எண்ணம்-9

by ஸ்ரீ
2 comments 213 views
A+A-
Reset

மாலை நேரம் மருத்துவமனையில் இருந்து கல்யாணியின் தம்பி அழைத்து வரப் பட்டிருக்க அவனைச் சென்று பார்த்து வரலாம் என்று எண்ணியவளாய் ஷியாமா வீட்டிற்குப் பின்னிருந்த கெஸ்ட் ஹவுஸிற்குச் சென்றாள்.

கதவைத் தட்டிவிட்டு அவள் உள்ளே நுழைய பழைய இரும்புக் கட்டில் ஒன்றில் சுவற்றில் சாய்ந்தவாறு கால்களை நீட்டி அமர்ந்திருந்தவன் இவளைக் கண்டதும் கால்களை மடக்கி அமர்ந்து அவளை ஏறிட்டான்.

அதற்குள் கதவு திறந்த சத்தம் கேட்டு கல்யாணி உள்ளிருந்து வந்திருந்தார்.

“வாங்கம்மா..எதுவும் வேணுமா சொல்லிருந்தா நானே வந்துருப்பேனே..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல இவருக்கு எப்படி இருக்குனு பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன்.”

“ஐயோ அவனை பார்க்குறதுக்கு நீங்க ஏன்..”

“ஏன் வரக் கூடாதா?!”

“ஐய்யையோ அப்படி சொல்லல மா நீங்க போய் இங்க எல்லாம் வந்துகிட்டுனு கேட்க வந்தேன்.. பாருங்க உக்காரக் கூட ஒழுங்கா இடம் இல்லை..”

“பரவால்லக்கா பார்த்துட்டு நான் கிளம்புறேன்..”,என்றவள் அவனை ஏறிட மற்ற தினங்களைப் போல் அல்லாது இன்று அவன் முகத்தில் ஒருவித தயக்கம் இருந்தது.

இருந்தும் என்னவென்பதை சரியாய் கணிக்க முடியவில்லை ஷியாமாவால்.

கல்யாணியை ஒரு நொடிப் பார்த்தவன் அமைதியாகி விட அவளே பேச்சை ஆரம்பித்தாள்.

“இப்போ எப்படியிருக்கு பரவால்லையா?”

“ம்ம்..”

“ஏன்டா உன்னை பார்க்கணும்னு அந்த பொண்ணு வந்துருக்கு வாயைத் திறந்து பதில் சொல்ல மாட்டியா?”

“அக்கா பரவால்யில்லை விடுங்க நல்ல ரெஸ்ட் எடுக்கட்டும்..

டேக் கேர்..நான் வரேன்..”,என்றவள் எழுந்து கொள்ள அவசரமாய் அவளிடம்,

“ரொம்ப நன்றி உடனே வந்து உதவினதுக்கு..”

“இட்ஸ் மை ட்யூட்டி..வரேன்..”,என்ள் அங்கிருந்து கிளம்பி போர்டிகோ அருகில் வர மகிழனின் கார் சரியாய் உள் நுழைந்தது.

அத்தனை களைப்பையும் தாண்டிய கம்பீரமான முகத்தில் இவளை கண்டு இலகுவான சிநேகப் புன்னகை அவனிடத்தில்.

“ஹாய்..”

“ஹாய் ஷியாமா..என்ன இங்க?”

“இல்லை கல்யாணி அக்கா தம்பியை பார்த்துட்டு வந்தேன்..”

“ஓ..முத்து அண்ணா சொன்னார்..பயங்கர பிஸி ஸ்கெட்டியூல் நகரவே முடில.. இப்போ எப்படி இருக்கான்??அம்மா ஏன் இப்படி நடந்துக்குறாங்கனு புரியவே மாட்டேங்குது..”

“ம்ம் இப்போ பெட்டர்..ஹாஸ்பிட்டல் போய் ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு வந்துட்டாங்க..இன்னைக்கு தான் உங்க அம்மாவைப் பார்த்தேன்..”

“…..”

“டோண்ட் வொரி எதாவது டிஸ்ர்ப்டா இருந்துருப்பாங்க…சரியாய்டும்..”

“ரொம்ப வருஷமா அதை தான் நம்புறேன்..இனியும் அதையே தான் பண்ணணும்..”

