விளக்கம் ஒரு நாள் எனக்கு பசி வேண்டாம் அமைதியாக இரு என்று சொன்னால் வயிரே நீ கேட்க்க மாட்டாய், சரி உணவு அதிகமாக கிடைக்கிறது ஆகையால் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானவற்றை இன்றே நிரப்பிக் கொள் என்றால் அதையும் செய்ய மாட்டாய்.
நாள் தவறாமல் ஒவ்வொரு வேலையும் உன்னையை நிரப்புவதே பெரும் வேலையாக இருக்கிறது , உன் தேவைக்காகவே பலருடன் போராட வேண்டி இருக்கிறது. உன்னோடு வாழ்வது துன்பத்தை தருகிறது.”
அன்புவின் வீட்டிற்கு வந்து இருவருமாய் ஹாலில் அமர்ந்து சிறிதுநேரம் பேசிக் கொண்டிருக்க சிறியவர்கள் படத்துக்கு கிளம்பச் சொல்லி நச்சரிக்க ஆரம்பித்திருந்தனர்.
“இன்பா ஆறரை மணிக்கு தான டா படம்..மணி இப்போ நாலு தான் ஆகுது..”
“நல்ல பிள்ளைங்க..சரி காயத்ரி நீ போய் கிளம்பு..போடா..”,என்றதும் இருவருமாய் அவர்களது அறைக்குச் சென்று பதினைந்து நிமிடத்தில் இறங்கி வந்தனர்.
ஆண்கள் மூவருமாய் முன்னே செல்ல காயத்ரியின் அருகில் நடந்தபடியே தேன்மொழி,
“என்ன அண்ணி நீங்க இரண்டு பேரும் ரொமேன்ஸ்ல ஆர் கூட தெரியாதவங்க போலேயே..”
“அடி..என்னப் பேச்சு இது.நான் உன் அண்ணி நியாபகம் இருக்கட்டும்..”,என்றவள் செல்லமாய் அவள் காதைத் திருகினாள்.
“ஸ்ஆஆ அண்ணி நான் மேஜர் அதெல்லாம் பேசலாம்..”,என்றவள் மீண்டுமாய் புருவங்களை ஏற்றியிறக்க,
“ம்ம் இரு உன் அண்ணாகிட்டேயே கேட்போம்..”,என்று அவள் முடிப்பதற்குள் சிட்டாய் பறந்திருந்தாள் சிறியவள்.
காயத்ரிக்கோ முகத்தின் சிவப்பை மறைப்பது பெரும்பாடாய் இருந்தது.கிடைத்த பத்து நிமிடத்திலும் தன்னை ஒரு வழியாக்கிய கணவனை நினைத்தவாறே காரின் அருகில் வந்தவளின் முகமாற்றத்தை கவனித்திருந்தான் அன்பு.
“அண்ணா நீயே கார் ஓட்டு அண்ணி நீங்க முன்னால உட்காந்துகோங்க..நாங்க மூணு பேரும் பின்னாடி ஏறிக்குறோம்”,என்று ஆனந்தன் கூற அப்படியே செய்திருந்தனர்.
“தம்பி உங்க வொர்க் அவர்ஸ் எப்படி..”
“ஏன் இன்பா காலேஜ்ல இரண்டு பேரும் எப்படி தான் அமைதியா இருப்பீங்க..”
“தேனு நீ ஏதோ டவுட் கேட்டியே உங்க அண்ணன்கிட்ட கேட்கவா”,இப்படியாய் வளவளத்துக் கொண்டே வந்தவளைப் பார்த்து புன்னகைத்தவாறே காரை ஓட்டிக் கொண்டிருந்தான் அன்பு.
“ஆமா அண்ணி அதென்ன ஆனந்த் அண்ணணை மட்டும் தம்பினு பாசமா கூப்பிடுறீங்க..அப்போ நான் மட்டும் என்ன டொமேட்டா சட்னியா?”,என்றான் இன்பா..
“ஹா ஹா..அவரு எங்களை விட கொஞ்சம் தான் வயசு கம்மி அதனால தம்பி..நீங்க ரெண்டு பேரும் ரொம்ப குட்டீஸ் டா..எனக்கு புள்ள மாதிரினு வைச்சுக்கோங்களேன்..அதான் தம்பினு வர மாட்டேங்குது..”,என்றவள் இயல்பாய் கூறிவிட அன்பு உட்பட அனைவருக்குமே நெகிழ்ந்து விட்டிருந்தது.
“ஹே என்னாச்சு அமைதியாய்ட்டீங்க?!”
“அன்புண்ணே நீ ரொம்ப லக்கி..உன்னாலே நாங்க எல்லாரும் அதைவிட லக்கி..”,என்று தேன்மொழி குதுகலித்தாள்.
“தெரியுமா அண்ணி இவனுக்கு எப்படியோ எனக்கு ரொம்ப பயம்,வரபோற அண்ணிங்க எல்லாம் எப்படியிருப்பாங்களோனு..ஆனா இப்போ தேனு செம ஹேப்பி அண்ணாச்சி..”
“உங்களையெல்லாம் யாருக்காவது பிடிக்காம போகுமா தேனு..இதுக்காகவே உங்க அண்ணாக்கு பெரிய தேங்க்ஸ் சொல்லணும் நான்..இந்த பேமிலிக்குள்ள நானும் வந்ததுக்கு அவன் தான காரணம்..”
அதற்குள் மால் வந்துவிட கதையளந்த படியே காரைப் பார்க் செய்துவிட்டு மாலுக்குள் நுழைந்தனர்.
“அண்ணா அண்ணி நாங்க அப்படியே ஒரு ரவுண்ட் போயிட்டு வரோம்.மூவிக்கு இன்னும் டைம் இருக்குல..நாங்க நேரா தியேட்டருக்கு வந்துட்றோம் சரியா”,என்றபடி மூவருமாய் கழண்டு கொள்ள அன்போடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள் காயத்ரி.
“லவ் யூ டி பொண்டாட்டி..”
“அட..ஏற்கனவே என்னால நார்மலா இருக்க முடில..ஏன் டா இப்படி பண்ற..”
“ம்ம் நீ இப்படி பாசக்காரியா இருந்தா..நானும் தான் என்ன பண்றது..கார்ல நீ அப்படி சொன்னவுடனே அவங்க மூணு பேர் முகத்தையும் பார்க்கணுமே..”
“…”
“உண்மையா அவங்க ரெண்டு பேரும் நான் தூக்கி வளர்த்த பசங்க தான்.ஆனால் நீயும் அதே மாதிரி நினைக்குறது..தேங்க்ஸ் டி..”
“அடி வாங்குவ அன்பு..தேங்க்ஸாம்..”
“ஆமா கேட்கணும்னு நினைச்சேன்..கார் ஏறும் போது தேனு என்னவோ கேட்டாளே என்னது?”
“ஹா..மேடம் சொல்றாங்க நம்ம இரண்டு பேருக்கும் ரொமேன்ஸ்ல ஆர் கூட தெரியலையாம்..”
“ஹா ஹா எல்லாம் சினிமாவை பார்த்து கெட்டுப் போய் கிடக்குதுங்க பாரு..”
“ம்ம் எனக்கே ஒரு கான்ஷியஸ்னெஸ் அன்பு..சின்னவங்க இருக்காங்க சோ எப்பவும் வீட்டுக்குள்ள நார்மலா இருக்கணும்னு நீயும் அப்படியே இருக்கியா..அதனால இவங்களுக்கு இப்படி எல்லாம் டவுட்.”
“ம்ம் நான் ரொமேன்டிக்கா இல்லையானு என் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சா போதாது..இல்ல கண்மணி..”
“ம்ம் அவளுக்கு இரண்டு நாள்லேயே நல்லா தெரிஞ்சுடுச்சு..”,என்றவள் சிரிக்க அவனும் சிரிப்பில் இணைந்து கொண்டான்.
அதன்பின் படத்தைப் பார்த்துவிட்டு இரவு உணவையும் முடித்துவிட்டு வீட்டிற்கு வர பதினொரு மணி ஆகிவிட்டிருந்தது.
“ம்மா தூக்கம் வருது..”,என்றபடி அப்படியே தேன்மொழி தாயின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“கழுதை..போய் ட்ரஸை மாத்திட்டு படு போ..”,என்றபடி ராகினி சிறியவர்களை அனுப்பி வைத்துவிட்டு எழுந்து கொள்ள ஆனந்தனும் அன்புவும் அவரவர் அறைக்குச் சென்றனர்.
“காயத்ரி மா..நாளைக்கு காலையில் ஒரு எட்டு மணிக்கு கிளம்பணும் அதுக்கு ஏத்த மாதிரி பார்த்துக்கோ என்ன..”
“சரி மா..வேற எதுவும் பண்ணணுமா?”
“ஒண்ணும் வேண்டாம்..ரொம்ப நேரமாச்சு போய் படுத்துக்கோ..”
“சரி மா..குட் நைட்..குட் நைட் பா..”,என்றவள் அறைக்குச் சென்றாள்.
“அன்பு மார்னிங் எட்டு மணிக்கு கிளம்பணும்னு அம்மா சொன்னாங்க.”
“ம்ம் ஓகே கண்மணி..தேனும் இன்பாவும் காலேஜ் கிளம்பின உடன் கிளம்பினா சரியா இருக்கும்.”
“ஆமா கோவில் எங்கயிருக்கு?”
“துடியலூர் பக்கத்தில் தான்..”
“ஓ..ஊர்னு சொன்னதும் தான் நியாபகம் வருது.நம்ம ஹனிமூன் எங்க டா போறோம்..”,என்ற சாதாரணமாய் கேட்டவளைப் பார்த்து முறைத்தான்.
“ஏன் டி அழகா வெட்கப்பட்டுட்டே கேட்க வேண்டிய கேள்வியை ஏதோ எந்த கடையில அரிசி வாங்க போறோம்ங்கிற மாதிரி கேட்குற..”,என்றதில் சிரித்தவள் அவன் மடியில் அமர்ந்த வண்ணம்,
“நான் தான் சொன்னனே அச்சம் மடம் எல்லாம் எதிர்பார்க்காதனு..”
“ஐயே ச்ச..ஏன் டா இப்படி பண்ற”,என்று ஏகத்தும் நெளிந்தவளை ரசித்தவனாய்,
“சரி சொல்லு உனக்கு எங்க போகணும்?”
“எனக்கு எங்கனாலும் ஓகே தான்.ஹே பேசாம சென்னை போயிட்டு வரலாமா?அங்க ட்பார்ட்மெண்ட் மக்களுக்கு ஒரு லன்ஞ்ச் மாதிரி அரேண்ஞ்ச் பண்ணிட்டு பார்த்துட்டு வந்துரலாம்..”
“ஏன் டி குளு குளு கோயம்புத்தூரை விட்டு சென்னைக்கு ஹனிமூன் போற ஒரே நாள் நீயா தான் இருப்ப..”
“ஹி..ஹி..இல்ல ஊருக்கு போன மாதிரியும் ஆச்சு அவங்களுக்கு ட்ரீட் வைச்ச மாதிரியும் ஆச்சேனு நினைச்சேன்.இல்லைனா இதுக்காக திரும்ப லீவ் எடுக்கணும்..சரி சொல்லு வேற எங்க போலாம்?”
“நீ சொல்றதும் சரி தான் பேசாம அங்கேயே போலாம் நாளான்னைக்கு கிளம்பலாமா?டூ டேஸ் இருந்துட்டு வருவோம்..”
“சரி அன்பு..கார்லேயே போலாம் நான் பாதி தூரம் ட்ரைவ் பண்ணுறேன்..”
கோவிலை நெருங்கிய நேரம் அங்கு அப்படியாய் ஒரு கூட்டம்.சிறு கோவில் தான் சுற்றிலும் காலி நிலங்களாய் இருக்க ஒரு பத்து பன்னிரண்டு கார்கள் நின்றிருந்தன.
சில பெண்கள் பொங்கல் வைத்துக் கொண்டிருக்க ஆண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“என்னம்மா இவ்வளவு கூட்டம் இன்னைக்கு?”
“முகூர்த்த மாசம் அன்பு..வேண்டுதல் எதாவது இருக்கும்.நாம அர்ச்சனை முடிச்சு கிளம்பிரலாம்.”,என்றபடி கொண்டு வந்த பொருட்களை எடுத்துக் கொண்டு நால்வருமாய் உள்ளே நுழைந்தனர்.
கடவுளை வணங்கி அர்ச்சனை முடித்து வெளியே வந்த நேரம் அங்கு ஒரே சலசலப்பும் கூச்சலுமாய் இருந்தது.வந்திருந்த மக்களில் சிலர் இன்னொரு பிரிவோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
பெண்கள் ஒருபுறமும் ஆண்கள் ஒரு புறமுமென கத்திக் கொண்டிருக்க காயத்ரிக்கோ சில நிமிடங்களில் பொறுமை பறந்திருந்தது.
“இங்கேயே இரு அன்பு வரேன்..”,என்றபடி பெரியவர்களைப் பார்த்து தலையசைத்துவிட்டு அவர்களை நோக்கிச் சென்றாள்.
“என்ன பிரச்சனை?எதுக்கு இப்படி கத்திட்டு கிடக்குறீங்க?”,என்றவளின் அதிகாரத் தொனியில் சத்தம் சற்று மட்டுப்பட ஆண்களோ மீண்டும் வாக்குவாதத்தை தொடங்கியிருந்தனர்.
“இந்தாம்மா..என்ற குடும்ப பிரச்சனையில நீ வராத..பங்காளி தகராறு நாங்க பாத்துக்கிடுவோம் நீ கிளம்பு”,என்ற ஐம்பது மதிக்கத்தக்க பெண்மணியை முறைத்தவள்,
“குடும்ப பிரச்சனைனா வீட்டுக்குள்ள அடிச்சுக்கோங்க..எதுக்கு பொது இடத்துல இப்படி கூச்சல் போட்டுட்டு இருக்கீங்க?”
“ஏய் யாரும்மா நீ என்ற அம்மாகிட்டேயே குரல உசத்துற?சுத்தி இருக்குற அத்தனை பேரும் அமைதியா வேடிக்கை தான பாக்குறாங்க..உனக்கு என்ன?”,என்று மரியாதை இல்லாமல் ஒருவன் கத்த இழுத்து வைத்த பொறுமை எல்லாம் மறந்து போக அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள் காயத்ரி.
ராகவன் ராகினியோடு அன்புச் செல்வனும் அதிர்ந்து நிற்க அன்பு அவசரமாய் மனைவியின் அருகில் ஓடினான்.
“மரியாதை இல்லாம நீ வாங்குற..பொம்பளைனா அவ்வளவு எகத்தாளமா தொலைச்சுருவேன்.இன்னும் இரண்டு நிமிஷத்துல எல்லாரும் இடத்தை காலி பண்ணல..”
“இந்தாம்மா..நீங்க பாட்டுக்கு வந்து கையை நீட்டிட்டு மிரட்டிட்டு இருக்கீங்க..டேய் போலீஸுக்கு போன் பண்ணு டா..இரண்டுல ஒண்ணு பாத்துபுடுவோம்.என்னையா நீ பொண்டாட்டியை பேசவிட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்க”,என்றபடி அன்புவிடம் கையை நீட்ட அவன் நீட்டிய கையை மடக்கிப் பிடித்திருந்தாள் காயத்ரி.
“சொல்லிகிட்டே இருக்கேன்..மரியாதை தெரியாத காட்டான் மாதிரி கத்திட்டு இருக்க..கோவிலுக்கு வந்தோமா பொங்கல் வைச்சோமா தின்னிட்டு வீட்டுக்கு போனோமானு இல்லாம..”, எனும்போதே போலீஸ் வந்துவிட கூட்டத்தை விலக்கி வந்த இன்ஸ்பெக்டர் புடவையை இடுப்பில் சொறுகிய வண்ணம் ஒருவனின் கையை மடக்கிப் பிடித்திருந்தவளை பார்த்து விரைப்பாய் சல்யூட் அடித்தார்.
“மேடம்..”,ஆமோதிப்பாய் தலையசைத்தவள் தன்னிடம் சிக்கியிருந்தவனின் கையை விடுவித்து விலகி நின்றாள்.
“என்னாச்சு மேடம்,என்ன பிரச்சனை?”
“நத்திங்..எதோ குடும்ப பஞ்சாயத்து போல பேசி அனுப்பி விடுங்க..”,என்றவள் அன்புச்செல்வனின் கைப் பிடித்து நகர்ந்தாள்.
ராகவனையும் ராகினியையும் பார்த்தவள் அப்போது தான் அன்புவின் முகத்தை ஏறிட லேசான புன்னகையோடு காரைக் கிளப்பச் சென்றான்.
“என்ன டா மருமகளே பட்டுனு அடிச்சுட்ட..”,என்ற ராகவனைப் பார்த்து தலையைச் சொறிந்தவள் ராகினியைப் பாவமாய் பார்த்தாள்.
“வெளில அப்படியே இருந்து பழகிடுச்சு பா..”
“காயூம்மா..உனக்கு இவ்வளவு கோபம் வருமா?”
“ம்மா…ட்யூட்டில கொஞ்சம் அப்படி மத்தபடி எல்லாம் இல்ல..”,என்றவள் பாவமாய் கணவனைப் பார்த்தாள்.அன்புச் செல்வனோ ட்ரைவர் இருக்கையில் அமர்ந்துச் சத்தமாகவே சிரித்திருந்தான்.
அதன்பின் வீட்டுக்கு வரும் வரையிலும் பெரியவர்கள் காயத்ரியைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தனர்.
அறைக்குள் நுழையும் வரையுமே ஒன்றும் பேசாமல் அன்பு அமைதி காக்க உள்ளே நுழைந்தவுடன் வேகமாய் அவனைப் பிடித்து நிறுத்தினாள்.
“அன்பு ஏன் எதுவும் பேச மாட்ற..”
“உன்கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா இருக்கணும் டி பொண்டாட்டி..”,என்றவனை முறைத்தாள்.
“இத்தனை வருஷமும் நானே ராஜா நானே மந்திரினு வாழ்ந்துட்டு இருந்ததோட எபெக்ட்..இப்போ தான ராஜா நீ வந்துருக்க இனி மாத்திக்கலாம்..”,என்றவளை இடைபிடித்து தன்னருகில் இன்னுமாய் நிறுத்தியவன்,
“கோபத்துல இன்னும் அழகா இருந்தாளே என் கண்மணி..”,என்றவனைப் பார்த்து சிரித்தவள்,
“எனக்கும் இந்த வீட்டுக்கும் நீ இப்படி இருக்குறது தான் பொருத்தம் அதே நேரம் உன் வேலைக்கு அப்படி இருக்குறது தான் பொருத்தம் டி.. என்னால புரிஞ்சுக்க முடியுது.. தேவையில்லாம யோசிக்காத..”,என்றவன் நெற்றி முட்டிச் சிரிக்க எப்போதும் போல் அவனது புரிதலைக் கண்டு பூரித்துப் போனாள் காயத்ரி.