“மருதம் – காதற் பரத்தை கூற்று (குறுந்தொகை-8)
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடியல் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே.
என்பது கிழத்தி தன்னைப் புறனுரைத்தாளெனக் கேட்ட காதற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
ஆலங்குடி வங்கனார்.
செய்தி
(கழனி = பயிர் விளையும் நன்செய் வயல், பழனம் = குளத்துநீர் பாய்ந்து பழஞ்சேறு பட்ட நிலம். ) கழனி ஓரத்திலிருந்த மரத்தில் விளைந்து முதிருந்த மாம்பழம் விழும். பழனத்திலிருந்த வாளைமீன் அதனைக் கௌவிக்கொள்ளும். இப்படிப்பட்ட நாட்டின் தலைவன் அவன் பரத்தையோடு வாழ்ந்தான். பரத்தையைப் பற்றிப் பெருமையாகப் பேசினான். பின் தன் வீட்டுக்குச் சென்றுவிட்டான். அவன் மனைவி புதல்வனைப் பெற்றெடுத்த தாய். அங்கே அவன் தன் மனைவி ஆட்டிவைக்கும் பொம்மையாய் ஆடுகிறான். அவள் சொன்னதையெல்லாம் கேட்கிறான்.
“என்ன பண்ணாலும் தப்பிச்சுரானுக அக்கா நமக்கு நேரம் சரியில்ல அததேன் சொல்லனும். . ”
“இல்ல தம்பி. . சீக்கிரமே நமக்கான நேரம் வரும். . மனச விட்றாத. . இன்னொன்னு தெரியுமா போன தடவை ஒரு பொட்டை கழுத அவன காப்பாத்துச்சே அவதேன் இப்பவும் உதவிருக்கா. . அவ கழுத்தருத்து போடனும் டே மொதல்ல. . ”
“ம்ம் சீக்கிரமே அவ கதையை முடிக்குறேன்க்கா. . அந்த அதிர்ச்சில இருந்து வெளிய வர்றதுக்குள்ள அந்த எழிலையும் போடணும். . ”
அங்கு அவர்கள் இப்படியாய் திட்டம் வகுத்துக் கொண்டிருக்க இங்கு எழிலோ அவளிடம் தன் விருப்பத்தை தெரிவிக்க காத்திருந்தான்.
ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் தமிழ் வீடு திரும்பியிருக்க வேணி அனைவருக்குமாய் வாங்கிய பொருட்களை கொடுத்துக் கொண்டிருந்தாள். பெரியவர் முதல் சிறியவர் வரை அவரவருக்கு தேவையானதை பார்த்து பார்த்து வாங்கி வந்திருந்தாள்.
“எதுக்கு வேணி இதெல்லாம் பிள்ளைகளுக்கு வாங்கினா போதாதா. . ”
“என்ன பெரியத்த இப்படி சொல்லிட்டீக. . இதெல்லாம் எப்போவோ ஒரு தடவை வாங்குறது. . அதுவும் நா வந்து முதல் தடவை வாங்குறது உங்களுக்கு எல்லாம் இல்லாம எப்படி?”
“அண்ணி மேக்கப் செட் செமயா இருக்கு இந்த வீட்ல நானும் எத்தன நாளா கேட்டுட்டு கிடக்கேன் வாங்கியே தரல. . தேங்க்ஸ் அண்ணி. . ”
என அங்கயர்கண்ணி பேசும் போதே எழில் அங்கு வர,”ஆமா ஆமா இதெல்லாம் போட்டா மட்டும் இந்த கருவாச்சி அப்படியே வெளுத்துருவா. . ”
“அண்ணே வேணாம். . சொன்னாலும் சொல்லலனாலும் உன்னை விட நா கலருதேன். . ”
“ஆமா நா அப்படியே எம்ஜிஆர் கலரு. . இவ என்னோட ஒப்பிட்டு பேசிட்டு இருக்கா. . ஏற்கனவே படிப்பு சுத்தம் இதுதல இனி கண்ணாடி முன்னாடியே தான் கிடக்க போற. . ”
“ம்கூம் பொறாமை உனக்கு. . ”,என்றவள் உள்ளே சென்றுவிட வேணி தயக்கமாய் எழிலிடம் சென்று அவனுக்கான பார்சலை கொடுத்தாள்.
ஒருநொடி தயங்கியவன் பின் ஒன்றும் கூறாமல் அதை வாங்கிக் கொண்டான். பிரித்துப் பார்க்க அழகான கண்ணாடி இருந்தது.
“ரொம்ப நல்லா இருக்கு. . தேங்க்ஸ். . ”,என்றவன் எழுந்து வேகமாய் வெளியே செல்ல கிட்டதட்ட அவன் பின்னே ஓடியவள் அவனை அழைக்க பயந்துகொண்டு அமைதியாய் நின்றாள்.
“என்னாச்சு?”
“இல்ல வந்து பொழில் அக்காக்கும் வாங்கினேன் அவுக வருவாகளானு தெரில அதான் நீங்க கொடுத்துறீகளா?”
“ம்ம் சரி குடும்மா நா கடைக்குத்தேன் போறேன் கொடுத்துறேன். . ”,என்று அவள் கொடுத்த பையை வாங்கிக் கொண்டு கிளம்பினான்.
வழியிலே வண்டியை நிறுத்தியவன் அவளிடம் தன் காதலைப் பற்றி கூறிவிடலாமா என யோசிக்க ஆரம்பித்தான். இருந்தும் அவளை ஒரே நாளில் குழப்ப வேண்டாம் என எண்ணியவனாய் பேச வேண்டியதை முடிவெடுத்துக் கிளம்பினான்.
வழக்கம் போல் அவள் வீட்டு திண்ணையில் அமர்ந்து குரல் கொடுத்தவன் அவளுக்காக காத்திருக்க ஏதோ வேலையில் இருந்தவள் தன் துப்பட்டாவில் கையை துடைத்தவாறே வெளியே வந்தாள்.
“வா அமுதா ஏன் எப்போ பாரு இப்படி திண்ணையோடேயே உக்காந்துருக்க. . வா உள்ளே வா. . ”
“இல்ல அது. . ”
“என்ன அது இதுனு. . வா உள்ளே. . ”,என்றவள் அவனுக்காக சேரை எடுத்துப் போட்டுவிட்டு கதவருகில் சாய்ந்தவாறு சென்று நின்றாள்.
“இந்தா தமிழு ஊர்ல இருந்து வந்துட்டான். அங்க எல்லாருக்குமா எதாவது வாங்கிட்டு வந்துருக்காக அதான் வேணி உனக்கு வாங்கிட்டு வந்தத கொடுக்கச் சொன்னா. . ”,என்றவன் பையை அவளிடம் நீட்டினான்.
அழகிய காட்டன் புடவை இருந்தது. ”ஹே நல்லாயிருக்கு இல்ல. . அப்பறமா போன் பண்ணி வேணிகிட்ட பேசுறேன். . சரி முதல் தடவையா வீட்டுக்கு வந்துருக்க என்ன சாப்டுற சொல்லு?”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். . ”
“ம்ம் உன்ட்ட போய் கேட்டேன் பாரு. . இரு வரேன். . ”,என்றவள் உள்ளிருந்து ஒரு தட்டில் பொங்கலும் சாம்பாரும் போட்டு எடுத்து வந்தாள்.
“இந்தா சாப்டு, தமிழு கல்யாணத்துல பொங்கல் சாப்டதுல இருந்தே டேஸ்ட் ஒட்டிகிச்சு. . இன்னைக்குதான் பண்ண முடிஞ்சுது. . சாப்ட்டு எப்படி இருக்குனு சொல்லு. . ”
“சரியான சாப்ட்டு ராணியா இருப்ப போலயே. . ”
“ஆனாலும் உன் கொழுப்பு குறையவே இல்ல டா. . ஆமா என்கிட்ட முத்து அண்ணாகிட்ட எல்லாம் நல்லாதான பேசுற அப்பறம் ஏன் ஊருகுள்ள விரைப்பா திரியுற?”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. . மத்தவுக அப்படி நினைச்சுகிட்டா நா என்ன பண்ண முடியும். . நா எப்பவும் ஒரே மாறிதேன் இருக்கேன். . ”
“ம்ம் ஆமா ஆமா. . நீ தான் சொல்லனும். . நம்ம முகிலே உன்னை பார்த்தா தெரிச்சு ஓட்றான். . சரி சொல்லு காலா காலத்துல கல்யாணம் பண்ணிக்கலாம்ல. . அன்னைக்கு தமிழ் கல்யாணத்துல எத்தன பேரு அத்தைகிட்ட கேட்டாங்க தெரியுமா?
பாவம் டா அத்தையும் மாமாவும் நீ ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்குற. . ”
“ப்ச்ச். . ”
“சும்மா உடனே எரிச்சல் ஆகாத என்னனு சொன்னாதான தெரியும். . எதாவது பொண்ணை லவ் பண்றியா அவ வீட்ல பிரச்சனை பண்றாங்களா?”
“அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. . நா லவ் பண்றதே அவளுக்கு தெரியாது. . ”
“அடப்பாவி டேய் தடிமாடு உன்னை என்னவோனு நினைச்சேன். . சரியான கள்ளுளிமங்கனா இருக்கியே. . சம்மந்தபட்ட பொண்ணுக்கே தெரியாம என்னடா லவ்வு. . சரி சொல்லு யாரு பொண்ணு எத்தனை மாசமா தெரியும்?”
“ம்ம் 18 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். . ”
“அட நாசமா போறவனே. . என்ன சொல்ற. . நம்ம ஸ்கூல் பொண்ணா??அப்பறம் ஏன்டா சொல்லல?”
“சொல்லனும்னு தோணல சொல்லல. . அப்பறம் அவ வாழ்க்கையும் எப்படி எப்படியோ மாறிப் போச்சு. . ”
“டேய் சத்தியமா திட்டிற போறேன். 15-16 வயசுல ஒரு பொண்ணை பிடிச்சு அதை அவ கிட்டேயும் சொல்லாம அதை நினைச்சே இத்தனை வருசம் கல்யாணமும் பண்ணாம எல்லார் உயிரையும் வாங்கிட்டு இருக்கியா நீ??”
“அவகிட்ட சொல்லலனா என்ன என் காதல் பொய்னு ஆய்டுமா. . அவள விட்டுட்டு வேற பொண்ணை நினைச்சு பாக்ககூட மனசு கூசுது. . என்னை என்ன பண்ண சொல்லுத. . ”
“அமுதா!!!!”
“இல்ல அரசி நா சாகுறவர அவ மட்டும்தேன் எனக்கானவ. . வேற ஒருத்திய அந்த இடத்துல உக்கார வைக்க என்னால முடியாது. . எனக்கு நம்பிக்கை இருக்கு அவ என் கைக்கு கிடைப்பா கண்டிப்பா கிடைப்பா. . இதை இப்படியே விடு வீட்ல சொல்லிட்டு கிடக்காத. . நா வரேன். . ”,என்றவன் தட்டிலேயே கையை கழுவிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
பொழிலரசிக்கோ அப்படி ஒரு ஆச்சரியம் இப்படியும் கூட காதலிக்க முடியுமா என. . அதுவும் எழிலின் முரட்டுத்தன்மையை மட்டுமே அறிந்தவளுக்கு அவனுள் இருக்கும் இந்த காதல் பெரு வியப்பையே தந்திருந்தது.
அங்கிருந்து கிளம்பியவனுக்கோ அப்போது தான் மூச்சே சீரானதைப் போன்ற உணர்வு. அவன் ஏதோ நினைத்துச் செல்ல ஏதேதோ பேசிவிட்டு வந்திருக்கிறோமே என்ற உணர்வு. இருந்தும் என்றாவது ஒரு நாள் தெரிய வேண்டிய விஷயம்தான் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு தன் வேலையை பார்க்கச் சென்றான்.
மாலை வேளையில் வீடே சந்தைகடையாய் கூச்சலில் நிறைந்து வழிந்தது. மகேந்திரநாதனும் பாக்கியமும் கோவிலுக்குச் சென்றிருக்க வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர்.
தமிழ் வேணியை அழைத்துக் கொண்டு படத்திற்குச் சென்று விட்டு அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தான். உள்ளே கேட்ட சத்தத்தில் பயந்தவளாய் வேணி தமிழிடம்,
“என்னங்க இப்படி சத்தமா கிடக்கு??”
“ஒண்ணும் பதறாத எல்லாம் இந்த ரெண்டு குட்டிச் சாத்தானுங்க வேலையாதேன் இருக்கும். . இன்னைக்கு என்ன பஞ்சாயத்தோ வா பாப்போம். . ”
உள்ளே சோபாவில் அமர்ந்திருந்த முகிலமுதனின் கையில் அங்கயர்கண்ணியின் கூந்தல் சிக்கியிருக்க அவள் தலையை பிடித்தவாறே ஈனஸ்வரத்தில் கத்திக் கொண்டிருந்தாள்.
“ஏலேய் எருமமாடு விடுடா முடியை. . நாதேன் சொல்லுதனே வேணும்னே பண்ணல. . விட்டுறா. . வலிக்குதுடா. . ”
“முடியவே முடியாது இன்னைக்கு உன் முடியை அயர்ன் பாக்ஸை வச்சு பொசுக்கல என் பேரு முகிலமுதன் இல்லட்டீ. . ”
“டேய் எழில் அண்ணன்ட்ட சொன்னேன்னு வையி. . உன் கதி அதோ கதிதேன். . மரியாதையா விட்டுரு. . ”
“சொல்லிக்கோ நானும் சொல்லுவேன். . என் சார்பா நாலு அடி வைக்கும் உனக்கு. . ”
வேணி பேந்த பேந்த விழித்தவாறு அப்படியே நிற்க தமிழ் அவன்போக்கில் சென்று டீவியை பார்க்க ஆரம்பித்திருந்தான். அந்த நேரம் அவர்களை கடந்து வந்த வெற்றிச் செல்வி இவளை கண்டதும்,
“என்ன வேணி படத்துக்கு போய்ட்டு எப்போ வந்தீக. . காபி எதாவது வேணுமா?”
“ஆங்ங் அதெல்லாம் ஒண்ணும் வேணாம்த்தே. . என்ன சின்னதுங்க ரெண்டும் இப்படி சண்டை போடுதுங்க நீங்க பாட்டுக்கு போறீங்க. . ”
“இதுகளோட மல்லு கட்ட நமக்கு தெம்பில்லத்தா…என்ன கத்து கத்துதுனு பாத்தயில்ல. . இதுகளுக்கு பூ தான் லாய்க்கு. . வெளியே போனவ இன்னும் வரல வந்தானா உண்டு இல்லனு ஆக்கிருவா. . இதுக போடுத கூப்பாடுல தலை வலியே வந்துரும் போல இருக்கு நா மாடிக்குப் போறேன். . உனக்கு எதுவும் வேணும்னா சமையகட்டுல இருக்கு எடுத்துக்கோ. . ”
“மேலும் பொறுக்க மாட்டாதவளாய் அவர்கள் அருகில் சென்றவள்,”ஏ கண்ணி முகிலா நிறுத்துங்க ரெண்டு பேரும். . என்ன இது சின்ன பசங்க மாதிரி. . ”
அண்ணி என்ற மரியாதைக்காக ஒரு நொடி கூச்சலை நிறுத்தியவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு இருக்க,
“அட அப்படி என்னதேன் பிரச்சனை. . அவதான் சின்ன பொண்ணு நீயும் இப்படி பண்ணலாமா முகிலா?”
“அண்ணி யாரு இவளா சின்ன புள்ள. . சரியான குட்டிச் சாத்தான். . என்கூட வந்து பொறந்து என் உயிரை வாங்குது. . அங்க பாருங்க உங்க கல்யாணத்துக்கு எடுத்த புதுச் சட்டை நாளைக்கு காலேஜ்ல முக்கியமான பேப்பர் பெரசன்டேஷன் இருக்கு. .
அதைதான் போட்டுட்டு போணும் ஒழுங்கா அயர்ன் பண்ணித்தானு சொன்னா இந்த லூசு டீவியை பார்த்துகிட்டே சட்டையை பொசுக்கி வச்சுருக்கா. . இவளையெல்லாம் அடிக்காம என்ன பண்ண?”
“ஐயோ சட்டைதானே போனா போகுது முகிலு. . வேற வாங்கினா போச்சு பாவம் எப்படி அழுவுறா பாரு. . ”
“இல்ல அண்ணி இவளைபத்தி உங்களுக்குத் தெரியாது வேணும்னே தேன் பண்ணிருப்பா. . இரண்டு நாள் முன்னாடி என் போன் கேம் விளையாட கேட்டா தர மாட்டேன்னு சொல்லிட்டேன். அதுக்கு பழிவாங்கதேன் இப்படி பண்ணிருப்பா. . ”
“ச்ச இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் யாராவது இப்படி பண்ணுவாங்களா?”
“என்ன அண்ணி நீங்க இவளை போய் நம்பிகிட்டு இருக்கீங்க. . ஒருதடவை எழில் அண்ணன் இவ ஒழுங்கா மார்க் வாங்கலனு எங்கப்பாட்ட போட்டு கொடுத்ததுக்கு அவங்களுக்கு முக்கியமானா வேலை இருக்குற அன்னைக்கா பார்த்து பைக் டயரோட காத்த புடுங்கி விட்டுட்டா. . சரியான ஊமைக் கொட்டான். . ”
“டேய் போதும் டா ரொம்ப பண்ணாத ஆமா நா வேணும்னேதேன் பண்ணேன். . இப்போ என்ன உனக்கு. . ஏன் வேற சட்டையே இல்லையா உனக்கு? இல்ல இந்த சட்டையை போட்டா மட்டும் அப்படியே அஜித்குமார் மாதிரி ஆய்டுவியா. . வந்துட்டான் பெருசா. . ”
என்று அவள் போக்கில் பேசிக் கொண்டே போக அத்தனை நேரம் விட்டிருந்த தலை முடியை கொத்தாய் கையில் மறுபடியும் பிடித்தவன் அவளை குனிய வைத்து தலையில் கொட்ட ஆரம்பித்திருந்தான்.
அங்கிருந்த வேணிக்கோ தலையே சுற்றியது. தன் பள்ளிக்கூட பிள்ளைகளே பரவாயில்லை எனுமவிற்கு இருந்தது இவர்களின் அட்டூழியம். . செய்யவதறியாது அவள் முழித்துக் கொண்டிருக்க வெளியிலிருந்து வந்த பூம்பாவை இருவர் முதுகிலும் மாறி மாறி நாலு அடி போட்டார்.
“நித்தம் எனக்கு இதுவே பொழப்பா போச்சு. . போய் தொலைங்க ரெண்டு பேரும். . சத்தம் வந்தது வெளக்கமாறு பிஞ்சு போய்ரும் சொல்லிட்டேன். . போய் படிக்குற வேலையை பாருட்டீ போ. . ”,என இருவரையும் துரத்தியபின் தான் சோபாவில் அமர்ந்தார்.
“நீ என்ன இதுக சண்டைய வாய பொளந்துகிட்டு வேடிக்க பாக்குறவ. . போ வேணி கொஞ்சம் தண்ணி கொண்டா குடிக்க. . புள்ளைகளா இதெல்லாம் ச்சை. . ”என்றவர் ஓய்வாய் அமர்ந்தார்.
அவருக்குத் தண்ணி எடுத்துக் கொடுத்துவிட்டு தனதறைக்குச் சென்றவளை பின்னிருந்து அணைத்து விடுவித்தவன்,
“என்ன யோசனை டீச்சரம்மாக்கு?”
“ம்ம் இல்ல இப்போ புரியுது பொண்ணு பார்க்க வந்தன்னைக்கே ஏன் தனிக்குடித்தனம் பத்தி பேசுனீகனு. . ”,என சீரியஸாய் அவள் கூற
“என்ன வேணி சொல்லுத?”
“பின்ன இப்படி ஒரு குடும்பத்தை விட்டு யாரால வர முடியும். . உயிர்ப்பா இருக்குற ஒரு வீடுங்க. . அதைவிட இந்த வீட்டோட மருமகளுங்க மூணுபேருமே எப்படி இப்படி இருக்காங்க மூணு பேரும் மூணு விதம் ஆனாலும் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா அரவணைச்சு போறாங்க. .
நம்ம காலத்துலயும் இதே ஒற்றுமையோட இருக்கனும்ங்க கண்டிப்பா. . ”
“கேக்கவே எம்புட்டு நிம்மதியாவும் சந்தோசமாவும் இருக்கு தெரியுமா. . பாப்போம் மத்த ரெண்டு மருமகளுங்க எப்படி வாராகனு. . எல்லாரும் என் பொண்டாட்டி மாதிரியே குணமா இருந்துட்டா ரொம்பவே நல்லாதேன் இருக்கும். . ”
“ஆஹா அப்படியே கிடைச்ச கேப்ல ஒண்ணும் கடா வெட்ட வேண்டாம். . ”,என்றவள் சலுகையாய் அவனோடு சாய்ந்து கொண்டாள்.
மறுநாள் கல்லூரியை அடைந்த முகிலமுதன் மைதானத்தில் அங்குமிங்குமாய் தேட முகத்தை தொங்க போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள் இளவேனில்.
“ஏன் டீ இப்படி பண்ற இன்னுமா கோவம் போல. . ”
“…”
“இளா நா தான் நைட்டே சொன்னேன்ல. . அந்த குரங்கு இந்த வேலையை பண்ணிருச்சு. . சாரிடீ. . ”
“போதும் இப்படி பாவமா மூஞ்சியை வச்சு என்ன கவுத்தது. பிறந்தநாள் அன்னைக்கு ஒரே கலர்ல டிரெஸ் போடனும்னு நினைச்சது தப்பா. . அதுகூட சொதப்புது. . ”
“ட்ரெஸ்ல என்ன டீ இருக்கு அப்போதான் நா உன்னை லவ் பண்ணுதேன்னு அர்த்தமா. . சின்ன புள்ளை மாதிரி அடம்பிடிக்காத. . புரிஞ்சுக்கோ டீ. . ”
“ம்ம் சரி சரி நல்லா சமாளிக்க கத்து வச்சுருக்க. . ”
“அப்பாடா கோவம் போச்சா. . இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீ மை பொண்டாட்டி. . ”
“தேங்க்ஸ் முகிலா. . ”
“பார்ரா வெட்கமெல்லாம் பட்றா என் ஆளு. . ”
“டேய் உடனே ரொம்ப ஓட்டாத. . சரி கிப்ட் எங்க?”
“கிப்ட்டா இதோ என் கைதேன் கிப்ட். . ”
“சரியான கஞ்சன் டா நீயி. . ”
“ம்ம் வருங்காலத்துல நம்ம பிள்ளைகளுங்கு தேவைபடும்ல அதனாலதேன் டீ இப்படி இருக்கேன். . ”
“இந்த வாயால தான் டா பொழச்சுகிட்டு இருக்க நீ. . ”