எண்ணம்-6

by ஸ்ரீ
2 comments 309 views
A+A-
Reset

மகிழன் தன்னெதிரில் இருந்தவளிடம் இருந்து பதில்லில்லாமல் இருப்பதை உணர்ந்து அவளை ஏறிட அவளோ மாடியையே வெறித்திருந்தாள்.

“என்னாச்சு?”

சட்டென உணர்வு பெற்றவளாய் இடவலமாய் தலையசைத்தவள்,

“உங்க சித்தப்பா இப்போ எப்படி இருக்கார்?அவரு கீழே விழறப்போ யாரும் இல்லையா?”

“ம்ம் அப்போ யாருமே இல்ல..பொதுவாவே மார்னிங் ப்ரேக் பாஸ்ட்க்கு அப்பறம் வீட்ல வேலை செய்யுறவங்களைத் தவிர யாரும் இருக்க மாட்டாங்க.

ஆனா மத்த நாள் எல்லாம் இரண்டு சித்தப்பாவும் சேர்ந்து தான் கீழே வருவாங்க இன்னைக்கு அவர் மட்டும் தான் வந்துருக்கார்.

வேலை செய்யுறவங்க எல்லாரும் கிட்சன்ல இருந்துருக்காங்க.

அவர் படியில் உருள ஆரம்பிச்ச நேரம் மார்க்கெட் போய்ட்டு முத்து அண்ணா உள்ளே நுழைஞ்சுருக்கார்.

சரியா யூகிச்சு அவர் தலை பட வேண்டிய இடத்துல நின்னு தாங்கிப் பிடிச்சுருக்கார். இல்லைனா…

முத்து அண்ணாகிட்ட கேட்டா யாருமே இல்லை .. ஐயாவா தான் விழுந்த மாதிரி இருந்தது. வயசாகுதுல தடுமாறியிருப்பார்னு சொல்றார். ஆனாலும்…”

“ம்ம்..ஐ அம் க்ளுலெஸ் மகிழன்..நடக்குற எந்த ஒரு விஷயத்துக்கும் சம்மந்தம் தொடர்பு இருக்குற மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு..

உங்க அம்மாவை பார்த்துக்குற கேர் டேக்கரை நான் பார்க்கவே இல்லையே அவங்க எப்போ போறாங்க எப்போ வராங்க?”

“அவங்க!அவங்க வயசானவங்க ஷியாமா..அம்மாவை விட இரண்டு வயசு பெரியவங்க..

அதிகமா கீழே வர மாட்டாங்க.. அவங்க இரண்டு பேருக்கும் தேவையான எல்லாமே அங்கேயே இருக்குறதால ரொம்ப ரேர் தான்..

அப்போ அப்போ அங்கேயே வராண்டால நடந்துப்பாங்க..அது கூட அம்மா தூங்குற நேரத்துல தான்..

அவங்க இல்லைனா அம்மா ரொம்ப ரெஸ்ட்லெஸா ஆய்டுவாங்க..அதுக்காகவே ரொம்ப கவனமா இருப்பாங்க..”

“ஓ அம்மாவை டாக்டர் கிட்ட காட்றதில்லையா?”

சற்றே அவனின் இறுக்கம் தளர்ந்து ஒருவித கவலை குடிக்கொண்டிருந்தது அவன் முகத்தில் ஷியாமா அவனைத் தான் முழுமையாய் கவனித்துக் கொண்டிருந்தாள்.

“இல்ல எனக்கு விவரம் தெரிஞ்ச அப்பறம் முதல்ல எல்லாம் முயற்சி பண்ணேன்..

ஆனா அவங்க ஒத்துழைக்கவே இல்லை. அப்பறம் எனக்கும் பல பொறுப்புகள் வந்ததுனால ஒரு கட்டத்துல விட்டுட்டேன்.

ஆனா அப்போ தான் இந்த கேர் டேக்கர் வந்தாங்க..அக்சுவலா அவங்க அம்மாவோட சின்ன வயசு ப்ரெண்டாம்.

ஒரே ஊர் போல..தாத்தா தான் அழைச்சுட்டு வந்தார்.அவங்க ஊர்ல நர்ஸா வேலைப் பார்த்துருக்காங்க..

அந்த காலத்துல டெலிவரி எல்லாம் கூட இவங்களே பண்ணுவாங்க போல.. அதனால அம்மாவை அவங்களே முழுசா பாத்துக்குறாங்க…”

“ஐ சீ..பட் மகிழன் எல்லாமே உங்களுக்கு கிடைச்ச இன்ஃபோ தானா?உங்களுக்கு நேரடியா எந்த விஷமும் தெரியாதா?”

“ம்ம் தாத்தா இருந்த வரை எதைப் பத்தியும் பெருசா தெரிய விட்டதில்ல.அவரை எதிர்த்து பேசியும் பழக்கம் கிடையாது சோ எதையும் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணதில்ல.

அவரை பொறுத்த வரைக்கும் நான் இந்த வர்மா க்ரூப்ங்கிற சாம்ராஜியத்தை கட்டிக் காப்பாத்த பிறந்தவன்.

பிஸினஸ்ல கிங் மாதிரி இருக்குற எனக்கு வீட்டைப் பத்தின எந்த பழைய விஷயமும் தெரியாதுங்கிறது தான் உண்மை ஷியாமா.”, என்றவனின் பார்வையில் ஒருவித வலி இருப்பது நன்றாகவே தெரிந்தது ஷியாமாவிற்கு.

முதல் நாள் தான் கண்ட எம்வீ தோற்றத்திற்கும் இப்போது தன்னருகில் இருப்பவனுக்கும் மலையளவு வித்தியாசத்தை உணர முடிந்தது.எதோ ஒரு உந்துதலில் கேட்டே விட்டாள்.

“ஆர் யூ ஓகே மகிழன்?ரொம்ப ஸ்ட்ரெஸ்டா இருக்கீங்கனு நினைக்குறேன்..”

“ம்ம் எவ்ளோ பெரிய இரும்பு மனசா இருந்தாலும் ஒரு கட்டத்துல அதுவும் சாயுறதுக்கான இடத்தை தேடத்தான் தேடும்..

இத்தனை வருஷத்துல இப்படி என்னோட உக்காந்து பேச யாரும் இருந்ததில்ல.

நானும் என்னை நெருங்க விட்டதில்ல. ஆனா இப்போ நடக்குற ஒரு ஒரு விஷயமும் ரொம்ப வீக் ஆக்குற மாதிரி தோணுது.

யூ நோ அல்மோஸ்ட் நீயும் நானும் ஒரே மாதிரியான கேரக்டர்ஸ் தான்.வந்தன்னைக்கே அதை உணர்ந்தேன்.

யாரையும் பக்கத்துல நெருங்க விடாம பாத்துக்குறது. யாருக்காகவும் எதுக்காகவும் தன் நிமிர்வை விட்டுக் கொடுக்காம இருக்குறது. ஐ நோ உன் வேலையினால இப்படி இருக்கலாம்.

ஆனாலும் எல்லாரும் இப்படி இருக்க மட்டாங்க..இன்பேக்ட் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல சில சீனியர் ஆபிசர்ஸ் கூட அவங்க பேவர்காக எங்களை மாதிரி பிஸினஸ் பீபுள் கிட்ட கொஞ்சம் இறங்கி போவாங்க..

ஒரு கட்டத்துல வாழ்க்கையில் என்னை சுத்தி இருக்குற எல்லாருக்குமே முக்கியமா பட்டது என் பதவியும் இந்த பணமும் தானே தவிர மனுஷங்களுக்கான மதிப்புங்கிறது இல்லாமயே போச்சு..

பட் நீ வந்த முதல் நாள்ல இருந்து என்னையும் ஏதோ தெருவுல நடந்து போற சாதாரண ஒருத்தனை பார்க்குற மாதிரி தான் பார்க்குற..ஐ நோ..அண்ட் யூ இம்ரஸ்ட் மீ இன் தட் வே..

இதெல்லாம் ஒரு வேளை உன்கிட்ட நான் கேஷீவலா மூவ் பண்ண காரணங்களா இருக்கலாம்னு தோணுது..

இல்லனா இப்படி மனசுல இருக்குறதெல்லாம் வெளில பேசுற ஆள் இல்ல நான்.”

