அன்றைய தினம் தன்னிடம் பேசிய வேணியை அதன்பின் ராஜுவால் தனிமையில் சந்திக்கவே முடியாமல் போயிருந்தது.ஆனால் அவள் கூறிய விஷயம் சாதாரணமாக இருக்க விடவில்லை அந்த ஆண்மகனை.
வேணியும் அவனை வேண்டுமென்றே தவிர்த்தாள்.ஏதோ ஒரு பதட்டத்தில் மனதைக் கூறிவிட்டாள் ஆனால் இப்போது அவனைப் பார்க்கும் போதெல்லாம் பழைய பயம் வந்து ஒட்டிக் கொண்டது.
வீரேந்திரன் அலுவலகம் செல்லத் துவங்கியிருக்க அவனுக்கு உணவு வாங்கிச் செல்வதற்காக ராஜுவே வந்தான்.பக்கவாட்டு வாயிலில் மறைவாய் நின்றிருந்தவன் சமையலறையில் அவளைத் தவிர யாருமில்லை என்பதை உறுதிப்டுத்திக் கொண்டு உள்ளே சென்று இழுத்து வந்து மறைவாய் ஒரு மரத்தில் சாய்த்து நிறுத்தினான்.
பயத்தில் வியர்த்துப் போய்விட அவனை கண் நோக்கும் வழி தெரியாமல் தலை குனிந்தாள் வேணி.
“அன்னைக்கு என்ன டி சொன்ன?”
“…”
“உன்னை தான் கேட்குறேன்..அன்னைக்கு ஏன் அப்படி சொன்ன?”
“ஏன்னு கேட்டா என்னய்யா அர்த்தம்..”,என்றவளுக்கு குரல் வரவேயில்லை.
“நிஜமாவே என்னை அவ்வளவு பிடிக்குமா?”
“ம்ம்..”
“அப்போ ஏன் என்னைப் பார்த்தாலே பந்து ஓடுவ?”
“அது..உன்னைப் பார்த்தா பயந்து தான் வருது..நீயும் எப்போ பார்த்தாலும் முறைச்சுட்டே தான இருப்ப..”
“என் பார்வையே அப்படி தான்..”
“…”
“என்னைக் கட்டிக்கிறியா?”,என்றவனின் கேள்வியிலும் நெருக்கத்திலும் முகம் சிவந்து போனாள் வேணி.
“சொல்லு என் ஆத்தாட்ட பேசவா?”
“ம்ம்..எனக்குனு யாரும் கிடையாதுய்யா..உன் வீட்ல சம்மதிப்பாங்களா?”
“இப்படி என்னைப் பிடிச்சுப் போன ஒருத்தியை வேண்டாம்னு சொல்லுவாங்களா என்ன?”
“சரி தள்ளு நான் போறேன்..வேலை கிடக்கு”
“நான் மட்டும் வெட்டியாவா இருக்கேன்.அண்ணையாக்கு சாப்பாடு கொண்டு போணும் டி..”
“இத்தனை நாளா உன்னையே சுத்தி வந்தவளைக் கண்டு பிடிக்கத் தெரியல இப்போ என்னவோ உரிமையெல்லாம் ரொம்ப தான் வந்துருக்கு..”,என்றவளின் முனகல் அவனுக்குத் தெளிவாய் கேட்டது.
“பொண்ணுங்களையே ஏறெடுத்து பார்க்காதவன்னு நீ சந்தோச படணும் டி வெண்ணை மவளே..”,என்றவன் இடைபிடித்து அழுத்திட துள்ளிக் குதித்தவளாய் அவனிடம் இருந்து விலகியவள்,
“ஐயோ என் எலும்பை உடைச்சுருவ போலயே காட்டான்..”,என்றவள் அவனின் கைகளில் சிக்காமல் பறந்திருந்தாள்.
“ஒண்ணுமில்ல..என்னனு தெரில ஐ அம் மிஸ்ஸிங் யூ டுடே..”
“ஓவி செல்லம்..”
“நீங்க நார்மலா பேசுங்க..கொஞ்சுறேன் பேர்வழினு என்னை இன்னும் கஷ்டப்படுத்தாதீங்க..”
“சரி லீவ்தான என்ன பண்ற?”
“ம்ம்..க்ரவுண்ட்ல தான் இருக்கேன்.”
“நல்லதா போச்சு..உனக்காக ஒரு கிப்ட் கொடுத்து விட்டுருக்கேன் வாசல்ல வெயிட் பண்றாங்க போய் வாங்கிகுறியா?”
“என்ன திடீர்னு?!”
“அம்மா தாயே நீ காலேஜை விட்டு வெளியவே போக வேண்டாம் வை டி போனை”,என்றவன் போனை அணைத்துவிட்டு முகம் கொள்ளா புன்னகையோடு காத்திருக்க அவளே மீண்டும் அழைத்தாள்.
“என்ன டி?”
“ரொம்ப பண்றீங்க..நான் போய் வாங்குறேன் லைன்லேயே இருங்க..”,என்றவள் வெளி வாசலுக்கு வர ஊருக்கு வெளியில் இருக்கும் கல்லூரி ஆதலால் பெரிதாய் ஆள் நடமாட்டம் எப்போதுமே இருக்காது.
கல்லூரியின் எதிர்புறம் ஒரே ஒரு காரைத் தவிர யரையும் காணாமல் கண்களைச் சுழற்றியவறே ராகவிடம்,
“ஓ ஆமா ஒரு கார் இருக்கு.ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க..இதெல்லாம் எனக்கு பயமா இருக்கு.”
“சரி ஆரம்பிக்காத டி நான் தான் லைன்ல இருக்கேன்ல டிரைவர் சீட்டை தட்டாம பக்கத்து சீட் கதவை திற அவங்க கொடுத்துடுவாங்க.”,என்றவன் இமை சிமிட்டாது அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
சற்றே இளைத்திருந்தாள்.முகத்தில் ஒருவித தவிப்பு.அதுக்கு காரணம் தான் என்பதை உணரும் நேரம் காதல் கரைபுரண்டு ஓடாமலா இருக்கும்.
இங்கு வந்து கதவைத் திறந்தவளோ சிலையாய் நின்று விட்டிருந்தாள்.கல்லூரியில் தினம் தினம் பார்த்துக் கொண்ட போது தெரியாத காதல் எல்லாம் அவன் படிப்பை முடித்த நொடியில் அளவிற்கு அதிகமாய் வெளிப்பட்டது.
அதிலும் இந்த நாலு மாதமாய் பெரிதாகப் பேசிக் கொள்ள கூட முடியாத சூழல்.ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து குறுஞ்செய்தி அவ்வளவே.
அப்படியிருக்க இன்று தன் கண் முன் முகம் கொள்ளா புன்னகையோடு அமர்ந்திருந்தவனைப் பார்த்தவளுக்கு மூச்சு விட வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை.
“எப்படியிருக்க ஓவி”,அவ்வளவுதான் அதற்கு மேல் என்ன பேச நினைத்தான் என்பது கூட மறந்து போனது ராகவிற்கு.அத்தனை இறுக்கமான அணைப்பு தன்னவளிடம்.
அவள் தான் முதலில் காதலித்தாள் அவள் தான் அவனை மனதில் கொண்டாடினாள் ஆனாலும் அவளுக்கான வரம்புகளை அவள் மீறியதே கிடையாது.அணைப்போ முத்தமோ அனைத்தும் ராகவுடையதாக தான் இருக்கும்.
மறுப்புத் தெரிவிக்கவில்லை எனினும் அவளாக தொடங்கியதுமில்லையே.அப்படியிருக்க இந்த அணைப்பு மார்போடு இறுக அணைத்து தன்னை அவனோடு பிணைத்துக் கொள்ள துடிக்கும் அணைப்பு.
ஒரு நொடியில் தெளிந்தவன் இன்னுமாய் தன்னோடு இறுக்கியிருந்தான்.அழுகையில் உடல் குலுங்கியது பெண்ணிற்கு.அன்பு காதலனின் முகத்தை ஏந்திக் கொண்டவள் கன்னங்களில் மாறி மாறி முத்தங்களை வைக்க ராகவோ திணறிப் போனான்.
“ராகவ் ஐ மிஸ்ட் யூ…லவ் யூ ராகவ்.”,என்றவளின் அழுகை நிற்காமல் தொடர்ந்தது.
“ஓவி செல்லம் ஏன்டி இப்படி பண்ற..அழறதை முதல்ல நிறுத்து.”,என்றவனுக்குமே கண்கள் கலங்கியிருந்தது.
சற்றே சமன்பட்டவளாய் அழுகையை நிறுத்தி அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.
“ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமே..”
“சொல்லிருந்தா இப்படி ஒரு வரவேற்பு கிடைச்சுருக்குமா சொல்லு..”,என்றவன் ஸ்டியரிங்கில் சாய்ந்தபடி அவளையே பார்த்திருந்தான்.
“உங்க பிரச்சனை தெரிஞ்சு என்னால என் மனசு கஷ்டத்தை உங்ககிட்ட சொல்ல முடியல ராகவ்.இத்தனை நாளும் உங்களைப் பார்க்காம பேசாம..”
“எனக்கும் அதே நிலைமை தான் ஓவிம்மா..ஒரு வழியாக எல்லாம் முடிஞ்சுது.சரி சொல்லு கிப்ட் நல்லாயிருக்கா?”,என்றவனின் கேள்வியில் முகம் மலர்ந்தவள் ஆம் என்பதாய் தலையசைத்தாள்.
“எத்தனை நாள் இங்க இருக்கப் போறீங்க?”
“உன்னைப் பார்க்கனும்னு தான் வந்தேன் ஓவி.நீ எவ்வளவு நேரம் என் கூட இருப்பியோ அதுக்கு அப்பறம் ஊருக்கு கிளம்பிடுவேன்.”
“….”
“என்னாச்சு ஓவி..”
“இன்னைக்கு ஃபுல்லா என் கூட இரு ராகவ்..ப்ளீஸ்..”
“!!!”
“எங்கேயாவது கூட்டிட்டு போ இல்ல இப்படியே கார்லேயே சுத்தினாலும் பரவால்ல..எனக்கு உன் பக்கத்துலேயே இருக்கணும்..”,என்றவள் அவனது கைப்பிடித்து தோள் சாய்ந்து கொண்டாள்.
கல்லூரியை விட்டு விடுமுறைக்கு அவள் வீட்டிற்கு செல்வதை தவிர வெளியவே வராத பெண் தனக்காக தன்னோடு இருக்க விரும்பி வருகிறாள் என்று நினைக்கும் போதே தித்தித்தது.
“என்னடி ஒரே நாள்ல இத்தனை ஷாக் தர்ற..”,என்றவனின் குரலில் காதல் நிரம்பி வழிந்தது.
“இத்தனை நாள் பிரிஞ்சு இருந்ததுக்கு பனிஷ்மெண்ட்..”,என்றவளின் நெற்றியில் இதழ் பதித்து காரை கிளப்பிருந்தான் ராகவ்.
பீச் தியேட்டர் ஹோட்டல் என அன்றைய நாள் முழுவதும் தங்கள் காதலோடு கரைய மனமே இன்றி அவளைக் கல்லூரியில் விட்டுவிட்டு கிளம்பினான் ராகவ்.
“யாளு பேபி சொன்னா கேட்கணும் வா வாக்கிங் போயிட்டு வரலாம்.”
“இன்னும் கொஞ்ச நாள் டா..பாப்பா வந்தாச்சுனா நீ பழையபடி இருக்கலாம்.அதுவரைக்கும் உடம்பை ரொம்ப கவனமாவே பார்த்துக்கணும்”,மனைவி எழுந்து கொள்ள உதவியவாறே அவளிடம் பேசிக் கொண்டிருந்தான் ரவீந்திரன்.
“உன்னை மாதிரியே பையன் வேணும்.”,என்றவளின் கூற்றில் அவளை நோக்கியவன் புன்னகையாய் அவளது நெற்றியில் இதழ்பதித்து தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
கண்விழிக்கும் போதே எதிரில் பால்கனியில் ஓவியமாய் நின்று தலை முடியை வருடிக் கொண்டிருந்த மனைவி தான் வீரேந்திரனின் கண்களை நிறைத்தாள்.
மெதுவாய் எழுந்து குளியலறைச் சென்றவன் வேகமாய் குளித்து முடித்து தலையைத் துவட்டியவாறே வந்து தன்னவளை பின்னிருந்து கைக்குள் அழுத்திக் கொள்ள முகம் பூவாய் மலர்ந்து போனது ஏழிசைக்கு.
“எப்போவுமே புது பொண்ணு மாதிரி சிவக்குற மாமி..புள்ளைக்கு அம்மாவே ஆயாச்சு.”
“பல்லு போன கிழவியாவே ஆனாலும் நேக்கு இப்படி தான் இருக்கும் நீங்க பக்கத்தில் வந்தா”
“அது சரி எனக்கு கூட நேத்து தான் நம்ம ரிசெப்ஷன் முடிஞ்ச மாதிரி இருக்கு..”,என்றவனின் குரல் பெண்ணவளை ஏதோ செய்தது உள்ளுக்குள்.
“வீரா..”
“ம்ம்..”
“ஒண்ணுமில்ல..”,என்றவளை இன்னுமாய் தன்புறம் இறுக்கியவன் அவளது தோள்பட்டையில் முகம் புதைத்தவாறே,
“மாமி..”
“ம்ம்..”
“ஒரு முத்தம் வேணும் டி..”,தான் கேட்க நினைத்ததை அவன் வாய் வழி கேட்டவளுக்கோ இதயம் படபடத்தது.அவன் கைக்குள் இருக்கும் தன் கரங்களால் வயிற்றின் புடவையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
அவனின் விரலோ நேற்றைய முத்தத்தில் லேசாய் சிவந்து தடித்திருந்த அவனது இசையின் அதரங்களை வருடியது. இதழ்களில் லேசான குறும்பு சிரிப்பு.
“நீங்க ரொம்ப மோசம்..”
“அப்படியா..கொஞ்சம் திரும்பி என் உதட்டைப் பார்த்து சொல்லு பார்க்கலாம்.”,என்றவன் சத்தமாகவே சிரித்தான்.
“படிச்ச படிப்பை விட்டு இப்படியே நாலு சுவத்துக்குள்ள இருக்கப் போறியா?”
“எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும்.வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிச்சு தனக்குனு ஒரு அடையாளத்தை தக்க வைச்சுக்கணும்னு எல்லாம் நினைப்பா.
நேக்கு அதெல்லாம் தோணலை.இந்த அறைக்குள்ள உங்க இறுக்கத்துலேயே இந்த கோட்டைக்குள்ள அத்தனை பேரையும் பார்த்துண்டே நம்ம குழந்தைகளை நல்லபடியா வளர்த்துண்டே இருந்தா போதும்..
இந்தக் குடும்பத்துக்கு அப்பாவோட ஸ்தானத்துல நீங்க இருக்கேள்.பிஸினஸ் பார்த்துக்குறேள்.எல்லாருக்கும் தேவைப்பட்டதை செய்யுறதுக்காக உழைக்குறேள்.
நான் அம்மாவோட ஸ்தானத்துல இருந்துக்குறேனே.அம்மா வேலை தான் இருக்குறதிலேயே கஷ்டமான வேலை தெரியுமா.
எல்லாருக்கும் பிடிச்சது பிடிக்காதது அவாளுக்குத் தேவைபடுறதுனு பார்த்து பார்த்து பண்ணணும்.வெளியில் போயிட்டு வர்ற எல்லாரும் தேடுற அந்த ஒரு முகமா நான் இருக்க ஆசைபடுறேன் வீரா.
எத்தனை டென்ஷன் எத்தனை கவலை இருந்தாலும் என் முகத்தை பார்க்கும் போது உங்களுக்கும் நம்ம புள்ளைக்கும் இந்தக் குடும்பத்துக்கும் அதெல்லாம் பறந்து போகணும்.
இதை விட பெரிய பொறுப்பு வேற என்ன இருக்க முடியும்.நான் இதை விரும்பியே தான் தேர்ந்தெடுக்குறேன்.இதுதான் என்னோட சுயமா இருக்கணும்னு விருப்பப்படுறேன்.
அதே நேரம் எனக்குப் பிடிச்ச விஷயங்களை இங்கிருந்தே பண்ணிக்க முயற்சி பண்ணுவேன்.ஒரு வேளை எதிர் காலத்தில் வேலைக்கு வரணும்னு தோணினா கண்டிப்பா வரேன் வீரா.”,என்றவளை எப்போதும் போல் காதலில் பூரித்துப் போய் பார்த்திருந்தான் அவளின் அன்பு கணவன்.