உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்

மு.வ விளக்க உரை: கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.”

விடியல் விஜய்க்கு அழைத்த படி நடக்க பவுன்சர்கள் இருவர் அவளை சாப்பாட்டு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விஜய் ஒரு மீட்டிங்கில் இருப்பதாகவும் விரைவாக வந்து விடுவதாகவும் குறுஞ்செய்தி அனுப்பிட அவனுக்கு பதில் அனுப்பி விட்டு அவ்விடத்தை பார்வையிட்டாள்.

பஃபெட் முறையில் அமைக்கப்பட்டிருந்த உணவுகளைக் கவனித்தவள் தனக்கான தட்டை எடுத்துக் கொண்டு தேவையானவற்றை நிரப்பி ஒரு ஓரமாய் இருந்த இருவர் அமரும் மேசையில் அமர்ந்தாள்.

“ஹாய்..”, என்ற குரலில் திரும்பியவள் புன்னகைக்க கையில் ஜுஸ் டம்ளரோடு வந்து அவளெதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் மேகன்.

“ஹாய் மேகன்..”

“எவ்வளவு அழகா பெயரைச் சொல்லி கூப்பிடுறீங்க. நான் மட்டும்..”, என்றவன் புருவமுயர்த்த லேசாய் புன்னகைத்தவளாய்,

“இந்த உலகத்துக்கு V மட்டுமே போதும்னு ஒரு எண்ணம். பை த வே ஐ அம் விடியல்.”

“வாட் கம் அகென்?!”

“என் பேர் விடியல்.”

“தமிழா?”

“ஓ யா.. உங்களுக்கும் தமிழ் தெரியுமா?”

“தாய் மொழி ஆச்சே எனக்கு.”, என்றதில் சிரித்திருந்தாள்.

“நைஸ் நேம். உண்மையை சொல்லணும்னால் ஐ அம் இம்ரஸ்ட் வித் யூவர் ஸ்கில்.”

..”

“எப்படி இதெல்லாம் பாசிபிள்?”

“மேஜிக் மேல நம்பிக்கை இருக்கா? அப்பா இதுவும் ஒரு வித மைண்ட் மேஜிக் தான்.”

“அக்சுவலி சைத்து தான் பிடிவாதமா உன்னை ரெஃபர் பண்ணினா.

அது வரைக்கும் இதைப் பத்தி எனக்கு நோ ஐடியா. பட் இப்போ..”, என்றவன் உதடு வளைத்து மிக மெலிதான புன்னகையைப் படர விட்டிருந்தான். ஒரு நொடி விடியல் அந்தப் புன்னகையை ரசித்திருந்தாள்.

“எப்போ இருந்து இதைப் பண்ற?”, வெகு இயல்பான ஒருமை விழிப்பு அவனிடத்தில். விடியலுக்கு அது உரைத்தாலும் பெரிதாக காட்டிக் கொள்ளாதவளாய்,

“என்னோட லெவென்த் க்ளாஸில் இருந்து.”

“வாட்??”

“யா.. இன்ட்ரெஸ்ட் இருந்தது. அப்பாகிட்ட சொன்னப்போ அதை என்கரேஜ் பண்ணாரு. நிறைய படிச்சு கத்துகிட்டேன்.”

“பேசிக்லி இது எப்படி பாசிபிள்?”

“கொஞ்சம் சைக்காலஜி கொஞ்சம் பாடி லேங்க்வேஜ் அண்ட் சம் சீக்ரெட்ஸ்..”, என்றவள் கண்சிமிட்டிச் சிரித்தாள்.

“ம்ம் நல்ல ஒரு ப்ரொபஷன். அண்ட் நீங்க வாங்குற அமௌண்ட் வொர்த் அ பென்னி..”, என்றதற்கு பதில் கூறாமல் அமைதியாய் இருந்து கொண்டாள்.

அவன் சாதாரணம் போல் கூறியது அவளுக்கு அவன் பணத்தை வைத்து தனது தகுதியை நிர்ணயிக்கிறான் என்று தோன்றியது.

“போலாமா விடியல்?”, என்று வந்த விஜயை பக்கவாட்டில் தலைத் திருப்பி பார்த்தவன் விடியலைப் பார்க்க உணவை முடித்துக் கொண்டவளாய்,

“யா போலாம் விஜி.”, என்ற படி தனது கைப்பையை எடுத்துக் கொண்டாள்.

“ஓகே பார்க்கலாம் மிஸ்டர் மேகன்..”, என்றவள் எழுந்து கொள்ள அவனது பார்வையோ அவர்கள் இருவரையும் துளைத்துக் கொண்டிருந்தது.

லேசாய் தனது கரத்தை மட்டும் அசைத்தவன் அப்படியே அமர்ந்திருக்க விடியல் விஜயோடு கிளம்பியிருந்தாள்.

“மஞ்சுநாத் சார் பையன் தான அது?”

“ம்ம் அப்படி தான் நினைக்குறேன்  விஜி..”

“நினைக்குறீங்களா?! என்னை விட மூணு வயசு தான் பெரியவர் ஆனா பக்கா பிஸினஸ் மைண்ட். அவங்க அப்பாக்கு போன வருஷம்  மைல்ட் அட்டாக் அதிலிருந்து தொழில் மொத்தமும் இவர் தான்.

பட் அவங்க அப்பா ரொம்ப நேர்மையான ஆளு. இவரு தனக்கு சாதகமா விஷயம் அமையணும்னால் என்ன வேணாலும் பண்ணுவாரு.”

“!!”

“நல்லவர் தான். பட் இவங்களுக்கு எதிரா இருக்குறவனை அழிக்கணும்னு முடிவு பண்ணிட்டா எந்த  லெவலுக்கும் போவார்னு கேள்வி பட்டுருக்கேன்.”

“எப்படி விஜி இவ்வளவு தெரிஞ்சு வைச்சுருக்கீங்க?”

“இவங்களைப் பத்தி தெரியாம இருக்குறது நீங்க மட்டுமா தான் இருக்கும்.”, என்றவன் சிரிக்க விடியல் அவனை விளையாட்டாய் முறைத்து வைத்தாள்.

அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்தவனோ விடியலின் சமூக வலைதள பக்கத்தைத் தான் பார்த்திருந்தான்.

அவளது புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தையும் பார்த்திருந்தவன்,

“பார்த்தி..”, என்று குரல் கொடுக்க கருப்பு சீருடையில் உயரமாய் வந்து நின்றவனிடம் தனது கைப்பேசியில் இருந்த விடியலின் புகைப்படத்தைக் காட்டிட அவன் ஒன்றும் கூறாமல் மேலும் கீழுமாய் தலையசைத்து நகர்ந்திருந்தான்.

அவளது புகைப்படத்தை பார்த்திருந்தவனுக்கு தன் கண்களைச் சந்தித்த போது அவளது விழிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் நினைவில் வர இதழோரம் ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு புன்னகை இளையோடியது.

அங்கிருந்து எழுந்தவன் வீட்டிற்குள் சென்ற போது தன் தங்கை தம்பியோடு அத்தை பிள்ளைகளும் சித்தப்பா பிள்ளைகளும் அமர்ந்து கதையடித்துக் கொண்டிருந்தனர்.

“அண்ணா.. நீயும் வா..”, என்ற சைத்ரா கை நீட்ட அவளது கைப் பற்றிய படி அவளுக்கு அருகில் அமர்ந்தவன் தளர்வாய் பின் சாய்ந்து அமர்ந்தான்.

“என்ன மாமா அதிசயமா வீட்ல எல்லாம் இருக்கீங்க?”, அவனின் அத்தை மகள் நேத்ரா புன்னகைக்க மேகன் பதில் கூறுவதற்குள் அவன் தம்பி சைதன்யா அவளிடம்,

“நாங்களே அவர் வீட்ல இருக்காரேனு சந்தோஷப்படுறோம் உனக்கு பொறுக்காதே..”, என்றதில் சிறு குஷனை எடுத்து அவன் மீது எரிந்தாள்.

“சைத்தா சும்மா இரு டா..”, என்ற யுவன் தங்கையின் தலையில் தட்டினான்.

“அண்ணா அவன் தான.. என்னை ஏன் அடக்குற..”

“ஆரம்பிச்சுட்டாங்க..”, என்ற சுகனும் ரகுவந்தும் தலையில் கை வைத்து விட்டிருந்தனர்.

மஞ்சுநாத் ராவிற்கு உடன் பிறந்தவர்கள் ஒரு தங்கையும் தம்பியும். சிறு வயதில் நடுத்தர வர்க்கம் தான் அவர்களுடையது.

மஞ்சுநாத்தின் முயற்சியில் தொழிலில் முன்னேற தம்பி தங்கையையும் தன்னோடு சேர்த்து உயர்த்தினார்.

தொழில் சக்கரவர்த்தி மஞ்சுநாத் எனில் அவரது தம்பி மத்திய அரசின் உயரிய பதவியில் இருப்பவர்.

தங்கையோ கர்நாடக மாநிலத்தின் பெரும் செல்வந்தரின் மனைவி.

மஞ்சுநாத் தனது தம்பி குடும்பத்தோடு ஒரே வீட்டில் வசித்திருக்க தங்கை பெங்களூரிலேயே வேறொரு ஏரியாவில் வசித்து வருகிறார்.

இத்தகைய நிலையில் மஞ்சுநாத்தின் தாய் மூலம் பார்த்து அவருக்கு நிச்சயம் செய்ப்பட்டவர் தான் ராதிகா.

அப்போது அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் இருந்தவர்களின் தங்கை மகள்.

விடுமுறைக்கு அங்கு வந்தவரைப் பார்த்தவருக்கு மிகவும் பிடித்து விட மகனிடம் விருப்பத்தைக் கேட்டு திருமணத்தை முடித்திருந்தார்.

கல்லூரி முடித்த காலத்திலேயே அரசியலில் ஈடுபாடு இருந்தவருக்கு மஞ்சுநாத்தும் ஆதரவு கொடுக்க அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

எம் எல்ஏவாக இருந்து நற்பெயர் பெற்று இப்போது கடந்த எட்டு வருடங்களாகத் தொடர்ந்து கர்நாடகாவின் கல்வித்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

பெற்றவர்கள் அத்தனை பேரும் முக்கிய பொறுப்புகளில் இருக்க பிள்ளைகள் அனைவருமே ஒருவருக்கொருவர் துணையாய் நண்பர்களாய் வளர்ந்தனர்.

மஞ்சுநாத்தின் தம்பிக்கு இரு மகன்களான சுகனும் ரகுவந்தும் இருக்க தங்கை பிள்ளைகள் யுவனும் நேத்ராவும்.

யுவன் பெங்களூரின் மல்டி ஸ்பெஷால்ட்டி மருத்துவமனை ஒன்றில் மகப்பேறு மருத்துவனாய் இருக்க நேத்ரா ஆடை வடிவமைப்பாளராய் இருக்கிறாள்.

சுகன் ரகுவந்த் மற்றும் சைதன்யா நமது நாயகனோடு சேர்ந்து குடும்பத் தொழில்களைப் பார்த்துக் கொள்கின்றனர்.

இளையவர்களில் பெரியவன் யுகன் அடுத்ததாய் மேகன் அவனைத் தொடர்ந்து அவன் தங்கை சைத்ரா அடுத்து நேத்ராவும் சுகனும் மூன்று மாத வித்தியாசத்தில் இருப்பவர்கள் அவர்களைத் தொடர்ந்து ரகுவந்த் இறுதியாய் வீட்டின் கடைக்குட்டி சைதன்யா.

“இதுக்காக தான் நான் வீட்டில் இருக்குறதே இல்ல. குழந்தைங்களா டா நீங்க..”, என்றபடி மேகன் எழ முயற்சிக்க சைத்ரா அவனது கரம் பற்றியவளாய்,

“அண்ணா அவங்களை விடு. எனக்கு பசிக்குது. இன்னைக்கு தான் நீ வீட்டில் இருக்க.. சாப்பாடு ஊட்டி விடு ண்ணா..

நாளைக்கு கல்யாணத்துக்கு அப்பறம் இந்த சான்ஸ் எல்லாம் எப்போ கிடைக்குமோ..”

“எதுக்கு இந்த ட்ராமா உனக்கு எப்போ தோணிணாலும் இதெல்லாம் நடக்கும்.”, என்றவன் சாப்பாடு எடுத்து வருமாறு கூறினான்.

அவனுக்கு தங்கை சைத்ரா மட்டும் எப்போதுமே தனி. அதன் காரணம் சிறு வயதில் விளையாட்டாய் அவளை நீச்சல் குளத்தில் மேகன் தள்ளி விட்டிருக்க அவள் பிழைத்ததே கடவுள் புண்ணியம் எனும் நிலை.

அதிலிருந்து தங்கை என்றால் எதுவும் செய்வான். தன்னால் தான் அப்படி ஆனது என்ற குற்றவுணர்வு ஒரு புறம் எனினும் கண் விழித்த பின் அண்ணனைப் பார்த்து புன்னகைத்து அவள் தன் கரத்தை நீட்டியது அப்படியே அவன் மனதில் பதிந்து போனது தான் முக்கிய காரணம்.

