296
அதிகாலையில் இருள் கூட விலகிடாத நேரத்திலேயே விழிப்பு வந்து விட எழுந்து தயாரான ஷியாமா அறையை விட்டு வெளியே வந்த போது யாரும் எழுந்ததற்கான அறிகுறி இல்லாமல் இருக்க கீழே வந்தவள் தோட்டத்தில் நடக்கலாம் என்றெண்ணி வெளியே வந்தாள்.
எங்கிருந்து இந்த கேஸை ஆரம்பிப்பது யாரை சந்தேகப்படுவது என ஆயிரம் விஷயங்கள் அவளுள் சுழன்று கொண்டிருக்க அதே யோசனையோடே நடந்து கொண்டிருந்தாள்.
அந்த நேர அமைதிக்குச் சற்றும் பொருந்தாமல் எதோ ஒரு சிறு சலசலப்பு ஷியாமாமின் கவனத்தை கலைத்தது.
சூழ்நிலையை உணர்ந்தவளாய் தன்னை முதலில் மறைத்துக் கொண்டவள் சத்தம் வந்த திசையை கணித்து வீட்டின் பக்கவாட்டு பகுதியில் கவனிக்க யாரோ ஒருவன் முதல் மாடியின் பால்கனியில் இருந்து கீழே இறங்க முயன்று கொண்டிருந்தான்.
தான் இருந்த இடத்தில் இருந்தே அவனை நோக்கி குரல் உயர்த்தினாள் ஷியாமா.
“ஹேய் வெயிட் ஹு ஆர் யூ?”
அதற்குள் அங்கிருந்து குதித்திருந்தவன் வாசலை நோக்கி ஓட ஆரம்பித்திருந்தான்.
அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து வந்தவள் அவனைப் பின்னிருந்து பற்றி முகத்திலிருந்த மாஸ்கை கழட்ட முயன்றாள்.
தன்னை பார்க்க நினைக்கிறாள் என்பதை உணர்ந்தவனோ முழு பலம் கொண்டு அவளைத் தள்ளிவிட்டு ஓட ஆரம்பித்திருந்தான்.
அவன் தள்ளிவிட்ட வேகத்தில் ஷியாமாவால் சட்டென எழுந்து கொள்ள முடியாமல் போயிருந்தாலும் அவனின் கண்களையும் அங்க அமைப்பையும் அப்படியே தனக்குள் பதிய வைத்திருந்தாள்.
அப்போது தற்செயலாய் ஜாக்கிங்கிற்கு செல்வதற்காக வெளியே வந்த மகிழன் அவளைப் பார்த்து பதட்டமாய் அவளருகில் வந்தான். கைக் கொடுத்து அவளைத் தூக்கி விட்டவன்,
“இந்த நேரத்துல இங்க என்ன பண்ற?”
“வாக்கிங் போலாம்னு வந்தேன். வந்தப்போ அந்த பக்கம் ஏதோ சத்தம் கேட்டு..”
“என்ன?”
“ஆமா பர்ஸ்ட் ப்ளோர் பால்கனில இருந்து ஒருத்தன் இறங்குறதைப் பார்த்தேன்.
அவனை பிடிக்க ட்ரைப் பண்ணப்போ தான் என்னை தள்ளி விட்டுட்டு ஓடினான்.”
“வாட் தி ஹெல். இங்க இந்த நேரத்துல யார் வர முடியும்.. செக்கியூரிட்டி??!”
“இல்ல அவன் அந்த பக்கத்து சுவரேறி குதிச்சு தான் வந்துருக்கணும்.”
“ஆர் யூ ஜோக்கிங்.. இந்த காம்பவுண்ட் வால் தாண்டி..”
“ஐ அம் ஷுவர் அவன் கேட் இருக்குற பக்கம் வரல .. ரொம்ப தெளிவா…
இன்னும் சொல்லனும்னா அடிக்கடி பரிச்சையமான இடத்துக்கு வந்த மாதிரி தான் இருந்தது அவன் பாடி லேங்குவேஜ்.”
“வாட் யூ மீன்?”
“ம்ம் அவன் ஏற்கனவே இங்க வந்துருக்கான்னு சொல்றேன்..
