“பல்லினான் நோய் செய்யும் பாம்பு எல்லாம்; கொல் களிறு கோட்டான் நோய் செய்யும், குறித்தாரை; ஊடி, முகத்தான் நோய் செய்வர், மகளிர்; முனிவர் தவத்தின் தருக்குவர், நோய்.
பாம்பு தன்னுடைய பல்லினால் பிறருக்குத் துன்பம் தரும். கொல்லும் தன்மை கொண்ட காளை தன்னுடைய கொம்புகளால் பிறருக்குத் துன்பத்தைத் தரும். பெண்கள் தங்களின் ஊடலால் ஆண்களைத் துன்பப்படுத்துவர். தவ வலிமை கொண்ட முனிவர்கள் பிறரைச் சபிப்பதால் துன்பத்தைக் கொடுப்பர்.”
அன்றைய நாள் அதன் பின் சற்று சாதாரணமாகவேச் சென்றது.ராஜீவ் அழைத்து அங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றிய தொகுப்புகளைக் கூறிவிட்டு இருவரையும் பற்றி விசாரித்தான்.டாக்டரிடம் பேசி விட்டதாகவும் இனி தினமும் சிறிதளவேணும் நடக்க முயற்சி செய் என்றும் ப்ரஜீஷிடம் கூறியிருந்தான்.
ஆனால் எத்தனை கேட்டும் ஆபீஸ் வேலைகளை மட்டும் இப்போதைக்குத் தொடக் கூடாது என்று கண்டிப்பாய் கூறிவிட்டான்.அன்று மதியத்தில் நன்றாக உறங்கிவிட்டதால் இரவு வெகுநேரமாகியும் உறக்கம் வர மறுத்தது ப்ரஜீஷிற்கு.
வரவேற்பறையில் இருந்த டீவீயை உயிர்பித்தவன் ஒவ்வொரு சேனலையும் மாற்றிக் கொண்டு அமர்ந்திருக்க தனதறையில் தண்ணீர் காலியாகி விட்டதால் பாட்டிலில் எடுக்க வெளியே வந்த அபூர்வா அவனைப் பார்த்துவிட்டு எதிர் சோபாவில் அமர்ந்தாள்.
“இன்னும் தூங்கலையா?”
“ம்ம் மதியம் கொஞ்சம் தூங்கிட்டேன்..அதான் இப்போ தூக்கம் வரல..வேலையாவது பார்க்கலாம்னா..இந்த ராஜீவ் ஏதோ பேஷண்ட் மாதிரி ட்ரீட் பண்றான்…”
அவன் கூறியவுடன் ஒரு நொடி அவனது காலைப் பார்த்தவள் மீண்டும் அவனை நோக்க அதைக் கண்டு கொண்டவனாய் அவளை முறைத்தான்.
நானும் அவனும் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்…காலேஜும் ஒண்ணா தான் படிச்சோம்..அப்பறம் நான் இரண்டு வருஷம் ஃபாரின் போய்ட்டேன்…திரும்ப வந்தப்போ அவன் பெரிய பிரச்சனையில் இருந்தான்.லவ் மேரேஜ் அவனோடது…”
“ம்ம் ஒரு தடவை சொல்லிருக்கார்…வீட்ல கூட ஒத்துக்கலனு..”
“அதுக்கு காரணம் அந்தப் பொண்ணு ஒரு ஆசிட் அட்டாக் விக்ட்டிம்..”
“ஓ!!!”
“இவன் யூஜி முடிச்ச அந்த லீவ்ல ஒரு கம்பெனில வேலைக்குச் சேர்ந்துட்டான்.அங்க தான் ஏஞ்சலை மீட் பண்ணிருக்கான்.இரண்டு பேருக்கும் நடுவுல இருந்த ப்ரெண்ஷிப் கொஞ்ச நாள்லயே காதலா மாறிடுச்சு…எல்லாம் சரியா போய்ட்டு இருந்த நேரத்துல தான் ஒரு நாள் அவ ஆபீஸ்ல இருந்து வீட்டுக்குப் போகும் போது ஒருத்தன் ஆசீட் வீசிட்டான்.
அவளோட அலறல் சத்தத்துல அக்கம் பக்கத்துல இருந்தவங்க எல்லாம் சேர்ந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்க..அந்த பையனையும் பிடிச்சுட்டாங்க…அவன் ஆறு மாசமா அவ பின்னாடி சுத்திருக்கான்..ஒரு தடவை வந்து ப்ரபோஸும் பண்ணிருக்கான்.ஏஞ்சல் எனக்கு உன்னைப் பிடிக்கல சாரினு சொல்லிருக்கா…
அவன் அப்பறமும் பின்னாடி வர்றதை நிறுத்தல..அவ பண்ணிண பெரிய தப்பே அவனைப் பத்தி யார்கிட்டேயும் எதுவும் சொல்லாதது தான்.மறுநாள் விஷயம் தெரிஞ்சு ராஜீவ் ஹாஸ்பிட்டல் போய் பார்த்தப்போ அப்படி ஒரு அழுகை..இப்போ கூட என்னால அதை மறக்க முடியாது.அன்னைக்குத் தான் அவளை முதல் தடவை பார்த்தேன்..
அதை விட ராஜீவோட நிலைமை இன்னும் மோசம்..ஆனாலும் அவளுக்குத் தைரியம் சொன்னான்..எல்லாமுமா அவன் இருக்குறதா உறுதி கொடுத்தான்.அவளுக்கு ட்ரீட்மெண்ட் முடிஞ்ச உடனே அழைச்சுகிட்டு நேரா அவன் வீட்டுக்குப் போனான்.
ஆனா அவனோட அம்மா அப்பா ஏஞ்சலை ஏத்துக்க முடியாதுனு சொல்லிட்டாங்க…இவனும் முடிஞ்ச வரைப் புரிய வைக்க ட்ரை பண்ணினான் ஆனா அவங்க முடிவுல எந்த மாற்றமும் இல்ல..சரினு சொல்லி அன்னைக்கே வீட்டை விட்டு வெளியே வந்துட்டான்.
அப்போ அப்பா தான் எங்க பிஸினஸை எல்லாம் கவனிச்சுகிட்டாங்க..அவர்ட்ட பேசி அவனுக்கு இங்கேயே வேலை வாங்கிக் கொடுத்து வீடும் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சேன்..அப்போ இருந்து என் நல்லது கெட்டது எல்லாத்துக்கும் அவன் மட்டும் தான்…தொழில்ல உண்மையா பெரிய சப்போர்ட் அவன் தான்.”
“அவரோட சிரிப்புக்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயத்தை நான் எதிர்பார்க்கல…கடவுள் எப்பவுமே நல்லவங்களுக்கு நிறைய பிரச்சனைகளைத் தரார்..
ஆனாலும் இந்தக் காதலோட அர்த்தம் பல நேரங்கள்ல யாருக்கும் புரியறதே இல்லா போல…முக்கியமா இந்த ஆம்பளைங்களுக்கு…”
“இந்தக் காலத்துல ஆண் பெண் வித்தியாசம் எல்லாம் இல்ல எல்லாரும் தப்பு பண்றாங்க…”
“அவன் தனக்குப் பிடிச்ச பொண்ணுகிட்ட போய் அவன் விருப்பத்தை சொல்றான்.ஆனா அவனை மாதிரியே அந்தப் பொண்ணும் நினைக்கணும்னு எப்படி தோணும்…இதுக்குப் பேரு காதல்னு இவங்களாவே நினைச்சுக்குறாங்க…”
“ம்ம்..”
“ச்ச இதைக் கேட்காமயே இருந்திருக்கலாம்…மனசே ஒரு மாதிரி இருக்கு…”
“சாகுறதைப் பத்தி பேசனும்னா செத்தா தான் முடியுமா என்ன..அவங்க அவங்க பாயிண்ட் ஆப் வ்யூனு எல்லா விஷயத்துக்கும் இருக்கும் இல்லயா..”
“சோ வாட்ஸ் யுவார் பாயிண்ட் ஆப் யூ அபௌட் லவ்?”
“எனக்கு ஒருத்தரைப் பிடிச்சுருக்குனா அவரோட எல்லாமுமா அவரை அக்செப்ட் பண்ணணும்..ஒரு வேளை அவருக்கு என்னப் பிடிக்கலனு சொன்னா அந்த விருப்பத்தையும் சேர்த்து தான் அக்செப்ட் பண்ணணும்..
அதை விட்டுட்டு என்ன இப்படி சொல்லிட்டான்னு அவன் மேல கோபமோ வருத்தமோ படுறதுல அர்த்தமில்லை…சேர்ந்து வாழ்ந்தா மட்டும் தான் காதல்னு இல்ல..எதோ ஒரு காரணத்துனால பிரியுற நிலைமை வந்தாலும் எப்பவும் எங்க இருந்தாலும் அவனோ/அவளோ வாழ்க்கையில எப்பவும் நல்லாயிருக்கணும்னு மனசார நினைக்கணும்..
அதுதான் நம்ம காதலுக்கு நாம கொடுக்குற மரியாதை.நாம காதலிச்சவங்க அதுக்குத் தகுதியானவங்களோ இல்லையோ நம்ம காதல் உண்மையானதுனு நமக்குப் புரியணும்..இதெல்லாம் ஒரு வேளை உணர்ந்துட்டோம்னா எந்தச் சூழ்நிலையிலேயும் நாம மனசார விரும்பினவங்களை நம்மளாலத் தப்பா நினைக்கவே முடியாது.”
“இதெல்லாம் நடைமுறையில சாத்தியம்னு நினைக்குறியா?”
“தெரில…பட் இதுதான் எதார்த்தம்…என் மனசுல உள்ள காதலைச் சொல்றேன்..அதை ஏத்துக்குறதும் ஏத்துக்காததும் உன் விருப்பம்.ஒரு வேளை நீ ஏத்துக்கலனாலும் என் மனசில் உனக்கான இடம் அப்படியே தான் இருக்கும்..
அதை விட்டுட்டு நான் உன்னை லவ் பண்றேன்..நீயும் என்னை காதலிச்சே தான் ஆகணும்னு சொல்றது…அன்பு பாசம் இதெல்லாம் எதிர்பார்ப்பில்லாம வந்தா தான் உண்மை…
நம்ம அம்மா அப்பா நம்ம மேல வச்சுருக்கிறது மாதிரி…கொட்டிக் கொட்டிக் கொடுப்பாங்க ஆனா பதிலுக்கு எதுவும் எதிர்பார்க்க மாட்டாங்க…அப்படி தான் காதலும் அது ஒரு உணர்வு…இந்த பிஸினஸ் டீலிங் மாதிரி அதுலேயும் பதிலுக்குப் பதில் எதிர்பார்த்தா எப்படி…”
ப்ரஜீஷிற்கோ தூக்கம் சுத்தமாய் தொலைந்திருந்தது.அவள் கூறியதிலிருந்த உண்மை அவனை வெகுவாய் பாதித்திருந்தது.ஒரு விதத்தில் அவனும் அந்தத் தவறைச் செய்திருக்கிறானே..தன் காதலைக் கூறியபோது முதல் முறை அவள் நாசூக்காகத் தான் மறுத்திருந்தாள்.மறுமுறைச் சென்றுப் பேசிய போது ஒரு வேளை எரிச்சல் அடைந்திருக்கலாம்…
அல்லது ஏஞ்சலைப் போன்றே வேறு யாரையாவது விரும்பியிருக்கலாம்.ஆனாலும் அவள் எப்படி என்னைப் பற்றியும் என் உருவத்தைப் பற்றியும் அப்படிக் கூறலாம்..இல்லை அபூர்வா இதுவரை தான் சந்தித்தப் பெண்களில் இருந்து வேறுபட்டவள் அதனால் தான் அவ்வாறு கூறுகிறாள்.
மற்றபடி இவ்வுலகில் பெண்கள் என்றாலே அழகு ஆடம்பரத்தை விரும்புவர்கள் தான்..இவள் பேசியதைக் கேட்டு என்னை நானேத் தேவையில்லாமல் குழப்பிக் கொள்கிறேன்.இத்தனை வருடங்களுக்குப் பின் இந்தத் தேவையற்ற சிந்தனைகள் எதற்கு…
வேண்டாம் தேவையற்ற எண்ணங்களை ஒதுக்கிவிட்டு நாளை முதல் என்னவாயினும் வேலையைக் கவனிக்க வேண்டும்.இனி இவளோடு பேசுவதைக் குறைத்துக் கொள்வதே நல்லது.”,என்று முடிவெடுத்தவனாய் தூக்கத்தைக் கொண்டு வர முயன்றான்.
மறுநாளின் விடியல் சற்றுப் புத்துணர்வோடே விடிந்தது ப்ரஜீஷிற்கு.கண்விழித்து லேசாய் பின் சாய்ந்து அமர்ந்தவன் தானே எழுந்து நடக்க முயற்சி செய்யலாம் என்று நினைத்து மெதுவாய் தனது காலைக் கட்டிலின் கீழே வைக்க நடந்து நாட்கள் ஆகியிருந்ததால் ஏதோ பலமே இல்லாததைப் போன்று உணர்ந்தான்.
இருந்தும் ஒரு கையால் சுவரை அழுந்தப் பற்றியபடி அடிபடாதக் காலைக் கொண்டு லேசாய் நிற்க முயற்சித்தவன் முடியாமல் வேகமாய் கட்டிலில் அமர்ந்திருந்திருந்தான்.
மீண்டும் முயற்சிக்க நினைத்து அவன் எழுந்த நேரம் தற்செயலாய் அறைக்குள் வந்த அபூர்வா அவன் விழுந்து விடுவானோ என்ற எண்ணத்தில் வேகமாய் அவனருகில் செல்ல தடுமாறியவன் பிடிமானத்திற்காக அவளது கையை இறுகப் பற்றியிருந்தான்.
இருந்தும் அவளாலும் சமாளிக்க முடியாமல் இருவருமாய் கட்டிலில் விழுந்திருக்க சில நொடிகள் இருவருக்குமே ஒன்றும் புரியாத நிலையில் வலியில் அப்படியே இருக்க முதலில் சுதாரித்த ப்ரஜீஷிற்கு அத்தனை அருகில் அவளைப் பார்த்ததில் லேசாய் தடுமாற்றம் அடைந்திருந்தான்.
கையில் ஏற்ப்பட்ட வலியின் காரணமாய் முகத்தைச் சுழித்த வண்ணம் அவள் எழ முயற்சிக்க தன் கரம் கொண்டு அவளை உயர்த்தியவனுக்கு கையை எடுக்க மனமின்றிப் போயிருந்தது.
அவளது தோளில் வைத்திருந்த தன் கரத்தை உயர்த்தியவன் மிருதுவாய் அவள் கன்னம் தடவ அதன் வித்தியாசம் உணர்ந்தவள் சுதாரிக்கும் முன் அவளது இதழ்களில் தன் இதழ் பதித்திருந்தான் ப்ரஜீஷ்.
தன் மொத்தப் பலத்தையும் கொண்டு அவனைப் பின் தள்ளியவளாய் ஆத்திரத்தோடுச் சற்றும் யோசிக்காமல் அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள் அபூர்வா.இதைச் சற்றும் எதிர்பாராதவனுக்கோ கோபம் தலைக்கேற அவளது குரல்வளையை அழுந்தப் பற்றியிருந்தான்.
“ஹவ் டேர் யூ…”
“முதலாளினா நீங்க என்ன பண்ணாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போவேன்னு நினைச்சீங்களா??நேத்து வரை உண்மையாவே உங்க மேல ரொம்பவே நல்ல எண்ணம் இருந்தது..ஆனா இப்போ..ச்சீ…இதுக்கெல்லாம் அன்னைக்கு ஹோட்டல்ல உங்க கூட இழைஞ்சுட்டு இருந்தாங்களே அந்த மாதிரி பொண்ணைப் பாருங்க…”,என்றபடி கோப மூச்சுகளோடு வாய்க்கு வந்ததைக் கத்திவிட்டு கதவை அறைந்துச் சாத்திவிட்டு வெளியேறியிருந்தாள்.
அவள் கூறிய விதத்தில் தன் தவறுப் புரிந்தாலும் அவள் அடித்தத்தை ஏற்க முடியாதவனாய் கோபத்தோடுப் பூட்டியிருந்தக் கதவையே வெறித்திருந்தான் ப்ரஜீஷ்.