வரம்-15

by ஸ்ரீ
0 comments 101 views
A+A-
Reset

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

விளக்கம்
நல்ல குடியில் பிறந்தவர்கள் வயிறு வளர்பதற்காக அடுத்தவரை அண்டி, அவரை புகழ்ந்து பிச்சை வாங்கி வாழ்வது சீச்சீ என்று கூறும் அளவிற்கு இழிவான செயலாகும். இப்படி மானம் விட்டு உயிர் வாழ்வதை விட இறப்பது மேல்.

பத்து மாதங்கள் கடந்த நிலையில் ஆனந்தனிற்கு ஒரு வரன் வந்திருந்தது.ஜாதகமும் பொருந்திப் போக பெண்ணும் மருத்துவர் என்பதால் அனைத்தும் திருப்தியாய் இருந்தது.

அந்த ஞாயிற்றுக் கிழமை பெண் பார்க்க வருவதாய் ராகவன் செய்தி அனுப்பியிருந்தார்.கிட்டத்தட்ட நிச்சயத் தேதி குறிக்கும் அளவில் முடிவாகியிருந்ததால் குடும்பம் மொத்தமுமே செல்வதாய் ஏற்பாடாகியிருந்தது.

“என்ன அன்பு,தம்பி விருப்பம் என்னனு கேட்க வேண்டாமா?”

“அதான் பிடிச்சுருக்குனு சொல்லிட்டானே டி..”

“என்ன டா நீயே இப்படி சொல்ற..ஒருதடவை நேர்ல பார்க்க வேண்டாமா?இரண்டு பேரும் படிச்சவங்க,அவங்களோட விருப்பு வெறுப்பையும் நாமளே முடிவு பண்ணினா எப்படி?!”

“நீ சொல்றதும் சரி தான்.சரி நீ போய் அவன்கிட்ட பேசு நான் நைட் வந்து பேசுறேன்.”,என்றவன் நெற்றியில் இதழ் பதித்து கிளம்பியிருந்தான்.

“தம்பி..”

“வாங்க அண்ணி..”

“சும்மா பேசலாமேனு வந்தேன்..தொந்தரவு பண்ணிடலையே?”

“என்ன இப்படியெல்லாம் கேட்குறீங்க..வாங்க அண்ணி.”

“அது..”

“எதுவாயிருந்தாலும் சொல்லுங்க அண்ணி..”

“பொண்ணை உங்களுக்குப் பிடிச்சுருக்கு தான?அப்பா அம்மா சொல்றாங்களேனு அவசரபட வேண்டாம்.நீங்க பேசிப் பார்க்குறீங்களா?”,தயக்கமாய் கேட்டவளைப் பார்த்தவனின் முகம் புன்னகையைத் தாங்கியிருந்தது.

“அது..அண்ணி..”

“இல்ல அரேண்ஞ்ட் மேரேஜ் பத்தி சத்தியமா எனக்கு ஐடியா இல்ல..இருந்தாலும் போட்டோ மட்டுமே பார்த்து ஓகே சொல்றதெல்லாம் எப்படினு தெரியலையே..அதான் உங்க அண்ணன்கிட்ட கேட்டுட்டு உங்ககிட்ட பேசிட்டு போலாம்னு வந்தேன்.”

“அண்ணி ரொம்ப தேங்க்ஸ்..எனக்காக யோசிக்குறதுக்கு..எனக்குமே ஒரு தடவை பேசிப் பார்க்கலாமோனு எண்ணம் தான்.ஆனால் எப்படி சொல்றதுனு தெரியல அதனால விட்டுட்டேன்.”

“!!”

“இல்ல அப்பா அம்மா எப்படி எடுத்துப்பாங்களோனு..அதுக்கும் மேல பொண்ணு வீட்ல என்ன சொல்லுவாங்கனு தெரிலையே.அந்தப் பொண்ணும் இதுவரை பேச முயற்சி பண்ணல..அதான் அண்ணி..”

“புரியுது தம்பி..சரி நான் அந்த பொண்ணு நம்பர் வாங்குறேன் பேசிப் பார்ப்போம்.”

“எதுவும் ப்ராப்ளம் ஆகிடப் போகுது அண்ணி..”

“ஒண்ணும் பிரச்னையில்ல..வீட்டுக்குத் தெரியாம தான் பண்ணுவேன்.நான் ஈவ்னிங் டிடெயில்ஸ் சொல்றேன் வரட்டுமா..”

“அகெயின் தேங்க்ஸ் அண்ணி”,என்றவனைப் பார்த்து புன்னகைத்து நகர்ந்தாள்.

அலுவலகத்திற்கு வந்தவள் முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு அப்பெண்ணின் மருத்துவமனை நோக்கி கிளம்பியிருந்தாள்.

அது ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் யூனிபார்மில் வந்தவளை அத்தனை கண்களும் வட்டமிட ரிசெப்ஷனிஸ்டிடம் சென்றவள்,

“டாக்டர் அபிநயாவை பார்க்கணுமே..”

“மேம்..எதுவும்?!”

“இல்ல இல்ல..அவங்க என் ப்ரெண்ட்…பர்சனலா மீட் பண்ணணும்.”

“ஓ ஓகே மேம் நீங்க வெயிட் பண்ணுங்க நான் வர சொல்றேன்.”,என்றவள் இன்டர்காமில் அழைத்து விஷயத்தைக் கூறினாள்.

சில நிமிடங்களில் அழகிய காட்டன் சுடிதாரில் அங்கு வந்த பெண் யார் தன்னை பார்க்க வந்திருப்பது என்று விசாரிக்க அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த காயத்ரியைப் பார்த்து யோசனையாய் சென்றாள்.

“எக்ஸ்க்யூஸ் மி மேம்!”

“ஹான்..ஹே ஹாய் அபிநயா..”

“ஹாய்…நீங்க..!?”

“நான் காயத்ரி.ஆனந்தனோட அண்ணி”,என்றதும் அபிநயாவின் முகத்தில் ஆச்சரியம் வந்திருந்தது.

“நீங்க ப்ரீயா ஒரு டூ மினிட்ஸ் பேசலாமா?”

“ஷுவர் ஷுவர் வாங்க கேன்டீன் போலாம்.”

இருவருக்குமாய் டீ வாங்கியபடி வந்தமர்ந்தவளின் முகத்தில் சிறு பதட்டம் இருந்ததாய் தோன்றியது காயத்ரிக்கு.

“ரிலாக்ஸ்..நான் ஜஸ்ட் ஒரு ஹாய் சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்..அதுவும் வீட்ல யாருக்கும் தெரியாது.”

“ஓ..”

“சோ சண்டே நாங்க எல்லாம் உங்க வீட்டுக்கு வரோம்னு தெரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்.”

“ம்ம் அப்பா சொன்னார்.”

“உங்களுக்கு சம்மதம் தானா?பையன்கிட்ட பேசணும்னு எல்லாம் தோணலையா?”

“அது..வீட்ல கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்..என்ன தான் டாக்டரா இருந்தாலும் வீட்டுக்குள்ள நானும் சராசரி பொண்ணு தான்.அதுவுமில்லாம என்னோட ஒப்பினியன்னு யாரும் கேட்கல..போட்டோ காட்டினாங்க அவ்வளவுதான்.”

“ஆனந்தன் உங்ககிட்ட பேச விருப்பப்படுறார்.பேசுறீங்களா?”

“ஐயோ வீட்டுக்குத் தெரிஞ்சா?!”

“என்ன இப்படி பயபடுறீங்க..டோன்ட் வொரி வீட்டில் எல்லாம் சொல்ல வேண்டாம்.இப்போ நீங்க ப்ரீனா பக்கத்துல காபி ஷாப் எங்கேயாவது போலாமா?”

“!!!”

“என்னாச்சு எதுவாயிருந்தாலும் சொல்லுங்க..”

“கொஞ்சம் பயமாயிருக்கு.”

“கவலைப்படாதீங்க..நான் உங்க கூடவே இருக்கேன்..ஓகே?”

“ம்ம் சரி..”,என்றதும் ஆனந்தனுக்கும் அன்புவிற்கும் அழைத்தவள் இருவரையும் அந்த காபி ஷாபிற்கு வரும்படி கூறினாள்.

அடுத்த இருபது நிமிடத்தில் ஆண்கள் இருவரும் வந்திருக்க காயத்ரி இருவருக்குமாய் அறிமுகப் படலத்தை முடித்து அன்புச் செல்வனோடு சேர்ந்து பக்கத்து மேசைக்குச் சென்றிருந்தாள்

“காயூ..தேவையில்லாத வேலை பாக்குறோமோ?பொண்ணோட அப்பா வேற கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்னு கேள்வி பட்டேன்.”

“என்ன அன்பு..”

“இல்ல டி யாரும் உன்னை எதுவும் சொல்லிட போறாங்களேனு இருக்கு..”

“அட விடு பார்த்துக்கலாம்.”,என்றவள் கண்சிமிட்டிச் சிரிக்க அன்புச் செல்வனும் சிரிப்பில் கலந்து கொண்டான்.

“ஹாய் அபிநயா..”

“ஹாய்ங்க..”

“சாரி நான் அண்ணி போன் நம்பர் தான் வாங்கி தருவாங்கனு நினைச்சேன்.பட் நேர்ல மீட் பண்ணுவோம்னு நினைக்கல..”

“அதெல்லாம் பரவாயில்ல..நீங்க எதோ பேசணும்னு உங்க அண்ணி சொன்னாங்க..”

“உங்களுக்கு அப்போ கேட்குறதுக்கு ஒண்ணும் இல்லையா?!”

“அது…”

“என்னைப் பத்தியும் என் குடும்பம் பத்தியும் உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்.எனக்கு உங்களை பிடிச்சுருக்கு.நான் கேட்க நினைச்சது ஒரே ஒரு விஷயம் தான்.”

“என்னனு சொல்லுங்க?”

“கல்யாணத்துக்கு அப்பறம் கண்டிப்பா ஜாயின் பேமிலியா தான் இருக்கணும்.அது உங்களுக்கு செட் ஆகுமானு யோசிச்சுட்டு உங்க முடிவை சொல்லுங்க. மத்தபடி நான் கண்டிப்பா உங்களை நல்லா பார்த்துப்பேன்.. நம்பலாம்.”,என்றவனை நோக்கி நொடிப்பார்வை பார்த்துவிட்டு குனிந்து கொண்டாள்.

“எனக்கும் உங்களை கல்யாணம் பண்ணிக்குறதில் விருப்பம் தான்.ஜாயிண்ட் பேமிலி எல்லாம் பிரச்சனையில்லை.நாங்களும் பெரிய குடும்பம் தான்.அப்பா சித்தப்பா எல்லாம் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்.

உங்ககிட்ட பேசணும்னு எல்லாம் சொல்லிருந்தா பெரிய பிரச்சனை ஆகிருக்கும்.அதனால தான் நான் எதுவும் கேட்கல.”

“ம்ம்..”,என்றவன் புன்னகைக்க சிநேகமாய் புன்னகைத்தவள் கண்கள் பக்கத்து மேசையைத் தழுவியது.

“உங்க அண்ணா அண்ணி ரொம்ப ஸ்வீட்..”

“ஆமா..அவங்க ரொம்ப பெஸ்ட் கப்பிள்.லவ் மேரேஜ் அவங்களோடது.”

“ஓ!உங்களை பேசக் கூட விடல..அப்பறம் எப்படி அவங்க கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க?!”

“லவ்னு வந்தப்பறம் வேற பேசுறதுக்கு ஒண்ணுமில்லையே அதான்.அதுவுமில்லாம அவங்க இரண்டு பேரோட அன்பை பார்த்தா யாருக்குதான் வேண்டாம்னு சொல்ல தோணும்.

கல்யாணத்துக்கு அப்பறம் நாமளும் அவங்களை மாதிரி  பிடிச்சு புரிஞ்சு வாழ்க்கையை வாழணும்னு ஆசைப்படுறேன்”,என்றவனின் ஆழ்ந்த குரலில் முகம் சிவந்து விட்டிருந்தது அபிநயாவிற்கு.

அதன்பின் சில நிமிடங்கள் நால்வருமாய் பேசிவிட்டு கிளம்பியிருக்க ஆனந்தனின் மகிழ்ச்சி ததும்பும் முகமே அன்புச் செல்வனிற்கு திருப்தியாய் இருந்தது.

ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே ராகவன் குடும்பமாய் அபிநயாவின் வீட்டிற்கு கிளம்பியிருந்தனர்.

பெரியவர்கள் பேசி முடித்து ஒரு மாதத்தில் நிச்சயத் தேதியும் நான்கு மாதங்கள் கழித்த முகூர்த்தத்தில் திருமணமும் என குறித்த பின்னரே அபிநயா அழைத்து வரப்பட்டாள்.யாரையும் தெரிந்தது போன்று காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாய் ஆனந்தனின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

பூ வைத்து உறுதிப்டுத்திய பின் அனைவரும் மதிய உணவிற்காக அமர்த்தப்பட்டனர்.காயத்ரி பெரிதாய் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை எனினும் ஒதுக்கம் காட்டாது கேட்டதற்கு பதில் கொடுத்த வண்ணம் இருந்தாள்.

“நான் அபிநயாக்கு அத்தை முறை கண்ணு..”

“ஓ அப்படிங்களா?”

“நீ போலீசுல இருக்குறதா கேள்விப்பட்டனே உண்மையா?”

“ம்ம் ஆமா”

“மொத மருமக போலீஸு அடுத்த மருமக டாக்டரு சம்மந்தி சூப்பரு போங்க..”,என்று கூற அனைவருமாய் புன்னகைத்தனர்.

“ஏங்கண்ணு உனக்கு கல்யாணம் ஆகி நாள் இருக்குமே..இன்னுமும் நல்ல சேதி எதுவும் இல்லையா?”,என்று பட்டென கேட்டுவிட காயத்ரிக்கு முகம் வாடிவிட்டது.

அதைக் கவனித்தவனாய் அன்பு அவள் வாய் திறக்கும் முன்,”கொஞ்ச நாள் போகட்டும்னு இருக்கோம்.”,என்று புன்னகையோடு முடித்துக் கொண்டான்.

“இந்த காலத்து பிள்ளைகளே இப்படிதான்..காலாகாலத்துல நடக்க வேண்டியதெல்லாம் குறைவில்லாம நடக்கோணும்.நாங்க எல்லாம் கால நேரம் பார்த்தா புள்ளை பெத்து வளர்த்தோம்.”,என்று சாதாரணமாய் கூறிவிட்டு வேறு பேச்சைத் தொடங்கியிருக்க காயத்ரி அதன் பின் வாயே திறக்கவில்லை.

அன்பிற்கும் வந்த இடத்தில் எதுவும் சொல்ல முடியாத நிலை.அமைதியாய் இருந்தாலும் பார்வையால் தன்னவளைத் தான் தேற்றிக் கொண்டிருந்தான்.

சாப்பாடு முடித்து சிறிது நேரம் பேசிவிட்டு ராகவன் குடும்பம் அபிநயாவின் வீட்டில் இருந்து கிளம்பியிருந்தனர்.

எப்போதும் எதாவது பேசிக் கொண்டே வரும் காயத்ரி அமைதியாய் வர அனைவருக்குமே அவளது மனநிலை புரிந்து தான் இருந்தது.

ராகினி மருமகளின் கரத்தைப் பற்றியவாறு,”விடு கண்ணா அவங்க சொன்னதெல்லாம் மனசில் வைச்சுக்காத..”

“சரிம்மா..”,என்றவளுக்கு கண்ணீர் விழி மறைத்து நின்றது.ராகவனுக்குமே எப்போதும் ஒருவித நிமிர்வோடு இருக்கும் மருமகளை இப்படி பார்ப்பதற்கு வருத்தமாய் இருந்தது.

சிறியவர்கள் இருவரும் அந்த அத்தையை தங்களுக்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தனர்.

வீட்டிற்கு வந்ததும் காயத்ரி அமைதியாய் தங்கள் அறைக்குச் சென்றுவிட ராகவன் அன்புவை நிறுத்தினார்.

“அன்பு ஊர்ல ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவாங்க அதுக்கெல்லாம் காது கொடுத்துட்டு இருந்தா நாம சந்தோஷம் போயிடும்.எதையும் மனசில் போட்டு வருத்திக்க வேண்டாம்னு சொல்லு..ம்ம்?”

“சரிப்பா..”,என்றவன் அறைக்குள் நுழைந்த நேரம் முதுகு காட்டிப் படுத்திருந்தவளின் உடல் குலுங்கியதில் அவசரமாய் அவளருகில் வந்தவன் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்தபடி கண்களை அழுந்தத் துடைத்து விட்டான்.

“கண்மணி..”

“….”

“உனக்காக நாங்க எல்லாரும் கவலையா இருக்கோம்..நீ என்னடானா யாரோ எதோ சொன்னதுக்குப் போய் இப்படி அழுதுட்டு இருக்க..எழுந்திரு முதல்ல..”

“சொன்னது யாருங்கிறது இல்ல இப்போ பிரச்சனை..”

“இந்த விஷயத்தில் நீ ஏன் டி இப்படி சென்சிட்டிவ்வா இருக்க?”

“அன்பு உன் கேள்வியே அபத்தமா இருக்கு.ஒரு வேளை நமக்கு கடைசி வரை குழந்தையே பிறக்காம போனா?!”

“உன் கற்பனைக்கு அளவேயில்லையா?சரி அப்படியே நடந்தாலும் தான் இப்போ என்ன?”

“???”

“டாக்டர்கிட்ட போயாச்சு எல்லாம் நார்மல்னு சொல்லிட்டாங்க..அப்பறமும் என்ன பண்ணணும்னு நினைக்குற காயூ?!”

“….”

“ஏன் டி இப்படி பண்ற..உன்னை இப்படி பாக்குறதுக்கு கஷ்டமா இருக்கு..”,என்றவன் கட்டிலின் பின் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

சில நொடிகளில் தெளிந்தவளாய் எழுந்து அவனருகில் அமர்ந்து தோள் சாய்ந்து கொண்டாள்.

“சாரி அன்பு..”

“உனக்கு பைத்தியம் தான் பிடிச்சுருக்கு..”

“உனக்கு குழந்தை பத்தி ஆசையே இல்லையா டா?”

“நிறையவே இருக்கு..ஆனால் அது வரும் போது தான அதைப்பத்தி யோசிக்கணும்.கல்யாணமே குழந்தைக்காக தான்னு நினைச்சா இந்நேரம் எனக்கு எவளோடவோ கல்யாணம் ஆகி நாலு புள்ளை கூட இருந்துருக்கும்..”

“!!”

“முறைக்காத லூசு..தாம்பத்தியம் குழந்தை எல்லாமே ஒரு பகுதி தான்..அதை தாண்டி எனக்கு ஒரு அழகான வாழ்க்கையை என் காயூ கொடுத்துருக்கா..இல்லாததை நினைச்சு இருக்குற வாழ்க்கையை நான் கெடுத்துக்க போறதில்ல டி..”

“….”

“உனக்கும் அதே தான்..முதல்ல இந்த டென்ஷனை உன் மண்டையில் இருந்து வெளியே எடு..தேவையில்லாம ஸ்ட்ரெஸ் ஆகாம ஜாலியாக இரு கண்மணி..அதுவே பாதி பிரச்சனையைக் குறைக்கும்.”

“ம்ம்..”

“இந்த வாரம் இரண்டு நாள் லீவ் போடுறியா கேரளா போயிட்டு வரலாம்..அப்பறம் ஆனந்தன் கல்யாணத்துல பிசி ஆகிடுவோம்.என்ன சொல்ற?”

“போலாம் அன்பு..”,என்றவள் இன்னுமாய் அவனோடு ஒண்டிக் கொண்டாள்.

இரவு உணவிற்காக அனைவரும் அமர காயத்ரி இயல்பாய் அனைவரோடும் பேசியபடி இருந்தாலும் அழுது வீங்கிய அவளது கண்களும் முகமும் அனைவருக்கும் பெரும் கவலையைக் கொடுத்தது.

உணவை முடித்து அனைவரும் சென்றுவிட காயத்ரி ராகினியோடு சமையலறையை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தாள்.

மனது பொறுக்காதவராய் ராகினி மருமகளைத் தோள் தொட்டு நகர்த்த என்னவென்பதாய் பார்த்தவளின் முகத்தை மென்மையாய் வருடியவர்,

“நீ இப்படியெல்லாம் அழக்கூடாது டா கண்ணா..எனக்கும் அப்பாக்கும் மனசே சரியில்லை..”

“ம்மா..”

“கல்யாணமும் குழந்தையும் நம்ம கையில் கிடையாது டா..கடவுள் விருப்பம் எப்பவோ அப்போ கொடுக்கட்டும்.அதுவரைக்கும் நீ சந்தோஷமா கலகலனு இருக்கணும்.சின்னதுங்க கூட ரொம்ப சோர்ந்து போயிட்டாங்க..”,என்றவரின் பேச்சில் மீண்டுமாய் கண்கள் கலங்கியது காயத்ரிக்கு.

அவளை தரையில் அமர்த்தி அருகில் அமர்ந்தவர் ஆதரவாய் கைகளைப் பற்றிக் கொள்ள சட்டென அவர் மடியில் படுத்துக் கொண்டாள்.

“ம்மா..நான் ரொம்ப சில்லியா நடந்துக்குறேனா..எனக்கு லேட் மேரேஜ்னால எதுவும் ப்ராப்ளம் இருக்குமோ?”

“ஏன் காயூம்மா தேவையில்லாம எல்லாம் யோசிக்குற..இரண்டு நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வரியா?”

“வேண்டாம் மா..உங்களை படுத்துறது பத்தாதுனு அவங்களை வேற குழப்பி விடுவேன்.”

“அன்புவும் வருத்தப்படுறானா என்ன?!”

“அப்படி நடந்தா கூட பரவாயில்லைனு இருக்கு மா எனக்கு..அவன் இதைப்பத்தி கண்டுக்க கூட மாட்றான்.கடைசி வரை குழந்தையே இல்லைனாலும் என்ன இப்போனு கேட்குறான்.”,என்றவளின் குற்றச்சாட்டில் லேசாய் சிரித்தார் ராகினி.

“நீங்களும் கிண்டல் பண்றீங்க பாத்தீங்களா!”

“காயூ..நீ தேவையில்லாம குழப்பிக்காத..இதெல்லாம் நம்ம கையில் இல்லை.எங்களுக்கு எல்லாம் உன்னை இப்படி பார்க்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

யாரோ எதோ சொல்லிட்டு போட்டும் அதெல்லாம் தலைக்கு எடுத்துக்காத சரியா.”,மெதுவாய் எழுந்தவள் லேசாய் புன்னகைத்து ஆமோதிப்பாய் தலையசைக்க கன்னம் தட்டி அவளது அறைக்கு அனுப்பி வைத்தார் ராகினி.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode