வசம்-8

by ஸ்ரீ
8 comments 548 views
A+A-
Reset

மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்

கையொன் றுடைமை பெறின்

மு.வ விளக்க உரை: பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

அன்றைய இரவு உணவு நேரத்தில் இருந்தே நாச்சியாரின் முகத்தில் பயம் அப்பட்டமாய் தெரிந்ததை மேகலை கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.

மாலையில் வெளியில் சென்ற அகத்தியனும் இன்னும் வராமல் இருக்க நிச்சயம் குடித்து விட்டு தான் வருவான் என்று எண்ணியவருக்கு மருமகளின் நிலை புரிந்தாலும் என்ன கூறுவது என்று தெரியாமல் அமைதியாய் இருந்தார்.

“நேரமாயிட்டு நாச்சி நீ போய் படுத்துக்கோ..”

“இல்ல அத்த.. அவங்க வரலையே?!”

“அவனுக்கு நேரங்காலமே கிடையாது. நான் இங்கன சோபால தான் படுத்துருப்பேன். நீ போ.” என்றதில் எழுந்து கொண்டவள் மாடிக்குச் சென்று உடை மாற்றி விட்டு படுத்து விட்டாள்.

சொல்ல முடியாத பதட்டமும் பயமும் அதிலும் அந்த மதுவின் வாடை சுத்தமாய் பிடிக்கவில்லை. அதோடு அவன் அருகில் வந்தால் எப்படி தாங்கிக் கொள்ள போகிறோம் என்பதே பெரும் பயமாய் இருந்தது.

தப்பித் தவறி வாந்தி எடுத்து வைத்தால் அவன் என்ன நினைப்பான்! உலகமறியாதவள் தான் ஆனால் கணவனாய் அவன் உரிமை கோரும் போது எத்தனை நாட்கள் எதை எதையோ கூறி தள்ளி நிற்க வைக்க முடியும்.

அதிலும் தனக்கு அப்படி ஒரு வாய்ப்புகள் எல்லாம் இந்த திருமணத்தில் இருக்கப் போவதேயில்லை என்று வெகுவாய் நம்பினாள்.

அந்த நாற்றம் மட்டும் இல்லாமல் போனால் பல்லைக் கடித்துக் கொண்டாவது மற்றதை பொறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.

பக்கவாட்டு சுவற்றை வெறித்த படி வாசலுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவள் கதவு திறக்கும் சத்தத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.

சில நொடிகள் சத்தமே இல்லாமல் கழிய அவனது கரகரப்பான குரல் ஓங்கி ஒலித்ததில் சட்டென எழுந்து அமர்ந்தாள்.

“அதுக்குள்ளே எல்லாம் நீ தூங்குற ஆளா?!”

“சாப்டியா?”

“சா..சாப்ட்டேன்ங்க..”

“எத அந்த காஞ்சு போன இரண்டு இட்லியையா?”, என்றவன் தன் கையிலிருந்த கவரை அவள் முன் வைத்து விட்டு அவளுக்கு பக்கவாட்டில் அமர்ந்தான்.

“புரோட்டா வாங்கிருக்கேன். சாப்பிடு..”, என்றதில் என்ன கூறுவதென தெரியாமல் விழித்தவளைப் பார்த்த படியே சட்டையை கழட்டி அருகிலிருந்த ஹேங்கரில் மாட்டியவன்,

“தூத்துக்குடிகாரிக்கு புரோட்டா புடிக்காதா? சும்மா சாப்டு..”, என்றவனின் முகம் சற்று தெளிவாகத் தான் இருந்தது.

அதற்கு மேல் ஒன்றும் கூறாதவளாய் பொட்டலத்தைப் பிரிக்க ஆரம்பித்தாள் நாச்சியார். அவளுக்கு பரோட்டா என்றால் அத்தனை பிடிக்கும்.

வாரத்தில் ஒரு நாளாவது தந்தையை வாங்கி வரச் சொல்லி அதற்கு திட்டும் வாங்கி, நடு ராத்திரி ஆனாலும் பாதி தூக்கத்தில் அமர்ந்து உண்டு விட்டு தான் உறங்கச் செல்வாள்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இருக்கும் இதை சாப்பிட்டு. இப்போது அந்த மணம் அவளை அதன் பக்கம் இழுத்து விட்டிருந்தது.

அந்த சால்னாவோடு கலந்து அல்வா போன்று சுட சுட இருந்த பரோட்டைவை ஒரு வாய் உள்ளே தள்ளியவளுக்கு கண்களில் கண்ணீர் நிரம்பியது.

