“ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா! நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும் எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்
விளக்கம் பல ஆண்டுகள் அழுதாலும் இறந்தவர் திரும்ப இந்த பூமிக்கு வருவதில்லை, பல முயற்சி செய்தாலும் இறப்பை தள்ளிபோடலாமே தவிர தவிர்க்க/தப்பிக்க முடியாது. இறப்பு உறுதியாக இறுதியில் வரும்.
ஆதலால் நமக்கு மட்டும் என்று சேர்த்து வைக்காமல் நம்மால் முடிந்த பொருள்களை அடுத்தவருக்கு கொடுத்து நாம் வாழ வேண்டும் .”
அவனது அருகில் சென்று தோளில் சாய்ந்து கொண்டவள் சில நிமிடங்கள் அப்படியே படுத்திருக்க,”என்ன மேடம் அம்மா அப்பாவைப் பார்க்க போக வேண்டாமா?எனக்கு ஒண்ணுமில்லை நாள் மொத்தமும் இப்படியே இருக்க கூட தயார் தான்.”,என்றவனின் கேலியில் எழுந்து கொண்டவள் அவனுக்கு அழகு காட்டிய படி குளிக்கச் சென்றாள்.
மறுவீட்டிற்காக காயத்ரியின் வீட்டிற்குச் சென்று ஒரு நாள் தங்கி வருவதாய் முடிவு செய்திருக்க காயத்ரி தங்களுக்கான உடைகளை எடுத்து வைத்துக் கொண்டாள்.
சிறியவர்கள் யாரும் இன்னும் எழுந்திருக்காமல் இருக்க சமையலறையில் சத்தம் கேட்டு அங்குச் சென்றாள்.
“நம்ம வாழ்க்கையை உன் வீட்லயே ஆரம்பிக்கலாம்னு என் எண்ணம்.நீயே சொல்லிருக்க இல்ல..தனியா எத்தனையோ நாள் பீல் பண்ணிருக்கனு..அதனால தான்..மென்டலி நீ ப்ரிபேர் ஆகிக்கணுமேனு தான் இப்போ இந்தப் பேச்சை எடுத்துட்டேன்..”
“…..”
“ஏன்டி அப்பப்போ இப்படி அமைதியாகி என்னை பயமுறுத்துற..என்னாச்சு?”
“லவ் யூ”,என்றவள் இன்னுமாய் அவனோடு தன்னை இணைத்துக் கொண்டாள்.
இருவருமாய் காலை உணவிற்காக கீழே வந்த நேரம் உணவு மேசை களை கட்டியிருந்தது.
“வா அன்பு காயத்ரி நீயும் உட்காரு டா நான் பரிமாறுறேன்..அம்மா அப்பா உங்களைத் தேட போறாங்க..”
“இன்னும் டைம் இருக்கு மா..நீங்களும் அப்பாவும் உட்காருங்க நான் அப்பறம் சாப்ட்டுக்குறேன்..”
“புதுப் பொண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து சாப்ட்டா தான அழகு நீ உட்காரு..”,என்றவரின் பேச்சை மறுக்கத் தோன்றாமல் அன்பின் அருகில் அமர்ந்தாள்.
“அண்ணி நீங்க எத்தனை நாள் லீவ் போட்டுருக்கீங்க..நாம எல்லாரும் சேர்ந்து ஒரு படத்துக்கு போலாம்..”
“பத்து நாள் போட்டுருக்கேன் தேனு..கண்டிப்பா போகலாம்..”
“அண்ணா நீ??!”
“கணக்குபிள்ளை பாத்துக்குறேன்னு சொல்லிருக்காரு சோ நானும் பத்து நாள் தான்..நடுவில் அப்பப்போ போய் பார்த்துட்டு வரணும் டா இன்பா..”
“ஹே அப்போ சூப்பர் நாளைக்கு சண்டே ஆனந்த் அண்ணா உனக்கும் லீவ் தான புக் பண்ணட்டுமா?”
“அன்பு இந்த நேரமெல்லாம் வாழ்க்கையில் திரும்ப கிடைக்காதது.அதுவும் ரெண்டு பேரும் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டா இன்னும் கஷ்டம்..நானும் அம்மாவும் மத்ததெல்லாம் பார்த்துப்போம்..நீ சந்தோஷமா போயிட்டு வாடா..”
அனைவரிடமும் விடைப்பெற்று காயத்ரியின் வீட்டிற்கு கிளம்பியிருந்தார்கள் புதுமணத் தம்பதியர்.அங்கு காயத்ரியின் தந்தை அவர்களுக்காக வாசலிலேயே காத்திருக்க காரில் இருந்து இறங்கிய மகளைப் பார்த்தவருக்கு கண்கலங்கிப் போனது.
“ப்பா…”
“இல்ல டா…உன்னை இப்படி பார்க்கணும்னு எத்தனை நாள் ஆசை தெரியுமா..வாங்க மாப்பிள்ளை..”,என்றபடி கண்ணைத் துடைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார்.
“ம்மா..”
“வாடி தங்கம்..வாங்க மப்பிள்ளை..”
“அத்தை என்னதிது அன்புனே கூப்பிடுங்க எப்போதும் போல..”
“வீட்டு மாப்பிள்ளையை பேர் சொல்லி கூப்பிடுறதா நல்லாயிருக்கு போங்க..உட்காருங்க ரெண்டு பேரும்”,என்றபடி வீல்சேரை உள்ளே தள்ளிச் சென்றவரைப் பார்த்தவனுக்கு சிரமமாய் இருந்தது.
“அவங்க இந்த வாழ்க்கைக்கு பழகி கிட்டாங்க அன்பு..நீ எதுவும் வருத்தப்டாத..”
தன் தாய் தந்தையோடு அவன் பேசும் விதம் இயல்பாய் தன் வீட்டில் அவனைப் பொருத்திக் கொண்டது என அனைத்தையும் அழகாய் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.
மதிய உணவிற்குப் பின் இருவரையும் ஓய்வெடுக்குமாறு சொல்ல காயத்ரி தனதறைக்கு அழைத்துச் சென்றாள்.
“வேணாம் காயூ இதுவே ஓகே தான்..ரூம் ரொம்ப ப்ளசெண்டா இருக்கு..”,என்றபடி அகிலிருந்த சேரில் அமர்ந்தவன் அவளை கைநீட்டி அழைக்க அருகில் கட்டிலில் அமரச் சென்றவளைத் தடுத்து தன் மீது அமர்த்திக் கொண்டான்.
“ஹே..அப்போ ஒரு மாதிரி கடியா இருக்கும்.நீ தான் இஷ்டம் இல்லனு சொல்லிட்டியே..அப்பறமும் ஏன் உன்னையே பத்தி யோசிச்சுட்டு இருக்கேன்.உன்னை மறக்குறதுக்காகவாவது கல்யாணம் பண்ணிடலாமானு எல்லாம் யோசிச்சுருக்கேன்.”
“…”
“ஆனால் இதே இடத்துல இப்போ இப்படி இருக்குறது..அதை விட உன்னோட அன்புக்காக இத்தனை வருசம் வேஸ்ட் பண்ணதுல தப்பே இல்லைனு தோணிருச்சு..”
“…”
“காலையிலே நம்ம ரூம்ல நீ பேசின விஷயம்..என்னைப் பத்தி யோசிச்சு என் விருப்பத்துக்காக நீ பார்த்தது எல்லாம்..”
“காயூ..”
“இல்ல டா என் வேலையில் எத்தனை எத்தனை கேஸ் வரும் தெரியுமா..புருசன் மனுஷியா கூட மதிக்க மாட்றான்னு சொல்ற பொம்ளைங்க தான் அதிகம் அன்பு..
அப்படியிருக்க உன்னைப் பார்த்த அப்பறம் வாழ்க்கையில் நான் என்னை ராணி மாதிரி பீல் பண்றேன்..கல்யாணத்துக்கு முன்னாடியயும் அப்படிதானாலும்,ராணிக்காக ராஜானு ஒருத்தன் செய்யுறது ரொம்பவே ஸ்பெஷல் தான..
“என் அழகு கண்மணியே நாம இன்னும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிருக்கலாம் இல்ல..”
“ஹா ஹா கண்மணியா..நல்ல இம்ரூவ்மெண்ட் டா..”
“பின்ன..இனி வெளியில் தான் காயூ..நமக்குள்ள நீ கண்மணி தான்..நான் கொஞ்ச நேரம் இங்க இருக்கேன்..நீ போய் அம்மா அப்போவோட பேசிட்டு இரு..”
“அதெல்லாம் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டாங்க அன்பு..”
“எதுவும் நினைச்சுக்குறதுக்கு இல்ல..அவங்களோட தனியா நீ பேசினா அவங்களுக்கும் மனசு விட்டு பேச முடியும் இல்லையா போ..பேசிட்டு இரு..”,என்றவன் அவளது முன்னெற்றி முடிகளை ஒதுக்கி விட வழக்கம் போல் அவனது கன்னத்தில் அழுந்த இதழ் பதித்துச் சென்றாள்.
மாலை அக்கம் பக்கத்து மனிதர்கள் வந்து அவர்களைப் பார்த்துச் செல்ல இரவு உணவை முடித்த பின் காயத்ரியின் தந்தையோடு சற்றுநேரம் பேசி வருமாறு அவனை மொட்டை மாடிக்கு அனுப்பி வைத்தனர்.
காயத்ரியின் அறையை தயார் செய்தவர்கள் காயத்ரிக்கு வைத்திருந்த புதுப்புடவையை எடுத்துக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு தயாராகச் சென்றாள்.
கீழே வந்த அன்பிற்கு அறையைப் பார்த்துவிட்டு சிறு அதிர்ச்சி தான்..காயத்ரி எதுவும் சொல்லிவிட்டாளோ என்றெல்லாம் யோசித்தவன் பின்பு தன்னை தயார்படுத்திக் கொள்ளச் சென்றான்.
சிறிது நேரத்தில் உள்ளே வந்த காயத்ரியை அவன் சந்தேகமாய் பார்க்க அதன் அர்த்தம் புரிந்தவளோ அவசரமாய்,
“ஏய்..ச்சச..நானெல்லாம் எதுவும் சொல்லல..ஏதோ சாங்கியம் சம்பிரதாயம்னு அவங்களா தான்.”,என்று பாதி குரலில் முடிக்க அன்புவோ விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்.
“ஆனாலும் ஒரு டிஎஸ்பியை எல்லாருமா சேர்ந்து ரொம்ப படுத்துறீங்க டா”,என்றவள் வாகாய் அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.
அவளது நிலையுணர்ந்தவனும் சிரிப்பைக் கட்டுப்படுத்திய வண்ணம் அவளை அணைத்துக் கொண்டான்.
சில நொடிகள் அமைதியிலேயே கடந்து கொண்டிருக்க காயத்ரி அவன் மீது சாய்ந்த வண்ணமே விழிகளை உயர்த்தி தன்னவனைப் பார்த்தாள்.அன்புவுமே ஒருவித இன்ப அவஸ்தையில் தான் இருந்தான்.
“எனக்கு உன்னை மாதிரியே ஒரு பையன் வேணும் அன்பு”,என்றவள் அவனது காலரை இறுகப் பிடித்து கொள்ள அவளது இடை சுற்றியிருந்த அவனின் இறுக்கமும் அதிகரித்திருந்தது.
“ஆனா எனக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணு வேணுமே..”,என்றவனின் விரல்கள் தன் தேடலைத் தொடங்கியிருக்க பேச முடியாத நிலையிலும்
“அப்போ முதல்ல பையன் அப்பறம் பொண்ணு”,என்றவளின் ரகசிய குரலில் அவன் மீதான அவளது பித்தை உணர்ந்தவனாய் தனக்கானவளாய் மொத்தமாய் தன்னோடு எடுத்துக் கொண்டான்.
தனக்காக காத்திருந்தவள் என்ற ஒரு விஷயமே அன்புவை மேலும் மேலும் அவள் மீதான கிறக்கத்தை அதிகப்படுத்த போதுமானதாய் இருந்தது.
இரவு விளக்கின் வெளிச்சத்தில் தன் மீதிருந்தவளுக்கு ஆதரவாய் தலைகோதிக் கொண்டிருந்தான் அவளின் அன்பு கணவன்.
“நீ ஓகே தான கண்மணி..”
“ம்ம்..”
“சாப்பிட எதுவும் வேணுமா?கொண்டு வரவா..”
“அதெல்லாம் வேண்டாம் அன்பு..ஐ பீல் கம்ப்ளீட்..தேங்க் யூ பார் கம்மிங் இன் மை லைஃப்..”
“இதே மாதிரி உன்னை வாழ்க்கை மொத்தமும் ஃபீல் பண்ண வைச்சுட்டேன்னா அப்போ ஐ ஃபீல் கம்ப்ளீட்..”
“இந்த இரண்டு நாளே இரண்டு ஜென்மம் வாழ்ந்த திருப்தி இருக்கு டா எனக்கு..”
“என்ன அழகான ரொமன்ஸ் சீன்..இப்படி எமோஷனல் சீன் ஆக்கலாமா என் லூசு கண்மணி..”
“டேய்..ஆனாலும் நீ இப்பேற்பட்ட ஒருத்தனா இருப்பனு நான் நினைக்கவேயில்ல அன்பு..”,என்றவள் சிரிக்க செல்லமாய் அவள் தலையில் கொட்டியவன் தானும் உடன் சேர்ந்து சிரித்தான்.
“அந்தந்த வயசில் வர வேண்டிய உணர்ச்சிகள் எனக்கும் உண்டு தான காயூ..பொதுவா யோசிச்சுருக்கேன்,கல்யாணம் ஆன வரப்போற பார்ட்னர்கிட்ட எப்படி நடந்துக்கணும் எப்படி பார்த்துக்கணும் இதெல்லாம்..
ஆனா அந்த பர்ட்னர் நீயா இருக்கும் போது இன்னும் கொஞ்சம் அடிஷனலா ஏறிடுது..”
இப்படியாய் கதைகளும் காதலுமாய் பேசி பேசி விடியும் நேரத்தில் இருவருமாய் கண்ணயர்ந்தனர்.
இருந்த அசதியில் காயத்ரி இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்க எட்டு மணி ஆகியும் மகள் வராததால் அவளது அன்னையே வந்து கதவைத் தட்டினார்.
அவசரமாய் எழப் போனவளை தடுத்து தானே சென்று கதவைத் திறந்தான் அன்பு.
“ஐயோ..நல்லா தூங்கிட்டேன்..”என்றவள் எழுந்து கட்டில் விரிப்புகளைச் சரி செய்ய அவனுக்கேயுரிய நிதானத்தோடு அவளை நிமிர்த்தி கன்னத்தில் இதழ் பதித்தவன்,
“உன் வீட்ல தான இருக்க எதுக்கு டென்ஷன்..நீ போய் குளி கண்மணி நான் பார்த்துக்குறேன் இதை..”,என்றான்.
“நானே பாதி வேலை தான் பார்ப்பேன்..நீ என்னை இன்னும் மோசமாக்கிடுவ போலயே அன்பு..”,என்றபடி குளிக்கச் சென்றாள்.
மதிய உணவு வரையும் அங்கு இருந்துவிட்டு இருவருமாய் கிளம்பத் தயாராயினர்.
“வரோம் மா..ப்பா..அம்மாவைப் பாத்துக்கோங்க..”,என்றவளுக்கு குரல் கம்மியது.
“ஏ கழுத உள்ளூர்ல தான இருக்க போற எதுக்கு அழற..நான் பார்த்துக்குறேன்..நீ எங்களுக்காக நிறையவே பண்ணிட்ட டா காயூ..மாப்பிள்ளையும் நீயும் சந்தோஷமா இருந்தாலே போதும் எங்களுக்கு.
“அத்தை மாமா போயிட்டு வரேன்.இனி அதுவும் உங்க வீடு தான்.எப்போ வேணும்னாலும் வாங்க..எப்போ எது வேணும்னாலும் எனக்கும் போன் பண்ணுங்க..நானும் உங்களுக்கு புள்ளை மாதிரி தான்.பக்கத்துல தான் இருக்கோம் அப்பப்போ வந்து பார்த்துக்குறோம்.நீங்க இரண்டு பேரும் தனியா இருக்குறதா நினைக்க வேண்டாம்..வரட்டுமா?!”,என்றவனை வாஞ்சையாய் பார்த்த பெரியவர்கள் மகிழ்ச்சியாய் விடை கொடுத்தனுப்பினர்.