அத்தனை நேரம் அலுவலக அறைக்குள் இருந்தவன் சரியாய் வெளியே வர அப்படியே நின்று விட்டிருந்தாள் ஏழிசை.

“என்ன மாமி நைட் வரையும் இங்க வரவே மாட்டேனு நினைச்சேன்..இப்போ என்ன?”

“அம்மாவும் அத்தையும் ரெஸ்ட் எடுனு சொல்லி அனுப்பிட்டா..”,என்று பாவமாய் கூறியவளைப் பார்த்து சிரித்த வண்ணம் அருகே வந்தவனை அவசரமாய் தடுத்தாள்.

“தோ பாருங்கோ பக்கத்தில் வரக்கூடாது சொல்லிட்டேன்.”

“ஓ என்னையே மிரட்டுற அளவு போயாச்சா?”

“ஐயோ இல்ல இல்ல..ப்ளீஸ்..இப்போ தான் அத்தை தலைவாரி விட்டா கலைஞ்சுதுனா..நீங்க ரொம்ப படுத்துறேள்.”,என்றவளின் பாவமான முகத்தைப் பார்த்து இரக்கம் வராமல் இன்னும் ஆசை தான் அதிகரித்திருந்தது.

மேலும் முன்னேறியவனைக் கண்டவளுக்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாமல் திரும்பி நின்று கொண்டாள்.

இடையோடு அழுத்திப் பிடித்து தன்னருகில் நிறுத்தியவன் அவளது தோளில் முகம் புதைக்க தன்னிலை மறந்து போனாள் பெண்ணவள்.

“ஒழுங்கா அப்போ முடிக்காததை இப்போ முடிச்சு கொடுத்துட்டு போ மாமி..”

“ஏன் மாமினு சொல்றேள்”,என்றவளின் சிணுங்கல் அவனை இன்னுமாய் பித்துக் கொள்ளதான் செய்தது.

“அப்போ மல்கோவா மாமினு கூப்பிடுறேன்..”,என்றவன் அவளைத் தன்புறம் திருப்பி நிறுத்த அவளது முகம் மொத்தமும் இரத்த சிவப்பாய் சிவந்திருந்தது.

“ஓய் ஏன் டி இப்படி வெட்கப்படுற..”

“நீங்க பண்றதுக்கு எல்லாம் வெட்கப்படலைனா தான் கேள்வி கேட்கணும்.”,என்றவளைப் பார்த்து சிரித்தான்.

“எங்க அண்ணா டி கூட போட்டு பேச மாட்டார்னு உங்க தங்கை கதையெல்லாம் சொன்னா”,என்றவளைப் பார்த்து விழிகளில் குறும்பு மின்னியது அவனிடத்தில்.

“என் பொண்டாட்டியை தான் டி போட்டு கூப்பிட முடியும்..”

“…”

“பேச்சை மாத்தினதெல்லாம் போதும் நான் கேட்டது இன்னும் கிடைக்கல..”

“…”

“மௌனம் சம்மதம் அப்படிதான?”,என்றவன் அத்தனை நேரமும் பாதியில் விட்ட முத்தத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்க அவள் என்ன நினைத்தாளோ அதற்கு மேல் தாங்க மாட்டாதவளாய் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“என்னை எப்படி கூப்பிட்டியோ அப்படியே கூப்பிடு..”

“அதெல்லாம் ம்ஹும்..”,என்றவளின் இடையில் முரட்டுத் தனமாய் பதிந்த அவன் கரத்தால் அவளறியாமல் அவன் கேட்டதை கூறியிருந்தாள்.

“வீரா..”

அதன்பின் அங்கு எந்தவித பேச்சு வார்த்தைகளுக்கும் இடமில்லாமல் போய் விட்டிருந்தது.அந்த முரடனின் மென்மை மொத்தத்தையும் அவனவளுக்காய் கொட்டிக் கொடுக்க ஒவ்வொரு நொடியும் பலவித உணர்வுகளுக்குள் சிக்குண்டவளோ திசை தெரியாத காட்டில் தொலைந்து தான் போனாள்.

“வீரா..”,என்ற அவளின் ஒவ்வொரு அழைப்பும் அந்த அன்பு கணவனின் தாபத்தை அதிகரித்துக் கொண்டே இருந்தது.உலகம் மறந்து இருவர் மட்டுமாய் ஒருவரில் ஒருவர் புது உலகத்தைப் படைத்து விடலாம் என்ற எண்ணமோ அந்த அழகிய கூடல் முடிந்து பிரிய மனமின்றி பிரிந்தனர்.

தன்னருகில் இருந்தவளின் மொத்தமாய் கலைந்த கேசத்தைப் பார்த்தவன் அவளை ஏறிட சிவந்திருந்த முகத்தை மறைக்க அவனது வெற்று மார்பிலேயே தஞ்சம் புகுந்தாள்.

“இது லவ்வா இல்லை உரிமையால் நடந்த விஷயமானும் தெரியல..ஆனால் என்னோட இந்த ஜென்மம் முழுசும் உனக்காக தான் இசை..இந்த வீரேந்திரனோட சரிபாதி நீ.தேங்க்ஸ் பார் கம்மிங் இன் மை லைஃப்.”,என்றவனின் நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தத்தை பதித்தாள்.

லேசாய் முகம் சுனங்கியவளைப் பார்த்து பதறியவனாய்,”ஆர் யூ ஆல்ரைட்?”,என்று கேட்க மௌன தலையசைப்பு மட்டுமே பதிலாய் அவளிடத்தில்.

“நல்லா சாப்பிடு..இப்படி வெண்டைக்காய் மாதிரி இருந்தா..எப்படி சமாளிக்குறது”,என்றவனின் வாயை மூடியவளாய் இன்னும் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.

“சாயந்திரம் நமக்கு தான் ரிசெப்ஷன் நியாபகம் இருக்கா?”

“நேக்கு இருக்கு..நீங்க பண்ணின காரியத்தில் உங்களுக்கு தான் அது மறந்திருக்கும்னு நினைக்குறேன்.”,என்றவள் அவனை ஏறிட அவளது மூக்குத்தியை மென்மையாய் வருடினான்.

“இது உனக்கு கொள்ளை அழகு..”

“…”

“கொஞ்ச நேரம் தூங்கு டி..சாரி ஐ அம் நாட் இன் மை கன்ட்ரோல்..ரொம்ப டயர்டா இருக்கா..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல..”

“சரி தூங்கு நான் இங்க தான் இருப்பேன்..”,என்றவன் தன் தோளில் அவளை சாய்த்துக் கொள்ள அவள் சட்டென உறங்கியதிலேயே அவளது அசதி தெரிந்தது.

அவளுக்காகவே அடுத்த ஒரு மணி நேரமும் அசையாமல் படுத்திருந்தான்.லேசாய் விழிப்பு வந்ததும் கண்களை நன்றாகத் திறக்க முயன்றவளுக்கு அப்படியாய் ஒரு தூக்கம் வந்தது.

“தூக்கமா வருது ணா..”

“என்னது அண்ணாவா..அடிப்பாவி..”

“ஹைய்யோ அது எங்காத்து பாஷை..ஏன்னானுதான் சொல்லுவா ஆம்படையானை..”

“யாரோ கொஞ்ச நேரமா என் பேரை ஜெபம் போல சொன்னதா நியாபகம்..”

“கஷ்டம் கஷ்டம்..கூச்சமே இல்லை உங்களுக்கு..”

“உன்கிட்டே அது தேவையில்லை தான?உனக்கும் அது பொருந்தும்.”

“ஐயோ போதும் நேக்கு தூக்கம் மொத்தமா போயிடுத்து நான் போய் குளிச்சு தயாராகி கீழே போறேன்.விடுங்கோ..”

“நீ தான் டி என்னைப் பிடிச்சு வைச்சுருக்க..”,என்றவன் சிரிக்க அவன் நெற்றியில் லேசாய் தட்டியவள் அவனிடத்தில் இருந்த அவளது புடவையைக் கண்காட்ட அந்தக் கண்களின் வீச்சில் தன்னை விரும்பியே தொலைத்திருந்தான்.

ஏழிசையை தயார் செய்வதற்காக அழகுநிலைய பெண்கள் வந்திருக்க வீரேந்திரன் கீழே சென்றுவிட்டிருந்தான்.

இரண்டு மணி நேரம் கழித்து தன்னை கண்ணாடியில் பார்த்தவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.ஒப்பனைக்காக என்றுமே மெனக்கெடாதவளுக்கு இதெல்லாம் புதிதாய் இருந்தது.அந்தப் பெண்கள் கீழே சென்றவுடன் காவ்யாவும் திவ்யாவும் உமையாளோடு அவளறைக்குள் நுழைந்தனர்.

“வாவ் அண்ணி செம அழகா இருக்கீங்க..”

“ஹே ஏழிசை..”என்றபடி காவ்யா தன் கண் மையை எடுத்து அவளது நெற்றி ஓரமாய் பொட்டு வைத்தாள்.

கொண்டு வந்த நகைப் பெட்டிகளைத் திறந்து ஒவ்வொன்றாய் அவளுக்கு அணிவிக்க ஆரம்பிக்க உமையாளுக்கோ இத்தனை நாட்களில் இந்த நகையெல்லாம் தான் பார்த்தது கூட இல்லையே என்று தோன்றியது.

“இதெல்லாம் மூத்த மருமகளுக்கான நகைகள் ஏழிசை.பரம்பரை பரம்பரையா பயன்படுத்துறதாம்.”

அனைத்தையும் அணிவித்து முடித்து ஏழிசையின் தலையில் சிகப்பு நிற பட்டுத் துணியைஅணிவித்து விட்டு நகர்ந்தாள் காவ்யா.

“நீ இங்கேயே இரு அண்ணா வந்து உன்னை கீழே அழைச்சுட்டு வருவார்.”,என்றபடி பெண்கள் அணி கிளம்பிச் சென்றனர்.

சில நிமிடங்களில் வீரேந்திரன் உள் நுழைய இருவருக்குமே தன் இணையை பார்த்த விழிகளை நகர்த்த முடியவில்லை.

அழகிய கருப்பு கோட் சூட்டில் கம்பீரமாய் நின்றவனைப் பார்த்தவள் மொத்தத்தையும் மறந்து விட்டிருந்தாள்.

அவனோ,அழகிய இரத்த சிவப்பு நிறப் பட்டுப்புடவையில் வைர நகைகள் நிறைத்த வண்ணம் தேவலோகப் பெண்ணாகவே தன் முன் நிற்பவளைப் பார்த்து பேசக் கூடத் தோன்றாமல் நின்றான்.

தன்னெதிரில் நின்றவனை மொத்தமாய் விழிகளுக்குள் நிரப்பிக் கொண்டவள் அவனது கோட்டின் பட்டனை மாட்டி விட்ட படியே அவனை ஏறிட்டாள்.

“ரொம்ப பொருத்தமா இருக்கு உங்களுக்கு.”

“அப்படியா?”

“ஆமா ஏன்?”,என்றவளைக் கண்ணாடியின் புறம் திருப்பியவன் எனக்கு உண்மையாவே எது பொருத்தமா இருக்கு..இந்த ட்ரஸா இல்லை என் பக்கத்தில் நிக்குறாளே இவளா?”,என்றவனின் கேள்வியில் வெட்கம் வந்து அவளை மேலும் அழகூட்டியது.

“இசை..”

“ம்ம்..”,கண்ணாடியில் தங்களின் பிம்பத்தைப் பார்த்த வண்ணம் இருவருமாய் பேசிக் கொண்டிருந்தனர்.

“ஒண்ணு சொல்றேன்..திருப்பி சொல்லு..”

“என்னது?”

“ஐ லவ் யூ மாமி..”,என்றவன் அவளது இடை சுற்றி வளைத்து கன்னத்தில் இதழ் பதித்தான்.

“…”

“சொல்லு டி..”

“ஐ..ஐ லவ் யூ டூ..”,என்றவளை முறைத்தவனை புரியாமல் பார்த்தாள்.

“ஒழுங்கா சொல்லு டி..”

“சரியா தானே சொன்னேன்..”

“என் பேரை சொல்லவே இல்ல..”

“ஐயோ தெரியாம சொல்லிட்டேன்..அதுக்காக எப்பவுமே அதையே கேட்பேளா..”

“சொல்லுனு சொன்னேன்..”

“…”

“ம்ம்..”,என்றவன் இன்னுமாய் அவளை இறுக்க,

“சரியான அடம்..நான்..ராத்திரி சொல்றேன்..”,என்றவளுக்கு குரலே எழவில்லை.

“ஏன் டி அப்படி..”

“பகவானே..ரொம்ப ஒரு மாதிரி இருக்கு..ப்ளீஸ் நான் தான் சொல்றேன்னு சொல்றேன்ல..”

அதற்குள் கதவு தட்டப்படும் ஓசையில் நகர்ந்தவனுக்கு முகத்தில் சிடுசிடுப்பு வந்திருக்க யார் என்று தெரியாமல் எதுவும் திட்டிவிட போகிறானே என்று அவசரமாய் அவனை லேசாய் அணைத்தவள்,

“ஐ லவ் யூ வீரா..”,என்று கூறி கழுத்து வளைவில் லேசாய் இதழ் பதித்து தள்ளி நின்றாள்.

அவனின் மலர்ந்த முகத்தைப் பார்த்தவளுக்கு நிம்மதியாய் இருந்தது.”தேங்க்ஸ் பொண்டாட்டி..”,என்றவன் கதவைத் திறக்க காவ்யாவும் உமையாளும் நின்றிருந்தனர்.

மணமக்களை அழைத்துக் கொண்டு இருவரருமாய் கீழேயிறங்க அவர்களை வரவேற்பதற்காக சொந்தங்கள் அனைவரும் படிகளின் கீழே நின்றிருந்தனர்.

பர்வதத்திற்கும் இராஜராஜனுக்கும் லேசாய் கண்கள் கலங்கி விட்டிருந்தது.சிறியவர்களுக்கு தன் அண்ணனை இப்படி பார்த்ததில் அவ்வளவு மகிழ்ச்சி..ராகவ் வேகமாய் தன் மொபைலை எடுத்து அவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

“அண்ணி சே சீஸ்..”,என்றவன் செல்பிக்காக. திரும்பி நிற்க அனைவரும் புகைப்படத்தில் கவனம் வைத்திருக்க வீரேந்திரன் இயல்பாய் ஏழிசையின் தோளில் கைப்போட்டுக் கொண்டான்.

அந்த மிகப்பெரும் ஸ்டார் ஹோட்டலை அடைந்தவர்களை பௌன்ஸர்கள் சுற்றி நிற்க அவர்களைப் பார்த்து ஏழிசை அரண்டே போனாள்.

தலை குனிந்த வண்ணம் தன்னவனோடு நடக்க ஆரம்பிக்க அவளது கரத்தை தன் கரத்தில் கோர்த்துக் கொண்டவன் கம்பீரமாய் மேடையை நோக்கி முன்னேறினான்.

பலத்த போலீஸ் பாதுகாப்பாடு பத்திரிக்கை மீடியா என கண்கூசும் அளவிற்கான ப்ளஷ் ஒளியில் மலைத்துப் போனாள் ஏழிசை.

அவனின் உயரம் தெரியும் எனினும் இப்போது கண்முன் நடப்பதெல்லாம் அவனை ஏதோ மகாராஜாவைப் போன்று தோற்றுவித்தது.அவனுக்கும் தனக்குமான தூரத்தை நினைத்தவளுக்கு மனம் சோர்ந்து போனது.தேவையே இல்லாமல் உமையாள் பேசியது கூட அந்த நொடி நியாபகம் வந்து சென்றது.

“என்னாச்சு இசை..முடியலையா?”

எப்படி தன்னை கவனித்தான் என்று நினைத்தவளுக்கு சற்றே ஆறுதலாய் இருந்தது.

“அதெல்லாம் இல்ல..ஏதோ யோசனை”,என்றவள் அதன் பின் மறந்தும் புன்னகையை குறைக்கவில்லை.

தொழில் வட்டார மக்கள்,அரசியல் சினிமா அதை தவிர்த்து சொந்த பந்தங்கள் என இரண்டு நாள் ஏற்பாட்டிற்கே இத்தனை பேர் எனில் எல்லாம் சரியாக நடந்திருந்தால் இன்னும் பலமடங்கு பிரம்மாண்டம் அரங்கேறியிருக்கும் என்பது தெளிவாய் புரிந்தது ஏழிசைக்கு.