இடக்கையால் கண்ணீரைத் துடைத்து விட்டவளாய் அடுத்த இரண்டு வாய்களையும் உண்டு முடித்திருந்தாள்.

அப்போது தான் அவன் உணவு உண்டானா என்ற கேள்வியே உள்ளுக்குள் எழ அவசரமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன?”

“அது..நீங்க சாப்டீங்களா?”

“பரவால்ல நீ சாப்பிடு..”

“ஐயோ வேண்டாம் எனக்கு போதும். நீங்க சாப்பிடுங்க.”, என்ற படி இலையை அவன் புறம் நகர்த்தி வைத்தாள்.

“கையே கழுவல.. நீயே ஊட்டி விட்டுரு..”, என்றதில் தர்ம சங்கடமாய் உணர்ந்தவள் அந்த சிறு விரல்களுக்குள் வந்த உணவை கொஞ்சம் கொஞ்சமாய் ஊட்டி விட அவனும் எதுவும் கூறாமல் பொறுமையாய் வாங்கிக் கொண்டான்.

பொதுவாகவே ஆண்கள் அள்ளி எடுத்து உண்பவர்கள்  அப்படியிருக்க நாச்சியார் இப்போது கொடுக்கும் அளவெல்லாம் அவன் கடவாய் பற்களுக்குத் தான் சரியாய் இருக்கும்.

அவளது சிறு விரல்கள் அவனது உதடுகளைத் தீண்டி நகரும் வேளை பெண்ணவளுக்கு சங்கோஜமெனில் அகத்தியனின் முகத்திலோ இனம் புரியாத ஒரு உணர்வு.

 “எனக்கு போதும் நீ சாப்ட்ரு..”, என்றவன் தண்ணீரைக் குடிக்க நாச்சியாரின் முகத்தில் அந்த உணவிற்காக தெரியும் மகிழ்ச்சியை கவனித்த வண்ணம் அமர்ந்திருந்தான்.

“இன்னைக்கும் குடிச்சுட்டு வருவேன்னு தூங்குற மாதிரி நடிச்சியா?”, என்றதில் உணவு தொண்டைக்குள் அடைத்துக் கொள்ள கண்ணில் நீர் வரும் வரை இருமியவளுக்குத் தண்ணீரைக் கொடுத்தான்.

“அதானா இல்ல வேற எதுவும் காரணமா?”

“இல்லங்க அந்த நாத்த.. அந்த வாடை பிடிக்கல.. அதான்.”

“அதை வாயைத் திறந்து சொன்னா தான எனக்குத் தெரியும்.”

“இல்ல.. எங்க வீட்டுலேயுமே நான் அவ்வளவா பேசமட்டேன்”

“அது உங்க வீட்டுல. இங்க பேசணும். பேசாம இருந்தா நான் எப்படி புரிஞ்சுக்குறது?”

“…”

“என்ன?”

“நான் எதாவது பேசத் தெரியாம பேசி உங்களுக்கு அது பிடிக்காம போயிட்டா?!”

“நாம என்ன அர்த்தத்துல பேசுறோமோ அதில் எந்த தப்பும் இல்லைனு நமக்கு தெரிஞ்சா போதும். கேட்குறவன் தப்பா புரிஞ்சுக்குறதுக்கு எல்லாம் நாம பொறுப்பாக முடியாதுல?”

“உண்மையாவே என் மேல எந்தக் கோவமும் இல்லையா?”

“இதையே எத்தனை தடவை தான் கேட்ப நீ?”

“நான் பண்ணினது அப்படிபட்ட முட்டாள்த்தனம். அதனால தான் இவ்வளவு பயமும் பதட்டமும்.”

“நேத்துல இருந்து என்கூட அதாவது இவ்வளவு பக்கத்துல இருக்க. என்னைப் பார்த்தா உள்ளே ஒண்ணு வைச்சு வெளியில வேற பேசுறவன் மாதிரி இருக்கா உனக்கு?”

“இல்லங்க..”

“ம்ம் அப்போ கல்யாணம் பண்ணி உன்னை கூட்டி வந்தது குடும்பம் நடத்த தானே தவற உன்னை கொடுமை படுத்தி அழகு பார்க்க இல்ல. என்னைப் பார்த்தா என்ன சைக்கோ மாதிரி இருக்கா?”

“ஐயோ நான் எங்க அப்படியெல்லாம் சொன்னேன்!!”

