அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை

மு.வ விளக்க உரை: போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.

விடியல் தனது கம்பெனியிலிருந்து வீட்டிற்கு வந்திருந்த நேரம் இளங்கோவும் வாசந்தியும் வீடு திரும்பியிருந்தனர்.

“ஹே வந்தாச்சா இரண்டு பேரும்..”, என்றவள் சோபாவில் அமர்ந்திருந்த தந்தையின் மடியில் தலை வைத்து அப்படியே விழுந்திருந்தாள்.

“சின்னு வந்தவுடனே என்னை டென்ஷன் பண்ணணுமா உனக்கு. ரெப்ரெஷ் ஆகிட்டு வா டி..”

“ம்மா செம டயர்ட்.. அப்பறம் பா இன்னைக்கு ஈவெண்ட் எங்கே தெரியுமா மினிஸ்டர் ராதிகா அவங்க வீட்டில் தான்.”

“ஹே சின்னு மஞ்சுநாத் சார் வீட்டுக்கா போயிட்டு வந்த? எப்படியிருந்தது?”

“எவ்ளோ பெரிய வீடு ப்பா.. ரொம்ப அழகா இருந்தது. அவர் பொண்ணுக்கு தான் கல்யாணம் போல.”

“ம்ம் நானும் கேள்வி பட்டேன். பிரம்மாண்டமா செட் போட்டு கல்யாணம் நடக்க போகுதாம். பிசினஸ் சர்க்கிள் மொத்தம் அதைப் பத்தி தான் பேச்சு.”

“விஜி சொன்னாங்க ப்பா.. எனக்கு தான் எதுவுமே தெரியலை. அவங்க பையன் கூட இன்னைக்கு இருந்தார்.

“மேகன் மஞ்சுநாத் தான அப்பா பத்தடினால் இவர் நூறடி போவார் போல இருக்கு. கடந்த ஒரு வருஷத்துல அவங்க ப்ராஃப்பிட் பல மடங்கு அதிகமாயிருக்கு.”

“ஓ!”

“அது மட்டுமில்லாம புதுசா நிறைய ஐடியாஸ் வரப் போறதாவும் பேச்சு இருக்கு சின்னு.”

“ம்ம் விஜயும் அவரைப் பத்தி நிறைய சொன்னார்.”

“சரி சரி அப்பாவும் பொண்ணும் மொக்கை போடுறதை நிறுத்திட்டு சாப்பிட வாங்க..”, என்ற வாசந்தியைப் பார்த்து இருவருமாய் முறைத்தனர்.

அங்கு மேகனின் அறையில் அவன் முன் விடியலின் மொத்த விவரங்களும் இருந்தது. அதில் விஜயுடைய விவரங்களும் அடக்கம்.

மென்டலிசம் என்பதிலேயே சற்று அவன் கவனத்தைப் பெற்றவள் இப்போது தந்தையின் தொழிலையும் பார்த்துக் கொள்வது தெரிந்தவுடன் இன்னுமாய் கவனம் பெற்றாள்.

கல்லூரி காலத்தில் நண்பர்கள் என்று இருந்த இரண்டு மூன்று பேருடன் பெண்களைக் கவனிப்பது, தன் பின் சுற்ற வைக்க பெட் கட்டுவது என்றெல்லாம் நடத்தியவன் தான்.

ஆனால் அதன் பின் அவனின் மொத்த கவனமும் தொழிலைத் தன் வசம் ஆக்குவதாகத் தான் இருந்தது. சொல்லப் போனால் தொழில் பேர் புகழ் கௌரவம் இதெல்லாம் அவனுக்கு ஒருவித போதை.

அதைத் தாண்டி எந்த எண்ணமும் இல்லாததாலோ என்னவோ காதல் கதையெல்லாம் அவனிடத்தில் இருக்கவில்லை.

அப்படிபட்டவனின் கவனத்தை மொத்தமாய் தன்புறம் இன்று ஒரு யுவதி திருப்பியிருக்கிறாள்.

கண்டதும் காதல் இல்லை ஆனால் அனைவரின் மனதையும் படிக்க முடியும் திறமை உள்ளவள் அவனிடத்தில் தடுமாறிய அந்த ஒரு நொடி மேகனை ஈர்த்திருந்தது.

அவனைப் பற்றித் தெரிந்து அவனிடம் பழக முயற்ச்சிப்பவர்கள் வேறு ஆனால் அவளறியாமல் தன் கண்களில் கட்டுண்ட ஒருத்தி என்பதிலேயே அவன் எண்ணம் உழன்றது.

அதை விட ஆர்பாட்டமில்லாத அவளது அழகும் உடை நேர்த்தியும் தன்னை பொதுவெளியில் அவள் காட்டிக் கொள்ளும் விதமும் அவனுக்குப் பிடித்திருந்தது.

மறுநாள் தங்கையின் வரவேற்பு அடுத்த நாள் திருமணம் காலை விடிந்ததும் அறையை விட்டு வெளியே சென்றால் கழுத்தை நெறிக்கும் அளவு வேலைகள் இருக்கிறது.

ஆனால் இந்த நொடி அவன் கையில் இருக்கும் புகைப்படம் அவனது மனதை அமைதிப் படுத்திக் கொண்டிருக்கிறது.

மேகனுக்கு தன் மனதின் நோக்கம் புரிந்தாலும் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தான்.

ஏனெனில் ஒரு முறை அவன் முடிவாகி விட்டால் அதன் பின் எக்காரணம் கொண்டும் அதில் இருந்து பின் வாங்க போவதில்லை.

அதனால் பல பல இடையூறுகள் நிச்சயம் வரும் என்பது புரிந்து அப்போதைக்கு அப்படியே விட்டிருந்தான். காலையில் எழுந்தவன் நேராய் தாய் தந்தை அறைக்குச் சென்றான்.

“குட் மார்னிங் டேட். மார்னிங் மாம்..”

“வா கண்ணா..”, என்ற ராதிகா தனது அருகில் கை காட்ட கட்டிலில் அமர்ந்தவன் அன்று மாலையும் மறுநாள் திருமணத்திலும் நடக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி பேசினான்.

“கண்ணா சைத்து கல்யாணம் முடிஞ்சு உன் கல்யாணத்தை முடிக்கலாம்னு நினைக்குறோம்.”

“..”

“உனக்கு எந்த மாதிரி பொண்ணு பார்க்கணும்னு எதுவும் விருப்பம் இருந்தா சொல்லு. அம்மா பெஸ்ட்டா கொண்டு வரேன் உனக்காக..”

“இப்போ என்ன அவசரம் மாம்.. கொஞ்ச நாள் ஆகட்டும்.”

“மேக்.. அடுத்து இரண்டு மாசத்துல யுவன் கல்யாணம் உனக்கும் வயசு போயிட்டே இருக்கு.”

“அதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது டேட்..”

“!!”

“நானே சொல்றேன். அப்பறம் பார்க்கலாம்.”, என்றவன் கீழ் தளத்திற்கு வர அவனைப் பார்த்த அத்தையும் சித்தப்பாவும் அவனை கட்டி அணைத்துக் கொண்டனர்.

“மேக் எப்படியிருக்க பா?”

“ஃபைன் அத்தை.. சித்தப்பா பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு..”, என்ற நேரம் அவனது சித்தி மூவருக்கும் காபியைக் கொடுத்தவராய்,

“நல்லா கேளு மேக்.. வீடு குடும்பம்னு இருக்குறதையே மறந்துருவார் போல. நம்ம வீட்டு கல்யாணத்துக்கே விருந்தாளி மாதிரி வந்துருக்கார் பாரு..”

“அட ஆரம்பிக்காத. அதான் வந்தாச்சே அப்பறம் என்ன..”, என்றவர் மேகனை அழைத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் சென்றார்.

“என்ன ப்ராப்ளம் சித்தப்பா?”

“எப்படி டா கண்டுபிடிக்குற..”

“சொல்லுங்க என்ன விஷயம்?”

“டெல்லில பெரிய கை ஒருத்தன் மேக். ஒரு கான்ட்ராக்ட் விஷயமா என்ட்ட பேசினான். அதில் நிறைய தப்பு இருக்கு சோ அப்ரூவ் பண்ண முடியாதுனு சொல்லிட்டேன்.

ஆனால் அவன் பணம் கொடுத்து சரி பண்ணிக்கலாம் அது இதுனு விடாம தொல்லை. எதுக்கும் ஒத்து வரலைனு இப்போ மிரட்டுற அளவு வந்துருக்கான். என்ன பண்ணலாம்?”

“உங்க பேக்ரவுண்ட் தெரிஞ்சும் கூடவா?”, என்றவன் புருவம் சுருக்க அவரோ,

“நீ யாரா இருந்தாலும் டெல்லி என் கோட்டைங்கிறான்.”

“சரி நான் பார்த்துக்குறேன்.”

“கண்ணா பார்த்து.. எதுவும்..”

“பிரச்சனைனு சொல்லிட்டீங்க. நான் அதுக்கு ஸ்ல்யூஷன் தரேன். அதுக்கு மேல பேச ஒண்ணுமில்ல.

நான் பார்த்துக்குறேன்.”, என்றவன் சென்று விட அண்ணனுக்குத் தெரிந்தால் தன்னை உண்டு இல்லை என்று ஆக்குவாரே என்று நெற்றியைத் தடவினார்.

பிரச்சனை சற்று பெரிது என்பதால் தான் நேரடியாக மேகனின் பார்வைக்கு எடுத்து வந்தார்.

அவனால் மட்டுமே இதை முடிக்கவும் முடியும் அண்ணனின் பொறுமையும் நேர்மையும் ஒத்து வராது என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

விடியல் தனது அலுவலகத்தில் வேலையில் இருக்க அவளது கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்த ஒலியெழுப்ப எடுத்துப் பார்த்தவள் வெறும் “Hi”, என்று இருந்ததில் தெரியாத எண் என்பதால் அதற்கு பதில் அனுப்பாமல் தனது வேலையைக் கவனித்தாள்.

பின் மதியத்திற்கு மேல் வீட்டிற்குச் செல்வதற்காக கீழே வந்த நேரம் சுற்றதில் சிறிது பரபரப்பை உணர முடிந்தது விடியலால்.

என்னவென்று யோசித்தப் படியே தந்தைக்கு அழைத்தவள் அவர் அழைப்பை ஏற்றதும்,

“ப்பா.. இங்கே ஏதோ பரபரப்பா இருக்குற மாதிரி இருக்கே. என்ன விஷயம் உங்களுக்கு எதுவும் தெரியுமா?”

“நானே உன்னை கூப்பிடணும்னு இருந்தேன் சின்னு இந்த பில்டிங் மொத்தமும் இப்போ MR groups கிட்ட போயிடுச்சாம்.

சோ இனிமே அவங்களுக்கு கீழே தான் நம்ம கம்பனிஸ் இருக்கும்.”

“ஓ! என்னப்பா திடீர்னு?”

“தெரியலை டா. கொஞ்ச நாளா பேச்சு வார்த்தை போனதா சொல்றாங்க. ஏதோ பண நெருக்கடி போல..”

“இதனால நமக்கு எந்த பிரச்சனையும் இருக்காது தானப்பா..”

“ம்ம் பெருசா எதுவும் இருக்காது தான். பட் புது மேனேஜ்மென்டோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் அண்ட் ரென்ட் எல்லாம் என்னனு விவரம் தெரிஞ்சா தான் முழுசா நிம்மதி அடைய முடியும். பார்க்கலாம்.”, என்றவரோடு பேசி விட்டு வீட்டிற்கு கிளம்பியவளுக்கும் சிந்தனைகள் பலவாறு ஓடிக் கொண்டிருந்தன.

சைத்ராவின் திருமணம் கோலாகலமாய் முடிந்திருக்க தாய் தந்தையை விட அண்ணனை விட்டு நகர முடியாமல் தான் அழுது கொண்டிருந்தாள்.

அவளுக்கு இருக்கும் நெருக்கம் மேகனோடு அங்கு யாருக்குமே கிடையாது சொல்லப் போனால் தாய் தந்தைக்கு கூட.

அண்ணனைப் பக்கவாட்டில் கட்டி நின்று விசும்பியவளை பலவாறாகத் தேற்றி அனுப்பி வைத்தான் மேகன்.

“மேக் பேசாம நான் உனக்கு தங்கச்சியா பொறந்துருக்கலாம் டா.”, என்ற யுவனைப் பார்த்தவன் வயிற்றிலேயே விளையாட்டாய் குத்தினான்.

“அப்பறம் அடுத்த கல்யாண மாப்பிள்ள.. என்ன சொல்றாங்க உங்க ஃபியான்ஸே..”

“எங்க.. பேசியே நாலு நாள் ஆகுது. அவளுக்கு கேஸஸ் ஜாஸ்தி. நான் ஃப்ரீயா இருக்கும் போது அவ பிஸியா இருக்கா..”

“கல்யாணத்துக்கு அப்பறம் காதுல ரத்தம் வர்ற அளவு பேச தான போறீங்க. அப்பறம் என்ன டாக்டர்?”

“ஏன் சொல்ல மாட்ட.. பாக்குறேன் உன் கல்யாணத்துக்கு முன்னாடி நீ எப்படியிருக்கனு.”

“யுவா உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்.”, என்றவன் அவனோடு சற்று நகர்ந்து சென்றான்.

“சொல்லு மேக்?”

“ம்ம்.. நேத்ராக்கு.. அவகிட்ட யாரும் எந்த ஃபால்ஸ் ஹோப் கொடுத்துருந்தா இப்போவே அவகிட்ட சொல்லி வை யுவன்..”

“எதைப்பத்தி டா பேசுற?”

“கொஞ்ச நாளா அவ என்கிட்ட பேசும் போது வித்தியாசம் தெரியுது..”, என்றவன் இடக்கையால் புருவத்தைக் கீறினான்.

“மேக் என் தங்கச்சிக்கு அண்ணனா உங்க கல்யாணம் நடந்தா நான் ரொம்பவே சந்தோஷப்படுவேன்.”

“யுவா இது நடக்கப் போறதில்ல. அதனால தான் உன்கிட்ட விஷயத்தை சொல்றேன். இதை நீ நேரடியா அவகிட்ட பேசுறது தான் நல்லது.”

“!!”

“நான் சொன்னால் அப்போ அதை ஏத்துக்குற மன நிலைமை அவளுக்கு இருக்குமானு தெரியலை. சோ ப்ளீஸ்.”, என்றவன் நகர முற்பட யுவன் அவசரமாய்,

“யாரையும் விரும்புறியா மேக்?”, என்று கேட்க தலையை மட்டும் அவன் புறம் திருப்பியவன் இல்லை என்பதாய் தலையசைத்து நகர்ந்திருந்தான்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

10 comments

Kavi Natarajan September 4, 2026 - 5:06 pm

💞💞💞💞💞💞💞💞

MalarMurugan September 4, 2026 - 6:01 pm

பாருடா 😏😏😏
ஏன் இப்படி ஒரு மாற்றம்

Mrs Beena loganathan September 4, 2026 - 6:04 pm

இல்லையாமே…. 😂😂😂😂
இருக்க வைத்து விடுவோம்…. 🔥🔥❤️❤️😘😘😘

Pala September 4, 2026 - 6:18 pm

இந்த மேக் என்ன மேக் author

😂😂

ஸ்ரீ September 4, 2026 - 6:29 pm

Ha ha athane..😂

Krishnav September 4, 2026 - 7:24 pm

🥰🥰🥰🥰

suganyavel September 4, 2026 - 10:41 pm

Interesting🤔

Kiruthika M September 4, 2026 - 11:00 pm

Apdiya Mr Meghan yarum ilaya Building eh vangitinga inum ilanu sonna yepdi 🤭

Mathy September 5, 2026 - 5:07 pm

நைஸ் 😍😍😍

srichitra September 5, 2026 - 6:26 pm

Nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode