் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தாள் அபூர்வா..

ப்ரஜீஷிற்கோ முகத்தில் புன்னகைப் பூத்திருந்தது.இப்படி யாரிடத்திலும் வசவு வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டதே என்று தான் முதலில் நினைத்தான்.அதையும் கடந்து நாளை தான் யார் என்றுத் தெரியும் போது அவளின் முக பாவனைகள் எப்படியாய் இருக்கும் என்று நினைத்தப் போது புன்னகை மேலும் விரிந்திருந்தது.

அங்கிருந்து வெளியே வந்தவளுக்கோ கோபம் துளியும் குறைவதாய் இல்லை.செய்த தவறை நினைத்து வருந்தவும் இல்லை.உதவி செய்தவளிடமே நக்கல் பேச்சு வேறு..என்ன மாதிரியான குணம் இது என்று நினைத்தவளாய் மனதினுள் அர்ச்சனைகளை வாரி வழங்கிவிட்டு வீட்டிற்குக் கிளம்பி இருந்தாள்.

மேலும் சில மணி நேரம் அங்கேயே ஓய்விலிருந்தவன் தெளிவடைந்து கிளம்பிய நேரம் ராஜீவ் அவனை அழைத்திருந்தான்.

“கிளம்பிட்டியா டா?”

“ம்ம் இப்போ தான்..ஆமா உனக்கு வேற ஆளே கிடைக்கலையா…”

“அவசரத்துல யாரைக் கூப்பிடுறததுனு தெரில மச்சி..அதான் அபூர்வாகிட்ட சொல்லி அனுப்பினேன்..எதாவது பிரச்சனையா?”

“ம்ம் அதெல்லாம் ஒண்ணுமில்ல..அவ கத்தின கத்துலேயே பாதி தெளிஞ்சுருச்சு..அப்படி ஒரு கோவம்..”

“ஓ..சாரிடா நான் உன்னை என் ப்ரெண்ட்னு தான் சொன்னேன்…அவளுக்கும் தெரியாது போல..”

“அதான் நல்லது…தெரிய வரும்போது மேடம் எப்படி ரியாக்ட் பண்றாங்கனு பாக்கலாம்..”

“மச்சி..கோவப்பட்டு எதுவும்….நல்ல பொண்ணு டா…”

“அடடா அதுக்குள்ள இப்படி ஒரு பாசமா…உன் தங்கச்சி பத்திரமா இருப்பா…நான் கிளம்புறேன் பை…”,

மறுநாள் காலையில் அலுவலகத்தை அடைந்தவன் முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு ராஜீவின் அறையிலிருந்து அபூர்வாவின் மேசை எண்ணுக்கு அழைத்து அவளை அங்கு வருமாறு கூறினான்.

அபூர்வாவிற்கு விருப்பமில்லை எனினும் தேவையற்ற பிரச்சனை வேண்டாம் என்ற எண்ணத்தில் கிளம்பிச் சென்றாள்.

ராஜீவின் நாற்காலியில் கால் மீது கால் போட்டு தோரணையாய்  அமர்ந்திருந்தவனைப் பார்த்தவளுக்கு எரிச்சலாய் இருந்தது.ஆனாலும் முன்தினம் எந்த நிலையில் பார்த்தவன் இப்போது இருக்கும் தோரணையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

அவளையேப் பார்த்திருந்தவனைக் கண்டு வந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்தியவளாய்,

“எதுக்கு வர சொன்னீங்கனு சொன்னா நான் போய் என் வேலையைப் பார்ப்பேன்..”

“ஆங்…தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப்…”

“பரவால்ல…பெருசா ஒண்ணும் பண்ணிடலேயே…”

“ம்ம்…வாங்கின உதவிக்கு நான் தேங்க்ஸ் சொல்லிட்டேன்…நீ இன்னும் சாரி சொல்லவேயில்லையே…”

“சாரி யா?நான் ஏன் சாரி சொல்லணும்!!!??”

“அது சரி நேத்து நீ பேசினதெல்லாம் மறந்துருப்பேன்னு நினைச்சியா…போதையில தான் நான் இன்னும் தெளிவாவே இருப்பேன்..”

“நேத்து நான் சொன்னதுல எந்த தப்பும் இல்ல..அதனால சாரி கேட்க வேண்டிய அவசியமும் இல்ல…”

“ம்ம்…பட் நான் சொன்னதும் உண்மை தான்..நான் கட்டாயப்படுத்தி யாரையும் என்கூட இருக்க வைக்கல..தே என்ஜாயிங் மை கம்பனி அவ்ளோ தான்..”

“கேட்கவே நாராசமா இருக்கு…எல்லாரும் ஒரே மாதிரி இல்ல..எனக்கு தப்பா படுறது உங்களுக்குச் சரியா இருக்கு அவ்ளோ தான்…நீங்க சொன்ன மாதிரி அந்தப் பொண்ணுக்கே பிரச்சனை இல்லாத அப்போ எனக்கு மட்டும் என்ன…அவ்ளோ தானா?நான் போலாமா?”

“உன் பேரு என்ன?”

“எதுக்கு கேட்குறீங்க?”

“பேரை எதுக்கு கேட்பாங்க?கூப்பிடுறதுக்குத் தான்..”

“அபூர்வா…”

“என் நேம் கேட்கலயே நீ?”

“உங்களைக் கூப்பிட வேண்டிய அவசியம் எனக்கு வராதுனு நினைக்குறேன்..அதான் கேட்கல…”

ஆழ்மூச்செடுத்தவனாய் தன் கோட்டை இழுத்துவிட்டவாறு எழுந்தவன் தன் இடது கையைப் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்தவாறு அவள் முன் நின்றான்.

“அவசரப்பட்டு அப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டாம்..எனிவே ஐ அம் ப்ரஜீஷ் மேனேஜிங் டேரக்டர் ஆப் A&M க்ரூப்ஸ்.”,என்று கூறி முடித்தவன் அவளது கண்களையேப் பார்த்திருக்க அதில் தெரிந்த ஒரு நொடி கலவரத்தில் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்…

“சார்…அது..எனக்குத் தெரியாது….”

“ஐ நோ…அதனால தான் நேத்து அத்தனை தைரியம் இருந்துருக்குப் பேச்சில்…”

“…….”

“என்ன இப்போ சாரி சொல்லலாம் இல்லையா?”

சிறு தயக்கமும் பயமுமாய் கைகளைப் பிசைந்து நின்றவளுக்குப் பேச வார்த்தைகள் வராமல் போயிருந்தது.ப்ரஜிஷிற்கோ அவளின் அந்தத் தவிப்பு அவனுடைய வெற்றி எனத் தோன்றியது.

அவன் தன் பதிலுக்காகக் காத்திருப்பதை உணார்ந்தவளாய் ஒருவித தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,

“சார்…இப்பவும் நான் சாரி கேட்குற அளவு எந்தத் தப்பும் பண்ணல…ஆனாலும் நேத்து நான் உங்களுக்கு சொன்னது தான் எனக்கும் பொருந்தும்..

சம்பளம் கொடுக்குற இந்த வேலையும் இடமும் கோவில் மாதிரினா…எனக்கு சம்பளம் கொடுக்குற உங்களுக்கும் அதேயளவு மரியாதைக் கொடுக்கணும்…

உங்க அனுமதி இல்லாம உங்களோடத் தனிப்பட்ட வாழ்க்கையிலத் தலையிட்டதுக்காக மன்னிச்சுருங்க…”

அவளின் அந்த நிமிர்வு அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.அவளின் வயதுக்குச் சற்றும் பொருந்தாத ஒரு முதிர்ச்சி அவளது பேச்சில்.ஏனோ அதற்கு மேல் அவளிடம் பேச்சை வளர்க்கத் தோன்றவில்லை அவனுக்கு.

சம்மதமாய் தலையசைத்தவனாய் போகலாம் என்ற வண்ணம் வாசலை நோக்கிக் கை நீட்ட தேங்க் யூ என்ற முணுமுணுப்போடு அங்கிருந்து வெளியேறியிருந்தாள் அபூர்வா.

தன் இடத்தில் வந்து அமர்ந்தவளுக்கு கையெல்லாம் நடுங்க ஆரம்பித்திருந்தது.என்னக் காரியம் செய்து வைத்திருக்கிறோம்…யார் என்னவெனத் தெரியாமல் இப்படி பேசிவிட்டோமே…நாளை ராஜீவ் வந்து அவனது காதுகளுக்கு விஷயம் சென்றால் என்ன செய்வது…

தன்னை நம்பிக் கொடுத்த ஒரு வேலையைக் கூட ஒழுங்காய் செய்யவில்லையே என்று எண்ணுவாரோ!அதைவிட தன்னுடைய இந்தச் செயலுக்காகத் தன்னை வேலையிலிருந்து நீக்கி விட்டால!!!!!

தங்கையின் படிப்பு…பெற்றோரின் கனவு இதெல்லாம் என்னவாகும் எனப் பலவாறாய் சிந்திக்கத் தொடங்கியிருந்தாள் அபூர்வா.