தோழி கூற்று ( குறுந்தொகை -9)

யாயா கியளே மாஅ யோளே

மடைமாண் செப்பிற் றமிய வைகிய

பெய்யாப் பூவின் மெய்சா யினளே

பாசடை நிவந்த கணைக்கா னெய்தல்

இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்

கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்

தண்ணந் துறைவன் கொடுமை

நம்மு னாணிக் கரப்பா டும்மே.

கயமனார்.

செய்தி

தலைவி தாயானாள் என்பதைத் தோழி தலைவனுக்குச் சொல்லும் பாடல் இது.

மாயோள் தாயாகிவிட்டாள்.  அன்று இருந்த மாந்தளிர் போன்ற அவளது மேனி இன்று வெளுத்துவிட்டது.  அந்தப் பூ மலர்ந்திருப்பது போன்ற நிறம் அவள் மேனியில் சாய்ந்திருக்கிறது.

அதை அவள் நாணத்தால் நம்முன் சொல்லாமல் மறைக்கிறாள்.  மீன்கள் விளையாடும் கடலோர நீர்த்தேக்கங்களில் அலை வரும்போதெல்லாம் மூழ்கி மூழ்கித் தலைதூக்கும் நெய்தல் பூவைப் போல அவள் கண்கள் நாணத்தால் அவ்வப்போது மூடித் திறக்கின்றன.

 குளத்தில் மூழ்கி நீராடும் மகளிரின் கண்கள் போலவும் காணப்படுகின்றன.  அத்துடன் அந்தப் பூவின் செந்நிறம் போலவும், குளத்தில் நீராடும் பெண்களின் கண்கள் சிவந்திருப்பது போலவும் அவளது கண்களும் சிவந்து உள்ளன.  

இது தண்ணந் துறைவன் செய்த கொடுமை என்று பொய் சொல்லுகிறாள்.  (புணர்ச்சியில் நேர்ந்த சிவப்பு என்கிறாள்)

அப்படி இப்படியாய் இருபது தினங்கள் கடந்திருந்த நிலையில் அன்று பொழிலை அவள் வீட்டில் சந்தித்ததோடு சரி கதை சம்மந்தமாக எதோ பக்கத்து ஊருக்குச் செல்வதாய் கூறிச் சென்றிருந்தாள்.

தீபாவளி சமயமென்பதால் எழிழும் கடை நெசவு வேலையென பம்பரமாய் ஓடிக் கொண்டிருந்தான். ஊரிலிருந்து அவள் வரும் தினம்  லோட் விஷயமாய் பேசுவதற்காக சென்னை சென்றிருந்தான் எழில்.

பொழில் கோவிலுக்குச் சென்று வரலாமென கிளம்பிச் சென்று பூஜையை முடித்துவிட்டு பிரகாரத்தைச் சுற்றி வரும்போது முத்துவை அவன் மனைவி குழந்தைகளோடு கண்டாள்.

அண்ணா எப்படி இருக்கீங்க. . தமிழ் கல்யாணத்துல பாத்தது அண்ணி எப்படியிருக்கீங்க. . ”

நாங்க நல்லாயிருக்கோம் மா. . ஊருக்கு போய்ருக்குறதா எழில் சொன்னானே?”

ம்ம் ஆமா ணா காலையிலே தான் வந்தேன். . சரி கோவிலுக்கு வந்து ரொம்ப நாளாச்சேனு வந்தேன். . ”

ஓ நல்லது நல்லது. . ”

அண்ணா நானே உங்களை பாத்து பேசனும்னு இருந்தேன். . எழிலை பத்தி தான். . ஒரு பத்து நிமிஷம். . ”

தயக்கமாய் தன் மனைவியை பார்த்தவன்,”இரும்மா அஞ்சே நிமிஷம் இவளை இங்கதேன் இவ அம்மா வீடு விட்டுட்டு வந்துரேன். . உனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லயே. . ”

ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்லணா போய்ட்டு வாங்க. . ”

கூறியபடியே பத்து நிமிடத்தில் வந்தவன் அவளருகில் யோசனையாய் அமர்ந்தான்.

தப்பா எடுத்துக்காதம்மா. . பொண்டாட்டியாவே இருந்தாலும் எழிலோட தனிப்பட்ட விஷயத்தை அவகிட்ட நா சொன்னதில்ல அதனாலதேன் அவளை விட்டுட்டு வந்தேன். . ”

புரிஞ்சுதுணா அதனால தான் இத்தனை வருஷம் உங்க நட்பு பசுமையாவே இருக்கு. . நா ஊருக்கு போறதுக்துக்கு முன்னாடி எதோ பேச்சு வந்தப்போ தான் அமுதன் அவனோட காதலைப் பத்தி சொன்னான். . ”,என்று தயக்கமாய் தரையைப் பார்த்தபடி அவள் கூறிமுடிக்க முத்துவிற்கு ஒரு நொடி சந்தோஷம் பதட்டம் பயம் என அத்தனை உணர்வும் உள்ளுக்குள் கலந்தோடியது.

