வரம்-21

by ஸ்ரீ
0 comments 92 views
A+A-
Reset

அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்

விளக்கம்
கனமான அம்மியை துணையாகக் கொண்டு ஆற்றில் இறங்கினால் அது நம்மை மூழ்கச்செய்து விடும், அது போல் அழகான மார்பகங்களைக் கொண்டு நம்மை மயக்கும் வேசியுடன் கொண்ட உறவு.

அந்த உறவு இந்த பிறவிக்கும் அடுத்து வரும் பிறவிக்கும் நல்லது இல்லை. நம்மிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் பறித்து நம்மை ஒன்றும் இல்லாத வறுமை நிலைக்கு தள்ளி, நீங்காத துன்பத்தில் ஆழ்த்தி விடும்.

இரவு அன்புவும் வந்துவிட உணவை முடித்து சிறியவர்கள் அனைவருமாய் மொட்டை மாடிக்குச் சென்றனர்.

“இன்பா சார் ஃப்ரெண்டை எல்லாம் பார்த்தாச்சா..”

“ஆங்…அது வந்து பார்த்தாச்சு அண்ணி”,என்றவன் கெஞ்சுதலாய் காயத்ரியைப் பார்த்துவிட்டு தேன்மொழியைப் பார்த்து முறைத்தான்.

“அங்க என்ன லுக்கு தம்பி..”

“என்ன டா நடக்குது இங்க??”

“ஹி ஹி சும்மா அன்பு..”,என்றவள் அசடு வழிந்து சிரித்ததிலேயே அவளைச் சந்தேகப்பட்டான் அன்பு.

“ஐயோ என் புருஷன் ஸ்மெல் பண்ணிட்டான்.நிஜமாவே ஒண்ணுமில்லை மை லார்ட்..”,என்றவளை பின்னந்தலையில் தட்டினான்.

“அண்ணி அபிக்கு உங்க கதையை உங்க வாயால கேட்கணுமாம்..”

“ஹா ஹா ஏன் டா அபி உனக்கு இப்படி ஒரு ஆசை..”,என்ற அன்புவின் பேச்சு அத்தனை வாஞ்சையாய் இருந்தது.

“இல்ல அத்தான் இதெல்லாம் படத்துல தான் பார்த்துருக்கேன்..அது கூட பையன் தான் இதெல்லாம் பண்ணுவான்..”,என்றவள் காயத்ரியைப் பார்க்க அவளைப் பார்த்து கண்சிமிட்டியவளாய்

“இந்த சொசைட்டி போட்டு வைச்சுருக்குற பிம்பம் அப்படி அபி..காதல்ங்கிறது எல்லாருக்கும் ஒண்ணுதான்.ஆனால் பொண்ணுங்களுக்கான கட்டுப்பாடுகள்னு நிறைய இருக்கு.

இப்படிதான் சிரிக்கணும் இப்படி தான் பேசணும் இப்படியெல்லாம் பண்ணக் கூடாது.ஆம்பளை மாதிரி நடக்காத இப்படி இன்னும் என்னென்னவோ..

சோ ஒரு கட்டத்தில் பசங்க பண்றதெல்லாம் நாங்களும் பண்ணுவோம்னு எங்கேயோ ஆரம்பிச்ச ஒரு நல்ல விஷயம் இப்போ எதை நோக்கியோ போயிட்டு இருக்கு..

ஒரு பையன் சைட் அடிக்கலாம் ஒரு பொண்ணை தன்னோட க்ரஷ்னு சொல்லிட்டு சுத்தலாம் அவனுக்கு காதல் வரலாம் பொண்ணை விரட்டி விரட்டி காதலிக்கலாம்.அதுக்கெல்லாம் பொண்ணு வெட்கப்பட்டுட்டே இருக்கணும்.இதான் பேசிக் டெம்லேட்..

இதையே ஒரு பொண்ணு பண்ணிணா அவளுக்கு ஒரு பேர் வைச்சு முத்திரை பதிச்சு கரெக்டர் அசசிணேட் பண்ண வேண்டியது.

குடும்பத்தோட மானம் கௌரவம் இப்படி எல்லாமே பொண்ணு தலையில் தான் இருக்குனு நம்ப வைச்சு அவங்களை அவங்களுக்காக யோசிக்கவே விடாம ஆக்கி வைச்சுட்டாங்க..