என்று அவள் கண்கள் நோக்கி மிகத் தெளிவாய் பேசிக் கொண்டிருந்தவனை ஆச்சரியப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் ஷியாமா.

அவள் முன் விரல் சொடுக்கி என்னவென கேட்க உதடு வளைத்து இடவலமாய் தலையசைத்தவள்,

“ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் உங்க மனநிலைமை எப்படி இருக்கும்னு.சொல்லப் போனா நானும் கொஞ்சம் அதிகமா அட்டிட்யூட் காட்டினதுக்கு காரணம் நீங்க சொல்ற அதே பணம் தான்.

எனக்கான மரியாதை இல்லாம போய்ட கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தேன்.

உங்களுக்கு என்னால வேலை நடக்கணும் அதே நேரம் எனக்கு என் பவர்க்கான மரியாதை கிடைக்கணும்.

மத்தபடி நானும் நார்மல் ஹ்யூமன் பீயிங் தான்.சோ நான் இங்க இருக்குற வரை உங்களுக்கு என்ன ஷேர் பண்ண தோணிணாலும் நம்பி என்கிட்ட சொல்லலாம்.

என்னை தாண்டி எந்த விஷயமும் வெளியே போகாது.

அண்ட் டோண்ட் வொரி கண்டிப்பா நடக்குற எல்லாப் பிரச்சனைக்கும் சீக்கிரமே முடிவு கட்டிரலாம்.ரிலாக்ஸ்..”

“தேங்க்ஸ் பார் யுவர் வேர்ட்ஸ் ஷியாமா.. நவ் பீலிங் பெட்டர்..”, என்றவன் சிநேகப் புன்னகையோடு கைநீட்ட பதிலுக்கு கைக்குலுக்கி சிரித்து நகர்ந்தாள் ஷியாமா.

உள்ளே சென்ற நேரம் அத்தனை பேருமே ஹாலில் அமர்ந்திருக்க ஒரு ஓரமாய் நின்றிருந்த ஆஷிக்கை மோனிஷா சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

ஷியாமா அவர்கள் அருகில் சென்று நின்று கொண்டாள்.

“நான் எப்பவும் சொல்றது தான் இந்த வீட்ல வர வர ஏதோ ஒண்ணு சரியில்ல. பேய் பிசாசு எதோ இருக்கு..

இல்லனா நல்லா இருந்த அப்பா எப்படி திடீர்னு இறந்து போவாரு. வந்து பார்த்த போலீஸும் ஒண்ணும் இல்லனு சொல்லிட்டு போய்ட்டாங்க..

அடுத்து இப்போ அண்ணாக்கு இப்படி ஆயிருக்கு..இதெல்லாம் சாதாரணமா தான் நடக்குதுனு இன்னும் நம்புனீங்கனா உங்களை விட பைத்தியம் வேற யாரும் இல்ல..

எதோ ஒரு அமானுஷ்யம் தான் இதுக்கெல்லாம் காரணம்..எனக்கு தெரிஞ்ச பண்டிட் கிட்ட கேட்டு பார்த்துட்டேன்..அவரு..”

அனைவருமாய் சாந்திதேவியின் பேச்சிற்காக காத்திருக்க அவரோ சற்றும் அலட்டிக் கொள்ளாமல்,

“நம்ம பெரிய அண்ணாவோட ஆத்மா தான் இதுக்கெல்லாம்..”

“அத்தை இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்க..நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..”, என்று கர்ஜித்தவனாய் முகம் சிவக்க நின்றிருந்தான் மகிழன்.

“அவங்க ஏதோ புரியாம பேசுறாங்க…நீ..”

“இல்ல சித்தி..இதுக்கு இன்னைக்கே ஒரு முடிவு கட்றேன்..

நானும் போனா போகுதுனு அமைதியா இருந்தா சும்மா இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்காங்க..

உங்க கூட பொறந்தவரையே இப்படி சொல்ல கொஞ்சம் கூட உறுத்தலையா உங்களுக்கு..”

“நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.. அண்ணாவோட இறப்பு அவரே எதிர்பாராதது.ஒரு வேளை நிறைவேறாத ஆசை எதாவது..”

“அடச்சே..ஆசையா..அவருக்கா.. உங்களுக்குத் தெரியாதா அவரைப் பத்தி..

இறந்து போனவங்களைப் பத்தி இஷ்டத்துக்கு பேசுறதே தப்பு முதல்ல.தாத்தாவோட பேச்சுக்கு மரியாதை கொடுத்து தான் உங்களை இன்னும் இங்க விட்டு வச்சுருக்கேன்.

இல்லனா எந்த நேரமும் இந்த வீட்ல இருந்து உங்க குடும்பத்தை என்னால வெளியே அனுப்ப முடியும். அதுக்கான அதிகாரமும் லீகலா எனக்கு இருக்கு.. புரியுதா..

இங்கு பேய் பிசாசு எல்லாம் ஒண்ணும் கிடையாது. சும்மா எதையாவது உளறி மத்தவங்களையும் குழப்பாதீங்க..”, என்றவன் விறுவிறுவென மாடியேறிச் சென்றுவிட அப்போதும் சாந்தி முணுமுணுத்தார்.

“உண்மையை சொன்னா இவனுக்கு கசக்குது.வயசு வித்தியாசம் பார்க்காம எப்படி கத்திட்டு போறான் பாருங்க..

எல்லாம் எங்கப்பாவை சொல்லணும்.சின்ன பையன்கிட்ட வாயை மூடி நிக்க வச்சுட்டார்..!

“சாந்தி கொஞ்ச நேரம் அமைதியா தான் இருங்களேன்.மறுபடியும் வந்தா டென்ஷன் ஆகப் போறான்.”என்று ஆஷிக்கின் தாய் பாயல் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

சர்வேஷும் ராகேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவாறு அங்கிருந்து வெளியே நகர ஷியாமா அவர்களைக் கவனித்தவாறே பிறர் கவனத்தை ஈர்க்காத வண்ணம் அவர்கள் சென்ற திசையில் சென்றாள்.

“அண்ணி சொல்றது ஒரு வேளை உண்மையா இருக்குமோ?”

“சர்வேஷ் நீ வேற ஆரம்பிக்காத அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல..

அவன் போய் எத்தனை வருஷம் ஆகுது.. இந்த பிரச்சனைகள் எல்லாம் இப்போ தான நடக்குது. இதுல வேற யாரோ சம்மந்தப்பட்டுருக்காங்கனு தோணுது..”

“என்னால அப்படி யோசிக்க முடில நீங்க சொல்ற மாதிரி நம்ம மாமனார் இறந்தப்போ எனக்கும் சந்தேகம் இருந்தது.

ஆனா இன்னைக்கு நடந்த விஷயம் பட்டபகல வீட்டுக்குள்ள யாரும் வர்றதுக்கு வாய்ப்பே இல்லையே.. அப்பறம் எப்படி?”

“இது சாதாரணமா கூட நடந்துருக்கலாம்.. ஆனா அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிற மாதிரி இருக்கு நாம இப்போ யோசிக்குறது.”

“ராகேஷ் எனக்கு என்னவோ நம்மளை பழிவாங்ங்..”

“வில் யூ ஷட் அப்.. பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்காத.. புரிஞ்சுதா..

இன்னொரு தடவை இந்த மாதிரி பேசின நானே உன்னை கொன்னுடுவேன்…போ..”, என்று பல்லைக் கடித்தவாறே வார்த்தைகளைக் கடித்துத் துப்பினார் ராகேஷ்.

அவர்கள் வருவது தெரிந்து சட்டென தன்னை மறைத்துக் கொண்டவள் அவர்கள் உள்ளே செல்லும் வரை காத்திருந்து தனதறைக்கு வந்தாள்.

“அவங்களை யாரு பழி வாங்கனும்.. என்ன காரணம் யாரா இருக்கும்.. மகிழன் அப்பாவோட சாவு எதிர்பாராததுனா அதில் எதுவும் ரகசியம் இருக்குமா..!!”, யோசிக்க யோசிக்க தலை சுற்றியது ஷியாமாவிற்கு.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

srichitra November 3, 2026 - 11:24 am

Very nice

Padmasubramanian November 3, 2026 - 7:21 pm

மகி அப்பா கொலை செய்யப்பட்டு இறந்தாரா?

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode