“பாலை – செவிலித்தாய் கூற்று (குறுந்தொகை -15)
பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி யாய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
ஒளவையார்.
செய்தி
அவள் தான் பிறந்த வீட்டை விட்டுவிட்டு அவனோடு போய்விட்டாள். இதனை அவள் தோழி அவளை வளர்த்த நற்றாய்க்கும், நற்றாய் அவளைப் பெற்ற தாய்க்கும் சொல்லுகின்றனர்.
கோசர் அரசனின் வரியைத் தண்ட ஊரின் பொதுமன்றத்தில் கூடிய செய்தி போல அவள் அவனோடு கொண்டிருந்த நட்புறவு எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.
வரலாறு
கோசர் குடியினரில் ஒரு பிரிவினர் நாலூர்க் கோசர். நாலாப்பக்கத்து ஊர்களுக்கும் சென்று தம் அரசனுக்காக வரி தண்டுவது அவர்களது தொழில். ஊரின் பொது இடமாக விளங்கிய பொதியில் என்னுமிடத்தில் இருந்துகொண்டு அவர்கள் வரி தண்டுவர்.
அழகான பத்து நாட்கள் தன் அரசியோடு கனவுபோல் கடந்திருந்திருந்தது. அவள் காதலை வெளிப்படுத்திய பின் நிச்சயமாய் எழிலால் சாதாரணமாக இருக்க முடியவில்லை.
கடைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தவன் காலை அவள் கட்டாயப்படுத்துவதால் சாப்பிடாமல் செல்ல மாட்டான். மதியத்திற்கு மேல் நிச்சயம் ஒரு முறை வீட்டிற்கு வருபவன் சில நேரங்களில் அரசிக்குத் தெரியாமல் அவளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் சலிக்காமல் பார்த்து நிற்பான்.
இரவும் முடிந்த அளவு சீக்கிரம் வருபவன் அவள் வளவளக்கும் அத்தனை கதைகளையும் கேட்டுவிட்டு தான் உறங்கச் சென்றான். ஆனால் அன்றைய தினத்திற்குப் பிறகு அரசி மறந்தும் அவனை மாமா என்று அழைக்கவேயில்லை.
அவனும் ஏன் எனக் கேட்கவில்லை. வழக்கமாய் வீட்டில் சுடிதாரே பழகியிருந்ததால் அவள் அப்படியே உறங்கிவிடுவாள். அன்று பாக்கியத்தோடு கோவிலுக்குச் செல்வதற்காக புடவையை கட்டிச் சென்றவள் வீட்டிற்கு வந்த பின்பும் கதைபேசியே பொழுது கழிந்ததில் புடவையோடே சுற்றி வந்தாள்.
வழக்கம்போல் இரவு தனதறைக்கு வந்தவள் தன் இரவு உடையை மாற்ற எண்ணி அவனுக்கு முதுகுகாட்டி நிற்க சட்டென கட்டிலில் இருந்து எழுந்தவன் அறைக்கு வெளியே சென்று நின்று கொண்டான். அவளுக்கு ஒன்றும் புரியாமல் உடையை மாற்றிவிட்டு வந்து அவனை அழைக்க உள்ளே வந்தவன் அமைதியாய் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டான்.
“எதுக்கு இப்போ அவசரமா வெளிலே போன??”
“ம்ம் சும்மாதேன். . ”
“இல்ல உன் மூஞ்சியே சரியில்ல. . ”
“அதான் சும்மானு சொல்லிட்டேன்ல அப்பறம் என்ன மூஞ்சி சரியில்ல முகரை சரியில்லனு. . பேசாம படு டீ. . ”
“ரொம்ப தான் ஓவரா பண்ற. . நீ சொல்லாம நா தூங்க மாட்டேன். . சொல்லு. . ”
“குள்ளச்சி சும்மா இருக்குறவன சொறிஞ்சு விடாத சொல்லிட்டேன். . பேசாம போய் தூங்கு. . ”
“ம்கூம் நீ ஒண்ணும் சொல்லத் தேவையில்ல போ. . ”,என்றவள் அவனுக்கு முதுகுகாட்டி படுத்துக் கொண்டாள்.
