771
“குறள் 831:
பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்
மு.வ விளக்க உரை: பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.”
தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் அந்த இரயிலில் கண்ணில் பரிதவிப்பும் அழுகையும் பயமும் போட்டிப் போட அமர்ந்திருந்த அந்தப் பெண்ணையும் அவளருகில் அமர்ந்திருந்த அந்த 23-24 வயது மதிக்கத்தக்க ஆணையும் தான் அந்தப் பெட்டியில் இருப்பவர்கள் பார்த்த வண்ணம் இருந்தனர்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவனாய் அவளை அழைத்துக் கொண்டு கழிவறைப் பக்கம் சென்றவன் அடிக்குரலில்,
“இப்போ என்னத்துக்கு டி அழுதுக்கிட்டே கிடக்க?”
“…”
“பிடிச்சுருக்குனு தான கூட வந்த அப்பறம் சும்மா அழுதுகிட்டே கிடந்தா என்ன அர்த்தம்? வர்றவன் போறவனென்ல்லாம் ஒரு மாதிரி பாக்கானுவ. டிடிஆர் வந்தா வம்பாயி போகும் டி.”, என்றதில் அழுகையை அடக்கிக் கொண்டு அவனைப் பார்த்தாள் நாச்சியார்.
தனது இயலாமையை அவளிடம் காட்டவும் முடியாமல் எதுவும் பேசவும் முடியால் தவித்தான் அவன்.
“அப்பா அம்மாவுக்கு விசயம் தெரிஞ்சா என்ன பண்ணுவாகளோனு இருக்குலே..”
“எனக்கும் தான் பயமிருக்கு. அதுக்காக அழுது கரைஞ்சா எல்லாம் சரியா போவுமா?”
“..”
“போய் சீட்ல அமைதியா உட்காருட்டி.”, என்றவன் கடுப்பாய் வாசல் வழி வெளியே தலை நீட்டி எதிர் காற்றில் மனதின் புழுக்கத்தை மறைக்க முயன்றான்.
சென்னை ரயில் நிலைய கூட்டமே நாச்சியாரை உள்ளுக்குள் கதிகலங்க வைத்தது. நம்பி வந்தவனின் கரத்தை இறுகப் பற்றிய வண்ணம் திருதிருவென முழித்த படி அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்தாள்.
எக்மோரிலிருந்து மாதவரத்தில் இருக்கும் தன் நண்பனைக் காண நாச்சியாரோடு மாநகரப் பேரூந்தில் ஏறினான். பெண்ணவளுக்கோ இயற்கை உபாதை ஒரு புறம் மனதின் பயம் ஒரு புறமென அவஸ்தையாய் இருந்தது.
நாச்சியார் வள்ளி முருகன் தம்பதிக்கு இரண்டாவது பிள்ளை. தாய் தந்தைக்குச் செல்ல மகள். அவளது அக்கா பேச்சியம்மாவிற்கும் அத்தனை செல்லம். பணத்திற்கு குறைச்சல் இல்லாத மேல் தட்டு நடுத்தர குடும்பம்.
கேட்டதெல்லாம் கிடைக்கும். வாங்கித் தரவில்லை எனில் அழுது ஆர்பாட்டம் செய்தாவது வாங்கிக் கொள்வாள். பேச்சியம்மாள் வாய் துடுக்கு மிக்கவள் ஆனால் நாச்சியரோ சற்று அமைதியான குணம்.
நெருங்கிய சொந்தங்கள் நட்புகள் இடம் மட்டுமே அவளது அத்தனைப் பேச்சுக்களும் இருக்கும். அவள் விரும்பிய கல்லூரியில் இறுதி வருடப் படிப்பு.
இன்னும் ஒரு செமஸ்டர் மட்டுமே எழுத வேண்டிய நிலையில் அவளது கல்லூரித் தோழி ஒருத்தியின் மூலமாக பழக்கப்பட்ட ஒருவனுடன் கடந்த ஒரு வருடமாக காதலில் இருந்து வந்த நிலையில் இப்போது வீட்டில் சந்தேகம் வந்து விட்டதை உணர்ந்து காதலனின் பேச்சை நம்பி எதைப் பற்றியும் யோசிக்காது அவனோடு ஓடி வந்திருந்தாள்.
முதல் காரணம் இருவரும் வேறு வேறு சாதி. இரண்டாவது அவனுக்கு நிலையான வேலை கிடையாது. நல்ல படிப்பும் கிடையாது. இந்தப் பேரூந்து நிலையத்தில் கல்லூரி வாசலில் பார்த்த நொடியில் வாழ்வே அவனோடு தான் என்ற முடிவிற்கு வந்துவிட்ட காதல் இது.
அந்த வயது பிள்ளைகளுக்கே உரிய குணம், சம்மந்தப்பட்டவள் சும்மா இருந்தாலும் ஒருவன் அவள் பின்னால் சுற்றித் திரிகிறான் என்றவுடன் அவனோடு சேர்த்து வைத்து பேசத் தொடங்கும் கேலியில் நன்றாக இருக்கும் மனம் குழம்பிய குட்டையாய் மாறிடுமே!
அதாவது வாழ்வைப் பற்றிய எந்தவித எதிர்கால யோசனையும் பயமும் இன்றி இளங்கன்று பயமறியாது என்ற வாக்கியத்திற்கு ஏற்ப கண்ணைக் கட்டிக் கொண்டு பாழங்கிணற்றில் விழும் நிலை.
வசதியாகவும் ராணி போன்ற கவனிப்பிலும் வளர்ந்தவள் இப்போது சாப்பிட்டு ஒரு நாள் ஆகப் போகிறது. அதிலும் அவன் கூட்டிச் செல்லும் இந்த இடங்கள் எல்லாம் பார்த்தாலே ஏதோ படத்தில் காட்டப்படும் இடங்கள் போன்று அடி வயிற்றில் புளியைக் கரைக்க வைத்தது.
“எலே..”
“என்ன வேணும். கொஞ்சம் அமைதியா வாட்டி. அந்த செத்த பய போனை எடுக்க மாட்டிக்கான்.”, என்றவன் மீண்டுமாய் நண்பனுக்கு முயற்ச்சித்த வண்ணம் நடந்து கொண்டிருந்தான்.
நாச்சியார் என்னவோ அவள் கொண்ட அன்பில் நிலையாய் தான் இருக்கிறாள் ஆனால் அவனுக்கோ இப்போது நடத்திக் காட்டியிருப்பது தனது கௌரவத்திற்கு மதிப்பு கொடுக்கும் செயல் போன்றதாய் இருந்தது.
ஒரு மாதத்திற்கு முன்பே இவர்களின் விஷயம் தெரிந்து நாச்சியாரின் அப்பா தனது நண்பர்கள் இருவரோடு சேர்ந்து அவனை மிரட்டித் தன் மகளிடமிருந்து தள்ளியிருக்குமாறு எச்சரிக்கை செய்து சென்றார்.
அதன் பின்னும் இவன் நாச்சியாரை விட்டுப் பிரியாமல் இருந்ததில் முருகன் அவனைப் பார்க்கச் சென்ற நேரம் அவனது திமிர் பேச்சில் ஆத்திரத்தில் அவனை அடித்திருந்தார்.
அந்த கோபத்தில் தான் நாச்சியாரிடம் நம்மை பிரிக்காமல் விட மாட்டார்கள் நாம் இங்கு இருப்பது நல்லதல்ல. எங்கேயாவது சென்று வாழலாம். குழந்தை என்று பிறந்த பின்னால் எல்லாம் சரியாகி விடும் என எதை எதையோ பேசிப் பேசியே அவளை அரை குறையாய் சம்மதிக்க வைத்திருந்தான்.
காதலன் மீது நம்பிக்கை இருக்கிறது. பிடித்தம் இருக்கிறது ஆனால் அவனது இந்த முடிவில் நாச்சியாருக்கு சிறிதும் விருப்பமில்லை.
என்னவானாலும் தன் தந்தை தன்னுடைய மகிழ்ச்சியைத் தான் பிரதானமாக கருதுவார் எனத் தீர்க்கமாக நம்பினாள். ஆனாலும் அவன் எதையுமே கேட்பதாக இல்லை.
நீ வரவில்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்ற கடைசி ஆயுதம் அந்த மென் மனதுடையவளை அச்சுறுத்தியது.
இங்கு பல பெண்களின் பயம் இந்தக்வாதல் கைகூடாமல் போனால் அதன்பின்னான திருமண வாழ்க்கை என்னவாக இருக்கும். காதலனுக்கு இழைத்து விடும் பெரும் துரோகம் அல்லவா அது .
ஒரு வேளை அவன் எதாவது தவறான முடிவெடுத்து விட்டால் வாழ்வு முழுவதுக்கும் அந்தக் குற்றவுணர்வு கொன்றுவிடுமே என்பது போன்ற பயங்கள் தான் இது போன்ற முட்டாள்தனத்திற்கு வழிவகுத்து விடுகிறது.
அதன் விளைவு இப்போது யார் என்னவென்று தெரியாத ஒருத்தனுக்காக நடுத் தெருவில் காத்துக் கொண்டிருக்கிறாள்.
“நான்.. சொல்றதை..”
“என்ன பசிக்குதா? கொட்டிக்கணும் அதான.. ஒரு பத்து நிமிசம் பொறுக்க மாட்டியோ?”
“எனக்கு பாத்ரூம் போணும்லே..”, என்றவள் கிட்டத்தட்ட கத்தியிருக்க அப்போது தான் அவளைப் பற்றி யோசிக்க வேண்டிய அறிவே எட்டிப் பார்த்தது அந்த ஆண்மகனுக்கு.
என்ன செய்வதென யோசித்தவன் சுற்றியிருந்தது அத்தனையும் வீடுகள் என்பதால் வேறு வழியின்றி ஒரு வீட்டில் சென்று நிலைமையைக் கூறி அனுமதி வாங்கி வந்தான்.
நாச்சியாருக்கோ அவமானமாய் இருந்தது. கண்கள் நிற்காமல் கண்ணீரை உகுக்க அவனை நிமிர்ந்து கூட பார்த்திடாது உள்ளே சென்று வேலையை முடித்து விட்டு வந்து சற்றுத் தள்ளி ப்ளாட்பார்மில் அப்படியே அமர்ந்து விட்டிருந்தாள்.
தாயை தந்தையை குடும்பத்தை வெகுவாய் தேடியது. அந்த நொடியே தான் செய்திருப்பது எத்தனை பெரிய முட்டாள் தனம் என்பது தெளிவாய் புரிந்து விட்டிருந்தது.
“நாச்சி சாரி..”
“நாம எங்கேயாவது போறோமா? இல்ல இப்படி தெருவுல தான் குடும்பம் நடத்தனுமா லே?”, என்றவளின் கோபம் அவனைத் தணிந்து போகச் செய்திருந்தது.
அடுத்த பத்து நிமிடத்தில் அவனது நண்பன் வந்திருக்க இருவரையுமாய் ஒரு பத்து வீடுகள் இருந்த காலனி போன்ற அமைப்பின் கடைசியில் இருந்த ஒற்றை அறை கொண்ட வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தான்.
“ஏலே இது தான் வீடு, பாத்ரூம் எல்லாம் பொது தான். கூட்டத்துக்கு முன்னாடி வேணும்னால் காலையிலே 4 மணிக்கெல்லாம் போய்கிடுங்க.
இப்போதைக்கு சாமான் சட்டு எல்லாம் ஒண்ணுமில்ல கடையில வாங்கி சாப்டுங்க. நான் வாரேன். வேலைக்கு நேரமாச்சு..”
“ஏலே எனக்கு வேலைக்கு?”
“நீ பாட்டுக்கு சுலபமா சொல்லிபுட்ட கிடைக்க வேணாமா? நான் பார்த்து சொல்லுதேன்.”, என்றவன் இவனை நம்பி வந்தாயா என்ற பார்வையை நாச்சியாரின் புறம் வீச உள்ளுக்குள் கூனிக் குறுகி போனாள்.
அன்றைய தினம் முழுவதும் அழுகை சண்டை என்று கழிய இரவு மீண்டுமாய் வந்த அவனது நண்பன் வந்ததும் ஆண்கள் இருவரும் வெளியே செல்ல நாச்சி கதவுக்குப் பின் நின்று அவர்கள் பேசுவதைக் கவனித்தாள்.
“கொஞ்சமாவது அறிவிருக்காலே உனக்கு? நீ பாட்டுக்கும் அந்தப் பிள்ளையோட வந்து நிக்க.. நானே இங்கே நாள் சம்பளத்துக்கு நாய் பொழப்பு பட்டுகிட்டு கிடக்கேன்.”
“..”
“எம்புட்டு படிச்சு படிச்சு சொன்னேன் கொஞ்சம் பொறுமையா இரு என்ன பண்றதுனு பாக்கலாம்னு ஒண்ணும் கேட்க மாட்டியாலே?”
“அவ அப்பன் கை நீட்டி அடிச்சாருலே. அப்படிபட்டவர் எங்க கல்யாணத்தை நடத்துவாருனு கனா கண்டுட்டு கிடக்கச் சொல்லுதியா?”
“…”
“நாளைக்கோ நாளான்னைக்கோ கோயில்ல வைச்சு தாலி கட்டி அந்தாளு முன்ன போய் நின்னா அப்போ என்ன பண்ணுவாருனு பார்க்கேன்.”
“உனக்கு கோட்டிப் பிடிச்சுருக்குலே. நீ சொல்றதை பார்த்தா அவுக வீட்டுக்கு தெரிஞ்சா உன்னோட சேர்த்து என்னையும் புலந்துருவாக போல.”
“சும்மா பயப்படாதலே இங்கே வந்து நாட்டாமை பண்ண இது ஒண்ணும் அவுக ஊரு இல்லை. என்னவானாலும் நான் பார்த்துகிடுவேன்.”
“கிழிச்ச.. ஆனா உன்னையும் நம்பி வந்துருக்கு பாரு அந்த பிள்ளையை சொல்லணும். படிக்குறவுகளுக்கு எல்லாம் அறிவு இருக்குறது இல்லனு சொல்றது சரியா தான் இருக்கு.”
இப்படியான உரையாடல்களைக் கேட்டவளுக்கு மேலும் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. அவளும் பொறுமையாய் யோசிக்கலாம் என்று எத்தனையோ முறைக் கூறினாள்.
அதையும் கேட்காமல் நண்பனின் பேச்சையும் கேட்காமல் இப்படி சிறு பிள்ளைத் தனமாய் முடிவெடுத்தவனை என்னவென்று சொல்வது.
அவன் என்ன சொன்னாலும் தனக்கு எங்கே போயிற்று அறிவு என தன் மீதே ஆத்திரமாய் வந்தது நாச்சியாருக்கு. இப்போது அவள் காதலை விட அவளின் அப்பா மீதான அவனின் கோபமே இந்த திருமணத்திற்கு முக்கியமான காரணமாய் பட்டது.
தந்தை திட்டியதை எல்லாம் வைத்து அவரைத் தானே தவறாக நினைத்தாள். அவர் பேச்சைக் கேட்காமல் போய் விட்டோமே என நொடிக்கு நொடி நொந்து கொண்டாள். மறுநாள் காலையில் குளித்து முடித்து வருவதற்குள் உடம்பே கூசிப் போனது பெண்ணவளுக்கு.
என்னவோ யாரோ எங்கோ பார்த்து விடுவார்களோ என்று பயந்து பயந்து பாதி குளித்தும் குளிக்காததுமாய் உடையை மாற்றிக் கொண்டு வெளியே ஓடி வந்திருந்தாள். இதில் அவளை அங்கே விட்டு விட்டு வேலைத் தேடி வருவதாய் கூறிச் சென்றவன் திரும்பி வந்த நேரம் இரவு மணி ஏழைத் தொட்டிருந்தது.
காலையில் வாங்கிக் கொடுத்த இரண்டு இட்லியோடு சரி மதியத்திற்கு மேல் பசி வயிற்றைக் கிள்ளியது. நொடிக்கொரு முறை வாசலை எட்டி எட்டிப் பார்த்தவளைக் கவனித்து பக்கத்து வீட்டு பெண்மணி தட்டில் உணவை வைத்துக் கொண்டு வந்து கொடுத்தார்.
யாரிடமும் இப்படி எல்லாம் வாங்கி பழகியிறாதவளுக்கு வேண்டாம் என்று சொல்லக் கூட மனமில்லாத அளவிற்கு பசி. கண்ணீரைத் துடைத்த படியே ஐந்து நிமிடத்தில் தட்டை காலி செய்திருந்தவளுக்கு சுய இரக்கத்தில் மேலும் மேலும் அழுகை தான் வந்தது.
இரவு வந்தவனோ நிதானம் தவறும் அளவிற்கு குடித்திருந்ததில் மொத்தமாய் அதிர்ந்து போனாள் நாச்சியார். அவளருகில் வேறு வந்தவன் ஏதேதோ உளற மொத்த தெம்பும் உடைந்து போனவளாய் அவனைத் தள்ளி விட்டு ஒரு ஓரமாய் சென்று கால்களைக் குறுக்கி அமர்ந்து கொண்டாள்.
அடுத்த நாள் காலை எழுந்தவனிடம் சிறு குற்றவுணர்வு கூட இல்லை. நம்பி வந்தவளை இந்த நிலையில் நிறுத்தியிருக்கிறோமே என்ற கவலையும் துளியில்லாமல் போக முந்தைய தினம் போலவே கிளம்பி எங்கேயோ சென்று விட்டிருந்தான்.
இதற்கு மேல் என்ன ஆனாலும் இங்கிருப்பது நல்லதல்ல என்று புரிந்து கொண்டவளாய் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த தனது சான்றிதழ்களுக்கு நடுவில் வைத்திருந்த பணத்தை நம்பி அங்கிருந்து கிளம்பியிருந்தாள் நாச்சியார்.
ஒவ்வொருவரிடமும் விசாரித்து எழும்பூர் வந்தவள் கிடைத்த இரயில் ஏறி மதுரை வந்து அங்கிருந்து தூத்துக்குடியை அடைந்திருந்தாள்.
தனது வீட்டு வாசலை அடைந்தவள் கதவைத் தட்டி விட்டு காத்திருக்க அவளைப் பார்த்த வள்ளி உள்ளிழுத்து கண்மண் தெரியாமல் அடி வெளுத்து விட்டிருந்தார்.
சுள்ளென்று விழும் ஒவ்வொரு அடிக்கும் சிறு கண்ணீர் கூட இல்லாது அப்படியே நின்றிருந்தாள் நாச்சியார். அடித்து ஓய்ந்து போனவராய் வள்ளி கணவனுக்கும் பெரிய மகளுக்கும் அழைத்து விஷயத்தைக் கூறி வீட்டிற்கு வர வைத்திருந்தார்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
21 comments
Kathai aarambamey romba kashttamaa erukkey…entha kaalaththu pillaingalukku appdi yennathaan kadhal kekkutho 😏😏😏
😍😍
True..😑😑
Unakkena iruppen illayaa..
Paravalla mutual thanam purinji vanthuttaa
😍😍
Yes ka..athu varai sandhosham..
Good morning. புதிய கதையா மா. அருமையான ஆரம்பம்.
😍😍
Ama ka new stry..😍😍
New story ah ma
Nice start ma
😍😍
Ama ka new one..😍
Super💕
😍😍
Thank you ka..
Rajes
நல்ல வேளை திரும்பி வந்துட்டா …
😍😍
Yes thapicha..😃
Aandal Venkatraghavan
First episode interesting ah start Iruku akka❤️
😍😍
Thank you ma..😍
நல்ல வேலை அவன் எதுவும் பண்ணாமா விட்டானே 😏😏😏😏
நாச்சியார் 🙄🙄🙄🙄
திரும்ப வந்தாலே
அவன் எதுவும் பண்ணாமா விட்டானே 😏😏😏😏
நாச்சியார் 🙄🙄🙄🙄 திரும்ப வந்தாலே
😍😍
Athe athe..😃
😍😍😍
அப்ப இந்த பாட்டு போட முடியாதா? ☹️☹️
https://youtu.be/mhAYRxCKC1Q?si=MTt2E8zE9yCugGkt
😍😍
Ithuku al nalaiku varan..😁😍😍😍
நைஸ் ஸ்டார்ட் 😍😍😍
நாச்சியார் அவசரப்பட்டு தப்பான முடிவை எடுத்துட்டா… நல்லவேளை திரும்பி வந்துட்டா ஆனா இதோட முடியாதே….
yeppadiyo escape agitta