எனக்கு என்ன வேணும்னு எனக்கு தான தெரியும்.அதை நான் வாயை திறந்து சொல்லாம மத்தவங்க எப்படி புரிஞ்சுப்பாங்க..என்னை நானே பார்த்துப்பேன்.எனக்கு நல்லது கெட்டதை நானே தீர்மானிக்குறேன்..இதுல யாருக்கு என்ன பிரச்சனை வந்துரப் போகுதுனு சின்ன வயசிலேயே தோணும்.

அதுவுமில்லாம நான் ஒரே பொண்ணு சோ வீட்டில் நான் சொல்றது மட்டும் தான் நடக்கும்.

காதல்னா என்னோட பர்ஸ்ட் இம்ப்ரஷன் அப்பா அம்மா தான்.இந்த உலகத்துலேயே சந்தோஷமானவங்க அவங்க தான்ங்கிற மாதிரி தான் வாழ்ந்தாங்க..

சோ அப்படி ஒரு லைப் தான் எனக்கும் வேணும்னு நினைச்சுப்பேன்.அன்பு காலேஜ்ல ஜாயின் பண்ண அப்பறம் சாதாரணமா ஆரம்பிச்ச ஃப்ரெண்ட்ஷிப் தான் எங்களோடது.

பட் எங்க வேவ் லென்த் செட் ஆனதுல நல்லா பேசிக்குற அளவு ஒரு கம்ஃப்போர்ட் சோன் இருந்தது.அவனோட நிதானம் தான் எனக்கு பதிஞ்ச முதல் விஷயம்.ரொம்ப காம் அண்ட் கம்போஸ்டா இருப்பான்.

தேவையில்லாம யாருகிட்டேயும் பேச மாட்டான்.எல்லாத்தையும் விட பொண்ணுங்களை ரொம்பவே மதிச்சு நடப்பான்.இது கேட்க சாதாரண விஷயமா இருக்கலாம்.பட் பசங்க விளையாட்டா பாஸ் பண்ற கமெண்ட்ல கூட அவங்களோட அடி மனசின் எண்ணங்கள் வெளிப்படும்.

சோ எப்போ எப்படினே தெரியாம எனக்குள்ள ஜம்னு வந்து உட்காந்துகிட்டான்”,என்றவள் அன்புவைப் பார்க்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையின் அர்த்தம் மற்றவர்களுக்கு சாதாரணமாய் தெரிந்தாலும் காயத்ரிக்கு புரிந்தது.

“ஆனாலும் காதலை சொல்ல தைரியமே வரலை.அவன் கண்டிப்பா நோ தான் சொல்லுவான்னு என.கே தெரியும் ஆனாலும் அதை அவன் வாயால கேட்குறதுக்கு பயம்.காலேஜோட கடைசி நாள் தான் சொன்னேன் நோ சொன்னான் சரினு கிளம்பி போயிட்டேன்.

அப்பறம் வேலை சென்னை வாழ்க்கைனு அப்படியே போச்சு.முதல் தடவையா அப்பா கல்யாண பேச்சை எடுத்தப்போ எதோ ரொம்ப கொடுமையா இருந்துச்சு.அன்பு இடத்தில் இன்னொருத்தன்னு நினைக்கவே பிடிக்கல.

அப்படி இப்படினு காரணத்தைச் சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டேன்.அன்புவைப் பத்தி எல்லா விவரமும் தெரிஞ்சுகிட்டேன்.அவனுக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா என்ன பண்றதுனு ரொம்ப யோசிச்சேன்.சரி என்ன நடக்கணுமோ நடக்கட்டும்னு விட்டுட்டேன்.

ஏனோ திரும்பவும் அவன்கிட்ட பேசி மறுத்துட்டா இன்னமும் கஷ்டமா இருக்கும்னு அமைதியாவே இருந்துட்டேன்.

ஒரு அக்ஸிடெண்ட்ல அல்மோஸ்ட் போய் சேர்ந்துடுவேன்ங்கிற நிலைமை..”

“அண்ணி!!!”

“ஹே நத்திங்..அப்போ அம்புலன்ஸ்ல என்னை ஏத்தும் போது ஒரே ஒரு தடவை இவனைப் பார்த்து இவன் குரலையும் கேட்க மாட்டோமானு ஒரு எண்ணம்.இவனோட வாழாமேயே போயிடுவோமோனு ஒரு பயம்..”

“…..”

“அதில் இருந்து ரெக்கவர் ஆன அடுத்த நாளே டிரான்ஸ்வர் கேட்டு இங்க வந்துட்டேன்.இவன் நோ சொன்னா தூக்கிட்டு போய் தாலி கட்ட வைக்கலாம்னு நினைச்சேன்..ப்ச்ச் பயபுள்ளை ஓகே சொல்லிருச்சு..”,என்றவளை அத்தனை பேருமே பிரம்மிப்பாய் பார்த்திருந்தனர்.

“இவளோட அக்ஸிடெண்ட் தவிர எல்லாமே தெரிரிஞ்ச அப்பறம் எப்படி நோ சொல்ல முடியும்..நம்ம காதலிக்குறதை விட நம்மளை ஒருத்தங்க காதலிக்குறாங்கங்கிறது ரொம்ப அழகான விஷயம்னு அன்னைக்கு புரிஞ்சுது.”,என்றவன் காயத்ரியின் தலையைப் பிடித்து அசைத்துச் சிரித்தான்.

“அக்கா உங்களை மாதிரி எல்லாம் பொண்ணுங்க இருக்காங்களா என்ன..ஆனால் எனக்கும் உங்களை மாதிரி தைரியமா இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு..”

“ஆமா அபி அண்ணி நானும் சொல்லிருக்கேன்.நாம இரண்டு பேருக்கும் இவங்க தைரியத்தில் பாதி வந்தா கூட நல்லாயிருக்கும்”,என்று தேன்மொழி கூற அபிநயா அதை ஆமோதித்தாள்.

“அதெல்லாம் எல்லாருக்கும் அவங்களுக்கு உள்ளே இயற்கையாகவே இருக்கும்.உங்களுக்கான சூழ்நிலைக்கு அது தேவைப்படும் போது கண்டிப்பா வெளிப்படும்..மத்தபடி நீங்க இப்படி இருக்குறது ரொம்பவே க்யூட் தான்.”,என்றவள் மேலும் சில நொடிகள் பேசிவிட்டு அனைவருமாய் தூங்குவதற்கு கிளம்பினர்.

அறைக்குள் நுழைந்தும் ஆனந்தன் உடைமாற்றாமல் அமர்ந்திருப்பதை பார்த்த அபிநயா என்னவென்று கேட்க சரியாய் அறைக் கதவு தட்டப்பட்டது.

மனைவியைப் பார்த்து புன்னகைத்தவாறே கதவைத் திறக்க அன்பு போலாம் என்பதாய் சைகை செய்தான்.

“என்னாச்சுங்க?!”

“ஐஸ்கீரீம் சாப்பிட போலாமா?”,என்றவன் சிரிக்க அபிநயாவோ,

“என்னது இந்த நேரத்துலேயா?!!”

“ஹா ஹா ஆமா இவங்க ரெண்டு பேரும் அடிக்கடி இதைப் பண்ணுவாங்களாம்.நீ வந்தவுடனே கூட்டிட்டு போணும்னு அண்ணி சொன்னாங்களாம்.வா போலாம்..”

“அன்பு அத்தான் இதெல்லாமா பண்றாங்க?”

“சேர்க்கை அப்படி..ஹா ஹா வா எனக்கே சிரிப்பா இருக்கு..”,என்றவன் சத்தம் எழுப்பாமல் அபிநயாவோடு சேர்ந்து கீழே இறங்கினான்.

ஆண்கள் இருவரும் தங்கள் பைக்கை சத்தமில்லாமல் வெளியே தள்ளிச் செல்ல காயத்ரி மெதுவாய் வெளிக் கதவைச் சாற்றினாள்.

“என்னக்கா இதெல்லாம்??!!”

“உனக்காக கதவை எல்லாம் திறந்துருக்கேன்.நாங்க இரண்டு பேரும்னா சுவரேறி குதிச்சு தான் போவோம்.நீ பேசவே காசு கேட்ப அப்பறம் எங்க இருந்து எகிறி குதிக்குறது..”,என்றவளைப் பாவமாய் பார்த்தவள்,

“சொந்த வீட்லேயே திருடன் மாதிரி..அத்தை மாமா எழுந்தா என்ன ஆகுறது!!”

“இதெல்லாம் ஒரு ஜாலி தான்..கல்யாணத்துக்கு முன்னாடி அன்புவை பார்க்கணும்னு இப்படி பண்ணது.கல்யாணதுக்கு அப்பறம் அவன் தான் ஆரம்பிச்சு வைச்சுட்டான்..ஹா ஹா வா மாட்டினா பார்த்துக்கலாம்..”,என்றபடி இருவருமாய் அவரவர் பைக்கில் ஏறிக் கொண்டனர்.

அபிநயாவிற்கு அத்தனை பிடித்தது இதெல்லாம்.மனமெல்லாம் ஒருவித உற்சாகம் படபடப்பென ஏதோ ஒரு மாய உலகில் சஞ்சரிப்பதாய் ஒரு உணர்வு.அதே எண்ணத்தில் ஆனந்தனை பின்னிருந்து இறுக அணைத்துக் கொண்டாள்.

“அபி ஓகே தான?”

“லவ் யூங்க…”

“ஹாங்…பெரிய சர்ப்ரைஸ் இதுதான்..லவ் யூ அபிம்மா..”

“வாழ்க்கை இவ்வளவு அழகுனு தெரியாமலேயே இருந்துருக்கேன்.தேங்க் யூ ஃபார் எவ்ரிதிங்..”

“இனி ஹேப்பியா மட்டும் தான் இருக்கணும்.என்ஜாய் எவ்ரி மொமெண்ட்..”,என்றவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

அபிநயா வந்தபின் காயத்ரிக்கு இன்னுமே ஒரு நட்பு போல் ஆகிப் போக குழந்தைப் பற்றிய கவலையைக் கூட தூரத் தள்ளியிருந்தாள்.

அவரவர் இயல்பிற்கு நாட்கள் நகர அன்று காயத்ரி வரும் போதே ஹாலில் பேச்சு சத்தமாய் இருந்தது.அதிசயமாய் அபிநயாவும் அந்நேரம் வீட்டில் இருந்தாள்.

“ஹே டாக்டரம்மா என்ன அதுக்குள்ள வந்தாச்சு இன்னைக்கு?”

“காயூ சந்தோஷமான விஷயம் அபி கன்சீவா இருக்கா டா..”,என்றபடி ராகினி இனிப்பை அவளுக்குக் கொடுக்க காயத்ரியோ உச்சகட்ட மகிழ்ச்சியில் அபியை கட்டிக் கொண்டாள்.

“ஹே வழ்த்துக்கள் அபி..தம்பி கங்க்ராட்ஸ்..”

அவர்கள் இருவருக்குமே விஷயம் தெரிந்த பின் எந்தளவு மகிழ்ச்சி இருந்ததோ அதே அளவு காயத்ரியையும் அன்புவையும் நினைத்து கவலையும் எழுந்தது.

ஆனால் இப்போது காயத்ரியின் உற்சாகத்தைப் பார்த்தவர்களுக்கு அவளை இன்னுமாய் பிடித்தது.

“ரொம்ப ரொம்ப சந்தோஷம் அன்புக்கு தெரிஞ்சா இன்னும் சந்தோஷப்படுவான்.”

ராகினிக்கும் ராகவனுக்கும் பொறாமையோ காழ்புணர்வோ இ ல்லாத தன் பெரிய மருமகளை நினைத்துப் பெருமையாய் இருக்கும் அதே நேரம் அவளுக்கும் ஒரு நல்லது நடக்கக் கூடாதா என்று வருந்தாமல் இருக்க முடியவில்லை.

காயத்ரிக்காக மனமாற கடவுளை வேண்டி நின்றனர் அந்த பாசமிகு மாமனாரும் மாமியாரும்.இரவு வந்த அன்புவிற்கும் அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது.அறைக்குள் வந்ததும் காயத்ரியை பார்த்தவனுக்கு அவளின் இயல்பு சற்றே நிம்மதியாய் இருந்தது.

“சின்னதுங்க இரண்டும் இங்கேயே போஸ்டிங் வாங்கியாச்சு அபி அதைவிட சூப்பரானா நியூஸ் சொல்லிருக்கா..இருந்த டென்ஷன் எல்லாம் போய் செம ஹேப்பி மோட் டா இன்னைக்கு..”

“ம்ம் கண்மணி..”

“என்னடா??”

“மனசுக்குள்ளேயே வைச்சுக்காத எதையும்!”

“ஹே ச்ச ச்ச என்னடா பேச்சுக்கு சொல்லல தம்பினு..அவங்களுக்கு நடக்கப் போற நல்லதுக்கு போய் வருத்தப்படுவேனா என்ன அன்பு நீ?!”

“லூசு அப்படி  மீன் பண்ணல..”

“புரியுது டா..அதெல்லாம் நான் நினைக்குறதா இல்லை..இப்போதைக்கு பெரியம்மா போஸ்டிங்க்கு வெயிட் பண்றேன்..”,என்றவள் விரிந்த புன்னகையோடு அவனை அணைத்துக் கொண்டாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode