நெய்தல்தலைவி கூற்று (குறுந்தொகை-5)

அதுகொ றோழி காம நோயே

வதிகுரு குறங்கு மின்னிழற் புன்னை

உடைதிரைத் திவலை யரும்புந் தீநீர்

மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்

பல்லித ழுண்கண் பாடொல் லாவே.

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

நரிவெரூஉத் தலையார்

செய்தி

அவன் பிரிந்திருக்கும் நிலை.  தலைவி கவலைப்படுவாள் என்று தோழி கவலை கொள்கிறாள்.  நான் மட்டுமா உறங்காமல் இருக்கிறேன்.  கடலலைகளைப் பார்.  அவையும் கூட உறங்கவில்லை.  புன்னைமர இனிய நிழலில் வாழும் குருகு உறங்குகிறது.  அதன் அருகில் கடலலை புலம்பன் பிரிந்தான் என்று உடைந்துபோய்த் திவலைகளைத் தன் கண்ணீராகத் துளித்துக்கொண்டிருக்கிறது, என்கிறாள் தலைவி

காலை உணவை முடித்த பின்பு சிறிதுநேரம் பேசிவிட்டு பொழிலரசி எழிலின் வீட்டிலிருந்து கிளம்பினாள்.

ஆயிரமாயிரம் யோசனை எழிலின் மனதினுள் இருந்தும் அவளை பார்த்தது பேசியது எல்லாம் மனதை நிறையவே இலகுவாக்கி இருந்தது. அமைதியாய் ஹாலிற்கு வந்தவன் அந்த மரஊஞ்சலில் அமர்ந்து டீவியை உயிர்பிக்க அனைவருக்கும் அடுத்தகட்ட அதிர்ச்சி.

அந்த ஊஞ்சலை அவன் உபயோகப்படுத்தி வருடங்கள் கடந்திருந்தது. பழைய ஊஞ்சல் என்பதால் அது அசையும்போது கீச் கீச் என்று சத்தம் வேறு இருக்கும். யாராவது அமர்ந்தாலே எரிந்து விழுவான். அதே நேரம் அதை கழட்டவும் அனுமதிக்கவில்லை.

அதனாலேயே அவனிருக்கும் போது அதை யாரும் உபயோகப்படுத்த மாட்டார்கள். நாளடைவில் அது உபயோகிக்கப்படாமலேயே போனது. அங்கயர்கண்ணி மட்டும் தான் அதை பயன்படுத்துவாள் அதுவும் கூட அவன் வீட்டிலில் இல்லாத நேரம் தான்.

இப்போது அவனே அதில் அமர்ந்து டீவியை வேறு பார்க்க ஆரம்பித்தது அனைவரையும் வாயை பிளக்க வைக்காத குறைதான். இருந்தும் யாரும் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் வேலையை கவனிக்கச் சென்றனர்.

சற்று நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த அதியமானும் அதியனும் வியப்பாய் பார்வையை அவன்மீது செலுத்தியபடி டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.

என்ன லே எழிலு எப்படியிருக்க நேத்து எல்லாரையும் பயமுறுத்திட்டியாம்?”

இப்போ பரவால்ல சித்தப்பா. ஆனாலும் உடம்பு அசதியா இருக்கு அதேன் கடைக்கு போகல. . ”

ம்ம் அதிசயமா ஊஞ்சல்ல உக்காந்திருக்கும் போதே தெரியுது. . உடம்பு இன்னும் சரி ஆகலனு. . நாங்க யாராவது உக்காந்தாலே கத்துவியே. . ”

யப்பா ஆனாலும் என்னைய எதாவது சொல்லலைனா உங்களால நிம்மதியா இருக்க முடியாதே. . ”

சரி சரி இரண்டு பேரும் ஆரம்பிக்காதீக. . இன்னைக்கு நம்ம பொழிலரசி வந்துருந்தா. . என்னம்மா இருக்கா தெரியுமா பெரிய மனுசி போல. . அதே துடுக்குத்தனம் பேச்சுல. . நம்ம எழிலை கூட வாடா போடானு தான் பேசிச்சு. . பட்டணத்து பழக்கவழக்கமாச்சே. . பாவம் அவ அப்பா தான் இரண்டு வருசத்துக்கு முன்ன இறந்துட்டாகளாம். . ”

என அத்தனையையும் விளாவாரியாக மலர் விளக்கி முடித்தபோது தான் எத்தனையை கவனிக்கிறார்கள் அனைவரும் என்றே எழிலுக்கு உரைத்தது.

தான் அத்தனை பெரியவனாகி விட்டோமோ ஆனாலும் அரசியை பார்க்கும் போது அவனுக்கு அதே பள்ளிபருவ தோழியாய் தான் தெரிந்தாள். அதேபோல் அவளுக்கும் அவன் 15-16 வயது எழிலாகத்தான் தெரிந்தான்.

எத்தனை வயது ஆனாலும் பால்ய வயது சிநேகம் என்பது மரியாதை அந்தஸ்து அனைத்தையும் கடந்த சுயமறியா பிள்ளை வயதாய் தான் நினைக்க வைக்கிறது.

ஆனாலும் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் கண்கள் அப்படியில்லையே. எத்தனை நெருங்கிய நட்பானாலும் இப்போது வயது முதிர்ந்த புதியவர்கள் போன்றே பழக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இதில் யாரும் யாரையும் குறைசொல்லி விடமுடியாது. . அவரவர் மனதில் அவரவர் பார்வைகளே சரி. இருந்தும் தன்னால் பொழிலுக்கு எந்த குழப்பமும் நேர வேண்டாம் என முடிவெடுத்தவனாய் அத்தனை நேரமிருந்த இலகுத்தன்மையை மறைத்து வழக்கமான எழிலாகவே அங்கிருந்து அமைதியாய் எழுந்துச் செல்ல எத்தனித்தான்.

ஏலே எழிலு நீ கொடுத்த ஜாதகத்தை சோசியர்ட்ட காட்டினோம் நல்ல பொருந்துதுனு சொன்னாரு. . பொண்ணு பேருகூட பொருத்தம்தேன் தமிழ்வேணி. . பொண்ணோட அப்பாகிட்ட பேசினோம் போட்டோ அனுப்புதேன்னு சொல்லிருக்காரு தமிழு போட்டோவையும் அனுப்புவோம் என்ன சொல்லுத?”

ம்ம் சரிப்பா. . குடுங்க நா வேணா ஆவுடையப்பன் அண்ணேகிட்ட கொடுத்துட்டு வாரேன். . ”

அதெல்லாம் வேணாம் நீ நல்லா ஓய்வெடுத்துக்கோ நா கொடுத்துக்குறேன். . போட்டோ வாங்கிட்டு போகதேன் வந்தேன். . ”

அதற்குமேல் எதுவும் கூறாமல் அவன் அறைக்குச் சென்றவனுக்கு அந்த ஊஞ்சலின் நினைவு வந்தது. ஊஞ்சலென்றால் அரசிக்கு அத்தனை இஷ்டம்.

அவள் எப்போது வந்தாலும் அதில் ஏறிநின்று ஆடிக் கொண்டேதான் யாரும் கேள்வி கேட்டால் பதில்கூட கூறுவாள். சில நேரம் அதில் ஆடுவதற்காகவே இங்கு வருவாள்.

அந்த ஊஞ்சலை வாங்கியதே எழிலுக்காகத் தான். எங்கேயோ பார்த்துவிட்டு வந்து தனக்கு வாங்கிய ஆகவேண்டும் என அடம்பிடித்து வாங்கிக் கொண்டான்.

அரசி அதில் ஆடும்போதெல்லாம் முதலில் கோபமாய் பார்த்தவன் ஒருகட்டத்தில் அவளின் முகத்தில் தெரியும் அந்த சிரிப்பும் சந்தோஷமும் அவனுக்கு பார்க்கத் திகட்டாத ஒன்றாய் இருக்கும்.

அவனை கண்டால் அவள் அமைதியாய் சென்று வெற்றிச் செல்வியோடு நின்று கொள்வாள் என்பதால் அவள் வந்தாலே கண்ணில் படாமல் சென்றுவிடுவான்.

இப்படி அவளோடு ரசித்த ஊஞ்சலை அவள் சென்றபின் பயன்படுத்தவும் தோன்றவில்லை அந்த சத்தத்தை கேட்கவும் விருப்பமில்லை அவனுக்கு.

அப்படியே அது உபயோகப்படுத்த படாமலே போனது. இன்று அவனறியாமல் சென்று அமர்ந்தபோது மனம் சொல்ல முடியா ஒருமகிழ்ச்சி அடைந்திருந்தது.

அனைத்தையும் தன் நினைவிலே ஓட்டியவன் அதன் பின்னான மலரின் பேச்சுகள் நினைவிற்கு வர அத்தனையையும் தன்னோடு தனக்குள் போட்டு புதைத்துக் கொண்டான். இத்தனை வருடமிருந்த எழிலாகவே இனியும் இருந்து விட வேண்டும் என்று தீர்மானித்தான்.

மறுநாள் முதல் வழக்கம்போல் கடைக்கு வர ஆரம்பித்திருந்தவன் இன்னமும் இறுகிப் போனதாய் தெரிந்தான். தேவையில்லாமல் ஒரு சிடுசிடுப்பு கேட்டதற்கு தேவையான அளவான பதில் என இயந்திரமாய் சுற்றி வந்தான்.

இதற்கிடையில் தமிழுக்கு பார்த்த பெண் வீட்டிலிருந்து பெண் பார்க்க வருமாறு செய்தி வந்திருக்க மறுநாளே நல்லதாய் இருப்பதால் அன்றே செல்லலாம் என முடிவு செய்தனர்.

எழில் எப்படியும் வர மாட்டான் என்பதால் அவனிடம் விஷயத்தை மட்டும்கூற மிகச் சாதாரண செய்தியாய் கடந்து சென்றுவிட்டான்.

அங்கயர்கண்ணிக்கும் முகிலமுதனுக்கும் கல்லூரி இருந்ததால் அவர்கள் வேண்டாமென முடிவாக மகேந்திரநாதனும் பாக்கியமும் ஒரு சொந்தகாரரின் அறுபதாம் கல்யாணத்திற்கு செல்ல வேண்டுமென்று கூறினர். அதியன் எழிலோடு கடையை பார்த்துக் கொள்வதாய் கூறிவிட்டார்.

ஆக எழிலின் தாய் தந்தை தமிழ் அவனின் பெற்றோரோடு பூம்பாவையும் செல்வதாய் முடிவானது.  அன்றைய இரவு தமிழ் எழிலை அழைத்துச் சென்று தயக்கமாய் பேச ஆரம்பித்தான்.

அண்ணே கண்டிப்பா எனக்கு கல்யாணம் இப்போ அவசியமா உனக்கு முடிக்காம எப்படி எனக்கு முடிக்க முடியும். .  கொஞ்சம் யோசிச்சு பாக்க கூடாதா நீ ஒரு வருஷம் தானே உன் கல்யாணம் முடிஞ்ச பிறகு பண்ணிக்கிறேனே

ஏலேய் புரிஞ்சுக்கோலே என் மனசுக்கு எப்போ தோணுதோ அப்பதேன் கல்யாணம் பண்ணிக்க முடியும். .  உனக்காக குடும்பத்துக்காகனு அவசரபட்டு சரினு சொல்லி ஒரு பிள்ளையோட வாழ்க்கைய கெடுக்க விரும்பலல. . போ சந்தோசமா போய் நாளைக்கு பொண்ணை பாத்துட்டு வா. . ஜாம் ஜாம்னு கல்யாணத்தை முடிச்சுருவோம். . சரியா நிம்மதியா போய் தூங்கு போ. . ”

மறுநாள் காலை அனைவருமாய் சேரன்மகாதேவிக்கு இரு கார்களில் கிளம்பிச் சென்றனர். வீட்டை கண்டுபிடித்து செல்வதற்கு எந்த சிரமமும் இல்லாமல் பெண்ணின் வீட்டிலிருந்து ஒரு நபரை இவர்கள் வரும் வழியிலேயே நிறுத்தியிருக்க அவர் தன் இருசக்கர வாகனத்தில் முன்னே செல்ல இரு கார்களும் அவர்களை பின் தொடர்ந்தது.

பெண் வீட்டாரின் இந்த அக்கறையே தமிழ் குடும்பத்துக்கு திருப்தியாய் இருந்தது. வீட்டின் முன் கார் நிற்க அவர்களின் அளவு பெரிய வீடு இல்லை எனினும் மதிக்கத்தக்கதாகவே இருந்தது.

பெண்ணின் தாய் தந்தை மற்றும் சில உறவினர்கள் வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

பொதுவான நலவிசாரிப்புகளுக்குப் பின் பெண்ணை அழைத்து வருமாறு ஒரு பெண்மணி கூற தமிழ்வேணி அழைத்து வரப்பட்டாள்.

மாநிறம் சாந்தமான முகம் அடக்கமாய் அனைவருக்கும் வணக்கத்தை வைத்தவள் ஓரமாய் நின்று கொள்ள தமிழமுதன் சற்று நிமிர்ந்து பார்த்துவிட்டு பார்வையை திருப்பிக் கொண்டான்.

மாப்பிள்ளையை போட்டோ பார்த்தவுடனேயே எங்களுக்கு பிடிச்சு போச்சு. . நீங்க வீட்டுக்கு போயிட்டு பெரியவுககிட்ட கலந்து பேசிட்டு முடிவை சொல்லுங்க. . ”

அண்ணே என்ன இப்படி சொல்லுதீக பொண்ணை பிடிக்காமயா இத்தனை பேரோட வந்துருக்கோம். . ”,என பூம்பாவை பட்டென கேட்க அவரை அடக்கியவாறே வெற்றிச் செல்வி பேச ஆரம்பித்தார்.

எங்களுக்கும் பொண்ணை பிடிச்சுருக்கு எங்க வீட்டு பெரியவுகளுக்கும் சம்மதம் தேன். . ரொம்ப முக்கியமான கல்யாணம் அதனால தான் வர முடியல. . அதுமட்டுமில்லாம இப்படி அலங்காரம் பண்ணி இத்தனை பேர் முன்னாடி நிக்க வச்சப்பறம் பிடிக்கலனு சொல்றது நல்லாவா இருக்கும்.

எங்க தமிழு அப்போவே தெளிவா சொல்லிட்டான் போட்டோ அனுப்பி பிடிச்சா பார்க்க போலாம் இல்லைனா வேணாம்னு. . இனி வேணி எங்க வீட்டு பொண்ணு. . ”

என அவர் முடிக்க அனைவருக்கும் அப்படியாய் ஒரு சந்தோஷம். பார்க்காத ஒரு பெண்ணிற்காகவே இத்தனை யோசிக்கும் குடும்பம் தன் மருமகளை எப்படி கவனித்துக் கொள்ளும் என நிம்மதியாய் உணர்ந்தனர்.

ஏம்மா உனக்கு தமிழோட எதுவும் பேசணும்னா பேசிட்டு வா. . ”,என மலரொளி இயல்பாய் கூற வேணி வீட்டின் பாட்டி ஒருவர் சத்தமாகவே கேட்டார்.

இதென்ன இல்லாத பழக்கமாவில்ல இருக்கு. . கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு மாப்ளை பேசிக்கிறது. . ”

ஆச்சி காலம் மாறுதுல நாமளும் மாறிக்க வேண்டியதுதேன். . படிச்ச பிள்ளைக அவுக விருப்பம் எப்படியோ எதுவாயிருந்தாலும் பேசிக்குறது நல்லது அதனால தேன் சொன்னேன். . எய்யா தமிழு போய் பேசிட்டு வா. . ”

பின்னிருந்த ஒரு அறைக்கு தமிழ் செல்ல பின்னே சென்ற வேணியை உள்ளே அனுப்பிவிட்டு அக்கா முறை பெண்கள் இருவர் வாசலிலேயே நின்று கொண்டனர்.

ஹாய் என் பேரு தமிழமுதன். . என்னபத்தி எல்லாம் சொல்லிருப்பாக இருந்தாலும் உங்க விருப்பம் ரொம்ப முக்கியம். . உங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே. . ”

ம்ம் சம்மதம்தான். . ஒண்ணே ஒண்ணுமட்டும் கேக்கணும். . ”

என்ன சொல்லுங்க. . ”

இல்ல எனக்கு இந்த டீச்சர் வேலை ரொம்பவே இஷ்டம். . கல்யாணத்துக்கு அப்பறமும் வேலைக்கு போலாமா. . எங்க வீட்ல சொன்னதுக்கு உங்க வீட்ல எல்லாரும் என்ன சொல்றாகளோ அப்படி பண்ணுனு சொல்லிட்டாக. . ”

தாராளாமா போலாம். . எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. . என்னைதாண்டி இந்த விஷயத்துல வேற யாரும் எதுவும் சொல்லமட்டாக நிச்சயமாஅப்பறம் நானும் ஒரு விஷயம் பேசணும். . ”

சொல்லுங்க. . ”

நீ வீட்டுக்கு ஒரே பொண்ணா வளர்ந்துட்ட நாங்க கூட்டுகுடும்பம் உனக்கு அந்த வாழ்க்கை பழகுறதுக்கு டைம் ஆகலாம். . ஆனா கண்டிப்பா பிடிக்காம போகாது. அத்தனை பேருமே அம்புட்டு பாசமானவுக. . என்னால அவுக இல்லாத வாழ்க்கையை நினைச்சு பார்க்க கூடமுடியாத விஷயம். . அதனால. . ”

ஐயோ கவலபடாதீக. . நா தனிக்குடித்தனம் போணும்னு எல்லாம் சொல்ல மாட்டேன். . சொல்ல போனா உங்க குடும்பத்தை பத்தி கேட்டப்பறம்தேன் கல்யாணத்துக்கு சம்மதமே சொன்னேன். . என்னை நீங்க தாராளமா நம்பலாம். . ”

முகம் மலர சிரித்தவன்,”ரொம்ப தேங்க்ஸ் இந்த விஷயத்தை தான் நீங்க எப்படி எடுத்துப்பீங்களோனு ஒரு தயக்கம் இருந்தது. இப்போ ரொம்பவே திருப்தி. . அப்போ சீக்கிரமே நிச்சயத்துல சந்திக்கலாம். . ”என்று இலகுவாய் கூற முகச் சிவப்பை மறைக்க முயன்றவள் தோற்று தலைகுனிந்து கொண்டாள்.

வெளியே வந்தவர்களின் முகமே அனைவருக்கும் திருப்தியை கொடுக்க அடுத்தகட்ட வேலையாய் நிச்சியதேதியை குறித்தனர். பத்து நாட்களுக்குப் பின் வரும் முகூர்த்தத்தில் ஆடம்பரமாய் இல்லாமல் நெருங்கிய உறவுகளை கொண்டு வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்பத் தயாராக வெற்றிச்செல்வி மலரொளி பூம்பாவை மூவரும் சென்று வேணியிடம் பேசிவிட்டு கிளம்ப அறைவாசலில் நின்றவளிடம் சிறு தலையசைப்போடு விடைபெற்றான் தமிழமுதன்.

காரில் வரும்போது பூம்பாவை தமிழிடம்,”என்ன புது மாப்பிள்ள என் மருமவ என்ன சொல்றா?”

சித்தி நீங்களும் சித்தப்பாவும் சும்மாவே எல்லாரையும் ஓட்டுவீக இனி நா தான் முழுநேரமா. . ”

பின்ன நம்ம வீட்டோட மொத கல்யாணம் தடபுடலா இருக்க வேணாமா?”

சரிதேன். . ”

நா கேட்டதுக்கு இன்னும் பதில் வரல டே. . ”

ம்ம் விடமாட்டீகளே. . கல்லாணத்துக்கு அப்பறம் வேலைக்கு போலாமானு கேட்டா. . போனு சொன்னேன். . வேற ஒண்ணும் கேக்கல. . ”

பாரேன் இந்த ஒத்த வார்த்தையவா அம்புட்டு நேரமா பேசுனீக. . மலரக்கா நம்ம புள்ள புழைச்சுக்குவான். . ”

ஏட்டீ இவ ஒருத்தி கூறுகெட்டதனமா புள்ளைகிட்ட இதெல்லாம் பேசிகிட்டு வாய மூடிட்டு வாட்டீ. . ”

அட நீங்க என்ன புதுபொண்ணாட்டம் வெட்கபடுதீகபேசாம தமிழு கல்யாணத்தோட சேர்த்து உங்களுக்கும் அத்தானுக்கும் அம்பதாம் கல்யாணம் நடத்திருவோமா. . ”என்று கேட்க அனைவரும் சிரித்துவிட்டனர்.

வீட்டிற்கு வந்து அனைவருக்கும் விஷயத்தைகூறி அடுத்தடுத்த வேலைகளை ஆளுக்கொன்றாய் பிரித்துக் கொண்டனர்.

அடுத்துவந்த பத்து நாட்களும் பரபரப்பாய் நகர நாளை காலை நிச்சயதார்த்தம். இரவு அனைத்தையும் சரிபார்த்துவிட்டு வெற்றிச் செல்வி அறைக்குச் செல்ல எழில் அவரிடம்,

ம்மா நிச்சயம் தானே அதான் எல்லாரும் போறீகல. . நா கல்யாணத்துக்கு வந்தா போதாதா. . ”

எழிலு. . கடைசிநேரத்துல வந்து பிரச்சனை பண்ணாத. . முதல் விசேசம் குடும்பமா எல்லாரும் போனா தான் நல்லது. . இல்லைனா கண்ணு காது மூக்கு வச்சு ஆயிரம் பேசிருவாக ஊர்ல சொல்லிட்டேன். . ”

சரி சரி அடுக்கிட்டே போகாதீக. . பதினொரு மணிக்குதானே. . நா கடைக்குப் போய்ட்டு அங்கிருந்து வந்துரேன். . நீங்க எல்லாம் கிளம்பிடுங்க. . ”

ஓ சரி அப்போ நீ வரும்போது நம்ம பொழிலையும் கூட்டிட்டு வந்துரு. . ”

ஏது!!!!!”

ஏம்லே இப்படி கத்துத. . அவளையும் வர சொல்லிருந்தேன். . இப்போ நீ தென்காசி போறனா அப்படியே கூட்டிட்டு வர வேண்டியதுதான. . நா அவளுக்கு போன் போட்டு சொல்லிருதேன். . போய் படுயா காலையிலே வேலை தலைக்கு மேல இருக்கு. . ”

எழிலோ நொந்துவிட்டான். ”இந்த கடவுளுக்கு என்னை சோதிக்குறதுல அப்படி என்னதேன் சந்தோஷமோ. . நானே அவளைவிட்டு தள்ளி போணும்னு பாக்குறேன் தேவையில்லாம எதுக்கு இப்படி மாட்டிவிட்றானோ தெரியலையே. . ”

மறுநாள் பொழுது விடியும்போதே வீட்டில் அப்படியொரு ஆர்பரிப்பு. மகேந்திரநாதனும் பாக்கியமும் அவன் கடைக்கு கிளம்புவதற்குள் சரியான நேரத்திற்கு வந்து விடும்படி  ஆயிரம் முறை சொல்லி அனுப்பினர்.

கடைக்குச் சென்று வேலையை கவனித்தவனுக்கு நேரமாக ஆக மனதை ஏதோ குடைந்தெடுத்தது. இருந்தும் வேறு வழியில்லை என்பதால் மனதை திடப்படுத்தியவாறு பைக்கை கடையிலேயே விட்டுவிட்டு ஆட்டோவில் கிளம்பி அரசியின் வீட்டிற்குச் சென்றான்.

வாசலில் இறங்கியவன் உள்ளே குரல் கொடுக்க,”இதோ வந்துட்டேன் அமுதா. . ”

என்றவள் வேகமாய் வெளியே வந்தாள். அழகான சந்தனநிற சில்க் காட்டன் புடவையில் அளவான ஒப்பனையோடு வெளியே வந்தவளை பார்த்தவனுக்கு மூச்சடைக்க ஆரம்பித்திருந்தது. வேக வேகமாய் ஆழ்மூச்செடுத்தவன் அவளை நோக்கி தலையசைத்தவாறே கண்ணாடியை மாட்டிக் கொண்டு ஆட்டோவில் சென்று அமர்ந்தான்.

வீட்டை பூட்டிவிட்டு ஆட்டோவில் ஏறியவள்,ஏன்டா இப்படி விரைப்பாவே இருக்க. . கொஞ்சமாச்சும் சிரியேன். . பொண்ணு வீட்ல கேட்க போறாங்க மாப்பிள்ளையோட அண்ணணுக்கு லவ் பெயிலியரா அதான் இப்படி இருக்காரானு!”

ஒன்றும் பேசாமல் அவளை லேசாய் திரும்பிப் பார்த்தவன் மறுபடியும் வெளியே திரும்பிக் கொண்டான்.

ஹய்யோ!”,என தலையில் அடித்துக் கொண்டாள் பொழிலரசி.

பெண் வீட்டு வாசலை அடைந்து அவர்கள் இருவரும் உள்ளே செல்ல அங்கிருந்த ஆண்கள் அனைவருமாய் வந்து அவனிடம் கை கொடுத்து பவ்யமாய் பேசிச் செல்ல பொழிலரசியோ வாய் பிளக்காத குறையாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சற்றே ஒதுங்கிச் சென்று மலர் வெற்றிச் செல்வியோடு அமர்ந்து கொண்டாள். இருந்தும் ஆர்வத்தை அடக்க மாட்டாதவளாய் வெற்றிச்செல்வியிடம்,

அத்தே என்ன வயசுல பெரியவங்க எல்லாம் நம்ம அமுதன்ட்ட இப்படி பவ்யமா பேசுறாங்க!!”

ம்ம் அவன்தான் இங்க தொழில்வட்டத்துல எல்லாருக்கும் முக்கியமான ஆளு. . யாருக்கு என்ன உதவியானாலும் இவன் மூலமாதேன் ஆபீஸர் காதுக்கே போகும். தொழில்சங்க தேர்தல்லயே நிக்க சொல்லுதாக இவன்தேன் முடியாதுனு சொல்லிட்டு கிடக்கான். ”

அம்மாடி இதெல்லாம் தெரியாம அவன்ட்ட பேசிட்டு இருக்கேனா நா. . அதுவும் இன்னமும் எனக்கு அவன் பள்ளிகூடத்துல பார்த்த அமுதனாதான் தெரியுறான். இனி கொஞ்சம் மாத்திக்கனும். . ”

அதெல்லாம் ஒண்ணுமில்ல பொழிலு. . அவனும் உன்னை அப்போ பார்த்த பொழிலா தான் நினைக்கான் அதனால தான் நீ பேசுறதுக்கெல்லாம் ஒண்ணும் சொல்லாம போறான். . ”

அதற்குள் தட்டுமாற்றும் சம்பிரதாயம் ஆரம்பமாக அவர்களின் கவனம் அங்கு திரும்பியது. நல்லபடியாய் நிச்சயதார்த்தம் முடிந்து பெண் மாப்பிள்ளை மோதிரம் மாற்றி பெரியவர்கள் அனைவரும் ஆசீர்வாதம் புரிந்து சாப்பாட்டுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதுவரை கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்த அங்கயர்கண்ணி வேகமாய் எழிலிடம் சென்று,

அண்ணே இவுக தான் அவுகளா?”

ஏட்டீ வாய மூடிட்டு அமைதியா போவல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. . முதல்ல போ இங்கிருந்து. . ”

அண்ணே அண்ணே ப்ளீஸ் சொல்லேன். . ”

சின்ன கழுத வர வர உனக்கு ஏத்தம் சாஸ்தியா போச்சு ஆமா அவதேன் போ. . இங்கேரு அவகிட்ட எதையாவது கேட்டு வச்சனு தெரிஞ்சுது தோலை உரிச்சு தொங்க விட்டுருவேன் ஓடிப் போ. . ”

அங்கிருந்து நேராய் பொழில் அருகில் சென்றவள் மலரிடம் ஏதோ பேச அவளே பேச்சை ஆரம்பித்தாள்.

ஆமா அத்தே இவ தான் நம்ம கண்ணியா முகிலை எங்கே காணோம் அவங்களை மட்டும் தான் இன்னும் பார்க்கல. . ”

ம்ம் ஆமா பொழிலு. . அதோ நிக்கான் பாரு சிவப்பு சட்டை அவன்தேன் முகில். . ”

கண்ணி உன்னை குட்டி பாப்பாவா பார்த்தது. . நீ தான் வீட்லயே ரொம்ப சுட்டியாமே. . ”

ம்ம் ஆமா அண்ணி. . நீங்க எப்படியிருக்கீக. . ”

என்னது அண்ணியா??”

ஆமா எங்க அம்மாவ அத்தைனு தான கூப்புடுதீக அப்போ அண்ணி தானே. . ”

பாருடா சரி தான். . நா நல்லாயிருக்கேன். . ஆமா நீ நிறைய புக்ஸ் எல்லாம் படிப்பியாமே என்கிட்ட நிறைய புக்ஸ் இருக்கு அப்பறமா  தரேன். . ”

ஐயோ ஆமா நீங்க தான் ரைட்டர் அரசியாமே. . மறுநாளே போய் என் ப்ரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் சொன்னேன். இப்போ மத்த விஷயம் பேசினதுல அதை மறந்துட்டேன். உங்க கதையெல்லாம் நிறைய படிச்சுருக்கேன். . ரொம்ப நல்லா இருக்கு. . ”

அப்பாடா நீயாவது பாராட்டுறியே இதுக்காகவே இன்னும் நிறைய எழுதுறேன். . ”

அதற்குள் வெற்றிச்செல்வி அவளை அழைத்து வேணியிடம் அறிமுகம் செய்தார். இருவரும் கிட்டதட்ட சம வயதென்பதால் பேசியவுடன் நட்பாகி விட்டனர். மதிய உணவு முடிந்து அனைவருமாய் கிளம்பத் தயாராக எழில் அவசரமாய் அங்கிருந்த ஒருவரோடு பைக்கில் சென்றுவிட்டான்.

காலையிலிருந்து அவனை கண்டும் காணாதவராய் தன் வேலைகளை கவனித்து கொண்டிருந்த அதியனின் கண்ணிலிருந்து அவனின் இந்த பதட்டமும் தப்பவில்லை.