பாலைதலைவி கூற்று

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய

உலைக்க லன்ன பாறை யேறிக்

கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்

கவலைத் தென்பவவர் சென்ற வாறே

அதுமற் றவலங் கொள்ளாது

நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. .

ஓதலாந்தையார்

செய்தி

கிழவன் பிரிவைப் கிழத்தி தாங்கமாட்டாள் என்று கவலைப்பட்ட தோழிக்குக் கிழத்தி சொல்கிறாள்.

அவர் பிரிவை நான் தாங்கிக்கொள்வேன்.  அவர் சென்ற ஊர் எப்படிப்பட்டது என்பதை ஊரார் சொல்வதை எண்ணும்போதுதான் என் மனம் வேதனைப்படுகிறது.  கறையான் புற்றைப் போன்று ஆழமுள்ள சிறிய சுனைகள் பல இருக்குமாம்.  

கொல்லன் உலைக்களத்தில் இரும்பை அடிக்கும் பணைக்கல்லைப் போன்ற பாறைகளின்மேல் ஏறி எயினர் கொடிய அம்புகளை எய்யும் மலைப்பிளவுகள் இருக்குமாம்.  ( அவர் சுனையில் தவறி விழுந்துவிடுவாரோ? அவர்கள் எய்யும் அம்பு அவர்மீது தவறிப் பாய்ந்துவிடுமோ? – இதுதான் கவலை என்கிறாள் கிழத்தி)

வழக்கத்தை விட அத்தனை உற்சாகமாய் எழுந்தமர்ந்தான் எழிலமுதன். இரவு முழுவதும் தூங்காமல் இருந்தபோதும் அத்தனை தெளிவு மனதிலும் உடலிலும். அப்படியே சென்று குளித்து தயாராகி வந்தவன் கீழே செல்ல அவனுக்காக மொத்த குடும்பமும் காத்திருந்தது சாப்பாடு மேஜையில்.

ஆனால் ஒரு பேச்சு சத்தமும் இல்லாத அப்படியாய் ஒரு அமைதி. எதையும் சமாளிப்பேன் என்ற உறுதியோடு சென்று அவன் அமர அவனுக்கு எதிர் இருக்கையில் இருந்த அங்கயர்கண்ணி பாக்கியத்தை செய்கை காட்டி கோவமாய் இருப்பதாய் முகத்தை அஷ்டகோணல் செய்தாள்.

இருந்த மனநிலையில் சட்டென எழில் புன்னகைத்துவிட கண்ணியோ தன்னை காட்டிக் கொடுத்து விடுவானோ என்ற பதட்டத்தில் தலை குனிந்து கொண்டாள்.

“உங்கிட்ட பேசதாம்லே காத்துட்டு கிடக்கோம். . ”

“தெரியுதுப்பா சொல்லுங்க. . என்ன விஷயம். . ”

“ஆனாலும் அழுத்தம் பிடிச்ச பய டே நீ. . ஒண்ணுமே நடக்காத மாறி கேக்கத பாரு. . எல்லாம் உன் கல்யாணத்தை பத்திதேன். . ”

“சரி சொல்லுங்க. . ”

“இதுல சொல்ல என்ன இருக்கு நீ எப்போ சொல்லுதியோ கல்யாண தேதியை குறிக்க வேண்டியதுதேன். ”

“சொல்ல வேண்டியவுக ஒண்ணும் சொல்லாம இருக்காகளே!”

“ம்ம் ஆமா ஆமா நா சொல்லித்தேன் எல்லாம் நடக்குதாம்ங்கும். . அதான் குடும்பமே எனக்கு எதிரா போர்கொடி தூக்குதே. . நல்லதச் சொன்னா எவனுக்கும் மண்டையிலே ஏறாது. . ”

“ஏ கிழவி இங்க யாரும் உன்னை எதிர்த்து நிக்க நினைக்கல. . என் பக்க நியாயம் புரிஞ்சு பேசுறாக. . புரிஞ்சுக்கோ அவ மட்டும்தேன் என் வாழ்க்கை. . உன் காலத்துக்கு அப்பறமும் இந்த குடும்பம் இதே சந்தோஷத்தோட இருக்கணும்னு உனக்கு நினைப்பிருக்கா இல்லையா. .

கடவுள் புண்ணியத்துல நம்ம வேணி தமிழுக்கு கிடைச்ச மாதிரி எனக்கு என் அரசி கிடைச்சுருக்கா. . அவுக ரெண்டு பேருமே நம்ம அம்மையும் சித்தியும் மாதிரி ஒத்துமையாதேன் இருப்பாக. .

இதுக்கு மேல உனக்கு என்ன நல்லது நடக்காதுங்குற. . இதுவரை நானா எனக்காக எதாவது கேட்டுருக்கேனா இனி ஆயுசுக்கும் எதுவும் கேக்கவும் மாட்டேன். . என் அரசியை என்கிட்ட நல்லபடியா கொடுத்துருங்க. . வேற ஒண்ணுமே வேணாம். . உன் சம்மதமும் முக்கியம்னுதேன் இத்தனை தூரம் பேசுறேன். . கொஞ்சமாவது புரிஞ்சுக்கோ ஆச்சி. . ”

அத்தனை பேரும் பாக்கியத்தையே பார்த்திருக்க பூம்பாவை தான் பட்டென பொரிந்து தள்ளினார்.

“அத்தே நம்ம புள்ள எம்புட்டு பக்குவமா பேசிட்டு இருக்கான் உங்களுக்கு என்ன இம்புட்டு பிடிவாதம். . பொழிலு நம்ம வீட்டு புள்ள அவ்வளவுதேன். . அதை தவிர கண்டதையும் போட்டு நினைச்சு குழப்பி பிள்ளைக வாழ்க்கையை கெடுக்காதீக சொல்லிட்டேன். ஊர்ல எவன் எப்படி வேணா பேசிட்டு போட்டும் அவனா வந்து நம்மளோட நித்தமும் வாழ போறான். நம்ம புள்ளையா இருக்கப் போய் நம்மளயெல்லாம் மதிச்சு இத்தனை விளக்கம் கொடுத்துட்டு கிடக்கு. . சரினு சொல்லுவீகளா சும்மா. . ”

மலர் அவரை சற்றே அமைதியாய் இருக்கும்படி அடக்க பாக்கியத்திடம் சற்றே விசும்பல் வெளிப்பட்டது. அத்தனை பேரும் பதறிப் போய் நிற்க எழில் சற்றும் யோசிக்காமல் சென்று அவர் காலடியில் அமர்ந்தான்.

“ஏ கிழிவி இப்போ எதுக்கு இப்படி பண்ணிட்டு கிடக்க. . ”

“எய்யா எழிலு. . உன்னை பத்தி தெரிஞ்சும் என்னனென்னவோ பேசிட்டேன்யா. . அந்த காலத்து கிழவியில்ல. . அதான் புத்தி சில விசயத்தை ஏத்துக்க சங்கடபடுது. . ஆனா நேத்துல இருந்து உன் முகத்துல சந்தோசத்த பாத்தப்போ எம்புட்டு நிறைவா இருந்துச்சு தெரியுமா. . அதைவிட இந்த குடும்பமே உனக்காக துணை நிக்கும் போதுதேன் இன்னும் புரிஞ்சுது. .

உன் நல்ல மனசுக்கு எந்த குறையும் வராதுய்யா. . உன் அரசியோட நூறுவருசம் நல்லாயிருப்ப நீயி. . சந்தோசமா அவளை உன் பொண்டாட்டியா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வா. . போதும் ரெண்டு பேரும் வாழ்க்கையில பட்ட கஷ்டமெல்லாம் போதும். . எவன் என்ன சொல்லுவான் என் பேரனை. . அப்படி எவனாவது எதாவது பேசினா நானே வகுந்துருவேன் வகுந்து. . என் காலத்துக்குள்ள என் பூட்டன்களையும் பாத்துட்டா இந்த கிழவிக்கு அதைவிட வேற என்ன வேணும். . ”

முகில் சத்தமாய் ஒரு விசிலடிக்க அங்கயர்கண்ணி சந்தோசத்தில் ஆர்பரித்தாள். அனைவரின் மனதுமே மகிழ்ச்சியில் நிறைந்து வழிய வெற்றிச் செல்வி மட்டும் சற்று தயக்கமாய் கணவரையும் மாமனாரையும் ஏறிட்டார்.

“மாமா இதுவரை நீங்களும் இவுகளும் இந்த விசயத்துல ஒண்ணுமே சொல்லலியே. . ”,என மெதுவாய் பேச்சைத் தொடங்கினார். மறுபடியும் அங்கு ஒரு அமைதி.

“நா சொல்ல இதுல ஒண்ணுமில்ல செல்வி. . என் பிள்ளைகளும் குடும்பமும் இத்தனை சந்தோசமா இருக்கும்போது எனக்கு என்ன கல்யாணத்தை ஜாம் ஜாம்னு முடிச்சுருவோம். . முதல்ல பாக்கியத்தை மாதிரி எனக்கும் இதுல அத்தனை உடன்பாடு இல்லாமதேன் இருந்தது. ஆனா அதியமான்தேன் என் மனசை மாத்தினான். ”

என்றதும் தான் வெற்றிச்செல்வியின் முகம் சிரிப்பைக் காட்டியது. எழிலுமே ஒரு நொடி உருகித்தான் போனான்.

“மன்னிச்சுருங்கப்பா. . உங்ககிட்ட சொல்ல கூடாதுனு எல்லாம் இல்ல. . ஆனா நீங்களும் எதாவது வேண்டாம்னு சொல்லிருவீகளோனு பயம் அதேன். . ”

“விடு டா அப்பன் பையனுக்கு நடுவுல என்ன மன்னிப்பு. . எனக்கு நேத்து நீ இந்த விசயத்தை சொன்னவுடனே ரொம்பவே சந்தோசம்தேன். பொழிலை எப்பவுமே என் மகளாதேன் நா பாத்துருக்கேன். ஒருவேளை அவ இந்த ஊர்லயே இருந்திருந்தா நானே அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சுருப்பேன்.

இருந்தும் இப்போ நிலைமை வேற அதனால அம்மையும் அப்பாவையும் மீறி எதுவும் பண்ண வேணாமேனுதேன் பொறுமையா இருந்தேன். அப்பாகிட்ட பேசினேன் அவரும் புரிஞ்சுகிட்டாரு. . இருந்தாலும் அம்மையை நினைச்சு கொஞ்சம் பயம்தேன் எனக்கு. .

அப்பாவ பேசச் சொன்னா அவரு சொன்னாரு ,நா சொல்லி அவ மனசை மாத்தினாலும் நாளைக்கு கல்யாணத்துக்கு அப்பறம் எதோ ஒரு சூழல்ல பொழிலை அவ எதாவது சொல்லிர கூடாது. அவளே மனசார இந்த கல்யாணத்தை ஏத்துகிட்டாதேன் எல்லாருக்கும் நல்லதுனு சொன்னாரு.

எனக்குமே அதான் சரினு பட்டுது. அதனாலதேன் நானோ அப்பாவோ இந்த விசயத்துல வாயே தொறக்கல. . எது எப்படியோ கடவுள் புண்ணியத்துல எல்லாம் நல்ல படியா முடிஞ்சுது. இனி ஆக வேண்டியதை பார்க்கலாம்.

அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்தை வச்சுப்போம். தென்காசில அந்த பெரிய கல்யாண மண்டபம் இருக்கே அங்கேயே புக் பண்ணிகிடலாம். என்னலே எழிலு சந்தோசம் தானே?”

“ப்பா. . அவ்ளோ ஆடம்பரமா எல்லாம் வேணாம்ப்பா ஏழு கழுதை வயசுல இதெல்லாம் எதுக்கு கல்யாணத்தை நம்ம குலதெய்வமான குற்றாலம் கோவில்ல வச்சுப்போம். . வேணா தொழில் வட்டத்துக்காக வரவேற்பு தென்காசில வச்சுருவோம். . கல்யாண செலவுக்கு பதிலா நாலஞ்சு ஆசிமத்துக்கு ஒரு நாளுக்கான மூணு வேளை சாப்பாட்டையும் நாம பொறுப்பெடுத்துப்போம். . என்ன சொல்லுதீக. . ”

“ஏலேய் உன்னோட இந்த மனசுக்காகவே உனக்கு எந்த குறையும் வராதுலே. . நீ சொல்லிட்டல சித்தப்பனுங்க எப்படி ஜாமாய்க்குறோம்னு மட்டும் பாரு. . ”,என அகத்தியன் கூற அடுத்த கல்யாணத்திற்கான களை கட்ட ஆரம்பித்திருந்தது பெரிய வீட்டில்.

உணவை முடித்துவிட்டு தனதறைக்கு வந்தவன் அரசியை அழைத்தான்.

“சொல்லு அமுதா அங்க ஒண்ணும் பிரச்சனையில்லையே. . ”

“ம்ம் அதெல்லாம் ஒண்ணுமில்ல. . ஏன் நா இருக்குற இடம் எப்பவுமே பிரச்சனையாதேன் இருக்குமா?”

“அப்படி கேக்கல டா நீ பண்ணி வச்சுருக்க காரியத்துக்கு எப்போ என்ன நடக்குமோனு பக்கு பக்குனு இருக்கு அதான் கேட்டேன். ”

“ம் நடக்கும் அடுத்த முகூர்த்தத்துல எனக்கும் அரசிக்கும் கல்யாணம் நடக்கும். . ”

“என்ன சொல்ற. . ஆச்சி சம்மதிச்சுட்டாங்களா?”

“ம்ம் உலகமகா ராங்கி உன்னையவே சம்மதிக்க வைக்கும்போது அந்த கிழவியெல்லாம் எம்மாத்திரம் சொல்லு. . ”

“ஆனாலும் சரியான அமுக்குனி டா நீ. . நல்ல உர்றான்கொட்டான் மாதிரி சுத்திட்டு என்ன வேலையெல்லாம் பண்ற. . ”

லேசாய் புன்னகை அரும்பியிருந்தது எழிலமுதனுக்கு.

“தேங்க்ஸ் அமுதா. . ”

“எதுக்கு??”

“இல்ல சும்மா சொல்லனும்னு தோணிச்சு. . அதான். . ”

“ம்ம் சரி வச்சுரவா. . ”

“ம்ம்”

“அரசி. . ”

“சொல்லு. . ”

“ஆங்ங் ஒண்ணுமில்ல சும்மாதேன் கூப்ட்டேன். . வச்சுரேன். . ”,என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்ட பின்பும் போனையே வெறித்துப் பார்த்திருந்தான்.

சொல்ல முடியா ஒரு வித உணர்வு மனதில். ஏதோ யுகயுகமாய் வாழ்ந்துவிட்ட மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்து வழிவதை போன்ற உணர்வு. பொதுவாய் சொல்லப்படாத காதல் வெல்லாது என்பதுதான் நிதர்சனம். ஆனால் அதையும் கடந்த அவனின் அதீத அன்பு அந்த காதலை அவனிடமே மீண்டும் சேர்த்திருப்பது கடவுளின் சித்தமன்றி வேறென்ன. .

பதினைந்து தினங்களில் அடுத்த முகூர்த்தம் மின்னல் வேகத்தில் வேலைகள் நடக்க ஆரம்பித்திருந்தன. கடை வேலையை மொத்தமாய் முத்து பார்த்துக் கொள்ள ஒட்டு மொத்த குடும்பமும் திருமண வேலைகளில் இறங்கியிருந்தனர்.

எழில் ஆசிரம சாப்பாட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்வது தனதறையை சற்றே மாற்றி அமைப்பது என அவனுக்கான வேலைகளில் இறங்கியிருந்தான். மறுநாள் வெள்ளிக்கிழமை என்பதால் அனைவருக்குமாய் திருமண ஜவுளி அன்றே எடுக்க முடிவுசெய்து பெண்கள் மூவருமாய் தங்கள் கடைக்குச் செல்ல முடிவு செய்தனர்.

வெற்றிச் செல்வி பொழிலரசிக்கு அழைத்து நேராக கடைக்கு வருமாறு கூறிவிட்டார். எழில் கல்யாணம் வரவேற்பு இரண்டுக்குமே வேஷ்டியே போதுமென கூறிவிட அங்கயர்கண்ணி தான் ஆர்பாட்டம் செய்து வரவேற்பிற்கு பொழிலின் புடவை கலரில் தான் சட்டை எடுக்க வேண்டும் என ஒத்துக் கொள்ள வைத்தாள்.

மறுநாள் இராவுகாலம் முடிந்து அனவருமாய் கிளம்பத் தயாராக எழில் தான் காரில் அவர்களை அழைத்துச் சென்றான். அவர்கள் வரவும் பொழிலரசி அங்கு வரவும் சரியாய் இருந்தது. அன்று வீட்டிலிருந்து கிளம்பியபின் அனைவரையும் இன்று தான் பார்க்கிறாள்.

செல்வி மலர் பூம்பாவை மூவரும் தங்கள் சந்தோஷத்தை அவளை ஆரத்தழுவி திருஷ்டி கழித்து வெளிப்டுத்திச் செல்ல அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான் எழிலமுதன்.

அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்தவள் அவனை நோக்க அப்போதும் விழியகற்றாமல் அவள்மேல் பார்வை பதித்திருந்தான்.

பெரியவர்கள் முன்னே செல்ல மெதுவாய் அவளருகில் வந்தவன்,”இன்னமும் நடக்குறதெல்லாம் கனவு மாதிரிதேன் இருக்கு. . இப்போ இந்த நிமிஷம் உன் முகத்துல இருக்குற சந்தோசம் வாழ்க்கை மொத்ததுக்கும் உன்கூடவே இருக்கும் அதுக்கு நா பொறுப்பு. . ”

“இதெல்லாம் நீ சொல்லிதான் தெரியணுமா அமுதா. . ”

“ஏய் என்ன டீ இன்னும் அமுதானு கூப்பிட்டுட்டு கிடக்க. . அழகா மாமான்னு கூப்டு. . ”

சட்டென சிரித்தவள்,”ஐயோ அதெல்லாம் வராதுடா. . வேணா தடிமாடுனு கூப்புடுறேன். . ”

“குள்ளச்சி கல்யாணம் முடியட்டும் உன்னை பாத்துக்குறேன். . ”,என்றவன் மீசையை திருகியவாறே உள்ளே நுழைய சிரிப்பை அடக்கியவளாய் அவனை பின் தொடர்ந்தாள்.

மொத்த குடும்பத்திற்கும் துணி எடுத்து முடிப்பதற்குள் ஒரு வழியாகி விட எழிலையும் பொழிலையும் அவர்களுக்கான உடைகளை எடுத்து வரச் சொல்லி அனுப்பி வைத்தனர்.

பட்டுச் சேலை பிரிவிற்கு வந்து அவர்கள் அமர பணிப் பெண்களோ கையை பிசைந்துக் கொண்டு நின்றனர். அவர்களின் முக பாவத்தை கண்டவனோ,

“இப்படி பேந்த பேந்த முழிச்சுட்டு நின்னா சேலையை யாரு காட்றது. . முகூர்த்தப்புடவை எடுத்து காட்டுங்க. . ”

“ஆனாலும் ரொம்பதான் பண்ற நீ. . சின்ன பிள்ளைங்க கிட்ட தான் வீரமெல்லாம். . ”என அவனுக்கு மட்டும் கேட்குமாறு மெதுவாய் அரசி கூற,

“ம்ம் என் வீரம் என்னனு கல்யாணத்துக்கு அப்பறம் தெரியும். . வந்த வேலையை பாரு டீ பொண்டாட்டி. . ”,என்றவன் விரைப்பாகவே பதில் கொடுத்தான்.

அவனை முறைத்துவிட்டு தனக்கான புடவையைத் தேட ஆரம்பிக்க அவள் எடுப்பதையெல்லாம் எதாவது ஒரு காரணம் சொல்லி மறுத்துக் கொண்டேயிருந்தான். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவளாய்,

“அமுதா சத்தியமா என்னால முடில போ நீயே எதையாவது எடுத்துக் கொடு. . எல்லாத்தையுமே குறை சொன்னா எப்படி. . ”

“ஒரு சேலை எடுக்கவே இம்புட்டு அலுத்துக்குறவள இப்போதேன் பாக்குறேன். . ”என்றவன் புடவைகளை நோட்டமிட அழகிய வாடாமல்லி நிறப் பட்டு ஒன்று பார்தத்தவுடன் கண்ணை கவர அதை எடுத்துக் கொள்ளச் சொல்லி கூறினான்.

பின்னர் வரவேற்பிற்கென கடல் நீலநிற பட்டுபுடவையை தேர்ந்தெடுத்தவன் அவளைப் பார்க்க உதடு வளைத்து ம்ம் என செய்கை செய்து சிரித்தாள்.

அவள் கூறிய விதத்தில் அவனுக்குமே புன்னகை அரும்ப லேசாய் சிரித்தவாறே எழுந்து தனக்கான சட்டை எடுப்பதற்குச் சென்றான்.

இரண்டையும் எடுத்து முடித்து செல்வியிடம் கொடுக்க புடவையை பார்வையிட்டவர்,

“ரொம்ப நல்லாயிருக்கு ஆனா என்ன இரண்டுதேன் இருக்கு உன்கிட்ட மூணுபுடவை எடுக்க சொன்னேன்ல. . ”

“நானும் சொன்னேன் அத்த இவன்தான் கல்லாணத்துக்கு ஒண்ணு ரிசப்ஷனுக்கு ஒண்ணு. . சரியா போச்சுலனு சொன்னான். . ”

“ஆமா நாதேன் சொன்னேன். . எதுக்கு போட்டு பட்டுபுடவையா எடுத்து காசை கறியாக்குதீக. . எப்பவுமா கட்டப் போறா அதுக்கு இரண்டு சுடிதாரோ இல்ல சாதாரண புடவையோ எடுத்தா உபயோகமா இருக்கும்னு சொன்னேன். . இவதேன் எடுத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டா. . ”

அவர்கள் கூறியதை கேட்ட பூம்பாவை சட்டென்று சிரித்துவிட மலரும் செல்வியும் இவர்களை என்ன செய்தால் தகுமென பார்த்தனர்.

“ஏலேய் உன் கஞ்சத்தனத்தை காட்ட வேற நேரமே கிடைக்கலையா. . போ போய் ஒழுங்கா இன்னொரு புடவையை எடுத்துட்டு வாங்க. . ”

“அத்தே அவன் சொல்றதும் சரிதான. . நா பட்டுபுடவையெல்லாம் ரொம்ப கட்ட மாட்டேன். . இதுவே போதும். . ”

“ஐயோ ரெண்டும் வளர்ந்துருக்கே தவிர அறிவே இல்ல. . அவனுக்கு மேல இவ இருக்கா. . என்னத்த பண்ணவோ. . ”,என வெற்றிச் செல்வி அங்கிருந்து நகர்ந்துவிட மலரும் பூம்பாவையும் அடக்க மாட்டாத சிரிப்போடு அவர்கள் அருகில் வந்து,

“பிள்ளைகளா கல்யாணத்தன்னைக்கு நைட் சுடிதாரோட பால் சொம்பை கையில கொடுத்து அனுப்பினா வீட்ல இருக்குற கிழவி உன்னை ஒரு வழியாக்கிருவாக. . ஒழுங்கா போய் ஒரு சேலையை எடுத்துட்டு வாங்க. . ”,

என்றவர் மீண்டும் சிரித்தவாறே அங்கிருந்து நகர அரசிக்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை. எழிலோ தலையை சொறியாத குறையாய் தன் நிலையை மறைக்க சட்டென கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டான்.

“நீ போய் தேவையானத எடுத்துட்டு வா அரசி நா பில் போட சொல்றேன். . ”,என நிற்காமல் சென்றுவிட்டான். .

அரசிக்கோ அவன் அங்கிருந்து நகர்ந்த பின் தான் முகத்தை நிமிர்த்தவே முடிந்தது. சூழ்நிலை உணர்ந்தவளாய் அங்கிருந்து நகர்ந்தவள் அவர்கள் கூறியபடி இன்னொரு சேலையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

எழிலுக்கோ மனமெல்லாம் ஒருவித படபடப்பு என் அரசி என வார்த்தைக்கு வார்த்தை கூறினாலும் இந்த கோணத்தில் எல்லாம் அவன் நினைத்ததேயில்லை. இதையெல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்றும் தெரியவில்லை.

அவனைப் பொறுத்தவரை பொழிலரசி அவனுக்காகவே கடவுளால் படைக்கப்பட்ட அழகிய உயிருள்ள பதுமை. அவன் அதை எக்காரணத்தை கொண்டும் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான். மிகவும் பாதுகாப்பாய் அரவணைப்பாய் வைத்துக் கொள்வான் அவ்வளவே. .

தன் யோசனைகளை ஓரம் தள்ளியவன் வாங்கிய அத்தனைப் பொருட்களுக்கும் பணத்தை கட்டிவிட்டு அவர்களோடு கிளம்பினான்.

அதற்கடுத்த தினங்களில் அரசியை சந்திக்கும் வாய்ப்பு இல்லாமலே போனது அவனுக்கு. திருமணத்திற்கு இரு தினங்கள் இருந்த நிலையில் வேணியும் அங்கயர்கண்ணியுமாய் பொழிலுக்கு மெஹந்தி இடுவதற்காக ப்யூட்டிஷியனை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்குச் சென்றனர்.

“வா வேணி வா கண்ணி. . எப்படியிருக்கீங்க. . ”

“அதை நாங்க கேக்கணும் கல்யாண பொண்ணு எப்படியிருக்கீங்க?”

பதிலுக்குச் சிரித்தவள் அவர்களை அமர வைத்துவிட்டு இருவருக்குமாய் காபி கலந்து எடூத்து வந்து கொடுத்தாள்.

அதைப் பருகியவாறே கண்ணி அவளிடம்,”இப்போ புரியுதா நா ஏன் உங்களை அண்ணிணு கூப்டேன்னு?”

“அடிப்பாவி அப்போ உனக்கு ஏற்கனவே தெரியுமா??அந்த ஊமைக்கொட்டான் உன்கிட்ட எப்படி சொன்னான்?”

“ம்கூம் சொல்லிட்டாலும். . அடி வாங்காத குறையா நச்சரிச்சு கேட்டேன். . ஆனா உங்ககிட்ட எதுவும் கேக்க கூடாதுனு என்னை மிரட்டி வச்சுருந்தாக அதான் கேக்கல. . ”

“நா கூட அவுககிட்ட கேட்டேன் கா உங்க ரெண்டு பேருக்கும் ஏன் கல்யாணம் பண்ணி வைக்கலனு. . அந்த அளவுக்கு உங்க ரெண்டு பேரு பொருத்தமும் இருக்கு. . ”

“அட அதெல்லாம் ஒண்ணுமில்ல அவன் காதல் கதையை சொல்லி உங்களயெல்லாம் அப்படி நினைக்க வச்சுருக்கான். . ”

“இன்னமும் அவன் இவன் தானா??ஆச்சி கேட்டாக குமட்டுலயே குத்துவாக. . ”,இருவரும் கலகலவென சிரித்தனர். பாவமாய் அவர்களைப் பார்த்தவள்,

“ஐயோ நானும் மாத்திக்கனும்னு நினைக்குறேன் ரொம்ப நாளாவே ஆனா முடியவே இல்ல. . யார் முன்னாடியாவது இப்படி கூப்டு வச்சா மானமே போய்டும். . ”

“விடுங்க எழில் அண்ணனையே அடக்க ஒரு ஆளுனா அது நீங்கதேன். . இப்படியே இருங்க இதேன் நல்லா இருக்கு. . ”

இப்படி பல கதைகள் பேசியவாறே மெஹந்தியை முடித்து அது உலரும் வரை அவளோடு இருந்து மதிய சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

அதே நேரம் அங்கு கல்லூரியில் நண்பர்களை வரவேற்பிற்கு அழைத்துக் கொண்டிருந்தான் முகிலமுதன். இளவேனிலையும் அழைத்திருந்தான்.

“முகிலா எனக்கு பயமா இருக்கு யாராவது எதாவது சொல்லிட்டா??”

“ஏன் டீ ஓவரா யோசிக்குற. . எல்லாரையும் கூப்டுருக்கேன் தான அதுல உன்னை மட்டும் யாரு என்ன சொல்ல போறா. . ”

“ம்ம் இருந்தாலும். . ”

“ஒண்ணும் பிரச்சனையில்ல இந்த குட்டிச் சாத்தான் உன்னை கண்டிப்பா கூப்பிடனும்னு சொல்லிருக்கா. . உன்னை பார்க்கணுமாம். . ”

“அதுதான் இன்னும் பயமா இருக்கு. . அவ யார்கிட்டையாவது போட்டு கொடுத்துட்டா?”

“அதெல்லாம் பண்ண மாட்டா எழிலண்ணே கதையே ஏற்கனவே அவளுக்குத் தெரியுமாம் யார்ட்டையும் மூச்சு விடலேயே. . அதுவும் போக அவ நம்ம காதலுக்கு எதிரி ஒண்ணும் இல்லை. . அதனால சூப்பரா ரெடியாகி வரணும் புரியுதா?”

“ம்ம் சரி டா உன்னை நம்பிதேன் வரேன். . ”

அனைவரும் எதிர்பார்த்த அந்த அழகிய நாளும் வந்தது. காலை ஒன்பது பத்தரை முகூர்த்தம் என்பதால் அனைவரும் ஏழரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புவதாய் ஏற்பாடு. முந்திய நாளே வேணி அங்கயர்கண்ணி பூம்பாவையோடு பொழிலரசியின் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

ஏழுமணியளவில் தயாராகி கீழே வந்தவனைப் பார்த்த அனைவருக்கும் முகமும் அகமும் மலர்ந்து போனது. பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய் வந்து நின்றவனை பார்த்து பார்த்து பூரித்துப் போனார் மகேந்திரநாதன்.

“வாலே புது மாப்ள எம்புட்டு அம்சமா இருக்க தெரியுமா. . இந்த கோலத்துல உன்னை பார்க்க தாம்லே இந்த கிழவன் காத்து கிடந்தேன். . ”,என்றவர் அவனை ஆரத் தழுவிக் கொண்டார்.

பாக்கியம் தன் கையில் வைத்திருந்த செயினை அவனுக்கு அணிவித்து திருஷ்டி கழிக்க இருவர் காலிலும் விழுந்து ஆசிப் பெற்றவன்.

தன் தாய் தந்தையிடமும் அகத்தியன் மலரொளியிடமும் ஆசிப் பெற்றுக் கொண்டான்.

அதியனோடு முத்து குடும்பத்தோடு நேரடியாக கோவிலுக்குச் சென்று அங்கு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டான்.

பெரிய வேனில் வீட்டிலிருந்து கிளம்பியவர்கள் அங்கிருந்து பொழில் வீட்டுக்குச் சென்று அவளை அழைத்துச் செல்வதாய் ஏற்பாடு.

இருவர் இருக்கையில் சன்னலோரமாய் தமிழின் அருகில் அமர்ந்திருந்தவன் வீட்டிலிருந்து வெளியில் வந்தவளைக் கண்டு விழியகற்ற மறந்திருந்தான்.

அவன் தேர்வு செய்த வாடாமல்லி நிறப் புடவையும் அளவான ஒப்பனையும் மலர் அலங்காரமுமாய் பாந்தமாய் இருந்தவளை ஆசைதீர கண்களுக்குள் நிரப்பிக் கொண்டான்.

வேனில் ஏறியவள் அனைவரையும் பொதுவாய் பார்த்து ஒரு புன்னகையை அளித்துவிட்டு நேராய் பாக்கியத்திடம் தான் சென்றாள்.

“ஆச்சீ…”

“ஏட்டீ. . ஏன் ராசாத்தி. . இம்புட்டு அழகா வாழ வேண்டிய வாழ்க்கையை இந்த கிழவியே கெடுக்க பாத்தனே. . கண்ணுக்கு நிறைவா இருக்குட்டீ. இந்த ஆச்சி பேசுனதை எதையும் மனசுல வச்சுக்காத என்ன. . ”

“என்ன ஆச்சி இப்படி சொல்லிட்டீங்க. . நா போய் உங்களை அப்படி நினைப்பேனா. . ”

“இந்த குணத்துக்கே உனக்கு ஒருகுறையும் வராதுட்டீ போ சந்தோசமா போய் உக்காரு. . ”

அங்கிருந்து எழுந்தவள் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த வெற்றிச் செல்வி அருகில் அமர அவரை இறுகக் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள். என்னதான் எல்லோரும் அவளுக்கு பிடித்தம் எனினும் வெற்றிச் செல்வி மீது தனி அன்பு உண்டு.

அவர்களை கண்ட அனைவருக்குமே ஒரு நொடி மனம் கலங்கிவிட்டது. தாயை கண்ட பிள்ளையை போல் செல்வியுமே அவளை தன்னோடு சேர்த்தணைத்திருந்தார்.

“ஏட்டீ பொழிலு உங்க பாசம் தாங்க முடில. . கஷ்டபட்டு அந்தம்மா போட்ட மேக்கப்பு எல்லாம் கரைஞ்சுற போகுது. . வீட்டுக்கு போய் மீதி பாசத்தை பொழிஞ்சுக்கோங்க. . கண்ணை துடைட்டீ முதல்ல. . ”,என பூம்பாவை வழக்கம் போல் தன் பாணியில் அவளை கட்டுப்படுத்தினார்.

சரியான நேரத்திற்கு கோவிலை அடைந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மணமக்களை அமர வைத்து பூஜைகளை ஆரம்பித்தனர். எழிலமுதனின் கையில் மாலையை கொடுத்து பொழிலுக்குப் போடச் சொல்ல தன்னருகில் இருந்தவளிடமிருந்து விழியகற்றாமல் மாலையை அணிவித்து தனக்கான மாலையை அவள் கையால் பெற்றுக் கொண்டான்.

அதன்பின் குறித்த நேரத்தில் குற்றாலநாதரின் சந்நிதியில் எழில் மாங்கல நாண் பூட்டி தன் தோழியாய் காதலியாய் கனவு தேவதையாய் இருந்தவளை தன் மனைவியாக்கிக் கொண்டான்.

அத்தனை நேரம் அவன் முகம் நோக்காதவள் அவன் தாலி கட்டி முடிக்கும் வரையுமே அவன் விழியிலிருந்து பார்வையை அகற்றவில்லை. தாலிக்கே உரிய மகிமையோ என்னவோ முதன்முறையாய் நண்பன் என்பதை கடந்து அவனின் மீது ஒருவித அன்பு வந்திருந்தது.

எப்படியான வாழ்க்கை பதினைந்தே நாளில் எப்படி மாறியிருக்கிறது. அனைத்திற்குமான ஒரே காரணம் இவன்தான். இந்த எண்ணமே அவள் மனதை ஆக்கிரமித்திருந்தது.

தாலிகட்டி அங்கிருந்து நகர்ந்த நொடி முத்து எழிலை இறுகக் கட்டிக் கொண்டான். தன் நண்பனின் அத்தனை வலியையும் வேதனையையும் உணர்ந்தவனாயிற்றே. . அவன் கண்கள் கண்ணீரில் பளபளத்தது.

“நல்லாயிருப்ப லே மாப்ள. . இனி நல்லது மட்டும்தேன் நடக்கும். . சந்தோசமா இருக்குலே. . ”

அவர்களின் நட்பை பார்த்த அத்தனை பேருக்குமே கண்கள் பனித்து போயிருந்தது. நிலைமையை சீராக்க எண்ணியவளாய் கண்ணி,

“ஐயயே என்ன ஆளாளுக்கு அழுது கரையுதீக. . உங்க பாசமலர் படத்தை நிறுத்திட்டு கொஞ்சம் நகருங்க அடுத்த கல்யாணத்துக்கு இடத்தை விடுங்க. . ”

என்றுகூற ஓரளவு நிலைமை இயல்புக்கு திரும்பியிருந்தது. ஆனால் அரசி மட்டும்தான் கவனித்திருந்தாள் எழிலின் முகம் தாலிகட்டியே நொடி முதலே ஒருவித அமைதியை தாங்கியிருந்தது. இதற்கு முன் எழிலை அவள் அப்படி பார்த்திருக்கவில்லை. அதே நேரம் அதற்கான பொருளும் விளங்கவில்லை. இருந்தும் எதையும் கேட்காமல் அமைதி காத்து அடுத்தடுத்த சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு வேனில் கிளம்பினர்.

இந்தமுறை பொழிலரசியை எழிலின் அருகிலேயே அமருமாறு கூறிவிட்டு மற்றவர்கள் தங்கள் இடங்களில் அமர்ந்துக் கொண்டனர். பட்டுச் சேலை உரச அந்த சிறு இருக்கையில் இருவருமாய் அமர்ந்திருக்க பொழில் மெதுவாய் அவனை அழைத்தாள்.

“அமுதா…”

“ம்ம்”

“ஏன் என்னவோ போல இருக்க காலையிலே நல்லா தானே இருந்த. . ”

“அதெல்லாம் ஒண்ணுமில்லயே. . ”

“உன் முகத்தை பாத்தாலே தெரியுதே என்னாச்சு ஏதோ சரியில்ல. . ”

அவளை ஆழ்பார்வை பார்த்தவன் அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.

“தெரில அரசி உன்னோட இத்தனை பக்கத்துல அதுவும் உன் புருஷனா நினைக்க நினைக்க மனசெல்லாம் ஒரு மாதிரி படபடப்பா சொல்ல தெரில. . அதிசயத்தை யாரும் கண்ணால பாக்க முடியாது இல்ல ஆனா நா இப்போ பாத்துட்டு இருக்கேன். அதை என் கைக்குள்ளேயே அடக்கி வச்சுருக்கேன். . அமைதியா அதை ஒவ்வொரு நிமிசமும் உணர்ந்துட்டு இருக்கேன். . ”

என்ன கூறவென்று கூடத் தெரியாமல் அவனிடமிருந்த தன் கையை இறுக்கிக் கொண்டாள். ”எனக்கே தெரியாம உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்டா. . மன்னிப்பியா. . ”

“பைத்தியம் மாதிரி பேசுற அரசி. . ”

“இல்ல அமுதா. . இப்படி ஒரு அன்பான மனசு கஷ்டபடுறதுக்கு நா காரணமா இருந்துருக்கேனே. . இனி ஆயுசுக்கும் உனக்கு சந்தோஷத்தை தவிர எதையும் நெருங்க விடமாட்டேன். . நம்ம கல்யாணத்து மேல இந்த தாலி மேல நா எடுக்குற உறுதி இது. . ”

அன்பை மட்டுமே காட்டத் தெரிந்த இரு உள்ளங்கள் இயற்கையால் இணையும்போது அதை விட அழகிய இல்லறம் வேறு எங்கு இருந்திட முடியும்.