ஆழ் மூச்செடுத்தவன் தலைகடியில் கைவைத்தவாறு எழுந்து அவள்புறம் திரும்பி படுத்து ஒற்றை விரலால் அவள் தோளை குத்தினான். தோளை சிலிர்த்துக் கொண்டு திரும்பாலே படுத்திருந்தவளை பார்த்தவனுக்கு புன்னகை அரும்ப,
“ஏ ராங்கி ரொம்ப பண்ணாத. . இங்கன பாரேன். . ”
“நீ சொன்னா நா பாக்கணுமா. . முடியாது எனக்கு தூக்கம் வருது. . ”
“ஓ. . அவ்ளோ ஏத்தமா உனக்கு. . அப்போ போ. . ”
“ஐயோ தெரியாம பண்ணிட்டேன். . சொல்லு சொல்லு. . இந்த ரகசியம் தெரிஞ்சுக்கலனா எனக்கு தலையே வெடிச்சுரும். . ”
ஒரு நொடி அவளையே பார்த்திருந்தவன் பின் மெதுவாய்,
“சொல்றேன் . . இத்தனை நாள் இருந்த மாதிரி உன் பக்கத்துல சாதாரணமா இருக்க முடில டீ. . ”
அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளின் வயிற்றினுள் ஒரு பந்தை உருட்டியது.
“அன்னைக்கு கேட்டியே யாரையுமே சைட் அடிச்சதுகூட இல்லையானு. . இப்போ தினம் தினம் பாக்குற நிமிஷமெல்லாம் உன்னை சைட் அடிக்குறேன். . இப்போகூட பேசும் போது இந்த கண்ணு கன்னம்னு பார்வை அலை பாஞ்சுட்டேதேன் இருக்கு. . இதுல எப்படி என்னை இங்க இருக்க சொல்ற. .
அதுமட்டுமில்லாம அன்னைக்கு அப்படியெல்லாம் வசனம் பேசிட்டு இப்போ இதெல்லாம் ஒருமாதிரி இருக்கு அதான். . நீ உன் காதலை சொன்னப்பறம் உன்னை பொண்டாட்டியா பாக்குறதவிட என் காதலியா பாக்குறேனோனு தோணுது.
என்ன டீ சொல்லு சொல்லுனு கேட்டுட்டு இப்போ சொன்னா அமைதியா இருந்தா என்ன அர்த்தம். . இதுக்குதேன் சொல்ல மாட்டேன்னு சொன்னது. . ”
“மாமா. . ”
“குள்ளச்சி என்னை போட்டு சித்திரவதை பண்ணாத வாயை மூடிட்டு போய் தூங்கிரு. . ”,என்றவன் நிமிர்ந்து படுத்துக் கொண்டான்.
எந்த யோசனையுமின்றி அவன் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்தாள் அவனின் அரசி. . எழிலுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது நடந்ததை உணர்ந்து தனக்குள் கிரகித்துக் கொள்ள பெரும்பாடுபட்டான்.
“அரசி!!”
“உன் அளவுக்கு கண்ணை பார்த்து எல்லாத்தையும் புரிஞ்சுக்க முடிலனாலும் ஏதோ ஒண்ணு பழைய மாதிரி நீ இல்லனு மட்டும் புரிஞ்சுது. . ஆனா இதுதான் காரணம்னு இப்போ நீ சொல்லிதான் தெரியுது.
ஆனாலும் எதையுமே வெளிக் காட்டிக்காம எப்படி உன்னால இருக்க முடியுது மாமா. . தாலி கட்டின பொண்டாட்டிகிட்ட கூட உன் உரிமையை காட்டாம எப்படி இருக்க முடியும்?”
“அரசி நீ சுத்தி வளைச்சு கேக்க வர்றது புரியுது. . ஆனா என்னை பொருத்தவரை தாலியை கட்டுறதால மட்டும் மத்த எல்லாமே நடக்கலாம்னு சொல்ல முடில. .
