பாலைதலைவன் கூற்று (குறுந்தொகை-17)

மாவென மடலு மூர்ப பூவெனக்

குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப

மறுகி னார்க்கவும் படுப

பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே.

   —பேரெயின் முறுவலார்.

செய்தி

அவளிடம் சொல்லி அழைத்துவா என்று அவன் தோழியிடம் கூறும்போது தோழி மறுக்காமல் இருக்க இச் செய்தியைச் சொல்கிறான்.  அழைத்துவராவிட்டால் மடலேறுதல் ஊர்வழக்கம் என்று சொல்லி அச்சுறுத்துகிறான்.

வழக்கம்

மடலேறுதல்; மடல் என்பது இங்குப் பனைமட்டையைக் குறிக்கும்.  பனைமட்டைகள் கறுக்குகள் கொண்டவை.  பல்லுப் பலாக இருக்கும் அந்தக் கறுக்குகள் உடம்பில் படும்போது கிழித்து இரத்தம் வரும்.  

இந்தப் பனைமட்டைகளால் குதிரை உருவம் செய்வர்.  அதில் தலைவன் ஏறிக்கொள்வான்.  தோழர் குதிரையை இழுத்துக்கண்டு தலைவி வாழும் ஊரில் தெருத்தெருவாகச் செல்வர்.  தலைவன் தான் விரும்பும் தலைவியின் பெயர் எழுதிய ஓவியம் ஒன்றை வைத்திருப்பான்.  

அதனைப் பார்த்த ஊர்மக்கள் தலைவன் தலைவி உறவைப் பற்றிப் பேசுவர்.  அவனுக்கு அவளை மணம் முடிக்குமாறு அவளது பெற்றோரிடம் கூறுவர்.

நாட்கள் அழகழகாய் நகர்ந்தது. அன்று வேணிக்கு விடுமுறை என்பதால் மதிய நேரத்தில் அமர்ந்து பொழிலோடு கதையளந்து கொண்டிருந்தாள்.

அக்கா வர வர ஸ்கூல்ல இந்த பசங்களை மேய்க்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். . என்ன வாய் பேசுறாங்க தெரியுமா?”

ஹா ஹா நா எப்பவுமே நினைப்பேன் வேணி இந்த டீச்சர்ஸ்க்கெல்லாம் கோவில்கட்டி கும்பிடணும்னு. . இத்தனை பசங்களை சமாளிக்குறது ஒண்ணும் சாதாரண வேலையில்லயே. . தொண்டை கிழிய கத்தணும் நாள் மொத்தமும். . ”

ம்ம் ஆமாக்கா இதுங்களோட போராடுறதுலயே என் பொறுமையெல்லாம் போய்ரும் போலயிருக்கு. . நாளைக்கு என் பிள்ளையெல்லாம் மூணு அத்தைங்க கிட்டேயும் விட்டுட்டு நா பாட்டுக்கு இருப்பேன். . ”

பார்ரா ப்ளான் எல்லாம் பயங்கரமா இருக்கு என்ன எதாவது குட் நியூஸா. . ”

அட அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா. . ஆனாலும் இதுக்கு மேல தள்ளி போட வேணாம்னு தான் தோணுது. . ஆனா எனக்கு முன்னாடி நீங்க முந்திப்பீங்கனு நினைக்குறேன். . ”

பதில் கூறாமல் மௌனமாய் சிரித்தவளை மேலும் சீண்ட எண்ணியவளாய்,

அட வெட்கத்தை பாரு. . அப்போ எதோ இருக்கு?”

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல வேணி. . இருந்தாலும் நானே ரொம்ப எதிர்பார்த்துட்டுதான் இருக்கேன். .  உன் குழந்தைனு அதை அமுதன்கிட்ட கொடுக்கும் போது அவன் முகத்தை பாக்கணும். .  என்னயே எதோ பொக்கிஷமா பாக்குறவனுக்கு அந்த குட்டி குட்டி கை காலை பார்த்தா எப்படி நடந்துப்பான்னு நினைச்சாலே என்னவோ பண்ணுது. . ”

ஆனாலும் அக்கா உங்க ரெண்டு பேரையும் பார்த்தா எனக்கு எப்பவும் ஒண்ணு தோணும். . முதன்முதலா உங்க மேல இருக்குற காதலைபத்தி பெரியத்தான் சொன்னப்போ ஆச்சரியமா இருந்தாலும் ஒரு செகண்ட் இப்படியும் தோணிச்சு. . என்னடா இது ஒரு பொண்ணுக்காக இத்தனை வருசம் காத்துட்டு இருக்கணுமானு. .

ஆனா அவங்க காதலை நீங்க ஏத்துகிட்டதா இருக்கட்டும் கல்யாணத்துக்கு அப்பறம் அவங்களை பாத்துகிறதா இருக்கட்டும் உங்களுக்கு வெயிட் பண்ணதில தப்பில்லனு தோணிருச்சு. .

என்னதான் நம்மை உருகி உருகி ஒருத்தன் லவ் பண்ணான்னு தெரிஞ்சாலும் பெருசா அலட்டிக்காம பக்குவமா அதை ஏத்துகிட்டு அவங்களுக்காக யோசிச்சு உடனே சம்மதம் சொல்றதெல்லாம் சின்ன விஷயம் இல்லக்கா. .

உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லணும்னா நம்ம ஆச்சிக்கும் தாத்தாக்கும் எத்தனை சண்டை சச்சரவுனு இருந்தாலும் அதை மீறின ஒரு புரிதல் நமக்கு தெரியும்ல அப்படிதான் நீங்களும். . ”

 அழகாய் புன்னகைத்தவள்,”நீ சொல்ற எல்லாமே ரொம்ப சரி வேணி. . அவன்கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதும் எனக்கே மனசுக்குள்ள லேசா ஒரு உறுத்தல் என்னடா இது இப்படி சரினு சொல்லிட்டோமேனு. .

எல்லாரும் என்ன நினைப்பாங்க அப்படி இப்படினு. . ஆனா அதையும் மீறி எனக்கு மனசுலபட்டது என் வாழ்க்கை தான் எப்படியோ ஆரம்பிச்சு எப்படியெல்லாமோ போயிடுச்சு எத்தனையோ கண்ணீரும் கஷ்டமும். .

அப்படிபட்ட நா  இன்னொருத்தனோட கஷ்டத்துக்கு காரணமா இருக்கணுமானு நினைச்சேன். கஷ்டமும் தனிமையும் உலகத்துல கொடுமையான ஒரு விஷயம் வேணி. .  ஒரு வேளை அவன் கண்ல படாமயே போய்ருந்தேன்னா கூட அவனுக்குனு ஒரு வாழ்க்கை அமைஞ்சுருக்கும் இதுக்குமேல அதுவும் நடக்கும்னு தோணல. .

என்னதான் குடும்பம் உறவுகள் எல்லாம் இருந்தாலும் உடல் தெம்பெல்லாம் போய் தள்ளாடி விழும்போது தாங்குற பொண்டாட்டி உறவுக்கு இணையா எதுவும் இருக்காது.  அந்த பாக்கியத்தை அவன் எனக்கு கொடுக்க தயாரா இருக்கும் போது அதை மறுக்குற அளவு என்கிட்ட எந்த பெரிய காரணமும் இல்லை.  அதனால தான் என்னால இயல்பா இந்த வாழ்க்கையை ஏத்துக்க முடிஞ்சுது. .

எல்லாத்துக்கும் மேல அமுதன்ங்கிற ஒருத்தன் என் பக்கத்துல இருக்கும் போது அத்தனை சஞ்சலமும் என்னையறியாம பின்னுக்கு போய்டுது அதான் ரொம்பவே உண்மை. . ”

நம்ம குடும்பத்துக்கே ஏன்  நம்ம பரம்பரைக்கே நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பெரிய எடுத்துக்காட்டா இருக்க போறீங்க. . ”

இப்படியாய் இன்னும் சில பல கதைகளை பேசிவிட்டு மாடிக்குச் சென்றவளுக்கு முகில் யாருடனோ போனில் பேசுவது காதில் விழுந்தது.

அழாத இளா. . நாதேன் சொல்றேன்ல. . நாளைக்கு காலைல நா வரேன். . ”

“…. ”

ஏன் டீ இப்படி பண்ற இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லு உங்க வீட்டுக்கு வந்து அப்பாகிட்ட நா பேசவா. . ”

“…”

எதுக்குமே ஒத்துவர மாட்டனா நா என்னதேன் பண்ணட்டும். . நா சொல்றத கேக்க மாட்டல என்னவோ பண்ணு போ. . ”,என்றவன் போனை வைத்துவிட்டு நகர அங்கு பொழிலை எதிர்பாராதவனாய் தவித்து முழிக்க பொழிலே இயல்பாய் பேச்சை ஆரம்பித்தாள்.

என்ன முகிலா எதாவது பிரச்சனையா முகமே வாட்டமா இருக்கு?”

அது வந்து அண்ணி. . ”

சொல்ல வேண்டாம்னா விடு ஒண்ணும் பிரச்சனையில்ல. . ”

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணி. . இளவேனில்னு என்கூட படிக்குற பொண்ணு ஒரு வருசமா லவ் பண்றோம். . அவதேன் எனக்கு வாழ்க்கையே. .

இப்போ அவங்க வீட்ல விஷயம் தெரிஞ்சுடுச்சு அவங்கப்பா மாப்பிள்ளை பாத்து கட்டிக் கொடுத்துருவாரோனு அழறா. . எனக்கும் இதை வீட்ல எப்படி ஆரம்பிக்குறதுனு ஒரு தயக்கம். . ”

ஏன் முகிலா காதலிக்க இருக்குற தைரியம் அதை வீட்ல சொல்லவும் இருக்கனும் தான?”

ஐயோ அண்ணி அப்படி சந்தேகமா பாக்காதீங்க. . நா அவளை ஏமாத்தணும்னு எல்லாம் நினைக்கல. . கேம்பஸ்ல செலெக்ட் ஆய்ட்டேன். . இருந்தாலும் எனக்கு எம் ஈ முடிச்சு காலேஜ் ப்ரொபசரா போணும்னு தான் ஆசை. .

அதுமட்டுமில்லாம அங்கயர்கண்ணி இருக்கும்போது அவளுக்கு முன்னாடி என் கல்யாணத்தை பேசி பேசினா நல்லாவா இருக்கும். . அதான் ஒரே கஷ்டமா இருக்கு அண்ணி. .

எல்லாத்துக்கும் மேல இளாவுக்கு வேலை கிடைச்சுருக்க கம்பனி அவளோட ட்ரீம். . எப்பவுமே சொல்லுவா கண்ணி படிப்பை முடிச்சு கல்யாணம் ஆகுற வரையாவது நா வேலை பாக்குறேன் டா அப்பறம் உங்க வீட்டுல எல்லாரோடையும் ஜாலியா வாழ்க்கை புல்லா சந்தோஷமா இருப்பேன்னு சொல்லுவா. . ”

முகிலா உன்னை சின்ன பையன்னு நினைச்சேன். . எவ்ளோ அழகா பேசுற. .  இந்த வயசுல இந்த தெளிவு நிச்சயம் எல்லாருக்கும் வராது. .  உன்னை பத்தி மட்டும் யோசிக்காம குடும்பம் காதலியோட கனவுனு யோசிக்குற பாரு. .  இந்த மனசுக்காகவே எல்லாம் நல்ல படியா முடியும். .

இப்போதைக்கு வீட்ல இதைப்பத்தி எதுவும் பேசாத. . நா என்ன பண்ணலாம்னு யோசிக்குறேன். . நீ பொண்ணை பத்தின விவரம் மட்டும் சொல்லு. . ”

என்ன அண்ணி பண்ண போறீங்க??”

இன்னும் கரெக்டா தெரில ஆனா கண்டிப்பா உனக்கு எந்த சிக்கலும் பண்ண மாட்டேன். . நிம்மதியா போ முகிலா. . ”

சம்மதமாய் ஒரு புன்னகையை பேருக்கு அளித்தவன் தனதறைக்குச் சென்றுவிட்டான்.  தனதறைக்கு வந்த பொழில் என்ன செய்யலாம் என சில நிமிடங்கள் யோசித்தவள் பின் எழிலை அழைத்தாள்.

சொல்லு அரசி என்ன இந்த நேரத்துல. . ”

மாமா கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா?”

என்னாச்சு எதுவும் பிரச்சனையா?”

இல்ல இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்ல. . இல்லனா நா வரேன் நீ கோவிலுக்கு வந்துரு. . ”

என்னனு சொல்லாம நீயா பேசிட்டே கிடக்க என்னதான் டீ விஷயம். . ”

மாமா வா னா வாயேன். . சும்மா நொய் நொய்னு கேள்வி கேக்காத. . ”

எல்லாம் என் நேரம். . சரி பாத்து கிளம்பி வா. . ”

அடுத்த அரை மணி நேரத்தில் கிளம்பிச் சென்றவளை கோவில் வாசலிலேயே பார்த்தவன் கிளம்பி உள்ளே சென்றான்.

என்ன அரசி அப்படி என்ன தலை போற காரியம். . நைட் வந்தப்பறம் பேசகூடாதா?”

இல்ல மாமா கொஞ்சம் அர்ஜெண்ட் அதான். . ”,என்றவள் முகிலனின் விஷயத்தை கூறினாள்.

அடப்பாவி சின்னப்பயனு நினைச்சா இத்தனை வேலை பண்றானா இவன். . சரி இப்போ இதுல நாம என்ன பண்ணலாம்ங்கிற. . ”

பொண்ணோட அப்பாகிட்ட பேசுவோம் மாமா. . ”

என்ன விளையாடுறியா ஆச்சிக்கும் அம்மைகளுக்கும் தெரிஞ்சுது அம்புட்டுதேன். . காது கிழிய பேசித் தள்ளிரும். . ”

ஆச்சியை சொல்லு ஒத்துக்குறேன். . பூ சித்தியெல்லாம் அவ்ளோ மோசம் கிடையாது. . அதெல்லாம் புரிஞ்சுப்பாங்க. . ”

அரசி புரியாம பேசுத என்ன இருந்தாலும் வேற சாதி டீ முதல்ல நாம இப்போ போனா அந்த பிள்ளையோட அப்பாவே எப்படி பேசுவாருனு தெரியாது. . போய் எதாவது பிரச்சனை ஆச்சுனு வை. . உன்னையும் என்னையும் உண்டு இல்லனு ஆக்கிபுடுவாக. . ”

மாமா எனக்கும் எல்லாம் புரியுதுதான் இருந்தாலும் இத்தனை தெளிவா இருக்குறவங்களுக்கு நம்மால முடிஞ்ச உதவி செய்யலாம்தான. . ”

என்னவோ கண்ண கண்ண உருட்டி பேசுத எனக்கு ஒண்ணும் சரியா படல. . போவோம் பேசுவோம் ஒத்து வரலனா கிளம்பி வந்துரணும். . இந்த கெஞ்சி கொஞ்சிட்டெல்லாம் கிடக்க முடியாது புரியுதா??”

என் புருசன் யாருக்காகவும் எங்கேயும் கெஞ்சுறதுக்கு நானே விட மாட்டேன். . ரொம்ப பேசாம வா மாமா. . ”

அங்கிருந்து கிளம்பியவர்கள் இளவேனில் வீட்டை அடைந்த நேரம் உள்ளுக்குள் பயங்கர சத்தமாக பேச்சுகள் கேட்டுக் கொண்டுதான் இருந்தன.

கதவை திறந்த பெண்மணி இவர்களை கேள்வியாய் பார்க்க பொழிலே தங்களை அறிமுகப்படுத்தி கொண்டாள்.

என் பேரு பொழிலரசி இவரு என் ஹஸ்பெண்ட் எழில். . நாங்க முகிலமுதனோட அண்ணா அண்ணி. . ”

வா. . வாங்க உள்ளே வாங்க. . ”

உள்ளே மூன்று நான்கு பெரியவர்கள் அமர்ந்திருக்க ஒரு ஓரமாய் அழுதழுது வீங்கிய கண்களோடு இளவேனில் நின்றிருந்தாள்.

கதவை திறந்தவர் அவள் அன்னையாய் இருக்க வேண்டும் தன் கணவர் அருகில் சென்று இவர்களை பற்றி கூற சற்றே கடுகடுத்த முகத்தோடு அவர்களை அமருமாறு கூறினார்.

சொல்லுங்க என்ன விஷயம்?”

என் தம்பியும் உங்க பொண்ணும் ஒருத்தருக்கொருத்தர் விரும்புறாக. . ”

அதுக்காக நீங்க கல்யாணம் பேச வந்துடீகளாக்கும். . சாதி மாறி கல்யாணம் பண்ற அளவுக்கு இன்னும் பரந்த மனசெல்லாம் எனக்கு வரலடே. . இந்த கழுத செத்தாலும் சாகட்டும்னு விடுவேனே தவிர இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன். . ”

அவர் பதிலில் சற்றே கடுப்படைந்தவனாய் இருக்கையை விட்டு எழப் போனவனை கை அழுத்தி அமர்த்தினாள் அரசி.

இங்க பாருங்க சார்.  நாங்க எந்த விதமான பிரச்சனை பண்றதுக்கும் வரல. .  என் கொழுந்தனும் சரி உங்க பொண்ணும் சரி அவங்க முடிவுல ரொம்பவே தெளிவா இருக்காங்க. .  அவங்க நினைச்சா இப்போ கூட எந்த தப்பான முடிவையும் எடுக்க முடியும் அதை விட்டுட்டு உங்க முன்னாடி இப்படி தலை குனிஞ்சு நின்னு அழுதுட்டு இருக்கானா. .  அது அவ உங்க உணர்வுக்கு கொடுக்குற மரியாதை. . அப்போ அதே மரியாதையை நீங்களும் உங்க பொண்ணுக்கு கொடுக்கணும்ல. . ”

இங்க பாரும்மா. . நீ பேசுற வசனமெல்லாம் சினிமாவுல கேக்கதேன் நல்லாயிருக்கும். .  நடைமுறைக்கு சாதியையும் சாதி காரங்களையும் பகைச்சுகிட்டு என்னால ஒண்ணும் பண்ண முடியாது. .

இப்போ பாரு எனக்கு ஒரு பிரச்சனைனு உடனே கூப்ட குரலுக்கு வந்து உக்காந்துருக்காக எங்க சனத்துகாரக. . நீங்க சொல்றபடி என் மக விருப்பத்துக்கு தலையாட்டிட்டு இருந்தா இவுக எல்லாம் என்னை மதிப்பாகளா?”

சார். . நீங்க சொல்ற எதையுமே நா மறுக்கல ஆனா இதெல்லாத்தையும் தாண்டி வாழப் போறவ அவ தான. .  நாளைக்கே அவ தப்பான முடிவெடுத்தா இழப்பு உங்களுக்குதான. . ”

ஏய் என்னத்தா நல்லாயிருக்குற பிள்ளை மனசை கலைக்க பாக்குறியா??”அங்கிருந்தவரில் ஒருவர் கூற பதிலுக்கு பெண்ணின் தந்தையோ,

அதுதேன் அவ தலையெழுத்துனா நாம என்ன பண்ண முடியும் பத்து நாளுக்கு பாரம் தீர அழுதுட்டு தூக்கி போட்டு போ வேண்டியதுதேன். . ”,என்று கூற எழிலோ கொதித்துவிட்டான்.

ஏய் என்ன கூட்டம் டீ இதெல்லாம் மனுசப் பயலுக கிட்ட பேசலாம்.  காட்டானுக கிட்ட பேச முடியாது. .  பெத்த புள்ள சாகட்டும்ங்குறாரு. .  புள்ளைய தூக்கி கொடுத்துட்டு வயசான காலத்துல கை கால் இழுத்துட்டு கிடக்கும் போது இந்த சாதி வந்து அவுகள காப்பாத்தும்னு சொல்லு. .

அவுக பிள்ள மேல உனக்கு இருக்குற அக்கறைல துளி கூட அவுகளுக்கு இல்ல. . நீ எதுக்கு உயிரை கொடுத்து பேசிட்டு கிடக்குறவ. .

இங்கேரு ஆத்தா. . உங்கப்பாரு உனக்கு கல்யாணமெல்லாம் பண்ணுவாருனு தோணல. .  அவரு சாதி சாக்கடைனு பேசி கருமாதி பண்ணாம விடமாட்டாரு போல. .  என் வீட்டை நினைச்சு நானுமே யோசிச்சேன்தேன். .  ஆனா இவரை மாதிரி வெறி புடிச்ச மனுசங்க அங்கயில்ல. .  முடிஞ்சவரை போராடு இல்லையா கிளம்பி வந்துரு அப்பனும் ஆத்தாளுமா முன்ன நின்னு நா உங்க கல்யாணத்தை நடத்தி வைக்குறேன். .

சாகட்டுமாம்ல. .  இருபது வருசமா கண்ணுக்குள்ள வச்சு வளர்த்து சாகடிக்குறதுக்கு எதுக்குவே புள்ளையை பெத்துகிட்டு. . சாதியை கட்டியே அழ வேண்டியதுதான. .  வா டீ இன்னும் உக்காந்து இங்கன உன் உபதேசத்தை பண்ணிட்டு கிடக்க போறியா?”,என பொரிந்து தள்ளிவிட்டான்.

கொஞ்சமாவது பெரியவுகனு மட்டு மரியாத இருக்கானு பாரு இந்த பேச்சு பேசுதான். .  இப்படிதேன் இவன் தம்பியும் எங்க புள்ளையை மனசை கெடுத்துருப்பான். . ”

இங்கேருய்யா தலை நிறைச்சு வருசா வருசம் வயசு ஏர்றதுல இல்ல பெரிய மனுசத்தனம். .  நம்ம நினைப்புல இருக்கு. .  அந்த விதத்துல உங்களையெல்லாம் விட இதோ இந்த புள்ளையும் என் தம்பியும் ரொம்ப ரொம்ப பெரியவுக தெரிஞ்சுகிடுங்க. .  அரசி எழுந்து வரியா இல்லையா நீ. . எதாவது வார்த்தையை விட்டுற போறேன் இதுங்ககிட்ட. . ”

அவனைப் பற்றி தெரிந்தவளாய் பட்டென எழுந்து கொண்டவள் அவனோடு வாசலை நோக்கிச் செல்ல இளவேனில் ஓடிவந்து அவள் கையை பற்றிக் கொண்டாள்.

அக்கா. .  இங்க விட்டுட்டு போய்றாதீக எனக்கு பயமா இருக்கு. .  என்னென்னவோ பேசுறாக எல்லாருமா. .  ப்ளீஸ். .  என்னை உங்க வீட்ல ஏத்துக்கலனாலும் பரவால்ல இங்கேயிருந்து வெளியே கூட்டிட்டு போயிருங்க அது போதும். . ”, என கைகூப்பி கதறியவளை பார்த்தவளுக்கு மனம் பதறிவிட்டது.

பாருவே உன் சாதி உனக்கு கொடுத்த பரிசு பெத்த புள்ளையே உன்ன பாத்து பதறுது. . ரொம்ப பெருமை பட்டுக்கோங்க. .  பொண்ணுகளுக்கு வெளில ஆம்பளைங்கலால ஆயிரம் பிரச்சனை இருக்கு ஆனா வீட்டுகுள்ளேயே இப்படி ஒரு நிலைமையை உன்  பொண்ணுக்கு கொடுத்துருக்கீர் பாரும். . ரொம்ப பெருமையா இருக்கு. .

இங்கேரு மா. . உனக்கும் எழிலுக்கும் கல்யாணம் நடக்குமா எனக்குத் தெரியாது ஆனா இந்த மிருக கூட்டத்துக்கிட்ட உன்னை விட்டுட்டு போக எனக்கே கொஞ்சம் பயமாதேன் இருக்கு. .  உனக்கு ஏதோ வேலை கிடைச்சுருக்காமே அது சம்மந்தபட்ட அத்தனையும் எடுத்துக்கோ உனக்கான வாழ்க்கையை நீ பாரு. .

ஆனா இந்த ஆளு காசுனு அஞ்சு பைசா எடுத்துட்டு வந்துராத. . படிப்பு மட்டும்தேன் உன்னை காப்பாத்தும். . போ. . ”

இளவேனில் அழுதவாறே அனைவரையும் பயந்து போய் பார்த்து நிற்க,

இத்தனை பெரிய உருவமா நா நிக்கேன்ல என்னத்துக்கு பயப்படுத போ போய் எடுத்துட்டு வா. . எவன் என்ன கிழிச்சுறான்னு நா பாக்குறேன். . ”

நடப்பது அனைத்தையும் வெறும் பார்வையாளராக நின்று பார்த்திருந்த பொழிலுக்கு நடப்பது எதையுமே நம்ப முடியவில்லை.

அத்தனை பெரிய மனுசங்களும் கேட்டுக்கோங்க. .  குறிப்பா பொண்ணை பெத்தவர் நீர் கேளும். . உன் பொண்ணு உன் பொண்ணாவேதேன் இருக்க போறா. . முடிஞ்சளவு உனக்காக காத்திருப்பா. .  அவங்க ஏற்கனவே முடிவெடுத்த காலம் மூணு வருசமாம் அதுகுள்ள உன் மனசு மாறினா வந்து என்கிட்ட பேசு இல்லையா அப்படியே ஒதுங்கிப் போய்ரு. .

இவுக கல்யாணத்தை கண்டிப்பா நானே ஜாம் ஜாம்னு நடத்தி வைப்பேன். .  அத விட்டுட்டு கேனைத் தனமா எதாவது யோசிட்டு அலைஞ்சனு வை என்ன பண்ணணும்னு எனக்கும் தெரியும். . பாத்து பகுமானமா நடந்துக்க. . ”

என்றவன் வீட்டை விட்டு வெளியே வந்து காரில் அமர பிரமை பிடித்தவளாய் பொழில் முன்னிருக்கையில் அமர்ந்தாள்.

அந்த பிள்ளைக்கு ஆறுதல் சொல்லாம நீ ஏன் டீ இப்படி உக்காந்துருக்க. . ”

அவன் கேள்வியில் உணர்வு பெற்வளாய்,”ஏ மாமா என்னத்த பண்ணி வச்சுருக்க. .  நா விஷயத்தை சொன்னப்போ நீயே சாதி அது இதுனு பேசின இப்போ இந்த பொண்ணை கையோடேயே கூட்டிட்டு வந்துட்ட. .  வீட்டுக்கு போனா எல்லாருக்கும் என்ன பதில் சொல்ல??”

இத்தனை நேரம் இருந்த கடுப்புல பேச்சு தானா வரல அது மாதிரி அங்கேயும் போனப்பறம் என்ன வருதோ பேசிப்போம் விடு. . ”,என சாதாரணமாய் கூறிவிட்டு வண்டியை கிளப்பியவன் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு விறுவிறுவென உள்ளே சென்றுவிட பொழிலரசிக்கே ஒருநொடி உயிர் கையில்லில்லை. .

அதை விட முகிலை எப்படி சமாதானப்படுத்த போகிறோம் என்பதுதான் மிகுந்த கவலையாய் இருந்தது. பிரச்சனை வராது எனக் கூறிவிட்டு ஒட்டு மொத்த பிரச்சனையையும் நடு வீட்டில் இறக்கப் போகிறோமே என விதிர்த்துப் போனாள். அதற்குள் ஹாலில் எழிலின் சத்தம் கேட்க அவசரமாய் இளவேனிலை இழுத்துக் கொண்டு ஓடினாள்.

அதிய சித்தப்பா பூ சித்தி எங்க இருக்கீக. . ஆச்சி. . தாத்தா. . ”

அவனின் சத்தத்தில் அனைவருமாய் வெளியே வர ஓட்டமும் நடையுமாய் இன்னொரு பெண்ணோடு வந்த பொழிலை கேள்வியாய் பார்த்தனர்.

ஏலேய் எதுக்கு எங்கள தேடுத என்ன விஷயம்?”,என்றவாறு வந்த அதியனும் இளவேனிலைப் பார்த்து பேச்சை நிறுத்தினார்.

சித்தப்பா இது நம்ம முகிலோட ப்ரண்டு ஒரே காலேஜ். . இரண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாகளாம். . ”,என்றவன் சுருக்கமாய் விஷயத்தை கூற அதியனுக்கு முன் பாக்கியம் வழக்கம் போல் கத்த ஆரம்பித்திருந்தார்.

ஏலேய் எல்லாம் சரி அதுக்காக இந்த நேரத்துல அந்த பிள்ளையை கையோடேயே கூட்டிட்டு வருவியா. . ஊருகுள்ள விசயம் தெரிஞ்சா என்ன நினைப்பாக. . ”

ஏ கிழவி அவங்க அப்பன் பிள்ளையை கொன்னு போடுவேன்ங்கிறான். பத்தாததுக்கு சாதிக்காரன்னு மூணு பேரை கூப்ட்டு உக்கார வச்சுருக்கான் என்னத்த பண்ண சொல்லுத. . ”

அடப்பாவமே கிளியாட்டம் இருக்க பிள்ளைய கொல்லவும் மனசு வருமா. . ”,என பூம்பாவை அங்கலாய்க்க பாக்கியமோ தலையில் அடித்துக் கொண்டார்.

கூறுகெட்டவளே உன் புள்ள காதலிக்குறான்னு சொல்லிட்டுகிடக்கான் கொஞ்சமும் பதட்டமே இல்லையாட்டீ உனக்கு. . ”

அத்தே இந்த வயசுல காதலிக்காம பல்லு போன கிழவனான அப்பறமா காதலிப்பான். காதல வெளில சொல்ல முடியாம நம்ம எழிலு பட்டபாடு போதாதா என் புள்ளையும் கஷ்டபடணுமா. . அவனுக்கு இவதேன் பொண்டாட்டினு விதி இருந்தா அதை நாம ஏன் மாத்தனும். . ”

என வழக்கம்போல் அவர் பாணியில் போட்டுடைத்தார். அதியன் அமைதியாய் இருப்பதை கண்டு மகேந்திர நாதன் அவரிடம்,

என்னலே அதியா ஒண்ணும் சொல்ல மாட்டுக்க?”

யப்பா எழிலு சொல்றதுதேன் சரினு படுதுகல்யாணத்தை பத்தி நடக்கும்போது யோசிப்போம்.  . பிள்ளைக அவுக முடிவுல தெளிவா இருக்குக இப்போதைக்கு இந்த பிள்ளை உயிரோடயாவது இருக்கேனு சந்தோச படுவோம்.

நாம ஊர்ல அங்கங்க பேச்சியாத்தா மாரியாத்தானு கும்புட்டுட்டு கிடக்கோமே அதுல பாதிக்கும் மேல சாதி மானம் மருவாதனு ஆணவக் கொலைல செத்தவுகளாதேன் இப்போ சாமியா இருக்காக.

கிறுக்குப் பயலுகல அத்தனை சீக்கிரம் மாத்திட முடியாதுப்பா. . காலம் எல்லாத்துக்கும் ஒரு விடை வச்சுருக்கும்.

ஏம்மா நாங்கெல்லாம் இருக்கோம் தைரியமா இரு. . எங்களை மீறி எவனும் ஒண்ணும் பண்ண முடியாது. பூவு புள்ளைகளுக்கு சாப்பிட எதாவது குடு எல்லாம் எப்படி களைச்சு போய் இருக்குக பாரு. . ”

நல்ல புருசன் நல்லா பொண்டாட்டி. . என்னவோ போங்க எல்லாரும் நாளை பின்ன எவனாவது வீட்டு வாசால்ல வந்து நின்னு நாக்குமேல பல்லை போட்டு பேசுனான் அப்பறம் இருக்கு உங்களுக்கெல்லாம். . ”,என்று பாக்கியம் வசைபாடியவாறே உள்ளே சென்றார்.

அத்தனை களேபரமும் அடங்கிய பின் வெளியில் சென்றிருந்த முகில் வீட்டிற்கு வர வாசலிலேயே அவனை பிடித்து மறித்த அங்கயர்கண்ணி,

டேய் இங்கன இவ்ளோ பிரச்சனை நடந்துட்டு இருக்கு நீ ஜாலியா ஊரை சுத்திட்டு வாரியோ?”

கண்ணி உன்னோட வம்பு இழுக்குற நிலைமைல நாயில்ல. . இளா எப்படியிருக்கா என்னனு ஒண்ணும் தெரில. . ”

எருமமாடு உன் ஆளு உள்ளதாம்லே இருக்கா. . ”

என்னட்டீ உளர்ற???”

நா ஒண்ணும் உளரல. . அண்ணணும் அண்ணியுமா போய் அங்க பெரிய பஞ்சாயத்தாகி கையோட கூட்டிட்டே வந்துடாக. . ”

அடித்துபிடித்து உள்ளே ஓடியவன் அவளைப் பார்த்து அப்படியே நிற்க அவனை கண்டவளுக்கோ கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

அண்ணே!!!”

வாலே  ஒண்ணும் விசனப்பட்டுக்காத. . எல்லாம் நல்லதா நடக்கும். . அண்ணன் நா இருக்கேன். . ”,என்றவன் அவனின் தோள்தட்டிச் சென்றான்.

சாரி முகிலா நா ஒண்ணு நினைச்சு போனா என்னென்னவோ நடந்து போச்சு. . ”

அண்ணி என்ன இப்படியெல்லாம் பேசுறீக. . என் இளாவை முழுசா மீட்டுருக்கீங்க அண்ணி. . அதுபோதும். . இந்த உதவியை நா ஆயுசுக்கும் மறக்க மாட்டேன். . ”

என்ன இது பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு என் தம்பிக்கு நா பண்ணாம வேற யாரு பண்ண போறா. . தைரியமா இரு. . ”

ஏலேய் முகிலா கள்ளப் பயடே நீ என்ட்ட கூட சொல்லல பாத்தியா நீ. . ”

ம்மா. . ”,குரல் தழுதழுத்தது முகிலனுக்கு.

ஏலே எதுக்கு இப்போ கலங்கிப் போய் நிக்க. .  உன்னை தாங்க மலைபோல இந்த குடும்பம் இருக்குலே. . உன் சந்தோசம்தேன் எங்க சந்தோசம். . நீயே கலங்கிப் போனா அந்த பிள்ளையை பாரு பரிதவிச்சு போய் நிக்குது. . போ போய் ஆறுதல் சொல்லு. . ”

பூம்பாவை அங்கிருந்து நகரும்வரை பொறுத்தவள் அவன் தோள்சாய்ந்து கதறி தீர்த்துவிட்டாள்.

மன்னிச்சுரு முகிலா. . உன் பொண்டாட்டியா பல வருசம் வாழணும்னு அத்தனை ஆசை எனக்கு. . ஆனா எங்கப்பா மத்தவகளோட சேர்ந்துட்டு என்னென்னவோ பேசிட்டு இருந்தாக. . பொழில் அக்காவும் அண்ணாவும் வரலனா கூட நானே வீட்டை விட்டு ஓடி வந்துருப்பேன். . ”

ரொம்ப கஷ்டத்தை கொடுக்குறேன் இளா உனக்கு. . என்னை பார்க்காமயே இருந்துருந்தா உனக்கு இந்த பிரச்சனையெல்லாம் வந்துருக்கவே வந்துருக்காது. ”

உன்னை பார்த்ததுனால தான் டா இத்தனை அழகான குடும்பம் எனக்கு கிடைச்சுருக்கு. . இந்த ஒரு காரணத்துக்காகவே எத்தனை பெரிய வலியையும் தாங்கிப்பேன். . ”

அங்கு தனதறைக்குச் சென்ற அரசியோ எழிலை பின்னிருந்து இறுக அணைத்துக் கொண்டாள்.

. . என்னாச்சு டீ. . ”,என்றவன் அவளை முன்புறம் இழுக்க அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள் மெதுவாய்,

நீ பேசுனதெல்லாம் கேட்டு நானே பயந்துட்டேன் மாமா. . சாதாரணமா தான வந்த ஏன் இவ்ளோ கோவம். . ”

பின்ன என்ன டீ பெத்த புள்ள சாகட்டும்ங்கிறான். . என்ன அப்பன் இவனெல்லாம். . புள்ளைய பலி கொடுத்து சாதியை நிலைநாட்டி இவனுக்கு என்ன தேசதந்தைனு சிலையா வைக்க போறானுக. . பைத்தியகார கூட்டம் இதெல்லாம். . ”,என மீண்டும் அவன் சிடுசிடுக்க அந்த பேச்சை அத்தோடு நிறுத்திவிட்டு மீண்டுமாய் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.

மறுநாள் அரசி எழுந்திருக்கும் போதே பயங்கர அயர்வாய் உணர்ந்தாள். தலையெல்லாம் சுற்றிக் கொண்டு வந்தது. பாதி கண்ணில் கட்டிலை தழுவியவளால் எழில் அங்கு இல்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

சோர்வாய் எழுந்தமர்ந்தவள் அப்போது தான் மணியை பார்க்க காலை 8:40 ஆகியிருந்தது. எழில் கடைக்கு கிளம்பியிருப்பான் என்று உணர்ந்தவளாய் மொபைலை எடுத்து அவனுக்கு அழைக்கச் செல்ல வயிற்றை பிரட்டிக் கொண்டு வருவதாய் உணர்ந்தவள் வேகமாய் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

நேற்றுவரை இல்லாத சோர்வு ஏன் திடீரென என யோசித்தவளுக்கு சட்டென காலண்டரின் மேல் பார்வை பதிந்தது. அப்படியாய் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ள வேகமாய் எழிலை அழைத்தாள்.

என்ன கும்பகர்ணி இப்பதேன் எழுந்துக்குறியா?”

மாமா ஏன் என்னை எழுப்பாம போன?”

யாரு நானா ஒரு மணி நேரமா கரடியா கத்தினேன் சின்ன அசைவுகூட இல்லாம குறட்டை விட்டு தூங்கிட்டு இப்போ வந்து என்னையே கேள்வி கேக்குறியா?”

சரி அதைவிடு இப்போ உடனே நீ வீட்டுக்கு வாயேன். . ”

ஏன் டீ என்ன நினைச்சுட்டு இருக்க நீ சும்மா சும்மா வீட்டுக்கு வா வீட்டுக்கு வானு. . இன்னைக்கு என்ன அந்த கருவாச்சிக்கு எதாவது காதல் கதையிருக்கா. . ”

ம்ம் ரொம்பதான் சலிச்சுக்குற. . ஜுனியர் அமுதனோ அரசியோ வரப் போறானு உன்ட்டதான் முதல்ல சொல்லலாம்னு வர சொன்னா ரொம்ப பண்ற. . நீ ஒண்ணும் வர வேணாம் போ. . ”,என்றவள் போனை வைத்துவிட்டாள் முகம் கொள்ளா பூரிப்பும் சந்தோஷமும் அவளிடத்தில்.

அங்கு தன் காதில் விழுந்த செய்தியை இன்னமும் நம்ப முடியாமல் சிலையென அமர்ந்திருந்தவன் உயிர் பெற்றவனாய் தன் மொத்த சந்தோஷத்தையும் காட்டி வண்டியை ஒரே அழுத்தில் உயிர்பித்து வீட்டிற்கு விரைந்தான்.