தங்கை கேட்டால் எதுவும் நடக்கும் மேகனிடத்தில். அவளது திருமணம் கூட அப்படித்தான்.

மாப்பிள்ளை கிருஷ்ணா அவர்களது பிசினஸ் பார்ட்னர் ஒருவரின் மகன் தான். இருவருக்கும் நான்கு வருட காதல்.

பார்ட்னர் எனினும் மஞ்சுநாத்தின் வசதியில் பாதி கூட ஒப்பிட முடியாது எனும் ரகம் தான்.

மஞ்சுநாத் இதைக் காரணம் கூறி திருமணத்தை எதிர்க்க மேகனோ தனது ஷேரிலிருந்து சில பங்கை கிருஷ்ணாவின் பெயருக்கு மாற்றியிருந்தான்.

விஷயமறிந்து மஞ்சுநாத் கொதித்தெழ மேகனோ எவ்வித ஆர்பாட்டமும் இன்றி தந்தையிடம்,

“என் தங்கச்சிக்கு அவனைத் தான் பிடிச்சுருக்கு. இந்தக் கல்யாணம் நடக்கணும். உங்க கோவமும் நியாயம் தான் அதை இப்போ சரி பண்ணிட்டேன்.

பிரச்சனை சால்வ்ட். கல்யாண தேதியைப் பாருங்க டேட்.”, என்றவன் தந்தையை உறுத்து விழித்தான்.

“மேக் இது வாழ்க்கை சம்ந்தப்பட்ட விஷயம் அவளுக்கு பிடிக்குதுனு வாங்கிக் கொடுக்க விளையாட்டு பொருள் இல்ல. நாளைக்கே உன் தங்கச்சி கண்ணை கசக்கிட்டு வந்து நின்னா..”

“அந்தக் குடும்பம் இருந்த இடம் தெரியாம போயிடும்.”, என்றவனிடம் சிறு சலனமும் இல்லை.

“மேக்!!”

“டேட் ரொம்ப டென்ஷன் ஆகாம கல்யாண வேலையைப் பாருங்க.”, என்ற நேரம் அவனது தாய் ராதிகா உள் நுழைந்தார்.

“ஹாய் மாம்..”

“ஹாய் கண்ணா.. அப்பாகிட்ட இவ்வளவு அனல் பறக்க பேச வேண்டியது அவசியம் தானா?”, என்றவர் அவனருகில் அமர தாயை ஒரு நொடி பார்த்தவன்,

“சைத்துவோட சந்தோஷம் எனக்கு முக்கியம். அவ்வளவு தான் மாம்..”, என்றவன் அங்கிருந்துச் சென்றிருந்தான்.

“ராது இவன் நாளுக்கு நாள் ரொம்ப அடமெண்டா இருக்கான்.”, என்ற கணவரின் அருகில் அமர்ந்தவராய்,

“எனக்கும் புரியுது ஆனால் நாம சொல்லி புரிய வைக்குற வயசும் இல்ல அவன் பொசிஷனும் இல்லங்க.

இதுக்கு தான் பிசினஸை அவன்கிட்ட லேட்டா கொடுக்கலாம்னு சொன்னேன்.”

“ம்ம் என் உடம்பு பிரச்சனை வெறும் 1% காரணம் தான். அவன் மூணு வருஷம் முன்னாடியே பிசினஸ்கான எல்லா வேலையும் பேக் எண்டில் பார்த்துருக்கான் ராது.”

“விடுங்க அவன் எப்பவும் எந்த தப்பும் பண்ண மாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க கவலைப் படாதீங்க.”, என்றதற்கு அமைதியாய் தலையசைத்தார் மஞ்சுநாத்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

3 comments

Mrs Beena loganathan September 4, 2026 - 9:23 am

அழுத்தமும் ஆணவமும்
ஆளுமையும் கொண்ட மேகன்
அன்பு தங்கைக்காக
அனைத்தையும் செய்பவன்…
அழகணும் கூட… 🔥❤️😘

அவள் வருவாளா
அவனை அவளுக்குள்
ஆட்டி படைக்க வருவாளா….
அதிகாரமும் ஆணவமும்
அவளுக்கு பிடிக்கவில்லை….

அலட்சிய பாவனையை
அடித்து தூள்தூளாக
அழிக்க வருவாளா…..

Kavi Natarajan September 4, 2026 - 10:42 am

💞💞💞💞💞💞

EswariSkumar September 4, 2026 - 12:01 pm

Attitude hero 😛😛😛😛let’s see…..

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode