மரக்கலமுடையவர் கடலின் ஆழமான நீரைப் பிளந்து செல்வர். விரைந்து செல்லும் குதிரைப் படையை உடையவன் கடல் போன்று பகைவரது படையைப் பொருது உடைத்து விடுவான். தன் மனதைத் தன்வயப்படுத்தியவன் குற்றமில்லாத தவமென்னும் கடலை நீந்திச் செல்வான். தெளியக் கற்றவன் கற்றறிவுடையார் நிரம்பிய அவைக் கடலைக் கடந்து விடுவான்.
அனைத்தையும் கூறிவிட்டு பெரு மூச்சுடன் இரு கைகளாலும் தலையை அழுந்தக் கோதியபடி பின் கழுத்தில் கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான் ப்ரஜீஷ்.சில நிமிடங்களுக்குப் பின் மீண்டும் அவனே தொடர்ந்தான்.
“அதுக்கப்பறம் அவருக்காக எத்தனையோ வேலைகள் செஞ்சு கொடுத்துருக்கேன்.அதுவும் ஆளுங் கட்சியா இருக்கும் போது என்னப் பிரச்சனைனாலும் அதை சுலபமா மறைக்கவும் முடிஞ்சுது..நான் பண்ண எதுவுமே மாட்டிக்காத அளவு தான் இருந்தது.
நான் பண்ண மிகப் பெரிய தப்பே அவரோட பினாமியா இருக்கச் சம்மதிச்து தான்.என்கிட்ட இருக்குற அவரோட சொத்து மதிப்பு மட்டும் பலகோடி இருக்கும்..அத்தனையும் கட்சியை ஏமாத்தி அவர் சம்பாதிச்சதுனு கொஞ்ச வருஷம் முன்னாடி தான் எனக்குத் தெரிய வந்துச்சு..
அப்போவே முடிவு பண்ணிணேன் பின்னாடி எதாவது பிரச்சனைனா இவர் எந்த எல்லைக்கும் போவாருனு..அத்தனை ப்ராப்பர்டியோட டீடெயில்ஸையும் கலெக்ட் பண்ணி வச்சுக்கிட்டேன்..அப்போ தான் எனக்குப் புரிஞ்சுது கொஞ்சம் கொஞ்சமா நானும் இந்த அரசியல் கூட்டத்துல அரசியல் புத்தியோட இருக்க ஆரம்பிச்சுட்டேன்னு..
ஏன் சொல்றேன்னா,ஆரம்பத்துல பெருசா எதைப் பத்தியும் யோசிக்கல…அந்த அதிகாரத் தோரணை ஒரு விதத்துல எனக்குப் பிடிச்சுருந்தது.என்னை விட வயசுலேயும் அனுபவத்துலேயும் பெரியவங்க எல்லாம் என்னைப் பார்த்து மரியாதையா எழுந்து நிக்கும்போது தோரணையா நடந்து போறதுல ஒரு சந்தோஷம்..
அதுக்கு முக்கியமான காரணம் என்னோட ஸ்கூல் அண்ட் காலேஜ் டேஸ்..அந்த வயசுல பெரிய சார்மிங் லுக் எல்லாம் கிடையாது.படிப்புலேயும் அவரேஜ் ஸ்டண்ட் தான்..அதே நேரம் மத்தவங்களோட அட்டெண்ஷன் வேணும்னு எதிர்பார்க்குற குணம் இருந்தது.
உதாரணமா ஸ்கூல் கல்ச்சுரல்ஸ்க்கு கூட பையனோ பொண்ணோ நல்ல அழகா வெள்ளையா இந்த மாதிரி க்வாலிட்டீஸ் உள்ளவங்களைத் தான் டீச்சர்ஸ் செலெக்ட் பண்ணுவாங்க…அவங்களை விடத் திறமை இருந்தாலும் உருவத்தை மட்டுமே வச்சு அவங்களை நிராகரிச்சுருவாங்க..
அதுவும் நான் படிச்சது பணக்காரப் பசங்க அதிகமா இருந்த ஸ்கூல் தான்..சோ சில நேரத்துல நேரடி கிண்டல் கேலியெல்லாம் கூட கடந்து வந்துருக்கேன்…அதெல்லாம் மறந்துட்டதா நினைச்சாலும் என்னை அறியாம என் மனசுல இதெல்லாம் பதிஞ்சுருக்குனு அப்பறமா தான் புரிஞ்சுது.
