பறை நன்று, பண் அமையா யாழின் நிறை நின்ற
பெண் நன்று, பீடு இலா மாந்தரின்; பண் அழிந்து
ஆர்தலின் நன்று, பசித்தல்; பசைந்தாரின்
தீர்தலின் தீப் புகுதல் நன்று.

 

பண் அமையாத யாழிசையை விட பேரோசை கொண்ட பறையே மேலானது. பெருந்தன்மை இல்லாத ஆண்மகனைவிட கற்புடன் திகழும் பெண்கள் உயர்வானவர். பதங்கெட்டு சுவையற்ற உணவை உண்ணுவதைவிட பசியுடன் இருத்தல் நல்லது. தன்னை விரும்பிய கணவனைப் பிரிந்து உயிர்வாழும் கொடுமையை விட தீயில் விழுந்து உயிர் விடுதல் நன்று.”

தனதறைக்கு வந்தவளுக்கோ கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டேயிருந்தது.தனது உதட்டை அழுந்த அழுந்தத் துடைத்துக் கொண்டே இருந்தவள் தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவிக் கொண்டே இருந்தாள்.

யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டும் கதவைத் திறக்காமல் கட்டிலில் படுத்தேக் கிடந்தாள்.ஒரு மணி நேரம் கடந்த நிலையிலும் உள்ளிருந்து எந்தச் சத்தமும் வராமல் போக ப்ரஜீஷிடம் சென்று பணிப்பெண் பதட்டமாய் கூறினாள்.

அவன் தன்னிடமிருந்த சாவிக் கொத்தைக் கொண்டு கதவைத் திறக்கும் படி கூறியவன் அவனும் பின்னேச் சென்றான்.கதவுத் திறக்கும் சத்தத்தில் பதட்டமாய் எழுந்தவள் பணிப்பெண்ணைப் பார்த்துச் சிநேகப் புன்னகை உதிர்க்க பின்னே வந்தவனைக் கண்டு அந்தச் சிரிப்பு அப்படியே காணாமல் போயிருந்தது.

அவனின் தலையசைப்பில் வேலையாள் வெளியே சென்ற நொடி கதவை அறைந்துச் சாத்தியிருந்தான் ப்ரஜீஷ்.

“என்னப் பிரச்சனை உனக்கு…தேவையில்லாம சீன் க்ரியேட் பண்ணிட்டு இருக்க?”

“வாட்??தேவையில்லாம சீன் க்ரியேட் பண்றேனா?இப்போ கூட நீங்க பண்ணத் தப்பு உங்களுக்குப் புரியல இல்ல?!”

“சினிமேடிக் டயலாக்ஸ் எல்லாம் வேணாம்..இட்ஸ் ஜஸ்ட் அ கிஸ்…”

“உங்களுக்கு அது ஜஸ்ட்…பட் எனக்கு அப்படியில்ல..”

“ஓ காட்…என்னை அறியாம எதோ வேகத்துல நடந்துருச்சு..அதுக்கு நீ என்னை அடிச்சுருக்க..அந்தக் கோபமே எனக்கு குறையலை…இதுல இப்படி கதவைப் பூட்டிகிட்டு உட்காந்து….”

“உங்களை அறியாமையா??ஏன் போதையில இருந்தீங்களா??அப்படி போதையில இருந்தாலும் பக்கத்துல இருக்குற பொண்ணு யாருனு கூட யோசிக்காம இப்படி பண்ணிட முடியுமா?”

“இங்க பாரு யூ ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்ஸ்…”

“நீங்க உங்க லிமிட்டை க்ராஸ் பண்ணதால தான் இப்போ நான் இவ்ளோ பேச வேண்டியதா இருக்கு…”

“ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்…உன்னோட பேசி என்னால ஜெயிக்க முடியாது…டேம்மிட்…”,என்றவன் கதவைத் திறந்து வெளியேச் சென்றிருந்தான்.அங்கிருந்து வெளியே வந்தவனுக்குக் கோபம் ஆத்திரம் இயலாமை என எல்லாமுமாய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

இதுவரையில் எந்தப் பெண்ணும் கூறாத அத்தனை வார்த்தைகளும் அவள் கூறியிருந்தாள். தன் முன் குழைந்து அடங்கிப் போகும் பெண்களையேப் பார்த்துப் பழகியவனுக்கு இவள்  எல்லா விதத்திலும் விசித்தரமான அனுபவங்களையே கொடுத்துக் கொண்டிருந்தாள்.

இருந்தக் கடுப்பில் ராஜீவிற்கு அழைத்துக் கண்மன் தெரியாமல் கத்தியவன் உடனடியாய் லேப்டாப் தன் கைகளில் வந்தே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தான்.

அவனது பேச்சிலேயே ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்தவனாய் அபூர்வாவை அழைத்திருந்தான் ராஜீவ்.

“ஹலோ எப்படியிருக்க டா?”

“நல்லாயிருக்கேன் ணா…நீங்க எப்படி இருக்கீங்க?”

“எனக்கென்ன டா நல்லாயிருக்கேன்…”

“என்ன விஷயம் ணா திடீர்னு கால் பண்ணிருக்கீங்க?”

“இல்ல சும்மா தான்…”

“பரவால்ல சொல்லுங்க…”

“அங்க எல்லாம் ஓகே தான?ப்ரஜி எப்படியிருக்கான்?”

“இதை நீங்க அவர்கிட்டேயேக் கேட்டுருக்கலாமே?”

“இல்ல எதோ கோவத்துல இருக்கான்…உடனே லேப்டாப் வேணும்னு கேட்குறான் அதான்…”

“இங்க எதுவும் பிரச்சனை இல்லை…மே பி சும்மாவே இருக்குறது கஷ்டமா இருக்கோ என்னவோ?”

“ம்ம்ம்…”

“சரிண்ணா வேற எதுவும் இல்லைனா அப்பறமா பேசவா…கை கொஞ்சம் வலியா இருக்கு..”

“ஐயோ சரி டா உடம்பைப் பார்த்துக்கோ…”,அழைப்பைத் துண்டித்தவளுக்குக் கஷ்டமாகி விட்டது.ஆனாலும் அதற்கு மேல் பேசினால் எங்கே அனைத்தையும் உளறி விடுவோமோ என்ற எண்ணத்தில் தான் பேச்சை நிறுத்தியிருந்தாள்.

அது வேறு ப்ரஜீஷின் மீது இன்னும் கோபத்தை அதிகரித்திருந்தது.இன்று இரண்டில் ஒன்று பாத்துவிடும் எண்ணத்தில் கோபமாய் அவனைத் தேடிச் சென்றாள்.

வெளியே நீச்சல் குளத்தின் அருகில் சிடு சிடு முகத்தோடு அமர்ந்திருந்தவனின் முன் சென்று நின்றவளை என்னவென்பதாய் அவன் பார்க்க,

“இப்போ எதுக்குத் தேவையில்லாம ராஜீவ் அண்ணாகிட்ட கோபப்பட்டீங்க…தப்பு உங்களோடது…”

“அவனுக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும் அதெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல…”

“இப்படியே நீங்க நினைக்குறதையெல்லாம் பண்ணிட்டு இருப்பீங்க..யாரும் உங்களை எதுவும் கேட்கக் கூடாது அப்படிதான?”

“அஃப்கோரௌஸ் யெஸ்…”

“நல்லது இப்படியே பண்ணிட்டு இருங்க இருக்குற ஒருத்தரும் ஒரு கட்டத்துல உங்களைத் தண்ணி தெளிச்சு விட்டுருவாரு..”

“தேங்க்ஸ் ஃபார் யுவர் அட்வைஸ்…”

இதெல்லாம் திருந்தாது எனும் ரீதியில் அவள் முறைத்து நகர அத்தனைக் கடுப்பையும் மீறிச் சிரித்திருந்தான் ப்ரஜீஷ்.இரண்டடி நகர்ந்திருந்தவள் மீண்டுமாய் அவனை முறைக்க,

“இதுவரை ராஜீவ் கூட என்கிட்ட இப்படி ஆர்க்யூ பண்ணதில்ல..நீ என்ன சண்டக் கோழி மாதிரி பதிலுக்குப் பதில் பேசிட்டு இருக்க….அதுவும் நீ என் எம்ப்ளாயினு நீயே சொன்னா கூட நான் மறந்துருவேன்னு தோணுது..”

அவன் கூறியதில் இருந்த உண்மை அவளுக்குமே உறைத்திருந்தது.சற்றே அமைதியடைந்தவளாய் எங்கோ வெறித்து நிற்க அவனேப் பேச்சைத் தொடர்ந்தான்.

“சீ..நடந்தது ஒரு தற்செலான விஷயம்…வேற எந்த இன்டென்ஷனும் எனக்கு உன்கிட்ட இல்ல..சொல்லப் போனா இந்த இரண்டு மூணு நாள்ல ராஜீவ்க்கு அப்பறம் ஒரு க்ளோஸ்னெஸ் உன்கிட்ட நான் பீல் பண்ணேன்..

எதையும் யாரையும் ஜட்ஜ் பண்ணாம நினைச்சதைப் பேசி இப்படியெல்லாம் என் சர்க்கிள்ல யாரும் இருந்ததில்ல…இந்த மாதிரி நிறைய விஷயங்கள் அப்படி ஒண்ணு நடக்க காரணமா இருந்துருக்கலாம்…

அண்ட் ஐ அஷுவர் யூ…இனி இப்படி நடக்காது…அவ்வளவு கன்ட்ரோல் இழக்குற அளவுக்கு நீயும் உலக அழகியும் கிடையாது…புரியுதா?”

“ம்ம்ம்???”,என்றவள் மீண்டுமாய் அவனை முறைக்க அவளது உயரத்திற்கு அவள் நின்ற விதத்தில் வாய்விட்டுச் சத்தமாகவே சிரித்திருந்தான் ப்ரஜீஷ்.

“ப்ரெண்ட்ஸ்??”,என்றவன் கைநீட்ட அவளும் ஓரளவு ஏற்றுக் கொண்டவளாய் வேண்டுமோ வேண்டாமோ எனக் கையைக் குலுக்கினாள்.சட்டென அவளே எதிர்பாராத விதமாய் அப்படியே அவளை இழுத்து நீருக்குள் தள்ளியிருந்தான்.

எதிர்பாராமல் நடந்ததில் நீருக்குள் வேக மூச்சுகளை விட்டவாறு முதத்தை ஒரு கையால் அழுந்தத் துடைத்து நீரை அகற்றியவள் ஒரு கையால் நீரிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்க இரண்டு நிமிடங்கள் கழித்துப் பணிப்பெண்ணை அழைத்து அவளை உள்ளே அழைத்து வரச் செய்தவன் அப்போதும் புன்னகையோடே இருந்தான்.

இந்த தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ந்தப் பிறகுப் பொதுவாய் முதலாளி தொழிலாளி பெரியவன் சிறியவன் என்ற பாகுபாடுகள் பெரிதாய் குறைந்திருக்கிறது.

முதலாளியையும் பெயர் கூறியே அழைக்கலாம்..வயதில் எத்தனைப் பெரியவரையும் பெயர் கூறி அழைப்பதே வாடிக்கை.அதனாலேயே அபூர்வாவிற்கு உண்மையில் வேலை என்பதைத் தாண்டி ஒரு கல்லூரி சூழலே இருந்து வந்தது.ராஜீவை சட்டென அண்ணாவாய் மாற்றியதும் அதுவாகத் தான் இருக்கும்.

அதே போன்று ப்ரஜீஷ் முதலிலேயே முதலாளியாய் அறிமுகமாகியிருந்தால் கூட வித்தியாசம் இருந்திருக்கும்.அதுவும் இல்லாமல் போனதால் அவனோடு அவளையும் மீறி இயல்பாகவே பழக முடிந்தது.அதுமட்டுமன்றி ராஜீவையும் அவளையும் தவிர அவனைச் சந்திப்பவர் என எவரும் இல்லாததால் அதிகபட்ச நேரம் அவனோடே செலவிடுவதால்,என எத்தானையோ காரணங்கள்.

அனைத்திற்கும் மேலாக இந்த விபத்திற்கு அவன் உண்மையாகவே வருந்தியது.அதன் பின்னான இந்த நாட்களில் மனம் திறந்து அவளுடன் பேசியது என ஓரளவு நெருங்கிய நட்புணர்வைக் கொடுத்திருந்தது.

எது எப்படியாயினும் இன்று காலையில் அவன் தன்னிடம் நடந்துக் கொண்டதை அவளால் நிச்சயமாய் ஏற்றுக் கொள்ள முடியாது தான்.ஆனால் இப்போது அவன் சொன்னதுபடி தான் ஒன்றும் உலக அழகியெல்லாம் இல்லை.அப்படியிருக்க உண்மையாகவேத் தெரியாமல் நடந்ததற்க்கான வாய்ப்புகள் தான் அதிகமாக இருக்கும்.என்று அத்தனையையும் அலசி ஆராய்ந்து அவளே ஒரு முடிவிற்கும் வந்திருந்தாள்.

முந்தைய தினம்  போலவே இரவில் அவன் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து எதையும் சரியாய் பார்க்காமல் ஒவ்வொரு சேனலாய் மாற்றிக் கொண்டிருக்க சாப்பிட்டு விட்டுத் தனதறைக்குச் செல்ல நினைத்தவள் சட்டென ரிமோர்ட்டை வாங்கி பாடல்கள் வரும் சேனலைப் போட்டுவிட்டு ரிமோர்ட்டை எடுத்துச் சென்று சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டு அவனைத் திரும்பிக் கூடப் பார்த்திராது தனதறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டாள்.

அவளையேப் பார்த்திருந்தவன் ஒன்றும் கூறாமல் கையைக் கட்டிய படி பாடல்களில் கவனத்தைச் செலுத்த ஆராம்பித்திருந்தான்.அங்கு அபூர்வாவோ ராஜீவிற்குத் தனது கைப்பேசியில் இருந்து,

“ஹி இஸ் ஓகே நவ்..லேப்டாப் கொடுக்க வேண்டாம்..”,எனக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு உறங்கியிருந்தாள்.

அடுத்த நாள் அவள் வெளியே வரும் போதே நடைப் பயிற்சியைத் தொடங்கியிருந்தான் ப்ரஜீஷ்.அதற்கென கொடுக்கப் பட்டிருந்த வாக்கர் ஸ்டண்டைப் பயன்படுத்தி ஒவ்வொரு அடிகளாய் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

“குட்மார்னிங்…நடக்குறீங்களா?”

“இல்ல டான்ஸ் ஆடுறேன்….நீயும் ஜாயின் பண்றியா?”

“வெரி ஃபன்னி…சிரிப்பு தான் வரல…”

“காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா…நீ என் சிஸ்டர்ஸை விட சின்னவ..அவங்களே சில நேரம் என்கிட்ட பேச பயப்படுவாங்க..ஆனா நான் தான் உன்னைப் பார்த்துப் பயப்படணும் போல இருக்கு…”

“ஓ..உங்களுக்கும் தங்கச்சிங்க இருக்காங்களா எத்தனை பேர்?”

“நான் என்ன சொல்றேன் நீ என்னக் கேட்குற?”

“வல்லவனுக்கும் வல்லவன் வையகத்தில் உண்டுனு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க…அதான் இது…அதை விடுங்க…சிஸ்டர்ஸ் என்ன பண்றாங்க?”

“ட்வின்ஸ்..கல்யாணம் ஆகி செட்டில் ஆயிட்டாங்க..”

“ஹே ட்வின்ஸா…அப்போ எப்படி கண்டுபிடிப்பீங்க?”

“ம்ம் வெத்தலையில மை தடவிப் பார்த்து…”

“?!!”

“அவங்க நான் ஐடன்டிக்கல் ட்வின்ஸ்…சோ ஈஸியா கண்டுபிடிக்குற மாதிரி தான் இருப்பாங்க..”

“ஓ….”

“ஆமா உங்களுக்கு ஒரு நாப்பது வயசு இருக்குமா?”

“ஏன் அறுபது மாதிரி இல்லையா?”

“கொஞ்சம் அப்படி இருக்கு தான்….”

“தெரியாம ப்ரெண்ட்னு சொல்லிட்டேன்..அதுக்காக இப்படியா?”

“இதைச் சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும்..சரி சொல்லுங்க”

“35…”

“ஓ…அப்பறம் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?”

“இப்போ இது உனக்கு ரொம்பத் தேவைதானா?”

“சும்மா தெரிஞ்சுக்கலாமேனு தான்..வேண்டாம்னா விடுங்க…”

“ஊர் மொத்தம் கேர்ள் ப்ரெண்ட்ஸ் வச்சுகிட்டு ஜாலியா இருக்கேன்..இதுல கல்யாணத்தைப் பண்ணி…”

“ம்ம் அதனால தான் கேட்டேன்..இதெல்லாம் தேவைதானா?”

“தேவையானு கேட்டா ஆமானு தான் சொல்லுவேன்..ஒரே லைஃப் நமக்குப் பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டுப் போய்டணும்..”

“இதெல்லாம் உங்க வீட்டுல இருக்குறவங்களுக்குத் தெரியுமா?”

“ம்ம் கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சுருக்கலாம்..மே பி..”

“அது சரி இப்படி காலை உடைச்சுட்டு இங்க இருக்குறதையே மறைக்க முடியுற உங்களுக்கு அதெல்லாம் ஒரு விஷயமா…”

“உன் கை உடைஞ்சதுக்குப் பதிலா வாயில் அடிப்பட்டுருக்கலாம்…நானாவது நிம்மதியா இருந்துருப்பேன்…”

“உண்மைகள் சில நேரம் கசக்கத் தான் செய்யும்..ஒண்ணு கேட்கணும் கொஞ்சம் சில்லியா தான் இருக்கும் ஆனாலும்…”

“நீ கேட்குறது எல்லாமே அப்படி தான் இருக்கு..சரி கேளு…”

“உண்மையாகவே இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் இருக்காங்களா???உங்களை முதல் தடவைப் பார்த்துட்டு போனப்போ ரொம்ப நேரமா அந்தப் பொண்ணோட முகம் தான் என் மைண்ட்ல இருந்தது..அப்பறம் ஹோட்டல்ல..”,என்றவளின் குரல் உள்ளேயேச் சென்றிருந்தது.

“உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத டீடெயில் எல்லாம்…நீ ரொம்பவே அழகான ஒரு உலகத்துக்குள்ள இருக்க அது அப்படியே இருக்கட்டும்..இதெல்லாம் நீ தெரிஞ்சுக்க வேண்டாம்..”

“ப்ரெண்ட்னு சொல்லிட்டு இதெல்லாம் தெரிஞ்சுக்காம எப்படி..நம்ம கூட இருக்குறவங்களோட நல்லதை நாம தெரிஞ்சுக்குறோமோ இல்லையோ..கெட்டதைக் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் சொல்லுங்க…”

“அப்ராட்ல இருந்த வரை இதெல்லாம் ரொம்பவே சாதாரணம்..யாரும் யார் கூடவும் லிவ் இன்ல இருக்கலாம்..பிடிக்கலையா அவங்க அவங்க வழியைப் பார்த்துட்டு ப்ரெண்ட்ஸா போய்டுவாங்க..பட் எனக்கு அந்த மாதிரி ஸ்டார்ங் ரிலேஷன்ஷிப் எல்லாம் எப்பவும் இருந்ததில்ல..செட்டும் ஆகாது..பப் டிஸ்கோனு போகும் போது யாராவது இன்ட்ரெஸ்ட் காட்டினாங்கனா…

மத்தபடி அந்த வயசுக்கு அது ஜஸ்ட் பார் ஃபன்னு இருந்தது அவ்வளவு தான்.உண்மையை சொல்லணும்னா இங்க வந்தப்பறம் இதெல்லாம் இருக்கும்னு நான் எதிர்பர்த்தது கூடக் கிடையாது..பட்…பார்ட்டி பப்னு போகும் போது,வெளிப்படையா சொல்லணும்னா என்னோட பணத்தையும் என் ஆடம்பரத்தையும் மட்டுமே வச்சு என்னை அப்ரோச் பண்ணவங்க நிறைய பேர்..

முதல்ல ஒரு மாதிரி வெறுப்பு தான் இருந்தது.பணம் என்ன வேணும்னாலும் செய்யுமானு நினைச்சேன்..ஆனா ஒரு கட்டத்துல அவங்களுக்கேப் பிரச்சனை இல்லாத அப்போ நமக்கு என்னனு தோணிச்சு..

எனக்கு அது தப்பாத் தெரியல…அதுவும் இல்லாம இந்தக் கல்யாணம் அது இதுனு ஒரு கமிட்மெண்டோட இருந்துட்டு இப்படியெல்லாம் பண்ணினா தான் தப்பு..சோ நான் அந்த லைன்க்குள்ளே போகாத வரை இட்ஸ் மை லைஃப்..அவ்வளவுதான்.

நான் முதல்லயே சொன்ன மாதிரி உன்னோட அழகான உலகத்துக்குள்ள இதெல்லாம் வேண்டாம்..என்னை விட , ஏன் இந்த உலகத்துலேயே மிகப் பெரிய பணக்காரனா இருக்ககுறவனை விட உன் வாழ்க்கை ரொம்ப அழகு..இந்த நாலு நாள்லயே அதை நான் நிறைய உணர்ந்தேன்..சோ இதெல்லாம் உன் தலையிலிருந்துத் தூக்கிப் போட்டுரு…”

“ஒரு வேளை உங்களுக்கு கல்யாணம் ஒண்ணு நடக்குதுனா வரப் போற பொண்ணுக்கும் உங்களை மாதிரி ஒரு பாஸ்ட் இருந்தா உங்க வீட்ல ஏத்துப்பாங்களா?இல்ல உங்களால ஏத்துக்க முடியுமா?”

“அதான் நடக்கப் போறது இல்லையே…”

“இல்ல பை எனி சான்ஸ்…நடந்தா…”

“இதுக்கு என்ன பதில் சொல்றது…”

“நான் சொல்லவா…உங்களால முடியாது…ஏன்னா நம்ம நாட்டுல எப்பவுமே அத்தனைக் கட்டுப்பாடும் பொண்ணுங்களுக்கு மட்டும் தான்.புருஷன் எப்படி இருந்தாலும் பொண்டாட்டி சீதையாவே தான் இருக்கணும்ங்கிறது எழுதப்படாத விதி…ரைட்?”

“இப்போ ஏன் நீ தேவையில்லாததையெல்லாம் பேசிட்டு இருக்க?”

“தப்பு ப்ரஜீஷ்…நீங்க மொத்தமா ஒரு தப்பான உலகத்துக்குள்ள இருக்கீங்க…இது நிரந்தரம் கிடையாது அதே நேரம் உங்களுக்கு நல்லதும் கிடையாது…”,என்று எங்கோ வெறித்துக் கூறியவளையே இமைக்காமல் பார்த்திருந்தான் ப்ரஜீஷ்.