எந்த பதட்டமும் இல்லாம என்னை எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சி தான் இருந்ததே தவிர மத்தபடி பக்கா ப்ளான்.”
ஒரு வேளை நடந்த கொலைக்கும் அவனுக்கும்??”
“சான்ஸஸ் ஆர் தேர்..மே பி ஆர் மே நாட்..பட் கேர்புல்லா இருக்குறது நல்லது.
அண்ட் சீசீடிவி பூட்டேஜ் பார்க்கலாமா மேபி யூ வில் கெட் சம் க்ளு?”
“ம்ம் ஷுவர் வா..”,என்றவன் செக்யூரிட்டி அறைக்கு அழைத்துச் சென்றான்.
அந்த நேரத்தில் அவனை அங்கு எதிர்பராதவராய் செக்யூரிட்டி அவசரமாய் முகத்தை துடைத்தவாறு எழுந்து நின்று சல்யூட் அடித்தான்.
அவனை நகர்த்திவிட்டு இருவருமாய் கணிணியை தீவிரமாய் ஆராய்ச்சி செய்ய சரியாய் அரை மணி நேரத்திற்க்கான காட்சிகள் பதிவாகியிருக்கவில்லை.
இருவருக்குமே குழப்பமாய் இருந்தது.இரண்டு மூன்று முறை அத்தனை கேமரா காட்சிகளையும் பார்த்து ஒன்றும் அகப்படவில்லை என்ற பின் வெளியே வந்தனர்.
“ஜாமர் யூஸ் பண்ணிருக்காங்க..”
“ம்ம்”
“அரை மணி நேரத்துல உள்ள வந்து வெளியே போறதுனா ஒண்ணு எதையாவது எடுக்க வந்துருக்கணும் இல்லை வைக்க வந்துருக்கணும்.
ஆனா அது இரண்டுமே நடந்த மாதிரி தெரில.மே பி யாரையாவது பார்க்க வந்துருக்கலாம்!”
“!!!”
“ஐ அம் டெல்லிங் யூ தி பாஸிபிலிட்டீஸ் மகிழன்..
டோண்ட் வொரி கண்டிப்பா எதாவது க்ளு கிடைக்கும்..”, எனும்போதே தியா வெளியே வருவது தெரிந்தது.
ஷியாமாவின் விழிகள் இயல்பாகவே கூர்மையாகி அவளை அளவெடுக்க மகிழன் அவளிடம்,
“இவ்ளோ சீக்கிரம் எழுந்துக்க மாட்டியே நீ என்னாச்சு?”
“இல்லை சும்மா தான் தூக்கம் வரல..அதான் கார்டனுக்கு போலாம்னு வந்தேன்.
உங்களை இங்க பார்த்தவுடனே இந்த பக்கம் வந்தேன்.”, என்றவளின் உங்கள் ஷியாமாவையும் சேர்த்து குறிப்பதாய் இருந்ததை உணர்ந்தவள் உதட்டோரப் புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
“நத்திங்..ப்ரேக்பாஸ்ட் டேபிள்ல மீட் பண்ணலாம் நீ போ..”,என்றவன் மொபைலை கையில் எடுத்தவாறே சற்று தள்ளி நின்றிருந்த ஷியாமாவின் அருகில் சென்றான்.
“வீட்டில யார்கிட்டேயும் சொல்லாம இருக்க முடியாது இந்த விஷயத்தை..
வந்தவனோட மோட்டோ தெரிலனாலும் எல்லாரையும் எச்ரிக்கையா இருக்க சொல்றது நல்லது.”
“ம்ம் கரெக்ட் தான்..சொல்லிடுங்க பட் விஷயம் இந்த வீட்டைத் தாண்டி வெளியே போக வேணாம்.
எப்பவுமே நம்மை சுத்தி இருக்குறவங்கள தான் முதல்ல சந்தேகப்படனும்..”
“ம்ம்..வில் சீ யூ லேட்டர்..”
“அண்ட் இன்னைக்கு வெளி போறேன்..கூட உங்க தம்பி தங்கையும் வராங்க..”
“அவங்களா!!சரி ஓகே டேக் குட் கேர் ஹோப்புல்லி உனக்கு தலைவலி வராம இருக்கணும்..”, என்றவன் அங்கிருந்து சென்றுவிட அதன் பின் தான் அவன் கூறியதன் அர்த்தம் புரிந்து இடவலமாய் தலையசைத்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
காலை உணவு வேளையில் அவன் விஷயத்தைக் கூற ஆளாளுக்கு ஒன்றொன்றாய் கூற ஆம்பித்து விட மகிழன் பொறுமையிழந்து கொண்டிருந்தான்.
“வர வர இந்த வீட்ல இருக்வே பயமா இருக்கு.. எப்போ என்ன நடக்குமோ தெரில”,என ரமா தேவி ஆரம்பிக்க
“ரமா வாயை மூடிட்டு இரு.இப்படி அதையும் இதையும் சொல்லி நம்மளை இங்க இருந்து வெளிய அனுப்ப தான் திட்டம் நடக்குது.
அது புரியாம நீயும் கத்திட்டு இருக்க..இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..”
“கொஞ்சம் வாயை மூடுங்க எல்லாரும்..நடந்தது இது தான்.சொல்ல வேண்டியது என் கடமை நான் சொல்லிட்டேன்.
நம்புறதும் நம்பாததும் அவங்க அவங்க இஷ்டம்.இங்க இருக்கணும்னா இருங்க இல்லையா கிளம்புங்க யாரையும் யாரும் எதுக்காகவும் கட்டாயப் படுத்த போறதில்லை.
அட்ஒன் திங் இங்க நடக்குற எந்த விஷயமும் நம்மை தாண்டி வெளியே போகக் கூடாது.
உங்க அத்தனை பேரையும் விட இந்த வர்மா சாம்ராஜ்யம் எனக்கு ரொம்பவே முக்கியம்.சாம்ஜே?”
அவன் அதட்டிய விதத்தில் அத்தனை பேரும் வாயை மூடிக் கொள்ள ஷியாமா மட்டும் எந்த உணர்வுமின்றி தன் உணவை உண்டு கொண்டிருந்தாள்.
அதைக் கண்டு இன்னும் கடுப்பானவராய் சாந்தி தேவி சத்தமாகவே முணுமுணுத்தார்.
“இங்க என்ன வீட்டு ஆளுங்க மட்டுமா இருக்காங்க?”
“ஷியாமா தான் நடந்த அத்தனைக்கும் சாட்சி அவளை வச்சிட்டு பேசுறதுல எந்த தப்பும் இல்ல.
அண்ட் எனக்கு நல்லாவே தெரியும் யாரை வச்சுட்டு என்ன விஷயம் பேசனும் பேச வேண்டாம்னு..”, என்றவன் வேகமாய் எழுந்து அறைக்குச் சென்று விட்டான்.
அவன் சென்றதை உறுதிப்டுத்தியவராய் சர்வேஷ் மனைவியிடம்,
”அவனைப் பத்தி தெரிஞ்சும் ஏன் சரிக்கு சரி பேசிட்டு இருக்க..”
“சின்ன பையன் அவன்.. அவன்கிட்ட நான் அடங்கிப் போனுமா?
இது என் அப்பா வீடு..அவனை விட எனக்கு உரிமை அதிகமவே இருக்குங்க..”, என்றவளை பேச்சுவாக்கில் சற்றே தள்ளி அழைத்துச் சென்றவர்,
“சாந்தி ஆத்திரத்துல வார்த்தை விடாதே அந்த உரிமை உனக்கு இருந்திருந்தா இந்நேரம் இவன் பேசுறதெல்லாம் கேட்டுட்டு நான் அமைதியா இருப்பேனா..
உங்கப்பா உயில்ங்கிற பேர்ல தான் நம்மளை இந்த நிலைமை ஆக்கிட்டு போய்ட்டாரே..
இன்னும் கொஞ்ச காலம் பொறுமையா இரு..நம்ம தியா இந்த வீட்டு மருமகளா ஆகட்டும் அதுக்கப்பறம் அவனை உண்டு இல்லனு பண்ணலாம்..”
“ம்ம் புரியுதுங்க..இருந்தாலும் அவன் முகத்தை பார்த்தாலே ஆத்திரம் கண்மண்ணு தெரியாம வந்து கோபத்துல வார்த்தையும் வந்துடுது..இனி பார்த்து நடந்துக்குறேன்.”