“சொல்லாத வரைக்கும் சரி. இனியாவது நான் வர்ற வரை கீழே இரு. இப்படி சின்ன பிள்ளைங்க விளையாட்டெல்லாம் விளையாடாத..”

“சாரி..”

“போ போய் கையை கழுவிட்டு வந்து படு..”

முந்தைய தினம் போல் உள்ளே தள்ளி நாச்சியார் படுத்துக் கொள்ள அதன் பின் அகத்தியன் படுத்துக் கொண்டான்.

“என்னையப் பத்தி என்ன தெரியும்?”

“எதுவுமே தெரியாதுங்க..”

“என்னை எப்போவாவது பாத்துருக்கியா?”

“ம்ஹும்..தூரத்துல இரண்டு மூணு தடவை பார்த்துருக்கேன். மத்தபடி..”

“என்னைய பத்தி நீ கேள்வி பட்ட வரை சொல்லு கேட்போம்..”

“அது..”

“சும்மா சொல்லு..”

“நீங்க எம்எல்ஏ.. ரொம்ப கோவக்காரங்க. யார் பேச்சையும் கேட்க மாட்டீங்க.. யாரையும்..”

“ப்ச்ச் சும்மா சொல்லு..”

“யாரையும் மதிக்க மாட்டீங்க.. அப்பறம் தண்ணி ரொம்ப அடிப்பீங்க..”

“அதாவது குடிகாரன்..”

“ஐ..”

“அதுதான்னு தெரியும்.. வேற?”

“…”

“மொத்தத்துல குணம் கெட்டவன். இல்ல?”

“…”

“சரி இதெல்லாம் எல்லாரும் சொல்லி நீ கேட்டது. உனக்கு என்ன தோணுது?”

“எனக்கா!! நான் அப்படியெல்லாம் ஒண்ணும் நினைக்கல..”

“ஏன் நினைக்கல?

“எனக்கு உங்களைப் பார்த்தா பயமா..”

“ம்ம்?”

“இல்ல இப்போ இல்ல..”, என்றவளுக்குத் தலையே சுற்றியது.

“ம்ம் அப்படி தான் இருக்கணும். சரி நேரமாச்சு தூங்கு. நாளைக்கு நாம வெளியே போணும்.”

“வெளியே வா?!”

“ஆமா ஏன்?”

“இல்ல.. ஒண்ணுமில்ல..”

“எங்க ஊர் கோயிலுக்கு போணும்.”

“ஓ.. அத்தை..”

“?!”

“இல்ல அத்தையும் வருவாங்களா?”

“உனக்கு உன் அத்தை வரணுமா வேண்டாமா?”

“வரட்டும் எல்லாரும் போலாம்.”

“புருசனை நம்பி தனியா கோயிலுக்கு கூட வர மாட்ட போலேயே..”

“அப்படியெல்லாம் இல்லங்க..”, என்றவளிடத்தில் பெரும் பதட்டம்.

“சரி தூங்கு.”, என்றவன் பேச்சை முடித்துக் கொண்டு விழிகளை மூடிக் கொள்ள நாச்சியாரோ அவன் எப்படி எடுத்துக் கொண்டானோ என்ற எண்ணத்தில் தவித்தாள்.

“ஏங்க.. அது அவங்க தனியா இருப்பாங்களேனு தான் கேட்டேன்.”

“உங்கத்த எல்லாம் ஒத்த ஆளா ஊரையே வாயில போட்டு மென்னுற ஆளு.  இருந்தாலும் வரட்டும். காலையில நீ போய் ரெடியா இருக்கச் சொல்லு..”,  என்றதற்கு தலையசைத்தவளாய் விழி மூட அடுத்த நொடி உறங்கியும் போனாள்.

மறுதினமும் அகத்தியன் தான் முதலில் விழித்திருக்க நாச்சியாரின் தோள் தட்டி உறக்கம் கலைத்தான்.

“ம்ம்..”

“எந்திரி நேரமாச்சு..”, என்றவனின் குரலில் வேகமாய் எழுந்தவள் தெளிந்தும் தெளியாததுமாய் உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் ஓடியிருந்தாள்.

கையில் புடவையோடு வந்து நின்ற மருமகளைப் பார்த்து புன்னகைத்தவராய் மேகலை அவளுக்குப் புடவையை கட்டி விட்டு மகனுக்கான காபியை கொடுத்தார்.

“அத்த.. கோயிலுக்கு போணும்னு சொன்னாங்க..”

“நாம சொன்னா கூட எதையும் பண்ண மாட்டான். ஆனா அவன் ஆச்சி ஊரும் முறையும் மட்டும் கட்டா பண்ணிடுருவான். அவன் மனசு மாற முன்னாடி போய் கிளம்பு டி..”

“இல்ல நீங்களும் தான். நாம மூணு பேரும் போலாம்னு சொன்னாங்க..”, என்றதில் சிறு தடுமாற்றம் மேகலையினிடத்தில்.

“அவனா என்னை வரச் சொன்னான்?”

“ம்ம் நான் கேட்டேன். அப்பறம் அவங்களும் சொன்னாங்க. ஏன் அத்த?”

“என் கூட அவன் வெளியே எல்லாம் வந்து பல வருசம் ஆச்சு டி.”

“ஏன் அத்த அப்படி?”

“காலையிலேயே கதை பேசணுமா போ டி காபியைக் குடு அவனுக்கு..”, என்றவர் பரபரப்பாய் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.

காபியோடு அறைக்குள் சென்றவள் கணவனிடம் டம்ளரை நீட்ட கால் நீட்டி கட்டிலில் அமர்ந்திருந்தவன் கால் மடக்கி காபியை வாங்கிக் கொள்ள நாச்சியார் தலையில் கட்டியிருந்த துண்டை கழற்றிய படி அப்படியே நின்றிருந்தாள்.

ஏனோ தானோவென தலையை அவள் உலர்த்தியதைக் கவனித்தவன் தானாகவே துண்டை அவள் கையிலிருந்து வாங்கி அவளைப் பக்கவாட்டில் நிற்க வைத்து நன்றாகத் தட்டிவிட்டான்.

துண்டை அவள் கையில் வைத்தவன் மீண்டும் காபியை அருந்தத் தொடங்க, அதை வாங்கிக் கொண்டவளோ சில நொடிகள் அப்படியே நின்றாள்.

என்ன எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீ வரும் போது நான் எப்படி உட்காந்துருந்தேன்?”, என்றதில் ஒரு நொடி யோசித்தவள்,

“கால் நீட்டி..”

“நீ காபி கொடுத்த அப்பறம்?”

“காலை மடக்கிட்டீங்க..”, என்றதும் ஒன்றும் கூறாமல் அவனுக்கான துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று பாதி கதவை அடைத்த வண்ணம்,

“நான் காலை மடக்கினால் தான் நீ உட்கார முடியும்னு தான் காலை மடக்கினேன்.”, என்று விட்டு கதவைச் சாற்றிக் கொள்ள எப்போதும் போல் குழப்பத்தில் நின்றிருந்தாள் நாச்சியார்.

குரலும் பார்வையும் பயமுறுத்தினாலும், அவன் செய்கைகள் ஒவ்வொன்றும் அந்த பயத்தை மெதுவாகக் கரைத்துக் கொண்டே இருந்தன. எது உண்மையான அகத்தியன் என்று புரியாமல் குழம்பிப் போயிருந்தாள் நாச்சியார்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

8 comments

Fathima.ar August 13, 2026 - 7:42 am

Sollukkum theriyamal sollathaan vanthene..
Sollukul artham pole sollaamal nindrene

MalarMurugan August 13, 2026 - 8:02 am

கொஞ்சம் கஷ்டம் தான் புரிஞ்சிக்கறது 😏😏😏
அகத்தியா 🤗🤗😍😍
எத்தனை வருஷம் கழித்து போறாங்க மேகலை 🤗🤗🤗

Superb

Raji Vijay August 13, 2026 - 8:10 am

Onnunoonum paarthu paarthu seiyran. Iva payam epo poi, ivana epo manaivi maathiri paarvaiyil paaka poraalo?

Aandal Venkatraghavan August 13, 2026 - 9:12 am

எனக்கு வெட்க வெட்கமா வருதே பெருமாளே… இவன் கியூட்டு பா.. அவளுக்குப் பிடிச்சதா பாத்துப் பாத்து செய்யுறான் க்கா. ஐ லைக் ஹிம்🙈😍😍😍

Kavi Natarajan August 13, 2026 - 9:12 am

👌👌👌👌👌👌👌

srichitra August 13, 2026 - 11:31 am

Very nice. அகத்தியர் நல்லவரா கெட்டவரா தெரியல்லையேமா.

srichitra August 13, 2026 - 11:31 am

Very nice. அகத்தியன் நல்லவரா கெட்டவரா தெரியல்லையேமா.

suganyavel August 13, 2026 - 5:49 pm

Super💕

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode