பாலை – கண்டோர் கூற்று (குறுந்தொகை-7)
வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
யார்கொ லளியர் தாமே யாரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயி லழுவ முன்னி யோரே.
என்பது செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டோர் கூறியது.
–பெரும்பதுமனார்
செய்தி
ஆருக்கும் தெரியாமல் அவளை அழைத்துக்கொண்டு அவன் தன் ஊருக்குச் செல்கிறான். அவர்களை வழியில் பார்த்தவர்கள் பேசிக்கொள்கின்றனர்.
அவன் காலில் கழல் உள்ளது. அவள் கைகளில் தொடியும், கால்களில் சிலம்பும் உள்ளன. மூங்கில் காட்டுக்குள்ளே இவர்கள் செல்கின்றனர். ஆரியர் கயிற்றின்மேல் ஏறி நடந்து ஆடும்போது அவர்கள் முழக்கும் முழவொலி கேட்கும்.
அளி = கொடை நல்கு. அளிப்போர் = கொடை நல்குவோர். அளியர் = கொடை வாங்குவோர். யார் யாருக்குக் கொடுத்தார்? அவள் தன்னை அவனுக்குக் கொடுத்தாளா? அவன் தன்னை அவளுக்குக் கொடுத்து அழைத்துச் செல்கிறானா? அளியர் என்பதற்கு இரங்கத்தக்கவர் என்று பொருள் கூறுதலும் ஒன்று.
முத்து கூறியதன் உண்மை உணர்ந்தவனாய் தான் செய்ய வேண்டியதை மனதில் குறித்துக் கொண்டவன் அவனிடம் ஒன்றும் கூறாமல் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குச் சென்று விட்டான்.
யாருமிருக்க மாட்டார்கள் என்று அவன் நினைத்திருக்க மகேந்திரநாதனும் பாக்கியமும் அதியமானோடு அமர்ந்திருந்தனர்.
“என்ன எழிலு மதியத்துக்கு மேல உன்னையும் காணும் உன் கூட்டாளியையும் காணும் எங்கே போய்டீக. . ”
“மதியத்துக்கு மேல பெருசா வேலை எதுவும் இல்லல தாத்தா அதான் கணக்கு வழக்கு பார்க்க போய்ட்டோம். . ”
“ம்ம் போதும்டே எதோ பெரிய தொழில் பண்றவன் மாதிரி ஒரேடியாதான் உழைக்க. . இன்னைக்கு வந்த அத்தனை பேரும் கேட்டது உன் கால்யாணத்தை பத்திதேன். . பதில் சொல்லி முடியல. . ”
“புரியுது தாத்தா சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்குறேன் போதுமா. . ”
“என்னலே அதிசயமா நீயே மலையெறங்கி வாராப்புல இருக்கு கல்யாண ஆசை வந்துருச்சோ. . ”
“ஏ கிழவி. . சும்மா கிளப்பி விடாத. . நானே நல்லவிதமா பேசினாலும் நீங்கெல்லாம் சும்மா இருக்க மாட்டீக போல இருக்கே. . சரி ரொம்ப களைப்பா இருக்கு நா தூங்கப் போறேன். அம்மையெல்லாம் காலையிலேதேன் வருவாகளா?”
“ம்ம் காலையிலே மறுவீட்டுச் சாப்பாடு மண்டபத்துல முடிச்சுட்டுதான் பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சு வரணும் நீயும் வந்துரு டே. . ”
“ம்ம் சரிப்பா நீங்கயெல்லாம் முன்னாடி போங்க நா நேரா வந்துரேன். . ”என்றபடி மாடிக்குச் செல்ல அங்கு முகிலமுதனின் அறையில் ஏதோ சத்தம் கேட்டு உள்ளே எட்டிப் பார்த்தான்.
அங்கு அங்கயர்கண்ணியும் முகிலுமாய் கையில் மொபைலை வைத்துக் கொண்டு ஏதோ செய்ய இவனைக் கண்டதும் சட்டென எழுந்து நின்றனர்.
“என்ன கூட்டுக்களவாணிகளா என்ன பண்ணுதீக. . என்னை பாத்தவுடனே ஏதோ மறைக்குறாப்ல இருக்கு. . ”
“அது. . அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே. . சும்மா. . ”
“ஏய் கருவாச்சி என்ன பண்ண ஒழுங்கா சொல்லிரு. . ”
“அண்ணே என்ன கருவாச்சி சொன்ன அவ்ளோதேன். . நா ஒண்ணும் கருப்பு இல்ல உன்னைவிட கலர்தேன். . ”
“ம்ம் இப்போ இது ரொம்ப அவசியம் ஒழுங்கா என்ன பண்ணீங்கனு சொல்லிரு. . ”
“இல்லண்ணே அது தமிழண்ணனுக்குதான் போன் பண்ணி விளையாடிட்டு இருந்தோம். . ”
“அவனுக்கு எதுக்கு??”,என்று ஆரம்பித்தவனுக்கு சட்டென உரைக்க தலையில் அடித்தவாறே அவர்கள் காதுபடவே முனகினான்.
“எல்லாம் பிஞ்சுலயே பழுத்துருக்கு. . பண்ற வேலையை பாத்தியா. . ஒழுங்கு மரியாதையா போனை வச்சுட்டு போய் தூங்குங்க ரெண்டு பேரும். . ஓடு போ. . ”,என கண்ணியின் தலையில் தட்டி அவளறைக்கு அனுப்பி வைத்தான்.
அங்கு தமிழோ அவர்களுக்கான அறையில் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். வேணி கதவை திறந்து உள்ளே வர முகத்தை சற்றே மாற்றிக் கொண்டவனாய் எழுந்து நிற்க பாலை வைத்துவிட்டு வந்து அவன் காலில் விழுந்து வணங்கினாள்.
“என்னாச்சு ஏன் என்னவோ போல இருக்கீக?”
“ஆங்ங் அதெல்லாம் ஒண்ணுமில்ல எல்லாம் எங்க வீட்டு குட்டிச் சாத்தானுங்க தான். . இத்தனை நேரம் போன் மேல போன் போட்டு பாடா படுத்தி எடுக்குதுங்க. . அநேகமா அண்ணே வந்துருப்பானா இருக்கும் அடங்கிப் போய் உக்காந்துருக்கும் ரெண்டும். . ”
சற்றே முகம் சிவக்க சிரித்தவள்,”யாரு முகிலையும் கண்ணியையும் சொல்றீங்களா. . கல்யாணத்துலயே பாத்தேன் ரெண்டு பேரும் துறுதுறுனு சுத்திட்டு இருந்தாங்க. . ஆனா பெரிய அத்தான் தான் ரொம்ப விரைப்பா கொஞ்சம் பயம் அவரை பார்த்தாலே. . ”
“ஹா ஹா ஆமா இரண்டும் சரியான வாலுங்க. . முகிலாவது கொஞ்சம் அடங்குவான். அந்த கழுதை யாருக்கும் அடங்காது. . அண்ணன் பாக்கதான் அப்படி ரொம்ப நல்லமாதிரி தான். . வீட்டுக்கு வந்தப்பறம் உனக்கே தெரியும். . ”
“நல்லவருதான் அதுல எந்த சந்தேகமும் இல்ல. . ஆனாலுமே கொஞ்சம் பயம் அவரை பார்த்தா. . ஆமா எல்லாரும் ஒவ்வொரு விதமா இருக்காக. . நீங்க மட்டும் எப்படி இப்படி அமைதியா பொறுமையா இருக்கீக. . ”
“ஹா பரவால்லையே அவ்ளோ நல்லவனாவா தெரியுது. . பொண்டாட்டிகிட்ட நல்லவனா இருந்தா தப்பாச்சே. . ”
“ஐய்யே என்னதிது இப்படியெல்லாம் பேசுறீக. . ”
“நாதான் சொன்னனே கல்யாணத்துக்கு அப்பறம் பேசலாம்னு. . இப்போ வந்து இப்படி சொன்னா எப்படி. . ”
மேலும் மேலும் அவளை சீண்டியவன் முகசிவப்பை ரசித்தவாறே ஒரு மாதகாலமாய் விட்டு வைத்த கதைகளை பேச ஆரம்பித்திருந்தான்.
மறுநாள் காலை அனைவருமாய் மண்டபத்திற்கு கிளம்பிச் செல்ல கடைசியாய் இறங்கி கீழே வந்தவன் தன் மொபைலை எடுத்து சில நிமிடங்கள் ஏதோ யோசனையில் இருக்க பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் அரசிக்கு அழைத்தான்.
“ஹலோ சொல்லு அமுதா. . ”
“கிளம்பிட்டியா மறுவீட்டுக்கு. . ”
“இதோ கிளம்பிட்டே இருக்கேன் டா. . ஒரு பத்து நிமிஷத்துல கிளம்புவேன். . ”
“ஓ. . சரி நா கிளம்பவும் நேரமாகும் நானே வந்து உன்னை கூட்டிட்டு போறேன் ரெடியா இரு. . ”
“அப்பாடா. . தனியா போணுமேனு கடுப்பா இருந்தது. . ரொம்ப தேங்க்ஸ் டா. . நா வெயிட் பண்றேன் நீ பொறுமையா வா. . ”
போனை வைத்தவனுக்கு மனம் கொள்ளா ஓர் உணர்வு. மீண்டுமாய் தனறைக்குச் சென்றவன் கண்ணாடியில் தன்னை சரிபார்க்க மீண்டுமாய் கொஞ்சம் பவுடரை பூசிக் கொண்டு கண்ணாடியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அவள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவன் திண்ணையில் அமர்ந்தவாறே அவளுக்கு குரல் கொடுத்தான்.
“வா அமுதா உள்ளே வா ஏன் இங்கேயே உக்காந்துட்ட. . ”
“இல்ல பரவால்ல போலாமா. . இப்போ கிளம்பினா சரியா இருக்கும். . ”
“ம்ம் இதோ வந்துட்டேன். பின்கதவை சாத்திட்டு வந்துரேன். . ”,என்றவள் கதவை சாத்திவிட்டு வெளியே வந்து வாசல் கதவையையும் பூட்டிவிட்டு அவனோடு கிளம்பினாள்.
என்னதான் இயல்பாய் அவானோடு பேசினாலும் மறந்தும் அவன் தோள்மேல் கை வைக்கவில்லை. அவனுமே அதை கவனித்திருந்தான் தான். பின்பக்க கம்பியை பிடித்தவாறே வர அவனுக்கும் மெதுவாய் வண்டியை செலுத்தினான்.
மண்டபத்தை அடைந்து அரசி உள்ளே செல்ல வண்டியை நிறுத்திவிட்டு வந்தவனை முத்து காரமாய் முறைத்துக் கொண்டிருந்தான்.
“என்ன காரியம்லே பண்ணிட்டு இருக்க. . தெரிஞ்சுதேன் பண்ணுதியா?”
“மாமா. . இப்போ ஏன் இம்புட்டு டென்சன் ஆவுற. . நேத்து வர அவ எனக்கு உரிமையில்லாதவளா நினைச்சதுனால நா அவ பக்கத்துல கூட போல. . ஆனா இப்போ அவ என் அரசி. . என்க்கே எனக்கானவ. . இதை இனி எந்த கொம்பனாலேயும் மாத்த முடியாது. . அவ்ளோ ஏன் அரசீயே நினைச்சாலும் அது நடக்காது. அதனால தேவையில்லாம கோபபடாம முடிஞ்சா எனக்கு உதவி பண்ணு இல்லையா என் போக்குல என்னைய விட்டுரு. . ”
“உன் பிடிவாதம் தெரியாதவனா நா. . என்னவோலே எனக்கு மனசு கிடந்து அடிச்சுக்குது. . ரெண்டு பேரும் நூறு வருசம் நல்லாயிருக்கணும்லே. . ஆனா அது எந்த பிரச்சனையும் இல்லாம நடக்குமானு சத்தியமா தெரில. . கடவுள் விட்ட வழி. . போ போய் சோலியை பாரு. . ”
உள்ளே சென்றவன் உணவருந்தச் செல்ல அரசி வேணியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
“நீயும் வாயேன் சாப்ட ஏற்கனவே லேட் ஆய்டுச்சுல. . ”
“ம்ம் வரேன் டா நீ போ வேணி தனியா இருக்காங்கல. . வந்துரேன். . ”,சம்மதமாய் தலையசைத்தவன் வேணியிடம் தலையசைப்போடு திரும்பிச் செல்ல ஏனோ வேணிக்கு அவளறியாமல் இருவருக்குமான புரிதல் பிடித்திருந்தது.
அதுவும் அவளின் இயல்பான அழைப்பும் அதற்கு அலட்டிக் கொள்ளாத எழிலின் உடல்பாவமும் அவளை நிச்சயம் ஒரு நொடி ஆயினும் ஏதோ சிந்திக்க வைத்தது உண்மை. .
பொழிலின் சிறு செயினும் நெற்றி வகிடில் இல்லாத குங்குமமும் அவள் திருமணமானவள் என்ற நினைப்பே வரவில்லை வேணிக்கு.
இப்படி பலப்பல அழகிய நிகழ்வுகளோடு அனைத்தும் முடிந்து மதியத்திற்கு மேல் தமிழும் வேணியும் தமிழ் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
மணமக்களை விட்டுவிட்டு வேணி குடும்பத்தார் கிளம்ப தகப்பனும் தாயும் மகளை பிரியும் நேரம் கண்கலங்கி கிளம்பத் தயாராகினர்.
அத்தனை நேரம் எதிலுமே தலையிடாமல் அவன்போக்கில் சுற்றிக் கொண்டிருந்த எழில் பெண்ணின் தந்தையிடம்,
“என்ன மாமா இப்படி கலங்கிட்டு நிக்கீக. . நீங்க ரெண்டு பேரு பாத்துகிட்ட மாதிரி பாத்துக்க இங்க மூணு அப்பா அம்மா இருக்காக. . தைரியமா சந்தோசமா போய்ட்டு வாரேன்னு சொல்லுவீகளா அதைவிட்டுட்டு. . ஆச்சி தாத்தா அண்ணே தம்பி தங்கச்சினு இத்தனபேரு இருக்கோம். . என்ன அத்தே சரிதானே. . ”,என அவன் பாணியிலேயே விரைப்பாய் கூற அதை கேட்ட அனைவருக்குமே ஒருவித புன்னகை மலர்ந்திருந்தது.
வேணியுமே ஓரளவு தன்னை தேற்றிக் கொண்டாள். அவர்கள் அனைவரும் கிளம்பிய பின் வேணி கிட்சனிற்குள் செல்ல பூம்பாவை வாசலிலேயே அவளை நிறுத்தினார்.
“இப்போ தான வந்துருக்க அதுகுள்ள உனக்கு இங்க என்ன வேலை போ போய் உன் பெட்டியில உள்ளதெல்லாம் அடுக்கு போ. . ”
“இல்லத்த எதாவது உதவி பண்ணிட்டு போறேனே. . ”
“கிளிஞ்சுது போ. . புதுபொண்ணு நிறைய பேரு பார்க்க வருவாக போய் நல்ல சீலையை எடுத்துக் கட்டிகிட்டு சீவி சிங்காரிச்சு உக்காருவியா அதை விட்டுட்டு. . ஓடு போ. . ”
அவர் படபட பட்டாசாய் பேசுவதில் முகம் மலர சிரித்தவள் மாடியில் தனதறைக்குச் சென்றாள்.
தமிழ் கீழே யாருடனோ பேசிக் கொண்டிருக்க தன் பெட்டியை எடுத்து துணியை அலமாரியில் அடுக்கி வைக்க ஆரம்பித்தாள். அவள் வேலையை முடிக்கவும் தமிழ் உள்ளே வரவும் சரியாய் இருந்தது.
“சாரி ரொம்ப நேரமா தனியா இருக்கியா. . ஊர்காரக வந்துட்டாவ அதான் பேசிட்டு வர நேரமாய்டுச்சு. . ”
“இதுல என்ன இருக்கு. . நானும் என் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சதுல பொழுது போய்டுச்சு. . ”
“ம்ம் என்ன இருந்தாலும் புது இடமில்லையா அதனால சொன்னேன். . ”
“ஆனா நீங்க யாருமே அப்படி நினைக்க விடமாட்டீக போலயே. . ஏதோ ரொம்ப நாளா பழகுன ஃபீல். சின்னத்த அவ்ளோ ஜாலியா பேசுனாங்க. . பெரிய அத்தான் அப்படி பேசுவாகனு நா நினைக்கவே இல்ல. . ”
“ம்ம் சித்தி எப்பவுமே படபடனு பேசிரூவாக. . அண்ணே அப்படி பேசும்னு நாங்களே நினைக்கல. . இனி நீயும் நம்ம கண்ணி மாதிரி தான் இந்த வீட்ல. . ”
“தனியா வளர்ந்த எனக்கு இதெல்லாம் ரொம்ப பிடிச்சுருக்குங்க. . இத்தனை மனுஷங்களோட கலகலனு ஒருமாதிரி சந்தோஷமா இருக்கு. . சொல்லப் போனா அந்த அக்கா அவுக பேரு கூட ஆங் பொழிலரசி அத்தனை நல்லா பேசினாங்க. . எனக்கு ஒண்ணு தோணிச்சு கேக்கவா?”
“ம்ம் என்ன?”
“இல்ல அவுக பெரியத்தானோட அம்புட்டு நல்லா பேசுறாக. . அத்தானும் மத்தவுககிட்ட இருக்குறமாதிரி எல்லாம் அவுககிட்ட இல்ல. . அவங்க ரெண்டு பேருக்கும் ஏன் கல்யாணம் பண்ணல?”
“இல்ல அவங்க இங்க வந்து இப்போதான் கொஞ்ச மாசம் ஆகுது. . அதுவும் போக அவுகளுக்கு கல்யாணம் ஆய்டுச்சு வேணி. . ”
“அப்படியா!!பார்த்தா தெரியவே இல்லையே. . சரடுகூட பெருசா ஒண்ணும் போட்ட மாதிரி தெரிலயே?”
“ம்ம் மெட்ராஸ் கார பழக்கவழக்கம் எப்படியோ. . அதனாலயா இருக்கும். . அண்ணணுக்கு சின்ன வயசுல இருந்தே ப்ரண்ட் அதனால அவுக பேசுறது உனக்கு அப்படி தோணிருக்கும். . ”
“ம்ம் அதுவும் சரிதான்ங்க. . ஆமா கேக்கணும்னு நினைச்சேன் எத்தன நாள் லீவு போட்டுருக்கீங்க. . நா பத்து நாளுக்கப்பறம் ஜாயின் பண்ணணும். . ”
“நானும் அதே பத்து நாள் தான் வேணி. . அப்பறம் நாம கொடைக்கானல் போறதுக்கு புக் பண்ணிருக்கேன். நாளைக்கு நைட் கிளம்பனும். . நாலு நாள்ல வந்துரலாம். . உனக்கு ஓ. கே தான?”,என்று குறும்பு பார்வை பார்த்துச் சிரித்தான்.
“நாலு நாள் தான நாகூட ஒரு ஒருவாரம் போவோம்னுல நினைச்சேன். . ”,என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கூறியவளை புரியாமல் பார்த்தவன் அவளின் இதழோர புன்னகையை கண்டு,
“ஓ. . ஒரு வாரமா போய்ட்டா போச்சு. . என் பொண்டாட்டிக்கே பிரச்சனை இல்லாதப்போ எனக்கு என்ன?”,என்றவன் அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.
மறுநாள் புதுமண தம்பதிகள் தேனிலவுக்காக கிளம்பியிருக்க மற்றவர்கள் அவரவர்களின் தின வேலையை கவனிக்கச் சென்றனர்.
ஆண்கள் அனைவரும் கடைக்குச் செல்ல எழில் தாமதமாய் கிளம்பினான். வாசலை அடைந்த நேரம் அவனுக்கு அழைப்பு வர எடுத்துப் பேசியவனுக்கு முகம் சிவந்தது.
வேகமாய் வராண்டாவை அடைந்து யாரையோ அழைத்தவன் மறுபுறம் கேட்ட பதிலில் எரிச்சலுற்றவனாய் யோசனையில் இருந்தான்.
“என்னலே காலையிலேயே எள்ளும் கொள்ளும் வெடிக்க உக்காந்துருக்க. . ”
“தாத்தா உன் தம்பி குடும்பத்துக்கு வேற வேலை பொழப்பே இல்லையா. . ஏன் என் கழுத்த அறுக்குறதயே பொழப்பா வச்சுருக்காய்ங்க. . ”
“ஏலேய் தம்பி கிம்பினு பேசிட்டு அலைஞ்ச அடிச்சு பல்லை கழட்டிருவேன். அந்த இழவெடுத்தவனுக்கு என்ன கேடு இப்போ. . ”
“ம்ம் கடையில எவனையோ வச்சு வேலைய பாத்துருக்கான். நம்ம மாட்டி விடுறதுக்காக ரெய்ட்க்கும் ஏற்பாடு பண்ணிருக்கானுவ. . ”
“ஏலேய் நம்ம கிட்ட ரெய்ட்க்கு வந்தா வெறும் கையோட தாம்லே போணும் அதுக்கு ஏன் நீ இப்படி கொழம்பிட்டு கிடக்க. . ”
“தாத்தாதாதா. . அவன் கஞ்சா எதையோ பைல நிரப்பி கடைக்குள்ள வச்சுருக்கானாம். . வந்து சிக்குனா யாரும் ஒண்ணும் சொல்ல முடியாது. . நாம கல்யாண வேலைல இருந்ததுல அவனுக்கு வசதியா போச்சு. .
எவன்னு கண்டுபிடிக்கலாம்னு அந்த கேமரா காரன கூப்டா அந்த பய எங்கேயோ போய் தொலஞ்சுருக்கானாம். . வர்றதுக்கு நாலு நாளு ஆகுமாம். . வெளில யாரையும் கூப்டா விஷயம் பரவிடும். . என்ன பண்ணித் தொலையுறது??இவனுங்களோட மல்லுகட்டுறதே என் வேலையா இருக்கு ச்சை. . ”
மொத்த குடும்பமுமே கையை பிசைந்து கொண்டு நிற்க சட்டென நினைவு வந்தவனாய் அரசிக்கு அழைத்தான்.
“சொல்லு அமுதா என்ன காலையிலேயே போன் பண்ணிருக்க?”
“உனக்கு இந்த கம்பூயூட்டர் வேலையெல்லாம் தெரியுமா?”
“ம்ம் தெரியுமே என்னாச்சு??”
“நல்லதா போச்சு இந்த செக்யூரிட்டி காமிரால ஒரு விவரம் பார்க்கணும் உனக்கு தெரியுமா??”
தெரியும் டா என்னனு சொல்லு?”
“சரி நீ கிளம்பி கடைக்குப் போயிரு நா இப்போதான் வீட்ல இருந்து கிளம்புறேன். . அப்பா சித்தப்பா எதுவும் கேட்டாகனா நா வரேன்னு சொல்லு. . அவுகள யார்ட்டையும் எதுவும் பேச வேணாம்னு சொல்லு. . ”
எனும்போதே பைக்கை கிளப்பியிருந்தான். அடுத்த பதினைந்து நிமிடத்தில் கடையை அடைந்தவன் அவளிடம் கண் ஜாடை காட்டியவாறே அலுவலக அறைக்குச் செல்ல அங்கு ஏற்கனவே அவனது தந்தையும் சித்தப்பாக்களும் இருந்தனர்.
“என்னலே பொழில இங்க வர சொன்னியாம் என்னாச்சு?”
அவன் விஷயத்தை சுருக்கமாய் கூறிமுடிக்க அதியமான் கொதித்து விட்டார்.
“வர்ற ஆத்திரத்துக்கு கழுத்தறுத்து போட்டுட்டு செயிலுக்கு போய்ரலாம் போல இருக்கு. . என்னலே நினைச்சுட்டு இருக்கானுங்க. ”
“நீ ஏன்ப்பா உன் பீபியை ஏத்திக்குற செயில்ல இருந்து இப்போதான வந்து இருக்காக. . திரும்பவும் அங்கேயே அனுப்பிற வேண்டியதுதான். . ”
“டேய் அமுதா இன்னுமாடா உங்க ப்ரச்சனை முடியல. . இத்தனை வருஷத்துல கொஞ்சமும் மாறலையா?”
“அதெல்லாம் இவனுங்க முடிக்க மாட்டானுங்க. . சரி உன்னை கூப்ட வேலையை பாரு. . போன வாரத்துல எல்லா நாள்லயும் வந்தவுகளோட விவரம் பாரு. . வரும்போது கையில இருந்தபை எவன் கையில போகும்போது இல்லையோ அந்த நாய தேன் பிடிக்கனும். . ”
அதன் பின் ஒவ்வொரு நாளுக்குமான வீடியோவை போட்டு பார்க்க ஆரம்பிக்க அரைமணி நேரத்துக்குப் பின் ஒரு வழியாய் அந்த நபரை கண்டுபிடித்தனர். அவன் முகத்தை பார்த்தவன் சில நொடிகள் யோசிக்க பின் நினைவு வந்தவனாய் முத்துவை அழைத்தான்.
“மாமா உனக்கு ஒரு போட்டோ அனுப்பிருக்கேன் பாரு அவனை எங்கேயோ பாத்துருக்கோம்லே. . யாருனு பாத்துசொல்லு. . ”
“ஒருநிமிஷம் இரு. . அவன் அந்த குடிகாரப்பய மாரியப்பன் லே. . மூணு மாசத்துக்கு முன்னாடிகூட அவன் எதோ தகராறு பண்ணான்னு வெளுத்து விட்டியே. . ஏம்லே. . ”
“ஆங்ங் அவனேதேன். . சரி நீ இப்போ உடனே கிளம்பி போய் அவன் எங்க இருந்தாலும் பிடிச்சு வை. . எப்படியும் நைட் அடிச்ச சரக்கு தெளியாம வீட்லதேன் விழுந்து கிடப்பான். . நா இப்போவே வரேன் வந்து விஷயத்தை சொல்லுதேன். . ”
“சரி மாப்பிள நா பாத்துக்குறேன். . நீ வா. . ”
“ரொம்ப நன்றி அரசி. . சரியான நேரத்துக்கு உதவி பண்ணிருக்க. . நீ பத்திரமா வீட்டுக்கு போய்ரு. . ”
“அமுதா அதான் ஆளு யாருனு தெரிஞ்சுருச்சே. . போலீஸ்ல சொல்லிர வேண்டியதுதான. . ”
“ம்ம் அப்பறம் இந்த எழிலு யாருனு அவனுகளுக்கு எப்படித் தெரியும். அவனுக ப்ளான் படியே எல்லாம் நடக்கட்டும் ஆனா கடைசில முடிவு நா எழுதுனதாதேன் இருக்கணும். .
சரி அதெல்லாம் நா பாத்துக்குறேன். . நீ பாத்து போ. . ”என்றவன் வேகமாய் சென்றுவிட்டான்.
“என்ன மாமா இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?”
“ம்ம் என்னலே பண்ண சொல்லுத பேராசை புடிச்சவனுங்க சொத்தை எதிர்பார்த்து ஏதோ பண்ண அவனுக செயிலுக்குபோற நிலைமைக்கு வந்துட்டானுங்க. . அந்த வீணா போனவன் வெளிய வந்து இப்போ தேன் ஆறுமாசம் ஆகுது. . அதுகுள்ள திரும்பவும் ஆரம்பிச்சுட்டானுக. .
எப்பவும் போல எழிலுக்கு அவனுக கொடுக்குற குடைச்சல்ல நீதான் உதவனும்னு விதி போல. . நல்ல நேரத்துல வந்த பொழிலு. . ஏலே சின்னவனே புள்ளையை கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு வந்துரு. . ”
“அதெல்லாம் பரவால்ல நா போய்க்குவேன் மாமா. . ”
“வா ஆத்தா. . நா வெளிலதேன் போறேன் விட்டுரேன். . ”,என அதியன் அவளை அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிட்டு கிளம்பினார்.
அதன் பின்னான வேலைகளை எழில் கச்சிதமாய் செய்து முடிக்க இரண்டு நாட்களில் கடைக்குப் போலீஸ் வந்தது.
எழில் சலனமேயில்லாமல் அவர்களை சோதனைக்கு அனுமதிக்க கடையில் வேலை புரிபவர்களுக்குள் சலசலப்பு ஆரம்பித்திருந்தது. அடுத்த பதினைந்து நிமிடத்தில் உள்ளே வைக்கப்பட்ட கஞ்சா பைகளோடு போலீஸ் வெளியே வர அப்போதும் எழில் எந்த உணர்ச்சியும் இன்றி நின்றிருந்தான்.
“என்ன எழிலு இதெல்லாம் ஊருக்குள்ள உங்களுக்கு எவ்ளோ மரியாத இருக்கு இப்படி பண்ணலாமா நீங்க?”
“இன்ஸ்பெக்டர் சார் யார் சொல்லி இங்க வந்தீக?”
“அதெல்லாம் சொல்ல முடியாது டிபார்ட்மெண்ட்க்கு போன் வந்தது இப்போ பொருளோட சிக்கியிருக்கு வேற என்ன வேணும்?”
“எல்லாம் சரிதேன் சார். . ஆனா யாரு சொல்லி இது இங்க வந்ததுனு கேக்கணுமே. . ”
“இதென்ன புதுகதைய கிளப்புறீக?”
“புதுசெல்லாம் ஒண்ணுமில்ல அட்ட பழசுதேன். . . . ”
“எழிலு பேச்செல்லாம் சரியில்ல சொல்லிட்டேன். . ”
“என் பேச்சு சரியாதேன் இருக்கு. . உங்க கைதேன் தடம்மாறி போச்சு சார். . ”
“எழிலு நியாயமா உங்களை ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போய்ட்டுதேன் பேசவே விடணும். . போனா போகுதேனு பார்த்தா ரொம்ப பேசுறீக. . ”
“ம்ம் பொருள் எடுத்தது என் கடையிலிருந்து அப்போ விளக்கத்தையும் இங்கனயே கொடுத்தா தானே சரியா இருக்கும். . சத்த நேரம் பொறுங்க வர வேண்டியவுக வந்துரட்டும். ”
அவர் பதில் பேசுவதற்குள் தொழிற்சங்க பெரியதலைகள் அங்கு வந்துவிட முத்து மாரியப்பனோடு வந்து சேர்ந்தான். இப்போது பொறுமையாய் சென்று மாரியப்பனின் தோளில் கைப் போட்டவன்,
“என்னலே மாரியப்பா சொல்லிரலாமா?”
இன்ஸ்பெக்டர் அவனைப் பார்த்து முறைக்க,”அவனை ஏன் சார் முறைக்குறீக. . என்னதான் சொல்றான்னு கேட்டுருவோமே. . ”
“எதுவாயிருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து பேசுங்க. . ஏறுங்க வண்டியில. . ”
“என்ன சார் இப்போ உங்களுக்கு பிரச்சனை இதை இங்க வச்சவன் யாருனு தெரியுறதா இல்ல என்னை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போறதா?”
“அது அது. . ”
“இருங்க இன்ஸ்பெக்டர் தம்பி என்னதேன் சொல்றான்னு பாத்துருவோமே. . ”என்று பெரியவர் ஒருவர் கூற கூட்டத்தில் மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
“பெரியவுகளே சொல்லிட்டாக ஏலேய் மாரியப்பா சொல்லுலே. . ”
“அது நாதேன் இதை இங்க கொண்டுவந்து வச்சேன். . குடிக்க காசு தரேன்னு சொல்லி இந்த வேலையை செய்ய சொன்னாக. . எனக்கும் இவரு மேல இருந்த கோவத்துல சரினு ஒத்துக்கிட்டேன். . ”
“என்னலே யாரு நீ புதுசா எதோ கதை சொல்லிகிட்டு இருக்க உன்னை மிரட்டி இப்படியெல்லாம் சொல்ல சொன்னாகளோ?”
“சார் நாங்க யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் கிடையாது பையை இங்க வச்சது இவன்தேன். . அதுக்கு ஆதாரமா கேமரா சாட்சி இருக்கு. . இதை யாரு சொல்லி பண்ணிணானும் அவனே சொல்லுவான். ”
“பெரிய அய்யாவோட தம்பி குடும்பத்துகாரங்கதேன் இதை பண்ண சொன்னாங்க. . இதுதேன் உண்மை எங்கன வேணாலும் வந்து சத்தியம் பண்ணுவேன். . ”
“நீயே ஒரு குடிகாரப் பய நீ சத்தியம் பண்ணா அதை கோர்ட்டும் போலீசும் நம்பணுமா?”
“என்ன இன்ஸ்பெக்டர் தம்பி வந்ததுல இருந்து நாங்களும் பாத்துட்டு கிடக்கோம் எது சொன்னாலுமே நம்பமாட்டேன்ங்கிற மாதிரியே பேசுறீக. . அதான் எழிலு இத்தனை தெளிவா சொல்லுதுல. . அதுவும் போக வச்சவனே ஒத்துக்கும் போது உங்களுக்கு என்ன பிரச்சனை. .
நியாயமா இவனை வைக்க சொன்னவனதேன் போய் நீங்க அரஸ்ட் பண்ணணும். . அதவிட்டு இங்கன வம்பு பண்ணிட்டு இருக்கியளே. . ”
ஒவ்வொருவராய் அதை ஆமோதித்து பேச ஆரம்பிக்க வேறு வழியின்றி போலீஸ் அந்த மாரியப்பனை கைது செய்து அழைத்துச் சென்றது.
“என்ன எழிலு மறுபடியும் ஆரம்பிச்சுட்டானுக போலயே. . பஞ்சாயத்தை கூட்டிருவோமா. . ”
“ஐயே சல்லி பயலுகளோட சரிசமமா மல்லுக்கு நிக்கனுமா சித்தப்பூ. . நாரப் பயலுக போய் தொலையட்டும். . ரொம்ப நன்றி சித்தப்பூ சரியான நேரத்துக்கு வந்ததுக்கு. . ”
“என்ன டே உனக்கு ஒண்ணுனா நாங்க வராமயா. . நன்றியாம்ல. . ”,என்றவாறு அனைவரும் கலைந்துச் சென்றனர்.
“எழிலு என்னத்துக்குலே இதெல்லாம் பண்ணிட்டு கிடக்கானவ?”
“ம்ம் வேறன்ன அவனை செயிலுக்கு அனுப்பினதுக்கு பழிவாங்குறானாம். என்னை குற்றவாளியா ஸ்டேன மிதிக்க வைக்க பாத்துருக்கான். நம்மகிட்ட நடக்குமா. . ”
அங்கு ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரோ போனில் சம்மந்தப்பட்டவரை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்.
“என்ன சார் இப்டி பண்ணிட்டீங்க. . இதுக்குதேன் ஆயிரம் தடவை கேட்டேன். . ஊர்ல பெரிய கை பார்த்து கை வைக்கணும் யோசிங்கனு. . நீங்கதேன் ஒண்ணும் பிரச்சனையில்ல இல்லனு சொன்னீக. . இன்னைக்கு கொஞ்சம் போய்ருந்தா என் வேலைக்கே ஆப்படிச்சுருப்பான். .
வாங்கின காசுக்கு வேலை பாத்துட்டேன். . இதுக்கு மேல என்னை இந்த பிரச்சனைல இழுக்காதீக உங்களுக்கு புண்ணியமா போகும். ”,
என்வர் சிடுசிடுத்து போறை வைக்க மறுபுறத்தில் சாமியோ வெறியேறிப் போய் அமர்ந்திருந்தார்.