அங்கு பூஜையறைக்குள் நுழைந்தவனுக்கு கைக் கூப்பி முதுகு காட்டி அமர்ந்திருந்தவளைப் பார்த்து சற்று மனம் சஞ்லமாகியது.நேற்றைய தவிப்பில் அவள் இன்னும் இருக்கிறாள் என்று உணர்ந்தான்.
“இசை..”
“வந்துட்டேளா..வாங்கோ..இன்னைக்கு வரலட்சுமி விரதம் அதான் உங்களையும் நமஸ்காரம் பண்ணிக்கலாம்னு கூப்ட்டேன்.வாங்கோ முதல்ல சேவிச்சுருவோம்..”,என்று எழுந்தவள் அவனோடு சேர்ந்து கீழே விழிந்து நமஸ்காரம் செய்தாள்.
எழுந்தவன் அவளையேப் பார்த்திருக்க விபூதியை எடுத்து அவன் நெற்றியில் வைத்து விட்டவள் தனக்கு குங்குமத்தை வைத்து விடுமாறு கூறினாள்.
அவளது நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமத்தை வைத்து அவள் நீட்டிய தாலியின் திருமாங்கல்யத்திலும் குங்குமத்தை வைத்து அவன் விரலெடுத்த நேரம் அவளது விழிகள் கலங்கியது.
“சேவிக்கிறேன்,ஆசீர்வாதம் பண்ணுங்கோ”,என்றவள் அவனது காலில் விழுந்து நமஸ்கரிக்க அவள் கொடுத்த அட்சதையைப் போட்டு அவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தவன் அவளை எழுப்பி நிறுத்தினான்.
“திருப்தியா முடிஞ்சுது.”
“ம்ம்..காலையிலிருந்து எதுவும் சாப்பிடலை தான..வா சாப்டலாம்.”
“ம்ம்..”,என்றவள் அவனோடு வெளியே வர வழக்கம் போல் அவனது தட்டில் உணவை முடித்து விட்டு தனதறைக்குச் சென்றாள்.
அறைக்குள் கணவனைக் காணாதவள் எட்டிப் பார்க்க பால்கனியில் நின்றிருந்தவனின் கையில் சுருட்டு எரிந்து கொண்டிருந்தது.
“டென்ஷனா இருக்கேளா?”,என்றவளின் பார்வை சுருட்டில் பதிவதைக் கவனித்தவன் அதை காலில் போட்டு அழுத்திவிட்டு ஊஞ்சலில் அமர்ந்த வண்ணம் அவளை கைநீட்டி தன் புறம் அழைத்து ஊஞ்சலில் அமர்த்தினான்.
“என்னாச்சு எதுவும் பிரச்சனையா?”
“தேவையில்லாம கவலைப்படாத இசை..உன் முகம் சிரிப்போட இருந்தா தான் என்னால தெம்பாய் வெளியே போக முடியும்.”
“நான் நன்னாதான் இருக்கேன்..கண்டிப்பா என்னை சீக்கிரமே மாத்திப்பேன் நம்புங்கோ..”
“இத்தனை நாள் என் குடும்பத்துக்காகவே அதிக கவனமா இருந்தவன் நான்.இப்போ என்னேயே நம்பியிருக்குற என் பொண்டாட்டிக்காக பல மடங்கு கவனமா இருப்பேன் டி சரியா?”
“ம்ம்..”
“நேத்தோட விஷயம் வேற ஒண்ணு..”
“அதெல்..”
“கொஞ்சம் பொறுமையா கேளு இசை..”
“…”
“உன் அப்போவோட இறப்புக்கு காரணம் உன் மாமாவும் அத்தையும்..”
“!!!!!”
“இது எனக்கு மறுநாளே தெரியும் அதனால தான் என்னால உன்னை அங்கேயே விட்டு வர முடியல.அவங்களுக்கு எதிரான ஆதாரத்தை வைச்சு அவங்க இரண்டு பேரையும் ஜெயிலுக்கு அனுப்பினாலும் அவங்க பையனால கண்டிப்பா உனக்கு ஆபத்து இருக்குனு தோணிச்சு.
உன்னை தேவையில்லாத இக்கட்டில் நிறுத்த விருப்பமே இல்லாம தான் தாலி வாங்கிட்டு வர சொன்னேன்.
இங்க வந்து எல்லாம் சரியாகட்டும்னு அமைதியா இருந்தேன்.”
“…”
“நேத்து காலையிலேயே உன் மாமாவை நம்ம பசங்க தூக்கிட்டாங்க..”
“??!!!!”
“உனக்காகனு சொல்றதை விட உன் அப்பாவுக்காக இதை செஞ்சே ஆகணும்னு தோணிச்சு.அவன் காரணமே தெரியாம செத்துப் போறதில் எனக்கு விருப்பம் இல்ல அதனால தான் என்கிட்ட கொண்டு வரச் சொன்னேன்.”,என்றவனின் முகம் கோபத்தில் இறுகியது.
“இதை ராத்திரியே சொல்லலாம்னு வந்தேன் ஆனால் நீ கேட்குற மனநிலையில் இல்ல.இப்பவும் ஏன் சொல்றேன்னா தேவையில்லாத எந்த பிரச்சனைக்கும் நான் போறதில்ல இசை.
முன்னாடி தொழில் போட்டியினால உருவான எதிரிகள் இன்னும் அப்படியே இருக்காங்க.ஆனால் இதுவரையும் யாருக்கும் என்னை நெருங்குற தைரியம் வந்ததில்ல.உன் கண்ணு முன்னாடி இருக்குற உன் வீரா கிடையாது இந்த உலகத்துக்கான வீரேந்திர சேதுபதி.நான் சொல்றதெல்லாம் புரியுதா உனக்கு?”
“விடு இசை..”,என்றவன் ஆதரவாய் அவளது தோள் பற்ற அவள் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“தைரியமா இரு டி..நான் இருக்கேன் உனக்கு.”,என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் புன்னகைக்க முயன்று கன்னத்தில் இதழ் பதித்தாள்.
வீரேந்திரன் தனக்கு வந்த அழைப்பை ஏற்று பேச ஆரம்பிக்க மெதுவாய் பால்கனியின் முனைக்கு வந்தவள் கீழே கேட்ட பேச்சு சத்ததில் அங்கு கவனித்தாள்.
அவனது பாதுகாவலர்களும் வீட்டின் பாதுகாவலர்களுமாய் மரத்தடியில் நின்று கொண்டு உணவருந்திக் கொண்டிருந்தனர்.
கைப்பேசியை அணைத்து விட்டு அவளருகில் வந்தவன் அவளது பார்வை சென்ற திசையைப் பார்த்துவிட்டு,
“என்ன யோசனை மேடம்?”
“அந்த இடத்திலே ஒரு ஷெட் போட்டு ஃபேன் போட்டு விடலாமோனோ..பாவம் நின்னுன்டே சாப்பிடுறா..”
“அது சரி விட்டா பாய் தலகாணியெல்லாம் கொடுத்து படுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லுவ போலேயே?”
“அப்படியில்லை..யார் உழைக்குறதும் இந்த ஒரு வாய் சாப்பாட்டுக்காக தானே.அதிலேயும் இவா எல்லாம் தன் குடும்பத்தை விட நமக்காக தான் அதிக நேரம் உழைக்குறா.அதனால சொன்னேன்.”
“அப்பறம்?”
“அவாளுக்கு சாப்பாடு சம்பளம் தவற வேற என்ன பண்றேள்?”
“மெடிக்கல் செலவெல்லாம் நாம தான் பார்த்துக்குறோம்..இதைத் தவிர நியாயமான காரணத்துக்காக யார் எப்போ பணம் கேட்டாலும் அவங்களுக்கு கிடைக்கும்”
“ஒரு வேளை சாப்பாட்டை விட தேவையான விஷயம் படிப்பு இல்லையா..”
“நீ ஏன் எல்லாருக்காகவும் யோசிக்குற..என்னைப் பத்தி மட்டும் யோசி போதும்”,என்றவனின் குரலில் குழந்தையின் பிடிவாதம்.
அதைக் கண்டுகொண்டு சிரித்தவள் அவனைத் தன்புறம் திருப்பி வாகாய் அணைத்துக் கொண்டாள்.
“இப்போ நான் சொல்றதெல்லாம் யாருக்காகவாம்?”
“…”
“இதெல்லாம் உங்களுக்கு வரப் போற புண்ணியத்துக்காக தானே.நமக்காக நாம வேண்டுறதை விட அடுத்தவாளோட வேண்டுதலுக்கு பலன் அதிகம் தானே வீரா..”
“நீ இப்படியே பேசி என்னை உன் மேல முழு பைத்தியமா மாத்திடு”,என்றவனின் இறுக்கத்தில் இன்னுமாய் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.
“சரி போய் ரெடியாகு ஆபீஸ் போலாம்..”
“நானா??!!!நான் எதுக்கு?”
“முதலாளியம்மாவை பார்க்க எல்லாரும் ஆசையா இருக்காங்களாம் வா போலாம்..இன்னைக்கு மொத்தமும் என் கூட தான் இருக்க போற டி மாமி..”,இதைக் கேட்டதும் மலர்ந்து போன அவள் முகத்தை தனக்குள் நிறைத்துக் கொண்டவனாய் அவளோடு சேர்ந்து தயாராகச் சென்றான்.
அழகிய அடர் பிங்க் நிற பட்டுப்புடவையும் சற்று நீளமாய் ஒரு செயினும் காதில் சின்னதாய் ஜிமிக்கியும் கையில் வளையல்களுமாய் வந்தவளைப் பார்த்து புருவம் உயர்த்தியவனின் பார்வை தந்த அர்த்தம் உணர்ந்தவள் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள்.
“என்ன டி புதுசா வெட்கமெல்லாம் படுற”,என்றவனின் கேள்வி புரிந்தவளாய் அவன் வாயை வேகமாய் மூடியவளை கைபிடித்துத் திருப்பி தான் முன் நிறுத்தியவன் கைவளைவிற்குள் வைத்தபடியே,
“இது வேலைக்கு ஆகாது உன்னோட கொஞ்ச நேரம் கூட பேச முடியாது போல இருக்கு டி மாமி..வெட்கப்பட்டே மனுசனை கொல்லுற..”,என்றவன் அவளின் இதழ்களைச் சிறை செய்திருந்தான்.
ஒரு வழியாய் கிளம்பத் தயாராகி கீழே வந்தவர்கள் பெரியவர்களிடம் கூறிவிட்டு வெளியே வந்த நேரம்,