என்னதேன் உனக்கு என்னை தெரியும் உன்னை உயிரைவிட்டு காதலிச்சுருக்கேன்னு புரிஞ்சாலும் அதை ஏத்துக்க உனக்கு ஒரு கால அவகாசம் தேவைபட்டதுல. . அந்தமாதிரிதேன் எல்லா விஷயத்துக்குமே. .
உனக்குனு சில விஷயங்களை ஏத்துக்குறதுக்கு நேரம் வேணும் டீ. . நீ சொன்னியே கண்ணை பார்த்தே கண்டுபிடிக்குறேன்னு. . அந்த கண்ணுல பத்து நாளுக்கு முன்னாடி வரை அன்பு தெரிஞ்சுது. . உன் காதலை சொன்னப்பறமா காதல் தெரிஞ்சுது. . ஆனா இப்போ முத்தம் கொடுத்தப்போ ஒரு உரிமையும் வெட்கமும் காதலும் கலந்து இருந்துதே அதை இதுவரை நா பாக்கல டீ. . அதனாலதேன் ஒண்ணும் சொல்லல உன்ட்ட. . ”
வழக்கம்போல் அவன் பேச்சில் கட்டுண்டவளாய் அவனையே பார்த்திருந்தவள் இன்னுமாய் அவன்புறம் நெருங்கிக் கொள்ள கையணைப்பில் வைத்தவன் அவள் உச்சந்தலையில் அழுத்தமாய் தன் இதழ் பதித்தான்.
“எல்லா புருஷனும் பொண்டாட்டிக்காக இத்தனை யோசிப்பாங்களானு தெரில ஆனா என் புருஷன் மட்டும் பொண்டாட்டியை தவிர எதுவுமே யோசிக்கமாட்டான் இல்ல. . ”
“ம்ம் ஆமா ஆமா அதனாலதேன் இப்போ நா கேக்காமயே ஒண்ணு கிடைச்சுதுல. . அதுக்குதேன். . ”,என்றவன் இலகுவாய் முடித்துக் கொண்டு அவளை அணைத்தவாறே உறங்கியும் போனான்.
மறுநாள் எழுந்தவளுக்கு ஏனோ அவனை பார்க்கும் தைரியமே வராமல் போனது. காலை அவன் கடைக்கு கிளம்பும் வரையுமே கண்ணாமூச்சி விளையாடியவளை ரசித்தவனாய் கிளம்பும் நேரத்தில் மாடியிலிருந்து குரல் கொடுத்தான்.
பாக்கியமும் மகேந்திரநாதனும் வாராண்டாவில் அமர்ந்திருந்ததால் வேறு வழியின்றி அறைக்குச் சென்றவளை கதவிற்கு பக்கவாட்டிலில் இழுத்து நிறுத்தியவன் இரு கைகளையும் சுவற்றில் ஊன்றியவாறு அரைஅடி தூர இடைவெளியில் நின்றிருந்தான்.
“குள்ளச்சி காலையில இருந்து பாக்குறேன் போக்கு காட்டிட்டே இருக்கியே என்ன விசயம்?”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே. . ”
“ம்ம் நம்பிட்டேன். . நேத்து நா கேக்காமயே குடுத்தல இப்போ நானே கேக்குறேன் குடு. . ”,என கன்னத்தை திருப்பி காட்டியவாறு அவன் நிற்க அவளோ முகம் சிவக்க பார்வையை திருப்பிக் கொண்டாள்.
“இதுக்குதான் உன் கண்ல படாம சுத்தினேன். . விடு மாமா நா போறேன். . ”
“அதெல்லாம் முடியாது நல்ல புள்ளையா இருந்தவனை வம்புக்கு இழுத்தது நீ இப்போ முடியாதுனா??”
“டேய் தடிமாடு ஒழுங்கு மரியாதையா என்னை விடு இல்லனா. . ”
“இல்லனா???”
“இல்லனா நானே போய்டுவேன். . ”,என்றவள் அவன் அசந்த நேரமாய் கைகளுக்கடியில் நுழைந்து ஓடிவிட்டாள்.
“போ போ கைல சிக்காமயா போய்ருவ. . அப்போ இருக்கு உனக்கு. . ”,என்றவன் சிரித்தவாறே அவளைப் பின் தொடர்ந்தான்.
உணவை முடித்துவிட்டு கிளம்பியவன் முத்துவை பார்த்துவிட்டு கடைக்கு போகலாம் என குடோனுக்குச் சென்றான்.
“என்ன புது மாப்ள. . ஏதோ ஒண்ணு சரியில்லயே. . ”
“எல்லாம் சரியாதேன் இருக்கு. . ”
“ம்ம் அப்படியா ஆனா இந்த மொகரைகட்ட வேற ஏதோ சொல்லுதேலே. . ”
“அய்யா ராசா உன்னை பாக்க வந்தது ஒரு குத்தமா. . சரி போ நா கிளம்புறேன். . ”
“அட ஒரு பேச்சுக்கு சொன்னா இம்புட்டு வீம்பா. . உக்காருவே. . ஆனாலும் எழிலு உன்னை இப்படி பாக்க எத்தனை சந்தோசமா இருக்கு தெரியுமா. . குடும்பஸ்தன் களை தெரியுதல மூஞ்சில. . ”
லேசாய் சிரித்தவன் பதிலேதும் கூறாமல் அமைதியாக இருக்க முத்துவே வேறு ஏதோ பேச ஆரம்பித்தான். மதிய நேரத்தில் பூம்பாவையின் தாயார் தவறிவிட்டதாய் அழைப்பு வர எழில் கடையை பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதால் அரசியை தவிர அத்தனைபேரும் கிளம்புவதாய் முடிவெடுத்தனர்.
மறுநாள் மதியத்திற்குள் வந்துவிடுவதாய் கூறிவிட்டு அவர்கள் செல்ல அரசிக்குத் தான் என்னவோ போல் இருந்தது. தனிமை புதிதில்லை தான் இருந்தும் சில நாட்களாக அத்தனை பேரோடு இருந்துவிட்டு சட்டென அத்தனை பெரிய வீட்டில் தனித்திருந்தது என்னவோ போல் இருந்தது.
சிறிது நேரத்திற்கு மேல் பொறுக்க மாட்டாதவளாய் எழிலிற்கு அழைத்தாள்.
“சொல்லு அரசி என்ன இந்த நேரத்துல போன் பண்ணிருக்க?அவுக எல்லாம் கிளம்பிடாகளா?”
“ம்ம். . ”
“என்ன டீ??”
“மாமா எப்போ வருவ??”
“குள்ளச்சி என்னாச்சு??”
“தனியா இருக்க போர் அடிக்குது. . யாருமே இல்லாம என்னவோ போல இருக்கு. . ”
“சரி முடிஞ்சளவு சீக்கிரம் வரேன். . அதுவரை டீவி பாரு இல்ல கதை எழுத வேண்டியதுதான. . ”
“எதுவும் பண்ணதோணல. . சரி நா கொஞ்ச நேரம் தூங்குறேன். . கதவை பூட்டிக்குறேன். . உன்கிட்ட சாவி இருக்குல. . ”
“ம்ம் இருக்கு நா பாத்துக்குறேன். . எதுவும் சமைக்காத வரும்போது ஹோட்டல வாங்கிட்டு வாரேன் எதாவது. . ”
“ம்ம் சரி”,என்றவள் போனை வைத்துவிட்டு கதவைப் பூட்டி ஹாலிற்கு வர ஊஞ்சலை கண்டவளுக்கு மனதில் ஒருவித இலகுத்தன்மை வந்திருந்தது. அதில் சென்று அமர்ந்தவள் லேசாய் ஆட ஆரம்பிக்க அன்று இருந்த சத்தம் இன்று குறைந்திருந்தது. எழில் செல்வியிடம் அன்று கூறியது நினைவிற்கு வர முகம் அதுவாய் மலர்ந்து போனது.
மனமெங்கும் தன் அமுதனே ஆட்சி புரிந்தான். ஒவ்வொரு செய்கையிலும் பேச்சிலும் எத்தனை காதலும் பாசமும். அரசி என்றவளைத் தாண்டிய அவன் வாழ்க்கை ஒன்றுமேயில்லாதது என்பதை நன்கு உணர்ந்திருந்தாள்.
அந்த எண்ணங்களே நேற்று தன்னவனுக்கு அவளிளித்த முதல் முத்தத்திற்கு காரணம். என்றுமே ஆண்களின் நெற்றி முத்தத்திற்கு தனி அழகு உண்டு. தன்னவளை உயிராய் நேசிக்கும் ஒருவனால் மட்டுமே அத்தனை நேசத்தையும் அந்த முத்தத்தில் தேக்கி நெற்றியில் பரிசளிக்க முடியும்.
அதே போலத்தான் பெண்களாய் தன்னவனுக்கு தரும் முத்தம். நினைத்த பொழுதெல்லாம் கொடுக்க படாதது. கேட்டாலும் பல நேரங்களில் கிடைக்காதது. ஆனால் அவர்களாய் மனமுவந்து தரும் நிகழ்வு பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரை போன்று அதிசயிக்க தக்க நினைவில் நீங்காத அழகிய நினைவாய் மாறிவிடும்.
இப்படி ஏதேதோ எண்ணத்தில் இருந்தவள் சில நிமிடங்களில் கண்ணுறங்கிப் போனாள். மாலை ஏழு மணியளவில் முத்துவிடம் கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பியவன் அவர்களுக்கான இரவு உணவை பக்கத்து ஹோட்டலில் வாங்கிக் கொள்ள வாசலிலிருந்த பூக்கார பெண்மணி அரசிக்காகவென பூவை கொடுத்து அனுப்பினார்.
கதவை திறந்தவன் தங்களறைக்குச் செல்ல எத்தனிக்க பின் ஏதோ ஒரு உந்துதலில் ஹாலிற்குச் சென்றான். ஊஞ்சலில் காலை சுருக்கிக் கொண்டு உறங்கியவளை பார்த்தவனுக்கு எத்தனை வருட கனவு இவளை இப்படி இந்த வீட்டில் ஒருத்தியாய் பார்க்க வேண்டுமென்பது என நினைத்தான்.
சத்தமில்லாமல் அவளருகில் சென்றவன் மண்டியிட்டு அமர்ந்து அவளையே பார்த்திருந்தான். லேசாய் அவள் கன்னம் வருடியவன் மென்மையாய் அதில் தன் இதழ்பதிக்க சட்டென அவள் விழித்துக் கொண்டாள்.
ஒன்றும் நடக்காததை போல் அவன் அப்படியே அமர்ந்திருக்க எழுந்து அமர்ந்தவளோ,
“இப்போ நீ என்ன பண்ண?”
“நானா நா என்ன பண்ணேன். . ஒண்ணும் பண்ணலையே. . ”
“பொய் சொல்லாத. . ”
“ஒண்ணும் பண்ணலங்குறேன். . சரி நீ சொல்லு என்ன பண்ணிண மாதிரி உனக்கு தோணிச்சு?”,என சீண்டலாய் அவளையே மடக்கினான்.
“அது அதெல்லாம் தெரில. . வந்தா எழுப்ப மாட்டியா. . ”
“எல்லாம் என் நேரம் சிவனேனு வேலை பார்த்தவன போன போட்டு வானு கூப்ட்டுட்டு இப்போ என்னனா சண்டகோழி மாதிரி சண்டை போட்டுட்டு கிடக்க. . ”,என்றவன் எழுந்து ஊஞ்சலில் அவளருகில் அமர்ந்து வேகமாய் ஊஞ்சலை ஆட்டினான்.
“தடிமாடு சொல்லிட்டு உக்கார மாட்டியா”
“குள்ளச்சி என்ன நீ வந்ததுல இருந்து எதாவது சொல்லிட்டே கிடக்க. . சேட்டை கூடிருச்சு. . கொஞ்சம் கவனிச்சு விட்டாதேன் சரிப்படுவ போலயே. . ”
“ம்ம் ஆமா ஆமா. . ”
“குள்ளச்சி இந்தா கடை வாசல்ல இருக்க பூக்காரம்மா கொடுத்தாக உனக்குனு. . ”
கையை பார்த்தவள் ஒன்றும் கூறாமல் அவனுக்கு முதுகு காட்டி அமர முகம் மலர அதை கையிலெடுத்தவன் அவள் தலையருகில் கொண்டு சென்று பின் அப்படியே நிறுத்தினான்.
“எப்படி டீ வைக்கணும்??”
இருந்த பதட்டம் நாணம் அனைத்தையும் தாண்டி அவனை முறைத்தாள் பொழிலரசி.
“ஏய் முறைக்காத எனக்கு என்ன தெரியும். . இதே பொழப்பாவா சுத்திட்டு இருந்தேன். சத்தியமா எப்படி வைக்கணும்னு தெரில. . ”
“உன்னையெல்லாம். . ”,அங்கு டேமிளில் இருந்த ஹேர்பின்னை எடுத்து வந்தவள் அவனிடம் நீட்டிவிட்டு மறுபடியும் திரும்பி நின்றாள். அவளின் முக பாவங்களையெல்லாம் ரசித்தவனாய் அதை அவளுக்கு சூட்டிவிட்டு தோள்பற்றி தன்புறம் திருப்பினான்.
“தூங்கும்போது என்ன பண்ணேன்னு இப்போ சொல்றேன். . ”,என்றவன் அவளை அப்படியே கைகளில் தூக்கிக் கொள்ள விழி தாழ்த்திக் கொண்டவளாய் தன் கரத்தை மாலையாய் அவன் கழுத்தில் போட்டுக் கொண்டாள்.
தங்களறைக்குச் சென்றவன் கட்டிலின் அருகில் இறக்கிவிட்டு அவள் முகம் நோக்க விழிப் பார்வை தாங்காதவளாய் கட்டிலின் ஓரத்தை பற்றியவாறு திரும்பிக் கொண்டாள்.
“ஏய் குள்ளச்சி இங்க பாரு. . ”
“…”
“நீ இப்படியெல்லாம் பண்ணினா அப்பறம் நடக்குற எதுக்கும் நா பொறுப்பில்ல சொல்லிட்டேன். . ”
“…”
“நா பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன். . என்றவன் அருகில் வர நொடியும் தாமதிக்காது அவனை மார்போடு அணைத்துக் கொண்டாள்.
“அரசி!!!”,என்றவனுக்கு அதை தவிர பேசுவதற்கு எதுவும் இருந்திருக்கவில்லை. அவள் முகத்தை கையிலேந்தியவன் முதல் முறையாய் தன் காதலை முத்தத்தால் வெளிப்படுத்தினான்.
இதழோடு இதழ் கலந்த நொடி அவன் விழிகளில் இருதுளி நீர். அதை உணர்ந்தவளுக்குமே கண்கள் கலங்கியது. சில நிமிடங்களில் விடுவித்தவன் அவள் கண்ணீர் துடைக்க அவள் அவன் விழி நீரை இதழ் கொண்டே ஒற்றியெடுத்தாள்.
“மாமா. . ”
“…”
“இனி ஆயுசுக்கும் நீ அழக்கூடாது. . போதும் நீ பட்ட கஷ்டமெல்லாம். . இந்த அரசி எப்பவுமே உன் பாசத்துக்கு அடிமைதான். உரிமையிருந்தும் விலகி நிக்குற கண்ணியம் ரொம்ப சிலருக்குத்தான் உண்டு மாமா. .
இப்போகூட இந்த முத்தத்துல எனக்கான உன் தவிப்பை தான் உணர முடிஞ்சுதே தவிர உன் ஆசைங்கிற ஒண்ணு இல்லவே இல்ல. . இந்த அரசியை உன் அரசியா மொத்தமா ஏத்துப்பியா. . அது மட்டும்தான் உன் காதலுக்கு என்னால கொடுக்க முடியுற அதிகபட்ச மரியாதையே. . ”
“அரசி!!!”
“இல்ல மாமா நிஜமாதான் சொல்றேன். . ஒரு பொண்ணா உயிரை விட பெருசாசா நினைக்குற விஷயத்தை அவளே விருப்பபட்டு தன் புருஷனுக்கு கொடுக்குறதவிட பெரிய விஷயம் என்ன இருக்க முடியும். . கல்யாணத்தோட அழகே அதுதான. .
முன்னப் பின்ன தெரியாதவங்கள பெத்தவங்க பார்த்து இவன்தான் உன் வாழ்க்கைனு சொல்லி அவனோட அனுப்பும் போது நம்பிக்கைங்கிற ஒண்ணைத் தவர எந்த அடிப்படையில தாம்பத்யம் நடக்குது சொல்லு. .
ஆனா அந்த பொண்ணோட நம்பிக்கையை ஆயுசுக்கும் காப்பாத்துற பொறுப்பு இருக்குனு சில பேர் மறந்துறாங்க. . இது ஆண்களுக்கும் கண்டிப்பா பொருந்தும் தான். இந்த நம்பிக்கைங்குற ஒரு விஷயம் உடைபடும் போது அந்த உறவுக்கான மதிப்பு பூஜ்யத்துக்கும் கீழே போய்டுது. .
நீ ஒரு நாள் சொன்னியே இந்த ஆசை தாம்பத்யமெல்லாம் கண் இமைக்குற நேரத்துல நடக்குற ஒரு விஷயம்னு. . உண்மைதான் ஆனா நம்பிக்கையும் அன்பும் இல்லாம தொடங்குற அந்த தாம்பத்யம் கண்டிப்பா நிலையானதா தூய்மையானதா இருக்காது.
அந்த விதத்துல இப்போ நா உன்னை ஏத்துக்கோனு சொல்றது உன் உடல் உணர்ச்சியை தீர்த்து வைக்குறதுக்காக சொல்றது இல்ல. உன் மேல அசைக்க முடியா அத்தனை நம்பிக்கையும் அன்பும் எனக்கு வந்துருக்கு அது எப்பவும் மாறாதுனு சொல்றதுக்காக தான். . ”
அதற்கு மேல் அவள் பேசுவதற்கு வாய் வார்த்தைகள் ஒன்றுமில்லாமல் போனது. கவிதையாய் தன்னவளை கையாளத் தொடங்கியிருந்தான். பதினெட்டு வருட காதல் தேடல் அனைத்திற்குமான விடையை அரசி தன் அமுதனுக்கு கொடுத்திருந்தாள்.
அந்த முரடனுக்குள் இருக்கும் மென்மையை உணர்ந்திருந்தாள். தனக்கே தனக்கான பொருளை பக்குவமாய் பாதுகாப்பாய் கையாளும் குழந்தையின் பாவம் அவன் உடல்மொழியில். அவன் மீதான காதல் நூறு மடங்காய் பொங்கி பெருகியது அரசியின் இடத்தில்.
காதல் கடலில் கரை கண்டு ஓய்ந்தவர்கள் இன்னும் ஒருவரின் பிடியில் மற்றவர் இருக்க எழில் ஒன்றுமே பேசவில்லை. .
“மாமா. . ”
“ம்ம்”
“ஏன் எதுவும் பேச மாட்ற. . ”
“நா உன்னை காதலிச்சத்துக்கு கூட காரணம் கிடைக்கும்னு தோணுது நீ ஏன் டீ இப்படி உருகுற எனக்காக. . ஒருவிதத்துல சொல்லப்போனா காதலை மறைச்சு வச்ச கோழை தான நா. . ”
“உன் சுயநலத்துக்காக மறைக்கலையே என் வாழ்க்கை நல்லாயிருக்கும்னு தான அப்படி பண்ண. . ”
“அதுக்கப்பறமாவது உன்னை தேட முயற்சி பண்ணிருக்கணும்ல. . ஆனா நிசமாவே உன்னை தேடி வரத் தோணல அரசி. . வந்து உன்னை காதலிக்குறேன்னு சொல்லி தேவையில்லாம உன்னை கஸ்டபடுத்த தோணல. .
உன்னை பத்தி ஆயிரம் நினைப்பு என் மண்டைக்குள்ள இருந்தாலும் உன்னை நினைச்சாலே மனசுல வர்ற முதல் முகம் எது தெரியுமா. . உங்கம்மா போனப்போ நா உங்க வீட்டுகுள்ள நுழைஞ்சப்போ பார்த்த எந்த உணர்ச்சியுமே இல்லாத அந்த முகம்தேன். .
ஏன் எதுக்குனே சொல்ல முடியாம ஒரு வேதனை அப்போ இருந்தே உனக்கான ஆறுதலா உன் வேதனையை போக்குற ஒரு மருந்தா நா இருக்கணும்னு நினைச்சுருக்கேன். . அப்படியிருக்க காதல் கத்திரிக்கானு சொல்லி உனக்கு விருப்பமில்லாம போய் என்னடா நல்லவன்னு நினைச்ச இவன் இப்படி பண்ணிடானேனு நீ சங்கடப்பட்டு ஒரு நொடி முகம் சுணங்கிருந்தாலும் சத்தியமா சொல்றேனே உயிரோட செத்துருப்பேன் டீ. . ”
“மாமா ஏன் இப்படியெல்லாம் பேசுற. . ”
“இல்ல அரசி இப்போ என்னோடவளா உன்னை ஆக்கின திமிரோ எதையோ சாதிச்சுட்ட பெருமையோ துளிகூட எனக்கு இல்ல. . நீ சொன்ன மாதிரி இத்தனை வருசம் பாதுகாத்து காப்பாத்தின என் காதலையும் என்னையும் என் அரசிக்கே கொடுக்குற விதியை அந்த ஆண்டவன் எனக்கு அமைச்சுருக்கானேனு சொல்ல முடியாத அளவு சந்தோசம்தேன் இருக்கு.
கற்புங்கிறது ஆம்பளைக்கும் உண்டு டீ. . முன்ன எல்லாம் கேப்பியே ஏன் டா கல்யாணம் பண்ணிக்கலனு. . மனசு முழுக்க உன்னை வச்சுட்டு இன்னொரு பொண்ணோட . . மனசு வரல அரசி. . ”,எனும்போதே கண் கலங்கியது அவனுக்கு. .
“மாமா. . ”
“இல்ல அதுக்காக காதலிச்சு ஏதோ சூழ்நிலையில சேர முடியாம போய் குடும்பத்துக்காக கல்யாணம் பண்றவங்க எல்லாம் தப்பு பண்றாகனு இல்ல. . ஏன் இன்னும் ஒரு வருசத்துக்குள்ள நீ வராம போய்ருந்தா நானே கூட குடும்பத்துக்காக கல்யாணம் பண்ணிருப்பேனோ என்னவோ. .
ஆனா யாரோ ஒருத்தி கழுத்துல தாலி கட்டுற முந்தின செகண்டு உன் நினைப்பை வேரோட அறுத்து எறிஞ்சுருக்கணும் பாரு. . சாவை விட கொடுமையான நரகம் டீ அது. . நினைச்சாலே மூச்சுமுட்டுது எனக்கு. . அந்த தண்டனையை எனக்கு கொடுக்காம காப்பாத்துன ஆண்டவனுக்கு எத்தனை தடவ நன்றி சொன்னாலும் பத்தவே பத்தாது. .
“மாமா எனக்கு உன்னை மாதிரியே ஒரு புள்ள தான் வேணும். . அவனுக்கும் உன்னை மாதிரியே பொண்டாட்டியை உயிருக்கு உயிரா காதலிக்க கத்துக் கொடுக்கணும். . ”
“ம்ம் இந்த சென்மத்துல இந்த எழிலமுதனை மாதிரி பொண்டாட்டியை காதலிக்க வேற யாராலையும் முடியாது டீ அது என் புள்ளையா இருந்தாலும் சரி. . ”என்றவன் இன்னுமாய் அவளை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.