அங்கு தியாவோ ஷியாமாவை எரிக்கும் பார்வை பார்த்துச் சென்றாள்.
ஷியாமாவால் என்ன பிரச்சனை என்பதை யூகிக்க முடியவில்லை எனினும் எதோ ஒரு விதத்தில் அவளுக்குத் தன்னை பிடிக்கவில்லை என்பதை ஒரு ஒரு சந்திப்பிலும் பதிய வைக்க முயற்சிக்கிறாள் என்பது நன்றாகவே புரிந்தது.
தியா எழுந்து சென்றபின் மோனிஷாவும் ஆஷிக்கும் தங்களுக்குள் சிரித்துக் கொள்ள என்ன என்பதாய் புருவம் உயர்த்தினாள் ஷியாமா.
“ம்ம் ஒண்ணும் இல்ல..தியா உங்களை கண்ணாலேயே எரிச்சுடுவா போலேயே..”
“ம்ம் நீங்களும் பார்த்தீங்களா?ஆனா ஏன்னு தான் புரில..”
“ம்ம் பின்ன அண்ணாவோட எர்லி மார்னிங் நின்னு பேசிட்டு இருந்தீங்களாமே?”
“ஆமா அதுக்கும் அவங்களுக்கும்??”
“ஹா ஹா அவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாண பேச்சு நடந்துட்டு இருக்கு ஆனா அண்ணா பிடி கொடுத்தே பேச மட்றார்.
அதுகுள்ள தாத்தா இறந்துட்டதால அந்த பேச்சு அப்படியே நிக்குது..”
“இன்ட்ரஸ்டிங்..பட் இதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?ஓஓ..
என்னை வில்லியா பாக்குறாங்களா?”, என்றவள் லேசாய் புன்னகைக்க மற்ற இருவருமே சிரித்திருந்தனர்.
“இருக்காதா பின்ன அண்ணாக்கு ப்ரெண்ட்ஸ் இருக்காங்கனு சொன்னாலே நம்ப மாட்டோம் அதுலேயும் இப்போ ஒரு பொண்ணு வீட்டுக்கே வந்துருக்கானா..”
“அடடா இது வேறயா இதனால தான் நான் வந்ததை பல பேர் கொலைவெறியோடே பார்த்தாங்களா?”
“ஹா ஹா எங்களுக்கே கூட அந்த டவுட் இருக்கு..”
“ம்ம் அப்போ உங்க அண்ணாகிட்டேயே போய் க்ளியர் பண்ணிட வேண்டியது தான?”
“ஐய்யய்யோ ஆளை விடுங்க தெரியாம பேசிட்டோம்..”
“ம்ம் அந்த பயம் இருக்கட்டும்..சரி இரண்டு பேரும் என்னோட வெளில வரீங்களா இல்லையா?”
“போலாம் போலாம் அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துட்றேன்..”, என்றவாறு மோனிஷா அங்கிருந்து நகர ஆஷிக் சற்றே தீவிரமய் அவளைப் பார்த்தவாறு,
“அப்போ நிஜமாவே நீங்க தியாக்கு வில்லி இல்லையா?”
ஆச்சரியமாய் அவனைப் பார்த்தவள் பின் சட்டென சிரித்திருந்தாள்.
விளையாட்டாய் கூறுவதைப் போல்,”உங்க அண்ணனைப் பத்தி தெரிஞ்சுமா இப்படி கேக்குற?”
“இல்ல நிஜமாவே நீங்க ரெண்டு பேரும் நிறைய விஷயத்துல ஒத்து போறீங்க அதனால கேட்டேன்.”
“ஆஹான்..சேம் போல்ஸ் எப்போவுமே அட்ராக்ட் பண்ணாது ஆஷிக்..
வாங்க உங்க டைரைக்ஷனுக்கு நல்ல கதையா யோசிக்க போங்க..”,என்றவள் தன் கூலர்ஸை போட்டவாறே போர்டிகோவில் நின்றிருந்த காரில் ஏறி அமர்ந்தாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
3 comments
சின்ன பையனுக்கு கூட புரியுது. இவ தான் அண்ணின்னு. இவளுக்கு தோணல.
Super💕
Nice