அந்த நாளின் காலை அத்தனை அழகானதாய் இருவருக்கும் ஆரம்பித்தது. சமையலறையில் இருவருக்குமாய் காலை உணவாய் தோசை தயார் செய்து கொண்டிருந்தவளின் அருகிலேயே அமர்ந்து அவளுக்கு ஊட்டியவாறே தானும் உண்ண ஆரம்பித்திருந்தான் எழில்.
“குள்ளச்சி பேய் பசி போல பாத்து விட்டா என் கையையும் சேர்த்து கடிச்சுருவ போலயே. . ”
“ம்ம் நல்ல ஐஸ் வைக்க பழகிட்ட குள்ளச்சி. . சரி சொல்லேன் இந்த கதை எழுதுறத பத்தி. . ”
“கதையை பத்தியா என்ன சொல்லட்டும்?”
“ம்ம் இப்போ இந்த சினிமாவுக்கும் கதைக்கும் என்ன வித்தியாசம். . எனக்கு ரெண்டை பத்தியுமே ஒண்ணும் தெரியாதுதேன். . இருந்தாலும் நீசொன்னா புரியும். . சொல்லு. . ”
“ம்ம் இப்போ சினிமாங்கிறது ஒரு மூணு மணி நேரத்துக்குள்ள அவங்க சொல்ல வர்ற விஷயத்தை அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான முகங்களை நடிகர்களா வச்சு பாட்டு பைட்னு எக்ஸ்ட்ரா எலெமெண்ட் எல்லாம்சேர்த்து கண்ணுக்கு குளிர்ச்சியா நமக்கு காட்டிருவாங்க. .
அது பாக்குற எல்லாருக்குமே பொதுவான ஒரு விஷயமாதான் இருக்கும். எத்தனை வருசம் கழிச்சு அந்த படத்தோட பெயரைச் சொன்னாலும் அந்த நடிகர்கள் முகம் நமக்கு நியாபகம் வரும்.
அதே நேரம் கதைனு எடுத்துகிட்டா அது எல்லாருக்கும் பொதுவானது கிடையாது. இப்போ ஒரு புக்கை கொடுத்து உன்னை படிக்கச் சொன்னா அந்த ஹீரோயினா உனக்கு பிடிச்ச இல்ல தோணுற ஒரு உருவத்தை அந்த கேரக்டருக்கு கொடுப்ப. .
அதே நேரம் நா அந்த கதையை படிச்சா என்னோட கற்பனையின்படி தான் அதுக்கு உருவம் கொடுப்பேன். என் கற்பனைக்குள்ள உன்னால வர முடியாது. அதே மாதிரி அதில் சொல்லப்படுற ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சூழலும் காட்சியா நம் கண் முன்னாடி வரணும்.
அது அந்த எழுத்தாளருக்கு கிடைக்குற மிகப் பெரிய அங்கீகாரம். . கதையில் காதல் பண்ணிணா நம் மனசும் அந்த காதலை உணரணும். அதில் அழுகை காட்சி வந்தா நம்ம கண்ணும் கலங்கணும்.
ஒருத்தர் அழறதை பார்த்தா நமக்கும் அழுகை வர்றது சாதாரணம் அதுதான் சினிமா. . அதே வெறும் வரிகளை மட்டுமே உள்வாங்கி அந்த உணர்ச்சியை வெளிப்படுத்த வைக்குறது தான் கதை. . ”
“அம்மாடியோ என்ன இம்புட்டு அழகா பேசுற. . ஆனாலும் அப்போ இருந்தே நீ மூளைக்காரிதேன். . இருந்தாலும் இதுக்கு இன்னும் நிறையவே கற்பனைல யோசிக்கணும் இல்ல. . ”
“உண்மைதான் மாமா. . நம்ம கற்பனையில் உயிர் கொடுக்குற கதாபாத்திரங்கள் படிக்குற மனசுல நிலைச்சு நிக்குற அளவுக்கு அழுத்தம் கொடுக்கனுமே. . ”
“ம்ம். . ”
“மாமா நா ஒண்ணு சொல்லவா. .
“என்ன டீ பொண்டாட்டி. . ”
“என் கற்பனை உலகம் எனக்கு ரொம்பவே பிடிச்ச ஒண்ணு. . ஆனா இப்போ என் அத்தனை கற்பனைக்கும் அப்பாற்பட்டவனா இருக்குற உன்னைதான் ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு. . ”
“ ம்ம் அப்படிங்குற இருந்தாலும் இப்படி சொன்னா நம்ப முடியாது நம்புற மாதிரி சொல்லு பாக்கலாம்”,என்றவன் தன் கன்னத்தை காட்ட மறுக்காமல் தன் முத்திரையை பதித்தாள்.
அன்று மதியதிற்கு மேல் அவர்கள் அனைவரும் கிளம்பிவிட்டதாய் கூற அவர்கள் வரும் நேரத்தை கணித்து எழில் கடைக்கு கிளம்பினான். இப்போதெல்லாம் இயல்பாகவே ஒரு புன்னகை அவன் முகத்தில் குடிகொண்டு விட்டதாய் அவனை பார்ப்பவர்கள் அனைவருக்குமே தோணியிருந்தது.
அந்தளவிற்கு அவனது மனதின் உற்சாகம் முகத்திலும் வெளிப்பட்டது. இப்படி அனைத்தும் நிம்மதியாய் சென்று கொண்டிருந்த நேரம் சாமியால் மீண்டும் பிரச்சனை ஆரம்பமானது.
மறுநாள் காலையிலேயே அவன் அக்காவோடு மகேந்திரநாதனை சந்திக்க வீட்டிற்கே வந்துவிட்டான். அவனை கண்டு கொதித்துப் போனவராய் மகேந்திரநாதன் சத்தம் போட ஆரம்பிக்க சத்தம் கேட்டு அனைவருமாய் வெளியே வந்தனர்.
சட்டையின் கையை மடக்கியவாறே எழில் அரசியோடு கீழே வந்தான். .
“வாலே வயசானவன்கிட்ட வீரத்தை காட்டின பாயும்புலி. . ”,என சாமியின் அக்கா அவனை முறைக்க அவன் பதில் கூறும் முன் அரசி,
“பொண்ணுகிட்ட வீரத்தை காட்டின நீங்க எல்லாம் இப்படி பேச தகுதியிருக்கா. . ”
“வாடி சீமச் சிருக்கி. . நல்லா ப்ரெண்டு ப்ரெண்டுனு கூட சுத்தி நல்லா புளியங்கொம்பா வளைச்சு போட்டுட்ட ஏன் பேசமாட்ட. . ”
என்று அவள் முடிப்பதற்குள் சாமியின் கன்னத்தில் தன் மொத்த பலத்தையும் இறக்கியிருந்தான் எழிலமுதன். .
“எங்க வந்து யாரைபத்தி பேசுறோம்னு யோசிச்சு பேசணும் விளங்குதா. . பொம்பளையா போய்ட்ட இல்லை இந்நேரம் அங்க விழுந்த அடி உன்மேல விழுந்துருக்கும். இப்படியே இங்கருந்து போய்ருங்க. . இல்ல உயிருக்கு நா உத்திரவாதம் கிடையாது சொல்லிட்டேன். . ”
ஆத்திரத்தில் கொந்தளித்தவனை கண்டு சற்றே பின் வாங்கியவர்கள் பொழிலை முறைத்தவாறே அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் தலை மறையும் வரை அமைதிகாத்தவன் அடுத்த நொடி கத்த ஆரம்பித்திருந்தான்.
“என் புருசனை பேசினா எனக்கு கோவம் வராதா??”,அவனுக்கு மிச்சமாய் அவள் கத்த மொத்த குடும்பமும் வேடிக்கை பார்த்தது. எழிலை எதிர்த்து அந்த வீட்டில் கேட்ட முதல் குரல்.
மகேந்திரநாதனுக்கும் பாக்கியத்திற்கும் சின்னதாய் புன்னகை கூட வந்திருந்தது.
“ம்ம் அப்படியே கண்ணகி மாதிரி போய் எரிச்சுருக்க வேண்டியதுதான. . அவனே ஒரு பிக்காலிப் பய அதுங்களோட போய் மல்லுக்கு நிப்பியா. . ”
“இங்க பாரு மாமா. . உன்னை விட அவன் மேல நா கடுப்புல இருக்கேன். . எப்போ பாத்தாலும் சும்மா எதாவது குடைச்சல் கொடுத்துகிட்டு. . இந்த லட்சணத்துல நம்ம கண்ணியை பொண்ணு கேட்டு வருவானுங்களா. .
அந்த கடுப்புலதான் பேசிட்டேன். . அதுக்காக சந்தோஷப்படாம என்னையே திட்டுற. . ”
“ம்ம் அதான உன்கிட்ட பேசி மனுசன் ஜெயிச்சுர முடியுமா. . இதலெல்லாம் வாயா இல்ல வாய்க்காவானு தெரில. . உன் ராங்கி தனத்தை எல்லாம் என்னோட நிறுத்திக்கோ சொல்லிட்டேன். . ”
“ம்ம் நல்லது இனி நா வாய் பேசினேன்னா பாரு. . நீயாச்சு அவனாச்சு என்னவோ பண்ணித் தொல போ. . ”,என்றவள் சிலுப்பிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்து கொள்ள எழிலோ கோவமாய் தனதறைக்குச் சென்று விட்டான்.
“அத்தே ஆனாலும் உங்க புள்ளைக்கு இத்தனை கோவம் ஆகாது. . நா இப்போ என்ன பேசிட்டேன்னு என்னை பிடிச்சு கத்துறான். . ”
“அடிப் பொண்ணே அவனுங்க ஏற்கனவே உன்னை கொல்லத் துணிஞ்சவனுங்க. . இதுல நீ போய் இப்படி எதையாவது பேசி வச்சனா மறுபடியும் உன்னை எதாவது பண்ணிருவானுங்களோனு அவன் பயப்படுதான். . அது தெரியாம நீ எதுக்கு திருப்பி போட்ட கரப்பான்பூச்சியாட்டம் துள்ளிட்டு கிடக்குறவ. . ”
“அதான என்ன ஆனாலும் உங்க புள்ளைய விட்டு கொடுப்பீங்களா. . போங்க நா யாரையும் எதுவும் சொல்லல. . ”
அதற்குள் அங்கு வந்த மலரொளி அவளிடம்,”ஏட்டீ பொழிலு என்ன எம்புள்ளகிட்ட இந்த போடு போடுறவ. . ஆனாலும் அவன் சொல்றமாதிரி நீ சரியான ராங்கிதேன். . கொஞ்சமும் பயமே இல்லாம போச்சு. . போ ஆச்சி கூப்புடுதாக போய் என்னனு கேளு. . ”
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வராண்டாவிற்குச் செல்ல மகேந்திரநாதனும் பாக்கியமும் சிரித்தவாறே அவளை தங்களருகில் அமர்த்திக் கொண்டனர்.
“பின்ன என்ன ஆச்சி. . தாத்தாவ எதிர்த்து பேசினப்போ உங்களுக்கு கோவம் வந்த மாதிரி தான எனக்கும் அவனை பத்தி பேசின உடனே வந்துச்சு அதுக்கென்னவோ இந்த கத்து கத்துறான். ”
“அடிக் கழுத இன்னும் அவன் இவனுகிட்டு முதல்ல இத மாத்து அப்பதேன் புருசன்ங்கிற நினைப்பு வரும். . இல்லைனா இப்படிதேன் பள்ளிகூட பிள்ளைகளாட்டம் கோள்மூட்டிட்டு கிடப்பீக. . போ போய் அவனை சமாதானப்படுத்து. . ”
“போங்க ஆச்சி அதெல்லாம் முடியாது என் மேல என்ன தப்பிருக்கு சமாதானபடுத்த அவனே மலையெறங்குவான் விடுங்க. . ”
“ஏலேய் பொழிலு போ போய் அவன்ட்ட பேசு எப்படியும் நிலைமையை பார்த்தா என்ன மாதிரியே என் பேராண்டியும் பொண்டாட்டிகிட்ட சரண்டர் ஆய்ருவான்னுதேன் தோணுது. . போ. . ”,என மகேந்திரநாதன் கூறிய விதத்தில் சிரித்து விட்டவள் ரகசியமாய் பாக்கியத்திடம்,
“அட கள்ளி தாத்தாவையே மிரட்டி வச்சுட்டு எனக்கு அட்வைஸ் பண்றீங்களா??”
“சின்ன கழுதை ஓடிப் போ. . வர வர எல்லாத்துக்கும் வாய் அதிகமா போச்சு. . போட்டீ போய் உன் புருசனை கவனி. . ”,என முதுகில் ஒரு அடி போட்டு அனுப்பி வைத்தார்.
அறைக்குள் நுழைந்த நேரம் சரியாய் எழில் வெளியே வர அவன் மீது மோதி நின்றாள்.
“ஏய் குள்ளச்சி என்ன ரொம்ப பேசுத. . சரியில்லயே. . ”,என்றவன் அவளை உள்ளிழுத்து கதவை தாழிட்டு சாய்த்து நிறுத்தினான்.
“இப்போ பேசு டீ. . ”
“நல்லா பேசுவேன் உனக்கென்ன. . சொல்லு ஏன் என்னை திட்டிட்டே இருக்க. . ”
“பின்ன கொஞ்சுவாங்களா அந்த சல்லிப்ய கூட்டத்துக்கு சரிசமமா நின்னு நீ வாயாடுனா பாத்துட்டு கிடக்கணுமா. . அவன் குறி எப்போ உன் மேலயும் இருக்குனு தெரிஞ்சுதோ அப்போவே நா கொஞ்சம் அடங்கிதேன் போறேன். .
“டேய் கருவாயா என்ன பரம்பரை கொலைகாரன் மாதிரி பேசுற. . எனக்கே கொஞ்சம் பயமாதான் இருக்கு. . இன்னொருதடவை பேச்சுக்கும் அப்படி சொல்லாத. . ”
“ம்ம் இனியாவது பாத்து சூதானமா நடந்துக்க இது ஒண்ணும் மெட்ராஸ்ல இங்க பாதிக்கு மேல காட்டுப் பயலுகதேன் வம்புக்கு அலையுவானுங்க. . உனக்கு ஒண்ணுணா என்னால தாங்க முடியாது டீ. . ”
“ம்ம் புரியுது மாமா. . சாரி இனி இப்படி பண்ண மாட்டேன். . ”
“என்ன குள்ளச்சி பட்டுனு சமாதான கொடி பறக்க விட்டுட்ட இன்னும் நல்ல சண்டை போடுவ அப்பறம் சமாதானபடுத்த செமயா கவனிப்பனு நினைச்சனே. . ”
“ம்ம் அப்போ சண்டை போட்டா மட்டும்தான் சாரை கவனிக்குறனா?”,என மார்க்கமாய் பார்த்து வைத்தாள்.
“ச்சீ கருமம் என்ன டீ கூச்சமே இல்லாம கேக்குற. . ”
“என் கருவாயன்கிட்ட எனக்கு என்ன கூச்சம்??”
“ம்ம் இந்த வாய்தேன். . ரொம்ப பேசுற இந்த வாயை என்ன பண்ணலாம். . ”
என்றவன் தன்னவளின் அதரங்களுக்கு அழகிய தண்டனையை கொடுக்க ஆரம்பித்திருந்தான்.
அந்த செவ்வாய் கிழமை காலை ஐந்தரை மணிக்கெல்லாம் அவளை தயாராகச் சொன்னவன் குளிக்க கூட விடாமல் ஒரு செட் உடையோடு அவளுடன் கிளம்பினான்.
விடியகாலை நேரம் எத்தனை ரம்மியமான பொழுது. அதுவும் மாசற்ற குளிர்காற்று முகத்தில் அடிக்க எழிலின் கைகோர்த்தவாறு பயணத்தை ரசித்திருந்தாள்.
நேராய் அம்பாசமுத்திரம் தாண்டி 10-15 நிமிடத்தில் ஓர் வழியில் நுழைந்தவன் சில நிமிட பயணத்தை தொடர்ந்து ஓரிடத்தில் வண்டியை நிறுத்தினான்.
“என்ன இடம் மாமா இது?”
“வா சொல்லுதேன். . ”,என்றவன் அவள் கையை பிடித்துக் கொண்டு நடக்க சில அடி தூரத்தில் கண்ணெதிரில் கண்ட காட்சியில் அதிசயித்துப் போனாள்.
“இதேன் மணிமுத்தாறு பால்ஸ். . இங்கன எல்லாம் நீ வந்துருக்க மாட்டனு தெரியும் எப்படியிருக்கு??”
“மாமா செமயா இருக்கு. . நா அருவியெல்லாம் பாத்ததே இல்ல. . ஆனா எப்படி இப்படி ஆளே இல்லாம இருக்கு. . ”
“ம்ம் இங்கன கூட்டம் கம்மியாதேன் வரும். . சனி ஞாயிறுனா கொஞ்சம் அதிகமிருக்கும் அதுகூட நேரமாக ஆகதேன். . இந்த நேரத்துல ரொம் ஆட்கள் வரமாட்டாக. வா. . ”,என்றவன் அவளை அழைத்துக் கொண்டு படிகட்டுகளில் இறங்கினான்.
அருகில் செல்ல செல்ல நீரின் குளிர்சாரல் முகத்தில் அடிக்க. இன்னுமாய் அவனோடு கைகோர்த்துக் கொண்டாள். அங்கேயே ஓரமாய் அறைபோல உடைமாற்றும் இடமிருக்க அங்கு தன் பேக்கை வைத்தவன் சட்டையை கழட்டியவாறு குளிக்கத் தயாரானான்.
“வாய் மட்டும் இங்கயிருந்து வடக்கால போகுதே அருவில குளிக்க என்ன டீ பயம். . ”
“ஆசையா இருக்கு ஆனா பயமாவும் இருக்கு. . ”
“ம்ம் சரி வா கையைப் பிடிச்சுக்கோ கீழே பாத்து காலை வச்சு நடக்கணும் ரொம்ப வழுக்கும் புரியுதா. . ”,என்றவாறே அவளை அருவியின் அருகில் அழைத்துச் சென்றான்.
லேசாய் நீரில் காலை நீட்டியவளுக்கு புல்லரித்தது. ”டேய் தடிமாடு என்ன இப்படி குளுருது. . ”
“ஏன் டீ அருவி தண்ணி குளுராம மேலே உக்காந்து வெந்நீர் வச்சா கொட்டுவாக. . வாயை மூடிகிட்டு வா இல்ல நானே தள்ளி விட்டுருவேன். . ”
முதல் துளி உச்சந்தலையில் பட அப்படியாய் நடுங்கிப் போனாள் பொழிலரசி. தலைக்கு தண்ணீர்விடும் நேரம் குழந்தை திணறுவது போன்ற பாவம் அவள் முகத்தில்.
எழிலுக்கு ஒருபுறம் சிரிப்பாய் இருந்தாலும் தன்னவளின் அத்தனை முகபாவத்தையும் ரசித்தான். இரண்டு நிமிடங்கள் கூட தாக்கு பிடிக்காதவளாய் அருவியை விட்டு வெளியே வந்தவள் மூச்சு வாங்க கைகள் நடுங்க நின்றிருந்தாள்.
அவளருகில் வந்தவன் ஆதரவாய் அணை. துக் கொள்ள கையெல்லாம் சில்லிட்டு போயிருந்தது.
“ஐய்யயயே என்ன இது இப்படி நடுங்குற. . உன்னையெல்லாம் வச்சு. . போ போய் துண்டை எடுத்து துடைச்சுக்கோ டிரெஸை மாத்து நா வரேன். . ”
“ம்ம் வேணாம் வேணாம் இதுவும் ஒரு மாதிரி நல்லாயிருக்கு இன்னொரு தடவை போய்ட்டு வரேன். . ”,என்றவள் மீண்டும் உள்ளே நுழைந்து கொண்டாள். அரைமணி நேரமாய் உள்ளே வெளியே விளையாடி ஒருவழியாய் போதுமென அரைமனதாய் வெளியே வந்தவள் உடைமாற்றி தலையை உலர வைத்தாள்.
“வா அரசி முடி அப்படியே விடு காத்துல காஞ்சுரும். . இதுக்கே அசந்துட்டா எப்படி இனிதான் முக்ககமான இட. துக்கே போ போறோம். அதுக்கு முன்னாடி வரும்போது வாங்கின டிபனை சாப்ட்ரு. . ”
சாப்பிட்டு முடித்துகாரை கிப்பியன் டேமைத் தாண்டி மேலே ஒற்றையடி பாதை போல் இருந்த பாதையில் ஓட்ட ஆரம்பித்தான். ழியில் செக்கிங் ஏரியா இருக்க காரை மொத்தமாய் சோதித்தவர்கள் ஏதோ பேப்பர் கேட்க அதை தாண்பி. துவிட்டு வந்தான் எழிலமுதன்.
அதற்குள் அங்கிருந்த பெயர்பலகையை பார்த்திருந்தவள் எழில் வந்து காரை எடுத்ததும் அவனிடம் கேட்டாள்.
“மாஞ்சோலை யா??இங்க என்ன இருக்கு மாமா?”
“இது வெள்ளைகாரன் காலத்துல இருந்து இருக்குற டீ எஸ்டேட் அரசி. . தரையிலிருந்து கிட்டதட்ட 4000 அடி உயரம். . இதோ இந்த மாதிரி ஒத்தையடி பாதைதேன் வழி பூராவுமே. . இப்போ எப்படி வெயில் அடிக்குது மேல போக போக நீ நம்ம ஊருனே மறந்துருவ. . அவ்ளோ குளு குளுனு இருக்கும்.
இங்க வர்றதுக்கு ஃபாரெஸ்ட் ஏரியா ஆபீஸ் பெர்மிஷன் வேணும். ஒரு நாளைக்கு நாலு இல்ல அஞ்சு வண்டிகளதேன் அனுமதிப்பாங்க. . பாதி தூரத்துல மக்கள் வாழற ஊர் இருக்கு அதுவரை பஸ் போகும்.
கிட்டதட்ட இரண்டரை மணி நேரம் ஆகும் முழு உயரத்துக்கும் போறதுக்கு அதனாலதேன் சீக்கிரமே கிளம்புறது. சாய்ந்திரம் 6 மணிகுள்ள இறங்க ஆரம்பிச்சுரணும்.
மிருகங்கள் நடமாட்டம் இருக்கும் அதுவும் போக நல்ல வண்டி ஓட்ட தெரிஞ்சாதேன் இன்னமும் நல்லது. . பாதி பேருக்கு மேல இப்படி ஒரு இடம் இருக்குறதே தெரியாது. . நா முத்துல்லாம் இரண்டு மூணு தடவை வந்துருக்கோம். எல்லாத்துக்கும் மேல அங்க தருவாங்க பாரு டீ அப்படியே நாக்குல டேஸ்ட் ஒட்டிக்கும். ”
“மாமா நீ சொல்ல சொல்ல செம ஜாலியா இருக்கு. . ஆனாலும் நீ சொன்ன உயரம்தான் கொஞ்சம் பீதியா இருக்கு. . இருந்தாலும் உன்னோட வர்றதுனால அதுவும் ஒருமாதிரி கிக்கா தான் இருக்கு. . ”
மேலே செல்ல அவன் கூறியதுபோல் வானிலை அப்படியே மாறிவிட்டது. ஆனால் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கவனம் நிறையவே தேவை. எதிரில் ஏதேனும் வண்டி வந்தால் மறுபுறம் இருப்பவர்கள் பின் நகர்த்தி வழி விடாமல் செல்ல முடியாது அதுவும் போக கூர்மையான ஹேர்பின் பெண்டுகள் தான் அத்தனையும்.
மணி நேர பயணத்தை தொடர்ந்து அழகான புல்வெளி ஏரியா ஒன்றிருந்தது. பத்துநிமிடம் ஓய்விற்காக அங்கு காரை நிறுத்தியவன் தன்னவளோடு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு சில பல கதை பேசிவிட்டு பின் கிளம்பினான்.
அதன்பின் அவன்கூறிய கிராம பகுதி வந்தவுடன் அங்கு அவளுக்கு டீ வாங்கி கொடுத்து தேயிலையிலேயே செய்த ரஸ்க்கும் வாங்கிக் கொடுத்தான்.
அங்கிருந்து மீண்டும் ஒன்றரை மணி நேர பயணம். . மலையின் உச்சியில் நின்று தாங்கள் வந்த வழியை காட்டடபோது வாயை பிளந்து நின்றாள் அரசி.
“இங்க இருந்து பாக்குற இதெல்லாம் மொத்த திருநெல்வேலியும் தூத்துக்குடியும். . எப்படி பொட்டி பொட்டியா தெரியுது பாரு. . ”
“என்ன டீ பேச்சையே காணும். . ”
“அமைதியாய்சற்று முன்னே சென்றவள் கைகளை வாய்கருகில் குவித்து,”மாமா ஐ லவ் யூ”,என்று குழந்தையாய் கத்தினாள்.