அடுத்ததா காலேஜ் லைஃப்..ஒரு பொண்ணை எனக்குப் பிடிச்சுருந்தது.அவகிட்ட என் காதலை சொன்னேன்..முடியாதுனு சொல்லிட்டா…திரும்பவும் பேசினப்போ என்னோட உருவத்தைக் காரணமா சொல்லி நேராகவே நிராகரிச்சா…ஏனோ அதை என்னால தாங்கிக்கவே முடில..
இங்கேயே இருந்தா என்னால எதுவுமே பண்ண முடியாதுனு நினைச்சு தான் வெளிநாட்டுக்குப் படிக்க போனேன்.படிப்போட சேர்த்து பிட்னெஸ்லேயும் கான்சென்ட்ரேட் பண்ண ஆரம்பிச்சேன்..உண்மையைச் சொல்லணும்னா எனக்குள்ள இருந்த அத்தனை கோவத்தையும் உடம்பில் காட்ட ஆரம்பிச்சேன்.
அதுவே ஒரு தனி கான்பிடென்ஸைக் கொடுத்தது.அதுக்கப்பறம் இங்க திரும்பவும் வந்த அப்பறம் இந்த உலகம் என்னப் பார்த்ததே வேற மாதிரியா இருந்தது.அதுவும் பொண்ணுங்க….ம்ம்..”,என்றவன் சிரித்து நிறுத்தினான்.
அபூர்வா அவனை முறைத்துப் பார்க்க,”அன்னைக்கு உன்கிட்ட சொன்ன எல்லாமே உண்மை தான்..அதோட சேர்த்து இதுவும் முக்கியமன காரணம்..எந்த உருவத்தைப் பார்த்து ஒருத்தி என்னை வேண்டாம்னு சொன்னாளோ அதே உருவத்துக்காக மட்டுமே எத்தனையோ பேர் என்கிட்ட வந்து விழுந்தாங்க…
பொண்ணுங்க மேல பெரிய நம்பிக்கையே இல்லாம போயிருந்தது.அஸ் அ பிஸினஸ் மேன் இதையும் பிஸினஸ் கண்ணோட்டத்துல தான் பார்த்தேன்..இதுல இரண்டு பேருக்குமே எந்த லாஸும் கிடையாது.அவ்வளவு தான்…
அப்பறம் இந்தக் கல்யாணம் கான்செப்ட் எல்லாம் எப்படி பிடிக்கும் சொல்லு..நீ அன்னைக்குக் கேட்டியே உங்களுக்கு வரப் போறவங்களும் இப்படி இருந்தானு?
அதுதான் எனக்கும் தோணும்..எல்லா பொண்ணும் அப்படிதான்..பணமும் உருவமும் மட்டும் தான் முக்கியமே தவிர யாருக்கும் மனசோ குணமோ முக்கியம் இல்லைங்கிறது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கையாவே இருந்தது.
இப்படி எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொன்னாலும் நான் பண்ணிணது தப்புனு எனக்கேத் தெரியும்…மேபி அதுக்கான விளைவுகளைத் தான் இப்போ சந்திச்சுட்டு இருக்கேன்…பட் நானே எதிர்பார்க்காம நடந்த ஒரு விஷயம் நீ இதுக்குள்ள வந்தது தான்.
இந்த மனுஷங்களைப் பத்தி தெரிய ஆரம்பிச்ச அப்பறம் எப்பவுமே நான் கவனமா தான் இருப்பேன்…என்னைத் தாண்டி என் குடும்பமோ ஏன் ராஜீவே கூட தலையிடாம பார்த்துப்பேன்..பட் அன்னைக்கு அக்ஸிடெண்ட் ஸ்பாட்ல உன்னை காயத்தோட மயக்கமா இருந்ததைப் பார்த்தப்போ உண்மையாவே ரொம்ப வருத்தமாய்டுச்சு..
எம்ப்ளாயிங்கிறதை தவிர உனக்கும் எனக்குமான சம்மந்தம் எதுவும் இல்ல அப்படியிருக்க உன்னை அந்த நிலைமையில என்னால பார்க்கவே முடியல..உன் மேல ஒரு சாப்ட் கார்னர் வந்ததுக்கு அது காரணமா இருக்கலாம்.
இப்பவும் இது எல்லாத்தையும் ஏன் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்னு எனக்குத் தெரியல…பட் ஐ அம் சம் வாட் ஓகே நவ்.”
“….”
“என்ன எதுவுமே பேசமாட்ற…இப்படி ஒருத்தன்ட்ட வந்து மாட்டிக்கிட்டோமேனு யோசிக்குறியா?”
“அதெல்லாம் இல்ல…உண்மையா பணம் இல்லைங்கிறது தான் எல்லாருக்கும் கஷ்டமா இருக்கும்னு பார்த்தா பணக்காரங்க நிலைமை ரொம்பவே மோசம் போலயே…நீங்க சொன்னதுல பாதிக்கு மேல எனக்கு புரியக் கூட இல்ல..
ஆனால் எதுவா இருந்தாலும் கண்டிப்பா சரி பண்ணிடுவீங்கனு நம்பிக்கை இருக்கு..”
“என்னைப் பபத்தி ஒரு நல்ல விஷயம் கூட நான் சொல்லல…ஆனாலும் உன்னால எப்படி இந்த மாதிரி சொல்ல முடியுது?”
“அது..நீங்க என்னை மதிச்சு நம்பி எல்லா விஷயத்தையும் சொன்னதுக்காக…பொதுவா மனுஷங்களும் நாணயம் மாதிரி தான் இரண்டு பக்கத்தை வச்சுருப்போம்..யாருகிட்ட எந்தப் பக்கத்தைக் காட்டணும்னு நினைக்குறோமோ அவங்களுக்கு நாம அப்படி தெரியுவோம்..
நல்லவங்கனா நல்லவங்க…கெட்டவங்கனா கெட்டவங்க…அப்படி தான் நீங்களும்…நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதையும் தாண்டி உங்ககிட்ட கெட்டது தான் நிறைய இருக்கு..அதை நான் எப்பவும் மறுக்க மாட்டேன்…
பட் நமக்காக அக்கறைப்படுறவங்க கிட்ட இது இரண்டையும் கடந்த ஒரு விஷயம்,உண்மையா இருக்குறது.ஆமா இதெல்லாம் நான் பண்றேன்..இது தான் நான்னு உண்மையைச் சொல்ற தைரியம் எல்லாருக்கும் எல்லாம் இருக்காது..
நான் உங்களோட ப்ரெண்டா இருக்குற பட்சத்துல உங்க உண்மையை ஏத்துகிட்டு உங்களோட இருக்க முடியும்…ராஜீவ் அண்ணா மாதிரியே…ஆனா இதே நான் உங்களோட காதலியாவோ மனைவியாவோ இருந்தா ஒரு துளி கூட என்னால இதை ஏத்துக்க முடியாது.
காதலுக்கும் நட்புக்கும் இது தான் மிகப் பெரிய வித்தியாசம்..நட்பு எத்தனைப் பெரிய தப்பு பண்ணிணாலும் சண்டை போட்டாலும் ஈகோ இல்லாம, இருக்குறதை அப்படியே ஏத்துக்கும்..ஆனா காதல்ல ஒரு தடவை ஒரு விஷயம் தப்பு ஆய்டுச்சுனா அதைத் திரும்ப மாத்துறது ரொம்பவே கஷ்டம்…
சோ உங்களை நீங்களாவே நாங்க ஏத்துக்குறோம்..அதனால உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணும்னு நினைக்குறோம்..ஆனா ராஜீவ் அண்ணா மாதிரி நீங்க பண்றத் தப்புக்கு நான் கண்டிப்பா துணை போக மாட்டேன்..இதுவரை நடந்ததை மாத்திக்க முடியாது..
ஆனா இதுக்கப்பறம் எதுவும் நடக்காம தடுக்கலாம்..அதுக்கு நான் பொறுப்பு…பட் பண்ணின தப்புக்கான பரிகாரத்தை நீங்க தான் பண்ணணும்..”,என்று எளிதாய் கூறிச் சிரித்தவளைப் பார்த்தவனுக்கு என்ன சொல்வதென்று கூடத் தெரியவில்லை.
“இப்போ நீங்க நினைக்குறீங்களா..தெரியாம இவகிட்ட வந்து மாட்டிட்டோமேனு?”
“ஒரு விதத்துல அது தான் உண்மை போல..இந்த வயசுலேயே பாட்டி மாதிரி பேசுற…எங்கம்மாவைக் கூட இவ்வளவு பேச விட்டது கிடையாது…அதுக்கெல்லாம் சேர்த்து தான் அனுபவிக்குறேன்…”
“ம்ம் இருக்கலாம்…அதான் சொன்னனே நட்பு எப்பவுமே வித்தியாசமானது…பெத்தவங்களை விடவும் சில நேரம் நம்மளால இயல்பா இருக்க முடியுற ஒரு உறவு..பல பேருக்கு பல நேரத்துல அமையுறது இல்ல…”
“ம்ம்ம்…”
“இப்போ என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?”
“நடு ராத்திரில என்ன பண்ணுவாங்க தூங்க வேண்டியது தான்..”
“ப்ளீஸ்..இப்படி டெரர் முகத்தை வச்சுகிட்டு ஜோக் எல்லாம் பண்ணாதீங்களேன்..முடியல..”
“என் நேரம்…”
“மினிஸ்டர் விஷயத்துல என்ன பண்ண போறீங்கனு கேட்டேன்…ஏன் திடீர்னு இப்படி ஒரு விஷயத்தை பண்றார்?”
“இல்ல கொஞ்ச மாசமாவே எங்க இரண்டு பேருக்கும் டம்ஸ் சரியில்ல…எனக்குப் பிடிக்காத சில விஷயங்களைப் பண்ண சொன்னார் நான் முடியாதுனு சொல்லிட்டேன்..அதுவே என் மேல கோபம் இருந்தது.
இப்போ அதோட சேர்த்து கட்சியில் அவர் மேல சந்தேகம் வந்திருச்சு..எதிர்கட்சிக்காரங்க அவரோட சொத்து மதிப்பை பத்திக் கேட்டு ப்ரஷர் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க..
சோ ப்ராப்ளம் பெருசாய்டுச்சுனா எங்க நான் உண்மை எல்லாம் சொல்லிருவேனோனு பயப்படுறார்.என்னைத் தவிர இந்த டீலிங் எல்லாம் என் அப்பா உட்பட யாருக்கும் தெரியாதுனு அவருக்கு நல்லாவே தெரியும்…சோ என் கதையை முடிச்சுட்டா அவருக்கு பிரச்சனை இருக்காதுனு நினைச்சு இப்படி ஒரு தப்பான மூவ் பண்ணிருக்கார்..இன்னமும் இந்த ப்ரஜீஷ் பத்தி அவருக்குத் தெரில…இன்னும் இரண்டு நாளுக்குள்ள கேரளா ஸ்டேட் மீடியா மொத்தமும் அவர் பேர் தான் வரப் போகுது..
பதவியும் போய் ஜெயில் கம்பியும் எண்ணப் போறார்.யாரையும் பகைச்சுக்க முன்னாடி அவங்களோட பலத்தை பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்னு பாவம் அவருக்குத் தெரியல…”
“என்ன இந்தப் படத்துல எல்லாம் வர்ற வில்லன் மதிரி பேசுறீங்க??”
“ஊருக்கே நான் வில்லன் தான்…நீ தான் என்கிட்ட உட்காந்து சாவுகாசமா பேசிட்டு இருக்க…”
“ஆமால….”
“ஆமா தான்…கதைக் கேட்ட வர போதும் போய் தூங்கு போ…”
“பொலம்புறதையும் பொலம்பிட்டு என்னையே கிண்டல் பண்றீங்க..ம்ம்…டெவில் ட்ரீம்ஸ்..”,என்றவள் தலையைத் திருப்பிக் கொண்டுச் சென்ற விதத்தில் இருக்கும் பிரச்சனைகளை மறந்து வாய்விட்டுச் சிரித்திருந்தான் ப்ரஜீஷ்.