“கல்லில் பிறக்கும், கதிர் மணி; காதலி சொல்லில் பிறக்கும், உயர் மதம் – மெல்லென் அருளில் பிறக்கும், அற நெறி, எல்லாம் பொருளில் பிறந்துவிடும்
ஒளியுள்ள உயர்ந்த மணிகள் எல்லாம் மலையில் உண்டாகும். காதலியின் இனிய மொழிகள் மிகுந்த களிப்பை ஏற்படுத்தும், மென்மையான அருளுள்ளம் கொண்டவர்களிடத்து அறநெறி தோன்றும். இவை எல்லா இன்பமும் செல்வத்தினால் உண்டாகிவிடும்”
இனி தவறியும் அவன் கண்ணில் படக்கூடாது எனக் கோடி முறையாய் வேண்டிவிட்டு அடுத்த நாள் காலை அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றாள் அபூர்வா.
ஏனோ அத்தனைக் கண்களும் தன்னையேப் பார்ப்பதைப் போன்றதொருப் பிரமை.விறுவிறுவென தனதிருக்கைக்குச் சென்று அமர்ந்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
தாய் மடித் தேடும் குழந்தையென மனம் பரபரத்தது.பேருக்கு கணிணியை உயிர்பித்துவிட்டு அதன் திரையையே வெறித்திருந்தாள்.சிறிது நிமிடத்தில் தன் பின் யாரோ நிற்பதை உணர்ந்தவளாய் பதட்டமாய் திரும்ப புன்னகை முகத்தோடு ராஜீவ் தான் நின்றிருந்தான்.
கண்களை மெதுவாய் மூடித் திறந்துத் தன்னை ஆசுவாசப்படு.தியவளாய் அவனைப் பார்த்துச் சிரித்து வைக்க அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்த வண்ணம் பேச ஆரம்பித்தான் ராஜீவ்.
“ஹாய் டா…ரொம்ப தேங்க்ஸ் அன்னைக்குப் பண்ணின உதவிக்கு…சரியா பேசக் கூட முடில அப்பறம்…”
“ஐயோ அதெல்லாம் பரவால்ல ணா…அப்பறம்…”
“என்னாச்சு அபூர்வா?”
“இல்ல…என்னை வேலையை விட்டு எடுத்துட்டாரா?அதைச் சொல்ல தான் வந்தீங்களா?”
“என்ன????”
“…….”
“ஓ நேத்து நடந்ததைச் சொல்றியா…ப்ரஜி சொன்னான்…ஆனாலும் அதைப் பெருசா எல்லாம் எடுத்துக்கல அவன்…நீ ஏன் இவ்ளோ பயந்து போயிருக்க?”
“இல்ல ணா…அன்னைக்குப் பேசினது கூட யாருனு தெரியாம நடந்த விஷயம் தான்..ஆனா நேத்து அவர் சாரி கேட்கச் சொல்லியும் முடியாதுனு சொல்லிட்டு வந்துட்டேன்..
ஆனால் உண்மையிலேயே நான் சொன்னதுல எந்தத் தப்பும் இல்ல தான?”
“எனக்குத் தோணுறதைச் சொல்றேன்…உன்னை மாதிரி ஒரு ஆளை இந்தக் காலத்துலப் பாக்குறது ரொம்ப ரேர்…ஒரு வேளை அவன் அமைதியா இருக்குறதுக்குக் காரணம் அதுவாக் கூட இருக்கலாம்..
தேவையில்லாம யோசிக்காத…நடந்த எதுவுமே நம்ம மூணு பேரைத் தாண்டி யாருக்கும் தெரியாது..நீ எப்பவும் போல இரு..
அப்பறம் இன்னொன்னு சொல்லவா..எங்க இரண்டு பேருக்குமான விஷயங்கள் எங்களைத் தாண்டி வெளிவந்தது இப்போ உன்கிட்ட மட்டும் தான்..அதை நீயும் உனக்குள்ளேயே வச்சுகிட்ட பாரு..இந்த ஒரு காரணத்துக்காகவே எப்பவும் நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்..புரிஞ்சுதா?”
“தேங்க்ஸ் ணா…”,என்றவளுக்கு அத்தனை நேரம் அடக்கியிருந்த கண்ணீர் மடி தொட்டிருந்தது.
“அட என்ன இது குழந்தை மாதிரி…யாரும் பார்த்தா தப்பா நினைச்சுக்கப் போறாங்க…சரி நீ வேலையைப் பாரு..அப்பறமா பேசலாம்..”என்றவன் சிநேகமாய் தோள் தட்டிச் சென்றான்.
ராஜீவால் பின் மதிய நேரத்தில் தான் ப்ரஜிஷைச் சந்திக்க முடிந்தது.ஏதோ ஒரு வேலையில் தன்னையேத் தொலைத்த வண்ணம் கணிணித் திரையை வெறித்திருந்தான்.
“பிஸியா டா அப்பறம் வரவா??”
“அதெல்லாம் இல்ல..முடிச்சுட்டேன்…உட்காரு..ஏஞ்சல் எப்படி இருக்கா?”
“ம்ம் நல்லாயிருக்கா..சீவ் ஸர்ஜன் வரும்போது அடுத்து மீட் பண்ண போணும்..”
“ம்ம்…”
“ஆனா அதை விட நல்ல அதிசயமெல்லாம் நடக்குற மாதிரி தெரியுதே?”
“ம்ம் உன் தங்கச்சிங்கிறதால அமைதியா இருக்கேன்னு சொல்லணும்..”
“ஆமா ஆமா..உண்மையாவே நல்ல பொண்ணு டா…அன்னைக்கு ஏதோ அவசரத்துக்கு அவகிட்ட உதவி கேட்டுட்டேன்..அப்பறம் தான் தோணிச்சு..இவ பாட்டுக்கு யார் கிட்டேயும் எதுவும் சொல்லிறக் கூடாதேனு…”
“ம்ம் ..நேத்து நான் யார்னு சொன்ன அப்பறமாவது சாரி சொல்லுவானு பார்த்தா அவ பண்ணதுல தப்பே இல்லனு வாதாடுறா…பார்க்கலாம் எத்தனை நாளைக்கு சாரி கேட்காம இருப்பானு!”
“ப்ரஜி டேய்??!”
“நான் கேட்டு ஒரு விஷயம் நடக்காம இருக்கலாமா சொல்லு??பயப்படாத ரிவென்ஞ்ச் எல்லாம் இல்ல…ஆனா அவ கண்டிப்பா எதாவது ஒரு விஷயத்துக்காக சாரி கேட்டேத் தீருவா என்கிட்ட..”
“…..”
“நீ எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற ராஜீவ்..நான் தான் சொல்லிட்டனே…அவ மேல கோவமோ பழி வாங்குற எண்ணமோ எனக்கு இல்ல…பட் ஐ நீட் அ சாரி ப்ரம் ஹெர்..அதுவும் ஹார்ட்ஃபெல்ட்டா..சிம்பிள்..”
“என்னவோ போ..சில நேரத்துல நீ ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கனு தோணுது…பட் அவளை எந்த விதத்திலேயும் கஷ்டப் படுத்தணும்னு நினைக்காத…அவ்வளவு தான் சொல்லுவேன்..”
“நாட் அட் ஆல்..சொல்லப் போனா அவளுக்கு மிகப் பெரிய உதவி தான் செய்யப் போறேன்..கோயிங் டு சேஞ்ச் ஹெர் அஸ் மை செகரெட்ரி..நிஷா இன்னும் பத்து நாள்ல மெட்டர்னிட்டி லீவ்ல போறாங்க…சோ அந்த இடத்துக்கு உன் தங்கச்சி தான் வரப் போறா..”
“உன்கிட்ட வாதாடி என்னால ஜெயிக்க முடியாது..பட் ஒண்ணு மட்டும் நியாபகம் வச்சுக்கோ அவளைத் தங்கச்சினு சொல்றது சும்மா வாய் வார்த்தையில்ல..எனக்காக அவ செஞ்சது சின்ன உதவினாலும்…என்னைப் பொறுத்த வரை ரொம்பவே பெருசு தான்…”
“அட டா மச்சி ரிலாக்ஸ்…நீயும் இங்க தான் இருக்கப் போற…உன் தங்கச்சியைப் பத்திரமா பார்த்துக்கோ ஓகே…சரி வா தலை வலிக்குது காபி சாப்ட்டு வரலாம்…”,என்றபடி தன்மீது கைப்போட்டுக் கொண்டு வருபவனை இயலாமையோடுப் பார்த்திருந்தான் ராஜீவ்.
அடுத்த இரண்டு நாட்களில் தனக்கு வந்த மின்னஞ்சலை எத்தனை முறை வெறித்துப் பார்த்திருப்பாள் என்பதை அவளே அறிந்திருக்க மாட்டாள்.
ராஜீவிடமிருந்து தான் வந்திருந்தது.எவன் ஒருவனைப் பார்க்கக் கூடாது பேசக் கூடாது என்று ஓடி ஒழிகிறாளோ அவனருகிலேயே வேலைப் பார்க்க வேண்டும் என்றால்..இதை எந்த விதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூடப் புரியவில்லை அவளுக்கு.
இதில் விஷயமறிந்து அவளின் குழு நபர்கள் வேறு வாழ்த்துக் கூறுகிறோம் என்றப் பெயரில் அவளின் பயத்தை இன்னும் அதிகரித்திருந்தனர்.
“ஹே அபூர்வா…செம லக்கி தான் நீ..வந்து இரண்டு மாசத்துலயே இப்படி நல்ல பேரு எடுத்துருக்கியே…”
“ராஜீவ் சார் எல்லாம் அத்தனை சீக்கிரம் ஒருத்தருக்கு நல்ல வேலை செய்றீங்கனு பாராட்டு கொடுத்துற மாட்டாரு தெரியுமா?”
“அதுமட்டுமா…ராஜீவ் சார் கிட்ட சஜஷன் கேட்காம மேனேஜ்மெண்ட்ல கண்டிப்பா இந்த முடிவு எடுத்துருக்க மாட்டாங்க…வாழ்த்துக்கள்..”
இவையனைத்தையும் கேட்டப் பின்பு இருந்த கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் தொலைத்திருந்தாள் அபூர்வா.அனைவரிடமும் பெயருக்குச் சிரித்துவிட்டு ராஜீவைப் பார்க்கச் சென்றாள்.அவளை எதிர்பார்த்திருந்தவனுக்கோ என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை.
“வா டா…”
“அண்ணா…என்ன திடீர்னு…”
“ஓ…மெயில் பத்தி கேட்குறியா..பெருசா ஒண்ணுமில்ல அபூர்வா…ஆல்ரெடி அந்தப் போஸ்ட்ல இருக்குறவங்க மெட்டர்னிட்டி லீவ்ல போகப் போறாங்க…சோ மேனேஜ்மெண்ட்ல என் ரெபெரன்ஸ் கேட்டாங்க…
உனக்கு அந்த வேலை யூஸ் ஆகும்னு நினைச்சேன் டா…சேலரி ஸ்கேல் கூட மாறும்..உனக்கு ஹெல்ப் புல்லா இருக்குமேனு தான்…”
“ஓ….”
“முதல்ல உக்காரு..என்ன யோசனை?”
“இல்ல ணா…அது..என்னால கோப் அப் பண்ண முடியுமானு கொஞ்சம் பயமா இருக்கு…”
“என்ன இப்படி கேட்குற…நம்மளால முடியாதுனா வேற யாரால முடியும் சொல்லு…நான் இருக்கேன்…எப்போ எந்த உதவினாலும் என்கிட்ட கேட்டுக்கோ அப்பறம் என்ன?”
“அதெல்லாமே புரியுது..ஆனாலும்….எம் டியை நினைச்சா…”
“ப்ரஜியால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது..அன்னைக்கு நடந்ததை எல்லாம் அவன் அப்போவே மறந்துட்டான்…ட்ரஸ்ட் மீ…”
“ம்ம் சரி ணா…”,என்றவள் பெயருக்குச் சிரித்து நகர்ந்தாள்.அவளைப் பார்த்தவனுக்குத் தான் கூறிய போலி ஆறுதலை நினைத்து அவன் மீதே கோபம் எழுந்தது.
நிச்சயமாய் ப்ரஜீஷிற்கு ஈடு கொடுப்பது என்பது பல நேரங்களில் அவனுக்கே சவாலான விஷயம்.அதுமட்டுமின்றி எப்போது எப்படி நடந்து கொள்வான் என்று கணிப்பது மிகவும் கடினம்.
இதில் எப்படி இந்தச் சிறு பெண்ணால் தாக்குப் பிடிக்க முடியும் என்று எத்தனையோ முறைத் தனக்குள்ளேயே புலம்பித் தீர்த்திருந்தான்.
எனினும் முதலாளியாய் அவன் எடுத்த முடிவை மாற்றும் திறன் யாருக்கும் இல்லை என்பதால் அபூர்வாவிற்கு ஆறுதல் கூறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பது தான் நிதர்சனம் எனப்பட்டது ராஜீவீற்கு.