காதல் கள்வனே _ கவிக...
 
Notifications
Clear all

காதல் கள்வனே _ கவிக்குயிலின் கவி விமர்சனம்

(@mrs-beena-loganathan)
Trusted Member
Joined: 1 month ago
Posts: 50
Topic starter   [#29]

 

#காதல்_கள்வனே_ஶ்ரீ 

 

#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்

#கவிக்குயிலின்_கவி_விமர்சனம் 

 

 

கூட்டுக் குடும்பம் 

கலை கட்டும் வீடு

குரல்கள் பல இருந்தும்

குருதி ஒன்றாக

காக்கும் வீடு....

 

ஆச்சி தாத்தா ஆசீர்வாதம் 

அரணாய் நிற்க

அப்பா அம்மா  

அன்பில் நனைக்க

சித்தி சித்தப்பா

சிரிப்பில் சுவை கூட்ட

அண்ணன் தம்பிகள்

அனுசரணையாக தோள் கொடுக்க

தங்கையின் சேட்டையில் 

தினம் மலரும் பூந்தோட்டம்....

 

குடும்பம் என்றால் இதுதான் எனக் 

கூறும் 

கூட்டுக் குடும்பத்தின் எடுத்துக்காட்டு...

 

 

 

காரணம் சொல்லாமல்

காதலை மறைத்தவன்

தன் வாழ்க்கையைத் தள்ளி வைத்து

தம்பியின் கல்யாணம் காத்து நின்றவன்....

 

கண்ணில் ஏக்கம் இருந்தும்

குரலில் அமைதி பூண்டவன்

காதல் இருந்தும் சொல்லாமல்

காலத்தை கடந்தவன்...

 

 

விழுந்து உடைந்த உள்ளம்

விட்டு சென்ற கனவுகள்

விழித்திருந்த இரவுகள்

விடியலாக மாறவே காத்திருக்க...

 

விழிகள் கசிந்து

விழுந்த கண்ணீரில்

வாழ்ந்தேன்

வந்தாய் நீ… 

வலியையே 

வானவில் ஆக்கி

வாழ்க்கையை வண்ணமாக்கிய

வழித்துணையே....

 

 

அமுதனை ஆள வரும் அரசி

அவள் வருகையில்

அவன் விரல்களில் மாறியது

அவர்கள் உலகம்....

 

கதைகள் எழுதும் அவள்

கற்பனை நாயகன்

கனவிலும் காணாத வாழ்வு 

கண்ணீரோடு காத்திருந்த காலம்

காணாமல் இருந்த இரு உயிர்கள்

காலம் கொண்டு சந்தித்த தருணம்

கண்ணீரை கடலாக்கி

காதலில் மூழ்கிய பருவம்....

 

 

காணாத கணங்களில் கூட என்னை கண்டவன் நீ

காத்திருந்த காலத்தின் காயங்களை கரைத்தவன் நீ

கனவிலும் வராத வாழ்க்கையை கையிலே தந்தவன் நீ

காதல் என்ற சொல்லுக்கு அர்த்தமாய் நின்றவன் நீ

காலம் கடந்தாலும் குறையாத காதல் (காதலன்)நீ.....

 

மகிழ்ச்சி

மாறாத மனதில் முளைத்த காதல்

மௌனத்தில் மறைய....

மனதின் மறைவில் வைத்திருந்த உணர்வு

மலர்ந்து மின்னியது....

 

மழைபோல் விழுந்த ஆசைகள் 

மண்ணில் நனைந்தது

மீண்டு வந்த நாம்

மீண்டும் பிறந்தோம்.....

 

மகிழ்ச்சியில் மூழ்கி வாழத் தொடங்கியது

மனம்மொத்த தம்பதிகள்...

 

 

திருடன் போல தனக்குள்ளே பூட்டி வைத்த காதலே 

திறந்து கொண்டாடித் தீர்க்கும் 

கள்வனின் காதலியாக அமுதனை ஆளும் அரசி....

 

அரசியாய் வந்தவள் அவனை திண்டாட வைத்த

அரசியின் அமுதமாக அமுதனை கொண்டாட வைத்திட...

 

 

அரசியின் 

ஆட்சியில் 

அரசிகளின் 

அன்பி

ல் என்றும்

அமுதன் அடிமையே....

 

அருமையான காதல் கதை வாழ்த்துக்கள் மா 💐 ❤️🤩👍🏻✅🌹❤️‍🔥

 

 

 

 

 

 

 

 

 

 



   
ஸ்ரீ reacted
Quote
(@sri)
Member Admin
Joined: 2 months ago
Posts: 92
 

எப்போதும் போல அழகான விமர்சனம் கா.. மிக்க நன்றி.. lots of love.. 😘 😍 😍 😍 😍


 



   
ReplyQuote
(@mrs-beena-loganathan)
Trusted Member
Joined: 1 month ago
Posts: 50
Topic starter  

நன்றி ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻💐💐💐💐வாழ்த்துக்கள் மா 



   
ஸ்ரீ reacted
ReplyQuote
Share: