497
“செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
மு.வ விளக்க உரை: காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.”
நாட்கள் வாரத்தைக் கடந்திருக்க அன்றைய தினம் MR groups ஏற்பாடு செய்திருந்த மீட்டிங்கிற்காக அந்தக் கட்டிடத்தின் கம்பெனி ஓனர்கள் அனைவரும் குழுமியிருந்தனர்.
அவர்களின் புது அட்மினிஸ்ட்ரேஷன் பற்றிய அனைத்து விவரங்களும் இமெயில் மூலம் அனைவருக்கும் அனுப்பப் பட்டிருக்க அதில் இருக்கும் நிறை குறைகளைப் பற்றி பேசுவதற்கான ஒரு தளமாகவும் இந்த மீட்டிங் அமைக்கப் பட்டிருந்தது.
அனைவருமாய் வந்து அமர்ந்த பின் மேடையில் சுகன் ரகுவந்த் மற்றும் சைதன்யாவோடு மேலும் இரண்டு பேர் MR groups சார்பில் வந்தமர்ந்தனர்.
அறிமுக உரை முடித்து அவர்களின் தரப்பில் கூறப்பட வேண்டிய விவரங்களைக் கூறி முடித்த பின் தொழிலதிபர்கள் தரப்பிடம் மைக் நீட்டப்பட தங்களின் கோரிக்கைகளை ஒவ்வொருவராய் முன் வைத்தனர்.
அடுத்ததாய் மைக் விடியலின் கையில் வர அவளைப் பார்த்த சகோதரர்கள் தங்களுக்குள் பார்வை பரிமாற்றம் செய்து கொண்டனர்.
“குட்மார்னிங் எவ்ரி ஒன். பர்ஸ்ட்லி வெல்கம் ஆன் போர்ட். எல்லா சூழ்நிலைகள்லேயும் எங்களோட ஒத்துழைப்பு கண்டிப்பா உங்களுக்கு இருக்கும்.
எனக்கு இருக்குறது ஒரே ஒரு கன்சர்ன் தான் கம்பெனிக்கான ரென்ட் வருஷத்துக்கு ஒரு தடவை உயர்த்தப்படும்னு போட்டுருக்கீங்க. அது ஒரு வகையில் ஓகே தான்.
பட் நீங்க கொடுத்துருக்க பெர்சன்டேஜ் ரொம்பவே அதிகமா இருக்கு.
இந்த பில்டிங்ல கிட்டதட்ட ஐம்துக்கும் மேற்பட்ட கம்பெனிகள் இருக்கு. அதில் கால்வாசி கம்பெனிஸ் மட்டும் தான் எந்தப் பிரச்சனையும் இல்லாம நீங்க கோட் பண்ணிருக்குற பணத்தைக் கொடுக்க முடியும்.
மத்த எல்லாருக்குமே அது மிகப் பெரிய அமௌண்ட். அதுவுமில்லாம இது வருஷா வருஷம் ஏறும்னு சொல்லும் போது கண்டிப்பா பல கம்பெனிகள் இங்கே இருந்து காணாம போக வாய்ப்பிருக்கு.
உங்களுக்கு அது பெரிய விஷயமில்லாம இருக்கலாம். ஈசியா வேற கம்பெனியும் அங்கே வந்துருவாங்க ஆனால் இதுரை இங்கே இருக்குவங்களோட சின்சியாரிட்டிக்கு அது மரியாதையா இருக்கும்னு எனக்குத் தோணலை.
உங்க மேனேஜ்மென்ட் இதை மட்டும் கொஞ்சம் கன்சிடர் பண்ணினால் நல்லாயிருக்கும்.”, என்றதைக் கேட்டு மேடையில் இருந்த சுகன் அவளிடம்,
“ஹாய் மிஸ். நீங்க சொல்லிருக்குற விஷயம் சரியானதா இருக்குற பட்சத்தில் போர்ட் மெம்பர்ஸ்ட்ட பேசி நிச்சயம் நல்ல முடிவா எடுக்குறோம்.
கிவ் அஸ் சம் டைம்..”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவள் புன்னகைத்து இருக்கையில் அமர்ந்தாள்.
மீட்டிங் முடிந்த பின் ஒவ்வொருவராய் வெளியேற ரகுவந்த் விடியலிடம் கை காட்டி காத்திருக்குமாறு கூறிட இளங்கோவுடன் விடியல் தனதிடத்திலேயே காத்திருந்தாள்.
“ஹாய் V..”
“ஹாய் எப்படியிருக்கீங்க..”, என்றவள் மூவருக்கும் பொதுவாய் விசாரித்தாள்.
“நாங்க நல்லாயிருக்கோம். உங்களை இங்கே பார்த்தது ரொம்பவே எதிர்பாராதது. உங்க கம்பெனி எந்த ப்ளோர்?”
“V Games த்ர்ட் ப்ளோர்… அண்ட் இது என் அப்பா இளங்கோ.”
“ஹலோ சார். க்ளட் டு மீட் யூ.”,
“பை த வே, V ரகு உங்க கேம்மோட தீவிர அடிக்ட்..”, என்று சுகன் கூறிச் சிரித்தான்.
“ரியலி?!”
“யா அதை ஆரம்பிச்சுட்டான்னால் மொபைலை கீழே வைக்குறது ரொம்ப கஷ்டம்.
பட் அந்த மாஸ்டர் மைண்ட் நீங்கனு தெரியாம போச்சே..”, என்று கூறி சைதன்யா சிரித்தான்.
“கேம்ஸில் இல்ல பிசினஸில் எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட்..” என்று மூவரும் மேலும் சில நொடிகள் பேசிவிட்டு கிளம்பியிருந்தனர்.
மாலை போர்ட் மீட்டிங்கில் மேகனிடம் காலையில் நடந்ததைப் பற்றிய சம்மரியைக் கூறி விட்டு ரென்ட் விஷயத்தையும் தெரிவித்தனர்.
“ம்ம் இதை கோர்ட் பண்ணது யாரு? கொஞ்சம் அதிகம் மாதிரி தான் தெரியுது. நீ பார்த்து இதை மாத்திடு சுகா.”
“ஓகே ண்ணா.. ஆனால் இதனால நமக்கு லாபம் தானண்ணா.. கட்ட முடியாதவங்க பில்டிங்கை காலி பண்ணிக்கட்டடும்..”
“அப்படி விட முடியாது ரகு. இந்த பில்டிங்ல இருக்குற எல்லா கம்பனிஸுமே ரொம்ப ப்ரொஃபஷனல் ஆல்சோ இத்தனை வருஷத்துல பழைய ஓனர்க்கு எந்த தலைவலியும் இல்லாம ரன் ஆன ஒரு இடம்.
இன்ஃபேக்ட் அவருக்கு பண நெருக்கடி இல்லைனால் இதை நமக்கு கொடுத்துருக்கவே மாட்டார். அப்படிபட்ட க்ளையண்ட்ஸை நாம மிஸ் பண்ண கூடாது. எல்லாருமே ரொம்ப வருஷமா இங்கே இருக்குறவங்க.
இவங்க காலி பண்ணிட்டா அடுத்து வர்றவன் எப்படியிருப்பானோ நமக்குத் தெரியாது.
சோ இயர்லி அமௌண்ட் ஏத்தப் போறது உறுதி. ஜஸ்ட் பெர்சன்டேஜ் மட்டும் கம்மி பண்ணிக்கலாம்.”
“சரி ணா.. அப்படியே பண்ணிடலாம். அண்ட் யூ நோ. நம்ம பங்கஷனுக்கு வந்திருந்த V அவங்க ஆபீஸ் கூட அங்கே தான் இருக்கு.
ஷி இஸ் அ பிஸினஸ் வுமன். ஆச்சரியமா இருந்தது ணா..”
“ஓ..ம்ம்..”
“மீட்டிங் முடிச்சுட்டு நாங்க மூணு பேரும் அவங்களையும் அவங்க அப்பாவையும் பார்த்து பேசிட்டு வந்தோம்.
இவன் எப்பவும் மொபைலில் விளையாடுறது அவங்க கேம் தான. அதையும் சொன்னோம்.”, என்றதில் மூவரையும் பார்த்தவன் அமைதியாய் தலையசைத்தான்.
அன்று தோழியின் திருமணத்திற்கு ஷாப்பிங் செல்ல வேண்டுமென்பதால் விடியல் அலுவலகம் செல்லாமல் இருக்க விஜயை மகளின் பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்தார் இளங்கோ.
“நான் சொன்னால் அப்பா கேட்குறதே இல்ல. நீங்களாவது அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தான விஜி. இங்கேயெல்லாம் நான் தனியா போக மாட்டேனா?”
“ஒரு செலிப்ரட்டியை எப்படி தனியா அனுப்ப முடியும் விடியல்?”, என்றவன் புன்னகைக்க விடியலோ அவனை முறைத்தாள்.
“நிஜமா தான் சொல்றேன். சோஷியல் மீடியா இன்னைக்கு தேதிக்கு எவ்வளவு மோசமா இருக்குனு நமக்கு தெரியாதா?
ஒரு போட்டோ ஒரு வீடியோக்காக என்ன வேணா பண்றாங்க. சோ நான் வர்றது நல்லது தான்.”, என்றதை மறுக்க முடியாதவளாய் அந்த மாலின் உள் நுழைந்தாள்.
தோழிக்கு பரிசு வாங்குவதோடு தனக்கு நல்ல புடவையாய் வாங்கலாம் என்ற எண்ணத்தில் கடைகளைப் பார்வையிட்ட படி நடந்து கொண்டிருந்தாள்.
இரண்டாவது தளத்தில் இருந்தவளை நான்காவது தளத்தின் தனதறை கண்ணாடி வழியே பார்த்திருந்தான் மேகன்.
கைப்பேசியை எடுத்து அவளுக்கு அழைத்த வண்ணம் பார்வையை நகர்த்தாமல் இவன் நிற்க அங்கு விடியலோ புது எண்ணாய் இருந்ததில் யோசனையோடு நின்றிருந்தாள்.
அதற்குள் அழைப்பு நின்றிருக்க பிக் அப் தி கால் என்ற மெசெஜ் வர அன்று Hi என வந்திருந்த அதே எண்ணாய் இருந்ததில் புருவம் சுருக்கியவள் அடுத்த அழைப்பை ஏற்றிருந்தாள்.
“ஹு இஸ் திஸ்?”
“ஹாய் விடியல்..”, என்ற அந்த ஆளுமையான குரலில் மெலிதான தடுமாற்றம் அவளிடத்தில்.
அவளது ஒவ்வொரு முக பாவனைகளையும் கவனித்த வண்ணம் அவளது பதிலுக்கு காத்திருந்தான்.
“ஹாய் யாரு பேசுறீங்க?”
“ஐ அம் மேகன். நியாபகம் வைச்சுருப்பீங்கனு நினைச்சேன்.”
“ஹே ஹாய் சாரி சட்டுனு மைண்ட்க்கு வரலை. எப்படியிருக்கீங்க மேகன்?”, என்ற போது அவள் முகத்தில் இருந்த புன்னகையை இன்னும் அருகில் பார்க்க ஆவல் எழுந்தது.
“கேன் வி ஹவ் அ காபி?”
“நீங்க இங்கே இருக்கீங்களா?”, என்றவள் சுற்றும் முற்றும் தேடினாள்.
“உனக்கு டைம் இருந்தா கம் டு ஃபோர்த் ப்ளோர்.”, என்றவன் அழைப்பைத் துண்டித்திருக்க கைப்பேசியையும் சுற்றத்தையும் பார்த்தவளின் முகம் யோசனையில் இருந்தது.
கைப்பேசியில் யாருக்கோ அழைப்பது தெரிந்தது அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்து நின்ற விஜயைப் பார்த்தவனின் புருவங்கள் பிடித்தமின்மையில் முடிச்சிட்டன.
எதோ பேசி விட்டு அவள் எஸ்கலேட்டரில் நகர விஜய் கீழ் தளத்திற்கு செல்வது தெரிந்தது.
அவனது வலது கை பார்த்தியிடம் கூறி அவளை உள்ளே அழைத்து வருமாறு கூற எஸ்கலேட்டர் நான்காவது தளத்தில் அடையும் நேரம் பார்த்தி அவளுக்காக அதன் அருகிலேயே நின்றிருந்தான்.
“இந்தப் பக்கம் மேம்..”, என்றதில் அவனுக்கு புன்னகையை பதிலளித்தவள் அவனோடு சென்றாள்.
அலுவலக அறை போன்ற அமைப்பில் இருந்த உள் அறையின் கதவைக் கை காட்டியவன் கதவையும் திறந்து விட உள்ளே சென்றவளை எதிர்பார்த்த படி வாசலுக்கு எதிரே இருந்த தனது சுழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் மேகன்.
“ஹாய் மேகன், எப்படியிருக்கீங்க?”
“டூயிங் குட். நீ?”
“நல்லாயிருக்கேன்.”, என்றவளுக்கு இருக்கையை கை காட்ட தனது கைப்பையை பக்கத்து இருக்கையில் வைத்து விட்டு அமர்ந்த வண்ணம் சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றினாள்.
“நீங்க இங்கே எப்படி?”
“ஆர் யூ ஜோக்கிங்?”
“இல்ல.. ஏன்? ஓ சாரி இது உங்க ப்ராப்பர்ட்டி தானா?”, என்றதற்கு விழி மூடித் திறந்து மென்னகைத்தான்.
அதற்குள் இருவருக்குமான காபியை பார்த்திபன் வைத்து விட்டுச் செல்ல எடுத்துக் கொள்ளுமாறு கை காட்டினன்.
“மெசெஜ் கால் எல்லாம் பண்ணினால் ரிப்ளை பண்ண மாட்டியா?”
“அது அப்படியில்ல.. இது என்னோட பர்சனல் நம்பர் பொதுவா இதுக்கு அன்னோன் நம்பர்ஸில் இருந்து எந்தக் காலும் வராது.”
“..”
“சோ வர்ற ஒண்ணு ரெண்டும் ஸ்பேம்மா இருக்கும்னு அவாயிட் பண்ணிடுவேன். அப்படி தான் உங்க மெசெஜும்..”, என்றவள் மூக்கை சுருக்கி புன்னகைத்தாள்.
“சோ மிஸ் விடியல் இளங்கோ அ யங் பிஸினஸ் வுமன். இம்ரஸிவ்..”
“உங்க பிரதர்ஸ் சொன்னாங்களா.. அது அப்போவோட ட்ரீம் நான் வெறும் சூப்பர்வைசர் தான்.”
“அப்படியா? நான் வேற மாதிரி கேள்வி பட்டேனே?!”
“?!”
“பிசினஸ்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்னு..”
“அதை சொல்றீங்களா? அதென்னவோ காலேஜ் படிக்கும் போது ஒரு தாட் யாரோ ஒருத்தருக்காக மாசம் முழுசும் வேலைப் பார்க்க தயாரா இருக்குற நாம ஏன் நம்ம தொழில்காக வேலை பார்க்க கூடாதுனு.”
“!!”
“சோ கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டேன் ரொம்வே பிடிச்சு போச்சு.”
“…”
“ஆமா நான் இன்டர்வூயூ எதுக்கும் வந்துருக்கேனா?”
“ஏன்?”
“இல்ல அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி என்னைப் பத்தி தான் கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. நீங்க எதுவும் பேச மாட்றீங்களே..”
“நான் பேசலைனால் என்ன? மென்டலிஸ்ட் Vக்கு என் மைண்டில் என்ன இருக்குனு கண்டுபிடிக்குறது என்ன கஷ்டமா?”
“ஹே நோ நோ நான் அப்டியெல்லாம் பண்ண மாட்டேன். அது ஜஸ்ட் அ பார்ட் ஆப் மை லைப்.. அதுக்காக..”
“கூல்.. சரி சொல்லு விடியல் உனக்கும் விஜய்க்கும் நடுவில் என்ன?”
அந்தக் கேள்வியில் ஒரு நொடி அவன் என்ன சொல்கிறான் என்பதே புரியாமல் இருந்தவள் அடுத்த நொடியே அவன் பார்வையில் இருந்த அர்த்தம் புரிந்ததும் நாற்காலியைப் பின்னால் தள்ளி எழுந்திருந்தாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
9 comments
Eagerly waiting for next ud ma
அட கெரகமே….இந்த பேச்சு இப்போதேவையா…
Serial ku script writer aaga poringala…
Thodarum arumaiyaa podringale
மறைமுகமா கட்டிடத்தை வாங்கலாம்
மறைமுகமாய் விடியலின்
மனதை வாங்க முடியாது
மேகன் சார்…..
மேகத்தை முறைத்த விடியல்… 🔥🔥🔥
சீக்கிரம் மலர செய்ய வேண்டும்
அதற்குள் இடி மின்னல் சூறாவளி எல்லாம் வருமே மேகமே 😂😂😂…..
Nice ❤️😘😘😘😘
இவன் தான் அந்த பில்ட்ங் owner அத விற்க காரணமா 😏😏🤔🤔🤔
இப்போ உனக்கு அது கண்டிப்பா தெரியனுமா மேக் 😏😏😏
விடியல் 😍😍😍🤗🤗🤗😘😘
நைஸ் 🤩🤩🤩
Nice
Super💕
Thambi thappu vangi kattika pora po