412
“உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
மு.வ விளக்க உரை: தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.”
விடியலின் தொழில் ஆர்வத்தோடு சேர்ந்து அவளது பேஷனாக மாற்றிக் கொண்டது தான் இந்த மென்டலிஸ்ட் துறை. சிறு வயதில் இந்த மாயாஜாலங்களை பார்த்து பிடித்துப் போனவளுக்கு ஒருமுறை இந்த மென்டலிஸ்ட் நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அறியாத வயதெனினும் அதன் மீதான ஆர்வம் அவளுக்குச் சற்றும் குறையாமல் பள்ளி காலத்திலேயே அதற்கான பயிற்சிகளை எடுத்துக் கொண்டு சிறு சிறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினாள்.
அவளது சமூக வலைதளப் பக்கங்களில் பின் தொடர்பவர்களுக்கு அவளை “V”, ஆக மட்டுமே தெரியும்.
தன் பின்புலமோ தனிப்பட்ட விவரமோ எங்கும் வைத்துக் கொள்ளவில்லை. அலுவல் விஷயங்களிலும் அவளது புகைப்படங்களை பெரிதாய் அவள் விரும்பாததால் இளங்கோ மட்டுமே அத்தனை விளம்பரங்களிலும் இருப்பார்.
மென்ட்டலிஸ்ட் “V”க்கு மூன்று மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். இன்றைய தேதியில் தென்னிந்தியாவில் இந்தத் துறையில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் என்பதில் இவள் முதல் மூன்றில் இருக்கிறாள்.
அந்த நிகழ்ச்சியை முடித்து அவள் கீழே வர பலர் அவளைப் பாராட்டி கை குலுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விஜயுடன் கிளம்பியவள் வீட்டிற்குச் செல்ல வாசலில் கார் நின்றவுடன்,
“நாளைக்கு மார்னிங் ப்ரோகிராம் ஒரு பதினொரு மணிக்கு அங்கே இருக்கணும் விடியல்.”
“யா ஓகே விஜய். இந்த மந்த் கொஞ்சம் நிறைவே இருக்கு ஷோ. பார்த்துக்கலாம். சாதாசிவ் நகர் தான?”
“ம்ம் ஆமா. ஒன் ஆப் த பில்லினியர் இன் இந்தியா.”
“ஓ மினிஸ்டர் பேமிலி தான?”
“நம்ம கல்வித்துறை அமைச்சர் ராதிகா மேம் ஆனால் அவங்க ஹஸ்பெண்ட் குடும்பம் பெரிய பிசினஸ் பேக்ரவுண்ட். சொல்ல போனா நம்ம நாட்டுலேயே நம்பர் ஒன் ஷேர் ஹோல்டர்ஸ்.. MR Groups பேமிலி தான் இவங்க.”
“பேசினதை விட அமௌண்ட் அதிகமா கொடுக்கும் போதே இதையெல்லாம் யோசிச்சுருக்கணுமோ? நான் மினிஸ்டர் பேரைத் தாண்டி யோசிக்கல.”
“ராதிகா மேம் நம்ம தமிழ்நாடு தான். அவங்க ஹஸ்பெண்ட் மஞ்சுநாத் ராவ் பக்கா கன்னடிகா.. சொல்லப் போனால் 2010ல் எடுக்கப்பட்ட சர்வேயில் டாப் 10 பணக்காரங்களில் இவர் பேரும் இருந்தது.”
“குட் டு நோ விஜய். இதெல்லாம் அப்பாக்கு தான் தெரியும். நீங்க சொன்ன எல்லாமே எனக்கு புது இன்ஃபோ தான்.”, என்றவள் அவனுக்கு புன்னகைத்து இறங்கி வீட்டிற்குள் சென்றிருந்தாள்.
மறுநாள் காலையில் சீக்கிரமே கிளம்ப வேண்டியதாக இருந்ததால் அலுவலகத்திற்குச் செல்லாமல் நேராக அந்த நிகழ்ச்சிக்கு செல்வதாய் ஏற்பாடு.
ஏதோ குடும்ப விழா என்று கூறியிருக்க தன்னிடமிருந்த ஹாஃப் வைட் டிசைனர் சுடிதாரை அணிந்து கொண்டவள் அதற்கு ஏற்ற முத்து வைத்த அணிகலன்களை அணிந்து கொண்டு கிளம்பியிருந்தாள்.
சதாசிவ் நகர் திரைப்பட நடிகர்கள் தொடங்கி பல முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் இடம். அதில் ஒரு தெருவில் நுழைந்த கார் தெரு முனையில் ஒரு வீட்டின் முன் நிற்க காவலாளி அவர்களது விவரங்களைக் கேட்ட பின் கதவைத் திறந்து விட்டார்.
அத்தனை பிரம்மாண்டமான வீட்டை எதிர்பாராதவளாய் விழி விரித்தாள் விடியல்.
“வாவ் ரொம்ப நல்லாயிருக்கு இல்ல விஜய்?”
“ம்ம் கோடியில் புரள்றவங்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்.”
“அதுவும் சரி தான். இங்கே இப்படி ஒரு பிரம்மாண்டத்தை எதிர்பார்க்கலை.”, என்ற நேரம் போர்டிகோ வந்திருக்க இருவருமாய் இறங்கிக் கொண்டனர்.
விடியல் விவரங்களை அங்கிருந்த கண்காணிப்பாளரிடம் கூற நான்காவது மாடியில் இருக்கும் மொட்டை மாடிக்குச் செல்லும் படி கூறி லிப்டிற்கு வழிகாட்டினார். அதோடு இரு பாதுகாவலர்கள் அவளோடு வந்தனர்.
நான்காவது தளத்தில் லிப்ட் திறந்த போது அப்படியாய் ஒரு ஆட்டமும் பாட்டமும் அரங்கேறிக் கொண்டிருந்தது. திருமண நிச்சயதார்த்த போர்ட் லிப்ட் வாசலிலேயே இருக்க மணமக்கள் சைத்ரா வெட்ஸ் கிருஷ்ணா என்றிருந்தது.
அங்கு நின்றிருந்த கருப்பு உடை அணிந்தவரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள விஜய் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்வதாய் கூறினான்.
பவுன்ஸர்களோடு முன்னே நடந்தவளைப் பல கண்கள் வட்டமிட்டன. காரணம் அங்கு இருந்தவர்கள் அனைவருமே இளைஞர்கள் தான். வீட்டின் பெரியவர்கள் என யாரும் இல்லாததால் அவர்கள் எழுதுவது தான் சட்டம் என்ற நிலையில் தான் அவ்விடம் இருந்தது.
“ஓகே ஓகே கைஸ்.. V இஸ் ஹியர்..”, என்று ஒரு பெண் மைக்கில் அறிவிக்க மீண்டுமாய் ஒரு ஆரவாரம் அவ்விடத்தில். அனைவருக்கும் முன் சென்று நின்றவள் விரிந்த புன்னகையோடு அனைவருக்குமாய் கையசைத்தாள்.
“தும்பா வைப் மாட்டிட்டீரா?!”,(செமயா வைப் பண்றீங்களா?), என்றதற்கும் கத்தி ஆரவாரம் செய்தனர்.
“ப்ரைட் அண்ட் க்ரூம்(Groom) காணுமே?!”, என்றதில் ஒரு ஆணும் பெண்ணுமாய் முதல் வரிசையில் இருந்து கையுயர்த்தி புன்னகைத்தனர்.
“மை ஹார்ட்டி விஷ்ஷஸ் டு யூ போத்..”, என்றவள் கைக் குலுக்கி புன்னகைத்த வண்ணம் மணமகனை தன்னருகில் வருமாறு அழைத்தாள்.
“உங்ககிட்ட இருந்தே ஆரம்பிக்கலாமா?”, என்றதற்கு கரகோஷம் கிளம்பியது.
“சோ.. பர்ஸ்ட் பை எனி சான்ஸ் நம்ம இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியுமா?”
“நோ..”
“க்ரேட் இப்போ நான் கேட்க போற கேள்விக்கான பதில் கண்டிப்பா எனக்குத் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்ல?”
“யெஸ்.. கண்டிப்பா தெரியாது..”
“ஓகே கிருஷ்ணா.. லெட்ஸ் ஸ்டார்ட்.. உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயத்தை நினைச்சுக்கோங்க.. மே பி அ ப்ளேஸ் திங்க் பெர்சன். எதாவது.”
“ஓகே..”, என்றவன் புன்னகைக்க அவனை ஓரக்கண்ணால் பார்த்தவளாய்,
“ஹே அதுக்காக சைத்ராவை நினைச்சா யாரும் என்னை நம்ப மாட்டாங்க பாஸ்.. வேற எதையாவது நினைச்சுக்கோங்க..”, என்றதில் கிருஷ்ணா விழி விரிக்க கூட்டத்தில் பெரும் ஆரவாரம்.
“ஓகே.. அப்படியே என்னைப் பாருங்க.. நீங்க நினைச்சுருக்க விஷயத்தோட பெயரை மனசுக்குள்ளே ரிப்பீட் பண்ணிட்டே இருங்க. லைக் சைத்ரா சைத்ரா சைத்ரா.. அந்த மாதிரி..”, என்றவள் சொடுக்கிட்டு கொண்டே இருந்தாள்.
“ஓகே நான் நீங்க நினைச்ச விஷயத்தை இதில் எழுதிருக்கேன். ஆன் தி கவுண்ட் ஆஃப் த்ரீ நீங்க சொல்லுங்க. நான் மத்தவங்களுக்கு எழுதினதை காட்டுறேன்.”, என்றவள் எண்ணி முடித்து கையிலிருந்த அட்டையைத் திருப்பவும் கிருஷ்ணா அந்தப் பெயரைச் சொல்லவும் எழுந்த கரகோஷத்திற்கு அளவில்லாமல் போறது.
“கமலி..”, என்று எழுதியிருந்ததைத் தான் அவனும் கூறியிருக்க அனைவருமாய் கரகோஷமெழுப்பினர்.
“பை த வே கமலி?”
“என்னோட அம்மா..”, என்றதில் உதடு வளைத்து புன்னகைத்தவள் அனைவரையுமாய் பார்வையிட்டாள்.
“ஆசம் V இருந்தாலும் இது கொஞ்சம் ஈசி மாதிரி தெரியுதே. லெட்ஸ் மேக் த கேம் ஈவன் மோர் இன்ட்ரஸ்டிங்.”
“ஓ யா ஷுவர்.. ஓகே சோ நெக்ஸ்ட் யாராவது ஸ்டேஜுக்கு வரீங்களா?”, என்றதில் ஒரு கரம் உயர்ந்திருக்க விடியலின் பார்வை சென்ற திசையில் அனைவரும் பார்த்து விட்டு,
“வாவ் கமான் மேகன்..”, என்று உற்சாக குரல் எழுப்ப தனது ப்ளேசரை கழட்டி நாற்காலியில் போட்டு விட்டு பார்மல் சட்டையும் பேண்டுமாய் ஐந்தடி பதினோரு அங்குலத்தில் வாட்ட சாட்டமாய் முன்னே வந்து விடியலின் அருகில் நின்றிருந்தான் அவன்.
விடியல் அவனைப் பார்த்து புன்னகைத்து கை குலுக்க சிநேகமாய் மிக மெலிதான புன்னகையோடு கை குலுக்கினான்.
“சோ.. மிஸ்டர் மேகன். உங்களுக்கு நான் கேள்வியே சொல்ல போறதில்ல. அதாவது ஆடியன்ஸ் உங்ககிட்ட கேட்க நினைக்குற கேள்வி எல்லாத்தையும் சொல்லட்டும்.
அதில் உங்களுக்குப் பிடிச்ச ஒரு கேள்விக்கான பதிலை நீங்க மனசில் நினைச்சுக்கோங்க. அண்ட் அது எந்தக் கேள்வினு என்கிட்ட நீங்க சொல்ல வேண்ணாம். ஓகே?”
“யா ஓகே..”, என்றவனின் குரலில் அப்படியாய் ஒரு ஆளுமை. நொடிக்கும் அதிகமாய் விடியலின் விழிகள் அவனது முகத்தை தீண்டிச் சென்றன.
நல்ல நிறம் கூர்மையான கண்கள் நேர்த்தியாய் ட்ரிம் செய்யப்பட்ட தாடி அனைத்தையும் விட பார்ப்பவர்களை நிச்சயம் கவரும் அவனது தோளுயர தலைமுடி அதை பாதியில் பிரித்து கொண்டயிட்டிருந்தவனின் அடிமுடிகள் தோளுரசிய படி இருந்தன.
“ஓகே யாருக்கு என்ன கேள்வி கேட்கணுமோ கேளுங்க..”
“மேகன் உங்க ஃபேவரெட் டெஸ்டினேஷன் என்ன?”
“மேகன் உங்க க்ரஷ் பேர் சொல்லுங்க.”
“சிங்கிளா கமிட்டடா மேகன்?”, என்றதில் கூட்டத்தில் ஒரு சிரிப்பலை எழுந்தது.
“அண்ணா உன் ஃபேவெரரெட் ஹாபி சொல்லு..”, என்று சைத்ரா கூற தங்கையைப் பார்த்து புன்னகைத்தவனைத் தான் பார்த்திருந்தாள் விடியல்.
“அ மேன் ஆஃப் அட்டிட்டியூட்”, அவனைப் பார்த்தவளுக்கு இது தான் தோன்றியது. தனது சிந்தனை கலைந்தவள் அவன்புறம் திரும்பிய வண்ணம்,
“போதுமான கேள்விகள் இருக்குனு நினைக்குறேன். நீங்க எதாவது சூஸ் பண்ணிக்கோங்க..”
“டன்..”
“சோ.. நீங்க நினைச்ச விஷயத்தோட பர்ஸ்ட் லெட்டர் செகண்ட் லெட்டர்..”, என்றவள் சொடுக்கிட்ட படியே அவனை அவதானித்திருந்தாள்.
“மிஸ்டர் மேகன் லுக் அட் மி ப்ளீஸ்..”, என்றதில் பெண்ணவளின் விழிகளை நேருக்கு நேராய் நோக்கியவனின் பார்வையில் அந்த நொடி அப்படியே கட்டுண்டு போனாள் விடியல்.
சொல்ல முடியாத இதுவரை அனுபவித்திராத ஓர் உணர்வு. தன்னைத் தானே மனதிற்குள் கடிந்தவளாய் அவனது விழிகளை ஏறிட்டவள்,
“ஓகே ஜஸ்ட் அந்த பெயரை மனசுக்குள் ரிப்பீட் பண்ணுங்க மேகன்..”, என்றவள் சொடுக்கிட்ட படியே அவன் மனதினுள் நினைத்ததை அதே போன்று வாய் விட்டு கூறினாள்.
“க்ரண்ட் மாம்’ஸ் ஹவுஸ்..
க்ரண்ட் மாம்’ஸ் ஹவுஸ்..”, என்றவள் புன்னகைக்க அத்தனை நேரமிருந்த இறுக்கம் மறைந்து புன்னகைத்தவன்,
“தட்ஸ் ஆசம் Yaar…”, என்ற படி தனது கையைத் தூக்க புன்னகை மாறாமல் விடியல் ஹைபை செய்து கொண்டாள்.
“யூ ஆர் அன்பிளிவபிள் V..”
“தேங்க் யூ சோ மச்..”
“இந்த மைண்ட் மேஜிக் ரொம்பவே நல்லாயிருக்கு..”, என்றவன் அவளிடம் விடைபெற்று மேடையிலிருந்து கீழிறங்க அதன் பின் சிறிது நேரம் நிகழ்ச்சியை நடத்தி முடித்து விட்டு விடியல் நகர எத்தனித்த நேரம் பலர் அவளோடு வந்து பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
“தேங்க் யூ V எங்க பங்கஷனை ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கா மாத்திட்டீங்க.”
“தேங்க் யூ சைத்ரா..”
“அந்தப் பக்கம் புட் இருக்கு. ப்ளீஸ் ஹவ் சம்திங்..”
“இல்ல பரவால்ல..”
“எங்க வெட்டிங் ட்ரீட். வேண்டாம்னு சொல்லாதீங்க.”, என்றதில் மேலும் பிகு பண்ண விரும்பாதவளாய் சரி எனத் தலையசைத்து நகர்ந்தாள் விடியல்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
8 comments
Karaiyaa arambikkuraana aarambikkuraala
💞💞💞💞💞💞💞
Hard to crack hero pola
V 😍😍😍🧡🧡❤️
Interesting 🧡🧡
ஓ இந்த மேகன் தான் ஹீரோ வா சூப்பர் சூப்பர்
மனதை படிப்பவள்
மயங்கியது ஒரு நொடி
மேகன் பார்வையில்….
👏🏻👏🏻👏🏻🔥🔥🔥❤️😘
Super💕
Interesting 🤩🤩🤩
Megan 😍😍😍
Good one 👍