“வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில்
விளக்கம் நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டு விசயங்களின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு.”
இரவு வீட்டிற்கு வந்தவன் ஞாயிற்றுக்கிழமை வெளியே செல்லலாம் என்று கூற மூவருமாய் கேலிச் சிரிப்பு சிரித்தனர்.
“இல்ல ஒரு காலத்துல சண்டே வெளியே போலாமானு கேட்டா அன்னைக்கு தான் கூட்டம் அதிகம் வரும் என்னால வர முடியாதுனு யாரோ சொல்லுவாங்க…இல்ல ஆனந்த் அண்ணே..”
“அவளுக்கு அன்னைக்கு தான் லீவ் இருக்கு..என்னை என்ன பண்ண சொல்ற..”,என்று நிதானமாய் அன்பு கூறுவதைக் கேட்டவர்கள் ஓவென்று கூச்சலிட்டனர்.
ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே கிளம்பி நிற்கும் பிள்ளைகளை ராகினியும் ராகவனும் கேள்வியாய் பார்க்க மால்க்கு போயிட்டு வரோம் ப்பா..என்று பதிலளித்தான் அன்பு.
நால்வரும் காரில் கிளம்ப,அங்கு காயத்ரி தன் தந்தையிடம் விஷயத்தைக் கூறியிருந்தாள்.
“ப்பா..ஏன் எதுவும் சொல்ல மாட்றீங்க?”
“என் விருப்பத்தை விட வாழ போற உன் விருப்பம் தான் கண்ணு முக்கியம்..பையன் நல்லவனா உன்னை கடைசி வரை சந்தோஷமா பார்த்துக்குறவனா இருந்தா போதும்.ஆனாலும் இப்படி அம்மாவும் பொண்ணும் இத்தனை வருஷம் என்கிட்ட இருந்து மறைச்சுட்டீங்க பாத்தீங்களா?!”
“அப்படி இல்ல ப்பா.அவன் சம்மதம் தெரியாம உங்ககிட்ட சொல்லி என்ன ஆகப் போகுது சொல்லுங்க..சாரிப்பா..”
“விடு கண்ணு..ஒரு நல்ல நாளா பார்த்து பொண்ணு பார்க்க வரச் சொல்லு பேசி முடிச்சுருவோம்.”,என்றதைக் கேட்டவளுக்கு உற்சாகமாய் இருந்தது.அதே உற்சாகத்தோடு கிளம்பியவள் கையில் பைக் சாவியைச் சுழற்றியபடியே வர அவளது தாய் அவளைப் பார்த்து முறைத்தார்.
“என்ன மா?!”
“ஏன் டி இந்த கோலத்துலயா போகப் போற..ஒரு சுடிதாராவது போட்டு போலாம்ல?”
“ம்மா..அவங்க எல்லாம் என் ப்ரெண்ட்ஸ் மாதிரி தான அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டாங்க..அவங்க அப்பா அம்மா வரும் போது ஒழுங்கா ரெடி ஆகுறேன்..இப்போ சிரி பார்க்கலாம்…”
“உனக்கா பேச சொல்லித்தரணும்..சரி பார்த்து போயிட்டு வா”
“தங்க் யூ செல்லக்குட்டி டாடா..”,என்றவள் பைக்கை கிளப்பி பறந்திருந்தாள்.
மூவரும் அவளுக்காக அந்த மாலின் உணவகத்தில் காத்திருக்க அன்பு காயத்ரிக்காக பைக் பார்க்கிங்கிலேயே காத்திருந்தான்.
“ஹாய் அன்பு..”
“வாங்க மேடம்..எப்படியிருக்கீங்க?!”
“இதெல்லாம் அநியாயம் இன்னைக்கு வர பேசிட்டு தான இருக்கோம்..”
“ஆனாலும்..நீ என்னை இன்னும் மோசமாக்கிடுவனு நினைக்குறேன்..”
“லவ் டூ..”,என்றவன் முன்னே நடக்குமாறு கை நீட்டி நிற்க அவனை ரசித்திருந்தவளாய் அவன் கைப்பிடித்து அவனோடு நடக்க ஆரம்பித்தாள்.
“போலீஸுனு சொன்னா தான் நம்புவாங்க..”,என்று லேசாய் அவன் முணுமுணுக்க அசடு வழிந்தவளாய்,
“ஊருக்கு தான் போலீஸ் உனக்கு பொண்டாட்டியா இப்படி தான் இருக்க தோணுது என்ன பண்றது..”
“சரியான லூசு காயூ நீ”,என்றவன் புன்னகையோடு அவளது நெற்றியில் தட்டினான்.
உணவகத்தின் வாசலுக்கு வந்தவள் அந்நிச்சயாய் அவனது கையை விடுத்து சற்று இடைவெளி விட்டு நின்றாள்.கதவை அவளுக்காக திறந்தவனைப் பார்த்து கண் சிமிட்டியவாறே உள்ளே சென்றவளைப் பார்த்தவனுக்கு புன்னகை பெரிதானது.
அவர்கள் இருவரையும் கண்ட சிறியவர்கள் மூவரும் கையசைக்க உற்சாகமாய் கை காட்டியபடி தனக்கான இருக்கையில் அமர்ந்தாள்.
“ஹாய் ஆனந்தன் எப்படியிருக்கீங்க..ஹாய் வாலுஸ்..”
“ஹாய் நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படியிருக்கீங்க.”
“ஹாய் அண்ணி..”
“எனக்கென்ன சூப்பரா இருக்கேன்..உங்க நாலு பேரையும் இப்படி சேர்த்து பாக்குறதுக்கு ரொம்ப நல்லாயிருக்கு..இப்போ தான் தெரியுது அன்பு ஏன் யார்கிட்டேயும் அந்தளவு பேச மாட்றான்னு..அவனுக்கு தான் வீட்லயே ப்ரெண்ட்ஸ் இருக்காங்களே..இல்ல?!”
“ஐயோ அண்ணி நீங்க இவ்வளவு கோபக்காரங்களா??!இப்படி உட்காந்து பேசிட்டு இருக்கோமே நாங்க..”
“அட உங்கண்ணன் முன்னாடி நான் டோட்டல் ப்ளாட் மா..நானா சொல்லாத வரை எனக்கு கோபம் வரும்னு நீ கண்டுபிடிச்சியா சொல்லு?”,என்றவளைப் பார்த்து மூவரும் சிரிக்க அன்பிற்கோ லேசாய் வெட்கமே வந்திருந்தது.
“அட அண்ணே வெட்கமெல்லாம் வேற படுறியே..”
“போதும் டா..ஒருத்தனை இப்படி தனியா ரவூண்ட் கட்டுறதில ஒரு ஆனந்தம்..ம்ம்ம்..”
“சரி சொல்லுங்க உங்க வீட்டு மூத்த மருமக எப்படி ஓகே தானா?தேறுமா?”
“அட நீங்க என்ன இப்படி கேட்டுட்டீங்க..இதை விட பெஸ்ட் கிடைக்கவே கிடைக்காது..என்ன இன்பா?”
“அப்படியா சொல்றீங்க..என்ன அன்பு எப்போ பொண்ணு பார்க்க வரீங்க அப்போ?”,
“அடிப்பாவி அப்பாகிட்ட பேசிட்டியா சொல்லவே இல்ல..”
“காலையில் தான் பேசினேன்..பிரச்சனை ஆனா அடி வாங்குறதுக்கு உன்னை கூப்பிடலாம்னு இருந்தேன்..ப்ச்ச் பட் அப்படி ஒண்ணும் நடக்கல..”
“…”,வெறும் சிரிப்போடு அவளைப் பார்த்திருந்தவன் சுற்றத்தை கருத்தில் கொண்டு ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை.
அடுத்த ஒரு மணி நேரமும் பேச்சும் சிரிப்புமாய் கழிய அனைவரும் கிளம்ப எத்தனித்த நேரம் அன்பு ஆனந்தனிடம் கார் சாவியைக் கொடுத்தான்.
“ஆனந்தா நீ இவங்களைக் கூட்டிட்டு கிளம்பு நான் கொஞ்ச நேரத்துல கிளம்பி அப்படியே ஹோட்டல் போயிடுவேன்.”
“சரிண்ணா..அண்ணி வரோம்..சீக்கிரமே வீட்டுக்கு வந்துருங்க..”,என்றபடி மூவரும் கிளம்ப அன்பு தன் பேண்ட் பாக்கெட்டில் கட்டை விரலை விட்டபடி நின்றிருக்க அவனைப் பார்த்து திரும்பியவள் என்னவென்பதாய் கேள்விப் பார்வைப் பார்த்தாள்.
ஒன்றும் கூறாமல் தன் மொபைலை எடுத்துக் காட்டினான் அன்பு.அடுத்த பத்து நிமிடத்தில் ஆரம்பமாகும் படத்திற்கான டிக்கெட் இருந்தது.
“கேடி…”
“உன்னை விட கம்மி தான் போலாமா”,என்றவன் கையை நீட்ட வாகாய் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தாள் காயத்ரி.தங்களுக்கான இருக்கையைப் பார்த்து அவர்கள் அமர்வதற்கும் படம் ஆரம்பிப்பதற்கும் சரியாய் இருந்தது.
காயத்ரி படத்தைப் பார்ப்பதைப் போன்று இருந்தாலும் அன்புவிடம் எதையோ கேட்க நினைத்து தவிப்பதைப் போன்று தோன்றியது.
அதை உணர்ந்தவனோ சற்றும் யோசிக்காது அவளது கையை அழுத்திப் பிடிக்க சட்டென உயிர் பெற்றவளாய் ஒன்றுமில்லையென தலையசைத்தாள்.
“ஏன் இவ்வளவு யோசனை மனசில இருக்குறதை கேளு காயூ..”
“ஒண்ணுமில்ல..உண்மையாவே மனசார தான் என்னை ஏத்துகிட்டியா இல்ல..வேற எதாவது..”
“ஏன் அப்படி கேட்குற..அதுவும் வீட்டில் விஷயத்தை சொன்ன அப்பறம்..”
“தெரியல ஏதோ நீ என்கிட்ட ஒரு தடையோடேயே பழகுறியோனு தோணுது.எனக்காக யோசிக்குற எல்லாம் பண்ற..ஆனா ஒரு அடி தூரத்துல தான் நிக்குற மாதிரி இருக்கு..இதெல்லாம் என் கற்பனையாக கூட இருக்கலாம்.ஆனால் உண்மையா இதுதான் மைண்ட்ல ஓடுது அப்பப்போ..”
“….”
“விடு அன்பு சரியாகிடுவேன்..ஜஸ்ட் தேவையில்லாத யோசனை..”
“லவ் யூ டி லூசு..”
“!!!”
“இப்போ நம்புவியா..”
“எப்படி டா கண்டுபிடிச்ச..”
“ம்ம் இந்த மூஞ்சியில் எழுதி ஒட்டிருக்கே..”
“விளையாடாத..உண்மையா இதுதான் காரணம்..நான் கூட உரிமையா உன்னை வா போனு பேசுவேன்..ஆனா நீ எப்பவுமே காயூ தான்..ஒரு இரண்டு தடவை “டா”,சொல்லிருக்க..அதுவே என்னவோ போல இருக்கு..”
“தெரியும் வேணும்னே தான் கட்டுப்படுத்திக்கிட்டேன்.”
“உன்னை இத்தனை வருசம் படுத்தினது போதாதா..காதல் இருக்கு தான் ஆனாலும் உன் உணர்ச்சிகளோட விளையாட எனக்கு இஷ்டமில்ல டி..”,குரல் லேசாய் கரகரத்தது போல் இருந்தது.
“அன்பு..”
“சாரி காயூமா..நீ இந்த அளவு சீரியஸாய் இருப்பனு நான் நினைக்கல..”,என்றவன் நொடியில் தன்னைத் தேற்றிக் கொண்டான்.
“என்னோட வார்த்தையோ தொடுதலோ உனக்குள்ள சின்ன ஏக்கத்தைக் கூட இனி கொடுக்கக் கூடாதுனு தான் அப்படியிருந்தேன்.
வீட்ல பேசி அவங்க அதைப் புரிஞ்சுக்காம இன்னும் காலம் கடத்தினா உனக்கு இன்னும் கஷ்டம்னு தோணிச்சு.அதனாலேயே சீக்கிரமா வீட்ல பேசிட்டேன்.எனக்குத் தெரிஞ்சு இன்னும் ஒரு மூணு மாசம் அதுவே அதிகம் தான்.அதுக்குள்ளே கண்டிப்பா நம்ம கல்யாணம் நடக்கும்.
அதுக்கப்பறம் நீயே போதும்னு சொல்ற அளவுக்கு காதலிக்கணும்னு தோணுது.உரிமையோட,யாரும் பார்த்து உன்னை எதுவும் பேசிடக் கூடாதுனு நிறைய யோசிச்சுட்டேன்.பட் அது உனக்குள்ள இப்படி ஒரு யோசனையைக் கொடுத்துருச்சு..சாரி டா..”
அவன் பேசியதெல்லாம் ஏதோ மாயைப் போலத் தோன்ற அப்படியே அவனது இடது கை புஜத்தை இறுக்கிப் பிடித்து அவனோடு ஒன்றிக் கொண்டாள்.
ஒன்றும் கூறாமல் தனது வலது கை கொண்டு அவளின் கன்னத்தை ஆதரவாய் தட்டிக் கொடுத்தவன் உச்சந்தலையில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.
“என்ன டி போலீஸ்னு கெத்தா சுத்திகிட்டு இங்க இப்படியிருக்க..”
“போடா போலீஸ்னா?நானும் மனுஷி தான..”
“ஆனாலும் ஏன் இப்படியிருக்க நீ..அவ்ளோ சீன் எல்லாம் எனக்கு இல்லையே..”
சாய்ந்தவாறே அவனை நிமிர்ந்து பார்த்தவள்,”அதெல்லாம் நிறைய இருக்கு..உனக்கு தான் தெரியல..”
“ஏன் டா ஒரு பையனுக்கு மட்டும் ஒரு பொண்ணைப் பார்த்தவுடனே பிடிச்சுரும்.லவ் பண்ணுவான் பின்னாடி சுத்துவான்.ஆனால் ஒரு பொண்ணுக்கு அதெல்லாம் நடக்கக் கூடாதா..”
“…”
“உண்மையா இது பெரிய விஷயமெல்லாம் இல்ல..இப்போ என் இடத்தில் நீ இருந்திருந்தா கொஞ்ச நாள்லேயே லவ்வை சொல்லிருப்ப..ஆனால் அப்போ எனக்கு அந்த தைரியம் இல்ல..
உன்கிட்ட சொன்ன அப்பறம் தான் முன்னாடியே சொல்லிருக்கலாமோனு தோணிச்சு..அண்ட் இன்னொரு விஷயம்,உன்னை எப்படியாவது மறந்துரலாம்னு நினைச்சேன் ஆனா அது ரொம்பவே கஷ்டமா இருந்தது.
உன் இடத்தில் இன்னொருத்தர்னு யோசிக்க முடியல.வீட்டிலேயும் என் இஷ்டத்துக்கு தான் மரியாதை கொடுத்ததுனால கல்யாணம் பத்தியெல்லாம் யோசிக்கத் தோணல..
நம்ம கதையில் கடவுளோட அருள் இருந்த ஒரே விஷயம் உனக்கு கல்யாணம் ஆகாதது தான்.”,என்றவள் சிரிக்க லேசாய் அவளது தலையில் தட்டினான்.
“உன் அளவுக்கு நான் எக்ஸ்பரசிவ்வா இருப்பேனானு தெரியல..பட் கண்டிப்பா போரிங் கிடையாது..சோ அட்லீஸ்ட் நிச்சயம் முடியுற வரையாவது நான் ரொம்ப ரொம்ப நல்லவனா மட்டும் தான் இருக்கலாம்னு இருக்கேன்.”
“சரி டா புருஷா அதுவரை நானே உன்னைப் பத்திரமா பார்த்துக்குறேன்.”,என்று சிரித்தவளுக்கு மனம் நெகிழ்ந்து போயிருந்தது.