பொய்த்தல் இறுவாய, நட்புக்கண்; மெய்த்தாக
முத்தல் இறுவாய்த்து, இள நலம்; தூக்கு இல்
மிகுதி இறுவாய, செல்வங்கள்; தம் தம்
தகுதி இறுவாய்த்து, உயிர்.

 

நண்பர்கள் பொய் கூறும் இயல்பைப் பெறுவாராயின் அவர்களின் நட்புக் கெடும். மூப்பு தோன்றும் போது இளமை அழிந்துவிடும். மிகையான செயல்களைச் செய்யும் போது செல்வம் அழியும். வாழ்நாள் எல்லை கடந்ததும் உயிரும் அழியும்.”

அடுத்த நாள் முழுவதுமே தனது அறையை விட்டு ப்ரஜீஷ் வெளியே வரவேயில்லை.காலையிலேயே பணிப்பெண்ணிடம் உணவு நேரம் தவிர யாரும் எதற்காகவும் உள்ளே வர வேண்டாம் என்றும் கூறியிருந்தான்.

அபூர்வா என்ன தான் முந்தைய தினம் அவனிடம் இயல்பாய் பேசிவிட்டு வந்திருந்தாலும் அவளின் பயம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது.எங்கிருந்து ஆபத்து எந்த ரூபத்தில் வருமோ என்ற எண்ணம் ஒவ்வொரு நொடியும் அவள் சிந்தனைகளை ஆக்கிரமித்திருந்தது.

அவனிடம் கூறியது போலவே அவனது தவறுகளுக்கு ஒரு போதும் தான் துணை போகப் போவதில்லை என்றாலும் அவனது உயிரைப் பறிக்கும் அளவிற்கான உரிமை யாருக்கும் இல்லை என்பதே அவளின் எண்ணமாய் இருந்தது.

தனது தாய் தந்தையிடம் தீபாவிடமென வெகுநேரம் பேசினாலும் அழைப்பைத் துண்டித்த அடுத்த நொடி இந்த சிந்தனைகள் தான் அவளைப் பாடாய் படுத்தியது.மாலை ஒரு ஏழு மணியளவில் தன் வாக்கிங் ஸ்டண்ட் உதவியோடு வெளியே வந்தவனின் முகம் அத்தனைக் களைப்பாய் இருந்தது.

“ஒண்ணும் பிரச்சனையில்லையே?”

“நத்திங் கொஞ்சம் பிஸி…இப்போ டோட்டலி ப்ரீ…”

“எதாவது சாப்டுறீங்களா?”

“இல்ல வேணாம்…கொஞ்சம் நடந்துட்டு வரலாம்னு தோணுது..பேசி டார்ச்ர் பண்ண மாட்டனா நீயும் வரலாம்..”

“எல்லாம் என் நேரம் வரேன்…போங்க…”என்று அவனுக்கு கேட்காதவாறு அபூர்வா முனக,

“வாட்??”

“ஒண்ணுமில்ல வரேன்னு சொன்னேன்..”,என்றவளைப் பார்த்து எழுந்தச் சிரிப்பை அடக்கியவாறு வெளியே நடந்தான்.

சிறிது நேரம் அமைதியாகவே இருவருமாய் நடந்து கொண்டிருக்க ராஜீவிடமிருந்து அழைப்பு வந்தது.அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவனாய் அவன் அழைப்பை ஏற்று பேச ஆரம்பிக்க எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் அபூர்வா.

“எல்லாம் பக்கா தான?”

“…..”

“இது நானா பண்ணலையே டா…”

“?……”

“அவர் சொல்லிக் கொடுத்த அரசியலை அவர்கிட்டயே யூஸ் பண்ண வச்சுட்டாரு…விடு பாத்துக்கலாம்..”

“……”

“சான்ஸ் இல்ல டா…மினிமம் ஒன் இயர்..கண்டிப்பா ஜெயில் தான்..இல்லைனா அதை ஈடுகட்ட பைன் அதிகமா கட்டணும்…பணத்தை அத்தனை சீக்கிரம் நகர்த்திருவாரா…”

“…..”

“கட்சியில் இருந்து உதவி கிடைக்காது டா விஷயம் நாளைக்கு லீக் ஆனவுடனேயே எப்படியும் பதவியில் இருந்து தூக்கிருவாங்க…கட்சியையே ஏமாத்தி சம்பாதிச்சா எப்படி ஹெல்ப் பண்ணுவாங்க?”

“……”

“மார்னிங் அவன் அங்க போனவுடனே எனக்கு கால் பண்ணு…ஆர்பாட்டம் எல்லாம் கொஞ்சம் அடங்கின அப்பறம் அவனை நாம வெளியே எடுத்துரலாம்..”

“….”

“ம்ம் ஓகே..பை…”என்று அழைப்பைத் துண்டித்தவன் எதிரில் அமர்ந்து தன்னை பயத்தோடுப் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்துவிட்டு கண்களை மூடி பின் சாய்ந்து அமர்ந்தவனாய்,

“என்ன மறுபடியும் வில்லன் முகம் வந்துருச்சா?”

“ம்..ம்கூம்…”

“எதாவது ஒண்ணு சொல்லு…”

“உண்மையாவே உங்க உயரத்தைப் பத்தி தெரியாம நான் ரொம்ப சைல்டிஷா பிகேவ் பண்ணிட்டேனோனு தோணுது…”

“ஏன் அப்படி தோணுது?”

“அது தெரியல…ஆனாலும்..கொஞ்சம் இல்ல ரொம்பவே அட்வாண்டேஜ் எடுத்துக்குறேனோனு இருக்கு…எதாவது உங்கப் பர்சனலில்ல தலையிட்டதா உங்களுக்குத் தோணிச்சுனா ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க…”

“வாட்ஸ் யுவார் ப்ராப்ளம் நவ்??இந்த அஞ்சு நாளும் கிட்டத்தட்ட பிக்பாஸ் ஹவுஸ் மாதிரி இருக்கு எனக்கு…இருக்குறதே நாம இரண்டு பேர்..பேசாம என்ன பண்றது..அண்ட் ஐ நோ யார்கிட்ட எதைப் பேசணும் பேசக் கூடாதுனு..

சோ தேவையில்லாம யோசிக்காத…அண்ட் இந்தப் பிரச்சனை நாளைக்கு முடிஞ்சுரும் அதுக்கப்பறம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ நாம கேரளா கிளம்பிரலாம்..சரியா?”

“என்ன பண்ண போறீங்க??”

“இதுக்குத் தான் இவ்வளவு நேரம் லென்தா டயலாக் பேசினியா??!”

“இல்ல..அது…உண்மையாவே கொஞ்சம் பயமா தான் இருக்கு அதான்…தெரிஞ்சுக்கலாமேனு…”

“நேத்தே சொன்ன மாதிரி..இவரால எனக்கு எப்போ வேணாலும் பிரச்சனை வரும்னு நினைச்சுருந்தேன்…அதனாலேயே முன்னேற்பாடா சில விஷயங்களைச் செஞ்சு வச்சுருந்தேன்..சோ…அதுபடி இப்போ அவரோட பினாமி ப்ராபர்டீஸா என் பேர்ல இருந்த எல்லாத்தையும் இன்னொருத்தன் பேருக்கு மாத்திட்டேன்..

அதாவது எனக்கும் இதுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லைங்கிற வகையில்.ஏற்கனவே கட்சியில் அவர் மேல சந்தேகம் அதிகமா இருக்குற இந்தச் சமயத்துல அத்தனை டாக்குமெண்டோட காப்பியையும் அவங்க கட்சித் தலைமைக்கு அனுப்பிட்டு ஒர்ஜினல் டாக்யுமெண்ட்ஸோட என் ஆளு நாளைக்கு இன்கம்டாக்ஸ் ஆபீஸுக்குப் போய்டுவான்.

அவன் கொடுத்த அத்தனையும் உண்மைனு நிரூபிக்கப்படுற பட்சத்துல மினிஸ்டரை அரஸ்ட் பண்ணுவாங்க…அதுக்கப்பறம் அவருக்குப் பதவியும் இருக்காது…நான் இன்னும் கொஞ்சம் ப்ரஷர் பண்ணிணா கட்சியோட அடிப்படை உறுப்பினர் பதவி கூட பறிப் போய்டும்…

இன்னும் ஸ்ட்ராங் ஆக்க இந்த விஷயத்தை மீடியாகிட்டேயும் கொண்டு போய்டுவேன்..சோ அவரால எந்த விதத்துலேயும் இதிலிருந்து வெளிவர முடியாது.

இங்க வச்சே என் கதையை முடிக்க அவர் திட்டம் போட்டாரு…நான் இங்க இருந்தே அவரோட முப்பது வருஷ அரசியல் வாழ்க்கைக்கு மூடுவிழா நடத்திட்டேன்..சிம்பிள்…”என்றவன் சாதாரணம் போல் கூறக் கேட்டவளுக்கோ தலைச் சுற்றியது.

“ஒருநாள் முழுக்க ரூம்க்குள்ளேயே இருந்து இவ்ளோ வேலை பண்ண முடியுமா??”

“அது ப்ரஜீஷா இருந்தா கண்டிப்பா முடியும்…”

“…..”

“அவர் என்னைக் கொல்ற அளவுக்குத் துணிஞ்சுருக்கக் கூடாது.அப்படியே இருந்தாலும் அவர் பெயர் வெளியிலத் தெரியுற மாதிரி கவனக்குறைவா இருந்துருக்கக் கூடாது…என்ன பண்றது முதல் அட்டெம்ட்லேயே போய் சேர்ந்துருவேன்னு ரொம்ப நம்பிருப்பாரு போல பாவம்…”

“இப்படி இவ்ளோ கூலா இருக்கீங்க…உண்மையாவே எதாவது நடந்துருந்தா?”

“அதான் நடக்கலையே..நடக்காத விஷயத்தைப் பத்தி யோசிக்குறது எனக்குப் பிடிக்காது…நேத்து வர இருந்த டென்ஷன் வீட்ல இருக்குறவங்களைப் பத்தி…பட் எனக்கு விஷயம் தெரியும்னு அவருக்கு இன்னும் தெரியாது..அதனால அவங்க பக்கம் அவர் கவனம் போகல..

இருந்தாலும் உன்னோட இந்த நிலைமையைப் பார்த்த அப்பறம் ஒரு சின்ன டென்ஷன்..என்னை அழிக்க நினைக்குறவங்களுக்கும் என்னை எதிரியா நினைக்குறவங்களுக்கும் தான் நான் கெட்டது நினைப்பேன்..மத்தபடி என்னை நம்புறவங்களுக்கு முடிஞ்ச வரை நல்லது மட்டும் தான் பண்ணுவேன்..”

“ம்ம்…நாளைக்கு எல்லாம் சரியா நடக்கணும்…”

“கண்டிப்பா நடக்கும்..சரி டயர்டா இருக்கு…போலாமா…”

“ம்ம் நல்ல ரெஸ்ட் எடுங்க..குட் நைட்…”

மறுநாளின் விடியல் ப்ரஜீஷிற்கு சாதகமாகவே அமைந்தது.அவன் நினைத்ததுபடியே அத்தனையும் நடந்து கொண்டிருக்க எதிர்பார்த்த விதமாய் மினிஸ்டரிடமிருந்து அழைப்பு வந்தது.

“வணக்கம் மினிஸ்டர் சார்…குட்…சாரி பேட் மார்னிங்…”

“தப்பு பண்ணிட்ட ப்ரஜீஷ்…”

“என் மேல கை வைக்கத் துணிஞ்சது நீங்க…”

“இல்ல…அது..நான் இல்ல…”

“தப்பை மறைக்க நினைக்குறவனுக்குத் தான் தடுமாற்றம் வரும்..இப்போவாவது இந்த ப்ரஜீஷ் பத்தி தெரிஞ்சுகிட்டு இருப்பீங்கனு நினைக்குறேன்…யாரோட மோதுறோம்னு தெரிஞ்சு மோதுறது தான் எப்பவுமே நல்லது மினிஸ்டர் சார்..”

“தேவையில்லாம என்னை சீண்டிட்ட…இதுக்கான பதில் நீ சொல்லியே ஆகணும்..”

“ஆஹான்…தண்டனையை முடிச்சுட்டு வாங்க…வெயிட் பண்றேன்…பொறுமையா பேசிக்கலாம்…டேக் கேர்…ஜெயில்ல வசதி பத்தலனா சொல்லுங்க சார்..பார்த்துப் பண்ணிக் கொடுக்குறேன்..”

போனை வைத்தவனின் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகைப் பூத்திருக்க ராஜீவ் அவனை அழைத்து அங்கு நிலைமையை எடுத்துரைத்தான்.ஒரு விதத்தில் அவனுக்குமே இப்போது தான் நிம்மதியாய் இருந்தது.

காலையில் எழுந்தது முதலே நியூஸ் சேனலே கதி என இருந்தாள் அபூர்வா.முன்தினம் ப்ரஜீஷ் கூறியதை விட இவர்கள் கூறுவது இன்னும் பூதாகரமாய் தெரிந்தது.எது எப்படியோ அனைத்தும் நல்லபடியாய் முடிந்தது என்று எண்ணியவளுக்கு நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது.

ஆனாலும் ப்ரஜீஷை வெறும் முதலாளியாய் பார்த்தாலே தனக்கும் அவனுக்கும் மலையளவு உயரம் என்று நினைத்திருந்தவளுக்கு இப்போது அவனின் அதிகாரங்களை எல்லாம் பார்த்தால் இத்தனை பெரியவன் தன்னிடம் எப்படி இத்தனை இயல்பாய் பழகுகிறான் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அறையிலிருந்து வெளியே வந்தவன் டீவியை உயிர்பித்துவிட்டு ஏதோ கனவுலகில் இருந்தவளின் எதிரில் வந்து சொடுக்கிட சட்டென சுய உணர்வுப் பெற்றவளாய் அவனுக்கு உட்கார இடம் கொடுத்து பக்கத்து சோபாவில் சென்று அமர்ந்தாள்.

“ஒரு வழியா எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது…”

“ம்ம்…”

எனும்போதே லோக்கல் செய்தி சேனலில் ஒரு பெண்ணின் தற்கொலைச் செய்தி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்க அவளை எங்கேயோப் பார்த்த மாதிரி இருப்பதாய் அபூர்வாவிற்குத் தோன்றியது.சற்று நேரத்திற்குள் அன்றைய இரவில் ஹோட்டலில் ப்ரஜிஷோடு இருந்தவள் இவள் என்பது நினைவில் வர சட்டென அவனைத் திரும்பி பார்த்தாள்.

அவனோ எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாது இறுக்கமாய் அமர்ந்திருந்தான்.அவனது தோரணையே இதற்கும் அவனுக்கும் சம்மந்தம் இருப்பதாய் அபூர்வாவிற்குத் தெரிவித்தது.

“இதுவும் உங்க வேலை தானா?”

“நோ…நான் எதுவும் பண்ணல…மேபி உண்மையாவே தற்கொலையா இருக்கலாம்…”

“இது நம்புற மாதிரி இருக்கா…”

“நீ நம்பலங்கிறதுக்காக பண்ணாத ஒரு விஷயத்தை நான் எப்படி ஒத்துக்க முடியும்??”

“ஆனாலும் இதுக்கும் உங்களுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்குனு எனக்குத் தோணுது…”

“பரவால்ல ஒரு வாரம் கூட இருந்ததுக்கே நீயும் அறிவாளியா மாறிட்ட போலேயே..”

“….”

“அவ ஒரு மாடல்..என்னோட ஜுவல்லரி அட் காக ஒரு தடவை கேரளா வந்தப்போ பழக்கம்..இங்க நாம வந்த அன்னைக்கு நைட் அவளே தான் கால் பண்ணி சாதாரணமா பேசினா…அப்போ எதார்த்தமா நான் டெல்லி வந்துருக்க விஷயத்தைச் சொன்னேன்…

உடனே மீட் பண்ணலாமானு கேட்டா…அல்ரெடி லேட் ஆச்சு நாளைக்கு பாத்துக்கலாம்னு சொன்னேன்..இல்ல வரேன்னு சொல்லிட்டு அடுத்த அரை மணி நேரத்துல அங்க இருந்தாள்.

ட்ரிங்ஸ் ஷேர் பண்ணலாம்னு சொல்லி மேல மேல எனக்கு கொடுத்து ஒரு கட்டத்துல சுத்தமா அவுட் ஆப் கான்ட்ரோல் ஆயிடுச்சு..அப்போ தான் நாம போற இடம் பாதை நேரம் இப்படி எல்லாத்தையுமே என் வாயிலிருந்தேக் கேட்டு வாங்கிருக்கா…

மறுநாள் எழுந்துக்கும் போதே எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது.ட்ரிங்க்ஸ்ல ஏதோ கலந்துருந்திருந்த மாதிரி தோணிச்சு..இருந்தாலும் மீட்டிங் போற அவசரத்துல அதை அப்படீயே விட்டுட்டேன்..

பட் சர்ஜரி முடிஞ்சு கண் முழிச்ச அப்பறம் ஏனோ இதுக்கும் அவளுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்குனு மனசு சொல்லிட்டே இருந்தது.அவ போன் கால் ட்ரேஸ் பண்ணி பார்த்தப்போ அன்னைக்கு இன்பார்மரா ஒருத்தனைப் போட்டுத் தள்ளினோமே அவனோட அக்ஸிடெண்ட்க்கு முந்தின நாள் கால் பேசிருக்கா…

சரி முக்கியமானவனோட கதையை முடிச்சுட்டு இவளைக் கவனிச்சுக்கலாம்னு இருந்தேன்..இன்னைக்கு மினிஸ்டரோட நிலைமையைப் பார்த்து அவளே அவ முடிவைத் தேடிகிட்டா போல…

அவளா இதைப் பண்ணலனாலும் கண்டிப்பா நான் இதை பண்ண வச்சுருப்பேன்…”

“!!!!!!”

“…”

“இதெல்லாம் தேவைதானா?இந்தப் பழக்கத்தை இதுக்கு அப்பறமாவது நிறுத்தலாம் இல்லையா?”

“வாழ்க்கையில் அப்பறம் சுவாரசியமே இல்லாம போய்டுமே….”

“என்னவோ பண்ணுங்க..எனக்குத் தோணுறதை சொல்றேன்…உங்களோட வீக் பாயிண்ட்னு அவங்களுக்குத் தெரிஞ்ச விஷயத்தை வச்சு உங்க உயிரையே எடுக்கப் பார்த்துருக்காங்க…இனியாவது ஜாக்கிரதையா இருங்க…ப்ளீஸ்…”

“ம்ம்…பார்க்கலாம்…”,என்றவன் சிந்தனையோடு தொலைக்காட்சியை வெறித்திருக்க அபூர்வா அவனையேப் பார்த்திருந்தாள்.