“இஃப் யூ டோண்ட் மைண்ட்..நீங்க டின்னர் முடிச்ச அப்பறம் உங்ககிட்ட சில டீடெய்ல்ஸ் கேக்கணும் ஒருபத்து நிமிஷம் பேசலாமா?”

“ஷுவர்..ஒரு இருபது நிமிஷம் கொடு வந்துட்றேன்.என் ஆபீஸ் ரூம்ல வெயிட் பண்ணு..”

“யா டேக் யுவர் ஓன் டைம்..”,என்றவள் சில நிமிடங்கள் லானில் சுற்றிவிட்டுப் பின் அவனது அலுவலக அறையை அடைந்தாள்.

கூறியபடியே வந்தவன் அவனது இருக்கையில் அமர்ந்து அவளை ஏறிட சற்றே தொண்டையை செறுமியவாறே சிறு தயக்கத்தோடு பேச்சை ஆரம்பித்தாள்.

“அது..உங்க அம்மா எப்போ இருந்து இப்படி ஆனாங்கனு உங்களுக்கு எதுவும் நியாபகம் இருக்கா?”

அவன் தன் இலகுத் தன்மையை இழப்பது எதிரிலிருப்பவளுக்கு நன்றாகவேத் தெரிந்தது.

“தப்பா நினைக்காதீங்க..இதுக்கும் நான் வந்த வேலைக்கும் சம்மந்தம் இருக்குமோனு தோணுது..

அதாவது உங்க அப்பாவோட மரணம் எதோ ஒரு வகையில் உங்க தாத்தாவோட மரணத்துக்கு சம்மந்தப்பட்டுருக்கோனு தோணுது..”

“வாட்?!”

“ம்ம் காலையில தான் முத்து அண்ணாகிட்ட உங்க அப்பாவைப் பத்தி கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன்..

அந்த அக்ஸிடெண்ட் தற்செயலா நடந்ததா இல்லாம ஏன் திட்டமிட்டதா இருந்துருக்க கூடாது?”

“லிசன் ஷியாமா..நீ தேவையில்லாம ரொம்ப யோசிக்குறியோனு தோணுது..

அது எப்பவோ முடிஞ்ச ஒரு விஷயம் ..அது மட்டுமில்லாம தாத்தாவோட அதிகாரத்தை வச்சு இதையெல்லாம் தீர விசாரிக்காமயா இருந்துருப்பாங்க..!”

“கரெக்ட் தான் நான் எனக்குத் தோணிணதை கேட்டு தெளிவு படுத்திக்க விரும்புறேன்..தட்ஸ் இட்..”

“ம்ம் அப்பா இறந்து ஒரு பத்து நாள் சரியா நியாபகம் இல்லை..ஆனா 10-15 நாள் அம்மா நல்லாதான் இருந்தாங்கனு நினைக்குறேன்.

ஒரு நாள் பூஜை அறையில் உக்காந்துரந்தப்போ அப்படி கதறி அழுதாங்க..

எல்லாரும் போய் பார்த்து என்ன செய்யனு தயங்கினாங்களாம்.

தாத்தாவும் பாட்டியும் தான் அவங்க அறைக்கு அழைச்சுட்டுப் போய் சாய்ந்திரம் வர கூட அவங்க வெளியவே வராம அப்பறம்  மாடியில் இருக்குற அறைக்குப் போய் கதவை சாத்திட்டாங்க.

அதிலிருந்து ஒரு நாலு இல்ல அஞ்சு முறை நான் அவங்களை தனியாப் போய் பார்த்துருப்பேன்..

மத்தபடி எல்லாமே தாத்தாவும் பாட்டியும் தான்.அதுக்கப்பறம் என்னையும் காலேஜ் படிப்புக்காக வெளியே அனுப்பிட்டாங்க..

அஞ்சு வருஷம் நான் இங்க இல்ல..அதாவது லீவ்க்கு வந்துட்டு போறதோட சரி.

அப்படி என்னோட யூஜி கடைசி வருஷ லீவுக்கு வந்தப்போ தான் அந்த கேர்டேக்கர் பத்தின விஷயம் எனக்குத் தெரியும்.

நான் கூட யாருனே தெரியாத ஒருத்தங்களை நம்பி அம்மாவை எப்படி விட முடியும்னு தாத்தா கிட்ட கேட்டேன்.

நாங்க எல்லாம் இங்க தான டா இருக்கோம். அது மட்டுமில்லாம அவ உன் அம்மாவோட சிநேகிதினு சொல்லிட்டார். அதுக்கு மேல என்னாலேயும் எதுவும் பேச முடீல..”

“ம்ம்ம்”,என்றவள் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாய் உணர்ந்தவன்,

“என்னாச்சு ஷியாமா?”

“நத்திங் மகிழன்..எதோ ஒண்ணு குழப்பமா சந்தேகப்படணும்ங்கிற மாதிரியே தோணுது மனசுல..பார்க்கலாம்..

ஆமா உங்கம்மா பேரை தான் உங்க அத்தை பொண்ணுக்கு வச்சுருக்காங்களா?”

“கொஞ்சம் அப்படிதான்.என் பாட்டிக்கு என் அம்மாவை ரொம்ப பிடிக்கும் அவங்க தான் எங்க அம்மாவை தியானு கூப்பிட ஆரம்பிச்சு அப்பறம் அதுவே அவங்க பேரா மாறிடுச்சு..

அதனால அதையே தியாக்கும் வச்சுட்டாங்க…என் அத்தை மாமாக்கு விருப்பம் இல்லை தான் ஆனாலும் ஒண்ணும் சொல்லல..”

“ஓ அப்போ அம்மாவோட முழுப் பெயர்?”

“சந்தியா தேவி.”

“ஓ…நைஸ்..அண்ட் அவங்க சொந்த ஊர் எதுனு தெரியுமா உங்களுக்கு?”

“ம்ம் தமிழ்நாட்டுல ஊட்டி பக்கத்தில் ஏதோ கிராமம்னு நினைக்குறேன்..ஆனா இப்போ யாருமே அங்க இல்ல எனக்குத் தெரிஞ்சு..”

“ஓ..சரி தேங்க் யூ மகிழன்.. பார்க்கலாம் என்ன நடக்கும்னு..

அண்ட் நாளைக்கு ஈவ்னிங் குள்ள அந்த சூரஜ் விஷயத்தை நான் கன்பார்ம் பண்றேன் உங்களுக்கு..”

“எதுவும் பிரச்சனை இல்லையே?!”

“அப்சொலியூட்லி நோ..ஐ வில் டேக் கேர்..”,என்றவள் கைக் குலுக்குவதற்காக கரம் நீட்டி நிற்க தன்னிருக்கையில் இருந்து எழுந்து நின்றவனாய் பதிலுக்கு கை நீட்டி குலுக்கி விடுவித்தான்.

“குட் நைட் மிஸ்டர் மகிழன்..ஹேவ் அ குட் ஸ்லீப்..”

“தேங்க் யூ யூ டூ”,என்றவன் கைகளை மார்பின் குறுக்கில் கட்டியவாறே வாசலை நோக்கிச் செல்லும் அவளையே பார்த்திருந்தான்.

மறுநாளின் பொழுது வழக்கம் போல் எதொவொரு முன்னடைவு இந்த விஷயத்தில் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்போடே விடிந்தது ஷியாமாவிற்கு.

கட்டிலை விட்டு இறங்கியவள் தனது அலமாரியைத் திறக்க எத்தனித்த நேரம் தரையில் இருந்த காகிதம் அவள் கண்ணில் பட்டது. என்னவாய் இருக்கும் என்ற சிந்தனையோடே அதை எடுத்தவள் தீருப்பிப் பார்க்க,

“தேவையில்லாம மகிழனோட நெருங்க நினைக்காத அது உனக்கு எப்பவுமே நல்லது இல்ல.வந்த வேலையில்லாம தேவையில்லாத எந்த வேலையும் செய்ய நினைக்காத..”

என்பதைப் படித்தவளுக்கு சிரிப்பு வந்துவிட்டிருந்தது.அதை பத்திரமாய் எடுத்து மடித்து வைத்தவள் குளித்துத் தயாராகி கீழே சென்றாள்.

பெரியவர்கள் அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்திருக்க அப்போது தான் நேரத்தைப் பார்த்தவள் சற்று சீக்கீரமாகவே வந்து விட்டதை உணர்ந்து கொடண்டாள்.

இருந்தும் எதையும் வெளிக்காட்டாதவளாய் பொதுவாய் ஒரு குட் மார்னிங்கை கூறிவிட்டு அங்கிருந்த கண்ணாடி குவளையில் தனக்கான பழரசத்தை எடுத்துக் கொண்டு ஒரு தட்டில் இரண்டு பிரட் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர முற்பட்ட நேரம் சாந்தி தேவியின் கணவர் சர்வேஷ் சற்றே அதிகாரத் தொனியில்,

“அவனோட ஆபீஸ் ரூம்ல உனக்கென்ன வேலை?”,என்று கேட்க லேசாய் புருவம் சுருக்கியவளாய்,

“பேசுறதுக்கு விஷயம் இருந்தது பேச போனேன்..”

“அதான் அப்பப்போ லான்ல நின்னு பேசிட்டு இருக்கீங்களே!”

“எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்..அங்கிள்..”,என்று ஆரம்பித்தவளுக்கு பொறுமை சுத்தமாய் காற்றில் பறந்திருந்தது.அதை உணார்ந்த சாந்தி தேவி அடக்கமாட்டாத கோபத்துடன்,

“என்ன சத்தம் அதிகமா இருக்கு?பெரியவங்கனு ஒரு மரியாதை இல்ல?அவன் ப்ரெண்ட் தான நீ..

அப்பறம் எப்படியிருப்ப.. இன்னொரு தடவை சத்தம் உயர்த்திப் பேசின நல்லாயிருக்காது சொல்லிட்டேன்.

கவனிச்சுட்டு தான் இருக்கேன்.ஒரு பேச்சுக்கு உன் வீடு மாதிரினு சொன்னா உன் வீடாவே மாத்திருவ போல..

உன் இஷ்டத்துக்கு சுத்துற..எதோ எஜமானியம்மா மாதிரி நேத்து போய் கல்யாணி தம்பியை போய் பார்த்து விசாரிச்சுட்டு வந்துருக்க..”, எனும்போதே ஷியாமா கல்யாணியை முறைத்தாள்.

“அங்க என்ன முறைக்குற அவ சொல்லலனாலும் இங்க நடக்குறதெல்லாம் எங்களுக்குத் தெரியும்.இதோ பார்..

நீ அவனோட ப்ரெண்ட் இந்த வீட்டோட விருந்தாளி அதை என்னைக்கும் மறந்துறாத..

எப்படியிருந்தாலும் என் பொண்ணு தியா தான் இந்த வர்மா சாம்ராஜ்யத்தோட மூத்த மருமக..அதை மனசுல வச்சுக்கோ..” என்று அவர் முடிக்கவும் சிறியவர்கள் அங்கு வரவும் சரியாய் இருக்க தன்னருகில் வந்த தியாவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவாறே தன் கையிலிருந்த பழரசத்தை சுவைத்துச் சென்றாள் ஷியாமா.

“எவ்வளவு திமிர் பார்தீங்களா..நான் இங்க இவ்ளோ கத்து கத்திட்டு இருக்கேன் காதுல வாங்குறாளானு பாருங்க..”

சற்று தூரம் சென்று திரும்பியவளின் பார்வை சர்வேஷை தீண்ட அவளையே முறைப்போடு பார்த்திருந்தார்.

அவரைப் பார்த்தபடியே வந்தவள் எதிரில் வந்தவனின் மீது லேசாய் மோதி நிற்க வேகமாய் கையிலிருந்த டம்ளரை நகர்த்திப் பிடித்தாள்.

“கேர்புல்..”

“சாரி கவனிக்கல..”

“தட்ஸ் ஓகே ஆமா அங்கேயே சாப்பிடாமா எங்க எடுத்துட்டு போய்ட்டு இருக்க..”

“நத்திங்..சீக்கிரமாவே வந்துட்டேன்..வெளில போணும் டைம் ஆச்சு அதான்..”

“ஓ..ஓகே கிவ் மீ பைஃவ் மினிட்ஸ்..நானே ட்ராப் பண்றேன்..”

“அதெல்லாம் வேணாம்..நான் பாத்துக்குறேன்..ஆஷிக்கோட பைக் இருக்கே..”

“வில் கம் யூ வெயிட்”,என்றவன் சாப்பிட்டு மேஜை நோக்கிச் சென்றுவிட இடவலமாய் தலையசைத்தவளாய் தனதறைக்குச் சென்று தன் மொபைலையும் கண்ணாடியையும் எடுத்து வந்தாள்.

மகிழனோடு அவள் காரில் ஏறிய நேரம் சரியாய் சர்வேஷ் வாசல் அருகில் வர அவளைப் பார்த்தவளின் காதுகளில் புகை வராதது ஒன்று தான் குறையாய் இருந்தது.

அதை மனதிற்குள் நினைத்தவளோ சட்டென சிரித்து விட காரைக் கிளப்பியவன் அவளை விசித்திரமாய் பார்த்தான்.

“உப்ஸ்..சாரி..”

“பரவால்லையே உனக்கு சிரிக்க கூட தெரியுமா..உண்மையை சொல்லணும்னா உன்னை பார்த்த அப்பறம் நான் நினைச்சேன்…

சிரிக்காம சிடுமூஞ்சியா இருந்தா இவ்ளோ மோசமாவா இருப்போம்னு “,என்றவன் லேசாய் புன்னகைக்க

“ஹாங்ங்ங்..தட் வாஸ் அ குட் ஜோக்..நான் நாளைக்கு சிரிக்குறேன்..”

“ஹா ஹா …”என்றவன் சத்தமாகவே சிரித்திருக்க அவளுக்குமே சிரிப்பு வந்திருந்தது.

“சரி சொல்லு ஏன் சிரிச்ச?”,என்று அவன் மீண்டும் அதையே கேட்க உணவு மேசையில் நடந்ததையும் தாங்கள் கிளம்பும் போது அவர் முறைத்ததையும் கூறி அவள் சிரிக்க அவனிடத்தில் பதில்லாமல் போனதை உணர்ந்து அவனைப் பார்க்க சிரிப்பு இருந்த இடம் தெரியாமல் போயிருக்க அத்தனை காட்டமாய் ஸ்டியரிங்கை இயக்கிக் கொண்டிருந்தான்.

“ஹே ரிலாக்ஸ்…இதுக்கே கோபப்பட்டா எப்படி??”,என்றவள் அந்த காகிதத்தை அவனிடத்தில் நீட்ட காரை ஓரமாய் நிறுத்தியவன் அதைப் படித்துவிட்டு கசக்கி எரிந்திருந்தான்.

“வாட் த ஹெல்!!!”

“மகிழன்…கூல்..”

“ஐ காண்ட்..ஏதோ த்ர்ட் ரேட் கிரிமினல் மாதிரி லெட்டர் எல்லாம் அனுப்பிகிட்டு..ச்ச…இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்றேன் நான்..”

“சர் ஜி ப்ளீஸ்..நீங்க இல்லைனாலும் நானே முடிவு கட்டுற ப்ளான்ல தான் இருக்கேன்.

ஒரு ஒன் அவர் டைம் கொடுங்க ஐ வில் மீட் யூ இன் யுவர் ஆபீஸ்..அதுவரை ரிலாக்ஸ்..

அண்ட் என்னை அதோ அந்த பில்டிங்கிட்ட இறக்கி விட்டுருங்க..”

“சூரஜ்ஜோட ஆபீஸ் ஆச்சே அது?”

“யா யூ ஆர் ரைட்..சோ இங்கிருந்து நேரா உங்களை மீட் பண்ண வரேன் அதுவரை ஸ்டே காம்..பை..

அண்ட் தேங்க்ஸ் ஃபார் தி லிப்ட்..”,என்றவள் கண்சிமிட்டி காரை நகர்த்தச் சொல்ல பெருமூச்சோடு வண்டியை கிளப்பி அவளை அங்கு இறக்கி விட்டுச் சென்றான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

srichitra November 6, 2026 - 5:53 pm

Very nice

Padmasubramanian November 6, 2026 - 8:30 pm

தியாவிற்கு தான் மகின்னு நினைச்சுட்டு இருக்காங்களே 🤭🤭🤭

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode