குழித்துழி நிற்பது நீர்; தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம்; – அழித்துச்
செறுவழி நிற்பது காமம்; தனக்கு ஒன்று
உறுவுழி நிற்பது அறிவு

 

பள்ளமான இடத்தில் நீர் நிற்கும். பலரும் பழிக்கும் தீயவனிடம் பாவம் நிற்கும். தவ ஒழுக்கமில்லாதவனிடம் காமம் நிற்கும். துன்பம் வந்த போது கற்றறிவு துணை நிற்கும்.”

திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே காலை உணவை முடித்துவிட்டு, வந்திருந்த உறவினர்களை வழியனுப்பிவிட்டு மணமக்களின் குடும்பம் கேரளாவிற்குக் கிளம்பியிருந்தது.

மணமக்கள் ஒரு காரிலும் மற்றவர்கள் இன்னும் இரு கார்களில் எனக் கிளம்பியிருக்க அவனையே பார்த்திருந்தவளின் பார்வையைத் தவிர்த்தவனாய் சிறிது நேரம் வெளியே வேடிக்கைப் பார்த்து வந்தவன் சிறிது நேத்தில் கண்களை மூடி இறுக்கையில் பின் சாய்ந்து கொண்டான்.

அப்படியே உறங்கியும் போயிருந்தவன் மீண்டும் கண்விழித்த போது அபூர்வா தூங்கிக் கொண்டிருந்தாள்.அதன் பின்னும் அவள் அவனிடம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

மாலை நேரம் வீட்டை அடைந்தவர்கள் மணமக்களுக்கு ஆரத்தி கரைத்து உள்ளே அழைத்துச் செல்ல சௌமியா அபூர்வாவின் தாய் தந்தை தங்கையை வரவேற்று அவார்களுக்கான அறக்குக் கூட்டிச் சென்றார்.

லேகாவும் லதாவும் அபூர்வாவைத் தங்களோடு அழைத்துச் சென்று விட ப்ரஜீஷ் தனதறைக்குச் சென்றிருந்தான்.அறை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருக்க ஒரு ஓரத்தில் அபூர்வாவின் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

சில நொடிகள் அறையை வெறித்துப் பார்த்திருந்தவன் பின் துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.காலையிலிருந்து புதைத்து வைத்திருந்த உணர்வுகளை எல்லாம் தண்ணீரின் குளிரில் கரைக்க முயன்றுக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் வெளியில் வந்தவன் பால்கனியில் சென்று அமர்ந்து விட இரவு உணவிற்கு அழைக்க வந்த லதாவிடம் பசியில்லை என்றுக் கூறி அனுப்பிவிட்டிருந்தான்.

இரவு உணவை முடித்து அபூர்வாவைத் தயார் செய்து அவனது அறைக்கு அனுப்ப சகோதரிகள் உதவிக் கொண்டிருந்தனர்.தயாராகி முடித்தவள் தயக்கமாய் ,

“டிபன் கொஞ்சமா தட்டுல போட்டுத் தரீங்களா..அவருக்கு எடுத்துட்டு போறேன்…”

“ம்ம் வந்தன்னைக்கே கவனிப்பு பலமா இருக்கே…நடக்கட்டும்..நீங்க இரண்டு பேரும் போங்க நான் எடுத்துட்டு வரேன்”,என்றவளாய் லதா சமையலறைக்குச் சென்றாள்.

மாடியில் அவர்களது அறை வாசலில் இருவருமாய் காத்திருக்க கொண்டு வந்த உணவுத் தட்டை அபூர்வாவிடம் கொடுத்துவிட்டு,ஒரு கையில் பாலும் மறு கையில் தட்டுமென நின்றவளுக்காகக் கதவைத் திறந்துவிட்டு புன்னகைத்துச் சென்றனர்.

உள்ளே இருந்த மேசையில் கையிலிருந்தப் பொருட்களை வைத்தவள் ப்ரஜீஷைத் தேட அவன் பால்கனியில் இருந்ததைக் கவனித்து விட்டு கதவைத் தாழிட்டு விட்டு அவனுக்கான உணவோடு அவனருகில் சென்றாள்.

தன் முன் தட்டோடு வந்து நின்றவளைப் பார்த்தவன் நீட்டியிருந்த காலை மடக்கி நேராய் அமர்ந்தான்.

“பசியில்ல அப்பூ…”

“நம்பிட்டேன்..”,என்றவள் ஒரு துண்டு உணவை எடுத்து அவன் வாயருகே கொண்டு செல்ல அவன் அவளை முறைத்தான்.

“நான் எங்கேயும் போக மாட்டேன் சாப்பிட்டுட்டு பொறுமையா முறைக்கலாம்..ம்ம்..”

“ஸ்டாப் பேம்பரிங் மீ..எனக்கு வேணும்னா நானே சாப்டுக்க மட்டேனா..”,என்றவன் எழுந்து அறைக்குள் சென்றுவிட இடவலமாய் தலையசைத்த வண்ணம் அவன் பின்னேச் சென்றாள் அபூர்வா.

“சரி உங்களுக்கு பசியில்ல..பட் உங்க தங்கச்சிங்க கிண்டல் பண்ணதை எல்லாம் பொருட்படுத்தாம உங்களுக்காக தானே எடுத்துட்டு வந்துருக்கேன்..அதுக்காக ஒரு இரண்டு வாய் சாப்பிடலாம் தான..”,என்றவள் மீண்டும் அவனுக்காக நீட்டிட அவளிடமிருந்துத் தட்டை வாங்கி உண்ண ஆரம்பித்தான்.

ப்ரஜீஷ் சாப்பிடும் வரையில் என்ன செய்வதெனத் தெரியாதவளாய் தன் தலையிலிருந்தப் பூவை எடுத்து வைத்துவிட்டு ஈரத்தலையைத் காயவிட்டு நடுவில் மட்டும் ஒரு கிளிப்பைப் போட்டுக் கொண்டாள்.

பாதி தட்டு மட்டும் காலியாகி இருக்க அதை அப்படியே மேசையில் வைத்துவிட்டு கை கழுவி வந்தவனிடம்,

“கொஞ்ச நேரம் பேசணும்..இங்க உட்காரலாமா?”,என்றவள் கட்டிலைக் கை காட்ட எதுவும் கூறாமல் அமைதியாய் அமர்ந்தவனின் முன் வந்து நின்றவள் ஒன்றும் கூறாது சட்டென இழுத்து அவனது முகத்தைத் தன் மார்போடுப் புதைத்துக் கொண்டாள்.

அவளின் கரங்கள் அவன் பின்னந்தலையை ஆதரவாய் வருடிக் கொடுக்க சில நொடிகளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாதவனாய் அவளை இறுகக் கட்டிக் கொண்டான்.

அவனின் விழி நீர் தன் புடவையை நனைப்பதை உணர்ந்தவளாய் முகம் நிமிர்த்தி அழுந்தத் துடைத்து விட்டவள் அவனருகில் அமர்ந்து தன் மடி சாய்த்துக் கொண்டாள்.

“மனசுல இருக்குறதைக் கொட்டிருங்க ..”

“…”

“உள்ளுக்குள்ள இருக்கவரை தான் பாரம் போட்டு அழுத்தும்..வெளில சொல்லிட்டா உண்மையா அது ஒண்ணுமே இல்லாம ஆய்டும்..”

“….”,எதற்கும் வாய் திறக்காதவனைப் பேச வைக்கும் வழியும் அவளுக்குத் தெரிந்து தான் இருந்தது.

“ப்ரஜு…”

“ஐ அம் சாரி அப்பூ..”

“சாரி யா எதுக்கு?”

“இப்படி ஒரு சாரியை உன்கிட்ட இருந்து வர வைக்கணும்னு நினைச்சு இனி வாழ்க்கை மொத்தமும் நான் உன்கிட்ட சாரி சொல்ற மாதிரி ஆய்டுச்சு..”

“எதுக்கு சாரினு தான் கேட்குறேன்..”

“தெரில சொல்லணும்னு தோணிச்சு சொல்றேன்..”

“சரி போகட்டும்..அந்த கண்ணு காலையிலிருந்து கலங்கிப் போகுதே அது ஏன்?”

“….”

“எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுங்க..சொன்னா தானே நீங்க என்ன நினைக்குறீங்கனு தெரியும்..”

மெதுவாய் எழுந்து அமர்ந்தவன் மீண்டும் பால்கனிக்குச் சென்று இருளை வெறித்து நின்றான்.

“அப்போ ராஜீவ் அண்ணா சொன்னது உண்மை தான்..”,என்றபடி அவனருகில் வந்து நின்றவள் நிதானமாய் கேட்க ஒருமுறை அவளைத் திரும்பிப் பார்த்தவன் மீண்டும் தலையைத் திருப்பிக் கொண்டான்.

“டெல்லில நீ என்கிட்ட கேட்ட விஷயம் உனக்கு நியாபகம் இருக்கா?”

“எதைப் பத்தி??”

“ஒரு வேளை நான் கல்யாணம் பண்ணிக்குறதா இருந்தா என்னை மாதிரியான பொண்ணை கல்யாணம் பண்ணிப்பேனானு கேட்டியே..”

“ஆமா அதனால?”

“அந்த லிசா அவ அப்படிதான்..நான் எப்படிபட்ட வாழ்க்கையை வாழ்ந்தேனோ அப்படி தான் இருந்தா..ஒரு வேளை அதனால தான் அவளை எனக்குப் பிடிக்காம போயிடுச்சோனு தோணுது..

ஆனா நீ வந்து கேட்டவுடனே சரினு ஒத்துகிட்டு சுயநலமா யோசிச்சு உன் வாழ்க்கையை வீணாக்கிட்டேன்…”

“கற்பனை எல்லாம் ரொம்பவே நல்லாயிருக்கு..ஆனா இதெல்லாம் தேவையில்லாதது…”

“சும்மா என்னை சமாதானப்படுத்தனும்னு உன் அட்வைஸைப் பொழியாத…”

“உண்மையாவே என்னை மாதிரி..இல்ல என்னை விட நல்ல பொண்ணுங்க இந்த உலகத்துல நிறைய பேர் இருக்காங்க அப்படி யாராவது வந்து உங்களை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லிருந்தா ஓகே சொல்லிருப்பீங்களா?”

“ம்ம் ஆமா அப்படியே லைன்ல நிக்குறாங்க…”

“அந்த நல்லதெல்லாம் கண்டிப்பா நடக்காது..அதே மாதிரி நீங்க பண்ணிண தப்பெல்லாம் பண்ணிட்டு ஊருக்குள்ள எத்தனையோ பேர் சுத்திட்டு இருக்காங்க நீங்க சொல்ற மாதிரி அவங்களுக்கு எல்லாம் வாழ்க்கைக் கொடுக்கணும்னு எனக்குத் தோணுமா?

சில உணர்வுகள் சிலர் மேல மட்டும் தான் வரும் புரிஞ்சுகோங்க ப்ரஜு..இன்னும் உங்களுக்குப் புரியுற மாதிரி சொல்லணும்னா எந்தப் பொண்ணு உங்களோட பெட் ஷேர் பண்ண விரும்பினாலும் அதுக்கு சரினு சொல்ல முடிஞ்ச உங்களால அதே சம்மதத்தை வாழ்க்கையை ஷேர் பண்ணிக்ககணும்னு கேட்டா சொல்லிருக்க முடியாது..

தப்பா நினைக்காதீங்க..இதுக்கு மேல எனக்கு புரிய வைக்கத் தெரில..இரக்கம் பரிதாபம் பாவம் பார்த்தெல்லாம் காதலும் கல்யாணமும் வராது வந்தாலும் நீடிக்காது…மனசார ஒருத்தரை ஏத்துகிட்டா மட்டும்தான் அவங்களோட குறைகள் நம்ம கண்ணுக்குப் பெருசா தெரியாது.

அதுவுமில்லாம நான் எப்பவும் சொல்றதை தான் இப்பவும் சொல்றேன்,என்னால உங்க கடந்த காலத்தை மன்னிக்க முடியாது, புருஷன்ங்கிறதுக்காக நீங்க இனி தப்பு பண்ணிணா உங்களுக்கு சப்போர்ட் பண்ணவும் மாட்டேன்..ஐ ஜஸ்ட் டெலிட்டட் யுவர் பாஸ்ட்..அது எதுவும் என்னோட நினைவுகள்ல இருக்கக் கூடாதுனு முடிவு பண்ணி தான் இந்ததக் கல்யாணத்தை மனசார ஏத்துட்டு இருக்கேன்..

இப்பவும் இதுக்கு அப்பறமும் உங்க வாழ்க்கைகக்குள்ள நான் மட்டுமே இருக்கணும் இருப்பேன் அவ்வளவு தான்.இதுக்கு மேல இப்படி ஒரு தேவையில்லாத எண்ணம் உங்களுக்குள்ள வரவே கூடாதுனு நான் ஆசைப்படுறேன்..ப்ளீஸ்…”,என்றவளின் அந்தப் பார்வை அவனை மொத்தமாய் மீட்டெடடுத்திருந்தது.

அந்தப் பார்வையில் இருந்த பாசம் நம்பிக்கை தெளிவு அனைத்தையும் மீறி நீ இப்போது எனக்கானவன் என்ற உரிமை..அபூர்வா தெளிவானவள் என்பது தெரியும் ஆனாலும் தன் விஷயத்தில் அவள் இத்தனை உறுதியாய் இருப்பாள் என்று எதிர்பர்த்திருக்கவில்லை.

ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்கும் போது தனக்கானவள் என்ற எண்ணம் எப்போதுமே மேலோங்கி நிற்கும்.இருந்தும் ஏதோ ஒரு தயக்கம் அவளருகில் செல்ல விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தது.

அதையும் மீறி அன்றைய தினம் காலையில் அவளுக்கானத் தன் முதல் முத்தம்..அதன் பிறகு மனம் இன்னுமாய் ப்ரஜீஷிற்கு உறுத்த ஆரம்பித்திருந்தது.அதிலிருந்த அந்த மோகத்தைக் கடந்த ஒரு உணர்வு அதை அவன் இதுவரையில் உணர்ந்ததே இல்லை.அதிலும் அவள் பெறும் முதல் முத்தம் தன்னுடையது என்று உணர்ந்த போது தன் மீதே தனக்கே ஒருவித கோபம் வந்திருந்தது.

அதனாலேயே அதன்பின் அவளிடம் பேசுவதைத் தவிர்த்து வந்தான்.இருந்தும் அவள் அத்தனையும் கவனித்திருக்கிறாள் என்பது இப்போது புரிந்தது.

“ஹலோ எம் டி சார்…என்ன யோசனை?”

“ஒண்ணுமில்ல..நீ சொன்னது எல்லாமே கரெக்ட்தான்…நீ உன் மனசை வெளிப்படுத்துறதுக்கு முன்னாடியே நான் மொத்தமா மாறிட்டேன் தான்.அப்போ ஒரு ப்ரெண்டா என் மனசுல பொண்ணுனு நீ மட்டும் தான் இருந்த..இப்போ இனி காலம் மொத்தத்துக்கும் மனைவியா நீ மட்டும்தான் இருப்ப…

அதுல எந்தக் குழப்பமும் எப்பவும் எனக்கு இருந்தது இல்ல..இருந்தாலும் எதோ ஒரு கவலை…பட் இப்போ மொத்தமா அது இல்லை..தேங்க் யூ சோ மச் பர் எவ்ரிதிங்..தேங்க்ஸ் ஃபார் பீயிங் மை லைஃப் அப்பூ..”,என்றவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

எப்போதும் போல் இப்பொழுதும் அவனது பிடியில் திக்கு முக்காடித்தான் போனாள் அபூர்வா.

“ப்ரஜு உள்ளே போலாம்..”,என்றவளின் மெல்லிய குரலில் அவளை நகர்த்தியவனாய் அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டான்.அவனின் அகன்று விரிந்த தோள்களுக்குள் சிறு பறவையென இருந்தவளை விட்டு அங்கிங்கு விழிகளை நகர்த்த முடியவில்லை ப்ரஜீஷால்.

உள் வந்து அவன் காலால் கதவைத் தள்ளியதில் அது அறைந்து சாத்தியிருக்க அபூர்வாவின் படபடப்பு இன்னுமாய் அதிகரித்திருந்தது.தன்னவளைக் கட்டிலில் கிடத்தி விட்டு அவளில் தன்னைத் தொலைக்கத் தொடங்கியிருந்தான்.

அவளின் பயங்களையும் நடுக்கங்களையும் உணர்ந்தவனாய் ஒரு ஒரு தீண்டலிலும் தன் காதலைப் பிரதானப்படுத்திக் கொண்டேயிருந்தான் ப்ரஜீஷ்..

அபூர்வாவோ ஒவ்வொரு நொடியும் அவனின் காதலில் முங்கித் திளைத்துக் கொண்டிருந்தாள்.அவன் உணர்ச்சிக்களைக் கூடத் தனக்காக,தன்னைக் காயப்படுத்தி விடக்கூடாது என்றுக் கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்பதை உணர்ந்தவளுக்கு அவன் மீதான காதல் இன்னுமாய் அதிகரித்தது.

ஒருவர் மற்றவரிடம் தன்னை இழந்து தோற்று அதில் வெற்றி பெறுவதன் இன்பத்தை, தாம்பத்தியத்தின் அழகை இருவருமே உணர்ந்திருந்தனர்

களைப்பும் சோர்வுமாய் தன்னருகில் இருப்பவளை அவள்புறம் திரும்பிப்படுத்த வண்ணம் ப்ரஜீஷ் பார்த்திருக்க லேசாய் அவனை சாய்த்தவள் அவன் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“ஆர் யூ ஓகே அப்பூ..”

“ம்ம்…”,என்றவளாய் அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனது கன்னத்தை லேசாய் கிள்ளி தன் உதட்டில் பதித்துக் கொண்டாள்.

“உங்களால இவ்வளவு பொறுமையா கூட இருக்க முடியும்னு இன்னைக்குத் தான் தெரியுது..”

“எனக்கே இப்போ தான் தெரியுது..”,என்றவன் புன்னகைக்க செல்லமாய் அவனது மார்பில் குத்தியவள் அவனையே பார்த்திருந்தாள்.

“என் பக்கத்துல நீ ஏதோ பேபி மாதிரி இருக்குற பீல் அப்பூ..என் கைக்கு அடக்கமான பொம்மை மாதிரி இருக்க…”

“ம்ம்.”

“யூ ஆர் சோ டெலிகேட் டு ஹேண்டில் மை பொண்டாட்டி..அதனாலேயே..”,அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் அவசரமாய் தன் இதழ்களை கொண்டு அவனைச் சிறை செய்திருந்தாள் அபூர்வா.