தன் நண்பன் காதலைச் சொல்லியதால் தான் ஊரைவிட்டு போனாளோ என எண்ண ஆரம்பித்துவிட்டான். நண்பனின் காதலை அவள் நிராகரித்து விடக் கூடாதே என்ற கவலை ஒருபுறம்,அப்படியே அவள் ஏற்றுக் கொண்டாலும் வீட்டில் அனைவரும் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்ற பயம் ஒருபுறமாய் அந்த சில நொடிகளில் ஆயிரம் விஷயங்களை யோசித்துவிட்டான்.

அண்ணா…”

ஆங்ங் சொல்லும்மா அவன் உன்கிட்ட சொல்லுவான்னு நா எதிர்பார்க்கல அதான் ஏதோ யோசனை. . ”

ம்ம் கேட்டவுடனே ரொம்ப வருத்தமாயிடுச்சு ணா. . ”

என்னம்மா பண்றது கடவுள் நல்லவுகளதேன் ரொம்ப சோதிக்குறான். ஆனா இத்தனை வருசம் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் சேர்த்து நீ மறுபடியும் அவனுக்கு கிடைச்சுட்டியே அதுவே போதும் மா. . ”

அண்ணா!!!??”

உண்மையா எழில் அளவுக்கு இந்த உலகத்துல யாராலயாவது காதலிக்க முடியுமானு கேட்டா கண்ணை மூடிட்டு இல்லைனு தேன் சொல்லுவேன். அந்த வயசுலயே அத்தனை பக்குவம் கண்டதையும் பேசி உன் மனசை கெடுக்ககூடாதுனு அமைதியாவே இருந்து உன் வாழ்க்கையை அது போக்குலயே போகவிட்டான்.

ஆனா அதுக்கப்பறமும் அவனால வேற ஒரு பொண்ணை நினைச்சுகூட பார்க்க முடில அவனுக்கு கல்யாண பேச்சை எடுத்தப்போதேன் உன்னை பத்தியே சொன்னான். எவ்ளோ பெரிய ஊமைக் கொட்டான் பாரு. அத்தனை வருசமும் மனசுக்குள்ளேயே போட்டு வருந்திட்டு கிடந்துருக்கான்.

நீ இங்க வந்தன்னைக்கு அப்படி ஒரு காய்ச்சல். . அவனால நம்பவே முடில உன்னை பார்த்தத. . அப்பறமும் நீ கல்யாணம் ஆனவங்கிறதால உன்னைவிட்டு தள்ளியேதேன் இருந்தான்.

எப்போ உன் வாழ்க்கையில யாரும் இல்லைனு தெரிஞ்சுதோ அப்போவே அவன் மறுபடியும் உன்னை அவனோட அரசியாவே ஏத்துகிட்டான். அதை சொல்லும் போது அவனுக்கு எத்தனை பூரிப்பு தெரியுமா. .

இப்போ நீயும் எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டேனு நினைக்கும்போது அவ்ளோ சந்தோசமா இருக்கு எனக்கு. . நீங்க ரெண்டு பேருமே எந்த குறையும் இல்லாம நூறு வருசம் ஒண்ணா வாழணும். . இப்போகூட இந்த ஆண்டவன்கிட்ட அததேன் வேண்டிட்டு வாரேன். . ”

“…. ”

நா ஒரு மடையன் நீ எதோ சொல்ல வந்த அதைவிட்டுட்டு நானே பேசிட்டு இருக்கேன். . ”

ஆங்ங் இல்லணா எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே நா பேச ஒண்ணுமேயில்ல. சரி நா வரேன் ணா. . ”

அவள் முகத்தை வைத்து முத்துவால் ஒன்றையும் கணிக்க முடியவில்லை. எழிலிடம் பேசலாம் என நினைத்தவன் அவன் நேரில் வந்த பின்பே இதைப்பற்றி கூறி அவன் மகிழ்ச்சியை கண்ணார பார்த்து மகிழ வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான்.

இரு தினங்களில் ஊர் திரும்பிய எழில் முத்துவை சந்திப்பதற்காக குடோனிற்குச் செல்ல ஆள் இல்லாத நேரமாய் முத்து அவனை இறுகக் கட்டிக் கொண்டான்.

ஏலேய் மாமா என்ன பண்ணித் தொலையுத. . ”

மாப்ள எம்புட்டு சந்தோசமா இருக்கேன் தெரியுமா!!அந்த புள்ளையும் நீயும் சேர்ந்து வாழப் போறத நினைச்சு சந்தோசத்துல இரண்டு நாளா தூக்கமே வரலலே. . எப்போடா உன்னை பாப்போம்னு காத்து கிடக்கேன். . ”

மாமா நல்லாதான இருந்த ஏன் என்னென்னவோ பேசுற. . எந்த புள்ள என்னத்தலே சொல்லுத. . ”

ஏலேய் ரொம்பத்தேன் நடிக்க. . பொழிலு கிட்ட உன் காதலை சொன்னதை என்கிட்ட சொல்லவே இல்லல. . அந்த பிள்ள சொல்லிதேன் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. . இதுல ஒண்ணுமே தெரியாத மாதிரி வேற நடிக்கியா நீ

ஏ செத்த மூதி என்ன உளறுத. . நா அவகிட்ட ஒண்ணுமே சொல்லாதப்போ அவ என்னலே சொல்லுவா உன்கிட்ட. . வாழ்க்கைல விளக்கேத்துறேன்னு ஏதோ பெருசா கொள்ளிக்கட்டையை சொருகிருக்கனு மட்டும் தெரியுது. . விளக்கமா சொல்லித் தொல அவளை நீ எங்க பாத்த. . ”

ஒரு நொடி பதறியவனாய் முத்து அனைத்தையும் அவனிடம் கொட்டித் தீர்க்க தன் தலையிலே அடித்துக் கொண்டவனாய் அவனை போட்டு அடி வெளுத்தெடுத்தான் எழில்.

நாசமா போறவனே. . அவகிட்ட சொல்லிருந்தா உன்ட்ட சொல்லாம இருப்பேனாலே ஏம்ல இப்படியிருக்க நீ. . அவ முழுசா பேசுத வர கூட உன்னால பொறுமையா இருக்க முடியாதா?கடவுளே அத்தனை தீவெட்டி தண்டமும் என்ன சுத்திதேன் இருக்கும் போலயே. . ”

எழிலு மன்னிச்சுருலே. . வேணும்னு பண்ணல. . புரிஞ்சுக்கோலே. . ”

விட்டுத் தொல நா போய் அவளை பாத்துட்டு வரேன். . சும்மாவே ஆடுவா. . இன்னைக்கு சலங்கைய வேற கட்டி விட்டுருக்க. . வரேன்லே. . ”,என்றவன் வண்டியை எடுத்துக் கொண்டு அவளைப் பார்க்க விரைந்தான்.

அவள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவன் அவளை சமாளிக்கும் அத்தனை பதிலையும் தயார் செய்தபடி கதவைத் தட்டினான்.

ஐந்து நிமிடத்தில் வந்து கதவை திறந்தவளின் கண்களில் இவனைக் கண்டவுடன் ஒரு பதட்டம் இருந்தும் ஒன்றும் கூறாமல் கதவை திறந்துவிட்டு உள்ளே சென்றாள்.

ஹாலின் ஒரு மூலையில் இருந்த மேசையின் அருகில் தலை குனிந்தவாறு அவள் நிற்க அவளுக்கு எதிர்புறமாய் நிலைப்படியின் அருகிலேயே அவன் நின்றான்.

உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல அமுதா. . ”சற்றும் பிசிரில்லாத குரலாய் திடமாய் வெளிவந்தன வார்த்தைகள். அவனுக்குத் தெரியுமே அவன் அரசியை. . எந்த நிலையிலும் இந்த நிதானமும் தெளிவும் அவளை விட்டுச் செல்லாது.

இங்கேரு குள்ளச்சி நீ பதினாறு வயசு பருவபிள்ளையும் கிடையாது நா பதினெட்டு வயசு இளவட்டமும் கிடையாது. . விஷயத்தை எப்படி புரிஞ்சுக்கனும்ங்கிற தெளிவு இரண்டு பேருக்குமே இருக்கு. . ஏற்கனவே அரைக் கிழவன் ஆய்ட்டேன். இன்னும் உன்னோடசண்டைபோட்டு போராடி கல்யாணம் பண்ற தெம்பெல்லாம் சத்தியமா இல்லை. . அதனால நீயே பொறுமையா யோசிச்சு ஒருமுடிவைச் சொல்லு. . ”

அமுதா!!!என்ன பேச்சு பேசிட்டு இருக்க. . நா இன்னொருத்தனோட மனைவி அந்த நினைப்பு கொஞ்சமவது இருக்கட்டும். . ”

இன்னொரு தடவை இந்த வார்த்தையை சொல்லாத. . நீ என் அரசி எனக்கு மட்டுமான என் அரசி புரியுதா?!”

அமுதா உனக்கு பைத்தியம்தான் பிடிச்சுருக்கு அந்த வயசுல வர்றதெல்லாம் காதலே கிடையாது வெறும் ஈர்ப்பு. . அதுக்காக நீ இத்தனை வருசத்தை வேஸ்ட் பண்ணதே அறிவில்லாத வேலை இதுல இப்போவும் வந்து பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்க. . ”

அவள் முடித்ததுதான் தாமதம் சட்டென அவளருகில் சென்று தோளை இறுகப் பற்றியவன்,

எது டீ ஈர்ப்பு. . என்ன உன் தோலை பார்த்து அலைஞ்சேன்னு சொல்ல வரியா. . சாவு பயத்துல பாத்த உன் முகமும் இந்த கண்ணும் தான் டீ இப்போ வர என்னை வாழ வச்சுட்டு இருக்கு. . அப்போ இல்லை உரிமையா  என் பொண்டாட்டியா என் பக்கத்துல நீ இருந்தாலும் வெறும் சதையா உன்னை பாக்க எனக்குத் தோணாது புரியுதா. . ”

தோளைக் குலுக்கியதில் வலியால் அவள் முகம் சுனங்க அப்போதுதான் அவளருகில் நிற்பதை உணர்ந்தவன் மறு யோசனையின்றி விலகிச் சென்று பழைய இடத்திலேயே நின்று கொண்டான்.

சாரி. . உன் பீலிங்க்ஸை ஹர்ட் பண்ணது தப்புதான். . ஆனா அப்பவும் இப்பவும் எப்பவும் எனக்கு உன் மேல அப்படி ஒரு நினைப்பு வரல வரவும் வராது. . அதை நீ புரிஞ்சுக்கோ. . ஊரையும் வீட்டையும் மிரட்டி வச்சுருக்க மாதிரி என்னையும் பணிய வைக்கலாம்னு நினைக்காத அது நடக்காத ஒரு விஷயம். . ”

ம்ம் நினைச்சுட்டாலும். . இந்த ஊர்ல இல்ல இந்த உலகத்துலயே எனக்கு அடங்காத ஒரே ராங்கி நீ மட்டுமாதேன் இருப்ப. . நீ எப்படியும் சாமி ஆடுவனு எனக்குத் தெரியும்.

குறைஞ்சபட்சம் விஷயத்தை முத்துவே ஆரம்பிச்சு வச்சானேனு சந்தோச பட்டுக்க வேண்டியதுதேன். 18 வருசமா காத்து இருந்தவனுக்கு இதுக்கு அப்பறம் காத்திருக்குறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல டீ. .

நீயா என்னைத் தேடி என்கிட்ட வர எத்தனை வருசமானாலும் இந்த எழில் காத்து கிடப்பான். . அதை யாராலும் மாத்த முடியாது. . வரேன். . ”

அவன் வெளியே சென்ற பிறகும் சிலையென அப்படியே நின்றிருந்தாள் பொழிலரசி. இப்படி ஒரு நிலைமையை அவள் சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை. செய்வதறியாது குழம்பி நிற்கத் தான் முடிந்தது அவளால்.

வேறு யாராக இருப்பினும் அவளுக்கு அவர்களைப் பற்றி கவலை கிடையாது. ஆனால் இப்போது மறுபுறம் நிற்பவன் தன் மனத்திற்கு நெருக்கமான தோழன். ஆதரவின்றி நிற்கும் நேரம் அடைக்கலமாய் வந்த குடும்பத்தின் ஆணிவேர்.

அவனின் இப்படி ஒரு நிலைக்கு தான் காரணமாகிவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியே அவளிடம் அதிகமாக இருந்தது. கடினம் தான் எனினும் இதை அவன் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என நினைத்தவளாய் இனி தவறியும் அவனைப் பார்க்கக் கூடாது என முடிவெடுத்தாள்.

எக்காரணம் கொண்டும் வீட்டிற்கும் செல்ல கூடாது என்று உறுதியேற்றாள். அவளின் முடிவுக்கு ஏற்றவாறே எழிலும் அவள் கண்ணில் படமுயற்சி செய்யவேயில்லை. நிச்சயம் நிறையவே குழம்பியிருப்பாள் இதில் தான் மேலும் மேலும் அவளை துன்புறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவனாய் ஒதுங்கியிருந்தான்.

இப்படியாய் ஒருமாத காலம் கடந்திருக்க நடுவில் இருமுறை வெற்றிச்செல்வி வீட்டிற்கு அழைத்தும் ஏதோ காரணம் சொல்லி போகாமல் இருந்துவிட்டாள். எழில் அவளை தொந்தரவு செய்யாதது ஓரளவு நிம்மதியாய் இருந்தாலும் இந்த அமைதிக்குப் பின் இருக்கும் புயலை நினைத்து உள்ளுக்குள் குழம்பிக் கொண்டுதான் இருந்தாள்.

கண்ணாமூச்சியை முடித்து வைக்கும் நேரமும் வந்துதானே ஆகவேண்டும். இவர்கள் வாழ்வின் கண்ணாமூச்சி சாமியால் முடிவுக்கு வந்தது.

பல நாளாய் பொழிலை நோட்டம் விட்டவர் எழிலோடு அத்தனை பேச்சு வார்த்தை இல்லாததை கணித்து அவள் கதையை முடிக்க  முடிவெடுத்தார். அதன்படி ஒரு நாள் மாலை கோவிலுக்கு வந்து விட்டு வீட்டுக்குத் திரும்பியவளை ஆள் நடமாட்டமில்லா தெருவில் வைத்து இரண்டு பேர் வழி மறித்தனர்.

பொழிலாரசி என்ன ஏதென யோசிக்கும் முன்பே தன் கையிலிருந்த கத்தியை அவளின் இடுப்போரத்தில் குத்தியிருந்தான் ஒருவன்.

மீண்டும் அவளை தாக்குவதற்குள் ஏதோ அரவம் கேட்டு மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக அப்படியே அவளை விட்டுவிட்டு ஓடியிருந்தனர். சுடிதார் நனைத்த ரத்தத்தோடு இறுகப் பற்றியவள் தன் மொபைலை எடுத்து எழிலமுதனை அழைத்தாள்.

என்ன இப்போதேன் கோவில்ல பாத்தேன். . நேர்லயே பேசிருக்க வேண்டியதுதான?”

அமுதா……”

என்ன டீ குரலே சரியில்ல என்னாச்சு?”

அமுதா. . இங்க பக்கத்துல. . ”,அதற்கு மேல் பேச முடியாமல் அப்படியே மயங்கிவிட்டிருந்தாள்.

அவள் குரலேயே பாதி உயிர் போய்விட்டதாய் உணர்ந்தான் எழில் அடித்துப்பிடித்து வண்டியை எடுத்துக் கிளம்பியவனை அனைவரும் புரியாமல் பார்க்க அதியன் தான் காரை எடுத்துக் கொண்டு அவன்பின் விரைந்தார்.

அவள் செல்லும் வழியை கணித்துச் சென்றவன் அங்கு இரத்த வெள்ளத்தில் கிடந்தவளைப் பார்த்து வண்டியை அப்படியே விட்டுவிட்டு ஓடினான்.

அரசி!!!ஏய் இங்க பாரு டீ. . ஏய் அரசி. . ”,காட்டுத்தனமாய் கத்தியவன் அவள் கன்னம் தட்டி எழுப்ப முயற்சிக்க பின்னே வந்த அதியனோ கண்ட காட்சியில் பயந்தே போய்விட்டார்.

இருந்தும் நிலைமை உணர்ந்தவராய்,”ஏலேய் எழிலு தூக்கு தூக்குலே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவோம். . எழுந்துருலே. . ”

சட்டென கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தவன் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு சென்று காரின் பின் இருக்கையில் கிடத்தி தலையை தன் மடியில் வைத்துக் கொண்டான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பொழில் அனுமதிக்கப்பட்டாள்.

எழிலோ பாறையாய் இறுகிப் போய் அங்கிருந்த சேரில் அமர்ந்திருந்தான். அதியன் விஷயத்தை கூற குடும்பமே அடித்து பிடித்து ஓடி வந்தது. ஆளாளுக்கு கேள்வி கேட்டு எழிலை உலுக்க மருந்துக்கும் அசைவில்லை அவனிடம். அங்கயர்கண்ணியும் வேணியும் அவனருகில் போகக்கூட பயந்து நின்றிருந்தனர்.

மருத்துவர் வந்து பொழிலுக்கு ஆபத்தில்லை என்று கூறிய அடுத்த நொடி அங்கிருந்து எழுந்தவன் வாசலை நோக்கிச் செல்ல முத்து  தான் அவனை தடுத்து நிறுத்தினான்.

ஏலேய் எங்க போற??”

ம்ம் ஒருத்தன கொன்னுட்டு செயிலுக்கு போ போறேன். . இன்னையோட அவன் கதை முடிஞ்சுதுலே. . ”

மாப்ள அவசர படாத பொறுமையா யோசிப்போம். . ”

என்ன . .  இத யோசிக்கப் போறவே நீ. . அவன் என்ன வேணா பண்ணுவான் நா உக்காந்து விரல் சூப்பிட்டு இருக்கணுமா. . நானா அவனானு பாத்துறேன் இன்னைக்கு”,என்றவன் முத்துவை தள்ளிவிட்டு விறுவிறுவென சென்றுவிட்டான்.

மகேந்திரநாதனே ஒரு நொடி அரண்டுதான் போனார் . இத்தனை கோபத்தை எழிலிடம் அவர் பார்த்ததே இல்லை. உக்கிரமூர்த்தியாய் யாரையும் சட்டை செய்யாமல் முகம் சிவக்க பேசியவனை தடுக்கவும் தோன்றாமல் நின்றிருந்தார்

நேராய் பூபதிநாதனின் வீட்டிற்குச் சென்றவன் நடு ஹாலிலிருந்த டீப்பாயை எட்டி மிதிக்க அதிலிருந்த சொம்பு கீழே விழுந்து உருண்டு முடித்தது. அந்த சத்தத்தில் வெளியே வந்து எட்டிப்பார்த்த சாமியை கழுத்தோடு சேர்த்து இறுக்கி தூணோடு நிறுத்தியிருந்தான்.

ஏய் எழிலு வேணாம் சொல்லுத கேளு

என்ன கேக்கணும் ம்ம் நீ பண்ணதெல்லாம் பொறுத்துட்டு போனா என்னை என்ன சொம்பனு நினைச்சியா. . எம்புட்டு ஏத்தம் இருந்தா அரசி மேலயே கைய வச்சுருப்ப. . எவனுக்கோ பிரச்சனைனாலே முன்னாடி போய் நிக்குறவன் இப்போ என் பொண்டாட்டி மேலயே கை வச்சனா உன்ன என்ன பண்ணுவேன்.

கண்டம் கண்டமா வகுந்து இங்கேயே புதைச்சுருவேன்ல. . வயசுக்கேத்த அறிவு வேணாம். . உனக்கு என்ன சொத்து பணம் தான வேணும் என்ன வேணும்னு சொல்லி அனுப்பு பிச்சை போடுறதா நினைச்சு தூக்கி போடுதேன். . ஆனா இன்னொருதடவை என் குடும்பத்து மேல கைய வைக்குற நினைப்பு உனக்கு வரவே கூடாது. . ”,என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது வலது கையை முறுக்கி உடைத்திருந்தான்.

…. . ஐயோ!!”

கத்து நல்லா கத்து இந்த வலியும் வேதனையும்தேன் என் அரசியை நீ கஷ்டப்படுத்தினதுக்கு தண்டனை எனக்கு ஆறுதல். இனி இந்த எழிலை பகைச்சுக்க பயப்படனும்லே. . ”

என்றவன் புயலென வெளியே செல்ல அதற்குள் நடந்த களேபரத்தில் அக்கம் பக்கத்தினர் கூடிவிட எழில் மருத்துவமனையை அடைவதற்குள் அத்தனை விசயமும் மகேந்திரநாதனின் செவிகளை எட்டியிருந்தது.

மகேந்திரநாதன் யோசனையோடு அமர்ந்திருக்க உள்ளே வந்தவன் நேராய் பொழிலைப் பார்க்கச் சென்றான். இன்னுமும் கண் விழிக்காமல் இருந்தவளின் அருகில் அப்படியே அமர்ந்து விட்டான். இன்னுமும் அவளை அந்த கோலத்தில் பார்க்கும் சக்தி அவனுக்கு இருக்கவில்லை. ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த கையை மிக மென்மையாய் வருடிக் கொடுத்தான்.

அங்கு ஒருவனின் கையையே உடைத்தவன் இங்கு இத்தனை மென்மையாய். . கண்கள் ஈரத்தால் நிறைந்து பார்வை மறைத்தது. சட்டென தன்னை தேற்றிக் கொண்டவன் அவள் முகத்தை ஒருமுறை ஆழ்ந்து பார்த்துவிட்டு கிளம்பிவிட்டான்.  

அடுத்த இரு தினங்களும் அவள் மருத்துவமனையில் இருக்க எழில் அந்த பக்கமே வரவில்லை. டிஸ்சார்ஜ் செய்யும் நேரத்திற்கு மருத்துவமனைக்கு அவன் வர மகேந்திரநாதன் பாக்கியம் மற்றும் வெற்றிச்செல்வி முத்துவோடு இருந்தனர்.

அவனைப் பார்த்தவளின் கண்களில் சிறு ஒளி தோன்றி மறைந்தது. அதை கவனித்தவனுக்கு சற்றே ஆறுதலாய் இருக்க,

தாத்தா நா பில் எல்லாம் கட்டிக்குறேன் நீங்க அரசியை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு கிளளம்புங்க. . ”

இல்ல அதெல்லாம் வேணாம் நா என் வீட்டுக்கே போறேன். . ”,என்றவள் அவன் பார்வையில் அப்படியே வாயை மூடிக் கொள்ள மகேந்திரநாதனோ,

அங்க எதுக்கு எழிலு. . அவளுக்கு ஓய்வு தேவ அவ வீட்டுக்கே போவோம். . செல்வி ரெண்டு நாள் கூட இருந்து பாத்துக்கட்டும். . ”

ஏன் இப்போ அவ நம்ம வீட்டுக்கு வாரதுல உங்களுக்கு என்ன பிரச்சனை. . அம்மைக்கு மட்டும் வயசு திரும்புதா. . தனியா போய் என்னத பண்ணும். . போட்டு வள வளனு பேசாம கூட்டிட்டு கிளம்புங்க. . ”,என்றவன் பேச்சு முடிந்தது என்பதாய் வெளியே சென்றுவிட மகேந்திரநாதன் கட்டுப்படுத்திய கோவத்தோடு அமைதி காத்தார்.

மதியத்திற்கு மேல் வீட்டிற்கு வந்தவர்கள் வராண்டாவில் மாடிப்பபடிகளுக்கு கீழ் இருந்த விருந்தினர் அறையை பொழிலரசிக்காக ஒதுக்கியிருந்தனர்.

அவளை அங்கு கட்டிலில் படுக்க வைத்து அவளுக்கு சாப்பிடுவதற்கு எடுத்து வருவதற்காக வெற்றிச் செல்வி செல்ல அனைத்தையும் கைகளை கட்டிக் கொண்டு அமைதியாய் பார்த்திருந்தான் எழில்.

அரசியோ அவனை மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லைஅப்படி ஒருவன் அங்கு இருப்பதாகக்கூட மதிக்கவில்லை. அனைத்தையும் கவனித்த மகேந்திரநாதன் பாக்கியத்தோடு தனதறைக்குச் செல்ல எழிலிடம்,

செல்வி வந்தவுடனே என் ரூம்க்கு வாலே. . ”,என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

பொழிலுக்கு தேவையானதை செய்து கொடுத்துவிட்டு வெற்றிச் செல்வி எழிலோடு மகேந்திர நாதன் அறைக்குள் நுழைய கதவை சாத்திவிட்டு வருமாறு பணித்தார்.

என்ன மாமா. . என்னாச்சு எதுவும் பிரச்சனையா?”

இதுவரை இல்ல இனியும் இல்லாம இருக்குறது நம்ம வீட்டு சண்டியரு கிட்டதேன் இருக்கு. . ”

இப்போ எதுக்கு அவன வம்புக்கு இழுக்குறீக. . அவன் என்ன பண்ணான். . ”

அத்தே இருங்க என்னனு கேப்போம். . எழிலு என்னலே என்ன பணணுண?”

யம்மா நா என்ன பண்ண போறேன். தாத்தா எதைபத்தி பேசுதாகனே விளங்கல எனக்கு. . ”

ஏலேய் நடிக்காத எல்லாம் தெரியும் அந்த கேடுகெட்டபய வீட்ல போய் என்ன பேசிட்டு வந்த?”

அங்கயா அங்க என்ன பேசுனேன். . ஓ காசு வேணும்னா கேளுனு சொன்னேன் அதுக்கா இவ்ளோ கோவப்படுதீக. . ”

வேணாம் டே கோவத்த கிளப்பாத. . பொழில் புள்ளைய பத்தி என்ன சொல்லிட்டு வந்த??”

இதை சற்றும் எதிர்பாராதவனோ ஒரு நொடி திகைத்தான். அன்று இருந்த வெறியில் பேசியதையெல்லாம் யோசிக்கவேயில்லை. ஆனால் இப்போது தாத்தாவின் கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறித்தான் போனான்.

என்ன துரை அந்த பேச்சு பேசுவீக. . இப்போ பேசுங்க. . நா சொல்லவா. . பொழிலை இவன் பொண்டாட்டினு சொல்லிருக்கான். . ”,என்றவர் பாக்கியத்தையும் செல்வியையும் பார்த்து முறைக்க அவர்களோ உட்சபட்ச அதிர்ச்சியில் நின்றிருந்தனர்.

பேசுலே. . பாரு உன் பெத்தவ முகம் எப்படி இருக்குனு. . உன்னை நாங்க இப்படி வளர்க்கலையே எழிலு. . நானும் இரண்டு நாளா பாத்துட்டுதேன் இருக்கேன் அந்தபிள்ள உன் மூஞ்சியை கூட பார்க்க மாட்டேங்குது. .

அடுத்தவன் பொண்டாட்டியை இப்படி சொல்ல உனக்கு எப்படிலே வாய் வந்தது. . நாக்கு கூசல. . ”

கடைசி வரிகளில் கொந்தளித்தவனாய்,

போதும் நிறுத்துங்க. . என்ன பேச்சு பேசுறீக தாத்தா. . என்னை பார்த்தா என்ன பொம்பள பொறுக்கி மாதிரி இருக்கா. . இல்ல வேற எப்படியாவது தெரியுதா. . அத்தனை கீழ்தரமா நினைச்சுட்டீகளா என்னை.

அவ எவன் பொண்டாட்டியாவோ இருந்தா நா அவ முகத்துல முழிச்சுருக்கவே மாட்டேன். அப்படி எந்த எவனும் இல்ல புரியுதா. . அவ என் அரசி இப்போவும் எப்பவும். . ”

ஏலே எழிலு என்னல உளர்ற. . என்னாச்சு உனக்கு. . அவளுக்கு கல்யாணம் ஆயிருச்சுல. . ”

ம்மா. . அதெல்லாம் ஒரு கல்யாணமா. . தாலியை மட்டும் கட்டி அப்பன் வீட்டுக்கு துரத்திவிட்டு அவமேல பழியை போட்டு உசுரையும் விட்ட அந்த வீணா போனவன் கட்டினது தாலியும் இல்ல நடந்தது கல்யாணமும் இல்ல. . ”

என்ன எழிலு என்னென்னவோ சொல்லுத. . கொஞ்சம் விளக்கமா சொல்லுல. . ”

ஆச்சி. . அவ கதையை சொல்ல முன்னாடி இன்னொரு விசயத்தை சொல்லிடுதேன். . இத்தனை வருசமா நா கல்யாணத்துக்கு ஒத்துகிடாததுக்கு காரணம் அரசிதேன். . எனக்கு அவனா உசுரு. . அவ மட்டும்தேன் என் உலகம். . அவள தவிர வேற ஒருத்திய என்னால நினைச்சு பாக்க முடில. .

ஆனா சத்தியமா இத்தனை வருசம் அவ எங்கயிருந்தா என்ன பண்ணிணா எதுவுமே எனக்குத் தெரியாது. அவ இங்க வந்தப்போ தேன் அவளை பாத்தேன். நீங்க எல்லாம் இப்போ சொல்ற அதே வார்த்தையை தான் நானும் நம்புனேன். கல்யாணமானவள நினைச்சுட்டு இருக்குறது தப்புனு. .

ஆனா அவ கதையை கேட்டப்பறம் எந்த குற்றவுணர்வும் எனக்கு இல்ல. . ”,என்றவன் அவள் கடந்தகாலத்தை பற்றி கூறி முடிக்க அப்படியாய் ஒரு அமைதி நிலவியது.

இப்போவும் அவ என் காதலையோ என்னையோ ஏத்துக்கல. . ஆனா கண்டிப்பா ஒரு நாள் ஏத்துப்பா. . அந்தநம்பிக்கை நிறையவே இருக்கு. . அதனாலதேன் அவன் வீட்ல அன்னைக்கு ஆத்தரத்துல மனசுல இருந்த நினைப்பு வார்த்தையா வந்துருச்சு. . இப்போ சொல்லுங்க என் மேல தப்பிருக்கா?”

தப்பில்லனு சொல்லுவியா??”

ஆச்சி!!!!”

பின்ன என்னலே எப்பேர்பட்ட குடும்பம் நம்மளோடது ஊருகுள்ள எத்தனை மரியாதை தாத்தாக்கு. . அப்பேற்பட்ட வீட்டுக்கு மூத்த மருமகளா ஏற்கனவே கல்யாணம் ஆகி தாலியிறுத்தவள கூட்டிட்டு வருவியா??”

ஆச்சி!!!”

இதப் பாரு அந்த புள்ள உன் சிநேகிதியா இருக்குற வரதேன் இந்த வீட்ல மருவாத அத தாண்டி கல்யாணம் கருமாதினு பேசிட்டு வந்த என்ன நடக்கும்னு தெரியாது சொல்லிட்டேன். உங்க தாத்தாவே இதை ஒத்துகிட்டாலும் நா ஒத்துக்க மாட்டேன்வே மனசுல வச்சுக்கோ சொல்லிட்டேன். . ”

அத்தனை பேரும் மூச்சுவிடவும் மறந்து சிலையாய் நின்றிருந்தனர்.